Jump to content

'சாட்டை துரைமுருகன் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சியா?' - குற்றச்சாட்டும் விளக்கமும்


Recommended Posts

மணல் கடத்தல் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதாக அவரை கடுமையாகச் சாடி ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார் சாட்டை துரைமுருகன்.

மிரட்டல் வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்ற யூ-டியூபர் சாட்டை துரைமுருகன். மீண்டும் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளும் கட்சியினர் செயல்படுவதாகப் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது
 
சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது

கடந்த சில தினங்களுக்கு முன், சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் அதன் உரிமையாளர் வினோத் என்பவர், தமிழ் ஈழத்துக்காகப் போராடிய பிரபாகரனையும், அவருடைய கொள்கையையும், சீமானையும் கடுமையாக விமர்சனம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

 

இந்தநிலையில் ட்விட்டர் கருத்து மோதல்கள் முற்றிய நிலையில், சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநில தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் உள்ளிட்ட நான்கு பேர் சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்துக்குச் சென்று பிரபாகரனை விமர்சித்த வினோத்தை நேரில் சந்தித்துப் பேசியதோடு,

சாட்டை துரைமுருகன்
 
சாட்டை துரைமுருகன்

காவல்துறையினர் முன்னிலையில் வினோத்தை மறுப்பு தெரிவித்து, மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட வேண்டும் என்று எச்சரித்து வீடியோவும் வெளியிடச் செய்துள்ளனர். அவர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்துபோய் வினோத் கே.கே.நகர் காவல்துறையினருக்குப் புகார் கொடுத்திருக்கிறார். அதன் பெயரில் நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நால்வரும் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதே நேரத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மணல் கடத்தலுடன் தொடர்புப்படுத்திப் பேசியதாகக் கரூர் மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி கொடுத்த புகாரில் கரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்த வழக்கில் தற்போது மீண்டும் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு லால்குடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம். ”விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான எங்கள் அண்ணன் சீமானை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிடுகிறார். அவரை எங்களது தம்பிகள் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுத் தவறு என்றும் அடிப்படை முகாந்திரம் இல்லாத கருத்துக்களைச் சொல்வதாகவும், அதனை மறுத்து வருத்தம் தெரிவித்து இன்னொரு வீடியோ பதிவிடும்படி சொல்லியிருக்கிறார்கள். அதனைப் பொருட்படுத்தாமல் வினோத்

அதே தவறையே செய்கிறார் என்றால் என்ன அர்த்தம். இந்நிலையில் தான் எங்கள் அண்ணன்கள் நான்கு பேர் வினோத்திடம் நேரடியாகச் சந்தித்துப் பேசுகிறார்கள்.அதற்கு அவர் மிரட்டியதாக கே.கே நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார், அதன் பேரில் போலீஸாரும் கைது செய்கிறார்கள். வழக்கை விட்டுத்தள்ளுங்கள் அதனை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். கடந்த ஆண்டு, மணல் கடத்தல் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதாக அவரை கடுமையாகச் சாடி தனது யூ-டியூப் சேனலில் ஒரு வீடியோவைப் பதிவுசெய்தார் சாட்டை துரைமுருகன்.

நாம் தமிழர் நிர்வாகிகளைக் கைது செய்த போலீஸார்
 
நாம் தமிழர் நிர்வாகிகளைக் கைது செய்த போலீஸார்

அப்போது எல்லாம் விட்டுவிட்டு இப்போது வழக்குப் போட்டு கைது செய்கிறது என்றால் என்ன அர்த்தம். அடுத்ததாக கலைஞரை விமர்சனம் செய்த வழக்கில் மீண்டும் கைது செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரியவருகிறது. இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளும் கட்சி செய்யும் செயல் " என ஆவேசமாகக் கூறினார்.

 

இது தொடர்பாக திருச்சி தி.மு.க பிரமுகர் சூர்யா சிவாவிடம் பேசினோம்.”கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான கட்சி தி.மு.க என்கிற தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். அரசியல் தலையீடு, அரசியல் காழ்ப்புணர்ச்சி இதில் எதுவுமே கிடையாது. தி.மு.க-வை பெருத்தவரைக் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கும் கட்சி. அண்ணா,கலைஞர் ஆட்சிக்காலத்திலிருந்து பார்த்தால் நன்கு புரியும். வாய் இருந்தால் போதும், யார்? யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், ஊழல் புகார் குற்றச்சாட்டுகளை அடுக்கலாம். என்பதற்குச் சாட்டை துரைமுருகன் ஒரு எடுத்துக்காட்டு. கடந்த ஆண்டுகளில் தி.மு.க-அ.தி.மு.க உள்ள முக்கிய தலைவர்களைக் காது கொடுத்துக்கூடக் கேட்க முடியாத அளவிற்குக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி சாட்டை துரைமுருகன் பல வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

 

இது சரியா? உங்கள் தலைவரை ஒருவர் தவறாகப் பேசுகிறார் என்றதும் எல்லோரும் வரிந்துகட்டிக்கொண்டு நேரில் சென்று மன்னிப்பு கேட்டு, வீடியோ பதிவிடும்படி வற்புறுத்துகிறீர்களே அது தவறு இல்லையா? உங்களுக்கு இருக்கும் கருத்துச் சுதந்திரம் வினோத்துக்கும் தானே இருக்கிறது. எதற்காக அவரை சாட்டை துரைமுருகன் மிரட்டவேண்டும். ஒருவர் மீது ஊழல் புகார் குற்றச்சாட்டுகளைச் சொல்வதற்கு முன் ஆதாரங்களை வைத்துக்கொண்டு தானே பேசவேண்டும். ஆதாரம் இல்லாமல் பேசியதால் அவர் மீது கட்சி நிர்வாகிகள் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதன் பெயரில் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் எங்கிருந்து வருகிறது அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது”என்றார் காட்டமாக.

'சாட்டை துரைமுருகன் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சியா?' - குற்றச்சாட்டும் விளக்கமும்| YouTuber Duraimurugan arrested by karur police (vikatan.com)

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்..போன எல்லாரும் பட்டதாரிகள் என்கிறார்! அந்தக் கட்சி வழக்கறிஞருக்கு ஒரு போன் போட்டு "இப்படி செய்தால் பிரச்சினை வருமா?" என்று ஒரு கேள்வி கேட்டு விட்டுப் போயிருக்கலாம்!

நிச்சயமாக லோயர் போகாதீங்கடா என்று தான் சொல்லியிருப்பார்!

விளக்கத்திற்கு நன்றி இசை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிச்சு இருக்கிறோம் என்கிறாங்கள் 
பட்டம் பெற்று இருக்கிறோம் என்கிறாங்கள் 

கொம்பு முளைத்து சொந்த இனத்துக்கு எதிராக 
பேசிக்கொண்டு தெரியாமல் 
போலீசு சிறை என்று திரிகிறார்கள் 

என்ன மனுஷங்களோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

படிச்சு இருக்கிறோம் என்கிறாங்கள் 
பட்டம் பெற்று இருக்கிறோம் என்கிறாங்கள் 

கொம்பு முளைத்து சொந்த இனத்துக்கு எதிராக 
பேசிக்கொண்டு தெரியாமல் 
போலீசு சிறை என்று திரிகிறார்கள் 

என்ன மனுஷங்களோ? 

மனுசனுக்கு.... 
கொம்பு, முளைத்தால்....
குதிரை மாதிரி.... குத்தும்.  🙃 :grin:

குதிரை எப்படி, குத்தும்... என்று கேட்காதீங்க.
கருத்துக்களை ஆரம்பத்தில் இருந்து, வாசித்துப் பாருங்கள். 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.