Jump to content

ஒரு டாக்குத்தரின் பெரு விளையாடல்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு டாக்குத்தரின் பெரு விளையாடல்

திருட்டு என்பது சிலருக்கு ஒரு மன வியாதி. ஒரு சிறிய பொருளாயினும், அதனை திருடிக்கொண்டு சேர்ப்பது ஒரு திரில். அந்த திரிலுக்காகவே தமது கல்வி, வேலை அனைத்தையுமே இழந்து நாசமாகும் பலரையும் காண்போம்.

இதனை மருத்துவ உலகு அங்கீகரித்தாலும், அதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக, அதனை சட்டம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

சரி விசயத்துக்கு வருவோம். ஒரு பிபிசி நிகழ்ச்சி பார்த்தேன். பாலியல் பலாத்கார வழக்கு.

ஒரு பெண். அவரது வீட்டில் ஒரு சிறிய பிரச்சனை. அதனை திருத்த ஆள் வேண்டும். சூப்பர்மார்கெட் நோட்டீஸ் போர்ட்டில் ஒரு விளம்பரம். அந்த வகை வேலைகளை சிறப்பாக செய்யும் ஒருவர் குறித்து தொலைபேசி இலக்கத்துடன் இருந்தது. பேசினார். தனது பெயர் மக்தி  அஹமத் என்றும் தான் ஒரு பதிவு செய்யப்பட்ட மருத்துவர் என்றும், ஒரு பரீட்சைக்கு தயாராவதால், சம்பளம் இல்லாத லீவு எடுத்து உள்ளதாகவும், இது தனது பொழுது பொக்கு என்பதால், கைச்செலவுக்காக செய்வதாகவும் சொன்னார்.

அவரது பேச்சு, மனேர்ஸ் அவர் உண்மையிலேயே படித்தவர் என்பதை சொல்ல, வீட்டு முகவரியும் கொடுத்தார் அவர். வந்தவர் சிறப்பாக அந்த பிரச்சனையை தீர்த்துக் கொடுத்தார்.

அதே வேளை அந்த இளம் பெண் தனியே இருப்பதனையும் உறுதி செய்து கொண்டார். போகும் போது, நாளை இந்த பக்கம் வருவேன், இதனை மீண்டும் செக் பண்ணி, எல்லாம் ஓகேயா என்று பார்க்கிறேன், நீ இருப்பாயா என்று கேட்க, அவரும், ஆமாம் இருப்பேன். எங்கேயும் போகமாட்டேன், என்றார் வரப்போகும் பெரும் வில்லங்கத்தினை உணராமல்.

அடுத்த நாள் வந்தார். செக் பண்ணினார். பாத்ரூம் போகலாமா என்றார். மேலே இருக்கிறது என்றார் பெண். போனார். வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருப்பார் போலும்.

இதைப் பார்த்தீர்களா, பெண்ணை மேலே அழைத்தார். பெண்ணும் சென்றார்.

24 மணி நேரம், பெண்ணை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, பல முறை பாலியல் வக்கிரம் செய்தார். வெளியேறினார்.

பெண் பித்து பிடித்தவர் போல இருத்திருக்கிறார். பல மணி நேரத்துக்கு பின்னரே, போலீசாரை அழைத்து இருக்கிறார்.

****

அந்த பெண்ணின் நிலையினை உணர்ந்த போலீசார், ஆன் எனும் போலீஸ்காரியை விசாரணைக்கு பொறுப்பாக அமர்த்தினார்கள்.

ஆனுக்கு முன் பெரிய சவால். இரண்டு முக்கிய விடயம் மட்டுமே அவரிடம் இருந்தன.

மக்தி என்னும் பெயர், முகத்தில் வலது பக்கத்தில் ஒரு மரு.  போன் இயங்கவில்லை. நோட்டீஸ் போர்ட்டில் போட்ட போது, cctv இருக்கவில்லை அல்லது இயங்கவில்லை. ஆகவே அங்கேயும் சிக்கவில்லை.

வேறு யாருக்கும் இவர் சேவை செய்தாரா என்று கேட்பதில் பலன் இல்லை. ஆகவே என்ன செய்வது. அவர் ஒரு டாக்டர் என்று பொய் சொல்லி இருக்கலாம். அவர்கள் இப்படி கீழ்த்தரமான கிரிமினல் வேலைகளை செய்வார்களா என்ன என்று நினைத்திருந்தார்.

வீட்டில் இருந்து டீவியை பார்த்தவாறே யோசித்துக் கொண்டிருந்தார். செய்தியில், இங்கிலாந்தின் பொது மருத்துவ கவுன்சில் அதிகாரி ஒரு கேள்விக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்.

பொறி ஒன்று தட்டியது. மறுநாள் அவர்களது அலுவலகத்தினை அழைத்தார். மக்தி அஹமத் என்ற பெயரில் உள்ள சகல டாக்டர் பெயர் லிஸ்ட் வேண்டுமே. 

வந்தது.

மருத்துவ கவுன்சில், பதிவு இருந்தால் மட்டுமே வேலை செய்ய முடியும். பதிவுக்கு படங்கள் கொடுக்க வேண்டும்.

படம் என்றால், முகத்தில் அந்த மரு இருக்குமே.... 

இருந்தது ஒருவருக்கு.....

மீண்டும் அழைத்தார், அந்த நபர் எங்கே வேலை செய்கிறார் என்று சொல்ல முடியுமா?

சில கண நேர மௌனம். நூறாண்டுகள் செல்வது போல தவித்தார் ஆன்.

மன்னிக்க வேண்டும், ஆபிசர் ஆன்,  திருட்டு ஒன்று காரணமாக, அவர் பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இனி அவர் வேலை செய்ய முடியாதே. 

'எப்போது நடந்தது அது'.....  'ஐந்து வருடமாகிறது'.

சாண், ஏற முலம் சறுக்கியது. அடுத்து என்ன..... காபி மெசின் பக்கம் போனார். அழுத்தினார். எடுக்காமலே யோசனையில் இருந்தார். பின்னால் வந்தார் இன்னோரு அதிகாரி.

என்ன, ஆன் கப்பினை  எடுக்காமலே யோசனையிலே இருக்கிறாய் என்றார் அவர்.

விசயத்தினை சொன்னார்.

****

அட இதுவா விசயம்.

இப்ப, ஆள் விசயம், கைவிரல், எல்லாமே நம்ம போலீஸ் டேட்டாபேஸில் இருக்குமே....

அட.... ஆமால்ல... காபி கப்பினை வீசி விட்டு விரைந்தார்.

அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்தார்.... பல படங்களை வைத்தார், மரு உள்ள படங்கள். அதில் மக்தி படமும் இருந்தது.

24 மணிநேரம் மிக அண்மையாக இருந்த ஒருவர், மறக்க முடியுமா?

இவன்தான் என்று கை காட்டினார்.

சரி நெருங்கியாகி விட்டது, ஆள் எங்கே என்று தேடுவது.

மண்டையை போட்டு உடைத்தார். போன் நம்பர்.... கம்பெனிக்கு அடித்தார்... அது PAY AS YOU GO: இலக்கம். முகவரி இராது.

*****

அவரது பழைய வேலை இடத்துக்கு சென்று, நண்பர்கள் இருப்பார்களா என்று விசாரித்தால், அனைவரும் ஒதுங்கிக் கொள்கிறார்கள். 

அவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. 6 வாரத்தில் வந்து இருந்தார். கிரிமினல் ரெகார்ட் காரணமாக இவர் வீடுகள் எடுத்து இருக்க முடியாது. ஆகவே யாராவது நண்பர்கள் உதவி இருக்க வேண்டும்.

மிக கடுமையான தேடல்களின் பின்னர், இவர் தங்கி இருந்த முகவரி கிடைத்தது.

போனார். ஆள் இல்லை. இரண்டு வருடத்துக்கு முன்னரே போய் விட்டாரே. 

ம்ம்ம்.. நன்றி சொல்லி, கிளம்பிய போது... ஒரு நிமிடம்... தனக்கு வரக்கூடிய கடிதங்களை தனக்கு forward பண்ணுமாறு ஒரு முகவரி தந்து போனார்.

அந்த முகவரிக்கு சென்றார் ஆன். அது பெட் & பிரெக்பாஸ்ட் அமைப்பு. 

ஆமாம், இந்த படத்தில் உள்ள நபர் இங்கே இருந்தார். பணம் தர முடியாததால், போனவாரம் அனுப்பி வைத்தோம். ஒரு காரில் கிளம்பி சென்றார், எங்கே போனார் என்று தெரியவில்லை.

cctv பார்த்து, கார் இலக்கம் பிடித்து, காரை பிடித்து.... ட்ரைவரை கண்டு பிடித்து.....

.... கேட்டால் தனது நண்பர் ஒருவரின் மூடப்பட்ட ரெஸ்டாரண்ட் ஒன்றின் மேல்தளத்தில் தங்கி இருக்கிறார் என்று தகவல் கிடைத்தது.

போலீசார் சென்றபோது, நல்ல உறக்கத்தில் இருந்தார் டாக்டர் மக்தி அஹமது MBBS. 

கட்டிலில் என்று நினைப்பீர்கள். இல்லை. 

அவரது கல்விக்கும் பொருத்தம் இல்லாத ஒரு கேவலமான நிலையில், ஒரு அழுக்கான இடத்தில், ஒரு மேசையின் கீழ், ஸ்லீப்பிங் பை ஒன்றினுள் குறுக்கியபடியே படுத்திருந்தார். 

பத்து வருட தண்டனை வழங்கப்பட்டு உள்ளே இருக்கிறார். 

இளமையில் திரில் காரணமாக திருடியது, தனது வாழ்வினையே நாசமாக்கியது என்று சொல்லி அழுதார்.  திருட்டு விடயமாக சிக்கியபின்னர், தனது மனைவி, பிள்ளையுடன் தன்னை விட்டு நீங்கி, விவாகரத்து செய்து விட்டதாகவும் அழுதார் அவர்.

எல்லாம் இழந்த பின்னர், இனி என்ன வாழ்வு என்று விரக்தி கொண்டே, மேலும் தவறுகள் இழைத்ததாகவும் சொன்னார் அவர்.

ஒரு டாக்டர். மிகச்சிறப்பான பல்கலைக்கழக கல்வி. பிரயோசனம் இல்லாமல் போய் விட்டதே.

****

இதனை எழுதும் போது, தமிழ் சிறியர் சொன்ன ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. மைதானத்தில் ஒரு பேனையினை கண்டு எடுத்துக் கொண்டு வீடு போயிருக்கிறார். அதனை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு வருமாறு இரவு நேரத்தில் தந்தை திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்.

****

சிறு, சிறு திருட்டுகளை சிரித்து ஊக்குவிக்க கூடாது. உடனேயே அதனை கண்டித்து திருத்த வேண்டும், இல்லாவிடில் முதலுக்கே மோசமாகிவிடும் என்பதே இந்த கதை சொல்லும் கருத்து.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நாதம்,

எழுதி முடிஞ்சோ? கருத்து எழுத இப்ப 2.30 மணத்தியாலமா நான் வெயிட்டிங் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இதனை மருத்துவ உலகு அங்கீகரித்தாலும், அதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக, அதனை சட்டம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

பகிடியில்லை நாதம், உண்மையிலே ரசித்து வாசித்தேன்.

கடைசியில் போட்டிருந்த மெசேஜ் நைஸ் டச்👌.

ஒரு கொசுறு தகவல்:

இந்த சிறு திருட்டுக்களை கிளெப்டோமேனியா என்பார்கள். நீங்கள் சொன்னது போல் இது இருப்பதை ஒரு defence ஆக காட்டி திருட்டு வழக்கில் இருந்து தப்ப முடியாதுதான்.

ஒரு குற்றம் செய்ததாக காணப்பட ஒருவரின் செயலும்(act), அந்த குற்றத்தை செய்ய விரும்பிய மன நிலையும் முக்கியம் (intention).

பொதுவாக ஒருவரது intention ஐ இல்லாது ஆக்கும் மனநிலைகளுக்கே diminished responsibility அதாவது அந்த செயலை செய்யும் எண்ணம் வரும் அளவுக்கு மனநிலை உள்ளவர் அல்ல என்ற அடிப்படையில் விலக்கு (defence) வழங்கபடும்.

ஆனால் இப்படியான திருட்டுகளில் திருட்டு செயலும், திருடும் எண்ணமும் இருப்பதால் சட்டம் இதை ஒரு திருட்டாகவே கருதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் பெருவிளையாடல் அல்லவே. டாக்குத்தர் சின்ன திருட்டுக்களை விட்டுவிட்டு பாம்பெண்ணை பிஸினஸ் செய்திருக்கலாம்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய ராணியின் பாட்டி குயீன் மேரி (5 ம் ஜோர்ஜின் மனைவி) க்கும் இந்த பிரச்சனை இருந்ததாக சொல்வார்கள்.

சொல்ல மறந்தது:

பி பி சியில் பார்த்ததை மிகவும் தத் ரூபமாக எழுதியுள்ளீர்கள். 👏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான எழுத்து நடை.. திறில் படம் பார்த்ததுபோல் இருந்தது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில வாழ்ந்த காலங்களில சில கிழவியள் கதை சொல்லுற போது, கேட்டுக்கொண்டே இருக்க வேணும் போல இருக்கும்!
அது மாதிரி...அடுத்ததாக என்ன நடக்குமோ என ஆவலைத் தூண்டும் ஒரு எழுத்து நடை..!
தொடர்ந்தும் எழுதுங்கள்,நாதம்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறும்படம் பார்த்த மாதிரி இருக்கிறது.

தகவலுக்கு நன்றி நாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நாத்தின் எழுத்தைப் பற்றி எழுதியவர்களுக்கு ஒரு விடையம்.அவர் இப்படியான பலதை ழுதியுள்ளார்.அப்படி எழுதுவதில் அபார திறமையுள்ளவர்.ஆனால் விதி யாரைத்தான் விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மூச்சில் வாசிக்க வைத்த, சிறப்பான எழுத்து.  நன்றி நாதம்ஸ். 👍 :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Meilleurs GIFs Rusk | Gfycat

சிறியர் கொண்டுபோன பேனை எழுதாத பேனையாய் இருக்குமோ........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

இங்கு நாத்தின் எழுத்தைப் பற்றி எழுதியவர்களுக்கு ஒரு விடையம்.அவர் இப்படியான பலதை ழுதியுள்ளார்.அப்படி எழுதுவதில் அபார திறமையுள்ளவர்.ஆனால் விதி யாரைத்தான் விட்டது.

விதி (rule) எல்லாருக்கும் பொதுவானது. 

அது யாரையும் விடாது.

முகமன் பாராது.

எல்லாருக்கும் நல்ல பிள்ளைக்கு நடிக்காது.

நேற்று நல்லா எழுதினார் என்று இன்றைய பிழையை கவனியாது போகாது.

நேற்று பிழையாக எழுதினார் என்று இன்றைய நல்ல எழுத்தை பாராட்டாமலும் போகாது.

விதி வலியது.

ஆகா.... இப்பிடியுமா ஆப்படிப்பது...

நம்ம விதி, இந்த கண்ராவியை எல்லாம் வாசித்து துளைக்க வேண்டிக் கிடக்குது எண்டுறியள்.....  😜

14 hours ago, goshan_che said:

பகிடியில்லை நாதம், உண்மையிலே ரசித்து வாசித்தேன்.

கடைசியில் போட்டிருந்த மெசேஜ் நைஸ் டச்👌.

ஒரு கொசுறு தகவல்:

இந்த சிறு திருட்டுக்களை கிளெப்டோமேனியா என்பார்கள். நீங்கள் சொன்னது போல் இது இருப்பதை ஒரு defence ஆக காட்டி திருட்டு வழக்கில் இருந்து தப்ப முடியாதுதான்.

ஒரு குற்றம் செய்ததாக காணப்பட ஒருவரின் செயலும்(act), அந்த குற்றத்தை செய்ய விரும்பிய மன நிலையும் முக்கியம் (intention).

பொதுவாக ஒருவரது intention ஐ இல்லாது ஆக்கும் மனநிலைகளுக்கே diminished responsibility அதாவது அந்த செயலை செய்யும் எண்ணம் வரும் அளவுக்கு மனநிலை உள்ளவர் அல்ல என்ற அடிப்படையில் விலக்கு (defence) வழங்கபடும்.

ஆனால் இப்படியான திருட்டுகளில் திருட்டு செயலும், திருடும் எண்ணமும் இருப்பதால் சட்டம் இதை ஒரு திருட்டாகவே கருதும்.

கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி, தல...

11 minutes ago, goshan_che said:

விதி (rule) எல்லாருக்கும் பொதுவானது. 

அது யாரையும் விடாது.

முகமன் பாராது.

எல்லாருக்கும் நல்ல பிள்ளைக்கு நடிக்காது.

நேற்று நல்லா எழுதினார் என்று இன்றைய பிழையை கவனியாது போகாது.

நேற்று பிழையாக எழுதினார் என்று இன்றைய நல்ல எழுத்தை பாராட்டாமலும் போகாது.

விதி வலியது.

கண காலத்துக்கு பிறகு, டுடே பப் கோயிங் வித் பிரண்ட்ஸ்.... டு ராய்ஸ் தி கிளாஸ். 🦔

பாராட்டியோர், லைக் அடித்தோர் அனைவருக்கும் நன்றி.

***

எனக்கு, இந்த ஒனாண்டிப்புலவரில் கணக்க விசயம் இருக்கிற மாதிரி தெரியுது.... ஆள் அடக்கி வாசிக்குது... அவரது பாணி எழுத்து பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

கண காலத்துக்கு பிறகு, டுடே பப் கோயிங் வித் பிரண்ட்ஸ்.... டு ராய்ஸ் தி கிளாஸ். 🦔

பாராட்டியோர், லைக் அடித்தோர் அனைவருக்கும் நன்றி.

எனக்கு, இந்த ஒனாண்டிப்புலவரில் கணக்க விசயம் இருக்கிற மாதிரி தெரியுது.... ஆள் அடக்கி வாசிக்குது... அவரது பாணி எழுத்து பிடிக்கும்.

👍🏿

என்ஜாயி நாதமுனி

Pubஇல நல்லா மப்பாகி 🤣

ஜின் ஊத்தி Fun ஆகி

கோலா சேர்த்து ஒண்ணாக்கி 🤣

பிகு: பெருமாள் வந்து கட்டிப்பிடிப்பார் கவனம்.

பிகு பிகு: ஓனாண்டிக்கு நான் ஒண்ணாம் நம்பர் ரசிகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

ஒரு டாக்குத்தரின் பெரு விளையாடல்

நாதா! உங்கள் எழுத்து எனக்கு பிடித்திருக்கு :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2021 at 19:43, குமாரசாமி said:

நாதா! உங்கள் எழுத்து எனக்கு பிடித்திருக்கு :cool:

ஏதாவது பரிசு கொடுக்கிறது நாதருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு ரகம். இப்படிப் பல ரகங்கள். நம்ம டாக்குத்தர் சிலரும் சந்தர்ப்பம் கிடைத்தால் தப்புச் செய்வார்கள் என்பதற்கு.. பழைய வழக்குகள் கட்டியம் சொல்லுகின்றன. 

ஆனால் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார சேவை உத்தியோகத்தரா.. அது டாக்டர்.. தாதி.. ச்பிசியோ.. யாராகவும் இருக்கலாம்.. இப்போது ஆன்லைனில் சோதனை செய்து பார்க்க முடியும்.

https://www.gmc-uk.org/registration-and-licensing/the-medical-register

https://www.hcpc-uk.org/check-the-register/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2021 at 19:43, தனிக்காட்டு ராஜா said:

ஏதாவது பரிசு கொடுக்கிறது நாதருக்கு 

ஆ.... ஆயிரம் பொற்காசுகளா.... மண்டபத்தில் யாரும் எழுதித்தரவில்லை. நானே தான் எழுதினேன். 😳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஆ.... ஆயிரம் பொற்காசுகளா.... மண்டபத்தில் யாரும் எழுதித்தரவில்லை. நானே தான் எழுதினேன். 😳

யாரங்கே இந்தப் பொற்காசுகளை புலவரிடம் கொடுத்து விடுங்கள்......!  😁

1000 Gold Coins Prize Scheme from Vedic Days! | Tamil and Vedas

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இடையில இரன்டு பித்தலைக் காசு தெரியிற மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

என்ன இடையில இரன்டு பித்தலைக் காசு தெரியிற மாதிரி இருக்கு.

நாளும் பொழுதும் காசோட புளங்கிறவனுக்கு கழுகுக்கண் எண்டு என்ர ஆச்சி அடிக்கடி சொல்லுறவ..😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.