Jump to content

மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்

மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்

  — வேதநாயகம் தபேந்திரன் —  

 மனிதனின் அடிப்படைத் தேவைகளில் இரண்டாவது தான் ஆடை.  ஆங்கில மொழியில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மட்டுமே ரவுசர் (Trouser) எனப்படும் நீளக் காற்சட்டையை எமது நாட்டில் போடலாமென்ற வழமை ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று யாவரும் ரவுசர் அணிகின்றனர். நீளக் காற்சட்டையான இதனை லோங்ஸ் (Longs) எனவும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. 

டெனிம் துணியில் தைக்கப்பட்ட இறுக்கமான நீளக் காற்சட்டைக்கு மட்டுமே ஜீன்ஸ் என்ற பெயர் உள்ளது. டெனிம் ஜீன்ஸ் எனத்தான் அழைப்பார்கள். ஆனால் இன்று எல்லா ரவுசர்களுக்கும் ஜீன்ஸ் என்ற பொதுப்பெயர் வழங்கப்படுகின்றது. 

எமது பண்பாட்டில் ரவுசர் ஆண்களுக்கு உரிய ஆடையா? அல்லது பெண்களுக்குரிய ஆடையா? எனக்கேட்டால் ஆண்களுக்குரிய ஆடைதான் என ஒரு காலத்தில் பதில் சொல்லி இருப்பார்கள். 

தற்காலத்தில் ”ரவுசர் ஆண், பெண் இருபாலாருக்கும் உரிய ஆடைதான்” எனக் கூறுவார்கள். 

தாயகத்தில் சேலை, சுடிதார் (பஞ்சாபி), பாவாடை தாவணி, கவுணுடன் இருந்த எம் குலத்துப் பெண்கள் எல்லாம் புலம்பெயர்ந்த போது டெனிம் ஜீன்ஸ் அணிந்து கோலம் மாறினார்கள். 

காலம் மாற்றவில்லை. குளிர்கால நிலை, அந்தந்த நாட்டு நாகரிகங்கள் அவர்களின் கோலத்தை மாற்றிவிட்டது. 

ஆரம்பத்தில் கொழும்பு போன்ற பெருநகரங்களில் தான் தமிழ் பெண் பிள்ளைகள் டெனிம்  ஜீன்ஸ் அணிந்தார்கள். 

தற்போது எல்லா இடங்களிலும் வளர்ந்த பெண் பிள்ளைகள் பலர் ரியூசன், பல்கலைக்கழகம்  உட்பட பொது இடங்களுக்கும் ஜீன்ஸ் போட்டுச் செல்வதைச் சாதாரணமாகக் காணலாம்.  

வேட்டியுடன் வாழ்ந்த எமது நாகரிகங்கள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என மாறி மாறி வந்த காலனித்துவ ஆட்சிகள் காரணமாக மெல்ல மெல்ல நீளக் காற்சட்டைக்கு மாறின. 

குடியேற்ற ஆட்சிக்காலங்களில் லோங்ஸ்சுடன் வரும் எம்மவர்களில் பலர் தமக்குள் ஆங்கிலத்தில் மட்டும் கதைப்பார்கள். தமிழ் தெரியாதது போல நடப்பார்கள். 

வெள்ளைத் துரைமாரால் அங்கீகரிக்கப்பட்ட கறுப்புத் துரையாகத் தம்மைக் காட்டிக் கொள்வார்கள். 

 யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் சப்பல் வீதி, முதலாம் குறுக்குத் தெரு, இரண்டாம் குறுக்குத் தெரு, வேம்படி வீதி போன்ற வீதிகளில் வசித்தவர்களில்  பறங்கி இனத்தவர்களும் குறித்த வீதத்தில் இருந்தார்கள். அவர்களில் மிக மூத்த தலைமுறையினர் அந்நிய மொழிகளில் கதைப்பார்கள். கட்டைக் காற்சட்டை போடுவார்கள். ஜீன்ஸ் போல நீளக் காற்சட்டையும் அணிவார்கள். 

அந்தப் பிரதேசத்தை யாழ்ப்பாணத்தின் கொழும்பு -7 என்பார்கள். 1980களின் ஆரம்பத்தில் துப்பாக்கிகள் வெடிக்க ஆரம்பிக்க அவர்களில் பலர்  தமது பரம்பரைத் தொடர்பு உள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றுவிட்டார்கள். 

ஏனையவர்கள் பின்னாளில் தமிழர்களுடன் கலந்து விட்டனர்.  

கட்டைக் காற்சட்டையை சோர்ட்ஸ் (Shorts) எனவும் நீளக் காற்சட்டையை பெல்ஸ் அல்லது பெல்போட்டம் எனவும், பிற்காலத்தில் ஜீன்ஸ் எனவும் அழைத்தார்கள். 

ஆனால் இந்த நீளக் காற்சட்டைகளின் நீள அகலங்கள், தையல் மாதிரிகள், அலங்காரங்கள், துணி வகைகள் காலத்துக்குக் காலம் மாறுபட்டன. 

உடையலங்கார நிபுணர்கள், தையல்காரர்கள் புகுத்தும் நவீனங்கள் அழகான இளைஞர்கள், இளம் பெண்கள் அணிந்து உலாவர அது பிரபலமாகிவிடுகின்றது. 

முன்னாளில் மேற்கில் உருவான ஒரு நாகரிகம் கடல் கடந்து, கண்டம் கடந்து எம் போன்ற கீழைத்தேய நாடுகளுக்கு வந்து பரவலாகப் பல மாதங்கள் எடுத்தது. 

தற்போது உலகமயமாதலும் சமூக வலைத்தளங்களது வளர்ச்சியும் ஒரு புதிய ஸ்ரைல் எமது நாட்டை எட்டிப்பார்க்க ஒரு சில நிமிடங்கள் போதும்.  

அது நாடெங்கும் பரவ ஒரு சில மணித்தியாலங்கள் போதும். 

”கிழிஞ்சதைப் போட்டால் வறுமை. கிழிச்சுப் போட்டால் நாகரிகம்” ஏழ்மையும், பணக்காரத்தனமும் ஆடையால் ஒப்பிடப்பட்டே சமூக வலைத்தளங்களில் பதிவு வருகின்றது. 

1970களின் பிற்பகுதியில் எமது நாட்டில் பெல்போட்டம் பிரபலமாக இருந்தது. 

நீளக் காற்சட்டையின் கீழ் கால் பகுதி அகன்று இருப்பதை பெல்போட்டம், பெல்ஸ் என்பார்கள். எனது சிறு வயதில் அதனை அணிந்து மகிழ்ந்துள்ளேன். 

1980களின் ஆரம்பத்தில் கால்பகுதி ஒடுக்கமான ரவுசர் பிரபலமாகத் தொடங்கியது. இந்த வகை நீளக் காற்சட்டையில் கீழ் கால் பகுதி அகலமாக இருக்காது. கால் பாதம் புகக்கூடியதான அளவாக இருக்கும். 

இந்த ரவுசர் வரத் தொடங்கிய காலத்தில் ஹொட்றொயில் (Hotroil) துணியில் தைக்கப்பட்ட   ரவுசர் பிரபலமாக இருந்தன. 

டெனிம் ஜீன்ஸ் இன்று வரை பிரபலமாக இருக்கின்றது. குளிர் நாடுகளில் குளிரைத் தாங்கக் கூடிய ஒரு வகைத் துணியாக டெனிம் அன்றும் இன்றும் இருக்கின்றது. 

ஹொட்றொயில் துணியிலான உடுப்புகள் ஒரு சில வருடங்களின் பின்பாகப் பிரபலம் இழந்து போனது. 

பின்னாளில் இத் துணியைக் காணமுடியவில்லை. அது போல ஜெலோலைன், கறா எனத் துணி வகைகள் காலத்துக்குக் காலம் ஸ்ரைலாக பிரபலமாக வந்தன. 

பிளிற்ஸ் வைத்துத் தைப்பது ஒரு காலத்தில் ஸ்ரைலாக இருந்தது. பின்னொரு காலத்தில் பிளிற்ஸ் வைக்காமல் தைப்பது ஸ்ரைலாக மாறியது. 

ரவுசருக்கு இடுப்புப் பகுதியில் இரண்டு பக்கமும் சிறியதொரு தகடு வைத்துத் தைத்து அதில் வைத்து இறுக்கிக் கட்டுவார்கள். பெல்ற் தேவைப்படாது. 

இப்படியே ஸ்ரைலுகள் காலத்துக்குக் காலம் மாறும். 

பாரதிராஜாவின் நிறம் மாறாத பூக்கள் படத்தின் நாயகன் சுதாகர் இடுப்பில் பெல்ற் இல்லாமல் வருவார். 

ரவுசர், ஜீன்ஸ்க்கு பெல்ற் அணிவது ஒரு ஸ்ரைலாகப் பார்க்கப்பட்டாலும் இடுப்பிலிருந்து ஜீன்ஸ் வழுகிக் கீழே இறங்காமல் பாதுகாக்கும் ஒரு கவசமே பெல்ற் எனலாம். 

வன்முறைக் காட்சிகளில் பெல்ற்ரால் ஒருவரை அடிப்பதைக் காணலாம். தனிப்பட்ட வாழ்விலும் இது போன்ற நிகழ்வுகளைக் காணலாம். 

ரவுசரில், ஜீன்சில் தையல் நாகரிகங்கள் பல விதத்தில் வரும். 

எமது பாடசாலைக் காலத்தில் ஓ.எல் பரீட்சை வரையும் காற்சட்டை போட்டோம். உயர்தர வகுப்பு வந்ததும் மெல்ல மெல்ல நெளிந்து நெளிந்து வெள்ளைக் கலரில் ரவுசர் போட்டோம். 

உயர்தர பரீட்சை எடுத்ததன் பின்னர்தான் ரவுசர்  போட்டவர்களும் உண்டு. 

இன்று ஓ.எல் (சாதாரண தரம்) படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் நீளக் காற்சட்டையாம். ரவுசர் போடும் பழக்கம் சாதாரணமாகி விட்டது. 

எமது காலத்தில் யாழ்ப்பாண நகரத்தின் முஸ்லீம் பிரதேசத்தில் ஆப்தீன் ரெயிலர்ஸ் எனும் பெயரில் ஆப்தீன் என்பவர் கடை வைத்திருந்தார். அவரே முன்னணி ரெயிலராக இருந்தார். அவரிடம் தைத்தால் ரவுசர் நேர் சீராக இருக்கும்.  

இன்று இடுப்பு, தொடை, கால் எல்லாம் இறுக்கிப் பிடிக்கும் ரவுசர்கள், ஜீன்சுகள்தான் பாசன். அதனைப் படாத பாடுபட்டு இளசுகள் போடப்படும் பாடு இருக்கிறதே பார்க்கப் பார்க்கச் சிரிப்பு வரும். ஆனால், இதே இறுக்கமான ரவுசர்கள் எமது அப்பாக்கள் காலத்திலும் இருந்துள்ளது. கொஞ்சம் வித்தியாசம். அதற்கு முன்னதாக கொழுகொழுத்த ரவுசர்கள். இப்படி ரவுஸரின் ஸ்டைல் காலத்துக்கு காலம் மாறி, அல்லது மீண்டு வந்திருக்கிறது. 

ஜீன்ஸ், ரவுசர் தொடர்பான நினைவலைகள் மிக நீளமானவை. உங்களுக்கும் மாறுபட்ட அனுபவங்கள் இருக்கும்.  
 
https://arangamnews.com/?p=5288

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழில் பேகர் இன மக்கள் வசிக்த்தார்கள் என இன்றுதான் கேள்விபடுகின்றேன்.
மிக மூத்த தலைமுறையினர் கதைத்த அந்த அன்னிய மொழி என்ன? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, colomban said:

யாழில் பேகர் இன மக்கள் வசிக்த்தார்கள் என இன்றுதான் கேள்விபடுகின்றேன்.
மிக மூத்த தலைமுறையினர் கதைத்த அந்த அன்னிய மொழி என்ன? 

என்னுடன், இரண்டு பேர் படித்தவர்கள். ஆங்கிலமும், தமிழும் சரளமாக கதைப்பார்கள்.

 • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

யாழில் பேகர் இன மக்கள் வசிக்த்தார்கள் என இன்றுதான் கேள்விபடுகின்றேன்.
மிக மூத்த தலைமுறையினர் கதைத்த அந்த அன்னிய மொழி என்ன? 

இலங்கை போர்த்துகீச கிரயோல் என அந்த மொழிக்கு பெயர்

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கை_போர்த்துக்கீச_கிரியோல்_மொழி

https://ta.m.wikipedia.org/wiki/பரங்கியர்

ஆங்கில மூலம்:

https://en.m.wikipedia.org/wiki/Sri_Lankan_Portuguese_creole

Edited by கற்பகதரு
 • Thanks 1
Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

தாயகத்தில் சேலை, சுடிதார் (பஞ்சாபி), பாவாடை தாவணி, கவுணுடன் இருந்த எம் குலத்துப் பெண்கள் எல்லாம் புலம்பெயர்ந்த போது டெனிம் ஜீன்ஸ் அணிந்து கோலம் மாறினார்கள். 

காலம் மாற்றவில்லை. குளிர்கால நிலை, அந்தந்த நாட்டு நாகரிகங்கள் அவர்களின் கோலத்தை மாற்றிவிட்டது. 

ஒரு விழாக்கால வருடத்தில் 

நல்லூர் திருவிழாவின்போது, இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து புலம் பெயர்ந்து திரும்ப ஊருக்கு வந்த நம்மின பெண்களை சிங்கள காவல்துறை தனியே உடை மாற்றும் ஒரு பேரூந்தை வைச்சிருந்து அதுக்குள் அவர்களை ஏத்தி பாவாடை தாவணிக்கும் சேலைக்கும் மாற சொல்லி கட்டளை இட்டார்களாமே,

அப்படி பின்புறத்தை இறுக்கமாக காண்பிக்கும் நோக்கில் அவர்கள்  உலவியதுக்கு காரணம் யாழ்நகரில் கடும் குளிர் நிலவியதாலா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, valavan said:

அப்படி பின்புறத்தை இறுக்கமாக காண்பிக்கும் நோக்கில் அவர்கள்  உலவியதுக்கு காரணம் யாழ்நகரில் கடும் குளிர் நிலவியதாலா?

இப்போது Skinny fit தானே நாகரீகம். அது தாயகத்திலும் இருக்கின்றதுதானே.

நல்லூர் கோவில் dress code ஐ அறிமுகப்படுத்தியுள்ளதாம். அதை மீறுபவர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் பாவடை, சட்டைக்கு பஸ்ஸுக்குள் மாறச்சொல்லிக் சிங்கள காவல்துறை கேட்டது நினைவில்லை. அப்படியானால் மாற்றுடையையும் கொடுத்திருக்கவேண்டுமே!

Link to comment
Share on other sites

லெகின்ஸ் பெண்களுக்கான உடை மட்டும் தானா, ஆண்களும் அணியலாமா...

இந்த திரி உடை பற்றியது என்பதால் இந்த கேள்வி...

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்

மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்

  — வேதநாயகம் தபேந்திரன் —  

 மனிதனின் அடிப்படைத் தேவைகளில் இரண்டாவது தான் ஆடை.  ஆங்கில மொழியில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மட்டுமே ரவுசர் (Trouser) எனப்படும் நீளக் காற்சட்டையை எமது நாட்டில் போடலாமென்ற வழமை ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று யாவரும் ரவுசர் அணிகின்றனர். நீளக் காற்சட்டையான இதனை லோங்ஸ் (Longs) எனவும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. 

டெனிம் துணியில் தைக்கப்பட்ட இறுக்கமான நீளக் காற்சட்டைக்கு மட்டுமே ஜீன்ஸ் என்ற பெயர் உள்ளது. டெனிம் ஜீன்ஸ் எனத்தான் அழைப்பார்கள். ஆனால் இன்று எல்லா ரவுசர்களுக்கும் ஜீன்ஸ் என்ற பொதுப்பெயர் வழங்கப்படுகின்றது. 

எமது பண்பாட்டில் ரவுசர் ஆண்களுக்கு உரிய ஆடையா? அல்லது பெண்களுக்குரிய ஆடையா? எனக்கேட்டால் ஆண்களுக்குரிய ஆடைதான் என ஒரு காலத்தில் பதில் சொல்லி இருப்பார்கள். 

தற்காலத்தில் ”ரவுசர் ஆண், பெண் இருபாலாருக்கும் உரிய ஆடைதான்” எனக் கூறுவார்கள். 

தாயகத்தில் சேலை, சுடிதார் (பஞ்சாபி), பாவாடை தாவணி, கவுணுடன் இருந்த எம் குலத்துப் பெண்கள் எல்லாம் புலம்பெயர்ந்த போது டெனிம் ஜீன்ஸ் அணிந்து கோலம் மாறினார்கள். 

காலம் மாற்றவில்லை. குளிர்கால நிலை, அந்தந்த நாட்டு நாகரிகங்கள் அவர்களின் கோலத்தை மாற்றிவிட்டது. 

ஆரம்பத்தில் கொழும்பு போன்ற பெருநகரங்களில் தான் தமிழ் பெண் பிள்ளைகள் டெனிம்  ஜீன்ஸ் அணிந்தார்கள். 

தற்போது எல்லா இடங்களிலும் வளர்ந்த பெண் பிள்ளைகள் பலர் ரியூசன், பல்கலைக்கழகம்  உட்பட பொது இடங்களுக்கும் ஜீன்ஸ் போட்டுச் செல்வதைச் சாதாரணமாகக் காணலாம்.  

வேட்டியுடன் வாழ்ந்த எமது நாகரிகங்கள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என மாறி மாறி வந்த காலனித்துவ ஆட்சிகள் காரணமாக மெல்ல மெல்ல நீளக் காற்சட்டைக்கு மாறின. 

குடியேற்ற ஆட்சிக்காலங்களில் லோங்ஸ்சுடன் வரும் எம்மவர்களில் பலர் தமக்குள் ஆங்கிலத்தில் மட்டும் கதைப்பார்கள். தமிழ் தெரியாதது போல நடப்பார்கள். 

வெள்ளைத் துரைமாரால் அங்கீகரிக்கப்பட்ட கறுப்புத் துரையாகத் தம்மைக் காட்டிக் கொள்வார்கள். 

 யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் சப்பல் வீதி, முதலாம் குறுக்குத் தெரு, இரண்டாம் குறுக்குத் தெரு, வேம்படி வீதி போன்ற வீதிகளில் வசித்தவர்களில்  பறங்கி இனத்தவர்களும் குறித்த வீதத்தில் இருந்தார்கள். அவர்களில் மிக மூத்த தலைமுறையினர் அந்நிய மொழிகளில் கதைப்பார்கள். கட்டைக் காற்சட்டை போடுவார்கள். ஜீன்ஸ் போல நீளக் காற்சட்டையும் அணிவார்கள். 

அந்தப் பிரதேசத்தை யாழ்ப்பாணத்தின் கொழும்பு -7 என்பார்கள். 1980களின் ஆரம்பத்தில் துப்பாக்கிகள் வெடிக்க ஆரம்பிக்க அவர்களில் பலர்  தமது பரம்பரைத் தொடர்பு உள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றுவிட்டார்கள். 

ஏனையவர்கள் பின்னாளில் தமிழர்களுடன் கலந்து விட்டனர்.  

கட்டைக் காற்சட்டையை சோர்ட்ஸ் (Shorts) எனவும் நீளக் காற்சட்டையை பெல்ஸ் அல்லது பெல்போட்டம் எனவும், பிற்காலத்தில் ஜீன்ஸ் எனவும் அழைத்தார்கள். 

ஆனால் இந்த நீளக் காற்சட்டைகளின் நீள அகலங்கள், தையல் மாதிரிகள், அலங்காரங்கள், துணி வகைகள் காலத்துக்குக் காலம் மாறுபட்டன. 

உடையலங்கார நிபுணர்கள், தையல்காரர்கள் புகுத்தும் நவீனங்கள் அழகான இளைஞர்கள், இளம் பெண்கள் அணிந்து உலாவர அது பிரபலமாகிவிடுகின்றது. 

முன்னாளில் மேற்கில் உருவான ஒரு நாகரிகம் கடல் கடந்து, கண்டம் கடந்து எம் போன்ற கீழைத்தேய நாடுகளுக்கு வந்து பரவலாகப் பல மாதங்கள் எடுத்தது. 

தற்போது உலகமயமாதலும் சமூக வலைத்தளங்களது வளர்ச்சியும் ஒரு புதிய ஸ்ரைல் எமது நாட்டை எட்டிப்பார்க்க ஒரு சில நிமிடங்கள் போதும்.  

அது நாடெங்கும் பரவ ஒரு சில மணித்தியாலங்கள் போதும். 

”கிழிஞ்சதைப் போட்டால் வறுமை. கிழிச்சுப் போட்டால் நாகரிகம்” ஏழ்மையும், பணக்காரத்தனமும் ஆடையால் ஒப்பிடப்பட்டே சமூக வலைத்தளங்களில் பதிவு வருகின்றது. 

1970களின் பிற்பகுதியில் எமது நாட்டில் பெல்போட்டம் பிரபலமாக இருந்தது. 

நீளக் காற்சட்டையின் கீழ் கால் பகுதி அகன்று இருப்பதை பெல்போட்டம், பெல்ஸ் என்பார்கள். எனது சிறு வயதில் அதனை அணிந்து மகிழ்ந்துள்ளேன். 

1980களின் ஆரம்பத்தில் கால்பகுதி ஒடுக்கமான ரவுசர் பிரபலமாகத் தொடங்கியது. இந்த வகை நீளக் காற்சட்டையில் கீழ் கால் பகுதி அகலமாக இருக்காது. கால் பாதம் புகக்கூடியதான அளவாக இருக்கும். 

இந்த ரவுசர் வரத் தொடங்கிய காலத்தில் ஹொட்றொயில் (Hotroil) துணியில் தைக்கப்பட்ட   ரவுசர் பிரபலமாக இருந்தன. 

டெனிம் ஜீன்ஸ் இன்று வரை பிரபலமாக இருக்கின்றது. குளிர் நாடுகளில் குளிரைத் தாங்கக் கூடிய ஒரு வகைத் துணியாக டெனிம் அன்றும் இன்றும் இருக்கின்றது. 

ஹொட்றொயில் துணியிலான உடுப்புகள் ஒரு சில வருடங்களின் பின்பாகப் பிரபலம் இழந்து போனது. 

பின்னாளில் இத் துணியைக் காணமுடியவில்லை. அது போல ஜெலோலைன், கறா எனத் துணி வகைகள் காலத்துக்குக் காலம் ஸ்ரைலாக பிரபலமாக வந்தன. 

பிளிற்ஸ் வைத்துத் தைப்பது ஒரு காலத்தில் ஸ்ரைலாக இருந்தது. பின்னொரு காலத்தில் பிளிற்ஸ் வைக்காமல் தைப்பது ஸ்ரைலாக மாறியது. 

ரவுசருக்கு இடுப்புப் பகுதியில் இரண்டு பக்கமும் சிறியதொரு தகடு வைத்துத் தைத்து அதில் வைத்து இறுக்கிக் கட்டுவார்கள். பெல்ற் தேவைப்படாது. 

இப்படியே ஸ்ரைலுகள் காலத்துக்குக் காலம் மாறும். 

பாரதிராஜாவின் நிறம் மாறாத பூக்கள் படத்தின் நாயகன் சுதாகர் இடுப்பில் பெல்ற் இல்லாமல் வருவார். 

ரவுசர், ஜீன்ஸ்க்கு பெல்ற் அணிவது ஒரு ஸ்ரைலாகப் பார்க்கப்பட்டாலும் இடுப்பிலிருந்து ஜீன்ஸ் வழுகிக் கீழே இறங்காமல் பாதுகாக்கும் ஒரு கவசமே பெல்ற் எனலாம். 

வன்முறைக் காட்சிகளில் பெல்ற்ரால் ஒருவரை அடிப்பதைக் காணலாம். தனிப்பட்ட வாழ்விலும் இது போன்ற நிகழ்வுகளைக் காணலாம். 

ரவுசரில், ஜீன்சில் தையல் நாகரிகங்கள் பல விதத்தில் வரும். 

எமது பாடசாலைக் காலத்தில் ஓ.எல் பரீட்சை வரையும் காற்சட்டை போட்டோம். உயர்தர வகுப்பு வந்ததும் மெல்ல மெல்ல நெளிந்து நெளிந்து வெள்ளைக் கலரில் ரவுசர் போட்டோம். 

உயர்தர பரீட்சை எடுத்ததன் பின்னர்தான் ரவுசர்  போட்டவர்களும் உண்டு. 

இன்று ஓ.எல் (சாதாரண தரம்) படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் நீளக் காற்சட்டையாம். ரவுசர் போடும் பழக்கம் சாதாரணமாகி விட்டது. 

எமது காலத்தில் யாழ்ப்பாண நகரத்தின் முஸ்லீம் பிரதேசத்தில் ஆப்தீன் ரெயிலர்ஸ் எனும் பெயரில் ஆப்தீன் என்பவர் கடை வைத்திருந்தார். அவரே முன்னணி ரெயிலராக இருந்தார். அவரிடம் தைத்தால் ரவுசர் நேர் சீராக இருக்கும்.  

இன்று இடுப்பு, தொடை, கால் எல்லாம் இறுக்கிப் பிடிக்கும் ரவுசர்கள், ஜீன்சுகள்தான் பாசன். அதனைப் படாத பாடுபட்டு இளசுகள் போடப்படும் பாடு இருக்கிறதே பார்க்கப் பார்க்கச் சிரிப்பு வரும். ஆனால், இதே இறுக்கமான ரவுசர்கள் எமது அப்பாக்கள் காலத்திலும் இருந்துள்ளது. கொஞ்சம் வித்தியாசம். அதற்கு முன்னதாக கொழுகொழுத்த ரவுசர்கள். இப்படி ரவுஸரின் ஸ்டைல் காலத்துக்கு காலம் மாறி, அல்லது மீண்டு வந்திருக்கிறது. 

ஜீன்ஸ், ரவுசர் தொடர்பான நினைவலைகள் மிக நீளமானவை. உங்களுக்கும் மாறுபட்ட அனுபவங்கள் இருக்கும்.  
 
https://arangamnews.com/?p=5288

ஜீன்ஸ் என்பது தனியே டெனிம் துணியால் ஆனது மட்டும் அல்ல பருத்தியால் ஆன ஒரு குறித்த ஸ்டைலில் அமையும் நீள்கால்சட்டைகள் எல்லாமே ஜீன்ஸ் என நினைக்கிறேன்.

அதே போல் அந்த துணியின் பெயர் corduroy. 

45 minutes ago, மியாவ் said:

லெகின்ஸ் பெண்களுக்கான உடை மட்டும் தானா, ஆண்களும் அணியலாமா...

இந்த திரி உடை பற்றியது என்பதால் இந்த கேள்வி...

https://www.decathlon.co.uk/browse/c0-men/c1-clothing/c3-leggings/_/N-zfpy9l

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

என்னுடன், இரண்டு பேர் படித்தவர்கள். ஆங்கிலமும், தமிழும் சரளமாக கதைப்பார்கள்.

எனக்கும் இலங்கை பேகர்கள் பற்றி தெரிவித்த இலங்கையர்கள் அவர்கள் தாய் மொழி ஆங்கிலம் என்றே தெரிவித்தனர்.

பேகர் இன மக்கள்  கிரயோல் மொழி பேசுபவர்களாக இருக்கும் போது சிறி அண்ணாவுடன் படித்த பேகர்கள்  எப்படி ஆங்கிலம் தாராளமாக கதைக்க கூடியவர்களாக இருந்தார்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எனக்கும் இலங்கை பேகர்கள் பற்றி தெரிவித்த இலங்கையர்கள் அவர்கள் தாய் மொழி ஆங்கிலம் என்றே தெரிவித்தனர்.

பேகர் இன மக்கள்  கிரயோல் மொழி பேசுபவர்களாக இருக்கும் போது சிறி அண்ணாவுடன் படித்த பேகர்கள்  எப்படி ஆங்கிலம் தாராளமாக கதைக்க கூடியவர்களாக இருந்தார்கள் :rolleyes:

பேகர் என்பது பொதுபதம். அதில் பீப் பேகர், சிக்கன் பேகர், லாம் பேகர் என்ற பலவகை உண்டு 🤣.

அதே போல்தான் இதுவும். 

ஆங்கிலோ-சிலனீஸ், டச்-சிலனீஸ், பொர்சுகீஸ்-சிலனீஸ் எல்லாம் உண்டு.

இதையெல்லாம் சேர்த்தடித்த கலவைதான் பேர்கர். 

எனக்கு பம்பலபிட்டியில் ஒரு பேர்கர் குடும்பத்தை தெரியும் அவர்கள் ஆங்கில வழி. மட்டகளப்பில் பெரிதும் டச்சு வழி.

ஆனால் அதிககாலம் நீடித்த, வாய்ப்புகளை அதிகம் உருவாக்கிய ஆங்கிலேய ஆட்சியில் கிட்டதட்ட சகல ஐரோப்பிய-சுதேசி கலப்பினத்தர் அனைவருமே ஆங்கிலத்தை கற்று கொண்டனர். 

போதாக்குறைக்கு காபிர்/காப்பிரி/காப்பிலி எனப்படும் ஆபிரிகக்கர் கூட, மேற்கு, வடக்கு, கிழக்கு கரையோரத்தில் கணிசமாக  வாழ்ந்துள்ளார்கள். 

 • Like 2
Link to comment
Share on other sites

இந்த காபிர் என்பது - அரபில் நம்பிக்கையாளன் (முஸ்லிம்) என்பதன் எதிர்பதம் என்றும், அரபிகள் ஆபிரிக்காவில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகரும் போது அங்கிருந்த இஸ்லாம் மீது நம்பிக்கை அற்றோரை காபிர் என் அழைத்தனர் என்றும், தெற்கில் இருந்தோர் கறுப்பர் என்பதால் - அந்த சொல்லை திரிபு படுத்தி ஐரோப்பியர் கறுப்பு மனிதரை சுட்ட பயன்படுத்தினர் என்றும் எங்கோ வாசித்தேன்.

இலங்கை காபிர்கள் பற்றிய ஒரு ஆராய்சி சிறு கட்டுரை கீழே.

https://journals.openedition.org/lusotopie/1164

இலங்கையிலும் கறுப்பின அடிமைகள் இருந்தார்கள் என்பது நம்ப கடினமான ஆனால் உண்மை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சனம்  வெளியிலை எப்பிடித்தான் பாஷனை மாத்தினாலும்.....வீட்டை வந்தவுடனை எல்லாத்தையும் களட்டி எறிஞ்சு போட்டு சாறத்தை அப்பிடி இப்பிடி உதறிப்போட்டு மடிச்சு கட்டுற சந்தோசம் இருக்கெல்லே....... வாவ் என்னவொரு காத்தோடம்...என்னவொரு காத்தோட்டம் 😁

Link to comment
Share on other sites

10 hours ago, goshan_che said:

லெகின்ஸை -10 டிகிரி குளிர் வாட்டும் இடத்தில் வேலை செய்யும் பொழுது நான் வேலை பார்த்த இடத்திலேயே குளிரை தாங்கி கொள்வதற்காக உள்ளாடையாக அணிவதற்கு கொடுக்கப்பட்டது...

குளிரை தாங்கி கொள்ள அறிமுகபடுத்தியதை மிதமான வெப்ப நிலை இருக்கும் இடத்திலேயே அதை அணிந்து **** கொள்வதற்காக மாற்றிவிட்டார்களோ என்ற சந்தேகத்தை தெளிவு படுத்தி கொள்வதற்காகவே கேட்டேன்...

Link to comment
Share on other sites

4 hours ago, மியாவ் said:

உங்களுக்கு தரப்பட்டது thermal body ware என நினக்கிறேன். இது மேல் கீழ் உடம்பை இறுக்கி பிடிக்கும், வெப்பத்தை சேமிக்கும்.

லெகின்ஸ் இப்படியான குளிர்தாங்கும் துணியிலும், மெல்லிய துணியிலும் கூட அமையலாம் என நினைக்கிறேன்.

சுடிதார், சர்வானியின் பைஜாமாவை உடம்புடன் ஒட்டி போட்டால் அதுவும் லெகின்ஸ்தானே? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எத்தனை உடை வந்தாலும் ........
இந்த சேலையில் இருக்கும் அழகும் வசதியும் 
வேறெதிலும் இல்லை 
இல்லை ஒரு வேளை எமக்குத்தான் அப்படி இருக்கிறதா தெரியவில்லை 

Image

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

எத்தனை உடை வந்தாலும் ........
இந்த சேலையில் இருக்கும் அழகும் வசதியும் 
வேறெதிலும் இல்லை 
இல்லை ஒரு வேளை எமக்குத்தான் அப்படி இருக்கிறதா தெரியவில்லை 

Image

சீலையை தோய்க்கிற ஆட்களுக்குத்தான், அது எவ்வளவு கஸ்ரம் என்று தெரியும். 😂 😜

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

எத்தனை உடை வந்தாலும் ........
இந்த சேலையில் இருக்கும் அழகும் வசதியும் 
வேறெதிலும் இல்லை 
இல்லை ஒரு வேளை எமக்குத்தான் அப்படி இருக்கிறதா தெரியவில்லை 

எங்களுக்கு சோத்திலை எவ்வளவு தீராத பற்று இருக்குதோ அது மாதிரித்தான் சேலையிலும் இருக்கும்.

வெள்ளைக்காரியளுக்கு வெய்யில் அடிக்க மினிறொக் போடாட்டில் செத்துப்போவினம்.

Dünne Junge Mädchen Mit Sportlichen Hintern In Einem Roten Tartan-Minirock Mit Blauen Penny-Skateboard Versuchen, über Den Zaun Von Einem Tropischen Garten Zu Klettern. Outdoor-Lifestyle-Bild An Einem Sonnigen Sommertag. Lizenzfreie Fotos, Bilder Und

Link to comment
Share on other sites

இது மருதரை மயக்குவது:

E3zmmauWEAEm7H9?format=jpg&name=medium

இது நாதமுனியின் தியானம்:

nintchdbpict000280874594.jpg

ஐயோ … குமாரசாமி தாத்தாவுக்கு இன்னமும்  ….😊 இந்த பாவாடையா கேக்குது?

46912654-d%C3%BCnne-junge-m%C3%A4dchen-m

Edited by கற்பகதரு
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

ஐயோ … குமாரசாமி தாத்தாவுக்கு இன்னமும்  ….😊 இந்த பாவாடையா கேக்குது?

குமாரசாமிக்கு குறுக்கு கட்டுதான் பிடிக்கும்...🥰

ஈழத் தமிழ் பெண்கள் கடந்து வந்த பாதை - நிமிர்வு

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2021 at 00:23, goshan_che said:

இந்த காபிர் என்பது - அரபில் நம்பிக்கையாளன் (முஸ்லிம்) என்பதன் எதிர்பதம் என்றும், அரபிகள் ஆபிரிக்காவில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகரும் போது அங்கிருந்த இஸ்லாம் மீது நம்பிக்கை அற்றோரை காபிர் என் அழைத்தனர் என்றும், தெற்கில் இருந்தோர் கறுப்பர் என்பதால் - அந்த சொல்லை திரிபு படுத்தி ஐரோப்பியர் கறுப்பு மனிதரை சுட்ட பயன்படுத்தினர் என்றும் எங்கோ வாசித்தேன்.

இலங்கை காபிர்கள் பற்றிய ஒரு ஆராய்சி சிறு கட்டுரை கீழே.

https://journals.openedition.org/lusotopie/1164

இலங்கையிலும் கறுப்பின அடிமைகள் இருந்தார்கள் என்பது நம்ப கடினமான ஆனால் உண்மை.

நீங்கள் இணைத்த இலங்கை Afro  தகவல் புதிதாக ஆச்சரியமாக இருந்தது.
அதில் காபிர்  என்று சொல்லியுள்ளீர்கள் நான் முஸ்லிம் மதவாதிகளின் பேச்சு சிலவற்றை வீடியோக்களில் கேட்டிருக்கிறேன். அவர்கள் காபிர் என்று மதங்களை நம்பாதோர், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்று மற்றவர்களுக்கு தான் பாவிக்கிறார்கள். தலையை மறைக்காத முஸ்லிம் பெண்ணுக்கும் காபிர் வழி செல்பவள் என்று ஏச்சும் நடக்கிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

Theresa May steps out in sari as she hails success of 'Global Britain' drive during India trade trip

இவர் பதவியை விட்டு விலகும் போது  கவலையாக பேசியது நினைவில் உள்ளது.

Link to comment
Share on other sites

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் இணைத்த இலங்கை Afro  தகவல் புதிதாக ஆச்சரியமாக இருந்தது.
அதில் காபிர்  என்று சொல்லியுள்ளீர்கள் நான் முஸ்லிம் மதவாதிகளின் பேச்சு சிலவற்றை வீடியோக்களில் கேட்டிருக்கிறேன். அவர்கள் காபிர் என்று மதங்களை நம்பாதோர், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்று மற்றவர்களுக்கு தான் பாவிக்கிறார்கள். தலையை மறைக்காத முஸ்லிம் பெண்ணுக்கும் காபிர் வழி செல்பவள் என்று ஏச்சும் நடக்கிறது.

நான் விளங்கிகொண்டபடி,

1. முஸ்லிம் = நம்பிக்கை உள்ளவர் (இஸ்லாத்தில்)

2. காபிர் = முஸ்லிம் அல்லாதவர்

3. அரபிகள்தான் முதலில் முஸ்லிம் ஆனார்கள். அதே கண்டத்தில் தெற்கே வாழ்ந்தவர்களை காபிர் என்றழைத்தாரகள்.

4. அரபிகளிடம் இருந்து கறுப்பின/காபிர் அடிமைகளை வாங்கிய ஐரோப்பியரும் அதே பெயரை பாவித்ததனர். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நான் விளங்கிகொண்டபடி,

1. முஸ்லிம் = நம்பிக்கை உள்ளவர் (இஸ்லாத்தில்)

2. காபிர் = முஸ்லிம் அல்லாதவர்

3. அரபிகள்தான் முதலில் முஸ்லிம் ஆனார்கள். அதே கண்டத்தில் தெற்கே வாழ்ந்தவர்களை காபிர் என்றழைத்தாரகள்.

4. அரபிகளிடம் இருந்து கறுப்பின/காபிர் அடிமைகளை வாங்கிய ஐரோப்பியரும் அதே பெயரை பாவித்ததனர். 

இறை மறுப்பளர்களைதான் காபீர்கள் எனப்படுவர். அல்லாவையும் அவரது தூதரையும் எற்றுக்கொள்ளாதவர்கள் எல்லோரும் காபிர்கள்.

Link to comment
Share on other sites

2 minutes ago, colomban said:

இறை மறுப்பளர்களைதான் காபீர்கள் எனப்படுவர். அல்லாவையும் அவரது தூதரையும் எற்றுக்கொள்ளாதவர்கள் எல்லோரும் காபிர்கள்.

அல்லாவையும் தூதரையும் ஏற்று கொண்டோர் எல்லாரும் முஸ்லிம்கள்?

முஸ்லிம் என்பதன் எதிர்பதம் காபிர் என்ற என் புரிதல் சரிதானே?

Edited by goshan_che
Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.