Jump to content

இது மாபெரும் குற்றமா? யூ டியூபர் துரைமுருகன் கைது காழ்புணர்ச்சியானது.. நாம் தமிழர் சீமான் கண்டனம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

இல்லை. இந்த திரியில் கருத்து எழுதுவதில் நாட்டம் இல்லை. 

சொன்ன சொல் மாறப்படாது. 🤭

Link to comment
Share on other sites

 • Replies 101
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

valavan

ராஜீவ் மறைவின் பின்னர் நமக்கு சார்பாயிருந்த அத்தனை தமிழக எழுச்சியும் மொத்தமாய் படுத்துக்கொண்டது. அதனை மீள கட்டமைக்க புலிகளும் தமிழக எம் போராட்ட ஆதரவாளர்களும் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல,  ஒரு 50% கூ

ராசவன்னியன்

யெஸ். ஈழத்தில் நடந்தது போன்றதின் நீட்சியாக இங்கேயும் நடக்கும் குழு வன்முறை, மிரட்டல் போன்றவை சாதாரண மக்களிடையே ஆதரவைவிட ஒருவித எரிச்சலையும், சலிப்பையுமே ஏற்படுத்தும். 'இவர்களும் இவர்களை சார

nedukkalapoovan

இதில் நிறைய கற்பனை தான் இருக்குது. 1987 இலேயே புலிகளை ஒழித்துக்கட்ட தீர்மானிச்சாச்சு. தலைவரை குறிவைத்து ஹிந்தியப் படை ராஜீவின் தலைமையில் நடவடிக்கையையும் எடுத்துவிட்டது. அன்று தலைவர் மயிரிழையில் உ

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சாந்தி அக்கா! உங்கள் கேள்வியைப்போல்  தான் எனக்கும் இருக்கின்றது. 
அடிப்படலைக்கை இருக்கிற எங்கடை சனத்தைப்பற்றி ஒண்டுமே கதைக்காமல்/கேட்காமல் இருக்கிற நீங்கள் இந்தியாவிலை இருக்கிற சீமானை எதிர்த்து ஜலதரங்கம் வாசிக்கிறியள். அதோடை ஜேர்மன் அரசியல் பலமும் இருக்கிற ஆளெல்லோ எங்கடை சாந்தியக்கா 🤣

யேர்மனி தேசத்தின் இறையாண்மைக்கு உட்பட்ட அரசியல் மறக்காமல் குறிப்பிடவும். 🤣

யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ? அல்லது அதையெல்லாம் கண்ணால் காண்பதை காதால் கேட்பதை வாயால் கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறீங்களோ? 

யேர்மனி எமக்கு அடைக்கலம் தந்த நாடு. எங்கள் கருத்துக்களையும் கேட்கும் அல்லவா? 🤔

Link to comment
Share on other sites

திருட்டு திராவிடம் இருக்கும் தமிழ்நாட்டில் வெக்கம், மானம், சூடு, சுரணை இருப்பவர்கள் சிறையில் இருப்பார்கள்...

மேற்குறிப்பிட்டவற்றில் கடுகளவேனும் இல்லாதவர்கள் கடைந்தெடுத்த தத்தியாக இருப்பினும் அரியணையில் அமர்ந்து துக்ளக் ஆட்சி நடத்துவார்கள்..

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த புதிய வழக்குகள்.. எதற்காக தெரியுமா?

Velmurugan PPublished:June 12 2021, 10:36 [IST]

திருச்சி: சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சார்ந்த குஷ்பூ ஆகியோர் படத்தை பயன்படுத்தி அவதூறு செய்ததாகவும், மைனர் குழந்தைகள் படத்தை பயன்படுத்தியதற்காகவும் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த கார் ஷோரூம் உரிமையாளர் திமுக பிரமுகர் வினோத் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு சர்ச்சைக்குரிய பதிவினை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து நேற்று முன்தினம் காலை வினோத்தின் கார் நிறுவனத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில இளைஞர் பாசறை செயலாளரும், சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் துரைமுருகன், மாவட்ட செயலாளர் மற்றும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட வினோத், நிர்வாகிகள் சரவணன், சந்தோஷ் குமார் உள்பட 10 பேர் எதற்காக விமர்சனம் செய்தாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

மன்னிப்பு கேட்டார்

வீடியோ வெளியீடு

இதில் அவரை மிரட்டியதோடு, பிரபாகரன் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இனிமேல் பிரபாகரன் பற்றி பேச மாட்டேன் என்று பேச வைத்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அதன்படி வினோத் வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். பின்னர் அதனை சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டார்.

சாட்டை துரைமுருகன் கைது

வினோத் கொடுத்த புகார்

இதன்பின்னர் தன்னை மிரட்டியதாக வினோத், திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதந்த புகாரின் பேரில், ஐபிசி பிரிவு 143, 147, 293 (பி),447 மற்றும் 506 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சாட்டை துரைமுருகன், வினோத், சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்,.

ஐந்து பிரிவுகள்

என்னென்ன வழக்கு

இதனிடையே சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சார்ந்த குஷ்பூ ஆகியோர் படத்தை பயன்படுத்தி அவதூறு செய்ததாகவும்,மைனர் குழந்தைகள் படத்தை பயன்படுத்தியதற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. IPC 153A,504,505(1)(b)IT-67,2008 ஆகிய வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

திமுக வழக்கறிஞர் புகார்

திமுக வழக்கறிஞர் புகார்

திமுக வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் ராஜசேகர் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், வழக்கறிஞர் ராஜசேகர் கூறுகையில், இன்று(நேற்று) காலை 10 மணிக்கு திருப்பனந்தாளில் உள்ள எனது அலுவலகம் சென்றேன். அப்போது இணையதளத்தில் அவதூறாக ஒரு வீடியோ பரவுவதை கண்டேன். அதை பார்த்த போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த வீடியோவானது சாட்டை யூடியூப் தளத்தில் இருந்தது.

கருணாநிதி

குஷ்பு

அந்த வீடியோவில் பேசும் துரைமுருகன் பாண்டியன் என்னும் நபர், தன்னுடைய பதிவில் மைனர் குழந்தைகளின் புகைப்படத்தை வைத்தும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் பிஜேபியைச் சேர்ந்த குஷ்பு ஆகியோரின் புகைப்படத்தை வைத்தும் ஒரு வீடியோவினை உருவாக்கி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 14.29 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உள்ளது.

வீடியோக்களை அழிக்கணும்

புகாரினால் பாய்ந்த வழக்கு

அந்த வீடியோ பதிவின் ஒரு இடத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவின் குஷ்பு ஆகியோரின் புகைப்படத்தை அவதூறாக வைத்துள்ளார். இது கோடிக்கணக்கான திமுகவினர் மனதை புண்படுத்துகிறது. அந்த வீடியோ பதிவினை சீடியாக புகாருடன் தாக்கல் செய்துள்ளேன். அந்த வீடியோவை இணையத்தில் இருந்து அழிக்க வேண்டும். மைனர் பெண் வீடியோவையும் அழிக்க வேண்டும். அவதூறு செய்த சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர்.

https://tamil.oneindia.com/news/trichirappalli/new-cases-against-saattai-duraimurugan-for-defaming-karunanidhi-and-khushboo-423738.html

Edited by goshan_che
செய்தியை வெட்டி ஒட்டும் போது, முழுவதும் ஒட்டவில்லை.
Link to comment
Share on other sites

48 minutes ago, shanthy said:

யேர்மனி தேசத்தின் இறையாண்மைக்கு உட்பட்ட அரசியல் மறக்காமல் குறிப்பிடவும். 🤣

யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ? அல்லது அதையெல்லாம் கண்ணால் காண்பதை காதால் கேட்பதை வாயால் கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறீங்களோ? 

யேர்மனி எமக்கு அடைக்கலம் தந்த நாடு. எங்கள் கருத்துக்களையும் கேட்கும் அல்லவா? 🤔

யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ? 

சிலருக்கு யேர்மனி ஆட்கள் போத்தல்கள் போன பிறகு ஞானம் பிறக்கும்.

எங்களுக்கு ஊரில் எங்கள் உறவுகள் இப்போதும் ஊரில் வசிக்கின்றனர். அவர்கள் கருத்து முக்கியம். யாரவது ஊரில் பிரச்சனை இல்லை என்றால் ரொம்ப சந்தோஷம் .ஆனால் எங்கள் உறவுகளுக்கு அப்படி இல்லை. 

Link to comment
Share on other sites

58 minutes ago, goshan_che said:

திருச்சி: சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சார்ந்த குஷ்பூ ஆகியோர் படத்தை பயன்படுத்தி அவதூறு செய்ததாகவும், மைனர் குழந்தைகள் படத்தை பயன்படுத்தியதற்காகவும் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்னது பாஜக குஷ்புவிற்காக தி.மு.க வழக்கு போடுதா, நம்புங்கப்பா நாதக பி.ஜே பி B ரீமே தான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

திருச்சியில் 'சாட்டை' துரைமுருகன் கைது! யார் இவர்... பின்னணி என்ன?

சீமானின் தம்பிகள்

சீமானின் தம்பிகள்

'திருடர் கழகத்தின் 3-வது புலிகேசி' என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலினை கேலியாகச் சித்திரித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தி.மு.க நிர்வாகிகளைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார். அதன் காரணமாக அவரை மிரட்டிய குற்றத்துக்காக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நான்கு பேரை திருச்சி போலீஸார் கைதுசெய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எனது தம்பிகளைக் கைதுசெய்திருப்பதாக' சீமான் அறிக்கை வெளியிட்டார்.

சீமான் - பிரபாகரன்
 
சீமான் - பிரபாகரன்

கடந்த சில தினங்களாக, சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதன் உரிமையாளர் வினோத் என்பவர், தமிழ் ஈழத்துக்காகப் போராடிய பிரபாகரனையும், அவருடைய கொள்கையையும், சீமானையும் கடுமையாக விமர்சனம் செய்ததாகச் சொல்கிறார்கள். இதைப் பார்த்து அதற்கு பதில் அளித்த சாட்டை துரைமுருகன், பிரபாகரனைத் தவறாகப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார் எனச் சொல்லப்படுகிறது. மேலும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலரும் அந்தப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்,

 

இந்தநிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் முற்றியநிலையில், சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநில தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் உள்ளிட்ட நான்கு பேர் சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்துக்குச் சென்று பிரபாகரனை விமர்சித்த வினோத்தை நேரில் சந்தித்துப் பேசியதோடு,

சமர் கார் ஸ்பா நிறுவனம்
 
சமர் கார் ஸ்பா நிறுவனம்

காவல்துறையினர் முன்னிலையில் வினோத்தை மறுப்பு தெரிவித்து, மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட வேண்டும் என்று எச்சரித்து வீடியோவும் வெளியிடச் செய்துள்ளனர். அவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்துபோய் வினோத் கே.கே.நகர் காவல்துறையினருக்கு புகார் கொடுத்திருக்கிறார்.

நாம் தமிழர் நிர்வாகிகளைக் கைது செய்த போலீஸார்
 
நாம் தமிழர் நிர்வாகிகளைக் கைது செய்த போலீஸார்

புகாரின் பேரில் சாட்டை துரைமுருகன் மற்றும் அவருடன் சென்று மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீதும் காவல்துறை வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்தது. அவர்கள்மீது பிரிவு 147 – கலகம் செய்தல், பிரிவு 148 – கலகம் செய்யும்போது பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.

 

யார் இந்த 'சாட்டை' துரைமுருகன்?

நாம் தமிழர் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டுவந்தவர். பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். `சாட்டை’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே, சமூக வலைதளங்களில் முக்கியத் தலைவர்களை ஆபாசமாகச் சித்திரித்து பல்வேறு வீடியோக்களை வெளியிடும் சம்பவம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதில் குறிப்பாக, சாட்டை துரைமுருகனும் ஒருவர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் மிக மோசமாகச் சித்திரித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

சாட்டை துரைமுருகன்
 
சாட்டை துரைமுருகன்

இந்தநிலையில், இவரது செயல்பாட்டைக் கண்டித்து தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தார். 'திருடர் கழகத்தின் 3-வது புலிகேசி' என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலினைக் கேலியாகச் சித்திரித்து ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தி.மு.க நிர்வாகிகளைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

போலீஸார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை
 
போலீஸார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை

இந்தநிலையில்தான் பிரபாகரன், சீமானை விமர்சனம் செய்ததாக வினோத் என்பவரை மிரட்டியதாக இவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிரட்டியதற்காக நடந்த வழக்கு பதிவா... இல்லை தி.மு.க-வினரைத் தொடர்ந்து விமர்சனம் செய்வதால், தி.மு.க தலைமை கொடுத்த அழுத்தமா என்று கொந்தளிக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்

 

 

https://www.vikatan.com/news/politics/youtuber-saatai-durai-murugan-arrested-by-police-in-trichy-for-threatering-car-spa-centre-owner

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, அக்னியஷ்த்ரா said:

என்னது பாஜக குஷ்புவிற்காக தி.மு.க வழக்கு போடுதா, நம்புங்கப்பா நாதக பி.ஜே பி B ரீமே தான்.

இதை விட ரஜனிகாந்த் மகளை பற்றி ஒரு பொதுக்கூட்டத்தில் சாட்டை மிக மோசமாக பேசிய வீடியோ இன்னும் சுத்திட்டுதான் இருக்கு.

ஆனா இதெல்லாத்தையும் விட்டுட்டு -இவங்கள் கடுப்பாக காரணம் - அந்த வீடியோல குஸ்பு-கருணா ரெண்டு பேரயும் ஒரு போட்டோ போட்டு, ஒண்ணா போட்டு தாக்கி இருப்பார்.

இப்ப நடுநிலையாக நடவடிக்கை எடுக்கிறதா காட்ட குஸ்புவையும் இழுத்து விடுறாங்க.

இப்ப பிஜேபி வழக்கு வேண்டாம் என்றும் சொல்லேலா, வேணும் எண்டும் சொல்லேலா🤣

மிக தெளிவா தெரியுது அந்த டிவீட் திமுக சொல்லி போடவைத்த டிவீட்தான்.

சாட்டை போய் சிக்கிகொண்டார்.

இதில் திமுகவுக்கு விழுந்த மாங்காய்கள்

1. நாம் தமிழர்/தமிழ் தேசியம் வன்முறை, சகிப்புதன்மை அற்ற வழி என்ற பிம்பம்.

2. தலைவரை பற்றிய அந்த அவதூறு இந்திய லெலெவலில் டுவிட்டரில் டிரெண்டாகியது.

3. சாட்டை போல கதைக்க இனி ஆட்கள் கொஞ்சம் யோசிப்பார்கள்.

4. 7 பேர் விடுதலையில் நாடகம் ஆடி விட்டு அதை இவர்கள் தலையில் தூக்கி போடலாம்(பொய்யாக).

5. ஈழத்தமிழன் v இந்திய தமிழன் என்ற வேற்றுமையை மேலும் இதை கொண்டு ஒரு படி முன்நகர்த்தலாம்.

திருட்டு திமுக என்பது சரியாகத்தான் இருக்கு. 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, appan said:

யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ?  

பலமுறை எதிர்த்து எழுதி பேசியதால் அவையள் கனபேருக்கு என்னை கண்டால் வேப்பிலை கசப்பு. இனவெறி பிடித்தவள் எனும் பட்டமும் தந்து கனகாலம். 

11 minutes ago, goshan_che said:

இதை விட ரஜனிகாந்த் மகளை பற்றி ஒரு பொதுக்கூட்டத்தில் சாட்டை மிக மோசமாக பேசிய வீடியோ இன்னும் சுத்திட்டுதான் இருக்கு.

ஆனா இதெல்லாத்தையும் விட்டுட்டு -இவங்கள் கடுப்பாக காரணம் - அந்த வீடியோல குஸ்பு-கருணா ரெண்டு பேரயும் ஒரு போட்டோ போட்டு, ஒண்ணா போட்டு தாக்கி இருப்பார்.

இப்ப நடுநிலையாக நடவடிக்கை எடுக்கிறதா காட்ட குஸ்புவையும் இழுத்து விடுறாங்க.

இப்ப பிஜேபி வழக்கு வேண்டாம் என்றும் சொல்லேலா, வேணும் எண்டும் சொல்லேலா🤣

மிக தெளிவா தெரியுது அந்த டிவீட் திமுக சொல்லி போடவைத்த டிவீட்தான்.

சாட்டை போய் சிக்கிகொண்டார். 

3. சாட்டை போல கதைக்க இனி ஆட்கள் கொஞ்சம் யோசிப்பார்கள். 

நாயக்கரே சாட்டை நல்லவரா கெட்டவரா? 🤔

Edited by shanthy
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, tulpen said:

பிரெஞ்சு புரட்சியின் அடிநாதமே கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம்.(freedom of expression) அப்படிப்பட்ட பிரான்சில் தினமுரசு பத்திரிகை தடை செய்யப்பட்டதாகவும் அந்த தடையை மீறி அப்பத்திரிகையை விற்ற ஒரு கடைக்காரருக்கு அதை விற்க வேண்டாம் என்று புரிய வைக்கப்பட்டபோது அவரின் உடம்பில் பல இடங்களில் வீக்கங்கள் ஏற்பட்டதாக இங்கு யாழ் களத்திலேயே சில நாட்களுக்கு முன்பு  பெருமை பேசப்பட்டதே. அதைப் போன்ற ஒரு புரிதல் தான் அங்கும். 😂😂 

 

முதலில் மாட்டுக்குள்  கழுதையை கொண்டு வந்து விடுவதை நிறுத்துங்கள்

(அங்கே பகிடிக்கு  பேசப்பட்டதை  கள  உறவுகள் அறிவர்)

இந்த  திரி சம்பந்தமாக கருத்து எழுதுவதற்கு முன்னர் (கருத்து சுதந்திரத்தை  மதிப்பவர் என்ற முறையில் சம்பந்தப்பட்டவர்கள் என்ன  சொல்கிறாரகள் என்றும் அறிய) 

மேலே உள்ள  காணொளியை தயவு  கூர்ந்து கேளுங்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, shanthy said:

நாயக்கரே சாட்டை நல்லவரா கெட்டவரா? 🤔

எனக்கும் இந்த டவுட் இருக்கு. 

1. சாட்டையை கட்சியை விட்டு சீமான் நீக்கினார். பலர் அப்போதே அதை கண்துடைப்பு நீக்கம் என்றார்கள். நீக்கிய நேரம் இவருடன் இனி எந்த நாதகவினரும் அரசியல் செய்ய கூடாது என்றார் சீமான். 

ஆனால் இந்த நடவடிக்கையில் நாதக பொறுபாளரும் போயுள்ளார்கள். ஆகவே சாட்டையை கட்சிக்கு வெளியே இருந்தபடி ஆபாசமாக பேசுமாறு சீமான் பணித்தார் என கொள்ளவும் முடியும்.

2. இன்னொரு வழமாக - இப்போ தலைவரை பழித்ததை எதிர்த்து சிறை போனார் என கட்சி வட்டத்தில் பெரும் ஹீரோ ஆகிவிட்டார் சாட்டை. கட்சியை விட்டு நீக்கியவர்கள் டிவீட்டை லைக் பண்ணினாலே சீமானுக்கு கெட்ட கோபம் வரும். இப்போ சாட்டையின் எழுச்சி, சீமானுக்கே ஆபத்தாய் வரலாம். சீமானும் நிச்சயம் இதை உணர்வார்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

எனக்கும் இந்த டவுட் இருக்கு. 

1. சாட்டையை கட்சியை விட்டு சீமான் நீக்கினார். பலர் அப்போதே அதை கண்துடைப்பு நீக்கம் என்றார்கள். நீக்கிய நேரம் இவருடன் இனி எந்த நாதகவினரும் அரசியல் செய்ய கூடாது என்றார் சீமான். 

ஆனால் இந்த நடவடிக்கையில் நாதக பொறுபாளரும் போயுள்ளார்கள். ஆகவே சாட்டையை கட்சிக்கு வெளியே இருந்தபடி ஆபாசமாக பேசுமாறு சீமான் பணித்தார் என கொள்ளவும் முடியும்.

2. இன்னொரு வழமாக - இப்போ தலைவரை பழித்ததை எதிர்த்து சிறை போனார் என கட்சி வட்டத்தில் பெரும் ஹீரோ ஆகிவிட்டார் சாட்டை. கட்சியை விட்டு நீக்கியவர்கள் டிவீட்டை லைக் பண்ணினாலே சீமானுக்கு கெட்ட கோபம் வரும். இப்போ சாட்டையின் எழுச்சி, சீமானுக்கே ஆபத்தாய் வரலாம். சீமானும் நிச்சயம் இதை உணர்வார்.

இதே கருத்துதான் எனதும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் இத்திரியல் எழுத வேண்டாம் என்றிருந்தேன்

சாந்தியக்கா வந்திட்டா

இனி  இது 10 பக்கம் தாண்டும்

(ஏதோ  நம்மால  முடிந்தது)😜

(நமக்கும் விருது கிடைக்க  சந்தர்ப்பமுண்டல்லவா)🤣

உண்மையில் திமுக ஆட்சியில்  உள்ள கட்சி

நாம் தமிழர் வளர்ந்து  வரும் நிலையில்  உள்ள  கட்சி

அதிலும்  திமுகவை  எதிர்ப்பதே முதல் கடமை  என  அறிவித்து  செயற்படும் கட்சி

எப்பொழுதுமே மக்கள் ஆ;ட்சி அதிகாரத்திலுள்ளவர்களை கேள்வி  கேட்கவும்

அவர்களை அடுத்த தடவை  பதவி இறக்கவுமே விரும்புவர்

அது  தான் வரலாறும்  கூட.

அதே நேரத்தில் சீமான் திமுக  தலைவரை  சந்தித்தது  மட்டுமல்லாது

திமுக ஆட்சியை புகழ்ந்தும் உள்ள  நிலையில்..........

இந்த  நடவடிக்கை திமுகவை இறங்கவும்  நாம்  தமிழரை  ஏறவுமே  செய்யும்

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நான் இத்திரியல் எழுத வேண்டாம் என்றிருந்தேன்

சாந்தியக்கா வந்திட்டா

இனி  இது 10 பக்கம் தாண்டும்

(ஏதோ  நம்மால  முடிந்தது)😜

(நமக்கும் விருது கிடைக்க  சந்தர்ப்பமுண்டல்லவா)🤣

10 பக்கம் தாண்டாது சொல்றேன் நம்புங்கோ விருது.  @goshan_che போட்டியில் அதிகமாக கலந்து கொள்வதில்லை என அறிவித்திருக்கிறார்.😇

அடுத்த விருது உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகள்.🙆

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, shanthy said:

 

சாந்தியக்கா! அங்கை ஊரிலை தென்னிலங்கை கோரோனா வருத்தக்காரரை யாழ்ப்பாண பக்கம் கொண்டு போயினமாம் ஏனெண்டு தெரியுமோ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழினப்படுகொலை செய்த ராஜபக்சவுக்கு பொன்னாடை போர்த்திய கூட்டமல்லவா.

சீமானின் நெகிழ்ச்சிக்கு.. கிடைத்த பரிசு. திருந்தாத முன்னேற்றக்கழகத்திடம் திருத்தத்தை எதிர்பார்க்க முடியாது. அது போலித் திராவிடம் பேசிக்கிட்டு.. தமிழர் விரோத குடும்ப ஆட்சியை தமிழகத்தில் முன்னெடுக்க.. காங்கிரஸ் போன்ற இனப்படுகொலை நேரடிப்பங்காளிகளால் ஊட்டி வளர்க்கப்படும் ஒரு கொடிய சக்தி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

திருந்த வாய்ப்பில்லை ராஜா. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இங்கு இந்த திரிகள் நீண்டு கொண்டு செல்லும் ஒன்றுக்கும் உதவாத திரிகள் ஆனால் நம்ம வடகிழக்கில் கொரனோ  தாண்டவமாட தொடங்கி விட்டது சாதாரண கூலிவேலை செய்பவர்கள் மீனவர்கள் அனைவரும் பயணத்தடை எனும் நெருக்குவாரத்தால் மீண்டும் புலம்பெயரை நோக்கி வருகிறார்கள் இந்த சீமானின் பிரச்சனையை கதைப்பது என்றால் அனுமான் வால்  போல் நீளும் நிக்காது அதற்கிடையில் தாயகத்தில் எத்தனை தற்கொலை நடக்குதோ தெரியாது .

No photo description available.

 • Like 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இங்கு இந்த திரிகள் நீண்டு கொண்டு செல்லும் ஒன்றுக்கும் உதவாத திரிகள் ஆனால் நம்ம வடகிழக்கில் கொரனோ  தாண்டவமாட தொடங்கி விட்டது சாதாரண கூலிவேலை செய்பவர்கள் மீனவர்கள் அனைவரும் பயணத்தடை எனும் நெருக்குவாரத்தால் மீண்டும் புலம்பெயரை நோக்கி வருகிறார்கள் இந்த சீமானின் பிரச்சனையை கதைப்பது என்றால் அனுமான் வால்  போல் நீளும் நிக்காது அதற்கிடையில் தாயகத்தில் எத்தனை தற்கொலை நடக்குதோ தெரியாது .

No photo description available.

பெருமாள் நீங்கள சரியான நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறியள்.ஆனால் உங்கள் நியாயமான நிலைப்பாடு புறக்குடத்தில் ஊற்றிய இன்னுமொரு வாழித் தண்ணீர் தான்.

Link to comment
Share on other sites

நாம் சாட்டை குறூப்பை விமர்சிப்பது நியாயமற்ற செயல்!

முதலில்: பல காலமாகத் தெரிந்த ஒரு தி.மு.க காரர் பொறி வைக்கிறார் என்று சாட்டைக்கு எப்படிப் புரியும்? 

இரண்டாவது: "புரிதல்" ஏற்படுத்திய பிறகு ஒருவர் திருத்திய கருத்தை வெளியிட்டு விட்டு, சாட்டை குழு வெளியேறிய பிறகு மீளப் போய் மாற்றுவார் என்று அவர்களுக்கு எப்படி எதிர்பார்க்க முடியும்? பலவந்தம் செய்தனர் என்று முறையிடுவார் என்று எப்படி எதிர்பார்ப்பது? வழமையாக இது சாட்டை பார்த்திருக்கக் கூடிய சினிமாக்களில் நடப்பதேயில்லையே? 

எனவே, சாட்டை குழு மீது விமர்சனமேதுமில்லை எனக்கு!

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இங்கு இந்த திரிகள் நீண்டு கொண்டு செல்லும் ஒன்றுக்கும் உதவாத திரிகள் ஆனால் நம்ம வடகிழக்கில் கொரனோ  தாண்டவமாட தொடங்கி விட்டது சாதாரண கூலிவேலை செய்பவர்கள் மீனவர்கள் அனைவரும் பயணத்தடை எனும் நெருக்குவாரத்தால் மீண்டும் புலம்பெயரை நோக்கி வருகிறார்கள் இந்த சீமானின் பிரச்சனையை கதைப்பது என்றால் அனுமான் வால்  போல் நீளும் நிக்காது அதற்கிடையில் தாயகத்தில் எத்தனை தற்கொலை நடக்குதோ தெரியாது .

No photo description available.

 

இவை அமைப்புக்கள்  ஊடாக

ஒரு  குழுமம்  ஊடாக செய்யப்பட வேண்டியவை

செய்யப்படணும்

இது  போன்று தனிப்பட்ட விளம்பரங்கள்

இதுவரை நல்ல வழிகளையோ

சரியான தேவைகளை பூர்த்தி  செய்யவோ

தேவைப்பட்டவர்களை  சென்றடையவோ  இல்லை

யாழ்  களத்திடம்  இந்த  அமைப்பு நேரடியாக  தமது  தேவை சார்ந்த திட்டத்தை சமர்ப்பிக்க

ஏற்பாடு  செய்யுங்கள்

கள  உறவுகளை  ஒன்றிணைத்து செய்யலாம்

Edited by விசுகு
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சாந்தி அக்கா! உங்கள் கேள்வியைப்போல்  தான் எனக்கும் இருக்கின்றது. 
அடிப்படலைக்கை இருக்கிற எங்கடை சனத்தைப்பற்றி ஒண்டுமே கதைக்காமல்/கேட்காமல் இருக்கிற நீங்கள் இந்தியாவிலை இருக்கிற சீமானை எதிர்த்து ஜலதரங்கம் வாசிக்கிறியள். அதோடை ஜேர்மன் அரசியல் பலமும் இருக்கிற ஆளெல்லோ எங்கடை சாந்தியக்கா 🤣

ஜேர்மனி என்றதும் சிங்கம் குதிச்சு என்றி ஆகுது  ஏன் சிங்கள் சாந்தி அக்கா குறிப்பிட்ட சஞ்சிகைகள் , எழுத்தாளர்கள் புலிகளுக்கும் , தலைவர்களுக்கும் இப்பவரைக்கும் அங்கிருந்து எழுதுகிறார்கள் இதற்கு நீங்கள் ஏதேனும் இடத்தில் எதிப்புக்கு கையை தூக்கி இருக்றீர்களா??

இப்படி பல நாடுகளிலும் இருந்தும் எழுதி இலங்கைக்கே பார்சல் பண்ணுகிறார்கள் அதை முகநூலில் பலர் காவிக்கொண்டே திரிகிறார்கள்  இதெல்லம் படித்து கடக்கிறார்கள் பதில் ஏதும் சொல்லாமல் .

எனக்கென்னமோ கொல்லன் பழுத்த இரும்பை கண்டால் எதையோ  ஆட்டி ஆட்டி அடிப்பது போல த்தான்  இருக்கு 

Link to comment
Share on other sites

இங்கே பலருக்கு தாயக மக்கள் மீதிருக்கிற அக்கறையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

ஆனால் திரியை அடிச்சு நூத்தால் கொஞ்சம் damage control செய்யலாம் என்ற நோக்கத்திற்காக தாயக மக்களின் துன்பத்தை பயன்படுத்துறார்களாக இருந்தால் அது மிகவும் அருவருக்கத் தக்கது!

பல திசை திருப்பும் அணுகுமுறைகளில் ஒன்று: "இங்கையென்ன வாதாட்டம், அங்க பாருங்கோ முக்கியமான விசயம் நடக்குது? " 

(மாநில தமிழ்ச்சங்கம் ஊடாக தாயக மக்களுக்கு முதல் பகுதி உதவியை அனுப்பி விட்டு, தற்போது இரண்டாம் கட்டம் அனுப்ப தயார்படுத்திக் கொண்டே இதை எழுதுகிறேன் - எனவே என்னைத் திட்டாதீர்கள்!)  

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 

இவை அமைப்புக்கள்  ஊடாக

ஒரு  குழுமம்  ஊடாக செய்யப்பட வேண்டியவை

செய்யப்படணும்

இது  போன்று தனிப்பட்ட விளம்பரங்கள்

இதுவரை நல்ல வழிகளையோ

சரியான தேவைகளை பூர்த்தி  செய்யவோ

தேவைப்பட்டவர்களை  சென்றடையவோ  இல்லை

யாழ்  களத்திடம்  இந்த  அமைப்பு நேரடியாக  தமது  தேவை சார்ந்த திட்டத்தை சமர்ப்பிக்க

ஏற்பாடு  செய்யுங்கள்

கள  உறவுகளை  ஒன்றிணைத்து செய்யலாம்

அண்ணெய்  உங்கள் அக்கறை நல்ல விடயம்தான் கடந்த ஐந்து நாட்களா விடிகாலை நித்திரையில் ஊரில் இருந்து போன்கள்  வந்த வண்ணம் உள்ளது பயணத்தடை  என்று அன்றாடம் தொழில் புரிவோர் நிறைய பாதிக்கப்படுகினம். முன்பு உதவிகள் பெற்று இருப்பினும் அங்குள்ள விலைவாசிகளுக்கு சமாளிக்க முடியாது முடிந்தமட்டும் செய்வம் இங்கு குழுவாக செய்ய வெளிக்கிட  ஒவ்வொருவர் ஒவ்வொன்றை சொல்லி கடைசியில் அதுகளை பசியில் சாகடித்து விடுவம்.

பார்வையிழந்தவர்களின் உதவி கேரல் கடிதம் இங்கு இணைத்தது  என் பிழை தயவு செய்து நிர்வாகம் அதை அகற்றி விடவும் பாருங்க எவ்வளவு எகத்தாளமான  கருத்து வருது   இனிமேல் யாழில் எந்த  உதவி கோரல் கடிதங்கள் இனைக்கபோவதில்லை பங்கு பெறப்போவதும் இல்லை நான் கொடுப்பதை யாரும் நக்கலடிக்க போவதில்லை தானே நன்றி வணக்கம் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, shanthy said:

 

 சாந்தி அக்கா! கண்டவன் கிண்டவன் கதைக்கிறதை எல்லாம் சாட்சி வீடியோவாய் போட வெளிக்கிட்டியள் எண்டால் எல்லாம் நாறும்.பதிலுக்கு என்னிடமும் காணொளிகள் பல கைவசம் இருக்கு. வேண்டாம் உந்த விளையாட்டு. யாருக்குமே அழகில்லை. எல்லோரும் யாழ்கள நலன் கருதி/தமிழின நலன் கருதி அடக்கி வாசிப்போம். 😁

Link to comment
Share on other sites


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் முதலீட்டை இலக்காகக் கொண்டதல்ல : அரசாங்கம் By T. Saranya 17 Aug, 2022 | 10:06 AM (எம்.மனோசித்ரா) புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் முதலீட்டை இலக்காகக் கொண்டதாகும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாதுகாப்பு அமைச்சின் தொடர்ச்சியான கண்காணிப்புக்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமையவே குறித்த அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் சில புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முதலீட்டை இலக்காகக் கொண்டே குறித்த அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படுவதாக பல தரப்பினராலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இந்நிலையில் இது தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்க்கப்பட்ட போதே  அமைச்சரவை பேச்சாளர் மேற்கண்டவாறு பதிலளித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , முதலீட்டை இலக்காகக் கொண்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கான தடை நீக்கப்பட்டதாக கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 1968 (48) ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஐக்கிய நாடுகள் சட்ட விதிகளுக்கமைய , பாதுகாப்பு அமைச்சினால் சர்வதேச தரநிலைக்கமைய பயங்கரவாத மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்பற்ற அமைப்புக்கள் வேறு பிரிக்கப்பட்டு, அவற்றை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடல் மற்றும் நீக்குதல் ஆகிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அதற்கமையவே கடந்த காலங்களில் தடை விதிக்கப்பட்டிருந்த 6 தமிழ் அமைப்புக்களுக்கான தடையை நீக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் 1373 ஆம் தீர்மானத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் அவுஸ்திரேலிய தமிழ் காங்ரஸ், உலக தமிழ் பேரவை, உலக தமிழ் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் ஈழ மக்கள் பேரவை, கனேடிய தமிழ் காங்ரஸ், பிரித்தானிய தமிழ் பேரவை என்பவை மீதான தடை இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புக்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமையவே தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச ஒப்புதல்கள் மற்றும் அங்கீகாரங்களுக்கமைய, ஐ.நா. தீர்மானங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் தொடர்ச்சியான விசாரணைகளின் பின்னர் இவ்வாறு தடைகளை நீக்குவதற்காள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சில அமைப்புக்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ள அதேவேளை, மேலும் 3 புதிய அமைப்புக்கள் தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புக்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தாரூர் அதர் அல்லது ஜம்யுல் அதர் மொஸ்க் அல்லது தாரூல் அதர் குர்ஆர் மத்ரஸா அல்லது தாரூல் அதர் , இலங்கை இஸ்லாமிய மாணவர்கள் சங்கம் அல்லது ஜமீயா மற்றும் சேவ் த பேர்ள்ஸ் என்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய 6 அமைப்புக்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ள அதே வேளை, 3 அமைப்புக்களுக்கு புதிதாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.   https://www.virakesari.lk/article/133720
  • கோட்டபாயவின் வெளிநாட்டு செலவீனங்களுக்கு அரசு பொறுப்பில்லை - அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம் By T. Saranya 17 Aug, 2022  (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டு செலவீனங்களானது அவரது தனிப்பட்ட நிதியாகும். அரசாங்கம் ஒருபோதும் அந்த  செலவீனங்களை ஏற்கவோ பொறுப்புக்கூறவோ தீர்மானித்தது இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்,  முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்வதற்கு பயன்படுத்திய பிரத்தியேக விமானத்திற்கு இலங்கை அரசாங்கமே பணம் செலுத்தியுள்ளது. அவ்வாறெனில் முன்னாள் ஜனாதிபதி தற்போதும் சிறப்புரிமைகளுடனா வாழ்ந்து கொண்டிருக்கின்றார்?' என்று ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன,  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, சட்டத்தின் பிரகாரம் சிறப்புரிமைகளை வழங்க வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது என்று பதிலளித்திருந்தார். எவ்வாறிருப்பினும் அமைச்சர் பேச்சாளர் குறிப்பிட்ட இந்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் தவறான புரிதல்களுடன் செய்திகளை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்கவினால்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் செவ்வாயன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியொன்றை எழுப்பினார். முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளுக்கு சட்டத்தின் மூலம் சில வரப்பிரசாதங்கள் கிடைக்கின்றது என வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன  அதற்கு பதிலளித்தார். அவர் கூறிய அந்த கூற்றை முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகளுக்காக அரசாங்கம் பணத்தினை செலவிடுகிறது என்று கருத்து புலப்படும் வகையில் சில ஊடகங்கள் செய்திகள் பிரசுரித்திருந்தன. இது தொடர்பில் மேலும் ஆராய்ந்து பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.   தனது வெளிநாட்டு செலவுகள் குறித்து சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அனைத்து செலவுகளும் தனது தனிப்பட்ட பணத்தில் செலவிடப்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   https://www.virakesari.lk/article/133761  
  • பலாலி விமான நிலையம் தொடர்ந்தும் இயங்குமா....? By T. Saranya 17 Aug, 2022  ம.ரூபன். பலாலி - சென்னை விமான சேவைகள் ஜூலை மீண்டும் ஆரம்பமாகும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஜூன் 18 இல் பலாலியில் உறுதியளித்திருந்தார். சட்டச்சிக்கல், எரிபொருள் பிரச்சினை விமான நிறுவனத்தின் எதிர்பார்ப்பு காரணமாக நடைபெறாது என அவருடன் பலாலிக்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பின்னர் கூறியிருந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதும் இதற்கு உத்தரவிட்டிருந்தார். ஏனைய நாடுகளுக்கும் இங்கிருந்து சேவைகளை ஆரம்பிக்க விமான நிறுவனங்களுடன் பேச்சு நடாத்துமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சிறிபால ஆலோசனை கூறியதுடன்  100 பேர் பயணிக்கும் விமானங்களுக்கான ஓடு பாதையை விஸ்தரித்தாலே  அவை தரையிறங்கலாம் என்பதையும் சுதந்திர வர்த்தக தீர்வையற்ற கட்டடத்தொகுதியின் அவசியத்தையும்  சுட்டிக்காட்டியிருந்தார். ஒரு சர்வதேச விமான நிலையத்துக்கு உரிய கட்டமைப்பு வசதிகள்  இங்கு பூர்த்தியாகவில்லை. US $ 209 மில்லியன்  செலவில் சகல வசதிகளுடன் நிர்மாணித்து  2012 மார்ச் 18 இல் திறக்கப்பட்ட அம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையமே இயங்கமுடியாத நிலையில் உள்ளபோது பலாலி எவ்வாறு சர்வதேச விமான நிலையமாக இயங்கும். கடந்த ஜனவரி 18 தமிழ்க்கட்சிகளை இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்தபோது இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்குகிறோம். அதில் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை விஸ்தரிப்பு,புதிய முனையம் அமைக்குமாறு இலங்கை அரசிடம் கோரினோம் ஆனால் இன்னமும் அவர்களிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை எனக்கூறியிருந்தார். கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலும் எரிபொருள் பிரச்சினையால் கடந்த ஜூன் 29 முதல் சிறிலங்கன் விமானங்களுக்கான எரிபொருள் சென்னை, திருச்சி, திருவானந்தபுரம், கொச்சி விமான நிலையங்களில் நிரப்பவேண்டியுள்ளதாக விமானப்போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ருவான்சந்திர தெரிவித்தார். கட்டுநாயக்கா-இந்திய சரக்கு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது இங்கு சில அபிவிருத்தி பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 2018 செப்டம்பர் 17 பாராளுமன்றத்தில்  பேசிய விமானப்போக்குவர்த்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா  பலாலி விமான நிலையத்தை விமானப்படையினர் புனரமைப்பதாகவும்  இந்திய சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு வழங்கும் எத்தகைய தீர்மானமும் கிடையாது எனவும் சில ஊடகங்கள்  குழப்புவதாகவும்  650 மீற்றர் ஓடுபாதை 325 இலக்க  விமானம் இறங்குவதற்கு விஸ்தரிக்கப்படும் எனவும் விமான சேவைகள் அமைச்சு 750 மில்லியன்,சுற்றுலாத்துறை அமைச்சு 1,000 மில்லியன் ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். கடந்த ஆட்சியில் இதனை புனரமைத்து சேவைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை இந்திய அரசுகளுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அழுத்தம் கொடுத்ததால் இரு தரப்பினரும் பேச்சுக்களை மேற்கொண்டு 2015 இல் உடன்படிக்கையும் கைச்சாத்தானதும் புனரமைப்பு பணிகளை சிவில் விமான  சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க 2019 ஜூலை 6  ஆரம்பித்து வைத்தார். 2019 ஒக்டோபர் 17 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 'யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்' என்று திறந்து  வைத்து சேவைகள் ஆரம்பமானது. முதலாவது பயணத்தில் 12 பேரே சென்னையில் இருந்து வந்தனர். 2020 மார்ச் கொவிட் பரவலால் நிறுத்தப்பட்டன. அதுவரையான நான்கு மாதங்களில் நாலாயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். சேவை நிறுத்தப்பட்டு அங்குள்ள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கமுடியாத நிலைமை காணப்பட்டது. பலாலி  சேவையால் கட்டுநாயக்கா சேவைகள் பாதிக்கப்படும் என சிவில் விமான சேவை அதிகாரசபை குற்றம் சுமத்தியதால் இரத்மலானை விமான  நிலையம் தரம் உயர்த்தப்படும் என 2018 இல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். பாதுகாப்பு தரப்பினரும் பலாலி சேவையை விரும்பவில்லை பலாலி  சேவையை தற்போதும் தெற்கில் எதிர்க்கின்றனர். ஜூலையில் திருக்கேதீஸ்வர திருவிழாவுக்கு 25 ஆயிரம் தமிழக பக்தர்கள்  வருவார்கள் என இந்தியத் தூதுவர் கூறியதாகவும் இதனால் பல டொலர்கள் கிடைக்கும் என அங்கஜன் ராமநாதன் எம்.பி.குறிப்பிட்டிருந்தார். தற்போது இந்தியாவில் கொரோனா மீண்டும் பரவியுள்ளது. பொருளாதார நெருக்கடியால் வடக்கில் இருந்து பலர் படகுகளில் தமிழகத்துக்கு தப்பிச்செல்கின்றனர். விமான சேவை ஆரம்பித்தால்  பலர் தமிழகம் வந்து நாடு திரும்ப மறுத்து தங்கிவிடலாம் என இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பலாலி சேவையால் உல்லாசப்பயணத்துறை வளரும் எனவும் அமைச்சர் சிறிபால கூறினார். நாட்டின்  போராட்டங்கள், வன்முறைகளால் உல்லாசப் பயணத்துறையும் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், நியூசிலாந்து  நாடுகள் தமது பிரஜைகளுக்கு இலங்கை பயணம் குறித்து எச்சரித்துள்ளன.   உல்லாசப்பயணியான ஸ்கொட்லாந்து நாட்டு கெல்லிக் பிரேஸர் என்ற பெண்ணை கோட்டா கோ ஹோம் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி விசாவை இரத்து செய்து நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டனர். இத்தகைய செயல்களால் உல்லாசப்பயணிகள் வருவார்களா. வெளிநாடுகளில் வாழும் வடபகுதி தமிழர்கள்  சென்னை ஊடாக பலாலிக்கு பயணிக்கலாம் எனக்கூறுவதும் நகைப்புக்குரியது. இவர்கள் சென்னைக்கு வந்து  (Transit ) பலாலிக்கான விமானத்தில் பயணிக்கும்போது தமது பயணப் பொருட்களை முழுமையாக எடுத்துவரமுடியாது. பலாலி-சென்னை சேவையில் சிறிய விமானமே பயன்படுத்தப்படுவதால் குறைந்தளவு எடையுள்ள பயணப்பொதிகளையே எடுத்துவரலாம். சென்னை-பலாலி பயணிகளிடம் அதிகளவு கட்டணம், வரிகள் அறவிடுகின்றனர். கட்டுநாயக்கா பயணிகளுக்கான கட்டணம்,வரிகள் குறைவு. கட்டுநாயக்கா - சென்னை பயணிகள் 23 கிலோ பொதியை கட்டணமின்றி எடுத்துவரலாம். பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சேவைக்கு தாமே காரணம் என சில தமிழ் அரசியல்வாதிகள் கூறிவருகின்றனர். 1950 இல் கைத்தொழில்,கடற் றொழில் அமைச்சரான ஜீ.ஜீ.பொன்னம்பலம் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலைக்கு விஜயம் செய்த பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்காவிடம்  பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியை வலியுறுத்தினார். ஊர்காவற்றுறை எம்.பியும் பிரபல கப்பல் முகவருமான  அல்பிறட் தம்பி ஐயாவும் இதனை கோரியிருந்தார்.தொழிலதிபர் சேர்.சிற்றம்பலம் கார்டினர் தனது சொந்த ஊரான அச்சுவேலிக்கு அடிக்கடி விமான மூலம் வந்தபோதும் பலாலி விமான நிலைய  அபிவிருத்தியை அரசின் கவனத்துக்கு முன்வைத்தார். யாழ்.மேயர் அல்பிறட் துரையப்பாவும் பிரதமர் சிறிமாவோ,அமைச்சர்கள் விமானத்தில் வந்தபோதும் பலாலி கட்டடங்களை,சூழலை காண்பித்து அபிவிருத்தியை கோரினார். யாழ் மாவட்ட அரசியல் அதிகாரியும் நல்லூர் எம்.பியுமான சீ.அருளம்பலமும், அமைச்சர் செ.குமாரசூரியரும் இதனை வலியுறுத்தினர். சுதந்திரக்கட்சி ஆட்சியில் சில அபிவிருத்தி வேலைகள் இங்கு இடம்பெற்றன. தமிழரசுக் கட்சியினரின் கறுப்புக்கொடி போராட்ட காலம். இலங்கை வரலாற்றில் பலாலி விமான நிலையம் முக்கிய இடம்பெற்றது. 1940 இல் 2 வது உலக யுத்த காலம் பிரித்தானிய விமானப்படையினர் ( Royal Air Force) தளமாக பயன்படுத்தி அவர்கள் சென்றதும் மூடப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர் வேறு தேவைகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்தனர். யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்.தந்தை ரீ.எம்.எவ்.லோங் அடிகளார் அன்றைய ஆளுநர் மற்றும் அதிகாரிகளுடன்  யாழ்.மக்களின் விமானப் பயணத்துக்கு பயன்படுத்தலாம் மூடவேண்டாம் என கேட்டிருந்தார்.  1947 டிசம்பர் 10 சிவில் விமானப் போக்குவரவு திணைக்களம் இரத்மலானையில் இருந்து பலாலி ஊடாக (Air Ceylon) விமான சேவையை 16 பயணிகளுடன் சென்னைக்கு முதலில் ஆரம்பித்தது. பலாலியில் தரித்தபோது  சென்னைக்கு  பயணிப்பவர்கள் ஏறிக்கொண்டர். இச்சேவை தடையின்றி தொடர்ந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு விமானத் தபால் சேவையும் நடைபெற்றது. காலை 10 மணிக்குள் யாழ்.தபாற் கந்தோரில் ஒப்படைக்கும் அ(ஏயரோகிறாம்) தபால் மாலையில் கொழும்பில் விநியோகிக்கப்பட்டது.இந்தியாவுக்கும் விமானத் தபால் சேவை நடைபெற்றது. 1978 செப்டம்பர் 7  அவ்ரோ பயணிகள் விமானக் குண்டு வெடிப்பு சம்பவத்தால் இச்சேவை நிறுத்தப்பட்டது.பலாலியில் இருந்து இரத்மலானை சென்ற இவ்விமானம் இரத்மலானையில் தரையிறங்கி பயணிகள் இறங்கிய பின்னர் விமானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இரத்மலானையில் இருந்து அவ்விமானம் மாலைதீவுக்கு செல்லவிருந்தது. 1950- 60 களில் பலாலிக்கும் தமிழகத்தும் இடையிலான விமான சேவையால் இந்தியாவில் உயர் கல்வி கற்ற மாணவர்கள் பயனடைந்தனர். தமிழக ஆலயங்களுக்கு பலர் சென்றவர்கள். அரச ஊழியர்கள் தமது மூன்று புகையிரத பயண ஆணைச்சீட்டுகளை பயன்படுத்தி இரத்மலானை-பலாலி விமானத்தில் குடும்பத்துடன்  பயணம் செய்யலாம். சுங்கப்பிரிவும் இயங்கியது. மதகுரு ஒருவர் குடையின் கைப்பிடிக்குள் தங்கச்சங்கிலியை மறைத்து வைத்து பிடிபட்ட சம்பவம் அன்று பத்திரிகைகளில் செய்தி. தமிழக பத்திரிகைகள்,சஞ்சிகைகள் விமான  மூலமே யாழ்ப்பாணம்,கொழும்புக்கு அனுப்பப்பட்டன. தமிழக கலைஞர்கள்,பிரமுகர்கள் பலர் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு விமானத்தில்  வந்தனர்.1965 ஒக்டோபர் 24 மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகை சரோஜாதேவி கொழும்பிலிருந்து  யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் பலாலிக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.  வடக்கில்  கடல் வழியாக (கள்ளக்குடியேற்றம்) கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு 1976 இல் பலாலியில் விமானப்படை  முகாம் சுதந்திரக்கட்சி ஆட்சியில் நிறுவப்பட்டது. இங்கிருந்து ஹெலிகொப்டர்களில்  வடபகுதி கடற்பகுதியை கண்காணித்தனர்.1982 இல் விமானப் படையினர் அதிகரிப்பு. யுத்த நடவடிக்கைகளுக்கு படையினருக்காக மட்டும் பலாலி விமான நிலையம்  பயன்படுத்தப்பட்டது.பலாலியை சூழவுள்ள பகுதிகளில் மக்கள் இடம்பெயராது 1990 ஜூன் வரை வாழ்ந்தனர். 1987 மே வடமராட்சி 'லிபரேசன் ஒப்ரேசேன்'  முதல் 1995 'சூரியகதிர்'  வரையான குடாநாட்டின் படை நடவடிக்கைகளுக்கு பலாலி விமான நிலைய மே கேந்திர இடம். எறிகணை (ஆட்லறி ஷெல்)வீச்சுக்கள் பலாலியில் இருந்தே போரின்போது குடாநாட்டின் பகுதிகளுக்கு ஏவப்பட்டன.மேலதிக படையினர் இங்கு இருந்தே ஹெலிகளில் யுத்த களத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.காயமடைந்த படையினரும் விமான மூலம்  கொழும்புக்கு அனுப்பப்பட்டனர்.முப்படை தளபதிகள் அடிக்கடி வந்தனர். 1987 ஜூலை இலங்க இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்திய இராணுவம் நிலைகொண்டது.இந்திய விமானங்கள் தரையிறங்கின. இந்திய படை அதிகாரிகள்,  இந்திய உயர் ஸ்தானிகர் ஜே.என்.டிக்சிற்,புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்,அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பலாலி விமான நிலையத்தில் சமாதானப் பேச்சுக்களை நடாத்தினர். 1987 ஒக்டோபர் 5 இல் குமரப்பா புலேந்திரன் உட்பட 12 புலி உறுப்பினர்களை விமான மூலம் விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்ல இலங்கை படையினர் முயன்றதும் சயனைட் அருந்தி மரணமானதும் பலாலி விமான நிலையத்தில். 1987 ஒக்டோபர் 30 புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும் மோதல் ஆரம்பித்ததும் பலாலி விமான நிலையத்தில் இருந்தே இந்திய படையினரின் கவச வாகனங்கள், செயின் புளொக்,ஹெலிகொப்டர்கள் தாக்குதலுக்கு சென்றன.மேலதிக படையினரும் கொண்டு செல்லப்பட்டனர். இந்திய படை காலம்  இரத்மலானை-பலாலி தனியார் விமான பயணிகள் சேவை நடைபெற்றது.1996 குடாநாட்டை இலங்கை இராணுவம் பிடித்ததும் 'லயன் எயர், 'மொன்றா' இரு பயணிகள் விமான சேவைகள் ஆரம்பமாகின. 1998 செப்டம்பர் 29 'லயன் எயர்'  விமானம் பூநகரி பகுதியில் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டு 48 தமிழ்ப் பயணிகள் பலி என அரசு அறிவித்ததுடன் இச்சேவைகள் நிறுத்தப்பட்டன. 1995 ஏப்ரல் 28  விமானப்படை " அவ்ரோ 748 ரக விமானம் பலாலியில் புறப்பட்ட சில மணிக்குள் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 51 பேர் பலியானார்கள். 2002 புலிகள்- ரணில் அரசு சமாதானப்பேச்சு  பயணிகள் விமான சேவை இரத்மலானை- பலாலி நடைபெற்றது. 2009 யுத்தம் முடிந்ததும் 2012  ஜனவரி இல் 25 ExpoAir  விமான சேவை பலாலி- இரத்மலானை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/133764