Jump to content

நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டு........🙂

 

https://www.facebook.com/rekan.rekan.566/videos/683961085474225

Link to comment
Share on other sites

  • Replies 217
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

தாயக பள்ளி நாட்களில் சாக்கு பை மாட்டி கொண்டு குதித்து ஓடியது நினைவில் உண்டா.?

6.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நான் சின்ன வயதிலை துரவுப்புட்டியிலை இருந்து விளையாடினது 😎

Super Mario Bros. | NES | Spiele | Nintendo

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் பதிந்தவை பழைய நினைவுகள் பலதை மீட்டித்தந்தது.

இதை யாரும் விளையாடவில்லையா?

large.886120B5-406D-470F-AC59-F1EC5AFA1C1C.jpeg.12a28251aa75f4b75fe1e8a745a8a136.jpeg

large.E2DE15F1-68DD-4DA0-9F7C-29D1E95BD550.jpeg.9921582dfa62ac6bb5f3c036f92dfc84.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரபர் பாண்ட் அடித்தல். ஒரு காலத்தில் யாழ்பாணத்தில் தேசிய விளையாட்டு🤣.

large.F8F1C8D8-A477-48CC-9F80-B2B0D2AC0A4B.jpeg.f7abce3eb7da2057dce7e9f1c6d6b9d7.jpeg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

ரபர் பாண்ட் அடித்தல். ஒரு காலத்தில் யாழ்பாணத்தில் தேசிய விளையாட்டு🤣.

large.F8F1C8D8-A477-48CC-9F80-B2B0D2AC0A4B.jpeg.f7abce3eb7da2057dce7e9f1c6d6b9d7.jpeg

 

ரபர்பாண்டாலை அடிச்சு காது கிழிய வாங்கின அனுபவத்தையும் கையோடை எழுதுறதுதான் ஒரு மனிசனுக்கு அழகு 😂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ரபர் பாண்ட் அடித்தல். ஒரு காலத்தில் யாழ்பாணத்தில் தேசிய விளையாட்டு🤣.

large.F8F1C8D8-A477-48CC-9F80-B2B0D2AC0A4B.jpeg.f7abce3eb7da2057dce7e9f1c6d6b9d7.jpeg

 

இதைப்பற்றி போடுவோம் என நினைத்தேன்.. 

COVIDற்கு முன்பு அலுவலத்திற்கு போன ஒரு காலத்தில், அங்கேயும் இந்த மாதிரி rubber bandல் சிறு கடதாசி துண்டை வைத்து எறியும் நாங்கள், சிறு வயதில் செய்யாமல் விட்டிருப்போமா😎

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

ரபர்பாண்டாலை அடிச்சு காது கிழிய வாங்கின அனுபவத்தையும் கையோடை எழுதுறதுதான் ஒரு மனிசனுக்கு அழகு 😂
 

 

10 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதைப்பற்றி போடுவோம் என நினைத்தேன்.. 

COVIDற்கு முன்பு அலுவலத்திற்கு போன ஒரு காலத்தில், அங்கேயும் இந்த மாதிரி rubber bandல் சிறு கடதாசி துண்டை வைத்து எறியும் நாங்கள், சிறு வயதில் செய்யாமல் விட்டிருப்போமா😎

நாங்கள் வகை வகையாக “ரவுண்ஸ்” வைத்திருப்போம். பேப்பர் முதல் தடித்த வயர் துண்டுகள் வரை. உள்ளே உலோக கம்பி உள்ள தடித்த வயருக்கு பெயர் 50 கலிபர் (அப்ப அதுதான் பெரிய துவக்கு). பட்டால் ரத்தம் சுண்டும்.

ஒருநாள் பள்ளியில் ஒரு பெடியனுக்கு கண்ணிலபட்டு, ஒரே அல்லோலகல்லோலம். எல்லாற்றை அருமந்த ஆயுதங்களையும் பறி முதல் செய்தார்கள் 😔.

மர பலகையில் துவக்குமாரி வெட்டி எடுத்து, ஆணியில் ரபர் பாண்டை கொழுவி தட்டினால் பறப்பது போல ஒரு கருவியை செய்ய எனது நண்பன் ஒருவன் முயற்சித்தான் சக்சஸ் ஆகவில்லை.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதில மரவள்ளி நெட்டு வச்சு அடிச்சா சுள்ளிடும்… இயக்கம் இருக்கேக்க ஊரில ஆற்றையன் மோழுக்கு சாமத்தியவீடு கலியாண வீடு பொறந்தநாள் எண்டு ஏதும் நல்லது நடந்தா ஜெனரேட்டரில படம் வீடியோ கொப்பி போடுவாங்கள் முதல்ல.. அது முடிய விடிய விடிய படம் ஓடுவாங்கள்.. ஒரு கிழமைக்கு முன்னமே ஊர் புல்லா என்ன என்ன படம் எண்டு போடலாம் எண்டு கேட்டு கொப்பி வாடகைக்கு எடுப்பாங்கள்.. நாங்கள் மரவள்ளி நெட்டு ரப்பர் பாண்டு கல்லுகுறுணி எல்லாம் பொறுக்கி கொண்டு போவம்.. பொடனிக்கு பின்னுக்கு இருந்து வம்பு வேல செய்யுரது.. இருட்டுக்க எங்களுக்கும் ஆரும் செஞ்சு விட்ருவாங்க.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உதில மரவள்ளி நெட்டு வச்சு அடிச்சா சுள்ளிடும்…

நாங்கள் பூவரசம் இலை நெட்டு
வைச்ச குறி தப்பாது😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இருட்டுக்க எங்களுக்கும் ஆரும் செஞ்சு விட்ருவாங்க.. 

பொடியள் ஜே ஆர் ஐ விட மோசம்.

போர் எண்டால் போர். சமாதானம் எண்டாலும் போர் 🤣.

விளையாடி முடிஞ்சு வீட்டை வரேக்க, மரத்தில் இருந்து கெரில்லா அடி அடிச்சுப்போடுவாங்கள்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பொடியள் ஜே ஆர் ஐ விட மோசம்.

போர் எண்டால் போர். சமாதானம் எண்டாலும் போர் 🤣.

விளையாடி முடிஞ்சு வீட்டை வரேக்க, மரத்தில் இருந்து கெரில்லா அடி அடிச்சுப்போடுவாங்கள்🤣.

ஒருக்கா ஒரு பொடியன் சண்டை கட்டம் வரேக்க எழுப்பி விடு எண்டு பக்கத்த இருந்த பொடியனிட்ட சொல்லீட்டு நித்திரையாபோனான்.. அவன்ர குஞ்சில சணல் நூல கட்டி பக்கத்துல இருந்த தேமாவில சணலின்ர மற்றபக்கத்தை நல்லா இழுத்து கட்டி விட்டுட்டு சண்டை வந்திட்டு எழும்புடா எண்டு கத்தி எழுப்பி அவனுக்கு சூ அறுந்துபோகப்பாத்திச்சு.. 😅

7 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் பூவரசம் இலை நெட்டு
வைச்ச குறி தப்பாது😎

ஓம் பூவரசம் நெட்டும் சொன்ன சாமான்..

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bubble-Stick-Toy.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறக்கும் தட்டுகாக ( இலவச இணைப்பு ) விவா வாங்கியவை எத்தனை பேர்.?😊

young-man-playing-frisbee-picture-id9391

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.