Jump to content

நாம் எனும் ஆப்பிரிக்க பாண்டு தத்துவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எனும் ஆப்பிரிக்க பாண்டு தத்துவம்

africa  
 

சி.பேசில் சேவியர்

மானுடவியல் ஆய்வாளர் ஒருவர் ஒருமுறை ஆப்பிரிக்கப் பழங்குடிச் சிறுவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். ஒரு கூடை நிறைய மிட்டாய்களை வைத்தார். “யார் அதை முதலில் அடைகிறாரோ, அவருக்கே அந்த மிட்டாய்கள் அனைத்தும்” என்றார். அனைத்துச் சிறுவர்களும் கைகோத்தார்கள், இணைந்து ஓடிக் கூடையை அடைந்தார்கள், இனிப்புகளைப் பகிர்ந்து உண்டார்கள். ஆச்சரியப்பட்ட ஆய்வாளர் கேட்டார், “தனியாக ஜெயித்திருந்தால், கூடை முழுவதும் தனி ஆளுக்குக் கிடைத்திருக்குமே?” அதற்கு ஒரு சிறுமி, “பாண்டு” என்று புன்சிரிப்புடன் கூறிவிட்டு ஓடினாள். அதன் அர்த்தம், “எல்லாரும் வருத்தமாக இருக்கும்போது, எப்படி ஒருவர் மட்டும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்?”

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நமக்குள் எழும் வினாவும் இதுதான். நம் வீட்டில் உள்ளோரும், அருகில் உள்ளோரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, ஏன் அவர்களில் சிலர் இறக்கும்போதும், நான் மட்டும் எப்படி மகிழ்ந்திருக்க முடியும்? இந்தக் காலத்தில்தான் மனித உறவுகளின் முக்கியத்துவத்தை நாம் அதிகம் உணர்கிறோம். ஒருபுறம் சக மனிதர் குறித்த அச்சம் இருந்தாலும், மறுபக்கம் உணவு முதல் மருத்துவமனைகளுக்குத் தேவையானவற்றை வழங்குதல் வரை சாதி, மதம், தேசம் கடந்த மனிதநேயச் செயல்பாடுகளும் அன்றாடம் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ‘பிறர்’ பற்றிய தத்துவங்களினூடே பயணித்தால்தான், ஆப்பிரிக்க பாண்டு தத்துவத்தை இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டு பாராட்ட முடியும்.

 
 
 

பிறர் குறித்த தத்துவம்

மேற்கத்தியத் தத்துவ வரலாற்றில், சாக்ரடீஸின் “உன்னையே நீ அறிவாய்” மிகவும் புகழ்பெற்றது. மனிதர்கள் தத்துவக் கேள்விகளை எழுப்பத் தொடங்கியபோது, தன்னைப் பற்றியே அதிகம் சிந்தித்தார்கள். பிரான்ஸ் நாட்டுத் தத்துவவியலாளர் ரெனே தெகார்தேவின் புகழ்பெற்ற வாக்கு “நான் சிந்திக்கிறேன், எனவே இருக்கிறேன்!” இந்தச் சிந்தனை மேலைநாட்டுத் தத்துவத்தில் கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பெரும் செல்வாக்கு செலுத்திவருகிறது. தெகார்தேவை விமர்சனப் பார்வையோடு நோக்கும்போது, அவரின் கருத்து தன்னை முன்னிலைப்படுத்துகிற பார்வை; பிறரை ஒதுக்குகிற கருத்தியல்.

பிறர் பற்றிய இருத்தலியல் பார்வை: சார்த்ர் மற்றும் புபேர்

தற்காலத் தத்துவ மரபில், இருத்தலியல் தத்துவவியலாளர்கள் பிறர் பற்றி அதிகம் பேசியிருக்கிறார்கள். அவர்கள் இரு நேரெதிர் பார்வைகளை முன்வைத்தனர். சார்த்ர், ஆல்பெர் காம்யு போன்றோர் முதல் வகை. இவர்கள் மனித உறவு நிலைகளின் எதிர்மறையான பரிமாணத்தைச் சுட்டிக்காட்டினார்கள். தத்துவவியலாளர் சார்த்ரின் ‘மீள முடியுமா?’ நாடகத்தில் வரும் மிகப் புகழ் பெற்ற மேற்கோள் “நரகமே பிறர்”. ஒவ்வொரு மனித உறவும் ஆதிக்க வகை சார்ந்தது. இதுதான் சார்த்ரின் இருத்தலியக் கொள்கை!

மார்டின் ஹைடகர், கேப்ரியல் மார்சல், மார்டின் புபேர் போன்ற சிந்தனையாளர்கள் மனித இருப்பு மற்றும் மனித உறவு நிலைகளின் நேர்மறையான பார்வையை முன்வைக்கின்றனர். மார்டின் புபேர் ‘நான்-அது’ என்பதற்கு மாறாக ‘நான்-நீங்கள்’ என்ற உறவு நிலை பற்றிப் பேசுகிறார். முதலாவது நிலையில்தான் ஆதிக்கம் இருக்கும்; ‘மனிதர்-பொருள்’ மனநிலை இது. இங்கு மனிதர் ‘பொருளாக’ பயன்படுத்தப்படுகின்றனர். நுகர்வுக் கலாச்சாரத்தில் பொருட்கள் ‘அன்பு’ செய்யப்படுகின்றன எனலாம். ‘நான்-நீங்கள்’ மனநிலை இதற்கு முற்றிலும் வேறுபட்டது. இங்கு அன்பு இருக்கும்; மனிதர் ஒருபோதும் பயன்படுத்தப்படுவதில்லை. இங்குதான் முழு மனித நிறைவு இருக்கும். பிறர் மூலமே நாம் நாமாகிறோம். பிறரின்றி மனித வாழ்வின் முழுமையை அடைய முடியாது என்பது புபேரின் நிலைப்பாடு.

பிறரும் பின்நவீனத்துவமும்: லெவினாஸ்

நவீன அறிவொளிக் காலத்தை விமர்சித்த பின்நவீனத்துவமானது வேறுபாடுகளையும் பிறர்மையையும் கொண்டாடுகிறது. பின்நவீனத்துவ ஓர்மை என்பது வேறுபட்ட பண்பாடுகள், சமயங்கள், அறநெறி மரபுகள், சிறுபான்மைக் குழுக்கள் போன்றவற்றில் காணப்படும் பிறர் மீது அக்கறை காட்டுகிறது. பிறர்மையை எந்த அளவுக்கு ஒரு பன்மைத்துவச் சமூகம் அனுமதிக்கிறது என்பதில்தான் அதன் முதிர்ச்சி வெளிப்படும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. உதாரணமாக, பிரான்ஸ் நாட்டு பின்நவீனத்துவச் சிந்தனையாளர் இம்மேனுவேல் லெவினாஸ் மனிதர்களை ‘பிறருக்குப்-பொறுப்பாக-இருக்கும்-உயிரி’ என்றே வரையறுக்கிறார். இவரின் பிறர் பற்றிய தத்துவம் புகழ்பெற்றது. பிறரில் இருக்கும் பிறர்மையை எண்ணிப் பார்த்து அதற்குப் பொறுப்பாக இருக்கும் அறநெறியை வெவினாஸ் தொடர்ந்து அழுத்தமாக வலியுறுத்தினார். “நீ இருப்பதாலேயே, நான் இருக்கிறேன்” என்ற புரட்சிகரமான சிந்தனையே இது.

ஆப்பிரிக்க பாண்டு தத்துவம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட நெடிய மேற்கத்திய தத்துவப் பயணத்தின் இறுதி எல்லையை, ஆப்பிரிக்கப் பழங்குடியினர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அடைந்துவிட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. பாண்டு தத்துவத்தைச் சுருக்கமாக, “நாம் இருப்பதாலேயே, நான் இருக்கிறேன்” என்று சொல்லலாம். ‘நான்-நீ’ கடந்த ‘நாம்’ எனும் சிந்தனை இது. நெல்சன் மண்டேலா சொல்கிறார், “ஆப்பிரிக்காவில் பயணிப்பவர் அங்கு ஒரு கிராமத்தில் நின்று, தண்ணீரும் உணவும் கேட்கத் தேவையில்லை. அவர் நின்றாலே மக்கள் உணவு கொடுத்து உபசரிப்பார்கள். இது பாண்டு சிந்தனையின் ஓர் அம்சம்.” நோபல் பரிசு பெற்ற கறுப்பினச் செயல்பாட்டாளர் டெஸ்மண்ட் டூட்டூ இன்னும் விரிவாக விளக்குகிறார். “ஒரு மனிதர் பிற மனிதரோடு கூடி வாழ்வதாலேயே மனிதராகிறார். கூடி வாழும் குழும வாழ்வில்தான் மனிதர் முழுமையாகிறார். பாண்டு தத்துவத்தோடு வாழும் நபர், பிறருக்கு எப்போதும் திறந்த மனதுடன், அவரை மதிப்பவராகவும், அவருக்கு உதவுபவராகவும் விளங்குகிறார். ஏனெனில், பிறர் என்பவர் பெரிய முழுமையின் ஒரு பகுதி. தனிநபர் பாதிக்கப்படும்போது குழுமமும் பாதிக்கப்படுகிறது.”

அமெரிக்க, ஜரோப்பிய நாடுகளே கரோனா பெருந்தொற்றைக் கையாளத் திணறியபோது, ஆப்பிரிக்க நாடுகள் வெகு சாமர்த்தியமாக நிலைமையைச் சமாளித்தன. அதற்கான பல காரணங்களில் ஒன்றாக அவர்களின் இந்த ‘பாண்டு’ தத்துவத்தையும் கருதலாம்!

- சி.பேசில் சேவியர், ‘பிலாசபி ஆஃப் மார்ஜின்ஸ்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: basilxavier@gmail.com

 

https://www.hindutamil.in/news/opinion/columns/680900-africa-2.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.