Jump to content

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, shanthy said:

அப்படியானால் உங்கள் பிள்ளைகள் ஊடாக உண்மையான ஈழத்தமிழர் பிரச்சினைகள் பற்றிய சரியான வரலாற்று ஆய்வுகளைச் செய்ய நீங்களும் முயலலாமே? 

ஈழத்தமிழர் பற்றிய உண்மையான வரலாறுகள்/பிரச்சனைகள் எனக்கு தெரியும் போது ஏன் பிள்ளைகளை வைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்?
சாந்தி அக்காவுக்கு காமெடி கூடிப்போச்சுது...😂

Link to comment
Share on other sites

  • Replies 254
  • Created
  • Last Reply

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ என்பவரே கட்டுரை வடிவமைப்பாளர்...

அவர் இந்த கட்டுரையின் மூலம் எதை எடுத்துகாட்ட விரும்பினாரோ புலப்படவில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி இனி கட்டுரைக்கு வருவோம். அப்படியென்ன இதில் புதிதாக சொல்லப்பட்டிருக்கிறது. யாழ் களத்தில் இதைப்பற்றி எத்தனையோ திரிகளில் அலசியாகிவிட்டதே. ஆராச்சி செய்தவர் இவ்வாறான பிழைகளை திருத்த என்னென்ன செய்யலாம், அதற்கு இந்த இளையோர் சமூகம் என்னென்ன முன்னெடுப்புகளை செய்யப்போகிறது அல்லது செய்யமுடியும், அவற்றை எவ்வாறு புலம்பெயர் சமூகத்திற்கும் தாயகத்தில் உள்ளோர்க்கு கொண்டு சேர்க்கமுடியும் என்பதைப்பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படி சொல்லியிருந்தால் அவையேன் இங்கு எழுதப்படவில்லை. அரைத்தமாவை திரும்பத்திரும்ப அரைப்பதால் என்ன பயன்??

மற்றவர்கள் ******  மட்டுக்களுக்கு தெரிவதில்லை நாங்கள் சுட்டிக்காட்டினால் அதை தூக்கவேண்டியது! யாழ் களம்  நல்லா வரும்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் முன்னர் சிலகாலம் இருந்த சஞ்சயன் இப்படி முகப்புத்தகத்தில் போட்டிருந்தார்..

Zoom சகுனிகள்
******

நான் அதிகம் Zoom சங்கதிகளில் தலையையும், வாயையும், காதையும் காண்பிப்பதோ கொடுப்பதோ இல்லை.

காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. வெறிக்குட்டிகளின் சமூக அக்கறை நமக்கு ஒத்துவருவதில்லை. 

மாறாக, இன்று அறிவோர் அரங்கம் நடத்திய, நோர்வேயைச் சேர்ந்த  இளையவரான ஆக்காஷ்னி ஜோன் கருணேஸ்வரன் (யோர்க் பல்கலைக்கழகம்) அவர்களது  'பிளவுற்ற தமிழ்த் தேசத்தில் விடுதலைப்போராட்டம்'  என்னும் அவரது ஆய்வுபற்றிய கருத்துரையைக் கேட்டேன். 

அவரது தேடலும் ஆர்வமும் கருத்துக்களும் ஆச்சர்யப்படுத்தின. இப்படியும் சிந்திக்க இளம் சமூகம் இருக்கிறது என்பது பெரும் ஆறுதல்.

ஆனால், “தங்கச்சியை வாழ்த்துகிறோம்“ என்று சொல்லியபடியே வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் தங்களின் அரசியலின்பால் இழுக்க நினைக்கும், தம் கருத்துக்களை திணிக்க நினைக்கும் பெருநிறுவனங்களின் முக்கியஸ்தர்களும், அவர்களது சகபாடிகளும் காண்பிக்கும் நுண்ணரசியலின் நெடி அருவருக்கவைக்கிறது. 

இந்தக் கிருமிகளின் சிந்தனைக்கும் இளையோரின் வளமான சிந்தனைக்கும் இடையில் நிரப்பவே முடியாத பெரும் இடைவெளியொன்று உண்டு என்று ஒருவர்  சற்றுக் காரமாகவே குறிப்பிட்டார். அவரது அறச்சீற்றத்தில் எனக்கு பெருத்த உடன்பாடு உண்டு.

இனியாவது இளையோரை அவர்களின் சுய சிந்தனையில் இயங்க விடுங்கள்..... கிழடுகளே..”

58 minutes ago, Eppothum Thamizhan said:

ஆராச்சி செய்தவர் இவ்வாறான பிழைகளை திருத்த என்னென்ன செய்யலாம், அதற்கு இந்த இளையோர் சமூகம் என்னென்ன முன்னெடுப்புகளை செய்யப்போகிறது அல்லது செய்யமுடியும், அவற்றை எவ்வாறு புலம்பெயர் சமூகத்திற்கும் தாயகத்தில் உள்ளோர்க்கு கொண்டு சேர்க்கமுடியும் என்பதைப்பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படி சொல்லியிருந்தால் அவையேன் இங்கு எழுதப்படவில்லை

கலந்துரையாடலை ஏற்பாடு செய்தவர்கள் முன்னைய வீடியோக்களை இணைத்துள்ளானர். இதுவும் யூரியூப்பில் வரும் என்று நினைக்கின்றேன். வந்தால் கட்டாயம் ஒட்டுவேன்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

சரி இனி கட்டுரைக்கு வருவோம். அப்படியென்ன இதில் புதிதாக சொல்லப்பட்டிருக்கிறது. யாழ் களத்தில் இதைப்பற்றி எத்தனையோ திரிகளில் அலசியாகிவிட்டதே. ஆராச்சி செய்தவர் இவ்வாறான பிழைகளை திருத்த என்னென்ன செய்யலாம், அதற்கு இந்த இளையோர் சமூகம் என்னென்ன முன்னெடுப்புகளை செய்யப்போகிறது அல்லது செய்யமுடியும், அவற்றை எவ்வாறு புலம்பெயர் சமூகத்திற்கும் தாயகத்தில் உள்ளோர்க்கு கொண்டு சேர்க்கமுடியும் என்பதைப்பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படி சொல்லியிருந்தால் அவையேன் இங்கு எழுதப்படவில்லை. அரைத்தமாவை திரும்பத்திரும்ப அரைப்பதால் என்ன பயன்??

மற்றவர்கள் ******  மட்டுக்களுக்கு தெரிவதில்லை நாங்கள் சுட்டிக்காட்டினால் அதை தூக்கவேண்டியது! யாழ் களம்  நல்லா வரும்!!

பயன்: இது வரை எங்களிடையே "அறையினுள் யானை" போல இருக்கும் பிரச்சினையை அறியாதோர் அறிந்து ஏற்றுக் கொள்ளல்!

இந்த ஏற்றுக் கொள்ளல்  நடக்காமல், ஒழுங்குப் பிரச்சினை, தடித்த எழுத்துப் பிரச்சினையென்று குழப்ப ஆரம்பித்து, கடைசியில் "நீங்க ஏன் தமிழர் வாசிக்கும் யாழ் களத்தில் சிங்களவனைத் திட்டுவதில்லை, அப்ப நீங்க சிங்கள ஏஜென்டா?" என்ற அறிவு பூர்வமான கேள்வியில் வந்து நிற்கிறது!🤣

இப்படிப் பட்ட மறைத்தல் திரித்தல் இருக்கும் வரை இது தொடர்ந்து அரைக்கப் பட வேண்டியது அவசியம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Justin said:

இப்படிப் பட்ட மறைத்தல் திரித்தல் இருக்கும் வரை இது தொடர்ந்து அரைக்கப் பட வேண்டியது அவசியம்!

இங்கு மறைத்தல், திரித்தல், அறிவாளிகளென கூறிக்கொள்வோர் பாடமெடுத்தல் எல்லாம் காலகாலமாக நடந்துகொண்டுதானிருக்கிறது. அதைவிடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன அதை எவ்வாறு செயற்படுத்துவது, அதற்கான இளையோரின் பங்கெடுப்புகள் என்னென்ன என்றுகேட்டால்?? பதிலில்லை. ஆனால் வகுப்பெடுத்தல் தொடரும்!! நாங்கள் யாரும் அவர்களை இதை செய்யாதே, அதைத்தான் செய் என்று இந்த 12 வருடங்களாக சொல்லவேயில்லையே!!

இதற்குமுன் போராடியவர்கள் இப்படியெல்லாம் தவறிழைத்து விட்டார்கள் நீங்கள் அப்படியெல்லாம் செய்யாமல் இப்படி போராடுங்கள் என்று எத்தனை இளையோர்களை இனிவரும் புதிய போராட்டத்திற்கு தயார்படுத்தியிருக்கிறீர்கள் என்றாவது சொல்வீர்களா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

அடுத்த கட்டம் என்ன செய்ய வேண்டுமென்று ஒரு லோன்ட்றி லிஸ்ற் பட்டியலாக நீங்கள் எதிர்பார்ப்பது வேடிக்கை.

ஒரு உதாரணத்திற்கு இங்கே இந்த இளையவர் சொன்ன ஒரு அவதானிப்பு: "புலம் பெயர்ந்த தேசிய ஆர்வலர்கள் தாம் வந்த காலத்தில் இருந்த காட்சியை வைத்துக் கொண்டே தற்போதைய கருத்துக்களையும் செயல்களையும் முன்னெடுக்கிறார்கள்" .

இதை வைத்துக் கொண்டு உங்களால் எடுக்க வேண்டிய செயல்பாட்டை கிரகித்துணர முடியவில்லையா?🤔

அடுத்த கட்டத்தைக் கிரகித்துணர்வதை விடுங்கள், இந்தத் திரியில் ஆரம்பத்தைப் பார்த்தீர்களானால், இந்த இளையவரின் அவதானிப்பு யாழ் வாசகர்களிடயே பரவி விடக் கூடாதென்ற பரபரப்பு மட்டும் தான் வெளிப்பட்டது.

எனவே, முதலில் இது போன்ற மீள அரைத்தல்களை தடுக்காமல் அனுமதிக்கக் கற்றுக் கொள்வோம். அதன் பிறகு செய்ய வேண்டியது என்னவென்பது தானே வெளிப்படும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

இதுதான் நான் விளக்கமில்லாமல் வகுப்பெடுப்பவர்களுடன் கருத்தாடுவதில்லை. தேசிய ஆர்வலர்களின் காலம்தான் முடிந்துவிட்டது, பழசாகிவிட்டது என்றுவிட்டு அவர்களின் சொல்லை ஏன் செவிமடுக்கிறீர்கள். உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதை முன்னெடுத்து செல்லவேண்டியதுதானே. யாரும் தடுக்கவில்லையே.

செய்யவேண்டியது தானாக வெளிப்பட அது என்ன ஜீ பூம்பாவா?? எந்தவித செயற்பாட்டுத்திட்டங்களுமில்லை ஆனால் வகுப்பெடுப்புக்கு குறைவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

இதுதான் நான் விளக்கமில்லாமல் வகுப்பெடுப்பவர்களுடன் கருத்தாடுவதில்லை. ஆர்வலர்களின் காலம்தான் முடிந்துவிட்டது, பழசாகிவிட்டது என்றுவிட்டு அவர்களின் சொல்லை ஏன் செவிமடுக்கிறீர்கள். உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதை முன்னெடுத்து செல்லவேண்டியதுதானே. யாரும் தடுக்கவில்லையே.

செய்யவேண்டியது தானாக வெளிப்பட அது என்ன ஜீ பூம்பாவா?? எந்தவித செயற்பாட்டுத்திட்டங்களுமில்லை ஆனால் வகுப்பெடுப்புக்கு குறைவில்லை!

நான் கருத்தாடுங்கள் என்று அழைக்கவில்லை! ஆனால், உங்கள் கேள்வியே "எனக்கு வகுப்பெடு, செய்ய வேண்டியதை/செய்ததைச் சொல்லித்தா!" என்ற கெஞ்சலாக இருந்த போது எனக்குப் பட்டதைச் சொன்னேன் , அவ்வளவே!

மற்றபடி, ஒரு பக்கம் "ஏன் திரும்பத் திரும்ப அரைக்கிறாய்?" என்று திட்டிக் கொண்டே, "நாம் யாரையும் தடுக்கவில்லையே?" என்றும் சொல்வது வேடிக்கை தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

இப்போதும் விளக்கமில்லை. நான் தடுக்கவில்லையே என்பது தங்கள் புதிய அணுகுமுறையோடு வருபவர்களின் செயற்திட்டங்களை என்பது கூட புரியவில்லை!

இதை இதை செய்யாதே என்று வகுப்பெடுத்தால் வருங்காலத்தில் என்னென்ன செய்யவேண்டும் என்ற செயற்திட்டங்களை சொல்லிக்கொடுப்பதுதான் (தெரிந்தால்) ஆசானுக்கு அழகு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

இப்போதும் விளக்கமில்லை. நான் தடுக்கவில்லையே என்பது தங்கள் புதிய அணுகுமுறையோடு வருபவர்களின் செயற்திட்டங்களை என்பது கூட புரியவில்லை!

இதை இதை செய்யாதே என்று வகுப்பெடுத்தால் வருங்காலத்தில் என்னென்ன செய்யவேண்டும் என்ற செயற்திட்டங்களை சொல்லிக்கொடுப்பதுதான் (தெரிந்தால்) ஆசானுக்கு அழகு!

நான் ஆசான் அல்ல! நிச்சயமாக, நீங்கள் இங்கே மாணவர் அல்ல!

ஆனால் ஒரு அழகான வாக்கியம் நினைவுக்கு வருகிறது:

"You can't let your failures define you. You have to let your failures teach you" -  பராக் ஒபாமா

தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்ல, சமூகத்தின் வாழ்க்கைக்கும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

இங்கு மறைத்தல், திரித்தல், அறிவாளிகளென கூறிக்கொள்வோர் பாடமெடுத்தல் எல்லாம் காலகாலமாக நடந்துகொண்டுதானிருக்கிறது. அதைவிடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன அதை எவ்வாறு செயற்படுத்துவது, அதற்கான இளையோரின் பங்கெடுப்புகள் என்னென்ன என்றுகேட்டால்?? பதிலில்லை. ஆனால் வகுப்பெடுத்தல் தொடரும்!! நாங்கள் யாரும் அவர்களை இதை செய்யாதே, அதைத்தான் செய் என்று இந்த 12 வருடங்களாக சொல்லவேயில்லையே!!

இதற்குமுன் போராடியவர்கள் இப்படியெல்லாம் தவறிழைத்து விட்டார்கள் நீங்கள் அப்படியெல்லாம் செய்யாமல் இப்படி போராடுங்கள் என்று எத்தனை இளையோர்களை இனிவரும் புதிய போராட்டத்திற்கு தயார்படுத்தியிருக்கிறீர்கள் என்றாவது சொல்வீர்களா??

இலகுவாக  ஆலோசனைகள். சொல்லாம்.  ஆனால். யார் அதை. செயல்ப்படுத்துவது.?

மட்டுமல்ல  அந்தத்திட்டம்  பயன் தர பல வருடங்கள் தேவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

இலகுவாக  ஆலோசனைகள். சொல்லாம்.  ஆனால். யார் அதை. செயல்ப்படுத்துவது.?

மட்டுமல்ல  அந்தத்திட்டம்  பயன் தர பல வருடங்கள் தேவை. 

திட்டங்கள் பயன் தர ஆரம்பித்து விட்டதென்பது தான் உண்மை! தாயகத் தேர்தல் முடிவுகளில் துரையப்பா காலச் சாயல் (அங்கஜனின் வெற்றி) தெரிகிறது. புலம்பெயர்ந்தோர் இங்கிருந்து எவ்வளவு தீவிரம் காட்டியும் சமந்திரனைத் தோற்கடிக்க இயலவில்லை!

இவையெல்லாம் மாற்றங்கள் - எல்லாமே நல்லவையென்று சொல்ல வரவில்லை, சில நல்ல மாற்றங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Justin said:

நான் ஆசான் அல்ல! நிச்சயமாக, நீங்கள் இங்கே மாணவர் அல்ல!

ஆனால் ஒரு அழகான வாக்கியம் நினைவுக்கு வருகிறது:

"You can't let your failures define you. You have to let your failures teach you" -  பராக் ஒபாமா

தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்ல, சமூகத்தின் வாழ்க்கைக்கும் தான்.

அழகான வாக்கியங்களை சொல்லவும் எழுதவும்தான் முடியும். அதை நடைமுறைப்படுத்துவதுதான் செயல்திட்டம் என்று நான் சொன்னது. இனி ஒரு ஆயுதப்போராட்டம் சாத்தியமில்லை என்னும்போது போராடியவர்கள் விட்ட பிழைகளை ஆராய்வதில் என்ன பயன்? உங்களிடம் (தற்கால இளைய சந்ததியிடம்) நவீன உலகோடு ஒத்துப்போகக்கூடிய வேறு ஏதாவது செயற்திட்டங்கள் இருந்தால் அதை முன்னகர்த்தி செல்லவேண்டியதுதானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

அத்தகைய செயல்கள் ஆரம்பமாகி விட்டன! ஆனால், முப்பது வருடம் இரத்தம் சிந்தியும் வராத மாற்றம், சில ஆண்டுகளில் அரசியல் நகர்வுகளால் வந்து விடாது. உதாரணம், தாயகத்தில் சுமந்திரன் போன்றவர்களின் வருகை, சிவாஜிலிங்கம் போன்றோரின் தோல்வி! இவை தான் இனி தமிழருக்குள்ள வழி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kandiah57 said:

இலகுவாக  ஆலோசனைகள். சொல்லாம்.  ஆனால். யார் அதை. செயல்ப்படுத்துவது.?

மட்டுமல்ல  அந்தத்திட்டம்  பயன் தர பல வருடங்கள் தேவை. 

இந்த அறுப்பைத்தான் நானும் இவ்வளவுநேரமும் சொல்லுகிறேன். ஆலோசனை சொல்வது பிழைபிடிப்பது எல்லாம் மிக இலகு. அதை செயல்படுத்துவது யார்? நடைமுறைப்படுத்துவது எப்படியென்று எழுதாமல் யாழில் ஆளாளுக்கு வகுப்பெடுக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

 உதாரணம், தாயகத்தில் சுமந்திரன் போன்றவர்களின் வருகை

அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை !🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

இந்த அறுப்பைத்தான் நானும் இவ்வளவுநேரமும் சொல்லுகிறேன். ஆலோசனை சொல்வது பிழைபிடிப்பது எல்லாம் மிக இலகு. அதை செயல்படுத்துவது யார்? நடைமுறைப்படுத்துவது எப்படியென்று எழுதாமல் யாழில் ஆளாளுக்கு வகுப்பெடுக்கிறீர்கள்.

நீங்கள் உரையாடல்களை ஏதோ "பிசினஸ்" சந்திப்பு போலப் பார்க்கிறீர்கள்: யார், எங்கே, எப்படி என்ற to do லிஸ்ற் உங்களுக்கே போட முடியாதா?

ஒரு நிஜமான உதாரணம் கேளுங்கள்: போனவாரம் நகரத்தின் ஒரு பகுதியில் கரடியொன்றின் நடமாட்டம் இருந்ததாக பொலிஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது. நகர மக்கள் "என்ன செய்ய வேண்டும், யார் செய்ய வேண்டும்?" என்று பொலிசைப் பிராண்டவில்லை: குப்பைகளை  உள்ளே வைத்தார்கள், குழந்தைகளை காட்டுக்கு அண்மையில் விளையாடாமல் காத்தார்கள், இப்படி தாங்களாகவே செயல்பட்டார்கள்.

ஜஸ்ரின் தனக்கு இயலுமானதைச் செய்வார், தமிழன் தனக்கு இயலுமானதைச் செய்வார். மேய்ப்பர் ஏன்? இருக்கிற nominal தமிழ் தலைமைகள் போதும்!🙏

Link to comment
Share on other sites

4 minutes ago, Eppothum Thamizhan said:

இந்த அறுப்பைத்தான் நானும் இவ்வளவுநேரமும் சொல்லுகிறேன். ஆலோசனை சொல்வது பிழைபிடிப்பது எல்லாம் மிக இலகு. அதை செயல்படுத்துவது யார்? நடைமுறைப்படுத்துவது எப்படியென்று எழுதாமல் யாழில் ஆளாளுக்கு வகுப்பெடுக்கிறீர்கள்.

என்ன இந்தலைமுறையுடன் அங்கு தமிழர்களே இருக்க மாட்டார்களா? பழைய தோற்றுப்போனவர்களின் தவறுகளைக்  களைந்து அவர்கள் தானே நடைமுறைப்படுத்த வேண்டும். அது எப்படி இருக்கும் என்பதை கற்பனை பண்ணிப் பார்ககும் ஆற்றல் கூட இந்த தலைமுறையினரன எம்மிடம் இல்லை என்பது எனது கருத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை !🤣

நீங்கள் அழுதாலும் சிரித்தாலும் தாயக மக்களின் தெரிவு அப்படி! இங்கே நீங்களும் நானும் பேசுவதை விட நூறு மடங்கு பலம் வாய்ந்த தெரிவு அவர்களுடையது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kandiah57 said:

இலகுவாக  ஆலோசனைகள். சொல்லாம்.  ஆனால். யார் அதை. செயல்ப்படுத்துவது.?

மட்டுமல்ல  அந்தத்திட்டம்  பயன் தர பல வருடங்கள் தேவை. 

எனது கருத்து 

1. யாழ் ஒரு கருத்து களம். செயல்களம் அல்ல.

2. இங்கே என்ன செய்ய வேண்டும் என கருத்து மட்டும்தான் எழுத முடியும். 

3. கருத்து எழுதுபவரை பார்த்து நீ என்ன செய்தாய் என்பது அபத்தமான கேள்வி. அதை கேட்கவேண்டிய இடம், நாடு கடந்த அரசு, பிடிஎப், ஜி டி எப், கூட்டமைப்பு போன்ற செயல்களங்களில்.

4. யாழில் கருத்து மட்டும் வருகிறது என்றும், செயல் இல்லை என்றும் அங்கலாய்ப்பது, சைவ கடையில் ஆட்டுகறி பிரியாணி இல்லை என அங்கலாய்பதை போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

இந்த அறுப்பைத்தான் நானும் இவ்வளவுநேரமும் சொல்லுகிறேன். ஆலோசனை சொல்வது பிழைபிடிப்பது எல்லாம் மிக இலகு. அதை செயல்படுத்துவது யார்? நடைமுறைப்படுத்துவது எப்படியென்று எழுதாமல் யாழில் ஆளாளுக்கு வகுப்பெடுக்கிறீர்கள்.

இதற்க்கு. நானே...நீங்களே.  பதில். கூறமுடியாது.   எனெனில். இலங்கைத் தமிழரின் தீர்வுக்காக. போராட ஒர வலுவான  அபைப்பு  இந்த உலகத்திலில்லை இது உங்களுக்கு  தெரியும் ..இருத்தும். மற்றவனைப்பார்த்து  கேள்வி. கேட்கிறீர்கள். அறுப்பு  என்பது. ஒர் நல்ல தமிழ்சொல் இல்லை..நல்ல தமிழ்  சொல் பாவிப்பவர். தான்தமிழனாயிருக்க முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

4. யாழில் கருத்து மட்டும் வருகிறது என்றும், செயல் இல்லை என்றும் அங்கலாய்ப்பது, சைவ கடையில் ஆட்டுகறி பிரியாணி இல்லை என அங்கலாய்பதை போல.

9 minutes ago, goshan_che said:

எனது கருத்து 

1. யாழ் ஒரு கருத்து களம். செயல்களம் அல்ல.

2. இங்கே என்ன செய்ய வேண்டும் என கருத்து மட்டும்தான் எழுத முடியும். 

3. கருத்து எழுதுபவரை பார்த்து நீ என்ன செய்தாய் என்பது அபத்தமான கேள்வி. அதை கேட்கவேண்டிய இடம், நாடு கடந்த அரசு, பிடிஎப், ஜி டி எப், கூட்டமைப்பு போன்ற செயல்களங்களில்.

4. யாழில் கருத்து மட்டும் வருகிறது என்றும், செயல் இல்லை என்றும் அங்கலாய்ப்பது, சைவ கடையில் ஆட்டுகறி பிரியாணி இல்லை என அங்கலாய்பதை போல.

அப்போ எதுக்கு சைவ கடையில்  ஆட்டு பாயா, ஆட்டு கால் சூப் விளம்பரம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kandiah57 said:

மட்டுமல்ல  அந்தத்திட்டம்  பயன் தர பல வருடங்கள் தேவை. 

அற்புதமான கருத்து.

சங்கிலியனை போர்த்துகேயர் தோற்கடித்தது முதல் - 2009 இல் தலைவர் வீரகாவியாமகியது வரை ஒரு நீண்ட கால காலச்சாரளத்தின் முடிவில், அடுத்த பெரும்காலத்தின் தொடடக்கதில் நாம் இப்போ இருக்கிறோம்.

1980 க்கு பின் பிறந்தவர்களுக்கு (தமிழருக்கு) நாட்டிலும், வெளிநாட்டிலும், உண்மையான எமது வரலாற்றை அதன் நியாய அநியாயங்களுடன் எடுத்து கூறி, எமது பலம், பலவீனம்களை அவர்கள் விளங்கி, எமது மீள் வருகையை கட்டி எழுப்ப இப்போ நாம் அத்திவாரத்தை அல்ல, அத்திவாரம் போடும் இடத்தில் புல்லைதான் பிடுங்க முடியும்.

இது ஒன்றும் கையோடு கமாரிசு பார்க்கும் வேலை அல்ல.

நாமும், அடுத்த சந்ததியும் கூட விடிவிற்கான சிறு ஒளி கீற்றை கூட காணாமல்தான் கண் மூடப் போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

எனது கருத்து 

1. யாழ் ஒரு கருத்து களம். செயல்களம் அல்ல.

2. இங்கே என்ன செய்ய வேண்டும் என கருத்து மட்டும்தான் எழுத முடியும். 

3. கருத்து எழுதுபவரை பார்த்து நீ என்ன செய்தாய் என்பது அபத்தமான கேள்வி. அதை கேட்கவேண்டிய இடம், நாடு கடந்த அரசு, பிடிஎப், ஜி டி எப், கூட்டமைப்பு போன்ற செயல்களங்களில்.

4. யாழில் கருத்து மட்டும் வருகிறது என்றும், செயல் இல்லை என்றும் அங்கலாய்ப்பது, சைவ கடையில் ஆட்டுகறி பிரியாணி இல்லை என அங்கலாய்பதை போல.

நேசக்கரம் இங்கிருந்துதான் உருவாகியது.
யாழ்களத்தில் இன்றும் ஒரு செயல்களம் ஒரு மூலையில் உள்ளது.
இங்குள்ள பல திரிகளில் செயல்திட்டங்கள்/நன்கொடைகள் பற்றிய தரவுகளும் பரிமாறப்படுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.