Jump to content

''இந்திய தேசியம்தான் எங்கள் முதன்மையான எதிரி!'' - சொல்கிறார் தமிழ்த் தேசியவாதி பழ.நெடுமாறன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
பழ.நெடுமாறன்

பழ.நெடுமாறன்

''பல்வேறு மாநிலக் கட்சிகள் சந்தர்ப்பவாத நோக்கத்துடன் இந்து தேசியத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. இது நமது தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகும். இந்தநிலையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்!'' என்கிறார் பழ.நெடுமாறன்.

மொழி உணர்ச்சி உச்சம் தொட்டுவரும் இந்த வேளையில், ''தமிழ் மொழி பேசுகிற மக்கள் வசிக்கிற நிலப்பகுதியைத்தான் 'தமிழகம்' என்கிறோம். ஆக, தமிழ் மக்கள் வசிக்கிற நிலப்பகுதியை ‘தமிழ்நாடு’ என்று சொல்வதில் தவறு என்ன?

அடுத்து, இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளிலேயே ‘இந்தியா எனும் பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, ‘இந்திய ஒன்றியம்’ அல்லது ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதுதான் அரசியல் சட்டப்படி சரி!'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவருகிறார் மூத்த தமிழ்த் தேசியவாதியும், 'தமிழர் தேசிய முன்னணி'யின் தலைவருமான பழ.நெடுமாறன்.

அவரிடம் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினேன்...

''இன்றைய தேர்தல் அரசியலில் பங்கெடுத்துக்கொள்ளக்கூடிய அரசியல் கட்சிகளில், நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய தலைவர் என்று நீங்கள் யாரைச் சொல்வீர்கள்?''

தி.மு.க - அ.தி.மு.க
 
தி.மு.க - அ.தி.மு.க

''தேர்தல் அரசியல் என்பதே சந்தர்ப்பவாத அரசியலாக மாறிவிட்டது. 1967-ல் அமைக்கப்பட்ட தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியும் இருந்தது; முதலாளித்துவக் கட்சியான சுதந்திரா கட்சியும் இருந்தது. 1967-லிருந்தே இந்திய தேசியத்துடன் திராவிடத் தேர்தல் கட்சிகள் சமரசம் செய்துகொண்டன. இன்றைய தேதி வரையிலும் திராவிட தேர்தல் அரசியல் கட்சிகள் காங்கிரஸ், ஜனதா, பா.ஜ.க என மாறி மாறி அகில இந்தியக் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்துதானே தேர்தலைச் சந்தித்துவருகின்றன! காங்கிரஸ் கட்சி தனது சமய சார்பற்றத் தன்மையைக் கைவிட்டு, மிதவாத இந்துத்துவாக் கட்சியாகவும், பா.ஜ.க தீவிரவாத இந்துத்துவாக் கட்சியாகவும் திகழ்கின்றன. ஆனால் பல்வேறு மாநிலக் கட்சிகள் மாநில சுயாட்சிக் கோரிக்கையை மறந்து மேற்கண்ட இரு கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டுச் சேர்ந்து தேர்தலை கேலிக் கூத்தாக்கிவிட்டன. இந்தப் போக்கின் வளர்ச்சி ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றுவதில் போய் முடிந்திருக்கிறது.

கொள்கை, கோட்பாடற்ற சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டால் தமிழ்த் தேசியம் நீர்த்துப்போகும். அதனால்தான் நாங்கள் யாரையுமே இன்றைய சூழலில் ஆதரிக்க முடியாமல், ஒதுங்கி நிற்கிறோம். நாங்கள் தனியாக நின்று தேர்தலைச் சந்திக்கும் வலிமை பெறும் வரை இந்த நிலை நீடிக்கும்.''

''இன்றைய தமிழக அரசியலில், தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்கக்கூடிய கட்சியாக நீங்கள் யாரைப் பார்க்கிறீர்கள்?''

''தமிழ்த் தேசியத்தை 40 ஆண்டு காலத்துக்கும் மேலாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறவர்கள் நாங்கள்தான். 'தமிழர் தேசிய இயக்கம்' என்று முதலில் பெயர் வைத்தோம். 2002-ல் என்னைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தபோது, எங்கள் இயக்கத்துக்கும் தடை விதித்தார்கள். இன்றைய தேதிவரையிலும் அந்தத் தடை நீடித்துவருகிறது. இதை எதிர்த்து நாங்கள் தொடுத்த வழக்கு 19 வருடங்களாக உயர் நீதிமன்றத்தில் கிடப்பில் கிடக்கிறது. எனவேதான் 'தமிழர் தேசிய முன்னணி' என்ற பெயரில், 70 அமைப்புகளை ஒன்றிணைத்து எங்கள் இயக்கத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறோம்.

எங்களது தோழர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டம், தடா சட்டம், பொடா சட்டம், தேசத் துரோக சட்டம் போன்ற பல வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறை சென்றார்கள். சென்னையிலிருந்த எங்கள் கட்சியின் தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த எங்கள் கட்சி அலுவலகங்களை காவல்துறையினர் இழுத்துப் பூட்டி முத்திரை வைத்தார்கள். பிரபாகரனையும் அவரது புலிகள் இயக்கத்தையும் சரியான முறையில் அடையாளம் கண்டு முதன்முதலில் அவர்களுக்கு ஆதரவு திரட்டினோம் என்பதுதான் தமிழக அரசுக்கு எங்கள் மீதிருந்த கோபம். எங்கள் மாநாடுகளும், பொதுக்கூட்டங்களும், ஊர்வலங்களும் தடை செய்யப்பட்டன. அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி எங்கள் தோழர்கள் பல்வேறு கொடுமைகளைச் சந்திக்க நேர்ந்தது.

மு.க.ஸ்டாலின் - சீமான்
 
மு.க.ஸ்டாலின் - சீமான்

ஆனாலும் காவிரிப் பிரச்னை, பெரியாறுப் பிரச்னை போன்ற ஆற்று நீர்ப் பிரச்னைகளையும், தமிழகம் வந்தேறிகளின் வேட்டைக்காடாகத் திகழ்வதையும், தமிழே கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் திகழ வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு போராட்டங்களை நாங்கள் நடத்தியிருக்கிறோம். ராஜீவ் கொலை வழக்கில் 26 தமிழர்களுக்கு ஒட்டுமொத்தமாக தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. உடனே பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டி 26 தமிழர்கள் உயிர்க்காப்புக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தோம்.

இந்த வழக்கில், 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், மீதமிருந்தவர்களில் மூவருக்கு ஆயுள் தண்டனையும் நால்வருக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்தும் தொடர்ச்சியாகப் போராடி அவர்களது உயிரையும் காப்பாற்றியிருக்கிறோம். இன்றைக்கும் எழுவரின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிவருகிறோம். இவ்வாறு தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுப்பதற்கு முன்னோடிகளாக நாங்கள் இன்று வரையிலும் திகழ்ந்துவருகிறோம். ஆனாலும் தமிழ்த் தேசியம் பேசுவோர் அனைவரையும் அரவணைத்துச் செல்வதே எங்களது நோக்கம்!''

'திராவிடம் என்பதே தமிழ்த் தேசியத்துக்கு எதிரானது என்ற பரப்புரை இப்போது அதிகரித்துவருகிறதே?''

''இந்திய தேசியத்தைத்தான் முன்னிறுத்தி நாங்கள் எதிர்த்துவருகிறோம். ஏனெனில், மாநிலங்களின் உரிமைகளையெல்லாம் பறித்து, மத்தியில் குவித்து வைத்துக்கொண்டு, வெறும் ஊராட்சி நிலைக்கு மாநிலங்களைத் தள்ளிவிட்டார்கள். இதற்குக் காரணமான இந்திய தேசியத்தைத்தான் நாங்கள் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம்.  

மாறாக, திராவிடத் தேர்தல் கட்சிகள் இந்திய தேசியத்தோடு சமரசம் செய்துகொண்டு, கைகோத்துச் செல்ல ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 'இந்து தேசியம்' என்பது மொழிவழி தேசியத்தை அடியோடு அழித்து, மாநிலங்களையும் இல்லாமல் செய்து ஒரே ஆட்சியை மட்டும் இந்தியா முழுமைக்கும் நிலை நிறுத்தும் நோக்கம்கொண்டது. இதைப் புரிந்துகொண்டாலும்கூட பல்வேறு மாநிலக் கட்சிகள் சந்தர்ப்பவாத நோக்கத்துடன் இந்து தேசியத்துடன் கூட்டு சேர்ந்துள்ளன. இது நமது தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகும். இந்தநிலையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்கள் முதன்மையான எதிரி இந்தியமே!''

பழ.நெடுமாறன்
 
பழ.நெடுமாறன்

''திராவிடம் என்ற சொல்லாடலே ஆரியத்துக்கு எதிரானதுதான் என்று திராவிடக் கட்சியினர் விளக்கம் தருகிறார்களே..?''

''சங்க நூல்களிலும் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களிலும் திராவிடம் என்ற சொல்லாடல் ஓரிடத்தில்கூட இடம்பெறவில்லை. பக்தி இலக்கிய காலத்திலும் ஆரியத்துக்கு எதிரான சரியான சொல்லாடலாக 'தமிழன்' என்ற சொல்தான் கடைபிடிக்கப்பட்டுள்ளது. 'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்' என்று 7-ம் நூற்றாண்டிலேயே திருநாவுக்கரசர் தனது தேவாரப் பாடலில் குறிப்பிட்டிருக்கிறார்..! எனவே, ஆரியன் என்பதற்கான சரியான எதிர்ப்பதம் 'தமிழன்'தான்!

இந்தியாவிலுள்ள எல்லா தேசிய இனங்களின் மொழிகளும் சம்ஸ்கிருத ஊடுருவலால் கலப்பு மொழிகளாகித் திரிந்துவிட்டன. இந்தநிலையில், நம் தமிழ் மொழி மட்டும்தான் அதற்கு அடிபணியாமல் தனது தனித்தன்மையைக் காத்துக்கொண்டிருக்கிறது. தொல்காப்பியர், திருவள்ளுவர் காலத்திலிருந்தே வடசொல் கலப்பை நாம் எதிர்த்துவருகிறோம்!''

''இந்திய தேசியம்தான் எங்கள் முதன்மையான எதிரி!'' - சொல்கிறார் தமிழ்த் தேசியவாதி பழ.நெடுமாறன் | "Indian nationality is our number one enemy!" - Says Tamil nationalist Pazha.Nedumaran - Vikatan

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொரானா ஊரடங்கு காலத்திலும் தன்னுடைய உயிரைப் பற்றியே கவலைப்படாமல் அலட்சியம் காட்டும் பெருவாரியான (பா)மரத் தமிழன், இந்த 'தமிழ் தேசியம்' என்பதைப் பற்றி இப்பொழுதெல்லாம் பெரிதாக அக்கறை கொள்வதில்லை என்பதே வேதனையான யதார்த்தம்.

 • Sad 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

எங்களது தோழர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டம், தடா சட்டம், பொடா சட்டம், தேசத் துரோக சட்டம் போன்ற பல வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறை சென்றார்கள். சென்னையிலிருந்த எங்கள் கட்சியின் தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த எங்கள் கட்சி அலுவலகங்களை காவல்துறையினர் இழுத்துப் பூட்டி முத்திரை வைத்தார்கள். பிரபாகரனையும் அவரது புலிகள் இயக்கத்தையும் சரியான முறையில் அடையாளம் கண்டு முதன்முதலில் அவர்களுக்கு ஆதரவு திரட்டினோம் என்பதுதான் தமிழக அரசுக்கு எங்கள் மீதிருந்த கோபம். எங்கள் மாநாடுகளும், பொதுக்கூட்டங்களும், ஊர்வலங்களும் தடை செய்யப்பட்டன. அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி எங்கள் தோழர்கள் பல்வேறு

இதய சுத்தியோடு தமிழ் தேசிய இயக்கம் நடத்தினால் இந்தியாவில் இதுதான் நிலை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஐயா  போன்றவர்களின் காலத்திலேயே 

தமிழ்த்தேசியம் உயிர் பிழைக்கவேண்டும்

காவிரிப் பிரச்னை, பெரியாறுப் பிரச்னை போன்ற ஆற்று நீர்ப் பிரச்னைகளையும், தமிழகம் வந்தேறிகளின் வேட்டைக்காடாகத் திகழ்வதையும், தமிழே கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் திகழ வேண்டும் என்பதற்காகவும் 

எல்லோரும் சேர்ந்து  கூடி  பேவணும்

ஆட்சி அதிகாரத்தை  கைப்பற்றணும்

அதுவே இனி  தமிழும் தமிழரும்  அழியாதிருக்க  ஒரேயொரு  வழி

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வெள்ளைக்கார துரை தான்... கள்ளத்தோணியிலை  போக, கடற்கரையில் நின்றிருக்கிறார். 
  • முருகப் பெருமானுக்குரிய விரதங்களும், விழாக்களும் முருகப் பெருமானை ஆராதிக்கும் மூன்று முத்தான விரதங்கள் விரத நூல்களிலே சொல்லப்பட்டிருக்கின்றன. வார விரதம் ஒன்றும், (சுக்கிரவாரம் அல்லது வெள்ளிக்கிழமை விரதம் ) திதி விரதம் ஒன்றும் (கந்தசஷ்டி விரதம்), (நட்சத்திர விரதம் - கார்த்திகை விரதம்)என அவை அமைகின்றன. முருகப்பெருமானை வணங்கி அருள் பெறுவதற்குரிய விரதங்களை சிறப்பாக ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்வோம்.உயிர்களுக்கு வேண்டுவது மூன்று சுகம். இகம், பரம், வீடுபேறு இந்த மூன்று இடங்களிலும் காத்தருளும் தெய்வம் முருகன் அதனால் அப்பெருமான் மூன்று உகரங்களுடன் கூடிய முருகு என்ற சொல்லை உடைய தனிப்பெருந் தெய்வமாக விளங்குகின்றான். இந்த மூன்று நலன்களை வழங்க வல்ல தெய்வம் முருகவேள். பால் பாயசத்தை ஒரு கரண்டியைக் கொண்டு தானே படைக்கின்றோம். அது போல் இக நலனை வள்ளி தேவியைக் கொண்டும், பரநலனை தெய்வயானை அம்மையைக் கொண்டும், முக்தி நலனை வேலாயுதத்தைக் கொண்டும் நமக்கு அருள் புரிகின்றான் முருகன். எனவே முருகப் பெருமானை பயன்கருதாது மெய்யன்புடன் வழிபடுவோர் இகம், பரம், வீடு என்ற மும்மை நலன்களையும் பெற்று செம்மையுறுவார்கள். பாவம் நிறைந்த கலையில் கண்கண்ட தெய்வமாகக் கலியுகவரதனாக விளங்குபவர் கந்தவேள், முருகனை ஞானிகள் தமது ஞான வழியால் கண்டார்கள். அழகு உறையும் குன்றுகளிலெல்லாம் கோலக்குமரன் கொலுவீற்றிருப்பதாகக் கொண்டு ஆங்காங்கு அவனுக்கு விழாவெடுத்து வழிபடுகின்றோம். அழகுக் கடவுளாக உறையும், முருகனை தமிழ்க் கடவுளாக நாம் கொண்டோம், முத்தமிழால் வைதாரையும், வாழவைப்பான் முருகன் என்பர் அருணகிரியார். அத்தகைய பெருமையும், அருளும் நிறைந்த முருகனுக்குரிய விரதங்கள் விழாக்கள் பற்றிச் சிறப்பாக நோக்குவோம். சுக்கிரவார விரதம் சுப்பிரமணியக் கடவுளை வேண்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கைக் கொள்ளப்படும் இந்த விரதம் ஐப்பசி மாத முதல் வெள்ளிக்கிழமையில் ஆரம்பிக்கப்படும். உபவாசமிருத்தல் உத்தமம். அது இயலாதவர்கள் பால் பழமாவது பலகாரமாவது இரவு ஒரு நேரம் கொள்ளலாம். அதுவும் முடியாவதர்கள் பகல் ஒரு பொழுது போசனம் செய்க. மூன்று வருட காலம் அநுஷ்டித்த பின் விரத உத்யாபனம் செய்யலாம். கார்த்திகை விரதம் கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதலாக (திருக்கார்த்திகை) மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானைக் குறித்துக் கைக்கொள்ளப்படும் விரதம் இது. உபவாசம், உத்தமம், இயலாதோர் இரவில் பால், பழம், பலகாரம் உண்ணலாம்.அதுவுமியலாதோர் பகலொருபொழுது போசனம் செய்க, பன்னிரண்டு வருடங்கள் இவ்விரதமநுஷ்டித்த பின் உத்யாபனம் செய்யலாம். திருக்கார்த்திகை விரதத்துக்கு இஸ்தமன வியாபகம் முக்கியம். அதாவது மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே விரத நாளாகும். திருக்கார்த்திகைத் தீபம் என்று இத்தினத்தில் தீபங்களை ஏற்றிவைத்து சோதிவடிவில் இறைவனை வழிபடுவர். சிவராத்திரி நாளில் பிரமவிஷ்ணுக்களுக்குத் தமது சோதிவடிவை இறைவன் காட்டிய பொழுது அவ்வடிவைத் தமக்கு என்றும் காட்டியருள வேண்டுமென அவர்கள் வேண்டினர். அதற்கு இறைவன் திருக்கார்த்திகை நாளில் மீண்டும் இவ்வரவை காட்டுவோம் என்றார்.அதனை நினைவு கூர்ந்தே கார்த்திகைத் தீபநாள் கொண்டாடப்படுகின்றது. திருவண்ணாமலைத் தலத்திலே மலையுச்சியிலே பெருந்தீபம் ஏற்றப்படுகின்றது. பல ஊர்களிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் இறைவனது சோதி வடிவைத் தரிசிப்பார்கள் குன்றின் மேலிட்ட தீபம் என்பதும் மலை விளக்கு ஆகிய மரபுச் சொற்றொடர்கள் நீண்ட காலம் இவ்வழக்கு இருந்ததைக் காட்டுகின்றன. "மைம்மிசை யின்றி மலைவிளக்குப் போலோங்கி செம்மையி னின்றிலங்குந் தீபிகை - தெம்முனையுள்" என்று தொல்காப்பியம் புறத்திணை 85 இல் வருவதும். "முடநடைப் பறவையு மாய விலங்கு முடிமலர் முடிக்காடவைமுறை போகா’’ என்று சங்க புலவர் பொய்கையார் கூறுவதும் "வானம் ஊர்ந்த வளங்கொளி மண்டிலம் நெருப்பெனச்சிவந்த உருப்பு அவிர் அம்கட்டு’’ என்னும் ஒளவையார் கூற்றும் (அகநாநூறு) ம் கூறுகின்றன.
  • தன்முனைக்  கவிதை 🌹🌹🌹 இக்கவிதை எழுதுவதற்கான  நிபந்தனைகள்  🌹🌹🌹 # நான்கு வரிக் கவிதை # வரிக்கு அதிகபட்சம் மூன்று சொற்கள் குறைந்தபட்சம் இரண்டு சொற்கள் # இரண்டாம் வரியில் நிறுத்தம் வேண்டும் # மூன்றாம் நான்காம் வரிகள் முதல் இரண்டு வரிகளில் கூறப்பட்டதற்கு நேராக அல்லது எதிராக இருக்கவேண்டும்  # கற்பனை உவமை மட்டும் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்பவற்றை பயன்படுத்தலாம் 🌹🌹🌹 உதாரண கவிதை 🌹🌹🌹 விடுமுறை முடிந்து // கல்லூரிக்கு திரும்புகிறேன் // மூக்கைத் துளைக்கிறது// அம்மா சமையல்.... // 🌹🌹🌹 மேலே கூறப்பட்டது போல் நான்கு வரி கவிதை அமைய வேண்டும்.  முதலாவது வரி விடுமுறை முடிந்து இரண்டாவது வரி கல்லூரிக்கு திரும்புகிறேன்.  இங்கு வரி முற்றுப்பெறுகிறது மூன்றாம் நான்காம் வரிகள் முதலாம் இரண்டாம் வரிக்கு திருப்புமுனையாக அமைகிறது 🌹🌹🌹   அந்தாதி குறுங்கவிதை 🌹🌹🌹 ஒரு வரியில் முடியும் சொல் அடுத்த வரியின்  ஆரம்பச்  சொல்லாகக் கொண்டு கவிதை எழுதுங்கள். 🌹🌹🌹  நம் எல்லோருக்கும் தெரிந்த சினிமா பாடல் ஒன்று அந்தாதியில்  அமைந்துள்ளதை பாருங்கள் 🌹🌹🌹 வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள் நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள் கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள் மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள் பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள் தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள் புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள் வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள் 🌹🌹🌹
  • மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளியது ! தொல்லை யிரும் பிறவிச் சூழுந்தளை நீக்கி
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.