Jump to content

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விசுகு said:

நீங்கள் செய்திகளை இணைப்பவரா??

அல்லது உங்கள்  கருத்தை  கள  உறவுகள்  மீது திணிப்பவரா??

3 hours ago, கிருபன் said:

நான் ஒட்டுவதை எல்லாம் கருத்துத் திணிப்பாகவே கருதலாம்😀

இதைத்தான் கேட்டேன்.

இந்த உண்மையை சொல்வதற்கு எத்தனை பழி சுமத்தல்கள் நக்கல்கள் நான் எழுதாத பல கற்பனை பிதட்டல்கள்.

இது தான் இந்த புத்தக பூச்சிகளிடமிருந்து தள்ளி இருப்பது . தாங்கள் வாசித்ததை தாங்கள் புரிந்து கொண்டதுபோல் எம்மீது திணிப்பது 

அதற்கு வாலாட்ட ஒரு கூட்டம் .

போங்கையா போய் உங்கள் பிள்ளைகளையாவது தனிய சிந்திக்க விடுங்க.😡😡😡

Link to comment
Share on other sites

  • Replies 254
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

இதைத்தான் கேட்டேன்.

இந்த உண்மையை சொல்வதற்கு எத்தனை பழி சுமத்தல்கள் நக்கல்கள் நான் எழுதாத பல கற்பனை பிதட்டல்கள்.

யாழ் இணையம் வெறும் வாசிகசாலை இல்லை. இங்கு செய்திகளையும், அலசல்களையும் வாசிப்பவர்கள் தாமாகவே வாசித்துப் புரிந்துகொள்வார்கள் என்றும் இல்லை. சில விடயங்களை கட்டுடைத்தால்தான் விளக்கம் வரும்.

நான் வாசிக்கும் எல்லாவற்றையும் இணைக்க யாழ் களவிதிகளும் அனுமதிக்காது. யாழ் கருத்துக்களத்தின் நோக்கமும் விடாது. 

பஜ கோவிந்தம் பாடும் பதிவுகளும், கிளுகிளுப்பான  விடயங்களும் வேண்டுமென்றால் முகநூலில் தாரளமாக கிடைக்கும்.😂

14 minutes ago, விசுகு said:

இது தான் இந்த புத்தக பூச்சிகளிடமிருந்து தள்ளி இருப்பது . தாங்கள் வாசித்ததை தாங்கள் புரிந்து கொண்டதுபோல் எம்மீது திணிப்பது 

தள்ளி இருந்தால் அறிவு கட்டாயம் வளரும்😜

15 minutes ago, விசுகு said:

போங்கையா போய் உங்கள் பிள்ளைகளையாவது தனிய சிந்திக்க விடுங்க

பிள்ளைகளை அடக்கி ஒடுக்கி எனது பெற்றோரே வளர்க்கவில்லை. எனவே, இந்தக் கரிசனை எனக்குத் தேவையில்லை. அவர்களிடம் எங்களிடமுள்ள காலாவாதியான சிந்தனைமுறைகள் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

நீங்கள் ஒரு வாத்தியார்

நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு புத்தகங்களை கொடுக்கும் போது நீங்கள் கோடிட்டு அல்லது குறிக்கப்பட்ட இடங்களை கலர் செய்து கொடுப்பீர்களா?

அல்லது மாணவர்களே தமது புரிதல் தேவைக்கேற்ப அதனை செய்ய முயல ஊக்குவிப்பீர்களா? 

தேவையான பந்திகளை கோடிட்டுக் காட்டுவதால் அவர்கள் இலகுவாக அந்த விடையங்களை ஆராய்ந்து புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

எல்லா மாணவர்களும் வகுப்பில் ஒரே நிலையில் இருப்பதில்லையே .

எல்லாவற்றையும் வாசிக்க விரும்பாத அல்லது முடியாத  மாணவர்களுக்கு இன்னும் இலகுவாக இருக்கும்.

கேள்விகளை வாசித்து அதற்கான விடைகளைத் தேடுவதா?

அல்லது புத்தகத்தை மனப்பாடம் செய்து விட்டு கேள்வியையே விளங்கிக் கொள்ளாமல் இருப்பதா சிறந்தது?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யாழ் இணையம் வெறும் வாசிகசாலை இல்லை. இங்கு செய்திகளையும், அலசல்களையும் வாசிப்பவர்கள் தாமாகவே வாசித்துப் புரிந்துகொள்வார்கள் என்றும் இல்லை. சில விடயங்களை கட்டுடைத்தால்தான் விளக்கம் வரும்.

நான் வாசிக்கும் எல்லாவற்றையும் இணைக்க யாழ் களவிதிகளும் அனுமதிக்காது. யாழ் கருத்துக்களத்தின் நோக்கமும் விடாது. 

பஜ கோவிந்தம் பாடும் பதிவுகளும், கிளுகிளுப்பான  விடயங்களும் வேண்டுமென்றால் முகநூலில் தாரளமாக கிடைக்கும்.😂

தள்ளி இருந்தால் அறிவு கட்டாயம் வளரும்😜

பிள்ளைகளை அடக்கி ஒடுக்கி எனது பெற்றோரே வளர்க்கவில்லை. எனவே, இந்தக் கரிசனை எனக்குத் தேவையில்லை. அவர்களிடம் எங்களிடமுள்ள காலாவாதியான சிந்தனைமுறைகள் இல்லை. 

மன்னிக்கவும்

நீங்கள் கோடு போட்டு தீத்துவதை தொடருங்கள்.

அப்படியே மற்றவர்களுக்கு இளையோரை தனி வழியில் சிந்திக்க விடுங்க என்று பாடமெடுங்கள் 

13 minutes ago, வாத்தியார் said:

தேவையான பந்திகளை கோடிட்டுக் காட்டுவதால் அவர்கள் இலகுவாக அந்த விடையங்களை ஆராய்ந்து புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

எல்லா மாணவர்களும் வகுப்பில் ஒரே நிலையில் இருப்பதில்லையே .

எல்லாவற்றையும் வாசிக்க விரும்பாத அல்லது முடியாத  மாணவர்களுக்கு இன்னும் இலகுவாக இருக்கும்.

கேள்விகளை வாசித்து அதற்கான விடைகளைத் தேடுவதா?

அல்லது புத்தகத்தை மனப்பாடம் செய்து விட்டு கேள்வியையே விளங்கிக் கொள்ளாமல் இருப்பதா சிறந்தது?
 
அப்படியே ஈ அடிச்சான் கொப்பியாக வினாவுக்கான விடை இருக்கும். அதற்கு என்ன தண்டனை என்றாவது தெரியுமா வாத்தியார்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

அப்படியே ஈ அடிச்சான் கொப்பியாக வினாவுக்கான விடை இருக்கும். அதற்கு என்ன தண்டனை என்றாவது தெரியுமா வாத்தியார்???

ஈழத்தமிழர்கள் விடுதலை அடைய முடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதற்கான
விடையை கிருபன் கோடிட்டுக் காட்டியுள்ளார்

  இந்தக் காரணம் பிழையென்றால்
வேறு காரணங்கள்இன்னும்  இருந்தால் அவற்றை முன்வைக்காமல்

கோடிட்ட படியால் இதை நான் வாசிக்கவில்லை
என்று அடம் பிடிக்காமல் உங்கள் கருத்தை முன்வைக்கலாமே விசுகு அண்ணை    
   
13 hours ago, விசுகு said:

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? அந்த பதிவை நான் படிக்கவே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாத்தியார் said:

ஈழத்தமிழர்கள் விடுதலை அடைய முடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதற்கான
விடையை கிருபன் கோடிட்டுக் காட்டியுள்ளார்

  இந்தக் காரணம் பிழையென்றால்
வேறு காரணங்கள்இன்னும்  இருந்தால் அவற்றை முன்வைக்காமல்

கோடிட்ட படியால் இதை நான் வாசிக்கவில்லை
என்று அடம் பிடிக்காமல் உங்கள் கருத்தை முன்வைக்கலாமே விசுகு அண்ணை    

இது போன்ற கேள்விகள் எழுவது பொதுவான அக்கறையில்.

ஒரு கட்டுரையும் சரி

ஏன்

ஒரு கதையும் சரி 

திரைப்படமும் சரி 

ஒரே மாதிரியாக கிரகிக்கும் படுவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொரு பார்வையில் ஒவ்வொரது இயல்புக்கேற்ப உள்வாங்கி கொள்வார்கள் உள் வாங்க வேண்டும்.

அல்லது பரந்து பட்ட அனுபவங்களை பரந்து பட்ட ரசிப்புக்களை அவ்வாக்கம் பெறமுடியாது.

இது எல்லோருக்கும் தெரியும். சும்மா அவர்களே அதை ஒத்து கொண்டு என்மேல் சேறடிக்க மட்டும் நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வேற??

அடுத்த ஆக்கத்தில் பாருங்க திணிக்காதீர்கள்? அது ஆரோக்கியமான ஐனநாயகமான பண்புகள் வழிகள் இல்லை என்று வகுப்பெடுப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், மீண்டும் மன்னிக்க வேண்டும்! அவசியமில்லாத ஒரு விடயத்தை ஊதிப்பெருப்பிக்கிறீர்கள். அப்படி எந்த விதியும் இல்லை! செய்தியை தலைப்பை மாற்றாமல், ஆனால் முக்கியமென்று கருதுபவற்றைக் கோடிட முடியும்!

இதே போன்ற ஒரு தாக்குதல் ருல்பென் ஐரோப்பிய வரலாற்று நூலொன்றை இங்கே பகிர்ந்த போதும் நடந்து, அங்கேயே அது விதிமீறல் அல்ல என்று தீர்ப்பு (precedence) இருக்கிறது.

நீங்கள் உங்களிடமிருக்கும் தேசியம் சார்ந்த சில கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தி விட வேண்டுமென்ற துடிப்பினால் கோபம் கொள்கிறீர்கள் என நினைக்கிறேன். அப்படியில்லையெனில் மன்னித்தருள்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிக்க சாதியினர் சிறுபான்மை ஆகும்போது அவர்களின் சாதிய மனநிலை என்னவாகும்?! இப்போதே மேலதிகாரிகளாக ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவர் பணியாற்றும்போது வெப்பியாரத்துடன் பணிபுரிகின்றனர். காலச்சக்கரம் சுழலும் போது அடக்கியோர் அடக்கப்படலாம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

ஆதிக்க சாதியினர் சிறுபான்மை ஆகும்போது அவர்களின் சாதிய மனநிலை என்னவாகும்?! இப்போதே மேலதிகாரிகளாக ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவர் பணியாற்றும்போது வெப்பியாரத்துடன் பணிபுரிகின்றனர். காலச்சக்கரம் சுழலும் போது அடக்கியோர் அடக்கப்படலாம்.
 
மனநிலையில் மாற்றம் உடனடியாக வராது. இந்தியாவில் ஒரு சில வீதமே உள்ள பார்ப்பனர்கள் ஆதிக்கத்திலும் பெரிதாகக் குறையவில்லை. மனநிலையிலும் மாற்றங்களைக் காட்டவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2021 at 07:03, கிருபன் said:

காலங்கள் மாறிவிட்டன; ஆனால், துன்பகரமான உண்மை யாதெனில், 1980களிலும் 1990களிலும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பலருக்கு, இலங்கை வரலாறு, அவர்கள் புலம்பெயர்ந்த காலத்துடன் உறைந்துவிட்டது. அவர்கள், தாங்கள் புலம்பெயர்ந்த காலத்து, இலங்கைச் சூழலின் சட்டகத்துக்குள்ளேயே, இலங்கை இனமுரண்பாட்டை நோக்குகிறார்கள்; இன்றைய இலங்கையையும் நோக்குகிறார்கள். அவர்களது தீர்வுகளும் ஆலோசனைகளும் இதன்பாற்பட்டவை. காலாவதியாகிப் போன சிந்தனைகளை, கோர்வையாக இவர்கள் முன்வைக்கிறார்கள்.   

வரலாறுகளை கடும் எழுத்தில் சுட்டிக்காடும் கிருபன் நீங்கள் எந்த காலகட்டத்தில் புலம் பெயர்ந்தீர்கள்? அந்த கால கட்டத்தில் உங்கள் வயசு என்னவாக இருந்தது?

On 12/6/2021 at 07:03, கிருபன் said:

புலம்பெயர் சமூகத்தால் எல்லாம் இயலும் என்றதொரு மாயை, இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களிடையே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மாயை, இன்னும் சில காலத்துக்குத் தொடரும்; அதற்குத் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் உள்ள ‘குடுகுடுப்பைக்காரர்கள்’ வழிசெய்வார்கள்.   

போராட்ட காலத்திலிருந்து இன்றுவரை புலம்பெயர் சமூகத்தால் எல்லாம் முடியும் என்று யாருமே சொன்னதாயும்  நினைவில் இல்லை.

முடிந்தவரை ஆககூடிய பங்களிப்பை அவர்களால் வழங்க முடியும் என்று வன்னி தலைமைபீடம்வரை அறைகூவல் விடுததாய்தான் ஒவ்வொரு தமிழனுக்கும் நினைவில் உண்டு.

எழுந்தமானமாய் இப்போது எவர் வேண்டுமானாலும் கட்டுரை எழுதலாம், ஆனால் ...

புலம்பெயர் சமூகத்தால் எல்லாம் முடியும் என்று  எந்த வடக்கு கிழக்கு தமிழனும் சொன்னதில்லை சொல்ல போவதும் இல்லை.

தமது சக்திக்கு உட்பட்டும் சக்திக்கு மேற்பட்டும் ஒரு காலம் எமது விடுதலை போராட்டத்து உதவியவர்களை  இப்போ தமது பெயர் ஊடகங்களில் அடிபடவேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் மட்டமான கட்டுரைகள் வரைபவர்களை நாம் மன்னிக்க தயாராகவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, valavan said:

வரலாறுகளை கடும் எழுத்தில் சுட்டிக்காடும் கிருபன் நீங்கள் எந்த காலகட்டத்தில் புலம் பெயர்ந்தீர்கள்? அந்த கால கட்டத்தில் உங்கள் வயசு என்னவாக இருந்தது?

பலர் காலம் உறைந்த நிலையில் இருக்கின்றனர் என்றுதான் சொல்லியிருக்கின்றேன். சிலர் மாற்றங்களை அவதானித்து, ஏற்றுக்கொண்டுதான் உள்ளனர். அதில் நானும் ஒருவன். 

நான் புலம்பெயர்ந்தபோது பக்குவம் இல்லாத பதின்ம வயது😀. அதனால் மாற்றங்களை உள்வாங்கக்கூடியதாக இருக்கின்றது☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

பலர் காலம் உறைந்த நிலையில் இருக்கின்றனர் என்றுதான் சொல்லியிருக்கின்றேன். சிலர் மாற்றங்களை அவதானித்து, ஏற்றுக்கொண்டுதான் உள்ளனர். அதில் நானும் ஒருவன். 

நான் புலம்பெயர்ந்தபோது பக்குவம் இல்லாத பதின்ம வயது😀. அதனால் மாற்றங்களை உள்வாங்கக்கூடியதாக இருக்கின்றது☺️

புலம் பெயர் நாட்டுக்கு நீங்கள் வந்தது  எப்போ? வந்து நீங்க வந்து ஐக்கியமானபோது  உங்கள் வயது என்னவாக இருந்தது  என்ன ? 

என்பதைபோலவே

பல வரலாறுகள் வெளிப்படையாக சொல்லபடாமல் மறைக்கபடுகின்றன.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

விசுகர், மீண்டும் மன்னிக்க வேண்டும்! அவசியமில்லாத ஒரு விடயத்தை ஊதிப்பெருப்பிக்கிறீர்கள். அப்படி எந்த விதியும் இல்லை! செய்தியை தலைப்பை மாற்றாமல், ஆனால் முக்கியமென்று கருதுபவற்றைக் கோடிட முடியும்!

இதே போன்ற ஒரு தாக்குதல் ருல்பென் ஐரோப்பிய வரலாற்று நூலொன்றை இங்கே பகிர்ந்த போதும் நடந்து, அங்கேயே அது விதிமீறல் அல்ல என்று தீர்ப்பு (precedence) இருக்கிறது.

நீங்கள் உங்களிடமிருக்கும் தேசியம் சார்ந்த சில கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தி விட வேண்டுமென்ற துடிப்பினால் கோபம் கொள்கிறீர்கள் என நினைக்கிறேன். அப்படியில்லையெனில் மன்னித்தருள்க!

சம்மந்தப்பட்டவரே எனது பதிவுகள் அனைத்தும் திணிப்புகள் தான் என்று சொல்லி விட்ட பிறகு?????

Link to comment
Share on other sites

20 hours ago, விசுகு said:

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? அந்த பதிவை நான் படிக்கவே இல்லை.

நமது பெரும் குறைபாடு ஒரு விடயத்தை யாரும் எழுதினால் அதை முழுமையாக வாசிப்பதில்லை. 

முதலில் விடயங்களை வாசித்து புரிந்து கொண்டு பின்னர் அதுபற்றி உரையாடலை மேற்கொள்வது தான் ஒரு இனத்தின் மாற்றம் அல்லது மறுமலர்ச்சிக்கு உதவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, shanthy said:

நமது பெரும் குறைபாடு ஒரு விடயத்தை யாரும் எழுதினால் அதை முழுமையாக வாசிப்பதில்லை. 

முதலில் விடயங்களை வாசித்து புரிந்து கொண்டு பின்னர் அதுபற்றி உரையாடலை மேற்கொள்வது தான் ஒரு இனத்தின் மாற்றம் அல்லது மறுமலர்ச்சிக்கு உதவும். 

இலவச ஆலோசனைகளுக்கு முன் நீங்கள் இங்கே பேசப்படும் விடையம் என்ன என்று வாசித்தீர்களா??

ஒன்றை குறிப்பெடுத்து கோடிட்டு வாசகர்களுக்கு தருவது சரியாக?? நீங்களும் ஒரு புத்தக ஆசிரியர் என்று நினைக்கிறேன்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, shanthy said:

நமது பெரும் குறைபாடு ஒரு விடயத்தை யாரும் எழுதினால் அதை முழுமையாக வாசிப்பதில்லை. 

முதலில் விடயங்களை வாசித்து புரிந்து கொண்டு பின்னர் அதுபற்றி உரையாடலை மேற்கொள்வது தான் ஒரு இனத்தின் மாற்றம் அல்லது மறுமலர்ச்சிக்கு உதவும். 

யாழின் மூலம்  எம் பாவ பட்ட இனத்துக்கு ஏதாவது உதவி பண்ணவேண்டும் என்று  நல்ல எண்ணத்துடன் உயர்ந்து நிற்பவர்களில்...

முதலில் சாந்தியக்கா... அதுக்கு அப்புறம்தான் விசுகு அண்ணா..

எதுக்குத்தான் இவர்களுக்குள் சண்டை பிடிக்கிறார்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விசுகு said:

சம்மந்தப்பட்டவரே எனது பதிவுகள் அனைத்தும் திணிப்புகள் தான் என்று சொல்லி விட்ட பிறகு?????

திணிப்புக்கள் என்ற சொல்லைக் கொண்டு வந்தது நீங்கள். திணிப்பது என்றால் பிடிக்காத ஒன்றை வாய்க்குள் தீத்துவது.. உங்களுக்கு ஒவ்வாமையாக இருப்பதால்தான் திணிப்பதாகத் தெரிகின்றது. 

Quote

நான் வாசிக்காமல் செய்திகளை, கட்டுரைகளை ஒட்டுவதில்லை. வாசித்தவற்றில் யாழில் ஒட்டலாம் என்று கருதுபவற்றை மட்டும்தான் ஒட்டுவது. அதனால் நான் ஒட்டுவதை எல்லாம் கருத்துத் திணிப்பாகவே கருதலாம்😀

நான் எழுதிய கருத்துக்குப் பின்னால் ஒரு ஸ்மைலி போட்டிருந்தேன். அதைக் கற்பூரம் மாதிரிக் கப்பெண்டு பிடிச்சிருப்பீங்கள் என்று பார்த்தால்.. 

இதுக்குத்தான் வாத்தியார் வந்து புட்டுபுட்டு வைக்கவேண்டும்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

திணிப்புக்கள் என்ற சொல்லைக் கொண்டு வந்தது நீங்கள். திணிப்பது என்றால் பிடிக்காத ஒன்றை வாய்க்குள் தீத்துவது.. உங்களுக்கு ஒவ்வாமையாக இருப்பதால்தான் திணிப்பதாகத் தெரிகின்றது. 

நான் எழுதிய கருத்துக்குப் பின்னால் ஒரு ஸ்மைலி போட்டிருந்தேன். அதைக் கற்பூரம் மாதிரிக் கப்பெண்டு பிடிச்சிருப்பீங்கள் என்று பார்த்தால்.. 

இதுக்குத்தான் வாத்தியார் வந்து புட்டுபுட்டு வைக்கவேண்டும்😁

உங்கள் அரசியல் புரியாததல்ல சிரித்து கொண்டே  விதைப்பதை பாராது கடந்து போதலும் கற்பூரங்களுக்கு மட்டுமே புரிந்த பாசை. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

ஒன்றை குறிப்பெடுத்து கோடிட்டு வாசகர்களுக்கு தருவது சரியாக?? நீங்களும் ஒரு புத்தக ஆசிரியர் என்று நினைக்கிறேன்???

விசுகு  அண்ணை. நீங்கள் எவ்வாறு. கோடுயிடக்கூடாது  என்று  வாதிடுகிறீரகளே.  அதே  அளவு  வலுவுடன். கிருபன். கோடுயிடமுடியுமென வாதிட முடியும்.  எனெனில் அவரும். உங்களப்போல். ஒரு இலங்கைத்தமிழன். அவருக்கும்   தனக்கு. எது  சரியெனப்படுவதை. தமிழ் மக்கள். மத்தியில். வைக்க. உரிமையுண்டு. நீங்கள். விரும்பதுவிடில் வாசிக்காது விடலாம். அது  உங்கள் உரிமை ஆனால். வாசிக்காத ஒரு விடயம்.  பற்றி  எப்படி. கருத்துவைக்கமுடியும்.?(சரி. /பிழை). மேலும். அம்மாணவின். கருத்துதான். எதிர்காலத்தமிழ் சமூகத்தின்  கருத்தாகயிருக்கும்

வெளி நாடுகளில் வாழும். வயோதிபர்கள். சிறுபான்பியாக. மாறிவருகிறது. இளையோர் பெரும்பான்மையாக.  வருகிறார்கள்.  இனிவரும் காலங்களில் அவர்களின் கருத்தே. தமிழரின் கருத்தாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

விசுகு கூறுவதில் ஒரு நியாயம் உள்ளது. கிருபனாகட்டும் அல்லது இணைப்புக்களை வழங்கும் இதர உறுப்பினர்களாகட்டும் மூலத்தில் உள்ளவற்றில் மாற்றம் செய்வது தவறு. இது ஒருவிதமான கருத்து திணிப்பே.

தாம் பார்த்தவற்றை இங்கு பகிர்வதற்கு இணைப்புக்களை வழங்குபவர்களின் சேவையை மெய்ச்ச வேண்டும் . அதேசமயம், இணைப்பு பற்றிய தமது கருத்தை மூலத்தை திரிவுபடுத்தாமல் பிரத்தியேகமாக வழங்குவது சிறப்பு. அல்லது இவை தவறான முன்னுதாரணமாக அமையும்.

தேவை என்றால் கட்டுரை ஆசிரியரே முக்கியமான விடயங்களை கோடிட்டு காட்டியோ அல்லது நிறவேறுபாடுகள் மூலமோ செய்யலாம். அதுவல்லாமல் அதை பிரதி செய்பவர்கள் உள்ளடக்கத்தின் வெளிப்படுத்தலில் மாற்றம் செய்யும்போது ஆசிரியர் அடிப்படையில் எதை அழுத்தி என்ன செய்தியை சொல்ல வருகின்றார் என்பதை கிரகிக்கும் வாசகர்கள் பார்க்கும் பார்வை நிச்சயம் மாற வாய்ப்பு உள்ளது.

9 minutes ago, Kandiah57 said:

விசுகு  அண்ணை. நீங்கள் எவ்வாறு. கோடுயிடக்கூடாது  என்று  வாதிடுகிறீரகளே.  அதே  அளவு  வலுவுடன். கிருபன். கோடுயிடமுடியுமென வாதிட முடியும்.  எனெனில் அவரும். உங்களப்போல். ஒரு இலங்கைத்தமிழன். அவருக்கும்   தனக்கு. எது  சரியெனப்படுவதை. தமிழ் மக்கள். மத்தியில். வைக்க. உரிமையுண்டு. நீங்கள். விரும்பதுவிடில் வாசிக்காது விடலாம். அது  உங்கள் உரிமை ஆனால். வாசிக்காத ஒரு விடயம்.  பற்றி  எப்படி. கருத்துவைக்கமுடியும்.?(சரி. /பிழை). மேலும். அம்மாணவின். கருத்துதான். எதிர்காலத்தமிழ் சமூகத்தின்  கருத்தாகயிருக்கும்

வெளி நாடுகளில் வாழும். வயோதிபர்கள். சிறுபான்பியாக. மாறிவருகிறது. இளையோர் பெரும்பான்மையாக.  வருகிறார்கள்.  இனிவரும் காலங்களில் அவர்களின் கருத்தே. தமிழரின் கருத்தாகும். 

இதை வாசித்தீர்களா???

இங்கே பேச்சு அவரது கருத்து பற்றியதல்ல.  இன்னொருவரது ஆக்கத்தில் தனக்கு சார்பான கருத்துக்களை தடித்த எழுத்தில் காட்டி வாசகர்களுக்கு விட்டமை.

மற்றவர்களை தாமாக சிந்திக்க முடிவெடுக்க விடவேண்டும் என்று சொல்லும் அதே கூட்டம் தான் இதையும் செய்கிறது? அப்போ நாம் எதை நோக்கி பயணிக்கின்றோம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

அது  உங்கள் உரிமை ஆனால். வாசிக்காத ஒரு விடயம்.  பற்றி  எப்படி. கருத்துவைக்கமுடியும்.?

கந்தையாண்ணை, இங்கு சில கருத்துக்கள் பதிவுகளை வாசிக்காமல்தான் வைக்கப்படுகின்றன. உள்ளடக்கம் இப்படித்தான் இருக்கும் என்ற ஊகத்தோடுதான் கருத்துக்கள் வரும். 

வாசிப்பது எல்லாவற்றோடும் நான் முழுமையாக ஒத்துப்போவதில்லை. எனினும் அவை புதியவற்றை அறிய உதவும். 

எதையும் படிக்கும்போது அவற்றில் சற்று ஐயமும், இன்னும் மேலும் அறியவேண்டியவை உள்ளன என்னும் எண்ணமும் வந்தாலே போதும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

இதை வாசித்தீர்களா???

இங்கே பேச்சு அவரது கருத்து பற்றியதல்ல.  இன்னொருவரது ஆக்கத்தில் தனக்கு சார்பான கருத்துக்களை தடித்த எழுத்தில் காட்டி வாசகர்களுக்கு விட்டமை.

ஆம் எனக்கு. தெரியும்.  அவருக்கு. பிடித்த பகுதியைக். கோடியிட்டுயுள்ளார். அதில். என்ன  பிழை. ? இங்கே. பச்சைப்புள்ளி. குத்துவதுபோல்.  எடுத்தால். போச்சு. ஏன். தேவையில்லாமால். வாக்குவாதப்படவேண்டும். 

Link to comment
Share on other sites

26 minutes ago, விசுகு said:

இலவச ஆலோசனைகளுக்கு முன் நீங்கள் இங்கே பேசப்படும் விடையம் என்ன என்று வாசித்தீர்களா??

ஒன்றை குறிப்பெடுத்து கோடிட்டு வாசகர்களுக்கு தருவது சரியாக?? நீங்களும் ஒரு புத்தக ஆசிரியர் என்று நினைக்கிறேன்???

மன்னிக்கவும் விசுகு, கட்டுரையை முழுவதும் வாசித்தேன். 

சிலவற்றுக்கு அழுத்தம் கொடுத்து காட்டுவதற்காக கோடிட்டுக் காட்டுவது வளமை. அதில் என்ன தவறு? 

உண்மையில் எங்கள் பிள்ளைகள் எண்ணங்கள் வித்தியாசமானவை. அதனை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

ஒரு சிறு உதாரணம் :-

பிள்ளைகள் ஒரு வரலாற்று ஆய்வை மேற்கொள்வதெனில் முதலில் முறைசார்ந்த பேராசிரியர் அதை அனுமதிக்க வேண்டும். ஒரு ஆய்வில் செவிவழிச் செய்திகளை சேர்க்க முடியாது. 

சரியான முறையில் ஆதாரங்கள் அடிப்படையில் தான் அமைய வேண்டும். இப்படி நிறைய வரைமுறைகள் இருக்கிறது. 

தமிழ்த்தேசியம் சார்ந்து ஒரு தமிழ்ப் பிள்ளை ஆய்வு செய்கிறதென்றால் அத பற்றிய ஏற்கனவே வந்த அரசியல் சரி தவறு அனைத்தும் சேர்த்துத்தான் செய்வார்கள். 

நாங்கள் செவிவழிச் செய்திகளை அச்சாக்கம் செய்து எங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்து இருக்கிறோமா? என்று தேடினால் இல்லை. 

குறித்த மாணவியின் ஆய்வு இன்னொரு காலத்தில் இன்னொரு பிள்ளையின் தேடலுக்கான ஆதாரமாகக்கூட அமையும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

கந்தையாண்ணை, இங்கு சில கருத்துக்கள் பதிவுகளை வாசிக்காமல்தான் வைக்கப்படுகின்றன. உள்ளடக்கம் இப்படித்தான் இருக்கும் என்ற ஊகத்தோடுதான் கருத்துக்கள் வரும். 

வாசிப்பது எல்லாவற்றோடும் நான் முழுமையாக ஒத்துப்போவதில்லை. எனினும் அவை புதியவற்றை அறிய உதவும். 

எதையும் படிக்கும்போது அவற்றில் சற்று ஐயமும், இன்னும் மேலும் அறியவேண்டியவை உள்ளன என்னும் எண்ணமும் வந்தாலே போதும். 

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்

அந்த பதிவின் கருத்து சம்பந்தமாக நான் எதுவும் இதுவரை எழுதவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

மற்றவர்களை தாமாக சிந்திக்க முடிவெடுக்க விடவேண்டும் என்று சொல்லும் அதே கூட்டம் தான் இதையும் செய்கிறது? அப்போ நாம் எதை நோக்கி பயணிக்கின்றோம்??

குதிரையைக் கொண்டுபோய் ஆற்றங்கரையில் விட்டால்தானே நீரை அருந்தும்!

நான் ஆற்றங்கரையில் கொண்டேவிட்டேன். குடி என்று சவுக்கால் விளாறி அடிக்கவில்லையே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.