Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நவீன உலகின் பர்மா பஜார்.! - உங்களுக்காக..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நவீன உலகின் பர்மா பஜார்.! - உங்களுக்காக..

86273356_1535913876566671_41537566482775

யீவு…  இந்தப் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டீர்கள். ஆனால், இந்த நகரில் இருந்து வரும் ஒரு டஜன் பொருட்களாவது இப்போது உங்கள் வீட்டில் இருக்கும். உங்கள் வாழ்நாளில் சில ஆயிரம் ரூபாயை இந்த ஊர்ப் பொருட்களுக்காகச் செலவழித்திருப்பீர்கள். கொசு பேட்டில் ஆரம்பித்து மொபைல், ரிமோட் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான சீனப் பொருட்களின் தாயகம், சீனாவில் இருக்கும் `யீவு’ என்ற இந்த நகரம்தான்.

சீனாவின் ஷுஜியாங் மாகாணத்தில் இருக்கிறது யீவு. மற்ற சீன நகரங்களை ஒப்பிட்டால், இது பரப்பளவில் சிறியது. ஆனால், யீவுவின் வர்த்தகச் சந்தை மிகப் பெரியது.
17 முக்கியத் தொழில் துறைகளில் 4,20,000-க்கும் அதிகமான பொருட்கள் இங்கே கிடைக்கின்றன. தினமும் ஒரு லட்சம் வியாபாரிகள் தங்கள் நாடுகளுக்கு பொருட்களை வாங்க வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் யீவு-வில் இருந்து 1,500 கன்டெய்னர்கள் உலகின் பல மூலைகளுக்கும் புறப்படுகின்றன. வாரத்தின் ஏழு நாட்களும், வருடம் முழுவதும் கடைகள் திறந்திருக்கும். சீனப் புத்தாண்டு மட்டுமே யீவு-வுக்கு விடுமுறை நாள்.

சிறிய கிராமமாக இருந்த யீவு, இப்போது சிறுபொருட்களின் உலகளாவிய தலைநகரம். சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு யீவு மிகச் சிறந்த சான்று. இன்று யீவு சீனாவுக்கு மட்டும் அல்ல, உலகத்துக்கே சொந்தமானது. மற்ற நாடுகளின் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்ற பொருட்களைத் தயாரிப்பதில் யீவு மக்கள் கில்லாடிகள். அதற்கு பல நூற்றாண்டுகள் விரியும் அவர்களின் வரலாறும் ஒரு முக்கியக் காரணம்.

யீவு நகரம் முழுவதும் மலைப்பிரதேசம். அந்த நிலங்கள் விவசாயத்துக்கும் ஏற்றது அல்ல. எனவே, அந்தப் பகுதி மக்கள் வாழ்வாதாரத்துக்காக வணிகத்தை நம்பவேண்டி இருந்தது. அவர்கள் வசம் இருந்த ஒரே விஷயம், பழுப்பு சர்க்கரை. எனவே பழுப்பு சர்க்கரையைக் கொடுத்து, அதற்குப் பதிலாக கோழி இறகுகளைப் பண்ட மாற்றம் செய்தார்கள். கோழி இறகில் இருந்து உருவாகும் உரம் அவர்களின் நிலங்களைச் செழுமைப்படுத்தியது. அந்த இறகுகளைக் கொண்டு பலவிதமான கைவினைப்பொருட் களைச் செய்ய ஆரம்பித்தார்கள். அவற்றை விற்பனை செய்ய மற்ற ஊர்களுக்குச் செல்லும் போது, மக்களின் தேவை என்ன என்பதை அறிந்துகொண்டார்கள்.

உடனே அந்தப் பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். இன்று யீவு நகரத் தயாரிப்புகளின் சிறப்பே இதுதான். `யீவுக்குப் போனால் நம் பிரச்னையைத் தீர்க்கும் பொருளை வாங்கிவிட முடியும்’ என்ற நம்பிக்கைதான் இந்த நகரத்தின் அடிப்படை.

வரலாறு.

நீண்ட நெடுங்காலமாக சீனா ஒரு கம்யூனிஸ நாடு. அனைத்தும் பொதுவுடைமை என்ற நிலை இருந்ததால், அங்கு வணிக சுதந்திரம் (free trade) தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் வணிகத் தைப் பிரதானமாகக்கொண்ட யீவு மக்களை மற்றவர்கள் முதலாளித்துவப் பிரதிநிதிகளாகப் பார்த்தனர். ஆனால், யீவுவுக்கு வணிகத்தை விட்டால் வேறு வாழ்வாதாரம் கிடையாது. எனவே, ரகசியமாகத் தங்கள் வணிகத்தைத் தொடர்ந்தார்கள். காவல் துறையிடம் சிக்கினால் பொருள் நஷ்டத்துடன் சிறைவாசமும் கிடைக்கும். 1982-ம் ஆண்டு வரை தொடர்ந்த இந்தக் கண்ணா மூச்சி ஆட்டம் ஒரு துணிச்சல் மிக்க பெண்ணால் முடிவுக்கு வந்தது.

ஐந்து குழந்தைகளின் தாயான அந்தப் பெண்ணின் பெயர் ஃபெங் ஐ கியான். தன் குடும்பத்தைக் காப்பாற்ற வியாபாரம் மட்டுமே வழி என்பதை உணர்ந்த கியான், யீவு நகர மேயரைச் சென்று பார்த்து, `உங்கள் நகர மக்களைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையா? பிறகு என்ன மேயர் நீங்கள்?’ எனக் கோபமாக பேசி விட்டு, அறைக்கதவைப் படாரெனச் சாத்திவிட்டு வெளியேறினார். கதவு மூடிய சத்தம் மேயரின் மூளைக்குள் பல நாட்கள் எதிரொலித்தது. பதவி பறிபோகும் அபாயம் இருந்தாலும், மக்கள்தான் முக்கியம் என முடிவெடுத்த மேயர், யீவு நகர மக்களை வணிகம் செய்ய அனுமதித்தார். முதல்முறையாக யீவு நகரின் ஹ்யூகிங்மென் தெருவில், 700 கடைகள் அமைக்கப்பட்டன. சீனாவின் முதல் சந்தை அதுதான்.

sddefault.jpg

 அதன் பின் யீவு நகரத்தின் வளர்ச்சி அசுரத்தன மாக உயர்ந்தது. தமிழ் சினிமாவில் ஒரே பாடலில் வளரும் நாயகர்களை விடவும் வேகமாக வளர்ந்தார்கள் யீவுவாசிகள். இன்று யீவு நகரில் 70,000-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன.

ஓர் ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர் யீவு நகரில் கைமாறுகிறது. இந்திய மதிப்பில் ஏறத்தாழ 40,000 கோடி ரூபாய். இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் தகவல்படி சமீபத்தில் பதிவுசெய்யப்பட்ட பொருட்களில் 60 சதவிகிதம் சீனாவில் தயாரிக்கப் படுகின்றன.

தாயம், பல்லாங்குழி போன்ற இந்தியக் கலாசார விளையாட்டுப் பொருட்களைக் கூட தயாரித்து ஏற்றுமதி செய்கிறார்கள். நம்புவீர்களா? லட்டு, பாதுஷா போன்ற நம் ஊர் ஸ்பெஷல் ஸ்வீட் வகைகளும் சீனாவில் கிடைக்கின்றன. ஆன்லைனில் ஓடர் செய்தால், நமது வீடுகளுக்கே டெலிவரி செய்கிறார்கள்.

உலகின் மிகச் சிறந்த பிராண்ட் பொருட்கள் அனைத்துக்கும் ரூப்ளிகேட் யீவுவில் கிடைக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை அடிடாஸ் காலணி முதல் Gucci கண்ணாடி வரை எல்லா பிராண்டட் பொருட்களின் ஷோ ரூம்களும் யீவுவில் இருந்தன. ஆனால், இன்று அந்த ஒரிஜினல்கள் அனைவரும் கடையை மூடி விட்டார்கள்.

அவர்களின் இடத்தை அச்சு அசலான போலிப் பொருட்கள் ஆக்கிரமித்திருக் கின்றன. எந்த ஒரு புதுப்பொருளும் சந்தைக்கு வந்த பத்தாவது நாளில் யீவுவில் அதன் போலியை வாங்கலாம்.

idly-or-rice-cake-originating-from-the-i

ஆனால் `இது இட்லி இல்லை என சட்னியே வந்து சத்தியம் செய்தாலும்’ நம்ப முடியாத அளவுக்கு ஒரிஜினாலிட்டியுடன் இருக்கும்.

இப்படி எல்லாம் செய்வதால் சீனப் பொருட்கள் பற்றிய நம்பிக்கை உலக அளவில் உடைந்தாலும் இவர்களுக்குக் கவலை இல்லை. இதற்கு அவர்கள் சொல்லும் பதில்…

`இது வியாபாரம். இங்கு நம்பிக்கைகளுக்கு இடம் இல்லை.! ’என்பதே.

ஐரோப்பிய நாடுகள் முழுவதுமே யீவு நகரை நம்பித்தான் இருக்கின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத் துக்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்களில் 60 சதவிகிதம் யீவு நகரில் வாங்கப்படுகின்றன. பொருட்களை விரைவாக தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்ல, யீவு நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டுக்கு ஒரு ரயில் விடப்பட்டது. மொத்தம் 13,052 கி.மீ பயணம் செய்த இதுதான் உலகில் அதிக தூரம் பயணம் செய்த ரயில். 40 பெட்டிகள், 1,400 டன் எடையுள்ள பொருட்களுடன் பயணித்த இந்த ரயில் மொத்தம் 30 நாடுகளைக் கடந்து ஸ்பெயினைச் சென்று சேர்ந்தது!

போலிகளும் சீனப் பொருட்களும்!

c67d0773738d943088f56d83ead9f680.png

(லேன்ற் குரூசரை விட சொகுசான சீன ரூப்ளிகேற் .. )

சீனாவில்தான் தரத்துக்கு பெயர் போன ஆப்பிள் மொபைல்களும் தயாரிக்கப்படுகின்றன; விலை குறைந்த மொபைல்களும் தயாரிக்கப்படுகின்றன. வேண்டிய பொருட்களை வேண்டிய விலையில், வேண்டிய தரத்தில் செய்து தரக்கூடிய திறன் சீனாவுக்கு உண்டு. ஆனால், வளர்ந்து வரும் போலிகள் காரணமாக சீனாவின் பெயர் உலக அளவில் மதிப்பிழந்து வருகிறது. எந்த ஒரு பொருளையும் ‘காப்பி’ அடிக்க சீன நிறுவனங்களால் முடியும். சமீபத்திய ஆய்வுகளின்படி சீனாவில் கிடைக்கும் 40 சதவிகிதம் பொருட்கள் போலியானவை; தரம் குறைந்தவை.

அது மட்டுமின்றி ஏற்றுமதியிலும் ஏமாற்றுகிறார்கள். `வியாபாரி ஒருவர் சீனாவுக்கு சென்று, ஆயிரம் கொசு பேட்டுகளுக்கு ஓடர் தந்தால், இறக்குமதியாவதில் 200 கொசு பேட்கள் வேலை செய்யாது. சீனாவுக்கு திரும்பச் சென்று கேட்பது கூடுதல் செலவு என்பதால், இறக்குமதி செய்பவர் அதற்கும் சேர்த்து விலையைக் கூட்டி விற்றுவிடுகிறார். இது போன்ற செயல்களால் சீனா என்றாலே டூப்ளிகேற்  என்ற பிம்பம் அழுத்தமாக பதிந்து வருகிறது’ என்கிறார்கள்.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொம்மைகள் பலவற்றை, `குழந்தைகளுக்கு உகந்தது அல்ல’ எனச் சொல்லி, நம் நாட்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவங்கள் உண்டு. இந்த பொம்மைகளில் காரீயம் என்ற ரசாயனம் கலந்த பெயின்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை வைத்து குழந்தைகள் விளையாடினால் பல்வேறு நோய்கள் உருவாகும் ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதுபோன்ற பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தரும் தர சான்றிதழ்களுக்கும் பொருட்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கும். பொம்மைகள் மட்டுமல்லாமல் சோப்பு, ஷாம்பு, காஸ்மெட்டிக்ஸ் என சீனப்பொருட்களில் கலப்படம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக `இந்தியாவில் இறக்குமதி ஆகும் சீனப்பொருட்களின் தரம் எப்போதும் பாஸ்மார்க்குக்கும் குறைவுதான்’ என்கிறார்கள் அதிகாரிகள்.

அதே நேரம் சீனாவின் இந்த `போலி கிங்’ இமேஜுக்குப் பின்னால் ‘பிக் பாஸ்’ அமெரிக்காவின் கை இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. `பொருளாதார ரீதியாக சீனாவின் வளர்ச்சியை அமெரிக்காவால் தடுக்க இயலவில்லை. எனவே, சீனப் பொருட்கள் குறித்த மதிப்பை சீர்குலைக்கும் உள்ளடி வேலைகளைச் செய்கிறது. சீனாவில் போலி பொருட்கள் தயாரிப்பு இருப்பது உண்மைதான் என்றாலும், இவர்கள் மிகைப்படுத்தும் அளவுக்கு இல்லை.

அப்படியானால் ஆப்பிள் உள்பட பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள், தங்களது உதிரிபாக தயாரிப்புப் பணியை சீனாவிடம் வழங்குவது ஏன்? உண்மையில், இன்று அமெரிக்கா தனது உள்நாட்டு தேவைகளுக்கு சீனப் பொருட்களையே நம்பி இருக்கிறது. அமெரிக்கர்கள் தலையில் போடும் தொப்பியில் இருந்து காலில் போடும் ஷூ வரை சீனபொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்’ என்கிறார்கள்.

https://senthilvayal.com/2015/12/06/உலகின்-பர்மா-பஜார்/

 • Like 2
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ரிஷாத்தின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணிபுரிந்த 11 பெண்கள் துஷ்பிரயோகம் – காவல்துறை தகவல் July 24, 2021   Share    72 Views முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணிபுரிந்த 11 பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது என திவயின என்ற சிங்கள  செய்தி இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து மேலும் அந்த செய்தியில் தெரிவித்துள்ளதாவது,   இதற்கு முன்னர் மலையக தோட்டப் புறங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 11 யுவதிகள் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணியாற்றிய காலத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக காவல் துறையினர்  மேற்கொண்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிப்பெண்ணாக அழைத்து வரப்பட்ட யுவதி ஒருவர் பம்பலப்பிட்டி பகுதியில் இரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து  காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அத்துடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சராகக் கடமையாற்றிய போது அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தில் யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக  காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்,  தான் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தையும் அந்த அறையையும் காவல் துறையினருக்கு காண்பித்துள்ளார் என்றும் தெரிவிக்கப் படுகின்றது. முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த வேளை தீக்காயங்கள் காரணமாக சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து ரிஷாத்தின் மனைவி, மனைவியின் தந்தை, மைத்துனர் மற்றும் தரகர் ஆகியோர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். நேற்று காலை கைது செய்யப்பட்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்துக்காக குற்றஞ் சாட்டப்பட்டவர் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு பணிப் பெண்ணாகக் கொண்டு வரப்பட்ட இளம் யுவதிகள் மற்றும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தப் பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக பிரதான காவல் துறை  பரிசோதகர் பெண் அதிகாரி வருணி போகஹவத்தவை  நியமிக்க மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நடவடிக்கை எடுத்துள்ளார் . அதன்படி, ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பாலியல் துஷ் பிரயோகத்திற்கு உட்பட்ட யுவதிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக வருணி போகஹவத்த  தலைமையிலான விசேட குழு மலையக தோட்டப்புறப் பகுதிகளுக்குச் சென்றுள்ளது. ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சகல யுவதிகளும் மலையக தோட்டப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், நேற்று கைது செய்யப்பட்ட தரகர் மூலமாக அனைவரும் கொழும்பு அழைத்து வரப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது. வீட்டு பணிப் பெண்களான யுவதிகள் மற்றும் சிறுமிகளைக் கொழும்புக்கு அழைத்து வந்த தரகருக்கு இலட்சக் கணக்கான பணத்தைச் செலுத்த அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. ரிஷாத் பதியுதீனின் வீட்டின் பின்புறத்தில் தனியாக அமைந்துள்ள சிறிய இருட்டு அறையில் மேற்படி யுவதிகள், சிறுமிகள் விடப்படுவதாகவும் இரவு 10.30 மணியளவில் குறித்த அறையின் கதவை அடைப்பதாகவும் மறுநாள் காலை 5.30 மணிக்கு  திறக்கப் படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், அவர்கள் கழிப்பறைக்குச் செல்லக் கூட அனுமதிக்கப் படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும்  டயகம சிறுமியை வீட்டுப் பணிப் பெண்ணாக அழைத்து வந்த தரகரிடம் நீண்ட நேரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி பல முக்கியமான தகவல்களைக் கேட்டறிந்துள்ளனர். மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் 05 காவல்துறை விசேட குழு குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப் படுகின்றது. நன்றி -தினக்குரல்   https://www.ilakku.org/11women-who-worked-maids-in-rishads-house-were-abused/  
  • மலையக சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை   மலையகத்தைச் சேர்ந்த சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் எவையுமில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், சிறுமி தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து எந்த வாக்குமூலத்தையும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர், இன்னொரு நபரே என்ன நடந்தது என வாக்குமூலம் வழங்கினார் என்று  மருத்துவர்களே குறிப்பிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சிறுமி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது நிபுணர்களின் ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/there-is-no-evidence-that-the-hill-girl-committed-suicide-national-child-protection-authority/  
  • முதியோர் துஸ்பியோகத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட வேண்டும் – யாழ் மறை மாவட்டக் குருமுதல்வர்   சிறுவர் துஸ்பிரயோகத்திற்கெதிராக குரல்கள் எழுப்பப்படுவதுபோல் முதியோர் துஸ்பியோகத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட வேண்டும் என யாழ் மறை மாவட்டக் குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். சில்லாலை புனித யாகப்பர் ஆலய திருவிழா திருப்பலி இன்று  நடைபெற்றபோது திருவிழா திருப்பலியை தலமையேற்று ஒப்புக்கொடுக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தற்போது இணையத்தளங்களில், பத்திரிகைகளில் சிறுவர் துஸ்பிரயோகம், சிறுமி கொலை தொடர்பாக செய்திகள் வெளிவருகின்றது. குறித்த சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டாள், தீயில் எரிந்துள்ளாள் என்றும் இதன்பின்னர் சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கவனயீர்புக்கள் இடம்பெற்று சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதேபோல் முதியோர் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் இந்தவிடயங்கள் கவனிக்கப்பட வேண்டும். வயோதிபர்களது மாண்புகள், முக்கியத்துவங்கள், அனுபவங்கள் மதிக்கப்பட வேண்டும் திருத்தந்தை இந்த வருடம் ஜூலை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முதியோருக்காக செபிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இனி ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதியோர்தினம் அனுஸ்டிக்கப்படும். முதியோரும் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் அவமானப் படுத்தப்படுகிறார்கள். அவர்கள் துணையில்லாது முதுமையாலும் துன்பப்படுகிறார்கள். தமது பிள்ளைகளால் துன்பப்படுத்தப்படுகிறார்கள் சொத்துக்களை பறிப்பதற்காக துன்பப்படுகிறார்கள். இவ்வாறான  முதியோர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்” என்றார்.   https://www.ilakku.org/voices-should-also-be-raised-against-the-abuse-of-the-elderly/
  • அமைதி மதத்தினர்களை குளிர்ச்சியடைய செய்கிறாராம். ஆனால் குற்றவாளிகளை ஊக்குவிக்கிறார் பாதுகாக்கிறார்.
  • அதுதான் உண்மை.        தமிழரைக்காட்டித் தமது நலனை அடைய முனையும் மேற்குலகின் மென்னழுத்தத்தைக்கூட ஏற்கமுடியாத சிங்கள ஆளும்தரப்பு ரணிலைவைத்துத் தமது நலன்களையடைய நகர்த்தியுள்ள அரசியல். இந்த அரசியலில் தமிழர்தரப்பை சம் குழுமம் இழுத்து இந்தக்குழியில் விழுத்தி மண்ணைப்போட்விட்டு நகர்வது உறுதி.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.