Jump to content

பயணத்தடை சட்டங்களை மேலும் கடுமையாக்கவும் – ஜனாதிபதிக்கு விசேட மருத்துவர்கள் சங்கம் கடிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை சட்டத்தை கடுமையாக்குமாறு விசேட மருத்துவர்களின் சங்கம், ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது.

தினம் தினம் மருத்துவமனைகளுக்கு வருகை தரும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளுக்கு அதனை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த சங்கம் அது தொடர்பில் கடித மூலம் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேற்படி சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் லக்குமார் பெர்னாண்டோ மற்றும் சங்கத்தின் செயலாளர் விசேட மருத்துவர் ஆர். ஞானசேகரம் ஆகியோர் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 
 

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 12 வீதமாக அதிகரித்துள்ளதுடன் மரணங்கள் 28 வீதமாக அதிகரித்துக் காணப்படுகின்றன.

இத்தகைய நிலையில் பயணத் தடையை மேலும் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும். தினந்தோறும் மருத்துவமனைகளுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் நோயாளிகள் வருகின்றனர். மேலும் நோயாளர்களின் தொகை
அதிகரிக்குமானால் மருத்துவமனை கட்டமைப்பு அதனை தாங்கமுடியாமல் போகலாம்.

அதேபோன்று, தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வினைத்திறனுடனும் சாதாரண நடைமுறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் தேவையான இரண்டாவது தடுப்பூசிகளையும் காலம் தாமதிக்காது பெற்றுக்கொள்வதற்கு நிலையான செயற்திட்டமொன்றை உருவாக்கிக் கொள்வது அவசியமாகும் என்றும் விசேட மருத்துவர் சங்கம் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளது.

பயணத்தடை சட்டங்களை மேலும் கடுமையாக்கவும் – ஜனாதிபதிக்கு விசேட மருத்துவர்கள் சங்கம் கடிதம் – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை விட மோசமான நிலைக்கு இலங்கை செல்கிறது

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, இந்தியாவை விட மோசமான நிலையை நோக்கி இலங்கைப் பயணித்துக்கொண்டிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் சனத்தொகையின்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோர், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, கொரோனா வைரஸ் நிலைமைகளால் இந்தியா முகங்கொடுத்துவரும் நிலைமைகளைத் விட, மோசமான நிலைமையை நோக்கி இலங்கை பயணிப்பதாகவும் அச்சங்கத்தின் துணை தலைவர் வைத்தியர் நவீன் சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் செல்லும் வாகனங்களைப் பார்க்கும்போது, நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதைப்போல இல்லை எனவும் தெரிவிக்கும் அவர், பயணக்கட்டுப்பாடுகளை மீறும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நமக்கு ஆதரவான ஒருவர் உயிரிழப்பார்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.

Tamilmirror Online || இந்தியாவை விட மோசமான நிலைக்கு இலங்கை செல்கிறது

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெள்ளைக்கார துரை தான்... கள்ளத்தோணியிலை  போக, கடற்கரையில் நின்றிருக்கிறார். 
    • முருகப் பெருமானுக்குரிய விரதங்களும், விழாக்களும் முருகப் பெருமானை ஆராதிக்கும் மூன்று முத்தான விரதங்கள் விரத நூல்களிலே சொல்லப்பட்டிருக்கின்றன. வார விரதம் ஒன்றும், (சுக்கிரவாரம் அல்லது வெள்ளிக்கிழமை விரதம் ) திதி விரதம் ஒன்றும் (கந்தசஷ்டி விரதம்), (நட்சத்திர விரதம் - கார்த்திகை விரதம்)என அவை அமைகின்றன. முருகப்பெருமானை வணங்கி அருள் பெறுவதற்குரிய விரதங்களை சிறப்பாக ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்வோம்.உயிர்களுக்கு வேண்டுவது மூன்று சுகம். இகம், பரம், வீடுபேறு இந்த மூன்று இடங்களிலும் காத்தருளும் தெய்வம் முருகன் அதனால் அப்பெருமான் மூன்று உகரங்களுடன் கூடிய முருகு என்ற சொல்லை உடைய தனிப்பெருந் தெய்வமாக விளங்குகின்றான். இந்த மூன்று நலன்களை வழங்க வல்ல தெய்வம் முருகவேள். பால் பாயசத்தை ஒரு கரண்டியைக் கொண்டு தானே படைக்கின்றோம். அது போல் இக நலனை வள்ளி தேவியைக் கொண்டும், பரநலனை தெய்வயானை அம்மையைக் கொண்டும், முக்தி நலனை வேலாயுதத்தைக் கொண்டும் நமக்கு அருள் புரிகின்றான் முருகன். எனவே முருகப் பெருமானை பயன்கருதாது மெய்யன்புடன் வழிபடுவோர் இகம், பரம், வீடு என்ற மும்மை நலன்களையும் பெற்று செம்மையுறுவார்கள். பாவம் நிறைந்த கலையில் கண்கண்ட தெய்வமாகக் கலியுகவரதனாக விளங்குபவர் கந்தவேள், முருகனை ஞானிகள் தமது ஞான வழியால் கண்டார்கள். அழகு உறையும் குன்றுகளிலெல்லாம் கோலக்குமரன் கொலுவீற்றிருப்பதாகக் கொண்டு ஆங்காங்கு அவனுக்கு விழாவெடுத்து வழிபடுகின்றோம். அழகுக் கடவுளாக உறையும், முருகனை தமிழ்க் கடவுளாக நாம் கொண்டோம், முத்தமிழால் வைதாரையும், வாழவைப்பான் முருகன் என்பர் அருணகிரியார். அத்தகைய பெருமையும், அருளும் நிறைந்த முருகனுக்குரிய விரதங்கள் விழாக்கள் பற்றிச் சிறப்பாக நோக்குவோம். சுக்கிரவார விரதம் சுப்பிரமணியக் கடவுளை வேண்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கைக் கொள்ளப்படும் இந்த விரதம் ஐப்பசி மாத முதல் வெள்ளிக்கிழமையில் ஆரம்பிக்கப்படும். உபவாசமிருத்தல் உத்தமம். அது இயலாதவர்கள் பால் பழமாவது பலகாரமாவது இரவு ஒரு நேரம் கொள்ளலாம். அதுவும் முடியாவதர்கள் பகல் ஒரு பொழுது போசனம் செய்க. மூன்று வருட காலம் அநுஷ்டித்த பின் விரத உத்யாபனம் செய்யலாம். கார்த்திகை விரதம் கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதலாக (திருக்கார்த்திகை) மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானைக் குறித்துக் கைக்கொள்ளப்படும் விரதம் இது. உபவாசம், உத்தமம், இயலாதோர் இரவில் பால், பழம், பலகாரம் உண்ணலாம்.அதுவுமியலாதோர் பகலொருபொழுது போசனம் செய்க, பன்னிரண்டு வருடங்கள் இவ்விரதமநுஷ்டித்த பின் உத்யாபனம் செய்யலாம். திருக்கார்த்திகை விரதத்துக்கு இஸ்தமன வியாபகம் முக்கியம். அதாவது மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே விரத நாளாகும். திருக்கார்த்திகைத் தீபம் என்று இத்தினத்தில் தீபங்களை ஏற்றிவைத்து சோதிவடிவில் இறைவனை வழிபடுவர். சிவராத்திரி நாளில் பிரமவிஷ்ணுக்களுக்குத் தமது சோதிவடிவை இறைவன் காட்டிய பொழுது அவ்வடிவைத் தமக்கு என்றும் காட்டியருள வேண்டுமென அவர்கள் வேண்டினர். அதற்கு இறைவன் திருக்கார்த்திகை நாளில் மீண்டும் இவ்வரவை காட்டுவோம் என்றார்.அதனை நினைவு கூர்ந்தே கார்த்திகைத் தீபநாள் கொண்டாடப்படுகின்றது. திருவண்ணாமலைத் தலத்திலே மலையுச்சியிலே பெருந்தீபம் ஏற்றப்படுகின்றது. பல ஊர்களிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் இறைவனது சோதி வடிவைத் தரிசிப்பார்கள் குன்றின் மேலிட்ட தீபம் என்பதும் மலை விளக்கு ஆகிய மரபுச் சொற்றொடர்கள் நீண்ட காலம் இவ்வழக்கு இருந்ததைக் காட்டுகின்றன. "மைம்மிசை யின்றி மலைவிளக்குப் போலோங்கி செம்மையி னின்றிலங்குந் தீபிகை - தெம்முனையுள்" என்று தொல்காப்பியம் புறத்திணை 85 இல் வருவதும். "முடநடைப் பறவையு மாய விலங்கு முடிமலர் முடிக்காடவைமுறை போகா’’ என்று சங்க புலவர் பொய்கையார் கூறுவதும் "வானம் ஊர்ந்த வளங்கொளி மண்டிலம் நெருப்பெனச்சிவந்த உருப்பு அவிர் அம்கட்டு’’ என்னும் ஒளவையார் கூற்றும் (அகநாநூறு) ம் கூறுகின்றன.
    • தன்முனைக்  கவிதை 🌹🌹🌹 இக்கவிதை எழுதுவதற்கான  நிபந்தனைகள்  🌹🌹🌹 # நான்கு வரிக் கவிதை # வரிக்கு அதிகபட்சம் மூன்று சொற்கள் குறைந்தபட்சம் இரண்டு சொற்கள் # இரண்டாம் வரியில் நிறுத்தம் வேண்டும் # மூன்றாம் நான்காம் வரிகள் முதல் இரண்டு வரிகளில் கூறப்பட்டதற்கு நேராக அல்லது எதிராக இருக்கவேண்டும்  # கற்பனை உவமை மட்டும் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்பவற்றை பயன்படுத்தலாம் 🌹🌹🌹 உதாரண கவிதை 🌹🌹🌹 விடுமுறை முடிந்து // கல்லூரிக்கு திரும்புகிறேன் // மூக்கைத் துளைக்கிறது// அம்மா சமையல்.... // 🌹🌹🌹 மேலே கூறப்பட்டது போல் நான்கு வரி கவிதை அமைய வேண்டும்.  முதலாவது வரி விடுமுறை முடிந்து இரண்டாவது வரி கல்லூரிக்கு திரும்புகிறேன்.  இங்கு வரி முற்றுப்பெறுகிறது மூன்றாம் நான்காம் வரிகள் முதலாம் இரண்டாம் வரிக்கு திருப்புமுனையாக அமைகிறது 🌹🌹🌹   அந்தாதி குறுங்கவிதை 🌹🌹🌹 ஒரு வரியில் முடியும் சொல் அடுத்த வரியின்  ஆரம்பச்  சொல்லாகக் கொண்டு கவிதை எழுதுங்கள். 🌹🌹🌹  நம் எல்லோருக்கும் தெரிந்த சினிமா பாடல் ஒன்று அந்தாதியில்  அமைந்துள்ளதை பாருங்கள் 🌹🌹🌹 வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள் நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள் கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள் மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள் பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள் தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள் புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள் வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள் 🌹🌹🌹
    • மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளியது ! தொல்லை யிரும் பிறவிச் சூழுந்தளை நீக்கி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.