Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

உயர்சாதி அரசியல் - சுப. சோமசுந்தரம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

                                                                                                   உயர்சாதி அரசியல்
                                                                                                                                                  - சுப. சோமசுந்தரம்

                    கருத்தியல் அடிப்படையில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி எனும் பாகுபாட்டிற்கு நாம் எதிரிகள் என்றாலும், சாதியில் ஊறிய சமூகம் தந்த இச்சொல்லாடல் இங்கு பயன்பாட்டிற்கு எளிதாகவும் இயல்பாகவும் தோன்றுவதால் இக்கட்டுரையில் 'உயர்சாதி'யைப் பொறுத்தருள வேண்டும்.

                    கட்சி அரசியலில் ஆரம்பித்து சாதி அரசியலிலும் சமூக நீதியிலும் இக்கட்டுரையை முடிப்பது தடம் புரள்வதல்ல. காலத்தின் கட்டாயம். இன்றைய நிதர்சனங்களின் பட்டவர்த்தனம் (தமிழ் ? சரி, விடுங்கள் தோழர் !)


                    தமிழ்ச் சமூகத்தில் எல்லாக் காலங்களிலும் அரசியல் இருந்தது. நட்பு வட்டத்திலும் உறவுக் குழுமங்களிலும் கொள்கை அரசியல் மற்றும் கட்சி அரசியல் சார்புகள் இருந்தன. ஆனால் அவை நட்புக்கும் உறவுக்கும் இடையூறாய் நின்றதில்லை. குறிப்பாக உறவுமுறைகளில் யார் எந்தக் கொள்கை மற்றும் கட்சி சார்பு உடையவர் என்பதை முன்பெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை. இதில் பெரும்பான்மையோர் எந்தச் சார்பும் இல்லாமல் அரசியல், சமூக வாழ்வில் பெரும் நாட்டம் கொள்ளாமல் இருந்தமை காரணமாக இருக்கலாம். திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற பெருங்கட்சிகளும் வேறு சிறு கட்சிகளும் இந்திய சமூகத்தை, குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தை, சொல்லிக்கொள்ளும் அளவிற்குப் பிரித்ததில்லை. சில சிறு கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் சாதி மத அடையாளங்களுடன் வந்ததில்லை. வேட்பாளர் தேர்வு முதலிய நடவடிக்கைகளில் அனைத்து கட்சிகளிலும் சாதி மதங்களின் பங்களிப்பு இருந்தபோதும், ஒட்டுமொத்தமாக அவை தம் மீது சாதி, மதச் சாயம் பூசி கொண்டதில்லை. இவையனைத்திற்கும் மாறாக தற்காலத்தில் இரண்டே இரண்டு எதிரெதிரான அரசியல் சமூகத்தில் அரங்கேறக் காணலாம். அவற்றில் ஒன்று வெறித்தனமாக வினையாற்றுவதும் மற்றொன்று சளைக்காமல் எதிர்வினையாற்றுவதும் வாடிக்கையாகிப் போனது. இந்த மாற்றத்திற்கான காரணம் சமூகப்பார்வை உள்ள அனைவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி.


                      இந்திய ஒன்றியத்தில் பெரும்பான்மைவாதமான இந்து மதவாதம் இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே அவ்வப்போது தலை தூக்க முயன்றதை வரலாறு ஓரளவு அறிந்தவர் அறிவர். மதக்கலவரங்கள் பெரிய அளவிலோ சிறிய அளவிலோ ஆங்காங்கே நிகழ்ந்த போதும் மதச்சார்பற்ற தலைவர்களின் ஆளுமையினால் இந்நாடு உலகமே வியக்கும் மதச்சார்பற்ற ஒரு பெரிய ஜனநாயகமாக முகிழ்த்தது. அத்தகைய தன்னேரில்லாத் தலைவர்கள் வாய்த்தது நாட்டிற்கான பெரும்பேறு. ஏனைய மதவாதங்களையும் புறந்தள்ளுவதற்கில்லை. அவற்றையும் கட்டுக்குள் வைத்தது தன்னலமற்ற ஆன்றோர், சான்றோர்தம் தலைமை பண்பு. இத்தலைமைப் பண்பின் குறியீடான காந்தியார் சுடப்பட்டது மதவாதத்தில் அன்று தோற்றுப்போனவர்களின் விரக்தி நிலை வெளிப்பாடு. அக்கூட்டத்தினர் வட இந்தியாவில் தலையெடுக்க ஆரம்பித்த அதே காலகட்டத்தில் தமிழகத்தில் சமூகநீதிக்கு அடித்தளமிட்ட நீதிக்கட்சி தோன்றியது தமிழருக்கான பெரும்பேறு. பின்னர் திராவிடக் கட்சிகளாக நம் நீதிக்கட்சி ஒன்று பல ஆயிடினும் சமூகநீதி, மொழி உணர்வு போன்ற அடிப்படைக் கொள்கைகள் என்றும் சீரிளமைத் திறத்துடன் துலங்கியதும், இந்து மத வாதம் ஆரிய இனவாதம் போன்ற அழிவுக் கோட்பாடுகள் இங்கு கருவிலேயே கலைந்ததும் தமிழினத்தில் பாமரர்களைப் பொருத்தமட்டில் கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்த வரம். அவ்வரம் தந்த சாமிகள் பெரியார், அண்ணா எனப் பல ஆன்றோர் பெருமக்கள். எத்துணை உயரிய கொள்கைகள் முன்னிருந்தாலும் பாமரன் பாமரன்தானே ! இலவசமாய்ப் பெற்றதன் அருமை தெரியாமல் வஞ்சனை செய்வாரிடம் விற்று விடுவானோ என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இக்கட்டுரை எனலாம். அவ்வஞ்சகர், முன் எப்போதுமில்லாத அளவில் சூதுவாதுகளை ஆங்காங்கே விதைக்க முனைவதே இந்த அச்சத்திற்கும் ஆதங்கத்திற்கும் காரணமாய் இருக்கலாம்.


                           சரி, தற்காலத்தில் அரங்கேறி வரும் வலதுசாரி மதவெறி, இனவெறி அரசியலுக்கு வருவோம். தொலைக்காட்சி விவாதங்களிலும், புலனப் (Whatsapp) பதிவு, முகநூல் பதிவு போன்ற சமூக வலைத்தளங்களிலும், பத்திரிக்கை ஊடகங்களிலும், நண்பர்களும் உறவினர்களும் கூடும் நிகழ்ச்சிகளிலும் அவர்கள் எண்ணிக்கையில் மிகச் சிலரே ஆயினும் அவர்களின் சங்கநாதம் நம் காதுகளுக்கு நாராசமாய் ஒலிப்பது தவிர்க்க இயலாத ஒன்று. சிரங்குக் கையனுக்கு சொரியாமல் இருக்க முடியாது என்பதை போல் அவர்கள் மீண்டும் மீண்டும் மாற்று மதத்தினரையும் பகுத்தறிவுவாதிகளையும் வன்மத்துடன் விமர்சிப்பதைப் பார்க்கையில் 24 மணி நேரமும் வெறுப்பு அரசியலிலேயே அவர்கள் வாழ்வது புலனாகிறது. சங் பரிவாரங்களின் ஷாகாக்களில் மூளைச்சலவை செய்யப்பட்டோர் படித்தவர் படிக்காதவர் என்ற பேத மின்றி அப்படித்தான் இருக்கமுடியும். தமிழராயிருப்பினும் தமிழின் சிறப்பைப் பேசினாலே கோபம் வருகிற அளவிற்கான மூளைச்சலவை அது. மாற்று அரசியல் கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அதுவும் ஒரு கருத்து என்ற முறையில் வரவேற்கலாம். ஆனால் பாசிசம் ஒரு அரசியல் கருத்தாகவே கொள்ளத்தக்கதல்ல. மேலும் கட்சி அரசியல் பேசுவதாக நினைத்துக் கொண்டு அவர்கள் பேசுவது அறிந்தோ அறியாமலோ அவர்களின் ஆழ்மனதில் விதைக்கப்பட்ட மதம் என்னும் விஷ வித்து. அதிலும் இவர்களைக் கவர்வதற்காக மதச் சாயம் பூசப்பட்ட உயர்சாதி அரசியல் எனும் விதையே அது. முளைக்கவிட்டால் வருணாசிரமம், மனுநீதி என்று மீண்டும் வெளிவரும் என்பது தமிழ் மாநில அளவில் அவர்களுக்குத் தலைமை ஏற்றுள்ள சில முட்டாள்களின் பிதற்றலில் தெற்றென விளங்கி நிற்பது. இந்துத்துவா என்ற பெயரைத் தாங்கியது பிராமணியமும் அரைப்பிராமணியமும் (Neo-Brahminism) என்பதை அவர்கள் உணரும்போது நிலைமை கை மீறிப் போயிருக்கும். இவையெல்லாம் பெரியார் மண்ணில் நிகழ வாய்ப்பில்லை என்ற நமது அசட்டுத் தைரியம் வஞ்சனை செய்வாரின் பலமாக வாய்ப்பு உண்டு. இது ஹிட்லர் உலகுக்கு சொல்லித்தந்த பாடம். சூழ்நிலை காரணமாக தமிழ்நாட்டில் அமைந்த அடிமை அரசினைக் கொண்டு அதிகாரப் பொறுப்புகளில் தங்களின் கோட்பாட்டினைத் (!) தழுவியவர்களை ஆங்காங்கே விதைத்ததும் தூவியதும் அவர்கள் நாஜிக்களிடம் கற்ற பாலபாடம். இச்சூழலில் பெரியாரையும் அண்ணாவையும் இன்றைய தமிழ் இளைஞர்களிடம் கொண்டு செல்வதே தமிழின உய்விற்கான வழியாக இருக்க முடியும். வலதுசாரிகளின் இன, மத, உயர்சாதி அரசியலைத் தமிழ் மண்ணில் எதிர்கொள்ள இடதுசாரிகளே இன்று கையில் எடுக்க வேண்டிய ஆயுதங்கள் பெரியார், அண்ணா போன்றோரே. இவ்விருவரும் வாழ்ந்து காட்டாத மண்ணுக்கான மார்க்சியம் உலகில் உண்டா என்ன ? இந்திய ஒன்றியத்தை காக்க நம்மால் முடியுமோ என்னவோ, தமிழ் மண்ணைக் காக்கும் கடமை தமிழராய் பிறந்த அனைவருக்கும் உண்டு.


                         உயர்சாதியினரின் வீட்டு இழவில்கூட சிதைக்குத் தீ மூட்டிய கையோடு மரத்தடியில் அமர்ந்து அந்தக் கருமாந்திர அரசியலை அவர்கள் ஆரம்பிப்பது வெறியின் உச்சம். நட்பையும் உறவையும் அவர்கள் பகைக்கவும் தயங்குவதில்லை. இத்தகையோரின் நட்பும் உறவும் நமக்கு மட்டும் இனிக்குமா என்ன ? எதிர்வினையாடலைத் தவிர வேறு வழியை அவர்கள் நமக்கு விடுவதேயில்லை. நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை எதிரிதானே தீர்மானிக்க முடியும் ? உயர்சாதி என்று வகைப்படுத்தியிருக்கும் அரைப் பார்ப்பனிய சமூகமொன்றில் பிறந்த எனக்கு இவர்களை அருகிலேயே பார்க்கக் கிடைத்ததும், சுயசாதி விமர்சனம் செய்யும் நிலை ஏற்பட்டதும் எனது துர்ப்பாக்கியம். வலதுசாரி தீவிரவாதத்துடன் இயங்குவோர் ஏனைய சாதிகளில் இல்லாமல் இல்லை. ஆனால் அத்தகையோர் ஆங்காங்கே சிதறிக் கிடக்க, உயர் சாதியினர் மட்டும் அனேகமாக ஒட்டுமொத்தமாய் அங்கே நிற்பதைக் காண்கையில் அதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றும். "அப்படி உங்களுக்கு என்னதான் பிரச்சினை ?" என்று அவர்களைப் பேட்டி (!) எடுத்தால், உயரிய காரணம் எதுவுமில்லை என்பது புலப்படுகிறது. உயர்சாதியினர் அறிவு நிலையிலும் உயர்ந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தெளிவாகிறது. பரவலாக அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவையே. அவை முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தினாலும் நம்மிடம் தேர்ந்த பதில்கள் இருப்பது கட்டாயமாகிறது இதோ நம் பட்டியல் :


(1) மாற்று மதத்தினர் - குறிப்பாகக் கிறித்தவர், இஸ்லாமியர் - மதம் மாறியோர், மதம் மாற்றுவோர் என்பதாலும், அரசாங்கத்தில் சிறுபான்மையினர் உரிமை என்ற ஒன்றைப் பெறுவோர் என்பதாலும், மதச்சார்பின்மை பேசுவோர் இவர்களை விமர்சிப்பதில்லை என்பதாலும் இம் மதத்தினர் மீது வெறுப்பு.

 
                        மதம் மாறியவர்கள் பெரும்பாலும் ஒரு காலத்தில் வருணாசிரமத்தினால் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதும், அப்போது அவர்கள் மாறினார்கள் என்பதை விட தங்களால் விரட்டப்பட்டவர்கள் என்பதும் இந்த உயர் சாதியினர் அறிவார்களா ? எனக்குத்தெரிந்து அன்றைய நெல்லை, குமரி மாவட்டங்களில் என் சாதியினரின் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்டு சிஎஸ்ஐ கிறித்துவத்தை நோக்கிப் பெரிய அளவில் மதமாற்றம் நடைபெற்றது. எந்தக் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்களோ அங்கே சென்றார்கள். எங்கே கல்வியும் மருத்துவமும் கிடைத்ததோ அங்கே சென்றார்கள். விரட்டியடித்த இவர்கள் புகலிடம் தந்து அவர்களுக்கான சமூக நீதியும் வழங்கியவர்களை வெட்கமில்லாமல் விமர்சிப்பார்களா ? மேலும் 300-400 வருடங்களாய் மதம் மாற்றப்பட்டவர்கள் அவர்கள் என்றால், சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஆரிய வந்தேறிகளால் மதம் மாற்றப்பட்டவர்கள்தானே நாமும் ?


                         எந்த ஒரு மக்கள் திரளிலும் சிறுபான்மையினர் மீது தனிக்கவனம் செலுத்தி அவர்கள் தங்கள் அடையாளத்துடனும் தங்களுக்குரிய மரியாதையோடும் வாழ வழி செய்வது ஒரு ஜனநாயக அரசின் கடமை. மதச் சிறுபான்மையினர் மட்டுமின்றி மொழிச் சிறுபான்மையினருக்கும் தனிச் சலுகைகள் உள்ளது நியாயமானதே. பன்மைத்துவம் என்பது இந்திய ஒன்றிய அளவில் மட்டுமல்லாது மாநில அளவிலும் பேணப்பட வேண்டிய ஒன்றே.

                         இனவாதமானாலும் மதவாதமானாலும் நடுநிலையோர் சிறுபான்மையை விடப் பெரும்பான்மையை அதிகம் பேசுவதற்கும் சாடுவதற்கும் காரணம் உண்டு. முன்னதை விடப் பின்னது ஆபத்தானது என்பதற்கு நாஜி ஜெர்மனி, சிங்களப் பேரினவாத இலங்கை, இஸ்ரேலை ஆக்கிரமித்துப் பின் பாலஸ்தீனத்தை விழுங்க முனையும் யூத மத, இனவாதம் என்று எடுத்துக்காட்டுகளை அடுக்கலாம்.

(2) சமூக நிலையில் தாழ்த்தப்பட்டோரின் ஆதிக்கம் அலுவலகம் முதலிய இடங்களில் அளவுகடந்து போவதாகவும் இதற்குக் காரணம் இட ஒதுக்கீடு என்பதுமான இவர்களின் மனக்குறை.


                         தமிழ் நிலத்தில் சுமார் 60 வருடங்களே முழுமையாக அமலுக்கு வந்துள்ள இட ஒதுக்கீட்டையே இவர்களால் தாங்க முடியவில்லை. குறைந்தபட்சம் 1500 வருடங்களாக அவர்கள் 100 சதவீதம் ஒதுக்கி வைக்கப்பட்டதைப் பற்றி இவர்கள் வாயே திறப்பதில்லை. விழுந்தவன் எழுந்து நிற்கும்போது கம்பீரமாகத்தான் நின்று விட்டுப் போகட்டுமே ! அவன் யாரையும் எதையும் சட்டை செய்வதில்லை என்ற இவர்கள் குற்றச்சாட்டு உண்மையாயிருந்தால் கூட, அவனது எழுச்சியைக் கொண்டாடும் வகையில் அவனுக்குக் காலமும் வாய்ப்பும் தருவது சமூகத்தின் கடமை.


(3) உயர்சாதியினரின் கட்டுப்பாட்டிலும் வழிகாட்டுதலிலும் செயல்படும் ஒன்றிய அரசு சமீபத்தில் இவர்களுக்கு அளித்த 10% இட ஒதுக்கீடு இவர்களுக்கான மகிழ்ச்சி. அதைப் பெற ஆண்டு வருமான உச்சவரம்பு ரூபாய் எட்டு லட்சம் என்பது இவர்களின் பரவசநிலை.

                           முதலில் இட ஒதிக்கீடு சமூகநீதிக்கானதே தவிர வறுமை ஒழிப்புத் திட்டமன்று. வறுமை ஒழிப்புத் திட்டங்களை சாதி, மத பேதமின்றி வகுத்திடுவது ஒரு அரசின் கடமை என்பது ஒரு புறம். பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் அளித்த இட ஒதுக்கீட்டின் காரணமாகத்தான் உயர்சாதியினர் பாதிக்கப் பட்டனர் என்பது அபத்தம். அதாவது உயர் சாதியினர் மற்றவர்களைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் என்று பின்னப்படும் மாயை. அது உண்மையானால் இட ஒதுக்கீட்டின் பொதுப்பிரிவில் அத்தனை இடங்களையும் உயர்சாதியினர் நிரப்பியிருக்க வேண்டும். பொதுப்பிரிவில் 10 இடங்கள் இருந்தால் இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று இடங்களில் உயர்சாதியினர் வரக் காணலாம். சமீபத்தில் ஒரு அரசு வங்கிக்கான நியமனத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தகுதி வரையறை சுமார் 60% எனும்போது உயர்சாதியினருக்கான சமீபத்திய ஒதுக்கீட்டில் 28% என்பது வெட்கக்கேடு. வாய்ப்பு அளிக்கப்பட்ட அனைத்துச் சாதியினரும் தகுதியில் மேம்படுகிறார்கள் என்பதே உண்மை. சமூகத்தில் சமநிலை ஏற்படும்போது இட ஒதுக்கீட்டு முறையில் மீண்டும் மாற்றம் கொணர்வது ஜனநாயக முறையிலேயே நிகழமுடியும். வெறுப்பு அரசியலால் அல்ல. இப்போதுள்ள சமூக நீதியை ஜனநாயக முறையிலேயே நிலைநாட்டினார்கள். ஒடுக்கப்பட்டவர்களின் விரல் கூட ஒடுக்கியவர்கள் மீது படவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே சமூக ஒடுக்குமுறை குறித்த குற்றவுணர்வும், சாதி பேதமற்ற சமூகத்திற்கான முனைப்பும் உயர்சாதியினரிடம் அமைதல் வேண்டும். மேன்மக்களுக்கான வரையறையும் அதுவே. அதை விடுத்துக் குறுக்கு வழியில் மக்களை ஏமாற்றி, மதத்தின் பெயரால் உயர்சாதி அரசியல் செய்வது மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்டது.

Edited by சுப.சோமசுந்தரம்
 • Like 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"சிதைக்குத் தீ மூட்டி, நீரினில் மூழ்கி, இறந்த உறவினரின் நினைப்பு ஒழிந்தாலும், இந்த சாதி,மத இந்துத்துவ வருணாசிரமக் கருமாந்திர வெறுப்பு அரசியலின் நினைப்பு ஒழியா மன நோயாளிகளாக அலையும் கூட்டத்தை அப்பட்டமாகத் தோலுரித்து தொங்கவிட்டுவிட்டீர்கள். இந்தக் கூட்டம் உறவாக இருக்கும் பாவப் பிறவிகளுள் நானும் ஒருவன். இத்தகைய நிகழ்வுகளை நானும் கண்ணுற்று இருக்கிறேன்.

நான் ரசித்த வரிகள்: //சூழ்நிலை காரணமாக தமிழ்நாட்டில் அமைந்த அடிமை அரசினைக் கொண்டு அதிகாரப் பொறுப்புகளில் தங்களின் கோட்பாட்டினைத் (!) தழுவியவர்களை ஆங்காங்கே விதைத்ததும் தூவியதும் அவர்கள் நாஜிக்களிடம் கற்ற பாலபாடம். இச்சூழலில் பெரியாரையும் அண்ணாவையும் இன்றைய தமிழ் இளைஞர்களிடம் கொண்டு செல்வதே தமிழின உய்விற்கான வழியாக இருக்க முடியும். வலதுசாரிகளின் இன, மத, உயர்சாதி அரசியலைத் தமிழ் மண்ணில் எதிர்கொள்ள இடதுசாரிகளே இன்று கையில் எடுக்க வேண்டிய ஆயுதங்கள் பெரியார், அண்ணா போன்றோரே. இவ்விருவரும் வாழ்ந்து காட்டாத மண்ணுக்கான மார்க்சியம் உலகில் உண்டா என்ன ?// Writing on the wall.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

//"சமூக ஒடுக்குமுறை குறித்த குற்றவுணர்வும், சாதி பேதமற்ற சமூகத்திற்கான முனைப்பும் உயர்சாதியினரிடம் அமைதல் வேண்டும்.//

ஒருக்காலும் நடக்காத விடயம்.  "தலையில் பிறந்தவன்; ஆக உயர்ந்தவன்" என்று குழந்தைப் பருவத்திலேயே மூளை ச் கலவையான ஆரிய பார்ப்பனக் கூட்டமும், அவர்தம் அடிவருடி சற்சூத்திர உயர்சாதி சங்கிகளும் ( நம் உறவுகள்) நாய்-வால்கள். நிமிர்த்த விழைகிறீர்கள். உங்கள் முயற்சி நடந்தால் மகிழ்ச்சிதான்.

இவர்கள் மேன்மக்கள் இல்லை. குறுக்கு வழியில் மக்களை ஏமாற்றி, மதத்தின் பெயரால், மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட  உயர்சாதி அரசியல் செய்வது இவர்கள் பிறவிக் குணம்; அது மாறாதையா மாறாது.

 

 • Thanks 1
Link to comment
Share on other sites

பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரம் உண்டு. ஆக சிறந்த போர் வீரன் அவன். ஆனால் அவன் மனதில் கொண்ட அடிமை எண்ணம், விசுவாசம் என்ற பெயரால் நிரப்ப படுகிறது. ஒருவர் "மேல் இருக்க", ஒருவர் "கீழ் இருக்க" இங்கே பல என்ன ஓட்டங்கள் விதைக்க படுகின்றன.. பார்பினியம் இதனை கட்சிதமாக செய்கிறது. இதனை உணர்ந்து கொள்வதற்கே சுயமரியாதை போராட்டங்களை பெரியார் எடுத்து சென்றார். ஆனால் இன்று பார்பினியம், இதை சரியாக புரிந்து கொண்டு  சூழ்ச்சி பாதை ஒன்றை நீங்கள் கூறுவது போல் வகுத்துள்ளது. சுய மரியாதை என்பதை, சுய மதம் என்று மடை மாற்றி பார்பிணிய பீடையில் உள்ளே தள்ளுகிறது. இன்று நடப்பது அறிவு சார் போர். ஐயா, உங்களின் எழுத்துக்கள் கூரிய வாள் போன்று பார்ப்பினிய சித்தாந்ததை மேலும் கிழித்து எறியட்டும். இது நீண்ட போர். தொடரட்டும் உங்களின் நீண்ட போர்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2021 at 06:09, சுப.சோமசுந்தரம் said:

முதலில் இட ஒதிக்கீடு சமூகநீதிக்கானதே தவிர வறுமை ஒழிப்புத் திட்டமன்று. வறுமை ஒழிப்புத் திட்டங்களை சாதி, மத பேதமின்றி வகுத்திடுவது ஒரு அரசின் கடமை என்பது ஒரு புறம். பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் அளித்த இட ஒதுக்கீட்டின் காரணமாகத்தான் உயர்சாதியினர் பாதிக்கப் பட்டனர் என்பது அபத்தம். அதாவது உயர் சாதியினர் மற்றவர்களைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் என்று பின்னப்படும் மாயை

சரியான கருத்து.👍🏾

ஆனால் வலதுசாரி பா.ஜ.க. மோடியை ஒரு மதத்தலைவர் போன்று காண்பித்து, இந்துத்துவத்தை நிறுவனமயப்படுத்தி, இந்தியாவில் பிளவுபட்ட சமூகங்களை மேலும் பிளவுபடுத்தும். 

இந்திய மக்கள் மதத்தலைவர், சாமியார் போன்ற தோற்றப்பாட்டைக் காட்டுபவர்கள் தவறுகள் புரிந்தாலும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்பதால், மோடியும் பரிவாரங்களும் எப்படியும் தமிழ்நாட்டிலும் காலூன்றி, வலதுசாரி சிந்தனையை ஒரு பகுதி மக்களுக்கு ஊட்டிவிடுவார்கள். இதனை சமத்துவ சமூகக்கொள்கையில் அக்கறை உள்ளோர் எதிர்கொண்டு முறியடிக்கவேண்டும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்று 🤝 அச்சுறுத்தும்  சூழ்நிலை மாற்றங்கள்!!

Link to comment
Share on other sites

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/   இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும்  வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராடிக்கோண்டே கற்கையை முடித்தனர். பத்மலோஜினி அன்ரி, தேவா அன்ரி போன்றவர்கள் வைத்தியர்களாகவே போரளிகளாகினர். இப்படி புலிகளின் மருத்துவப்பிரிவு தோற்றம் கண்டது.   போராட்டம் பெரும் வளர்சியடையத் தொடங்கிய போது, மிகவும் பலம் கொண்டதாக கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் மருத்துவத் துறையில் போராளிகளில் இருந்து மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்குவதற்காக தமிழீழ மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது. உலகத்தின் அப்போதைய ஒழுங்கில் தமிழின விடுதலையின் இறுதி அத்தியாயம் எப்படி அமையும் என்பதை கணக்கிட்டிருந்த தேசியத் தலைவர் அவர்கள் 1992 மார்கழி நாளொன்றில் மருத்துவக் கல்லூரி ஆரம்ப வைபவத்தில் போராளி மாணவ ஆளணியிடம் பின்வருமாறு பேசினார். “நாம் சுமார் 450 வருடங்களாக அடிமைத்தனத்தில் தப்பிப் பிழைத்து வாழ்ந்துவரும் இனம். எமது மூளை வளம் எமது இனத்துக்கு பயன்படாதபடி கல்வியை ஊட்டிய சமூகத்தை கைவிவிட்டு வெளியேறி காலம் காலமாக இடம் பெயர்ந்து வாழ்கின்ற நிலையே இன்று உள்ளது ஏனைய தேசங்களில் எல்லாம் தமது நாட்டின்மீது போர் என்று வரும்போது அந்த நாட்டின் நிபுணர்கள் கூட்டம் தனது நாட்டுக்கு படையெடுக்கும். நமது மக்களின் நிபுணர்கள் கூட்டம் தனது மக்கள்மீது போர் ஏற்பட்டுவிட்டால் தனது மக்களை விட்டுவிட்டு தப்பி வெளியேறிவிடுவார்கள். இது நாம் நீண்டகாலமாக அடிமைப்பட்டுப் போனதன் விளைவு. எமது தேசத்தின் மீது யுத்த நெருக்கடி சூழும்போது எமது மக்களையும் போராளிகளையும் காப்பதற்கு போராளிகளிலிருந்தே ஒரு மருத்துவர் குழாமை உருவாக்கவேண்டும் என்ற தேவை உள்ளது. இது மிகவும் தாமதமாகவே தொடங்குகிறது. இருந்தாலும் இப்போதாவது தொடங்கப்படுகிறதே என்ற நிறைவு ஏற்படுகிறது”. இந்த மருத்துவக் கல்லூரியின் மாணவப் போராளிகளை மருத்துவத் துறையின் பட்டதாரி மருத்துவர்களும், வெளியிலிருந்து முன்வந்த பற்றுக்கொண்ட மருத்துவர்களும், விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் மனப்பூர்வமான விருப்போடு உருவாக்கலாகினர்.   குறைந்தது ஐந்து வருடங்களுக்குக் குறையாத மருத்துவப் பட்டதாரிக் கற்கையை உலக வரலாற்றில் நடாத்திய விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இருக்கும்.   புலிகள் இயக்கம் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வடிவம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமையும். போர்களிலும் இடம்பெயர்வுகளிலும் தமது மருத்துவ சேவைகளை ஏனைய மருத்துவர்களோடு இணைந்தவாறும் தேவைக்கேற்ப மருத்துவப் போராளி அணிகளைக் கற்பித்து விரிவடைவித்தவாறும் தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவர்களாக உருவெடுத்தனர். போதனா வைத்தியசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் அப்பப்போது தேவைக்கேற்ற பயிற்சிகளைப் பெற்ற இந்த மருத்துவ அணி இறுதியில் போதனா வைத்தியசாலை நிபுணர்குழுவின் தேர்வுகளின் ஊடாக தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தது. மூடப்படும் நிலையில் இருந்த மக்களுக்கான அரச மருத்துவ கட்டமைப்பின் வெளிவாரி மருத்துவ மையம் முதல் மாவட்ட வைத்தியசாலைவரை ஏற்பட்டிருந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு புலிகளின் மருத்துவ ஆளணிகளே பெரும் பங்காற்றின. புலிகளின் பெரும் போர்ப் படை நடவடிக்கைளின்போது பங்காற்றுவதற்கான இராணுவ மருத்துவ மனைகளில் நிபுணர்களின் இடத்தை நிரப்புவதற்கான அனைத்து ஆற்றல்களையும் இந்த மருத்துவத்துறை உருவாக்கிக்கொண்டது. ஒரு தேசத்தின் மருத்துவத்துறையின் கட்டமைப்பில் இருக்கக்கூடிய முக்கிய பிரிவுகள் அனைத்தும் தமிழீழ மருத்துவப்பிரிவில் உருவாக்கப்பட்டன. வருமுன் காத்தல், நோய், காயம் பராமரித்தல், சட்ட வைத்திய நிபுணத்துவம் என அனைத்து முக்கிய சேவைகளையும் இந்த ஆளணிகளிடமிருந்தே தமிழீழ நடைமுறை அரசு பெற்றுக்கொண்டது.   அரச மருத்துவக் கட்டுமானத்தின் வெளி வைத்தியர் குழாம், புலிகளின் படை நடவடிக்கை, இடம்பெயர்வு மருத்துவத் தேவைகளின்போதும் அனத்ர்த்தங்களின்போதும் ஒரே கட்டமைப்பாகவே ஒத்தியங்கி வரலானது. போராளி மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் வேறுபிரிக்க முடியாதபடி தமிழின விடுதலைப் பரப்பில் இறுக்கமாக இணைந்து பணியாற்றினர். பொது வெளிகளில் பகிரப்படாத பக்கங்களாக இவை அமைந்துகிடக்கிறது. மலேரியா தடுப்பு நடவடிக்கைகள்,கொலரா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்,டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்,சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகள்,சுனாமி அனர்த்தம் என பல நடவடிக்கைகள் தமிழீழ அரச கட்டுமானங்களின் பங்களிப்போடு பல பிரிவுகள் உள்ளடங்கலான கூட்டு நடவடிக்கையாக இருந்தது. அரசியல் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை என்பன சேர்ந்தே வேலைகளை முன்னெடுத்தன. இலங்கை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளைவிட பொருளாதாரத் தடைகளின் பிடிக்குள் சிக்கிய புலிகளின் பகுதிகள் தொற்று நோய்களை தடுத்தாழ்வதில் மிகவும் திறன்வாய்ந்து விளங்கின. இதனை சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தடுப்பு முகாமில் குடற்புழு தொற்று தடுப்பு பற்றி பேசப் போன தடுப்புக்காவலில் இருந்த மருத்துவர்களிடம் பேசியபோது, “நீங்கள் எதிர்பார்க்கும் உடனடியான சுகாதார தடுப்பு செயல் முறைகள் இலங்கையின் நிர்வாகத்தில் கிடையாது. அது புலிகளின் வன்னிப் பகுதிக்குள் மட்டுமே எதிர்பார்க்க முடியும்” என்று குறிப்பிட்டதோடு மருத்துவர்கள் கேட்டுக்கொண்ட சுகாதார நடைமுறைகளை உடனடியாக அமுல்படுத்தினார்.   மருத்துவ மனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில், மருத்துவமனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில் சுகாதார கல்வியூட்டல் பிரிவு, தாய் சேய் நலன் பிரிவு, பற்சுகாதாரப் பிரிவு, சுதேச மருத்துவப் பிரிவு, நடமாடும் மருத்துவ சேவை, தியாகி திலீபன் மருத்துவ சேவை, லெப் கேணல் கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம், தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு, பூச்சியியல் ஆய்வுப் பிரிவு, விசேட நடவடிக்கைப் பிரிவு என்பன நிறுவனமயப்பட்டு இயங்கிவந்தன. இதனால் இலங்கையின் அரச மருத்துவத் துறையின் செயலிடைவெளிகள் நிரப்பப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன.   இவற்றைப்பற்றியதான விரிவான பார்வையை இக்கட்டுரையின் நோக்கத்தினுள் அடக்கிவிட முடியாது. செவிப்புலன் பாதிப்புற்றோர், விழிப்புலன் பாதிப்புற்றோர், போசாக்கு நோய்களுக்குட்பட்ட குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு இல்லம், சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் என பல கட்மைப்புக்கள் இயங்கின. தூரப்பிரதேசங்களில் மருத்துவ சேவைகள் கிடைக்காத நிலைமைகளை மாற்றுவதற்காக தியாகி திலீபன் மருத்துவமனை, நோயாளர் காவு வண்டிகள் என்பன மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டன. பெரும் மருத்துவ ஆளணி வளங்கள் புலிகளின் இராணுவ மருத்துவ கட்டமைப்பிற்குள் பணியாற்றின. இதன் வடிவமைப்பே போரினால் காயமடையும் போராளிகளையும் மக்களையும் காக்கும் பணியில் பெரும் பங்காற்றின. போராளிக் களமருத்துவ அணிகள் படையணிகளில் முன்னணி போர்முனை உயிர்காத்தல் முதலுதவிப் பணிகளை செய்தனர். அங்கிருந்து காயமடைந்தோர் , உப, பிரதான களமருத்துவ நிலைகளினூடாக  தளமருத்துவ நிலைகளுக்கு மாற்றப்படுவார்கள். இராணுவ தள மருத்துவ மனைகளிலேயே உயிர்காத்தல் சத்திரசிகிச்சைகள் மற்றும் உயிர்காத்தல் பராமரிப்புக்கள் இடம்பெறும். இங்கிருந்து படையணிப்பிரிவு மருத்துவ மனைகளில் பின்னான பராமரிப்புக்கள் நடைபெறும். இந்த கட்டமைக்கப்பட்ட செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களளை சமராய்வு நடவடிக்கைகளின் அறிக்கைகளின் ஊடாக தலைவரும் தளபதிகளும் கவனித்து வந்தனர். பன்னாடுகளின் துணையோடு இறுதிப்போர் வியூகங்களளை எதிரி மேற்கொண்ட போது வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் போர்முனைகள் திறக்கப்பட்டன. இப்பகுதிகளில் இருந்துவரும் போர்க்காயங்களைப் பராமரிக்க இராணுவ தளமருத்துவ முனைகள் பிரித்துப் பொறுப்பளிக்கப்பட்டன. மக்கள் இலக்குகள்மீது எதிரி தாக்குவான் என்பதையும் ராணுவ மற்றும் இடம்பெயர் மருத்துவ மனைகளையும் எதிரி இலக்கு வைப்பான் என்பதையும் மருத்துவ ஆளணித் தட்டுப்பாடுகள் ஏற்படும் என்பதையும் மருத்துவப் பிரிவின் உயர்பீடமும் தலைமையும் அறிந்து தயாராகவிருந்தது.   சமாதான காலத்தின் பின்பகுதியில் தலைவர் அவர்கள் திட்டமிட்டபடி ‘விஞ்ஞான அறிவியல் கல்லூரி’ உருவாக்கப்பட்டு அங்கு டிப்ளோமா மருத்துவக் கற்கை, தாதியக் கற்கை, மருந்தாளர்கள் கற்கை, போசாக்கியல் கற்கை போன்றவற்றினூடாக மருத்துவ ஆளணி வளங்கள் பெருக்கப்பட்டன. பொதுமக்களில் இருந்து  தேர்வு செய்யப்பட்ட  ஆண்களும், பெண்களும் இந்த கற்கைநெறிகளைத் தொடர்ந்தனர். இவர்களின் கற்றலை இலகுபடுத்த விடுதிவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இறுதிப் போரரங்கில் மக்களின் மருத்துவப் பராமரிப்புத் தேவைகளை நிறைவுசெய்வதில் இந்த ஆளணிகளே பெரிதளவு உதவின. இந்த மருத்துவர்களும் தாதியர்களும் போராளிகளாக மாறி இக்கட்டான நிலைமைகளில் கைகொடுத்தனர். ஓரிருவரைத் தவிர பெரும்பாலான அரச மருத்துவர்கள் யுத்தத்தின் நெருக்கடிகளின் போது வன்னியை விட்டு வெளியேறிவிட்டார்கள். இடம்பெயர்வுகள் நடைபெற்றதாலும், ஆழ ஊடுருவும் படைகளினால் நோயாளர் காவு வண்டிகள் இலக்குவைக்கப்பட்டதாலும், வைத்தியர்கள், தாதிகள், சாரதிகள் நிர்வாகிகள் என அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளின் மீது மீண்டும் மீண்டும் விமானத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்த நிலைமைகள் அரச மருத்துவ ஆளணிகளின் பங்கை முற்றாக அப்புறப்படுத்தியது. மக்களையும் போராளிகளையும் உயிர்காக்கும் பணி முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளின் மருத்துவக் குழாமின் கைகளில் தங்கியது. குறைவான ஆளணியுடன் மிகையான காயத்தையும், நோயாளர்களையும் எதிர்கெண்டு அவர்கள் சேவையாற்றினர். இந்த நிலைமைகளில்  மக்களிலிருந்து உணர்வுபூர்வமான உதவிக்கரங்கள் நீண்டதை இங்கு பதிவு செய்யவேண்டும். அரச மருத்துவ அதிகாரிகள் இருவர் தமது மக்களுடன் நின்று இறுதிவரை சேவை செய்து உயிரை விடுவது உயர்வானது என வன்னியிலேயே நின்றுவிட்டார்கள். போரின் முன்னரங்குகள் நகர்ந்து முள்ளிவாய்க்கால்வரை வந்தபோது மருத்துவ மனைகளும் இடம்பெயர்ந்துகொண்டே வந்தன. சிக்கலான காயங்கள் உள்ளோர் சிகிச்சைகளின் பின் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கப்பலில் ஏற்றப்பட்டு திருகேணமலைக்கு பராமரிப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவ மனைகளின்மீது தாக்குதல் தொடுக்கப்படாமல் இருப்பதற்காக செஞ்சிலுவைச் சங்கத்தால் இராணுவ தலைமைப்பீடங்களுக்கு அனுப்பப்பட்ட வரைபட ஆள்கூறுகள் சில மணி நேரங்களுக்குள் துல்லியமாக மருத்துவமனைகள் தாக்கப்படுவதற்கு உதவின. சூனியப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் செறிவாக குவிக்கப்பட்ட இடங்களைத் தேர்வுசெய்து செறிவான தாக்குதல்களை தொடுத்தது இராணுவம். இதனால் மருத்துவ மனைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன. இடம்பெயர் அரச மருத்துவ மனைகளின் கூரைகளில் காட்டப்பட்ட செஞ்சிலுவை அடையாளங்கள் போர் வேவு விமானங்களுக்கு மருத்துவமனைகளை துல்லியமாக காட்ட, எறிகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்கின. வன்னியில் நடைபெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் போர்க்கால மருத்துவப் பட்டறையில் துல்லியமாக அறியப்பட்ட விடயம் யாதெனில், அரச தரப்பே மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதாகும். உடையார்கட்டு பாடசாலையில் அமைக்கப்பட்ட இடம் பெயர் கிளிநொச்சி மருத்துவ மனைக்கு, சுதந்திரபுரம் யுத்தமற்ற பிரதேச மக்கள் செறிவான தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் அள்ளிவரப்பட்டனர். இதே வேளை வள்ளிபுனத்தில் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு இடம்பெயர் மருத்துவமனையிலும் குவிக்கப்பட்டனர். வள்ளிபுனம் மருத்துவமனை மிகத்துல்லியமாக தாக்கப்பட்டு சத்திர சிகிச்சைக் கூடத்தினுள் காயமுற்ற குழந்தைகள் உட்பட மக்கள் சத்திரசிகிச்சை மேசைகளிலேயே கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு முதல் நாளில்தான் செஞ்சிலுவையினர் வரைபட ஆள்கூறுகளை பாதுகாப்பதற்காக எனக்கூறி எடுத்துச்சென்றனர். அப்போது இந்த ஆள்கூறு மருத்துவமனையை இலக்கு வைப்பதற்கே பாவிக்கப்படும் என கூறி வேண்டாமென மருத்துவ அதிகாரி ஒருவர் தடுக்க முயன்றார். திறன்மிக்க போரளி மயக்கமருந்து நிபுணர் செல்வி. அல்லி அவர்கள் வள்ளிபுனத்தில் காயமடைந்து உடையார்கட்டு மருத்துவமனையில் வீரச்சாவடைந்தார். இது உயிர்காக்கும் இயந்திரத்தை பலமிழக்கவைத்தது. உடையார்கட்டு மருத்துவமனைமீது நடாத்தப்பட்ட செறிவாக்கப்பட்ட ஆட்லறி தாக்குதல்களில் அதனைச்சுற்றி பாதுகாப்புக்காக கூடிய மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவ மனைக்குள் எறிகணைகள் வீழ்கிறது என்ற செய்தியை சுகாதார உயர்பீடத்துக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவதால் நிறுத்திவிட முடியும் என கிளிநோச்சி சுகாதார அதிகாரி ஒருவர் மீண்டும் மீண்டும் முயன்றார். தொலைபேசியினூடாக எறிகணைகளை துல்லியமாக மருத்துவ மனைமீது திருப்பியிருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டபின் அந்த முயற்சிகளை கைவிட்டார் அந்த அதிகாரி. அவர்களது தாக்குதல்கள் அதன்மூலம் செறிவாக்கப்பட்டபோது ஒரு தாதியும் கடமையின்போது காயமடைந்து அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். கடமையில் இருந்த தமிழீழ மருத்துவக்கல்லூரி போராளி மருத்துவர் திருமதி. கமலினி அவர்கள் முள்ளிவாய்க்கால் சத்திரசிகிச்சைக் கூடத்தில் வைத்து எறிகணை வீச்சில் வீரச்சாவடைந்தார். மக்களுக்கான மருத்துவ சேவையில் இருந்த வைத்தியர் சிவமனோகரன் அவர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியாகிப்போனார். மூத்த மருத்துவப்போராளிகள் இறையொளி, செவ்வானம் கடமையில் இருந்தபடி வீரச்சாவடைந்து போனார்கள். இவ்வாறு வீரச்சாவடைந்த மருத்துவ போராளிகள் அநேகர். பொஸ்பரஸ் எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள், ஆர்.பீ.ஜீ எறிகணைகள், ஆட்லறிவீச்சுக்கள், விமானத் தாக்குதல்கள் கண்ணுக்குத் தெரிந்த கடற்படைக் கப்பல்கள் ஏவிய குண்டுகள் வீழ்கின்ற நிலமைகளில் காப்புக்கள் அற்ற சூழலில் மருத்துவ மனைகள் இயங்கிக்கொண்டுஇருந்தன. அங்கு வெடிக்காமல் காலில் செருகிய நிலையில் இருந்த கொத்துக் குண்டு, ஆர்.பீ.ஜீ குண்டுகளை பெரும் ஆபத்துக்கு நடுவில் புதுமாத்தளனில் வெட்டியகற்றி உயிர்காக்கும் பணிகளை நிறைவேற்றினார்கள். ( ஆர்.பீ.ஜீ தாக்குதலுக்கு உள்ளான பெண் தற்பொழுதும் உயிர் வாழ்கிறார்) இரவு பகலாக பல்லாயிரக்கணக்கான காயங்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் நடந்துகொண்டே இருந்தன. பகலில் பெண் மருத்துவர்களும் இரவில் ஆண் மருத்துவர்களும் பணியில் இருந்தார்கள். ஏனெனில் இந்த மருத்துவர்கள் தமது குழந்தைகளை இரவில் பராமரிக்க செல்லவேண்டும். இடம்பெயர்வுகளில் மருத்துவர்களின் குடும்பங்கள் தங்களைத் தாங்களே உதவிகளின்றி நகர்த்தவேண்டி ஏற்பட்டது. மருத்துவமனைக்குள் மருத்துவ ஆளணியினர் காயமடைந்து நோயாளர்களாக பராமரிக்கப்படத் தொடங்கினர். பலர் பின்னர் வீரச்சாவடைந்து போனார்கள். அதுவரை கடினமாக உழைத்த, தனது மூன்று குழந்தைகளையும் குண்டுவிச்சில் பலிகொடுத்த, மருத்துவர் இசைவாணன் தனது தொடை என்பு முறிவுடன் மற்றவர்களின் சுமைகளை நினைத்து சயனைட் குப்பியைக் கடித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். காயமடைந்த நிலையிலும் மருத்துவர்கள் மற்றவர்களின் உயிர்காப்பதற்காக கட்டுக்களோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சகமருத்துவ ஆளணிகள் வீழ்ந்துகொண்டிருக்க ஆண் பெண் மருத்துவ ஆளணி தங்களது உயிர்கள்மீது எந்த கவனமுமற்றோராய் இயந்திரங்களாக வேலைகளைக் கவனித்துக்கொண்டது. உடலங்களை அகற்றுகதில் ஈடுபட்ட தமிழீழக் காவல்துறை செயலிழந்துபோக மருத்துவமனைகள் உடல்களால் நிரம்பத்தொடங்கியது. இப்படியாக மே மாதம் 15ம் திகதியுடன் மருத்துவ ஆளணிகளின் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகிறது. “எனது கடமைகளை நான் இறுதிவரை நிறைவேற்றுவேன்; உங்களது கடமைகளை நீங்கள் உங்களது மக்களுக்காக நிறைவேற்றுவீர்கள் என முழுமையாக நம்புகிறேன்” என்று இறுதிச் சந்திப்பில் கேட்டுக்கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நம்பிக்கையை இறுதிக்கணம்வரை காப்பாற்றியது தமிழீழ மருத்துவக் குழாம்.  
  • அவர் காலமாகிய பின்னர் அந்த புத்தகம் வெளிவந்தது. அதில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.
  • புலம்பெயர் நாட்டிலிருந்து  ஒரு திறமையான தலைமையும் சிறந்த கட்டமைப்பும் தேவை. இதை வரலாறு தெரிந்தவர்களாலும் போர் நடந்த காலத்தில் வாழ்ந்தவர்களாலும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
  • எமக்கென்று ஒரு பலம் இருக்கும்வரை நான் ஏனையோர் தயவில் வாழ்வதைத் தடுக்க முடியாது. அந்தப் பலம் என்பது எமது ஒற்றுமையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இன்றுவரை தனித்தனியாகவே அரசியல் அரசியல் செய்துவருகிறோம்.  தலைவர் எம்மை ஒன்றிணைத்து வைத்திருந்த காலம் இனி வரப்போவதில்லை. 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.