நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
-
Tell a friend
-
Topics
-
Posts
-
197 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ Published By: DIGITAL DESK 5 28 MAR, 2023 | 05:28 PM (நெவில் அன்தனி) சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் தனது 197ஆவது போட்டியில் விளையாடியதன் மூலம் கிறிஸ்டியானோ ரோனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார். லீச்டென்ஸ்டீன் அணிக்கு எதிராக நடைபெற்ற 2024 ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டியில் விளையாடியதன் மூலம் அவர் இந்த சாதனையை நிலைநாட்டினார். மேலும், போர்த்துக்கல் அணியில் மீண்டும் இடம்பெறும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஆற்றல் மங்கிவிடவில்லை என்பதை இந்த வருடம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் நிரூபீத்துள்ளார். பெரும் ஏமாற்றத்தைத் தோற்றுவித்த கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் பின்னர் போர்த்துக்கல் அணியில் மீண்டும் இடம்பெற்ற ரொனால்டோ, தனது முதல் இரண்டு போட்டிகளில் தலா 2 கோல்களைப் போட்டு அசத்தினார். உலகக் கிண்ணப் போட்டிக்கு பின்னர் சவூதி அரேபிய கால்பந்தாட்ட கழகம் ஒன்றில் இணைந்த ரொனால்டோ, 2024 ஐரோப்பிய சம்பியன்ஷிப் கால்பந்தாட்டப் போட்டியில் அசத்தி வருவதுடன் சர்வதேச கால்பந்தாட்டத் தரம் தன்னிடம் தொடர்ந்தும் இருக்கின்றது என்பதை நிரூபித்துள்ளார். லக்ஸம்பேர்க் அணிக்கு எதிரான போட்டியில் போர்த்துக்கல் ஈட்டிய 6 - 0 என்ற வெற்றியில் ரொனால்டோ 2 கோல்களைப் போட்டதுடன், லீச்டென்ஸ்டீன் அணியுடனான போட்டியில் ஈட்டிய 4 - 0 என்ற வெற்றியிலும் அவர் 2 கோல்களைப் போட்டிருந்தார். லீச்டென்ஸ்டீன் அணியுடனான போட்டியானது சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய சாதனைமிகு 197ஆவது சர்வதேச போட்டியாகும். இதன் மூலம் அதிகளவிலான சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மகிழ்ச்சி தருகிறது என போர்த்துக்கல் அணித் தலைவர் ரொனால்டோ தனது சமூக ஊடகத்தில் குறிப்பிட்டார். 'எமது தேசிய அணி சாதகமான பெறுபெறுகளை ஈட்டியமை மகிழ்ச்சி தருகிறது. இங்கிருந்து முன்னோக்கி நகர்வோம்' என சமூக ஊடகத்தில் கூறியிருந்தார். கத்தாரில் கடந்த வருடம் நடைபெற்ற மொரோக்கோவுக்கு எதிரான உலகக் கிண்ண கால் இறுதிப் போட்டியில் போர்த்துக்கல் தோல்வி அடைந்து வெளியேறியபோது ரொனால்டோ கண்ணீர் சிந்தியவாற அரங்கிலிருந்து வெளியேறியிருந்தார். அதன் பின்னர் இந்த வருடம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் போர்த்துக்கல் வெற்றிபெற்றது ரொனால்டோவுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்துள்ளது. பெரும் ஏமாற்றத்தைத் தந்த உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் தேசிய அணியில் விளையாடக் கிடைக்குமா என்ற சந்தேகத்திற்கு மத்தியில் சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் பெருந்தொகை பணத்திற்கு ரொனால்டோ ஒப்பந்தமாகியிருந்தார். எனினும் போர்த்துக்கல் அணியில் மீண்டும் இடம்பிடித்த ரொனால்டோ 2 போட்டிகளில் 4 கோல்களைப் போட்டு தனது திறமை மங்கவில்லை என்பதை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/151629
-
வெடுக்குநாறி மலை விவகாரம் : வவுனியாவில் மாபெரும் போராட்டத்திற்கு மாவை அழைப்பு Published By: DIGITAL DESK 5 28 MAR, 2023 | 04:11 PM வவுனியாவில் நாளை மறுதினம் (30) இடம்பெறும் மாபெரும் போராட்டத்திற்கு இன மதம் பாராது கட்சி பேதம் பாராது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அதேபோல் வெடுக்குநாறிமலையில் ஆதி லிங்கேஸ்வரர் உட்பட விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தேன். அவர் குறித்த விடயம் தொடர்பில் விவரமாக தனக்கு அனுப்பி வைக்குமாறு கோரி இருந்தார். அதன் அடிப்படையில் அவசரமாக அவருக்கு கடிதம் மூலம் பிரச்சினைகளை தெளிவாக எழுதி இருக்கின்றேன். அதேபோல நாளை மறுதினம் வவுனியாவில் மாபெரும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தப் போராட்டத்தில் நாங்கள் அனைவரும் கலந்து கொண்டு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக வெடுக்குநாறி மலை விடயம் மாத்திரமல்லாது வடபகுதியில் உள்ள ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் நாம் எமது குரல்களை எழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/151602
-
கோத்தபயவின் போர்க்குற்றத்தை காப்பாற்ற இனவாத சிறிலங்கா அரசின் பிரதிநிதியாக ஜெனிவா சென்றவர் அலி சப்ரி.
-
சுமந்திரன், சாணக்கியனின் அயரா முயற்சிக்கு குறுக்கே மாவை நிற்கிறார்.
-
என்னிடமும் நினைவாக ஒரு சின்ன தங்க பாறை கல் இருக்கு😂
-
Recommended Posts