Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

எனவே தோற்ற தமிழர் தரப்பில் இருந்து சரியான வரலாறு எப்போதும் வராது.

அப்படி சொல்ல முடியாது ஜி. வென்றவர்களை விட நம் தரப்பில் இருந்து சரியான வரலாறு வரவே வாய்ப்பு அதிகம். அவர்களது வெறும் வெற்றிகளிப்பு மட்டுமே.

ஹிட்லர் சொன்னது தோற்றால் விளக்கம் கொடுக்கும் நிலையில் இருப்பதை விட இல்லாமல் போவதே மேல். அதுதான் எம் விடயத்திலும் நடந்தது.

13 minutes ago, putthan said:

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் ....ஆகவே தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்று அர்த்தமில்லை.....

👆🏼👌

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • Replies 254
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’ தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த ஞாயிற்றுக்கிழமை, நிகர்நிலையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், பங்குகொள்ளக் கிடைத்தது. ‘பிளவுற்ற தமிழ்த் தேசத்தில் விடுதலைப்

கிருபன்

கொட்டை எழுத்தில் உள்ளவை 1980, 1990 களில் புலம்பெயர்ந்து வந்தவர்களின் சிந்தனைப்போக்கைப் பற்றியது. அது விசுகு ஐயா, கு.சா. ஐயா போன்றவர்களுக்கு கடுக்கும்தான். 😉 ஆனால் முக்கியமானது என்னவென்றால், ஆய்வு

Justin

நிச்சயமாக: இது வரை பேச விரும்பாத விடயங்களை அமுக்கி விடும் தந்திரங்களின் "புதுப்பிக்கப் பட்ட" பட்டியல், வாசகர்களின் பார்வைக்கு: 1. தடவல்: "நீங்கள் ரெம்ப நல்லவர், ஏன் இதுக்க நின்று மரியாதையைக் கெடு

 • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, putthan said:

வெற்றியடைந்தால் சரித்திரம் தோல்வி என்றால் சம்பவம்....என்று நம்ம ஆள் சொன்னதை இது நினைவு படுத்துகின்றது....விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் ....ஆகவே தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்று அர்த்தமில்லை.....
 

தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதால்தான் விடுதலைப் புலிகளும் தோற்றார்கள். பெருமளவு  தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தை புலிகள் இராணுவ ரீதியில் உச்சம்பெற முன்னரே கைவிட்டுவிட்டார்கள். தன்னலமான வாழ்வைத்தான் அதிகம் பேர் விழைந்தார்கள். அப்படி இருந்தும் புலிகள் பாரிய சாதனைகள் புரிந்து இறுதியில் இல்லாமல் ஆகிவிட்டார்கள். 

இப்போது மாவட்ட சபை அல்லது கிராம சபை அதிகாரம் கூட இல்லாமல் இருந்துகொண்டு தமிழர் தோற்கடிக்கப்படவில்லை என்று சொல்வது யூதக் கனவில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்றுதான் பொருள்! I 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

ஆனால் ஒருதலைப்பட்சமாக ஒருதரப்பு மட்டும் வரலாற்றை எழுதினால் அதை எதிர்காலத்தில் ஏற்றுக் கோள்ள மாட்டார்கள். யார் எழுதினாலும் நம்பக தன்மையுடன் அனைத்து தரப்பினரின்  தவறுகளையும் ஏற்றுக் கொண்டு எழுத வேண்டும். இல்லை என்றால் அது வெறும் ஒரு பக்க பிரச்சாரம் ஆகிவிடும். எதிர் காலத்தில் அதன் உண்மைத்தன்மையை ஆராயவார்கள். சும்மா எழுந்த பாட்டுக்கு இவர் தியாகம் செய்தார் இவர் எழுதினால் எல்லாம் சரியாக இருக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு நம்ப முடியாது. 

மக்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருந்தவர்கள் பக்க சார்பாக எழுதுவார்கள் என்பதை நம்பினால் அதை கேள்வி ஞானம் மூலம் கதை எழுதுபவர்கள்?????

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

அப்படி சொல்ல முடியாது ஜி. வென்றவர்களை விட நம் தரப்பில் இருந்து சரியான வரலாறு வரவே வாய்ப்பு அதிகம். அவர்களது வெறும் வெற்றிகளிப்பு மட்டுமே.

நான் சொல்ல வந்தது இறுதிக்கட்ட போராட்ட வரலாறு. அப்போதைய இராணுவ, அரசியல் சிந்தனைகள் தெரிந்தவர்கள் இல்லையென்றுதான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதால்தான் விடுதலைப் புலிகளும் தோற்றார்கள். பெருமளவு  தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தை புலிகள் இராணுவ ரீதியில் உச்சம்பெற முன்னரே கைவிட்டுவிட்டார்கள். தன்னலமான வாழ்வைத்தான் அதிகம் பேர் விழைந்தார்கள். அப்படி இருந்தும் புலிகள் பாரிய சாதனைகள் புரிந்து இறுதியில் இல்லாமல் ஆகிவிட்டார்கள். 

இப்போது மாவட்ட சபை அல்லது கிராம சபை அதிகாரம் கூட இல்லாமல் இருந்துகொண்டு தமிழர் தோற்கடிக்கப்படவில்லை என்று சொல்வது யூதக் கனவில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்றுதான் பொருள்! I 

விடுதலை புலிகள்/ஆயுத போராட்டம் தோற்றது என்பதை ஒத்து கொள்ளாமை எவ்வளவு யதார்தத்துக்கு புறம்பானதோ, அதே போலத்தான் தமிழர்கள் தோற்றுப்போனார்கள் என்று சொல்வதும். 

இலங்கை தீவில் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் நெடியது. எல்லாளனுக்கும் முந்தியது.

1979-2009 அது தனிநாடு என்ற மாயமானின் பின்னால் போனது. தோற்றது.

ஆனால் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் வேறு பட்ட வடிவங்களில் தொடரும். 

4 minutes ago, கிருபன் said:

நான் சொல்ல வந்தது இறுதிக்கட்ட போராட்ட வரலாறு. அப்போதைய இராணுவ, அரசியல் சிந்தனைகள் தெரிந்தவர்கள் இல்லையென்றுதான் நினைக்கின்றேன்.

தமிழினி அக்கா எழுதி சென்றுள்ளாவே?

இதே யாழில் பகலவன் அண்ணா எழுதியுள்ளாரே?

 

பத்து பக்கம் வந்திட்டு யுரேக்கா!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

மக்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருந்தவர்கள் பக்க சார்பாக எழுதுவார்கள் என்பதை நம்பினால் அதை கேள்வி ஞானம் மூலம் கதை எழுதுபவர்கள்?????

விசுகு வரலாற்றை எழுதும் திறன்மிகு வரலாற்றாசிரியர்கள் சும்மா கேள்வி ஞானம் மூலம் எழுதுவதில்லை. ஒவ்வொரு சம்பவத்தையும் பல கோணங்களில் சரி பார்ப்பார்கள். ஆய்வுக்குட்படுத்துவார்கள். வேறு பல வரலாற்றாளர்களிடம் கருத்து பரிமாற்றம் செய்வார்கள். அனைத்து தரப்பினரின் செய்திகளையும் அவதானிப்பார்கள. அதன் பின்னரே எழுதுவார்கள். அதுவே கூடியளவுக்கு சரியானதாக இருக்கும். 

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

தமிழினி அக்கா எழுதி சென்றுள்ளாவே?

இதே யாழில் பகலவன் அண்ணா எழுதியுள்ளாரே?

 

இவை எல்லாம் சிறு துண்டுகளான வரலாறு.  

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நான் கனம் பண்ண தயாராக மட்டும் அல்ல அதற்காக வழியையும் விட்டு பல வருடங்களாச்சு. ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை?????

ஆயுதப் போராட்டத்துக்கு எமது மக்கள் கொடுத்த பல வருடங்களுடன் ஒப்பிடும் போது அந்த பல வருடங்கள் மிகக் குறைவானவை, இல்லையா விசுகு? உண்மையில், ஆயுதப் போராட்டத்தோடு ஒப்பிடும்போது இராஜதந்திர சமாதான தீர்வுக்கான பாதை கடினமானதும் மிக நீண்டகாலம் எடுப்பதுமாகவே இருக்கும். ஆகவே எங்கள் வாழ்நாளில் நாம் எந்த மாற்றத்தையும் காணும் சாத்தியம் இல்லை. வழி விட்டு கனம் பண்ணுவது மிகவும் பாராட்டுக்குரியது. நீங்கள் உயர்ந்த மனிதர் என்பதையும் அது காட்டுகிறது. நன்றி.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதால்தான் விடுதலைப் புலிகளும் தோற்றார்கள். பெருமளவு  தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தை புலிகள் இராணுவ ரீதியில் உச்சம்பெற முன்னரே கைவிட்டுவிட்டார்கள். தன்னலமான வாழ்வைத்தான் அதிகம் பேர் விழைந்தார்கள். அப்படி இருந்தும் புலிகள் பாரிய சாதனைகள் புரிந்து இறுதியில் இல்லாமல் ஆகிவிட்டார்கள். 

இப்போது மாவட்ட சபை அல்லது கிராம சபை அதிகாரம் கூட இல்லாமல் இருந்துகொண்டு தமிழர் தோற்கடிக்கப்படவில்லை என்று சொல்வது யூதக் கனவில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்றுதான் பொருள்! I 

விடுதலை புலிகளின் கனவு ஈழம் ..........தமிழரின் நிலைப்பாடு வடக்கு கிழக்கு தாயகம் ....
விடுதலைப்புலிகள் ஈழம் தருவோம் என்றார்கள் ஆதரவு வழங்கினார்கள் தமிழர்கள் அதை செயல்படுத்தி காட்டினார்கள் .....
தமிழர் தாயக கோட்பாடு இன்னும் தொடர்கிறது ,....அதை அழிப்பதில் சிங்களமும் தொடர்ந்து செயற்படுகிறது ....

யூதர்களின் கனவாக இருக்கலாம் நிச்சயம் எமது காலத்தில் நனவாக மாறது என்பதும் எமக்கு தெரியும் ....சிறிலங்காவில் தொடர்ந்து மகிந்தா குடும்பம் ஆட்சியிலிருக்க போவதில்லை என்பதும் தெரியும் அரசியலில் எதுவும் நடக்கும்....

யூதர்களின் கனவு ஆயிரம் வருடங்களுக்கு பின்பு நனவாக முடியுமென்றால் ஏன் எங்கள் கனவு நனவாக முடியாது ....எதுவும் நடக்கலாம்....தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை 
என்ற வாதத்தை வைப்பீர்கள்.....மனித சமுகம் ஒற்றுமையில்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கு.....ஒற்றுமையாக வாழ்ந்தால் அவன் மனிதனல்ல....யூதர்களிடையே மோதல்கள் உண்டு...

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, putthan said:

விடுதலை புலிகளின் கனவு ஈழம் ..........தமிழரின் நிலைப்பாடு வடக்கு கிழக்கு தாயகம் ....
விடுதலைப்புலிகள் ஈழம் தருவோம் என்றார்கள் ஆதரவு வழங்கினார்கள் தமிழர்கள் அதை செயல்படுத்தி காட்டினார்கள் .....
தமிழர் தாயக கோட்பாடு இன்னும் தொடர்கிறது ,....அதை அழிப்பதில் சிங்களமும் தொடர்ந்து செயற்படுகிறது ....

யூதர்களின் கனவாக இருக்கலாம் நிச்சயம் எமது காலத்தில் நனவாக மாறது என்பதும் எமக்கு தெரியும் ....சிறிலங்காவில் தொடர்ந்து மகிந்தா குடும்பம் ஆட்சியிலிருக்க போவதில்லை என்பதும் தெரியும் அரசியலில் எதுவும் நடக்கும்....

யூதர்களின் கனவு ஆயிரம் வருடங்களுக்கு பின்பு நனவாக முடியுமென்றால் ஏன் எங்கள் கனவு நனவாக முடியாது ....எதுவும் நடக்கலாம்....தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை 
என்ற வாதத்தை வைப்பீர்கள்.....மனித சமுகம் ஒற்றுமையில்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கு.....ஒற்றுமையாக வாழ்ந்தால் அவன் மனிதனல்ல....யூதர்களிடையே மோதல்கள் உண்டு...

நல்ல கருத்து புத்தன் 👍👍👍👍👍

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

விடுதலை புலிகளின் கனவு ஈழம் ..........தமிழரின் நிலைப்பாடு வடக்கு கிழக்கு தாயகம் ....
விடுதலைப்புலிகள் ஈழம் தருவோம் என்றார்கள் ஆதரவு வழங்கினார்கள் தமிழர்கள் அதை செயல்படுத்தி காட்டினார்கள் .....
தமிழர் தாயக கோட்பாடு இன்னும் தொடர்கிறது ,....அதை அழிப்பதில் சிங்களமும் தொடர்ந்து செயற்படுகிறது ....

யூதர்களின் கனவாக இருக்கலாம் நிச்சயம் எமது காலத்தில் நனவாக மாறது என்பதும் எமக்கு தெரியும் ....சிறிலங்காவில் தொடர்ந்து மகிந்தா குடும்பம் ஆட்சியிலிருக்க போவதில்லை என்பதும் தெரியும் அரசியலில் எதுவும் நடக்கும்....

யூதர்களின் கனவு ஆயிரம் வருடங்களுக்கு பின்பு நனவாக முடியுமென்றால் ஏன் எங்கள் கனவு நனவாக முடியாது ....எதுவும் நடக்கலாம்....தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை 
என்ற வாதத்தை வைப்பீர்கள்.....மனித சமுகம் ஒற்றுமையில்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கு.....ஒற்றுமையாக வாழ்ந்தால் அவன் மனிதனல்ல....யூதர்களிடையே மோதல்கள் உண்டு...

பிரதேச அரசியலும் அதே இடத்தில் வந்து நிற்பதுதான் முக்கியமான விடயம்.

முன்பு அமேரிக்கா என்றால் இப்போ சீனா 
ஆனால் பிரச்சனையின் வடிவம் ஒன்றுதான். 

ஜே ர் ஜெயவர்த்தனா இந்திராகாந்தியை மதிக்காது அமேரிக்க சார்பு ஆனதாலேயே 
இந்திரா அரசு ஈழ மக்கள் பக்கம் சார்ந்து இருந்தார்கள் போராளிகளுக்கு ஆயுத பயிற்சி கூட கொடுத்தார்கள் 

பாகிஸ்தான் - இந்திய முறுகல் நிலை தோன்றியபோது 
பாகிஸ்தானுக்கு போரை தொடங்க சொல்லிவிட்டு அமெரிக்கா 
யுத்தகப்பலை கொழும்பு துறைமுகம் நோக்கி அனுப்பியது 

அமெரிக்க சற்றும் எதிர்பாக்காமல் (இப்போதைய சிரியா தரை இறக்கம்போல)
சோவியத் யூனியன் (ரஸ்யா) தனது கப்பலை கொண்டுவந்து இந்தியாவில் கட்டியது 
அதனாலேயே அன்றைய முறுகல் போர் தொடங்கமால் நின்றது 

அதன் பின்புதான் இந்திரா- ஜெ ஆர் முறுகல் முற்றியது 

இப்போ மீண்டும் இந்தியாவின் எதிரியான சீனா சார்பெடுத்து 
நிற்கிறது சிங்களம் .... இப்போது பழைய எதிரிகள் இருவரும் நண்பர்கள் 
என்றாலும் ஆடுவதுக்கு மைதானத்தில் இடம் இல்லை. 

ஈழத்தமிழரை பொறுத்தவரை உயிர் உடைமைகள் அழிந்தாலும் 
பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக ஐ நா வரை கொண்டு சென்று விட்டார்கள் 

எந்த அரசியல் நகர்வும் எட்டாத இந்தியாவே இதில் பெரும் தோல்வி கண்டிருக்கிறது 
இந்தியாவின் தோல்வி தொடருமா?  
இந்திய இளைய தலைமுறை ஏதாவது ஒரு காய்யை நகர்த்துமா?
என்பதிலும் இலங்கை நிலைமை மாறுவதுக்கு  சாத்தியம் உண்டு 

பிராந்திய அரசியல் என்பதை 
பிரதேச அரசியல் என்று எழுதிவிட்டேன் 
மாற்றி வாசிக்கவும் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Maruthankerny said:

பிரதேச அரசியலும் அதே இடத்தில் வந்து நிற்பதுதான் முக்கியமான விடயம்.

முன்பு அமேரிக்கா என்றால் இப்போ சீனா 
ஆனால் பிரச்சனையின் வடிவம் ஒன்றுதான். 

ஜே ர் ஜெயவர்த்தனா இந்திராகாந்தியை மதிக்காது அமேரிக்க சார்பு ஆனதாலேயே 
இந்திரா அரசு ஈழ மக்கள் பக்கம் சார்ந்து இருந்தார்கள் போராளிகளுக்கு ஆயுத பயிற்சி கூட கொடுத்தார்கள் 

பாகிஸ்தான் - இந்திய முறுகல் நிலை தோன்றியபோது 
பாகிஸ்தானுக்கு போரை தொடங்க சொல்லிவிட்டு அமெரிக்கா 
யுத்தகப்பலை கொழும்பு துறைமுகம் நோக்கி அனுப்பியது 

அமெரிக்க சற்றும் எதிர்பாக்காமல் (இப்போதைய சிரியா தரை இறக்கம்போல)
சோவியத் யூனியன் (ரஸ்யா) தனது கப்பலை கொண்டுவந்து இந்தியாவில் கட்டியது 
அதனாலேயே அன்றைய முறுகல் போர் தொடங்கமால் நின்றது 

அதன் பின்புதான் இந்திரா- ஜெ ஆர் முறுகல் முற்றியது 

இப்போ மீண்டும் இந்தியாவின் எதிரியான சீனா சார்பெடுத்து 
நிற்கிறது சிங்களம் .... இப்போது பழைய எதிரிகள் இருவரும் நண்பர்கள் 
என்றாலும் ஆடுவதுக்கு மைதானத்தில் இடம் இல்லை. 

ஈழத்தமிழரை பொறுத்தவரை உயிர் உடைமைகள் அழிந்தாலும் 
பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக ஐ நா வரை கொண்டு சென்று விட்டார்கள் 

எந்த அரசியல் நகர்வும் எட்டாத இந்தியாவே இதில் பெரும் தோல்வி கண்டிருக்கிறது 
இந்தியாவின் தோல்வி தொடருமா?  
இந்திய இளைய தலைமுறை ஏதாவது ஒரு காய்யை நகர்த்துமா?
என்பதிலும் இலங்கை நிலைமை மாறுவதுக்கு  சாத்தியம் உண்டு 

அருமையான விளக்கம் .....இதை எல்லாம் புறம் தள்ளி புலி புராணம் பாடியும்,இணக்க அரசியல் புராணம் பாடியும் ஒன்றும் நடக்க போவதில்லை ......70 ஆண்டுகளுக்கு முதல் செய்ய வேண்டியதை இப்ப செய்து பிராந்திய அரசியலை மாற்ற முனைகின்றனர்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, putthan said:

விடுதலை புலிகளின் கனவு ஈழம் ..........தமிழரின் நிலைப்பாடு வடக்கு கிழக்கு தாயகம் ....
விடுதலைப்புலிகள் ஈழம் தருவோம் என்றார்கள் ஆதரவு வழங்கினார்கள் தமிழர்கள் அதை செயல்படுத்தி காட்டினார்கள் .....
தமிழர் தாயக கோட்பாடு இன்னும் தொடர்கிறது ,....அதை அழிப்பதில் சிங்களமும் தொடர்ந்து செயற்படுகிறது ....

யூதர்களின் கனவாக இருக்கலாம் நிச்சயம் எமது காலத்தில் நனவாக மாறது என்பதும் எமக்கு தெரியும் ....சிறிலங்காவில் தொடர்ந்து மகிந்தா குடும்பம் ஆட்சியிலிருக்க போவதில்லை என்பதும் தெரியும் அரசியலில் எதுவும் நடக்கும்....

யூதர்களின் கனவு ஆயிரம் வருடங்களுக்கு பின்பு நனவாக முடியுமென்றால் ஏன் எங்கள் கனவு நனவாக முடியாது ....எதுவும் நடக்கலாம்....தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை 
என்ற வாதத்தை வைப்பீர்கள்.....மனித சமுகம் ஒற்றுமையில்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கு.....ஒற்றுமையாக வாழ்ந்தால் அவன் மனிதனல்ல....யூதர்களிடையே மோதல்கள் உண்டு...

புத்தன், உங்கள் முதல் பந்தியில் தமிழர்களின் தாயகக் கனவும் புலிகளின் தனிநாட்டுக் கனவும் வேறு  வேறானவை என்று சொல்வதன் மூலம் தமிழர்கள் தமிழீழம் என்ற தனிநாட்டில் முழுநம்பிக்கை கொள்ளவில்லை கூறுகின்றீர்கள். அதாவது தமிழர்கள் தனிநாட்டுக்குக் கீழ் ஒரு தீர்வுக்குத் தயாராக இருந்தார்கள், ஆனால் புலிகள் தனிநாட்டுக் கொள்கையில் இருந்து இறங்கவில்லை. மக்களின் நிலைப்பாடும், மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களும் ஒத்த கருத்தில் இல்லாதபோது இரண்டு தரப்புமே தோல்விநோக்கித்தான் போவார்கள். “ஏதாவது தீர்வு வந்தால் போதும்” என்று பார்வையாளர்களாக இருக்கும் மனப்பான்மை அதிகரித்தது மக்கள் அரசியல் தனிநாடுதான் தீர்வு என்று நம்பும் அளவிற்கு அரசியல் மயப்படுத்தப்படாமைதான் காரணம். மறுவளமாக தனிநாடு யதார்த்தத்தில் கிட்டாது என்பதை ஏற்று அதற்குக் கீழே ஒரு தீர்வை ஏற்கும் நிலைக்கும், அதை நோக்கி சிங்களத்தை நகர்த்தும் நிலைக்கும் சமாதானக் காலத்தைப் பாவிக்கவில்லை. இதனால் இப்போது அதிகாரமில்லாத மாகாணசபை கூட தமிழர்களிடம் இல்லை. சிங்களம் அதைக்கூட இல்லாமல் செய்து மத்தியில் அதிகாரங்களைக் குவிக்கின்றது.

 

யூதர்களுக்கு இஸ்ரேல் கிடைத்தது அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லரசுகளின் ஆதரவால். தமிழர்களுக்கு இப்படி ஒரு வல்லரசைக்கூட ஆதரவாக திரட்டும் வல்லமை இல்லை. ஏன் குறைந்த பட்சம் உரிமைகளுக்காக போராடும் பிற உலக இனங்களின் ஆதரவைக்கூட திரட்டமுனைவதில்லை. இலண்டனின் பலஸ்த்தீனியர்கள், பர்மியர்கள் போல பல இனங்கள் அடிக்கடி போராட்டங்கள் நடத்துவர். அதில் தமிழர்கள் கலந்துகொள்வதேயில்லை. இப்படி ஒடுக்கப்படும் இனங்களோடு ஓரணியில் சேரமுடியாமல் எங்களை “தனித்துவமாக” கருதியனால்தான் முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்தபோது எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

 

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2021 at 05:12, குமாரசாமி said:

அன்றும் அவர்கள் சிந்தித்ததினால் தான் சிங்கள பிரதேசங்களில் தமிழர்கள் கடை வைத்திருந்தார்கள். வீடுகள் வைத்திருந்தார்கள். சொந்த ஊரில் இருந்தது போல் இருந்தார்கள்.வெள்ளவத்தை,கொள்ளுப்பிட்டி,பம்பலப்பிட்டி என தமிழர்கள் வாழ்ந்தார்கள்.

என்னவொண்டு சிங்களத்துக்கு இனவாதம் முத்த பற தெமில எண்டு சொல்லி செல்லமாய் கன்னத்திலை தட்டினவங்கள் அவ்வளவுதான்...

மட்டக்களப்பு எல்லையள்லை சிங்களவன் அடிச்சு நொருக்கினாலும் பிரச்சனை இல்லை....அவர்களும் சிந்திக்கின்றார்கள் எண்டு நாங்கள் சொல்லுவம்.

தற்போது  சிங்களவர்கள் இலங்கையின் விலைவாசிக்கும் வீடுகளின் வாடகைக்கும்  நகரவாழ்கையில் இருந்து கிராமப்புற , காட்டுப்பகுதிகளுக்குள் நுழைகிறார்கள்  ஆனால் அவர்கள் வெளியேறிய பகுதிகளை தமிழர்கள் விலைகொடுத்து வாங்குகிறார்கள் விசாரியுங்கள்  தாத்தா நீங்கள் சொன்ன அத்தனை பகுதிகள் பக்கமும்  

இன்று சிங்களவர்கள் எல்லைக்காணிக்களுக்குள் ஏன் வருகிறார்கள் அரசாங்கமும் குடியேற்றுக்கிறது என பாருங்கள் உதாரணம் திரிகோணமலையிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை

நாளை வவுனியாவிலிருந்து வடக்கும் பக்கம் நகரலாம் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2021 at 11:17, குமாரசாமி said:

ஈழத்தமிழர் பற்றிய உண்மையான வரலாறுகள்/பிரச்சனைகள் எனக்கு தெரியும் போது ஏன் பிள்ளைகளை வைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்?
சாந்தி அக்காவுக்கு காமெடி கூடிப்போச்சுது...😂

இதென்ன கோதாரிக்கரைச்சல் கடவுளே🤔 உங்களுக்கும் எனக்கும் உண்மை வரலாறு தெரியும். 

உங்களைப் போலவும் என்னைப் போலவும் புலம்பெயர்ந்த அகதிப் பெற்றோரின் மகளின் ஆய்வு பற்றி இங்கு பேசப்படுகிறது. 

ஆக உங்களதும் எனதும் பிள்ளைகளின் தலைமுறை தான் குறித்த மாணவி. 

நீங்கள் ஏற்கனவே உங்கள் மகளாக இருந்திருந்தால் பிள்ளைக்கு புரிய வைத்து உண்மையான வரலாற்றை சொல்லியிருப்பேன் என்று எழுதியிருந்தீர்கள். 

அந்த உண்மையை உங்கள் பிள்ளைகளுக்கு உரக்கச் சொல்லி ஒரு ஆய்வை நடத்தினால் இனி வரும் மாணவர்கள் பயன்பெறக்கூடுமென்று தான் கேட்டேன். 🙄

 

20 hours ago, goshan_che said:

தமிழினி அக்கா எழுதி சென்றுள்ளாவே?

அது தமிழினி அக்கா எழுதவில்லை வேறு யாரோ எழுதி எங்கள் போராட்டத்தை விமர்சனம் செய்யப்பட்டதென ஊரெல்லாம் நடந்த கலவரம் உங்களுக்குத் தெரியாது போல. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, shanthy said:

அது தமிழினி அக்கா எழுதவில்லை வேறு யாரோ எழுதி எங்கள் போராட்டத்தை விமர்சனம் செய்யப்பட்டதென ஊரெல்லாம் நடந்த கலவரம் உங்களுக்குத் தெரியாது போல. 

தெரியும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

தெரியும். 

நல்ல காலம் தப்பீட்டியள்😅

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

புத்தன், உங்கள் முதல் பந்தியில் தமிழர்களின் தாயகக் கனவும் புலிகளின் தனிநாட்டுக் கனவும் வேறு  வேறானவை என்று சொல்வதன் மூலம் தமிழர்கள் தமிழீழம் என்ற தனிநாட்டில் முழுநம்பிக்கை கொள்ளவில்லை கூறுகின்றீர்கள். அதாவது தமிழர்கள் தனிநாட்டுக்குக் கீழ் ஒரு தீர்வுக்குத் தயாராக இருந்தார்கள், ஆனால் புலிகள் தனிநாட்டுக் கொள்கையில் இருந்து இறங்கவில்லை. மக்களின் நிலைப்பாடும், மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களும் ஒத்த கருத்தில் இல்லாதபோது இரண்டு தரப்புமே தோல்விநோக்கித்தான் போவார்கள். “ஏதாவது தீர்வு வந்தால் போதும்” என்று பார்வையாளர்களாக இருக்கும் மனப்பான்மை அதிகரித்தது மக்கள் அரசியல் தனிநாடுதான் தீர்வு என்று நம்பும் அளவிற்கு அரசியல் மயப்படுத்தப்படாமைதான் காரணம். மறுவளமாக தனிநாடு யதார்த்தத்தில் கிட்டாது என்பதை ஏற்று அதற்குக் கீழே ஒரு தீர்வை ஏற்கும் நிலைக்கும், அதை நோக்கி சிங்களத்தை நகர்த்தும் நிலைக்கும் சமாதானக் காலத்தைப் பாவிக்கவில்லை. இதனால் இப்போது அதிகாரமில்லாத மாகாணசபை கூட தமிழர்களிடம் இல்லை. சிங்களம் அதைக்கூட இல்லாமல் செய்து மத்தியில் அதிகாரங்களைக் குவிக்கின்றது.

 

யூதர்களுக்கு இஸ்ரேல் கிடைத்தது அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லரசுகளின் ஆதரவால். தமிழர்களுக்கு இப்படி ஒரு வல்லரசைக்கூட ஆதரவாக திரட்டும் வல்லமை இல்லை. ஏன் குறைந்த பட்சம் உரிமைகளுக்காக போராடும் பிற உலக இனங்களின் ஆதரவைக்கூட திரட்டமுனைவதில்லை. இலண்டனின் பலஸ்த்தீனியர்கள், பர்மியர்கள் போல பல இனங்கள் அடிக்கடி போராட்டங்கள் நடத்துவர். அதில் தமிழர்கள் கலந்துகொள்வதேயில்லை. இப்படி ஒடுக்கப்படும் இனங்களோடு ஓரணியில் சேரமுடியாமல் எங்களை “தனித்துவமாக” கருதியனால்தான் முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்தபோது எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

 

சிங்களவர்கள் சுதந்திரத்தின் பின்பு சிறிலங்கா முழுவதும் சிங்களமயமாக வேண்டும் சிறிலங்காவில் வேற்று இனத்தவர்களுக்கு தனி பிராந்தியம் இருக்க அனுமதித்தால் அது தமது சிரிலங்கா என்ற அடையாளத்துக்கு பாதகமான சூழலை உருவாக்கும் என்ற நோக்கில் 1948 இல் இருந்தே காய் நகர்த்தி கொண்டு செல்கிறார்கள் ...வேறு இனத்தவர் வாழலாம் ஆனால் தனி பிராந்தியமாக வாழக்கூடாது என்பதில் அக்கறை காட்டி வருகிறது.

தமிழர்கள் வடக்கு கிழக்கை தமது பிரேதேசமாக வைத்திருக்க போராடிக் கொண்டு இருக்கின்றனர் .இதில் புலிகள்/மற்றும் அரசியல் தலைவர்களின்  தனிநாட்டு கோரிக்கை இதை ஓர் சர்வதேச பிரச்சனையாக இட்டு சென்றுள்ளது....
சிங்களம் மேற்குடனும் இந்தியாவுடனும் கை கோர்க்கும் வரை எமது தாயக கோட்பாடு நிலைத்து நிற்க்கும்......இன்றைய ராஜபாக்சாக்கள் தொடர்ந்து சீனா பக்கம் நின்றால் ,அவர்கள் நலன் கருதிஇந்தியா அமெரிக்கா எம்மை அரவணைக்கும்....

பலஸ்தீனர்கள்,பர்மனியர்களின் போராட்ட்டதில் பங்கு கொள்வதில்லை என்ற குற்றசாட்டு வைத்துள்ளீர்கள்.....பலஸ்தீனரின் போராட்டத்தில் எவ்வளவு சக்தி வாய்ந்த நாடுகள் ஆதரவாக இருந்தும் ஒன்றும் பண்ண முடியவில்லை......தெரு ஊர்வலங்களை விட ஐ.நா....ஐரோப்பிய நாடுகளின் மையம் போன்றவற்றின் செல்வாக்கு அதிகம் என்பதை நீங்கள் தற்பொழுது அறிந்திருப்பீர்கள் என் நம்புகிறேன்...

ஒர் அறையில் குறைந்தது 50 பேர் இருந்து கியுபா புரட்சி,பலஸ்தீனம்,கஸ்மீர் விடுதலை,ஈழ விடுதலைகளை பேசுவதால் எந்த பிரயோசனமும் இல்லை...இன்றைய காலகட்டத்தில் ....

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

பலஸ்தீனர்கள்,பர்மனியர்களின் போராட்ட்டதில் பங்கு கொள்வதில்லை என்ற குற்றசாட்டு வைத்துள்ளீர்கள்.....பலஸ்தீனரின் போராட்டத்தில் எவ்வளவு சக்தி வாய்ந்த நாடுகள் ஆதரவாக இருந்தும் ஒன்றும் பண்ண முடியவில்லை......தெரு ஊர்வலங்களை விட ஐ.நா....ஐரோப்பிய நாடுகளின் மையம் போன்றவற்றின் செல்வாக்கு அதிகம் என்பதை நீங்கள் தற்பொழுது அறிந்திருப்பீர்கள் என் நம்புகிறேன்...

உண்மையில் இதையும் செய்யணும் செய்தல் நல்லது

ஆனால் அதை யார் செய்வது??

ஒருவரையே கே காட்டிவிட்டு கேள்வி மட்டும் கேட்டதன் பயனை தான் இப்போது அனுபவிக்கின்றோம்.

 

Link to comment
Share on other sites

10 hours ago, விசுகு said:

உண்மையில் இதையும் செய்யணும் செய்தல் நல்லது

ஆனால் அதை யார் செய்வது??

ஒருவரையே கே காட்டிவிட்டு கேள்வி மட்டும் கேட்டதன் பயனை தான் இப்போது அனுபவிக்கின்றோம்.

 

ஒருவரைக் கையைக் காட்டி விட்டு ஏனையோர் ஒதுங்கியதா அல்லது முன் வந்து ஆலோசனை, விமர்சனம் வைக்க முற்பட்டோர் ஒதுக்கப் பட்டு அல்லது கொல்லப் பட்டதா?

எது இன்றைய நிலைக்கும் காரணம் என நினைக்கிறீர்கள்? (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!- ஒரு வரியை அசால்ட்டாகத் துக்கிப் போட்டு தவறான வரலாற்றைப் பரப்பக் கூடாது!)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

பலஸ்தீனர்கள்,பர்மனியர்களின் போராட்ட்டதில் பங்கு கொள்வதில்லை என்ற குற்றசாட்டு வைத்துள்ளீர்கள்.....பலஸ்தீனரின் போராட்டத்தில் எவ்வளவு சக்தி வாய்ந்த நாடுகள் ஆதரவாக இருந்தும் ஒன்றும் பண்ண முடியவில்லை......தெரு ஊர்வலங்களை விட ஐ.நா....ஐரோப்பிய நாடுகளின் மையம் போன்றவற்றின் செல்வாக்கு அதிகம் என்பதை நீங்கள் தற்பொழுது அறிந்திருப்பீர்கள் என் நம்புகிறேன்...

பலஸ்தீனியர்களுக்கு தீர்வு கிடைக்காததற்குக் காரணம் அமெரிக்க என்ற வல்லரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதும், தொடர்ந்தும் இஸ்ரேலின் பாதுகாப்புக்காக பெருந்தொகையை ஒதுக்கீடு செய்வதும்தான். மேலும் அரபு நாடுகள் பலஸ்தீனிய விடயத்தில் ஒற்றுமையாக அழுத்தம் கொடுக்கும் நிலையிலும் இல்லை என்பதும் காரணம்.

மக்களின் போராட்டங்கள், லொபியிங் எல்லாம் தேவை. மக்களின் போராட்டம் இல்லாவிட்டால், ஆதரவு இல்லை என்று பெரிய நாடுகள் அக்கறை காட்டாமல் விடும். தெருவில் இறங்காமல் மாற்றங்கள் மூடிய அறைக்குள் வந்துவிடாது. 

நம்மவர்கள் தெருவில் பெருமளவு இறங்காமல் வெறும் அடையாள ஆர்ப்பாட்டங்களை செய்வதும், ஜெனீவாவில் வருடாவரும் வடையும், ரீயும் குடிக்கப்போவதும் தொடருமானால், சிங்களம் தான் நினைத்த மாதிரியான காரியங்களில் தொடர்ந்தும் ஈடுபடும். ஐரோப்பிய ஒன்றிய ஜிபிஎஸ் பிளஸ் சலுகை நிறுத்தம் எல்லாவற்றையும் வெட்டியாடும்போது எமக்கு  விளங்கும்.

 

13 hours ago, putthan said:

ஒர் அறையில் குறைந்தது 50 பேர் இருந்து கியுபா புரட்சி,பலஸ்தீனம்,கஸ்மீர் விடுதலை,ஈழ விடுதலைகளை பேசுவதால் எந்த பிரயோசனமும் இல்லை...இன்றைய காலகட்டத்தில் ....

ஆம். தெருவில் இறங்காமல் கதைத்துக்கொண்டிருந்தால் ஒரு பிரயோசனமும் இல்லை. ஆனால் இடதுசாரிகள் 80 களுக்கு முன்னர் முக்கிய மாற்றங்களை தாயகத்தில் போராடி ஏற்படுத்தியவர்கள். அவர்களால்தான் சாதி ஒடுக்குமுறைக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, இரட்டைக் குவளைமுறை, கோயில் அனுமதி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கிடைத்தது. பின்னர் இயக்கங்கள் இடதுசாரி சிந்தனை முறையில் தோன்றி, வலதுசாரிகளாக மாறி இடதுசாரிகளை இல்லாமல் ஆக்கினார்கள் அல்லது மெளனிக்கக் செய்தார்கள். அதனால்தான் அவர்கள் இப்போது ஒரு அறையில் குழுமி தங்களுக்குள் பேசிக்கொள்கின்றார்கள்.

 

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ஒருவரைக் கையைக் காட்டி விட்டு ஏனையோர் ஒதுங்கியதா அல்லது முன் வந்து ஆலோசனை, விமர்சனம் வைக்க முற்பட்டோர் ஒதுக்கப் பட்டு அல்லது கொல்லப் பட்டதா?

எது இன்றைய நிலைக்கும் காரணம் என நினைக்கிறீர்கள்? (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!- ஒரு வரியை அசால்ட்டாகத் துக்கிப் போட்டு தவறான வரலாற்றைப் பரப்பக் கூடாது!)

நீங்கள் தொடர்ந்து முட்டையில் உரோமம் புடிங்கி கொண்டே இருங்க.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2021 at 11:57, தனிக்காட்டு ராஜா said:

தற்போது  சிங்களவர்கள் இலங்கையின் விலைவாசிக்கும் வீடுகளின் வாடகைக்கும்  நகரவாழ்கையில் இருந்து கிராமப்புற , காட்டுப்பகுதிகளுக்குள் நுழைகிறார்கள்  ஆனால் அவர்கள் வெளியேறிய பகுதிகளை தமிழர்கள் விலைகொடுத்து வாங்குகிறார்கள் விசாரியுங்கள்  தாத்தா நீங்கள் சொன்ன அத்தனை பகுதிகள் பக்கமும்  

இன்று சிங்களவர்கள் எல்லைக்காணிக்களுக்குள் ஏன் வருகிறார்கள் அரசாங்கமும் குடியேற்றுக்கிறது என பாருங்கள் உதாரணம் திரிகோணமலையிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை

நாளை வவுனியாவிலிருந்து வடக்கும் பக்கம் நகரலாம் 

இது நடக்கும் நடக்கும் என்று நான் இங்கு திரும்ப திரும்ப எழுதுகிறேன் 
நடக்கிறது என்று நீங்கள் உறுதி செய்துகொண்டு இருக்கிறீர்கள் 

இது இன ரீதியான நகர்வு அல்ல 
வர்க்க ரீதியான நகர்வு 

பணக்கார வர்க்கம் தமிழரில் சரி சிங்களவரிலும் சரி 
ஏழைகளை ஏய்த்து பிழைத்தாவது தப்பி கொள்வார்கள் 

இருப்பக்கமும் ஏழைகள் மிதிக்கப்படுவார்கள் என்பது எதிர் பாராத ஒன்று அல்ல 
எம் கண் முன்னே நடக்க போகும் ஒன்று 

ஆயுத போர் வந்தபோது வசதியான தமிழர்கள் விமானம் ஏறினார்கள் 
ஏழைகள்தான் புலிகள் ஆனார்கள் ... சிங்கள இனவெறியர்களின் அனைத்து குண்டுகளையும் 
தலையில் தாங்கினானார்கள் .... இப்போ முன்னாள் போராளிகள் வீதிகளில் நிற்கிறார்கள் 

பணக்கார தமிழர்கள் உல்லாச விடுமுறைக்கு ஏஸி ரூம் புக் பண்ணி வந்து போகிறார்கள் 
அவர்கள் பிள்ளைகள் பேஸ்புக்கில் பியூடிபியுள் கோக்கனட் ட்ரீ என்று போட்டொ போடுகிறார்கள் 

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இது நடக்கும் நடக்கும் என்று நான் இங்கு திரும்ப திரும்ப எழுதுகிறேன் 
நடக்கிறது என்று நீங்கள் உறுதி செய்துகொண்டு இருக்கிறீர்கள் 

இது இன ரீதியான நகர்வு அல்ல 
வர்க்க ரீதியான நகர்வு 

பணக்கார வர்க்கம் தமிழரில் சரி சிங்களவரிலும் சரி 
ஏழைகளை ஏய்த்து பிழைத்தாவது தப்பி கொள்வார்கள் 

இருப்பக்கமும் ஏழைகள் மிதிக்கப்படுவார்கள் என்பது எதிர் பாராத ஒன்று அல்ல 
எம் கண் முன்னே நடக்க போகும் ஒன்று 

ஆயுத போர் வந்தபோது வசதியான தமிழர்கள் விமானம் ஏறினார்கள் 
ஏழைகள்தான் புலிகள் ஆனார்கள் ... சிங்கள இனவெறியர்களின் அனைத்து குண்டுகளையும் 
தலையில் தாங்கினானார்கள் .... இப்போ முன்னாள் போராளிகள் வீதிகளில் நிற்கிறார்கள் 

பணக்கார தமிழர்கள் உல்லாச விடுமுறைக்கு ஏஸி ரூம் புக் பண்ணி வந்து போகிறார்கள் 
அவர்கள் பிள்ளைகள் பேஸ்புக்கில் பியூடிபியுள் கோக்கனட் ட்ரீ என்று போட்டொ போடுகிறார்கள் 

 

ஐயா

இவ்வுலகில்

ஒரு மரத்தை  வெட்டினால் இன்னொரு  மரத்தையாவது நீ நடணும்  எனும்  கோட்பாடு வளர்ந்து விட்டாலும்

சிங்கம்  ஆட்டை சாப்பிடுவது விதி என்பதும்  இருக்கத்தானே  செய்கிறது

எனவே ..............????

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

 

 

ஆம். தெருவில் இறங்காமல் கதைத்துக்கொண்டிருந்தால் ஒரு பிரயோசனமும் இல்லை. ஆனால் இடதுசாரிகள் 80 களுக்கு முன்னர் முக்கிய மாற்றங்களை தாயகத்தில் போராடி ஏற்படுத்தியவர்கள். அவர்களால்தான் சாதி ஒடுக்குமுறைக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, இரட்டைக் குவளைமுறை, கோயில் அனுமதி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கிடைத்தது. பின்னர் இயக்கங்கள் இடதுசாரி சிந்தனை முறையில் தோன்றி, வலதுசாரிகளாக மாறி இடதுசாரிகளை இல்லாமல் ஆக்கினார்கள் அல்லது மெளனிக்கக் செய்தார்கள். அதனால்தான் அவர்கள் இப்போது ஒரு அறையில் குழுமி தங்களுக்குள் பேசிக்கொள்கின்றார்கள்.

 

 

பாராளுமன்ற இடதுசாரிகளாக மாறி பொக்கட்டுக்குள்ள பணத்தை போடுயினம் .....அதற்கு ஏற்ற வகையில் அவர்களின் தலைவரும் முன்னாள் இடதுசாரி  பின்னாளில் முதல் பணக்காரன் ....🤣🤣🤣

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By கிருபன்
   இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும்
   தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   
   இலங்கையின் சீனாவின் ஆதிக்கம் இப்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. இலங்கையின் தற்போதைய கவலைக்கிடமான நிலைக்கு சீனாவே காரணம் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள்.   
   இந்தியாவை மீறி, இலங்கையில் அதிகரிக்கும் சீனா ஆதிக்கம் தமிழர்களுக்கு ஆபத்தானது என நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.   
   இலங்கையை இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ தாரைவார்த்தாலும் சீனாவை இலங்கையில் அனுமதிக்கக்கூடாது என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்.   
   இவ்வாறு, சீனா குறித்த பல கருத்துகளை நாளும் நாம் கேட்கவும் வாசிக்கவும் கிடைக்கிறது. இங்கு மூன்று கேள்விகள் எழுகின்றன.   
   முதலாவது, நாம் சீனாவை விளங்கி இருக்கிறோமா?   
   இரண்டாவது, ஏற்கெனவே இருக்கின்ற சட்டகங்களின் வழி, சீனாவை விளங்கிக் கொள்ளவியலுமா?   
   மூன்றாவது, சீனாவுக்கு நாம் எவ்வாறு எதை எப்போது வினையாற்றுவது?  
   இந்த மூன்று கேள்விகளையும் சற்று விரிவாக, பகுதிகளாக ஆராயும் முயற்சியின் தொடக்கமிது.   
   இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் குறித்து, இலங்கையின் முதன்மையான அரசறிவியலாளரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட, “இலங்கையில் சீனாவின் அதிகரிக்கும் கரிசனை, அரசியலை விடப் பொருளாதார நோக்கங்களை அதிகமாகக் கொண்டது. சீனா பொருளாதார தர்க்கத்தின் (economic logic) அடிப்படையிலேயே செயற்படுகிறது. அதனடிப்படையில் அது இலங்கையில் அதிகளவான பொருளாதார மூலதனத்தை விரும்புகிறது. இலங்கையர்கள், அமெரிக்க கண்ணுடன் சீனாவைப் பார்க்கக்கூடாது. சீனாவை வில்லனாக்குவது அதிகளவில் இடம்பெறுகிறது. சீனாவை வில்லனாகச் சித்திரிப்பது அமெரிக்காவின் புதிய கெடுபிடிப்போரின் வெளிப்பாடு. சீனாவுடனான இந்தியாவின் முரண்பாடு இதன் ஒரு பகுதியே” என்று கூறுகின்றார்.   
   பேராசிரியர் உயன்கொட, சில முக்கியமானதும் ஆழமானதுமான செய்திகளை இங்கே சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.   
   மாஓ சேதுங் தனது வழிகாட்டலில் முன்னகர்த்திய சீனாவுக்கும் அவரது மறைவுக்குப் பின்னர், டென்சியோபிங் முன்னெடுத்த முதலாளித்துவத்தை நோக்கிய பொருளாதார அரசியல் மாதிரியில் அமைந்த சீனாவுக்கும் வேறுபாடுகள் அதிகம். இந்த வேறுபாட்டை உணராதவர்கள் தான், இன்னமும் ‘சோசலிச சீனா’ என்று சொல்கிறார்கள்.   
   சீனாவின் வரலாற்றின் முக்கிய அம்சம், 1949ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட புரட்சியாகும். உலக வரலாற்றில் ரஷ்ய புரட்சிக்குப் பின்னரான அதிமுக்கிய அரசியல் நிகழ்வு சீனப் புரட்சியாகும்.   
   1949ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அந்நிய ஆட்சியைத் தூக்கியெறித்து நிகழ்த்திய சீன விடுதலைப் பிரகடனம், சீனாவின் விடுதலையை மட்டுமன்றிக் கொலனி ஆட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் வருவதற்கிருந்த விடுதலை எழுச்சிகளையும் எடுத்துரைப்பதாக அமைந்தது.   
   சீனா பற்றிய தகவல் திரிபு, இந்தியாவில் 1961ஆம் ஆண்டு முதல் தீவிரமாக இருந்து வந்துள்ளது. சீனாவிலிருந்து வெளிவருகிற நூல்கள், சஞ்சிகைகள் மீது தடை இருந்து வந்துள்ளது. இவை, அண்மைக் காலங்களில் கணிசமான நெகிழ்வுக்கு உட்பட்டாலும் சீனாவைப் பகைமையாக நோக்குகிற போக்குக்குப் பின்னால், இந்திய மேலாதிக்க நிறுவனமும் இப்போது அமெரிக்காவுடனான நெருக்கமும் பெரிய காரணங்களாக உள்ளன.   
   இந்தப் போக்கு, ஈழத்தில் தமிழர்கள் மத்தியிலும் இருந்தது. இந்தியாவின் கண்களின் ஊடாக, சீனாவைப் பார்க்கும் போக்கின் விளைவு இது. ஈழத்தில் தமிழ்த் தேசியவாதிகளிடையே, சீன எதிர்ப்புக்கு முக்கியமான காரணம் இத்தேசியவாதிகளின் சமூகநீதி மறுப்பையும் உயர்வர்க்க நடைமுறைகளையும் எதிர்த்தும் அம்பலப்படுத்தியும் வந்தவர்கள் இடதுசாரிகளாவர்.   
   கம்யூனிஸ்ட் கட்சியும் சமசமாஜக் கட்சியும் சீரழிந்து போன பிறகு, ‘சீன சார்பு’ கம்யூனிஸ்ட்டுகள் எனப்பட்டோரே, இலங்கையின் வடக்கில் காத்திரமான இடதுசாரிகளாக இருந்தனர். இதுவே தமிழ்த் தேசியவாதிகளுக்கு மிகுந்த சங்கடத்தைக் கொடுத்தது. 1960கள் தொட்டு, தமிழர்களிடையே சீனவிரோதம் தீவிரமாகப் பரப்பப்பட்டது.   
   இதில் கவனிக்கத்தக்க விடயமொன்றுண்டு. சீனா ஏகாதிபத்திய எதிர்ப்பின் அதி முக்கியமான சக்தியாக இருந்த 1960களிலும் 1970களிலும் தமிழ்த் தேசியவாதிகளின் சீன எதிர்ப்பு, மிகத் தீவிரமாக இருந்தது. அந்த எதிர்ப்பை நாம், அவர்களது ஏகாதிபத்தியச் சார்பான பார்வையிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது. அது, உலகின் சகல கொலனிய எதிர்ப்புப் போராட்டங்களிலும் அக்கறையின்மையாக வெளிப்பட்டது.   
   அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான போரட்டங்களைக் கம்யூனிச வன்முறையாகவும் அமைதியைக் குலைக்கும் கலவரங்களாகவும் அது காண முற்பட்டது. உலகின் எந்த மூலையில் நடந்த விடுதலைப் போராட்டத்தையும் ஆதரிக்க முன்வராத தமிழ்த் தேசியவாதம் சீனாவிலும் சோவியத் யூனியனிலும் கிளறிவிடப்பட்ட கலவரங்களை மெச்சத்தவறியதில்லை. உலகின் பல நாடுகளில் நடந்த விடுதலைப்போராட்டங்களை அங்கிகரிக்காத ஆதரவு வழங்காத வரலாறு தமிழ்த் தேசியவாதிகளின் வரலாறு.   
   சீனாவை விளங்குவதற்கு சீனாவின் அயலுறவுக் கொள்கைகளை விளங்குவது பிரதானமானது. அதன்வழியே சீனாவின் நடத்தையை விளங்கிக் கொள்ள முடியும். சீனாவின் அயலறலுக் கொள்கை சீனப் புரட்சியைத் தொடர்ந்து 1950களில் ஐந்து அடிப்படைகளில் உருவாக்கப்பட்டது. 
   1.நாடுகளது இறைமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பரஸ்பரம் மதித்தல்
   2. பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை 
   3. ஒருநாடு மற்றதன் உள் அலுவல்களில் தலையிடாமை 
   4. சமத்துவமும் பரஸ்பர நன்மையும் 
   5. சமாதானமாக உடனிருத்தல்   
   இவையே சீனாவின் அயலுறவுக் கொள்கைகளைக் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. இந்த அணுகுமுறை, மேற்குலக நாடுகளினதும் இந்தியாவினதும் அணுகுமுறையிலிருந்து மிகவும் வேறுபட்டது.   
   இன்று, சீனா சோசலிசத்திலிருந்து நகர்ந்துவிட்டபோதும் இதன் அம்சங்களே இன்றும் சீனாவை வழிநடத்துகின்றன. இவ்வடிப்படைகளே கெடுபிடிப்போர் உச்சமடையத் தொடங்கியதன் பின்னர், உருவான மூன்றாவது அணியான அணிசேரா நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச உறவுகளுக்கான அடிப்படையாயிற்று.  
   இங்கு கவனிக்க வேண்டியது, சீனாவின் அயல் உறவுகளின் தன்மை கடந்த கால் நூற்றாண்டுக்குள் சீனாவின் பொருளாதாரம் கண்ட பெரும் மாற்றத்தாலும் அதன் விளைவான பெரிய ஆனால் சமனற்ற வளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. 
   சீனா இன்று எண்ணெய் உட்பட பல்வேறு மூலப் பெருட்களின் உற்பத்தியின் மீது தங்கியுள்ளது. அதை விடச், சீனாவின் வணிக நிறுவனங்கள் மூன்றாமுலக நாடுகளில் பெருமளவில் அளவில் முதலீடுகளைச் செய்துள்ளன. எனவே சீனாவுக்குத் தனது அயல் வணிகத்தையும் முதலீடுகளையும் காப்பாற்றும் ஒரு நிர்ப்பந்தம் உள்ளது. இன்றுவரை சீனா இராணுவ முறையில் அதைக் கையாள முற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இவ்வகையில் அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கையில் இருந்து சீனா வேறுபட்டு நிற்கிறது.   
   இலங்கையுடனான சீனாவின் உறவு மிக நீண்டதும் முக்கியமானதுமாகும். கொரியப் போரின் போது அமெரிக்கா சீனாவுக்கு எதிரான வணிகத் தடையை விதித்திருந்த நிலையில் அதை மீறி, இலங்கையின் அன்றைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க சீனாவுடன் ‘அரிசி- இறப்பர் வர்த்தக உடன்படிக்கை’ ஒன்றை ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 1952ஆம் ஆண்டு செய்து கொண்டது. 
   இலங்கைக்கு மிகவும் சாதகமான முறையில் சீனா வாங்கும் விலையை உலகச் சந்தையை விடக் கூடுதலாகவும் இலங்கை வாங்கும் விலையைக் குறைவாகவும் நிர்ணயித்தது. இதன் பலன்களை இருபதாண்டுகளுக்கு மேலாக இலங்கை அனுபவித்தது. இதுவே இலங்கை-சீன நட்புறவின் அத்திவாரமாகியது. இன்றுவரை இலங்கை செய்துகொண்ட வர்த்தக உடன்படிக்கைகளில் இலங்கைக்கு மிகுந்த பயன்விளைவித்ததும் நீண்டகாலம் நிலைத்ததுமான உடன்படிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 
   இந்த உடன்படிக்கையையொட்டி நிகழ்ந்த நிகழ்வுகள் இலங்கை வரலாற்றை அறிய விரும்புபவர்களுக்கு மிகவும் முக்கியமானது. எஸ்.பி. அமரசிங்கம் எழுதிய ‘Rice and Rubber: The Story of China-Ceylon Trade’ இது குறித்த விரிவான தகவல்களைத் தருகிறது.   
   (அடுத்தவாரம் தொடரும்)
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கையில்-சீனா-விளங்கிக்-கொள்ளலும்-வினையாற்றலும்/91-276240
    
    
    
    
  • By கிருபன்
   ஈழத்தமிழரின் இன்றைய சவால்: நாம் மனந்திறந்து பேசுவது எப்போது?
   தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
   இன்று, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்ன? என்ற கேள்விக்கான ஒருமித்த பதிலை, ஈழத்தமிழ்ச் சமூகத்தால் சொல்லிவிட முடியாது. 
   அதேபோலவே, ஈழத்தமிழர் என்ற வரையறைக்குள், யாரெல்லாம் அடங்குகின்றார்கள் என்பதற்கும் ஒருமித்த பதில் இல்லை. 
   யாழ்ப்பாணத் தமிழர்கள், இலங்கையில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஈழத்தமிழர்களாகக் கருத விரும்புகிறார்கள். ஆனால், ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்கள், தங்களை ஈழத்தமிழர்களாக அடையாளம் காட்ட விரும்புகிறார்களா என்ற கேள்வி இயல்பானது. அகஒடுக்குமுறைகள் நிரம்பிக் கிடக்கின்ற சமூகமொன்றில், புறஒடுக்குமுறையின் காரணமாக, அகஒடுக்குமுறைகளை மிகக் கொடூரமான முறையில், அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்த ஒரு சமூகம் எம்முடையது என்ற உண்மையை ஏற்க, நாம் இப்போதாவது தயாராக இருக்கிறோமா?
   இலங்கையில் வாழும் தமிழரின் கடந்த ஒரு நூற்றாண்டுகால வரலாற்றின் இருண்ட பக்கங்களைப் பேசவோ, சுயவிமர்சனம் செய்யவோ நாம் தயாராக இல்லாதவரை, ‘தமிழர் ஒற்றுமை’ என்ற கோஷம் வலுவற்றது. 
   பொன்னம்பலம் இராமநாதன், ஆறுமுகநாவலர் ஆகியோரில் தொடங்கி, வேலுப்பிள்ளை பிரபாகரன் வரை இதயசுத்தியோடு நாம் சுயவிமர்சனம் செய்தாக வேண்டும். ஒரு ஜனநாயகப் பண்புள்ள சமூகத்தின் முக்கியமான குறிகாட்டி அது. தந்தையாகட்டும் தமையனாகட்டும் தம்பியாகட்டும், எவருமே கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல!

   கடந்த ஒரு நூற்றாண்டில், தமிழ்த் தேசியவாதம் பல்வேறு வடிவங்களை எடுத்தாலும், அது வலியுறுத்தி வந்த நலன்கள் வசதிபடைத்த, சமூகத்தின் மேல் நிலையிலிருந்து வந்தவர்களினதும் மேல் நிலையாக்கம் பெற்றவர்களினதும் நலன்களாகவே இருந்து வந்துள்ளன. 
   தமிழ் மக்கள், ஒடுக்கப்பட்ட சனங்கள் என்பதை, நமது தலைமைகள் என்றுமே விளங்கிக் கொண்டதில்லை. தமிழ்த் தலைமைகள், இன விடுதலையைப் பற்றி பேசியிருக்கிறார்கள். ஆனால், அது முழுச் சமூகத்தினதும் விடுதலையைப் பற்றியதாக இருந்ததில்லை. 
   உண்மையில், தமிழ்ச் சமூகத்துக்குள் இருந்து வரும் பல சமூகக் கொடுமைகளையும் அநீதிகளையும் பற்றிப் பேசுவது, தமிழரின் ஒற்றுமைக்குக் கேடானது என்று தான் நமக்குச் சொல்லப்பட்டு வந்துள்ளது. இன்னொரு புறம், ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற தேசிய கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அந்தத் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் பொதுவாக, தமிழ் மொழியை விட, வேறெந்தச் சமூக அரசியல் அடையாளமும் முன்வைக்கப்படவில்லை. உண்மையில், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட சமஷ்டிக் கோரிக்கை, அந்த மக்களின் ஏகப் பெரும்பான்மையினரின் நிலையைப் பற்றிக் கவனம்காட்டவில்லை. 
   1956இல், ‘சிங்களமே அரசகரும மொழி’ என்ற அரசியல் கோஷம் எழுந்ததையொட்டி, தமிழ்த் தேசிய அரசியல் வெறும் ‘மொழி உணர்ச்சி’ அரசியலாகியது. தமிழ் மக்களின் இருப்பை மிரட்டலுக்கு உட்படுத்திய திட்டமிட்ட குடியேற்றங்கள் பற்றிப் பேசப்பட்டது. ஆனால், நடைமுறையில் பயனுற எதுவுமே செய்யப்படவில்லை. அதற்கான முக்கிய காரணங்களில் சில, குடாநாட்டின் சமூக அமைப்புடன் தொடர்புடையவை. 
   தென்னிலங்கையில் ஒரிரு நகரங்களில் (குறிப்பாகக் கொழும்பில்) வாழ்ந்துவந்த வசதிபடைத்த தமிழர்களைப் பற்றிய கவலையை விட்டால், குடாநாட்டுக்கு  வெளியே வேறெந்த அரசியல் அக்கறையும் அற்றதாகவே, தமிழ்த் தேசியவாதச் சிந்தனை தோற்றம் பெற்றது. 
   அது, ‘தமிழீழம்’ என்றோ தேசிய சுயநிர்ணய உரிமை என்றோ, தன்னை அறிவிக்காது தமிழினம், தமிழ் மக்கள் என்று பேசிய காலத்திலும், அதன் அரசியல் யாழ்ப்பாணக் குடாநாட்டை மையப்படுத்தியதாகவே இருந்தது. மொழியைப் பற்றிப் பேசப்பட்டாலும், தொடக்க நிலையில் சைவ-வேளாள உயர் வர்க்க நலன்களை விட, வேறெதற்கும் அரசியல் முக்கியத்துவம் இருக்கவில்லை. 
   விலக்கான ஒரு போக்காக, யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் இருந்தது. அது, ஒரு புறம் இலங்கை என்ற அடிப்படையிலும் இன்னொரு புறம், தமிழ்ச் சமூகத்துக்குள் சமூக அநீதியைப் பற்றியும் பேசியது. முழு இலங்கையும் கொலனிய ஆட்சியில் இருந்து விடுதலை என்ற கருத்தை, முதன் முதலில் முன்வைத்த அமைப்பு என்ற பெருமையும் அதற்குரியது. அதன் வீழ்ச்சியும் அதனிடத்தில் தமிழ் காங்கிரஸின் வருகையும் பழைமைவாத அரசியலின் வெற்றியை அடையாளப்படுத்தின. 
   தமிழரசுக் கட்சியின் வருகை, யாழ்ப்பாண மையப்பட்ட அரசியலிருந்து நாடளாவிய அரசியலை நோக்கிய நகர்வு என்பது, வெறும் மாயை என்பது 1956க்கும் பின்பு வேகமாகவே தெளிவாகியது. 
   தமிழ் மக்கள் ஒரு சிறுபான்மைத் தேசிய இனம் என்பதுடன், அவர்களது விடுதலையும் விமோசனமும் பல்வேறு தளங்களில் ஒற்றுமைப்பட்ட போராட்டங்களை வேண்டி நின்றன என்ற உண்மை, எந்தத் தமிழ் தலைமைக்கும் உறைக்கவில்லை. 

   சமஷ்டி வேண்டி நின்ற போதும் தமிழீழம் வேண்டி நின்ற போதும், இன்று அயல் நாடுகளின் தயவிலே தான் தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுத் தர இயலும் என்று புலம்புகிற நிலையிலும், தமிழ் மக்கள் தமது விடுதலையை வெல்ல யாருடன், எந்த அடிப்படையில் ஐக்கியப்படுவது என்பதைப் பற்றித் தமிழ்த் தலைவர்கள் பேச மறுத்தே வந்துள்ளனர். 
   முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழருக்கும் தலைமைதாங்கி வழிநடத்தும் தகைமையோ உரிமையோ, தமிழ்த் தேசியவாதிகளுக்கு அன்றும் இல்லை; இனியும் இல்லை. ஆனாலும், இன்றும் கூட, முஸ்லிம்களினதும் மலையகத் தமிழரினதும் தனித்துவத்தையும் தேசிய இன அடையாளத்தையும் ஏற்க மறுக்கிற போக்குத் தொடர்கிறது.  
   அச்சமூகங்களைத் தேசிய இனங்களாக ஏற்க ஆயத்தமாக உள்ளவர்கள் இடையிலும், அவர்களது விடுதலையையும் தமிழ் மக்களுடைய விடுதலையையும் எப்படி இணைப்பது என்ற சிந்தனை எதுவும் இல்லை. இந்த இயலாமை, இத் தேசிய இனங்கள் இரண்டும், பயனற்றதும் சுயநலமும் கொண்ட  தலைமைகளின் ஆதிக்கத்தில் தொடர்ந்தும் இருக்கவே உதவியுள்ளன. 
   தமிழ் மக்களின் ஒன்றுமையைப் பற்றிப் பேசப்படுகிறது. ஆனால், தமிழ் மக்கள் நடுவே பண்பாட்டின் பேராலும் மரபின் பேராலும் பெண்கள் மீதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீதும் ஆதிக்கமும் அடக்குமுறையும் தொடருகின்றன. 
   அவற்றைப் பற்றிப் பேசுவற்குத் தடை விதிப்பதன் மூலம், அவை இல்லாமல் போய்விட மாட்டா. “அதைப் பேசி, ஒற்றுமையைக் குலைக்காதீர்கள்” என்ற குரல், புலம்பெயர்ந்தோரிடமிருந்தே இன்று அதிகமாக ஒலிக்கிறது. அதன் நோக்கம் அக்கறையல்ல; உள்ஒடுக்குமுறையைத் தொடர்வதில் உள்ள விருப்பின்றி வேறெதுவாக இருந்துவிட முடியும்.
   சில புலம்பெயர் குரல்களில் தெரிகின்ற காலாவதியான தன்மை, நகைப்பையே ஏற்படுத்துகிறது. போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், ‘வட்டுக்கோட்டை முதல் முள்ளிவாய்க்கால் வரை’யான வரலாற்றை மனந்திறந்து பேசுவதற்கு, எல்லாத் தமிழ்த் தேசியவாதிகளும் அஞ்சுகின்றனர். அவ்வாறு பேசுவது, தமிழ்த் தேசியவாத அரசியலின் 70 ஆண்டுகால வெறுமையை அம்பலப்படுத்துமென அவர்கள் அறிவார்கள். 
   தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைத் தேடும் ஆற்றலின்மையை, மக்களிடமிருந்து மறைக்கவும் தமிழ் மக்களின் அரசியலைத் தமது குறுகிய நலன்சார் வரையறைகளுக்குள் கட்டுப்படுத்தவும், பல்வேறு நாடகங்கள் தொடர்ந்து அரங்கேறுகின்றன. ஒரு பகுதியினர் போர்க்குற்ற விசாரணைகளை மிக வலியுறுத்துகின்றனர். இன்னொரு பகுதியினர் அதை அடக்கி வாசித்தாலும், விசாரணைகளின் தேவையை வசதி கருதிப் பேசுகின்றனர். 
   ஒரு பகுதி, தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் என்று இரு தேச அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கோருகின்றனர். இவர்கள் வெளிப்படையாய் பிரிவினையை வலியுறுத்தத் தயங்கினாலும், அவர்களுடைய சைகைகள் யாவும் விடுதலைப் புலிகளின் அரசியலைத் தொடரும் முனைப்பைத் தமிழ் இளைஞர்களுக்கும் அதிருப்தியாளர்களுக்கும் மட்டுமன்றித் தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கும் உணர்த்துகின்றன. 
   தமிழ் மக்களுக்கான ஆபத்து, எல்லாத் தரப்புகளிடம் இருந்தும் காத்திருக்கின்றது என்பதுதான் அவலம். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தம்மைச் சொல்லும் எதிர்த்தரப்பும் அரசாங்கத்தில் அங்கம் வசிக்கும் ஆளும்தரப்புத் தமிழ்ப் பிரதிநிதிகளும், ஏமாற்றுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வந்திருக்கிறார்கள். 
   தமிழ்ச்சமூகம் மனந்திறந்து பேசவேண்டும். அதற்கான களங்கள் அமைக்கப்பட வேண்டும். தமிழ்ச் சமூகம் என்பது, பரந்துபட்டதும் பலகுரல்கள் கொண்டதும் என்ற உண்மையை இனியாவது ஏற்போம். ‘ஒரே குரலில் பேசுவது’ என்பது சாத்தியமாகாது. “ஒரே குரலில் பேசவேண்டும்” என்று கேட்பதும் ஒருவித பாசிச மனநிலையாகும்.
   சிங்கள பௌத்த பேரினவாதம், தனது கொடுங்கரங்களால் இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களை ஒடுக்குகிறது. இதற்கு முகங்கொடுப்பது இன்று தலையாய பிரச்சினை. இதனை இலங்கையில் வாழும் சிறுபான்மைச் சமூகங்கள் இணைவதன் மூலம் எதிர்கொள்ளமுடியும். 
   அந்த இணைவை சாத்தியமாக்க இயலாதபடி, இனவாதம் அனைத்து சமூகங்களிலும் வேரூன்றி உள்ளது. சிறுபான்மைச் சமூகங்கள் தமக்குள்ளும் ஏனைய சமூகங்களுடன் மனந்திறந்த உரையாடலைச் செய்தாக வேண்டும். 
    
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஈழத்தமிழரின்-இன்றைய-சவால்-நாம்-மனந்திறந்து-பேசுவது-எப்போது/91-275844
    
  • By கிருபன்
   ஈழத்தமிழரின் தமிழக மயக்கம்: தெளியாத போதை
   தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
   ஈழத்தமிழர்களின் தமிழக மயக்கம் புதிதல்ல. கடந்த அரை நூற்றாண்டில் அது வெவ்வேறு வடிவங்களை எடுத்திருக்கிறது. தமிழகத்தின் மீதும் குறிப்பாக, தமிழக அரசியல் மீதும் வைக்கப்பட்ட நம்பிக்கைகள், தொடர்ச்சியாகப் பொய்ப்பிக்கப்பட்ட போதும், ‘சூடுகண்டாலும் அஞ்சாது, அடுப்பங்கரை நாடும் பூனை’ மனநிலையில், தொடர்ந்து நம்பிக்கை வைப்பதை இன்றும் காணுகிறோம். 
   எம்.ஜி. இராமச்சந்திரனில் தொடங்கி, சீமான் வரை, ஈழப்போராட்டத்தை சரிவர விளங்காத, அணுக இயலாத, தங்கள் சுயஅரசியலுக்குப் பயன்படுத்தியோரை நம்பி, சீரழிந்தவர்கள் ஈழத்தமிழர்கள். இன்றும் அந்தநிலை வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது. இந்தத் ‘தமிழக மயக்கம்’ வெறுமனே அரசியலுடன் மட்டுப்பட்டல்ல! 
   தமிழக மக்களிடையே உள்ள ஆதரவு, இலங்கை தமிழரது போராட்டத்துக்கு ஒரு தார்மீக ஆதரவாயிருக்கிறது என்பதில் ஐயமில்லை. அதைச் சந்தர்ப்பவாத நோக்கங்களுக்காக யாரும் பயன்படுத்துவதற்கு, இலங்கை தமிழர் உடந்தையாக இருக்கக் கூடாது. 
   போர் அதன் கோர முடிவை எட்டுகின்ற போது, தமிழகத்தில் இளம் தலைமுறையினரிடையே ஈழத்தமிழர்களுக்காக அறம்சார்ந்த தீரம்மிக்க ஆதரவு எழுந்தது. அதை மடைமாற்றுவது, இந்திய அதிகாரத்துக்கு அவசியமானது. இதற்கு சீமான் பயன்பட்டார். 
   சீமான் தமிழக இளைஞர்களின் நேசத்துக்கு உரிய திரையுலகப் பிரமுகராகத் தன்னை உயர்த்திக் கொள்ள, அவருக்கு ஈழத் தமிழரின் கண்ணீர் கைகொடுத்த அளவுக்கு, திரைப்படத் துறையில் அவருடைய ஆற்றல் கைகொடுத்திருக்கவில்லை. ஆனால், இன்று ஈழப்பிரச்சினைக்குக் காப்புரிமை வாங்கியது போல செயற்படுகிறார். அதற்குப் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வற்றாத நிதி உதவுகிறது. 
   ஈழத்தமிழர்களை, விடுதலைப் புலிகளுடன் சமன்செய்து, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் குறுக்குகின்ற பணியை, சீமானும் அவர்தம் ஆதரவாளர்களும் செய்கிறார்கள். 
   சீமானும் அவர்தம் அடிவருடிகளும், ஈழத்தமிழர்களின் விடுதலையை வாங்கித் தருவார்கள் என்று, புலம்பெயர் ஈழத்தமிழர்களில் ஒருபகுதியினர் நம்புகிறார்கள். இது ஆச்சரியமானதல்ல! ஏனெனில், ஈழத்தமிழர்களின் விடுதலைக்குச் செய்ய வேண்டியவை பற்றிய சரியான புரிதல் இருந்திருந்தால், இந்த நிலையை நாம் அடைந்திருக்க மாட்டோம் அல்லவா? 
   எம்.ஜி.ஆரைச் சந்திக்க, பிரபாகரனைப் பழ நெடுமாறன் அழைத்துச் சென்றபோது, ‘ஈழத்தை பெற, எவ்வளவு பணம் தேவை’ என்று எம்.ஜி.ஆர் கேட்டதாகவும் அதற்குரிய தொகையைப் பிரபாகரன் சொன்னதாகவும், கேட்டதற்கு அதிகமாகவே எம்.ஜி.ஆர் கொடுத்ததாகவும், பழ நெடுமாறன் தனது நூலில் எழுதியிருக்கிறார். இது விடுதலைப் புலிகளுக்கு மட்டுமே உரித்தானதல்ல; பிற இயக்கங்களிலும் இந்த மனநிலை இருந்தது. 
   இதன் தொடர்ச்சியாக, விடுதலைப் புலிகளுக்குப் பணம் கொடுத்து, விடுதலையைப் பெறலாம் என நினைத்த புலம்பெயர் தமிழர்களின் மனநிலையின் தொடர்ச்சியே, சீமானுக்கான புலம்பெயர் தமிழர்களின் நிதியாதரவு.     
   சில விடயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சினையில், எந்த நிலையிலுமே தமிழக அரசு, மத்திய அரசை மீறிச் செயற்படத் துணிந்ததில்லை. உண்மையில், அந்த விதமான எண்ணம் இருந்ததுமில்லை; அதுவொரு தோற்றமயக்கம். அன்றிலிருந்து இன்றுவரை, இலங்கை விடயத்தில், இந்தியா குறுக்கிட வேண்டும் என்ற கோரிக்கை, நடை முறைச் சாத்தியமற்றது மட்டுமன்றி, அடிப்படையிலேயே தவறானதும் கூட. ஈழத்தமிழரின் விடுதலையை குத்தகைக்காரர்களால் பெற்றுத்தர இயலாது. 
   1983 வன்முறைக்குப் பின்பு, குறிப்பாக, 1984 முதல் 1987 வரை, போர்ச் சூழல் ஏற்படுத்திய உக்கிரமான நெருக்கடிகளின் விளைவாக, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஈழத்தமிழர்கள் சிதறி ஓடுகின்ற சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியாவுக்குப் போனவர்களில் வசதியுள்ளவர்கள், பிரதான நகரங்களில் குறிப்பாகச் சென்னையில், வசதிகளுடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். 
   கையில் எதுவுமில்லாமல் உயிருக்கு அஞ்சி ஓடியவர்களில் பெரும்பான்மையானவர்கள், முன்பு இலங்கையில் கற்பனை செய்திராத விதமாக அகதி முகாங்களிலும், ‘அகதி’ என்ற அடையாளமின்றி வெளியிலும் அன்று முதல் அல்லற்பட்டு வருகிறார்கள்.
   இலங்கை மக்களின் அவலங்கள் பற்றி, எந்த விதமான அக்கறையுமே இல்லாமல், அவர்களுடைய அவலத்தை அரசியல் பிழைப்பாக்கிக் கொண்ட தமிழக அரசியல் தலைமைகள் ஒருபுறமும், அதற்குக் கொஞ்சமும் சளைக்காத, இலங்கை தமிழ்ச் சமூகத்தின் வேறு சில பலவீனங்களைத் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி வருகிற தமிழகத்தின் வேறு சில குழுக்களும், ஈழத்தமிழரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்திகள் என்ற மாயையை உருவாக்கினார்கள். 
   தாங்கள் உலகத்தால் கவனிக்கப்படவில்லை; தங்களைத் தமிழகம் கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம், இலங்கை கலைஞர்களிடமும் எழுத்தாளர்களிடமும் நீண்டகாலமாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல, இந்தியாவிலிருந்து வருகிற ‘குப்பை’களை எல்லாம், கலை இலக்கியம் என்று கொண்டாடிப் பரவலாக்குகிற ஒரு வணிகக் கூட்டமும் இருந்து வந்திருக்கிறது. 
   கோவில் திருவிழாக்களுக்குத் தமிழ் நாட்டிலிருந்து சின்னமேளமும் மேளக்காரர்களும் வந்த நிலை, இன்று பெரும்பாலும் இல்லை. என்றாலும், அதன் இடத்தில் தமிழ்ச் சினிமா, சின்னத் திரை, இந்தியக் கலைஞர்களது நிகழ்ச்சிகள் என்பனவே, எமது பொழுதுபோக்குகளாக மாறியிருக்கின்றன. 
   இன்று, பேரினவாதத்துக்கு முகங்கொடுக்கத் தடுமாறுகிற ஒரு சமூகத்திடமும் புலம் பெயர்ந்தோரிடமும், ஒரு நல்ல மாற்றுச் சிந்தனை உருவாக்குவதற்கு வழிகாட்ட, தமிழ்த் தேசியத்தால் இயலவில்லை. எனவே, தமிழ் மக்களிடையிலும் படைப்பாளிகள் இடையிலும் கலைஞர்கள் மத்தியிலும் அறிஞர்கள் என்று சொல்லப்படுகிற தரப்பினரிடையிலும் உள்ள மன உளைச்சலை வைத்துப் பணம் பண்ணுவதில், தமிழகத்துச் சஞ்சிகைகள் சிலவும் வெளியீட்டு நிறுவனங்கள் சிலவும், புதிய உச்சங்களை எட்டியுள்ளன. 
   ஈழத்து எழுத்தாளர்களுக்குச் சடங்காசாரமான அங்கீகாரம், ஈழ எழுத்தாளர் குழுக்களுடன் விளம்பர, வணிகத் தொடர்புகள், இடையிடையே ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிச் சூடான விவாதங்களைக் கிளறிவிடுவது போன்ற உபாயங்கள் மூலம், தம்மை நிலை நிறுத்திக் கொண்ட சஞ்சிகைகளும் இலக்கியப் பிரமுகர்களும் பற்றி நிறையவே கூறமுடியும். 
   படைப்பாளிகளிடமிருந்து பணம் பறித்து, அவர்கள் எழுத்துகளை வெளியிட்டுக் காசுபார்க்கும் இந்திய பதிப்பகங்கள் ஏராளம் வலம்பருகின்றன. தங்களது எழுத்துகளுக்கு நூல் வடிவம் வேண்டி ஏங்குகிறவர்களது அவலத்தை, தங்களுக்குப் பணமாக்கும் கலையை அவர்கள் கற்றிருக்கிறார்கள். அவர்கள் வேண்டுகிற பணத்தை வழங்கி, தமிழ்நாட்டில் புத்தகம் பிரசுரமாவதை பாக்கியமாகக் கருதும் புலம்பெயர்ந்தோர் ஏராளம் உளர்.  
   இப்படியெல்லாம், ஈழத் தமிழர் ஏமாறக் காரணம் என்ன? நாம், நமக்கான ஒரு பண்பாடு உடையவர்கள் என்றும் நம்மிடையே உள்ள ஆற்றல்களைச் கொண்டு நம்மை அறிந்து, நம்மை மேம்படுத்தி மற்ற எல்லாருடனும் நல்லுறவு பேண வேண்டியவர்கள் என்பதையும் நாம் மறந்து விடுகிறோம்.
    நமது உயர்வுக்குத் தேவையான பண்பாட்டுச் செயற்பாடுகள் நம்மிடையே நலிந்து வருகின்றன. நமது இசையும் நடனமும் தமிழகத்தில் பார்ப்பனியம் போட்ட கோட்டுக்கு வெளியே நகர மறுக்கிறது. அதை, ‘எமது’ என்று சொல்லி ஏமாறுகிறோம். தமிழகத்தில், அவர்களது கலைஞர்களுக்குக் கிடைக்கிற சிறிய அங்கீகாரமோ வெறும் உபசாரமான புகழுரையோ, நமக்குப் போதுமாகிறது. அதை ஏற்படுத்தவல்ல உள்ளூர்த் தரகர்கள் புரவலர்களாக, இலக்கியவாதிகளாக, ஊடக ஜாம்பவான்களாக, அரசியல்வாதிகளாக உலா வருகிறார்கள்.
   நம்மிடம் வாசிப்புப் பழக்கம் போதாது. இளைய தலைமுறையினரிடம் அதை ஊக்குவிக்கின்ற ஆர்வமும் நம்மிடம் மிகக் குறைவு. மரபின் பேரால் நடக்கின்ற கேலிக் கூத்துகளிலும் சமூகத்துக் கேடான பொழுது போக்குகளிலும், நாசமாகின்ற காசையும் காலத்தையும் நமது எழுத்துகளையும் மேடைக் கலைகளையும் ஓவியம், சிற்பம் போன்றவற்றையும் அறியவும் ஊக்குவிக்கவும் துணிவோமானால், நம்மை மற்றவர்களின் தயவில் வைத்திருக்கிற அவலம் நமக்கு நேராது.
   புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், வெறும் உணர்ச்சி வசப்பட்டு நம்மைப் பற்றிய போலி அக்கறைகளுக்கும் வஞ்சகமான புகழுரைகளுக்கும் மயங்காமல், வெறுமனே பணத்தை வழங்குவதுடன் தங்களது பொறுப்பு முடிந்து விடுவதாக இல்லாமல், எல்லாவற்றிலும் தொடர்ச்சியான விமரிசன முறையிலான ஈடுபாடு காட்டுவார்கள் என்றால், அவர்கள் தங்களுக்கும் உலகத் தமிழ்ச் சமூகத்துக்கும்  நல்ல சேவையாற்றுகின்றவர்களாவார்கள். 
   தேங்கிய நீரில் தான் பாசி படருகிறது. நோய் பரப்பும் தீய உயிரினங்கள் விளைகின்றன. சமூகம் என்பது, பாய்கிற நதி போல எப்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளுமாயின் அது, என்றென்றும் உயிரோட்டத்துடன் இருக்கும்.
    
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஈழத்தமிழரின்-தமிழக-மயக்கம்-தெளியாத-போதை/91-275056
    
    
  • By கிருபன்
   ‘எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள்’ அனர்த்தம்: பதில்கள் இல்லாத கேள்விகள்
   தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
   இலங்கையின் வரலாற்றில், மிகப்பெரிய சூழலியல் அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. வழமைபோல, அதை ஒரு செய்தியாக எம்மால் கடந்து போக முடிந்திருக்கிறது. இதை நினைக்கின்ற போது, ஒருகணம் விக்கித்து நின்றுவிட்டேன். இந்த அனர்த்தத்தின் தீவிரத்தை உணர்ந்த ஒவ்வொருவருக்கும், இந்த உணர்வு நிச்சயம் வந்திருக்கும். 
   கப்பல் அனர்த்தத்தின் ஆபத்து அத்தகையது; அதை எளிமையாக, இன்னொரு செய்தி போல நோக்கிய, இன்னமும் நோக்குகின்ற எமது சமூகத்தை என்னவென்று சொல்வது. பேச வேண்டிய இரண்டு முக்கியமான விடயங்களை, ஊடகங்களும் மக்களும் அமைதியாகக் கடந்து போகிறார்கள். 
   முதலாவது, இந்தப் பெருந்தொற்றைக் கையாளும் அரசாங்கத்தின் செயன்முறையும் தடுப்பூசி போடுவதில் நடக்கும் தகிடுதித்தங்களும் ஆகும். இரண்டாவது, எமது கடல்வளத்தையும் வாழ்வையும் சீரழித்துள்ள எக்ஸ்பிரஸ் பேர்ள்  அனர்த்தம் ஆகும். 
   இந்தப் பெருந்தொற்றில் இருந்து, இன்னும் சிலகாலத்தில் மீண்டுவிடலாம். ஆனால், எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு, மோசமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது. இது சார்ந்த நெருக்கடிகள் ஆழமானவை. இவை வெறுமனே, இந்தக் கப்பல் அனர்த்தத்துடன் மட்டும் முடிவடைந்து விடுவதில்லை. இதை நாம் உணராதவரை, எமக்கும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும்  ஆபத்துகள் காத்துக் கிடக்கின்றன. 
   இந்த அனர்த்தம் குறித்து உரையாடிய வேளையில், பலரின் கவலை “கொஞ்ச நாளைக்கு மீன் தின்னமுடியாது” என்றவாறாக இருந்தது. இன்னும் கொஞ்சப்பேர், “இது நடந்தது, கொழும்புக் கடலில்; அதனால், யாழ்ப்பாணத்தில் பிடிக்கின்ற மீன்களைச் சாப்பிடலாம்” என்றெல்லாம் கருத்துத் தெரிவித்தார்கள். 
   ஒருபுறம், இந்த அனர்த்தத்தை வெறுமனே மீன் தின்னும் பிரச்சினையாக மட்டும் பார்க்கப் பழகியிருக்கிறோம். இலங்கையில் திறந்த சந்தைப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தபட்ட இரண்டு தசாப்தங்களில், இலங்கையர்கள் நுகர்வு மனநிலைக்குப் பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள். அனைத்தையும் நுகர்வு நோக்கில், தன்னலப் பார்வையில் அவதானிக்கும், முடிவெடுக்கும் ஒரு சமூகமாக மாற்றமடைந்து விட்டார்கள். இதன் மோசமான விளைவுகளில் ஒன்றுதான், இந்த அனர்த்தத்தை அலட்சியமாகக் கடந்து செல்லும் மனநிலை.  
   இப்போது அக்கறை, இந்த அனர்த்தத்தால் எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்பது பற்றியது. யாருக்குக் கிடைக்கும், எவ்வாறு கிடைக்கும், என்ன வகையான இலாபம் என்பன, நீண்ட உரையாடலுக்கு உரியன. ஆனால், இந்த இலாபம் தொடர்பான சிந்தனைகள் எதுவும், அனர்த்தத்தின் பாதிப்புகள் பற்றியதாவோ, நீண்டகாலச் சூழலியல் விளைவுகள் பற்றியதாகவோ இல்லை.  
   இதன் பின்னணியில், நாம் கேட்கவேண்டிய கேள்விகள் பல உள்ளன. ஆனால் இந்தக் கேள்விகளுக்கான பதில்கள், என்றென்றைக்கும் எமக்குக் கிடைக்கப் போவதில்லை. சூழலியல் சார்ந்து அக்கறையற்ற எங்களது சமூகம், இதற்கான பதில்களை வேண்டப்போவதுமில்லை; அதற்காகப் போராடப் போவதுமில்லை. 
   அனர்த்தம் நிகழ்ந்து சில நாள்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக சமூகவலைத்தளப் பதிவுகளை இட்டுவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கும் சமூகத்திடம் எதிர்பார்க்க அதிகம் இல்லை. இந்த அனர்த்தம் குறித்த அனைத்துத் தரப்புகளின் மௌனம், ஒரு மிகப்பெரிய சமூகக் குறிகாட்டி. 
   அரசியல்ரீதியாகக் குறித்த நிகழ்வுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள், பழியை இன்னொருவர் தலையில் கட்டுவதில் குறியாக இருக்கிறார்கள். இதற்கும் ஓர்  ஆணைக்குழுவை உருவாக்கிக் காலம் கடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 
   அரசாங்கமும் அரச அதிகாரிகளும் குறித்த விடயத்தைத் திசைதிருப்புவதில் வெற்றியடைந்திருக்கிறார்கள். எதிர்கட்சிகளில் ஜே.வி.பி தவிர்ந்த ஏனையவற்றின் அமைதி வியப்பளிக்கவில்லை. ஆனால், சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் மௌனம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.
   அவர்களின் மௌனம் குறித்து, இதுவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. இந்த விடயத்தைப் பேசாமல் விடுவது, எல்லோருக்கும் வாய்ப்பானது. ஒருபுறம் ‘இதைப் பேசி அரசை ஏன் சங்கடப்படுத்த வேண்டும்' என்று அவர்கள் நினைக்கக்கூடும். மறுபுறம், ‘இது நடந்தது, எங்கள் வடக்குக் கிழக்கில் அல்ல; எனவே, நாங்கள் ஏன் கருத்துச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்' என்ற கருத்துகள் வேறு. 
   முதலில், இனத்துவ அடையாளங்களுக்குள் நின்றுகொண்டு, சூழலியல் பிரச்சினைகளை அணுகுவதை நிறுத்த வேண்டும். சூழலியல் சவால்கள், நம் அனைவருக்குமானவை. அதை, வடக்கு, கிழக்கு, தெற்கு என்று பிரித்து நோக்குவதில் பயனேதும் இல்லை. 
   வானிலை மாற்றம் பிரதேசம் பார்ப்பதில்லை; சாதி பார்ப்பதில்லை; தமிழனா, சிங்களவனா, முஸ்லிமா என்று பார்ப்பதில்லை. இலங்கையை சுனாமி தாக்கிய காலத்தை நினைத்துப் பாருங்கள். இப்போது நாம் எதிர்நோக்கும் சூழலியல் நெருக்கடிகள், முழு இலங்கையருக்குமானது. 
   ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ அனர்த்தம், சூழலியல் குறித்த எமது அக்கறையின்மையையும் பொறுப்பின்மையையும் வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது. ‘இது ஒரு சூழலியல் அனர்த்தம்’ என்ற பரிமாணத்தைத் தாண்டி, இதுவோர் அரசியல் அனர்த்தம், சமூக அனர்த்தம். இது குறித்து, நாம் பேசியாக வேண்டும். 
   முதலில், இந்த அனர்த்தம் தவிர்த்திருக்கக் கூடியதா என்ற வினாவுக்கு வருவோம். இந்த அனர்த்தம், நிச்சயம் தவிர்த்திருக்கக் கூடியது. இந்தக் கப்பலின் இறுதி இரண்டு வாரச் செயற்பாடுகள் பற்றித் வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில், இதை நாம் உறுதியாகச் சொல்லவியலும். 
   எனவே, இதற்குப் பொறுப்புச் சொல்லவேண்டியவர்கள் பலர். ஆனால், இதற்கு யாரும் பொறுப்பேற்கப் போவதில்லை. பழியை இலகுவாக இயற்கையின் மீதும் ‘எதிர்பாராத விபத்து' என்ற சொற்பதத்தின் மீதும் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். 
   கப்பல் தீப்பற்றி எரிந்த ஆரம்ப கட்டங்களில், அத்தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், அது பரவுவதற்கு இலங்கை துறைமுக அதிகார சபை அதிகாரிகள் இடமளித்தனர் என்ற குற்றச்சாட்டை, கப்பலின் தலைமை மாலுமி நீதிமன்றில் தெரிவித்திருக்கிறார். 
   இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்த இலங்கை, இந்தியாவின் உதவியைக் கோரியிருக்கிறது. கப்பல் போக்குவரத்தில், தென்னாசியாவின் மையமாக விளங்க எதிர்பார்த்திருக்கின்ற கொழும்புத் துறைமுகத்தால், இவ்வாறான கப்பல்கள் தீப்பிடிக்கும் போது, தீயைக் கட்டுப்படுத்தும் வசதிகள் இல்லை என்பது புலனாகிறது. 
   கொழும்புத் துறைமுகத்தில் தரிப்பதற்காகக் கப்பல் நங்கூரமிட்டிருந்த பகுதி, நீர்கொழும்புக் கடற்பரப்பில் உள்ள ஆழமற்ற கண்டமேடைப்பகுதி. இது வேகமான கடல்நீரோட்டங்களைக் கொண்ட பகுதியும் கூட. இப்பகுதி, மீன்வளங்களின் முக்கியமான புள்ளி. இப்பகுதி 21 மீற்றர் மட்டுமே ஆழமான கடற்பரப்பு. கப்பல் 21 மீற்றரை விட அதிகமானது. இதனாலேயே கப்பல் மூழ்காமல் இருக்கிறது. கப்பலில் அபாயகரமான பொருட்கள் இருக்கின்ற கப்பலில் ஏற்கெனவே ஒருமுறை தீப்பிடித்திருக்கின்றது என்பதை அறிந்தும் அதிகாரிகள், இவ்வாறு கடல்வளத்துக்கு முக்கியமான பகுதியில் கப்பலை நங்கூரமிட அனுமதித்து இருக்கிறார்கள். 
   குறித்த கப்பலில் 78 மெற்றிக் தொன் அளவிலான பிளாஸ்டிக் தட்டுகள் (plastic pallets) இருந்திருக்கின்றன. பிளாஸ்ரிக் உயிரியல் ரீதியாக அழிவடையாதவை (Non-bio-degradable). இவை இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு கடலில் இருக்கும். நீண்ட காலம் நீரில் இருக்கும் போது, இவை நச்சுப்பொருட்களை உறிஞ்சி வைத்திருக்கும். கப்பலில் இருந்து வெளியாகியுள்ள ஏனைய நச்சுப் பதார்தங்களையும் இவை உறிஞ்சியிருக்கும். இதை மீன்கள் உட்கொண்டு, உணவுச்சங்கியிலில் இந்தப் பிளாஸ்டிக்கையும் அது உறிஞ்சி வைத்திருக்கும் நச்சுப் பொருட்களையும் சேர்க்கும். இதனால், இதன் ஆபத்துகளை இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு நாம் அனுபவிக்க நேரும். 
   இந்தப் பிளாஸ்டிக்குகள் இலங்கைக்கு மட்டுமன்றி, இந்து சமுத்திரத்தை எல்லையாகக் கொண்டுள்ள ஏனைய நாடுகளையும் சென்றடையும். கடலின் நீரோட்டங்கள் இதனை இலகுவாகச் சாத்தியப்படுத்தும். இப்போது, இலங்கைக் கடற்பரப்பில் இறந்து கரையொதிங்கியுள்ள ஆமைகள், மீன்கள், டொல்பின்கள் உட்பட்ட பல கடல்வாழ் உயிரினங்கள், பிளாஸ்டிக்கின் நச்சுத்தன்மையால் உயிரிழக்கவில்லை. மாறாக, இந்தப் பிளாஸ்டிக்குகள் அவ்வுயிரினங்களின் உணவுக்கால்வாயை அடைத்தமையால் உயிரிழந்துள்ளன. அல்லது கப்பலில் இருந்து வெளியான இரசாயன திரவியங்களிகன் பாதிப்பால் இறந்துள்ளன.  
   பிளாஸ்டிக் தட்டுகள், இக்கப்பலால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பிரச்சினை மட்டுமே. இக்கப்பலில் இருந்து வெளியாகியுள்ள இரசாயனத் திரவங்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. இவ்விடத்தில், இலங்கையர்களின் சாதனையை நினைவுகூறல் வேண்டும். சிறிய தீவாகஇருக்கின்ற போதும், உலகிலேயே ஐந்தாவது அதிகளவிலான பிளாஸ்டிக் பொருட்களைத் தன் கடலிலே கொண்ட நாடென்ற பெருமை எமக்குரியது?
   இவையனைத்தும் ஒரே திசையில், ஒரே கேள்வியையே எழுப்புகின்றன. இலங்கையர்களாகிய நாம், நமது சூழல் குறித்து எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறோம். சாதாரண மனிதர் தொட்டு, நிர்வாகிகள், அரச அலுவலர்கள், அரசியல்வாதிகள் வரை நம் அனைவரதும் அக்கறை இன்மைக்கு, நாம் கொடுத்த மிகப்பெரிய விலை இது. 
    
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எம்-வி-எக்ஸ்பிரஸ்-பேர்ள்-அனர்த்தம்-பதில்கள்-இல்லாத-கேள்விகள்/91-274484
    
  • By கிருபன்
   யாழ்ப்பாண நூலக எரிப்பின் நாற்பதாண்டுகள்: கற்றுக் கொள்ளாத பாடங்கள்
   தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   
   யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு, 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் அதன் அவலத்தை, நாங்கள் ஒப்பாரியாக ஆண்டுதோறும் நினைவுகூர்ந்தபடி கடத்துகிறோம்.  
   திரும்பிப் பார்க்கையில் இந்த நூலகமும் அதன் எரிப்பும் அதைத் தொடர்ந்த சிதைவும், வலி நிறைந்த கசப்பான உண்மை ஒன்றைச் சொல்கின்றன.   
   ஒரு சமூகமாக நாம் வரலாற்றைப் பதிதலிலும் ஆவணப்படுத்தலிலும் முழுமையாகத் தோற்றிருக்கிறோம். நாம், சிலவற்றை வெளிப்படையாகவும் சுயவிமர்சன நோக்கிலும் பேசியாக வேண்டும். இப்போது, இதுபற்றிப் பேசுவதற்கான காலமா என்று கேட்காதீர்கள். இவ்வாறு கேட்டுக்கேட்டே, நான்கு தசாப்தங்களைக் கடந்துவிட்டோம்.   
   யாழ்ப்பாண நூலக எரிப்புக்கு ஒரு சமூகப் பெறுமானம் உண்டு. 1959 இல் நூலகம் உருவாக்கப்பட்டு, மிகக்குறுகிய காலத்தில் பெருந்தொகையான நூல்களைச் சேர்க்க முடிந்துள்ளது என்றால், அது அக்காலத்தில் வாழ்ந்தோரின் வாசிப்பின் மீதான ஆர்வமும், வாசித்ததைப் பகிரும் ஆர்வமும் வாசிப்பையும் நூல்களையும் ஒரு சமூகப் பெறுமானத்தோடு நோக்கியமையும் ஆகும்.   
   இன்று நிலைமை அவ்வாறு இல்லை. நூலகங்களின் பணி வாசிப்பை மட்டுமன்றித் தேடலையும் ஆய்வறிவையும் ஊக்குவிப்பதும் தக்கவைப்பதுமாகப் பரந்து உள்ளன. இதனாலேயேதான், நூலகத்தின் மீதான தாக்குதலை, யாழ். அறிவுப்புல சமூகத்தின் மீதான ஒரு தாக்குதலாகப் பலர் நோக்கினர்.  இன்று, அந்த அறிவுப்புல சமூகம் எங்கு நிற்கிறது?  
   யாழ்ப்பாண நூலக எரிப்பை முன்னிறுத்தி, இரண்டு அடிப்படை விடயங்கள் தொட்டுக் காட்டப்பட வேண்டியுள்ளன. முதலாவது, ஆவணப்படுத்தல் தொடர்பானது. இரண்டாவது, வரலாறு தொடர்பானது.   
   1981இல் யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட போது, 97,000 நூல்களை இழந்தோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், எரிந்த நூல்கள் என்னவென்று எமக்குத் தெரியாது. அப்போது, அங்கிருந்த முழுமையான நூற்பட்டியலைப் பெற்றுக்கொள்ள, இன்றுவரை நாம் எந்தவொரு முயற்சியும் செய்யவில்லை. பகுதியான நூற்பட்டியல் கூட எம்மிடம் இல்லை.  
   நூலக எரிப்பைத் தொடர்ந்து நூலகத்தில் பணியாற்றியோர், நூலகத்தைப் பயன்படுத்தியோர் ஆகியோரின் உதவியுடன், ஓர் அண்ணளவான பட்டியலை எம்மால் தயாரித்திருக்க இயலும். அது, இன்றுவரை நடைபெறவில்லை. இங்கு, எரிந்தழிந்த நூல்களில் பலவற்றின் பிரதிகள், பிற நூலகங்களில் (இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும்) இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.   
   கவனிப்புக்குரியது யாதெனில், யாழ்ப்பாண நூலகத்தில் மட்டுமே இருந்த நூல்கள் பற்றியதாகும். அவை, கடைசிப் பிரதிகளாகவோ அல்லது தனித்த பிரதிகளாகவோ உள்ளவை. அவ்வாறான நூல்கள், எவை என்பது பற்றிய கணக்கெடுப்பு எம்மிடம் இல்லை.   
   உண்மையில் அந்த நூல்கள் தான், நூலக எரிப்பால் ஏற்பட்ட இழப்பு. ஏனெனில் ஏனையவை பிரதியீடு செய்யக்கூடியவை. ஆனால், இவை பிரதியற்றவை; பதீலீடு செய்ய இயலாதவை. அவையே எரிந்தழிந்தவை.  
   97,000 நூல்கள் எரிந்தன என்று சொல்கிறோமே, இந்தத் 97,000 என்ற இந்தத் தொகை, எவ்வாறு எட்டப்பட்டது. கிடைக்கின்ற தகவல்களின் படி, நூலகம் எரிய முன்னர், கடைசியாகப் பதியப்பட்ட நூலின் இலக்கத்தின் அடிப்படையில், இவ்வாறானதொரு தொகை எட்டப்பட்டது.   
   ஆனால், இங்கே ஒரு கேள்வி எழுகிறது, ‘இருந்தவை வெறும் 97,000 நூல்கள் மட்டுமா’? அங்கிருந்த பத்திரிகைகள், சிறுபிரசுரங்கள், கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள் போன்றவற்றின் நிலை என்ன? இவை நூல்கள் அல்ல; அந்தத் தொகைக்குள் அடங்காதவை. இவற்றில் பெரும்பாலானவை, ஒற்றைப் பிரதிகள்; இவை குறித்த எந்தவொரு கணக்கெடுப்போ, குறிப்போ எம்மிடம் இல்லை.   
   வெறுமனே குறைசொல்லிப் பழக்கப்பட்டுப்போன சமூகம் நம்முடையது. இதனால், ஒப்பாரி பாடியடி, இருந்த நூல்களையும் ஆவணங்களையும் செல்லரிக்க விட்டபடி, 40 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறோம்.   
   இந்தக் காலத்தில், நாம் பாதுகாக்காமல் இழந்தவை ஏராளம். இரண்டு உதாரணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு எம்மால் பாதுகாக்கப்படாமையால் நாம் இழந்தவற்றைப் பார்ப்போம்.   
   சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையில், வடபகுதியின் தரைத்தோற்றம், நிலவமைப்பு, நீர்மேலாண்மை பற்றி முதன்மையான ஆய்வுகளைச் செய்த ஒருவரது ஆய்வுகள், ஆவணங்கள், நூல்கள் அவரது மறைவின் பின்னர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்துக்கு அளிக்கப்பட்டன. அவை மாணவர்களின் பயன்பாட்டுக்குரியவை என்று குறிப்பிடப்பட்டே குடும்பத்தினரால் வழங்கப்பட்டன. சில ஆண்டுகளின் பின்னர், உசாவலுக்காக அவற்றை, பல்கலைக்கழக நூலகத்தில் தேடியபோது, வழங்கப்பட்ட எதுவும் அங்கில்லை. நூல்களைக் குடும்பத்தினரிடமிருந்து பெற்ற பேராசிரியர், அதைத் தனது ஆய்வுத் தேவைக்குப் பயன்படுத்தினார். பின்னர், அவ்வாவணங்கள் காணாமல் போயின. ஒருபுறம், அறிவுத்திருட்டு; இன்னொருபுறம் ஆவணஅழிப்பு. இதேபோன்று பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதையும் சேர்த்தே, ‘அறிவுத்துறையின் அயோக்கியத்தனம்’ என்றார் எட்வர்ட் சயித்.   
   இரண்டாவது உதாரணம், இலங்கையின் அரசியல் வரலாற்றில் இரண்டு மிக முக்கியமான கட்டுரைகளை எழுதியவர் ஜேம்ஸ் ரட்ணம். பரம்பரையியலில் (Genealogy) தேர்ச்சி பெற்றிருந்த அவர், இலங்கையில் முக்கியமான இரண்டு அரசியல் குடும்பங்கள், இந்தியாவில் இருந்து வந்த கதையை எழுதி, வரலாற்று வரைவியலிலும் சிங்களத் தேசிய உருவாக்கத்திலும் ஒரு நெருக்கடியை உருவாக்கினார்.   
   இவரது ஒரு கட்டுரை, பண்டாரநாயக்க குடும்பத்தின் வரலாறு பற்றியது. மற்றையது, ஜே.ஆர். ஜெயவர்தனவின் குடும்ப வரலாறு குறித்தது ஆகும். இவையும் அவரது ஏனைய ஆய்வுகளும் அவர் தேடிச் சேகரித்துப் பயன்படுத்திய ஆவணங்களும், அவரால் உருவாக்கப்பட்ட ‘எவ்லின் ரட்ணம் கற்கைகள்’ நிறுவனத்தில் இருந்தன. 1988 இல், அவரது மறைவும் யாழ். குடாநாட்டைச் சூழ்ந்த போரும், ரட்ணம் கற்கைகள் நிறுவனத்தில் இருந்த ஆவணங்களை அழித்துவிட்டன. எஞ்சியுள்ளவை, இப்போதும் மெதுமெதுவாக அழிகின்றன. எங்கள் வரலாற்றையும் ஆவணங்களையும் நாங்களே தொலைத்த, தொலைத்துக் கொண்டிருக்கின்ற தலைமுறை எங்களது!  
    
   யாழ்ப்பாண நூலகம் எப்போது எரிக்கப்பட்டது என்பது, அடுத்த விடயமாக உள்ளது. ‘மே 31ஆம் திகதி இரவே, நூலகம் எரிக்கப்பட்டது’ என்ற தகவல், இன்று ஆழப் பதிந்துள்ளது. ஆனால், ஜூன் மாதம் முதலாம் திகதி இரவே, யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது. பொதுத்தளத்தில் அது, மே 31ஆம் திகதி என்று, இன்றும் பதியப்படுகிறது.   
   இந்தக் குளறுபடியின் பின்னால், மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்ட நுண்ணரசியல் ஒளிந்திருக்கின்றது. அதைக் கவனியாது, நாம் 40 ஆண்டுகளைத் தாண்டி வந்திருக்கிறோம். எங்கள் பலரது குறிப்புகளும் கட்டுரைகளும், மே 31 என்று குறித்தபடியே நினைவுகளைச் சுமந்திருக்கின்றன.  
   மே 31 என்பது, ‘பொலிஸார் மீது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்வினையாக ஏற்பட்ட கலவரத்தின் ஒரு பகுதியாக நூலகமும் எரியுண்டது’ என்ற கதையாடலுக்கு வலுச்சேர்க்கின்ற செயல். இது, ஆழமாக நோக்கவும் பேசப்படவும் வேண்டியதொன்று.   
   நூலக எரிப்பு தற்செயல் நிகழ்வல்ல. திட்டமிடலுடனும் அரசியல் பலத்துடனும் செய்யப்பட்ட செயல். 31ஆம் திகதி சூட்டுச் சம்பவத்துடன் தொடங்கிய வன்முறையைத் தொடர்ந்து, மறுநாள் ஜூன் முதலாம் திகதி, பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அமைச்சர் காமினி திஸாநாயக்கா ஆகியோர் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். அவர்கள் தங்கியிருந்த போதே, இந்தக் கொடுங்செயல் அரங்கேறியது.   
   ஜூன் முதலாம் திகதியே நடைபெற்றது என்பதைப் பலர் சொல்லி இருக்கிறார்கள். அப்போது, மாநகர ஆணையாளராக இருந்த சி.வி.கே சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அ. அமிர்தலிங்கம், ‘மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது’ நூலில் செங்கை ஆழியான், வரலாற்றாய்வாளர் சாந்தசீலன் கதிர்காமர் ஆகியோர் இதைப் பதிவு செய்திருக்கிறார்கள்.   
   மே 31ஆம் திகதியே யாழ், நூலகம் எரிக்கப்பட்டது என்று சொல்வோர் வைக்கின்ற வாதம், அதனோடு சேர்த்து ‘ஈழநாடு’ பத்திரிகையும் எரிக்கப்பட்டது என்பதாகும். ஆனால், யாழ்ப்பாண நூலகத்தோடுதான் ‘ஈழநாடு’ பத்திரிகை அலுவலகமும் எரிக்கப்பட்டது.    
   சிலர் வாதிடுவது போல, அது 31ஆம் திகதி இரவாக இருந்திருந்தால், ஜூன் முதலாம் திகதி பத்திரிகை அச்சாகி வெளியாகியிருக்காது. ஆனால், ஜூன் முதலாம் திகதி ‘ஈழநாடு’ வெளியாகியிருக்கிறது. அதில், யாழ்நகரில் நடந்த கொடுமைகள் பதிவாகியுள்ளன. ஜூன் ஆறாம் திகதி மீண்டும் ‘ஈழநாடு’ வெளிவந்தது. அதில், ‘கடந்த சில நாள்களாகப் பத்திரிகையைக் கொண்டுவர இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்ற குறிப்பும் இருக்கிறது. 
   நூலக எரிப்பை அடுத்துத் தொடர்ந்த நான்கு தசாப்தத்தில், வரலாறும் வாசிப்பும் வாசிப்பை நேசிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக இரையானது. நூலகத்தில் தொலைத்ததை விட, அதிகமாகக் கடந்த 40 ஆண்டுகளில் கவனக்குறைவாலும் அக்கறையின்மையாலும் நாம் தொலைத்த ஆவணங்கள் அதிகம்.   
   எதற்கும் மௌனத்தையும் ஏளனத்தையும் பதிலாகக் கொண்டிருக்கின்ற சமூகம், அச்சப்பட நிறையவே இருக்கிறது.   
    
    
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/யாழ்ப்பாண-நூலக-எரிப்பின்-நாற்பதாண்டுகள்-கற்றுக்-கொள்ளாத-பாடங்கள்/91-273464
    
 • Topics

 • Posts

  • ”மக்களின் நலன்களின் அடிப்படையிலேய தன்னுடைய தீர்மானங்கள் அமையும்”: டக்ளஸ் மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு வடமராட்சி கடல் பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கான அனுமதியை வழங்கியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். வடமாராட்சி பிரதேச கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த விடயங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சரின் யாழ். செயலகத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், பிரதேச மக்களில் பெரும்பாலானவர்களின் கருத்தினை கடற்றொழிலாளர் சங்கங்கள் பிரதிபலிக்கின்றன என்ற வகையிலும், மக்களின் தற்போதயை பொருளாதார நிலைமையையும கருத்தில் கொண்டு, கடற்றொழில் திணைக்களத்தினால் வரையறுக்கப்படும் நிபந்தனைகளை பின்பற்றி கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்குவதாக தெரிவித்தார். மேலும், மக்களின் நலன்களின் அடிப்படையிலேய தன்னுடைய தீர்மானங்கள் அமையும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர், வெளிச்சம் பாய்ச்சுதல் குலை போட்டுப் பிடித்தல் போன்ற தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை முற்றாக தடை செய்வதற்கு கடற்றொழிலாளர் சங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின் ற படகுகள் பதிவு செய்யப்படும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 40 குதிரைவலுவிற்கு உட்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார். இன்றைய கலந்துரையாடலில் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்டப் பிரதாணி ஜெ. சுதாகரன் மற்றும் வடமாராட்சிப் பிரதேச கடற்றொழில் உத்தியோகஸ்தர்கள் ஆகியோருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாராட்சிப் பிரதேச நிர்வாக அமைப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வனும் கலந்து கொண்டிருந்தார். அதேவேளை, நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் அடையாளப்படுத்தபட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இழுவைவலைப் படகுகளைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்படடுள்ள நிலையில், இழுவை வலைப் படகுகளைப் பயன்படுத்தி கடலட்டை தொழில் ஈடுபடுகின்றவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்.மாவட்ட பிரதானிக்கு அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   http://www.samakalam.com/மக்களின்-நலன்களின்-அடிப/    
  • டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம் July 24, 2021 டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமான குறித்த போராட்டம் பேரணியாக , புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது. https://globaltamilnews.net/2021/163793
  • சிறுமிக்கு நடந்த கொடுமை தொடர்பாக றிஷாத் பதியுதினின் மனைவி, மாமாவும் கைது செய்யபட்டுள்ளார்களாம்.
  • ஓமோம்  ...  ஆனந்த சங்கரி,  கருணா, டக்ளஸ், பிள்ளையான்... சம்பந்து, சுமந்து, மாவை... போல்.... ஒரே... கும்பலாக நின்று, தமிழர் உரிமைக்காக போராடுகிறார்கள். அண்டங்  காக்காக்கள்.   
  • அங்கைதான் நிற்கின்றார் நாதம்ஸ்😂 ராகவன் எழுதினது ஆய்வு. கல்கி எழுதியது புனைவு. இதுக்கு மேல நான் சொல்ல ஒன்றுமில்லை😃
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.