Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இது மாபெரும் குற்றமா? யூ டியூபர் துரைமுருகன் கைது காழ்புணர்ச்சியானது.. நாம் தமிழர் சீமான் கண்டனம்

Recommended Posts

15 minutes ago, Kandiah57 said:

இது. ஒரு. பிழையான செயல்பாடு. அவரைத் தேடிச்சென்றது. பிழை.  

யெஸ்.

ஈழத்தில் நடந்தது போன்றதின் நீட்சியாக இங்கேயும் நடக்கும் குழு வன்முறை, மிரட்டல் போன்றவை சாதாரண மக்களிடையே ஆதரவைவிட ஒருவித எரிச்சலையும், சலிப்பையுமே ஏற்படுத்தும்.

'இவர்களும் இவர்களை சார்ந்தவர்களும் இப்படித்தான்..' என பொருள்படும்படி ஊடகங்கள் எப்படி இச்செய்தியை மக்களிடம் கொண்டுசெல்கிறார்கள் என்பது கண்கூடு. சமூக வலைதளங்களில் 'தமிழ்நாட்டை லெபனான் ஆக மாற்றிவிடும் போக்கு' என பரப்புரையையும் காணக்கூடியதாக உள்ளது. சமீபத்தில் ஈழத்தமிழ் இளைஞர்களின் கைதை எப்படி பெருப்பிக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் புரியும்.

ஆதரவு தளத்திற்கும், வன்முறை தளத்திற்கும் பாரிய வேறுபாடு உள்ளது.

 • Like 8
Link to comment
Share on other sites

 • Replies 101
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

valavan

ராஜீவ் மறைவின் பின்னர் நமக்கு சார்பாயிருந்த அத்தனை தமிழக எழுச்சியும் மொத்தமாய் படுத்துக்கொண்டது. அதனை மீள கட்டமைக்க புலிகளும் தமிழக எம் போராட்ட ஆதரவாளர்களும் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல,  ஒரு 50% கூ

ராசவன்னியன்

யெஸ். ஈழத்தில் நடந்தது போன்றதின் நீட்சியாக இங்கேயும் நடக்கும் குழு வன்முறை, மிரட்டல் போன்றவை சாதாரண மக்களிடையே ஆதரவைவிட ஒருவித எரிச்சலையும், சலிப்பையுமே ஏற்படுத்தும். 'இவர்களும் இவர்களை சார

nedukkalapoovan

இதில் நிறைய கற்பனை தான் இருக்குது. 1987 இலேயே புலிகளை ஒழித்துக்கட்ட தீர்மானிச்சாச்சு. தலைவரை குறிவைத்து ஹிந்தியப் படை ராஜீவின் தலைமையில் நடவடிக்கையையும் எடுத்துவிட்டது. அன்று தலைவர் மயிரிழையில் உ

 • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ராசவன்னியன் said:

யெஸ்.

ஈழத்தில் நடந்தது போன்றதின் நீட்சியாக இங்கேயும் நடக்கும் குழு வன்முறை, மிரட்டல் போன்றவை சாதாரண மக்களிடையே ஆதரவைவிட ஒருவித எரிச்சலையும், சலிப்பையுமே ஏற்படுத்தும்.

'இவர்களும் இவர்களை சார்ந்தவர்களும் இப்படித்தான்..' என பொருள்படும்படி ஊடகங்கள் எப்படி இச்செய்தியை மக்களிடம் கொண்டுசெல்கிறார்கள் என்பது கண்கூடு. சமூக வலைதளங்களில் 'தமிழ்நாட்டை லெபனான் ஆக மாற்றிவிடும் போக்கு' என பரப்புரையையும் காணக்கூடியதாக உள்ளது. சமீபத்தில் ஈழத்தமிழ் இளைஞர்களின் கைதை எப்படி பெருப்பிக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் புரியும்.

ஆதரவு தளத்திற்கும், வன்முறை தளத்திற்கும் பாரிய வேறுபாடு உள்ளது.

பச்சை தீர்ந்து விட்டது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"ராஜீவை நாங்க தான் கொன்றோம்!" என்று கைதான இதே சாட்டைத் தம்பி சொல்லியிருக்கிறார்!🤣, ஆனால் இப்ப "ராஜீவை நாங்க கொல்லவில்லை" என்று பாரதம் எழுதுகிறார்கள்!

ஒரு 10 வருடம் கழித்து "ராஜிவ் சாகவேயில்லை, இத்தாலியில் மறைந்து வாழ்ந்து இயற்கையாக இறந்தார்" என்று கயிறு திரித்து அடுத்த தலைமுறைக்குச் சொல்வார்கள் என நினைக்கிறேன்! எல்லா ஆட்டமும் ஸ்மார்ட்டான அடுத்த தலைமுறை கேள்வி கேட்கும் வரை தான்!

அது வரையில் என்னவோ செய்து எக்கேடோ கெட்டுப் போங்கோ! 😂

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

ராஜீவை கொன்றனர் என்று திரும்ப திரும்ப சொல்லி முப்பது ஆண்டுகளாக ஏழ்வரை சிறையில் வதைத்து வருகின்றனர்... சரி இவ்வளவு நாள் நாங்கள் கொல்லவில்லை என்றோம் அதற்காக ஏதேனும் அந்த துன்பியல் சம்பவத்திற்கு தமிழர்களுக்கு எதிராக செயலாற்றாமல் இருந்தார்களா... தேசிய தலைவரும் அதை துன்பியல் சம்பவம் என்றே விவரித்துள்ளார்... நாங்கள் கொல்லவில்லை எனும்பொழுது ஆயிரம் மீனவர்களுக்கு மேல் கொல்லபட்டதை வேடிக்கை பார்த்தது ஏன்... லச்சம் தமிழர்களை இன ஒழிப்பு செய்தது ஏன்...

இப்படி இருக்கையில் ஆம் நாங்கள் தான் கொன்றோம் என விரக்தி வடிவில் உணர்ச்சியின் வெளிப்பாடே அது...

Edited by மியாவ்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டில் காவல்துறையோடு சம்பந்தப்பட்டவர்களை தவிர்த்து பலர் ராஜீவ்காந்தியின் கொலை  விடுதலைப்புலிகளால் நடத்தப்படவில்லை எனவும் அதற்கு முக்கிய காரணிகள் இந்தியாவிலையே இருக்கின்றார்கள் எனவும் அவர்கள் இன்னும் விசாரிக்கப்படவேயில்லை எனவும் அன்று தொடக்கம் கூறிக்கொண்டே இருக்கின்றார்களே இது பற்றி உங்கள் கருத்து என்ன?

அல்லது விடுதலைப்புலிகள் தான் ராஜீவை கொன்றனர் என சான்றிதழ் கொடுக்கின்றீர்களா?

2002 சர்வதேச பத்திரிக்கையாளர்கள் மகாநாட்டில் தலைவர் "அதுவொரு துன்பியல் சம்பவம்" என்று குறிப்பிட்டார். 

பி. கு - சீமானுக்கு ராஜீவ் கொலை வழக்கு பற்றி பேச யார் பட்டா எழுதிக் கொடுத்தார்கள்? இப்படியும் கேட்கலாம். 

1 hour ago, Justin said:

"ராஜீவை நாங்க தான் கொன்றோம்!" என்று கைதான இதே சாட்டைத் தம்பி சொல்லியிருக்கிறார்!🤣, ஆனால் இப்ப "ராஜீவை நாங்க கொல்லவில்லை" என்று பாரதம் எழுதுகிறார்கள்!

சாட்டைத்தம்பி சொன்னா சரியாத்தான் இருக்கும். 🤔

Link to comment
Share on other sites

2 minutes ago, shanthy said:

பி. கு - சீமானுக்கு ராஜீவ் கொலை வழக்கு பற்றி பேச யார் பட்டா எழுதிக் கொடுத்தார்கள்? இப்படியும் கேட்கலாம். 

இதை கொஞ்சம் புரியும் படி விளக்கினால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, shanthy said:

2002 சர்வதேச பத்திரிக்கையாளர்கள் மகாநாட்டில் தலைவர் "அதுவொரு துன்பியல் சம்பவம்" என்று குறிப்பிட்டார். 

தலைவர் துன்பியல் சம்பவம் என்று சொன்னதை புலிகள்தான் கொலைசெய்தனர் என்று நிறுவுவதற்கான வாதத்திற்கு ஆதாரமாக நாம் எடுத்துக்கொள்ளமுடியாது… எம் உள் மனதிற்கு அல்லது விடயங்களை பிரித்து ஆராயும் நம் பகுத்தறிவுக்கு அது நம்மவர்கள் செய்தது என்பது தெரியும்.. இதில் புலிகள் மட்டுமல்ல இந்திய அரசியலில் உள்ள பலர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.. அவர்களுக்கு ராஜீவினுடைய மரணம் தேவையானதாக இருந்தது.. அதனால் ராஜிவ் மரணத்தை தடுக்கமுயலவில்லை.. கண்டும் காணாமல் விட்டுவிட்டார்கள்..நம்மவர்களும் அவர்களை பயன்படுத்தினார்கள் அவர்களும் புலிகளை பயன்படுத்தினார்கள்.. இதை ஆராய்ந்த இந்திய பொலீஸ் இந்திய அரசியல்வாதிகளின் பக்கத்தை மூடிவிட்டு புலிகளின் பங்களிப்பை மட்டும் வெளிப்படுத்தினார்கள்.. தலைவர் பட்டும் படாமலும் துன்பியல் சம்பவம் என்று சொன்னதை நீங்கள் புலிகள்தான் செய்தார்கள் என்று விவாதத்திற்கு கொண்டுவந்து நிறுவமுடியாது..

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

"ராஜீவை நாங்க தான் கொன்றோம்!" என்று கைதான இதே சாட்டைத் தம்பி சொல்லியிருக்கிறார்!🤣, ஆனால் இப்ப "ராஜீவை நாங்க கொல்லவில்லை" என்று பாரதம் எழுதுகிறார்கள்!

ஒரு 10 வருடம் கழித்து "ராஜிவ் சாகவேயில்லை, இத்தாலியில் மறைந்து வாழ்ந்து இயற்கையாக இறந்தார்" என்று கயிறு திரித்து அடுத்த தலைமுறைக்குச் சொல்வார்கள் என நினைக்கிறேன்! எல்லா ஆட்டமும் ஸ்மார்ட்டான அடுத்த தலைமுறை கேள்வி கேட்கும் வரை தான்!

அது வரையில் என்னவோ செய்து எக்கேடோ கெட்டுப் போங்கோ! 😂

யாழ் களத்தில் அடிக்கடி அலசப்பட்டு, மறக்கப்பட்டு, திரும்பவும் முதலில் இருந்தே அரைக்கப்படும் விடயம்.😃

இவற்றை திரும்பவும் வாசித்தால் தலை கிறுகிறுக்கும்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2021 at 01:00, குமாரசாமி said:

நாம் தமிழர் கட்சியை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு தமிழ்த்தேசிய இனத்தின் தனிப்பெரும்தலைவன்  மேதகு பிரபாகரன் அவர்களையும்  விடுதலைப்புலிகளையும் கொச்சைப் படுத்துவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
அண்மைக்காலமாக நாம்தமிழர்கட்சியை அடிப்பதாக நினைத்துக்கொண்டு நமது ஈழப்போராட்டங்களை காயப்படுத்தியும் கொச்சைப்படுத்தியும் கொண்டிருக்கின்றார்கள்.

நாம் தமிழர் கட்சியை விமர்சித்த திமுகவை அதன் தலைவர் கருணாநிதியை தீவிர தமிழ்தேசியவாதிகளாக தம்மை காட்டிக்கொள்ளும் ஈழத்தமிழர்கள் கொச்சைப்படுத்தியதன் விளைவுதான் இது.. நமக்கு அவர்கள் அரசியல் தேவை இல்லாதது.. அவர்கள் எல்லோருடைய ஆதரவும்தான் தேவை.. கட்சிவேறுபாடு இன்றி பரந்து இருந்த அந்த ஆதரவுதளத்தை இன்று ஒரு கட்சிக்குள் சுருக்கும் வேலையை அவர்கள் அரசியலுக்குள் மூக்கைநுழைத்து நம்மாளுங்க சிலர் செய்துகொண்டிருக்கின்றனர்..

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்னது ராஜீவ் காந்தி செத்துட்டாரா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

யாழ் களத்தில் அடிக்கடி அலசப்பட்டு, மறக்கப்பட்டு, திரும்பவும் முதலில் இருந்தே அரைக்கப்படும் விடயம்.😃

இவற்றை திரும்பவும் வாசித்தால் தலை கிறுகிறுக்கும்!

இணைப்புக்கு நன்றி கிருபன். பழைய கருத்துக்களை வாசிக்க சுவார்சியமாக இருந்தது. 2016 திரியில் ரஞ்சித்தின் கருத்து மிகவும் அபாரமாக இருந்தது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சாட்டை துரை முருகனை போலவே ஆபாசமாக பேசும் கிசோர் சாமி, கேமர் மதன் ஆகியோரையும் தூக்கி உள்ளே வைத்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

சாட்டை துரை முருகனை போலவே ஆபாசமாக பேசும் கிசோர் சாமி, கேமர் மதன் ஆகியோரையும் தூக்கி உள்ளே வைத்துள்ளார்கள்.

மதன் கைது இல்லை - தலைமறைவு.

சிவ சங்கர் பாபா மீது பொக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. அவரும் டெல்லிக்கு எஸ்கேப் என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, tulpen said:

 அங்குள்ள காமடியர்களின் காமடிகளை ரசிக்கலாம். 

உங்களின், ஆமை உருட்டிவிளையாடுபவர்களின் காமெடியை போல பார்த்து சிரித்துவிட்டுப்போனால் போச்சு!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, shanthy said:

பி. கு - சீமானுக்கு ராஜீவ் கொலை வழக்கு பற்றி பேச யார் பட்டா எழுதிக் கொடுத்தார்கள்? இப்படியும் கேட்கலாம். 

உங்களுக்கு சீமானைப்பற்றி எழுத யார் பட்டா போட்டு கொடுத்தார்களோ அவர்களேதான்!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தலைவர் துன்பியல் சம்பவம் என்று சொன்னதை புலிகள்தான் கொலைசெய்தனர் என்று நிறுவுவதற்கான வாதத்திற்கு ஆதாரமாக நாம் எடுத்துக்கொள்ளமுடியாது… எம் உள் மனதிற்கு அல்லது விடயங்களை பிரித்து ஆராயும் நம் பகுத்தறிவுக்கு அது நம்மவர்கள் செய்தது என்பது தெரியும்.. இதில் புலிகள் மட்டுமல்ல இந்திய அரசியலில் உள்ள பலர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.. அவர்களுக்கு ராஜீவினுடைய மரணம் தேவையானதாக இருந்தது.. அதனால் ராஜிவ் மரணத்தை தடுக்கமுயலவில்லை.. கண்டும் காணாமல் விட்டுவிட்டார்கள்..நம்மவர்களும் அவர்களை பயன்படுத்தினார்கள் அவர்களும் புலிகளை பயன்படுத்தினார்கள்.. இதை ஆராய்ந்த இந்திய பொலீஸ் இந்திய அரசியல்வாதிகளின் பக்கத்தை மூடிவிட்டு புலிகளின் பங்களிப்பை மட்டும் வெளிப்படுத்தினார்கள்.. தலைவர் பட்டும் படாமலும் துன்பியல் சம்பவம் என்று சொன்னதை நீங்கள் புலிகள்தான் செய்தார்கள் என்று விவாதத்திற்கு கொண்டுவந்து நிறுவமுடியாது..

சரி, அப்படியானால் பின்னர் அமரர் பாலசிங்கம் என்.டி.ரி.விக்கு தனியாகக் கொடுத்த பேட்டியில் "அது மிகப் பெரிய தவறு!" என்றதை எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்? அதில் "நாம்" என்ற எழுவாய் இல்லாததால் அதையும் மறுப்பீர்களா? அல்லது அது அன்ரன் பாலசிங்கத்தின் "பொடி டபிள்" என்பீர்களா?😂

திரித்தலுக்கும் புரட்டுக்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும்!

இப்போது சிறையில் இருக்கும் எழுவரில் பெரும்பாலானோர் நீதி சரியாக இருக்கும் இன்னொரு நாட்டில் எப்போதோ விடுதலையாகியிருப்பர், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை!

ஆனால், மற்றவன் பொறி வைத்தானோ அல்லது சும்மா இருந்தானோ trigger ஐ தட்டியவனே கொலைக்குற்றவாளியென்பது உலகம் முழுவதும் உள்ள விதியல்லவா?  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

என்னது ராஜீவ் காந்தி செத்துட்டாரா?

என்னது ராஜீவ் காந்தி எப்ப இறந்தார்? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

என்னது ராஜீவ் காந்தி செத்துட்டாரா?

7 minutes ago, shanthy said:

என்னது ராஜீவ் காந்தி எப்ப இறந்தார்? 

அட உங்களுக்கு விசயம் தெரியாதே?
இதிலை பாருங்கோ சரியாய் 0.45 செக்கண்டிலை துவக்கு புடியாலை அடி. அதோடை ஆள் குளோஸ் 😷

Link to comment
Share on other sites

12 minutes ago, shanthy said:

என்னது ராஜீவ் காந்தி எப்ப இறந்தார்? 

ராஜீவ் காந்தி எப்ப பிறந்தார்...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

உங்களுக்கு சீமானைப்பற்றி எழுத யார் பட்டா போட்டு கொடுத்தார்களோ அவர்களேதான்!!

எப்போதும் தமிழ், குமாரசாமி எழுதிய கேட்ட கேள்விக்குள் பதில் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

அட உங்களுக்கு விசயம் தெரியாதே?
இதிலை பாருங்கோ சரியாய் 0.45 செக்கண்டிலை துவக்கு புடியாலை அடி. அதோடை ஆள் குளோஸ் 😷

உது டப்பிங் அண்ணை. 

பொட்டம்மானனை சீமான் பேசிய ஆடியோ மாரி இது மிகிகிரி வீடியோ. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ராசவன்னியன் said:

யெஸ்.

ஈழத்தில் நடந்தது போன்றதின் நீட்சியாக இங்கேயும் நடக்கும் குழு வன்முறை, மிரட்டல் போன்றவை சாதாரண மக்களிடையே ஆதரவைவிட ஒருவித எரிச்சலையும், சலிப்பையுமே ஏற்படுத்தும்.

'இவர்களும் இவர்களை சார்ந்தவர்களும் இப்படித்தான்..' என பொருள்படும்படி ஊடகங்கள் எப்படி இச்செய்தியை மக்களிடம் கொண்டுசெல்கிறார்கள் என்பது கண்கூடு. சமூக வலைதளங்களில் 'தமிழ்நாட்டை லெபனான் ஆக மாற்றிவிடும் போக்கு' என பரப்புரையையும் காணக்கூடியதாக உள்ளது. சமீபத்தில் ஈழத்தமிழ் இளைஞர்களின் கைதை எப்படி பெருப்பிக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் புரியும்.

ஆதரவு தளத்திற்கும், வன்முறை தளத்திற்கும் பாரிய வேறுபாடு உள்ளது.

ராசவன்னியன்  அண்ணை. உங்கள் கருத்து மிகச்சரியாது.  இலங்கையிலும். தமிழ்நாட்டிலும். ஒரு பகுதி. மக்களுக்கு  அடிப்படைச்சட்டம். பற்றியறிவு. இல்லை. இங்குள்ள. அரசியல்வாதிகளின். தலையீட்டினால். காவல்துறை...நீதித்துறை. என்பன. சீர்குலைத்துவிட்டது. மக்கள். சட்டத்துக்குப் பயப்படுவதில்லை. மாறாக. அரசியல்வாதிகளுக்கு  பயப்படுகிறார்கள்  இலங்கையிலும்சரி.   தமிழ்நாட்டிலும்சரி. மக்கள்  சட்டததுக்கு  பயப்படும். நிலை. தோன்றவேண்டும்.  அப்போ. 50% பிரச்சனை தீர்த்துவிடும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ராசவன்னியன் said:

சமூக வலைதளங்களில் 'தமிழ்நாட்டை லெபனான் ஆக மாற்றிவிடும் போக்கு' என பரப்புரையையும் காணக்கூடியதாக உள்ளது.

அது சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கையாகும். வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் சட்டத்திற்கு கட்டுபட்டவர்களாகவே இருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் குழு வன்முறைகளை ஊக்குவிப்பது நியாயம் இல்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அரசியல் மாற்று கருத்து சகிப்புத்தன்மையில் ஸ்கென்டிநெர்விய நாடுகளுக்கு நிகரானவர்கள் தமிழ்நாட்டு மக்கள். 

நாம் நாட்டிலும் வெளியேயும் அமெரிக்கர்கள் போல் துருவ பட்டு போனவர்கள் (polarization). 

சாட்டை செய்தது பிழை என்பதே எம்மில் பலருக்கு உறைக்கவில்லை.

14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அது சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கையாகும். வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் சட்டத்திற்கு கட்டுபட்டவர்களாகவே இருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் குழு வன்முறைகளை ஊக்குவிப்பது நியாயம் இல்லை.

 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.