Jump to content

இரவோடு இரவாக இரு தரப்பு கடும் மோதல்.. பைக், கார், ஆட்டோ உடைப்பு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரவோடு இரவாக இரு தரப்பு கடும் மோதல்.. பைக், கார், ஆட்டோ உடைப்பு..

Screenshot-2021-06-17-12-13-41-553-org-m

திருநெல்வேலி: நெல்லை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால், பைக்குகள், கார் ஆட்டோ உடைக்கப்பட்டன. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாநகரத்தை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் மருதநகர் பகுதியை சார்ந்த பாலமுருகன் என்ற பால முகேஷுக்கு (17)அரிவாள் வெட்டுவிழுந்தது .

இதனையடுத்து அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இதனால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் கார் ,ஆட்டோ ,பைக், சில வீடுகள் கல்லெறிந்து சேதம் அடைந்துள்ளது. வைக்கோல் படப்புக்கும் தீ வைக்கப்பட்டதினால் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தனர்.

இதையடுத்து, ஒரு தரப்பினர் மேலப்பாளையம் அம்பாசமுத்திரம் சாலையில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டத் தொடங்கினர். . மற்றொரு தரப்பினரும் மருதம் நகர் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான போலீசார் முன்னீர்பள்ளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ராஜராஜன், சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Screenshot-2021-06-17-12-17-50-416-org-m

இதனிடையே முன்னீர்பள்ளம் அருகே கோபாலசமுத்திரத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமிற்கு ஆறு பேர் மூன்று இரண்டு சக்கர வாகனத்தில் சென்று உள்ளனர் . அங்கிருந்த பெருமாள் மற்றும் சின்னத்துரை என்ற இலங்கை அகதிகளையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இடதுகை மணிக்கட்டு துண்டிக்கப்பட்டவர், பலத்த வெட்டுக்காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து இலங்கை தமிழர் இலங்கை முகாமை சேர்ந்தவர்கள், அம்பை மெயின்ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை மாநகர பகுதியில் பதட்டம் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

https://tamil.oneindia.com/news/thirunelveli/the-bikes-car-and-auto-attacked-due-to-a-clash-between-the-two-sides-near-tirunelveli-424185.html

 

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

திருநெல்வேலி: நெல்லை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால், பைக்குகள், கார் ஆட்டோ உடைக்கப்பட்டன. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அங்கிருந்த பெருமாள் மற்றும் சின்னத்துரை என்ற இலங்கை அகதிகளையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

எதற்காக இலங்கை அகதிகளைத் தாக்கவேண்டும்.... ?? 🤔 மக்களைக் குழப்புவதில் இந்தச் செய்தியாளர் வீரகுமாருக்கு அப்படி என்னதான் கிடைத்துள்ளது.... ??? 🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருட அ.தி.மு.க. ஆட்சியில்… இலங்கை அகதிகள் தாக்கப்படவில்லை.

ஒரு மாத தி. மு.க. ஆட்சியில்… இப்படி நடந்தது பலத்த சந்தேகமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரிந்த இரு தரப்பினர்?

எனக்கு என்னமோ இது அண்மையில் இலங்கை தமிழர்களை மையமாக வைத்து தமிழ் நாட்டில் இருந்து வரும் செய்திகளின் தொடர்சியாகவே படுகிறது.

இலங்கை தமிழர்களால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது, வன்முறை தலைதூக்குகிறது என்ற விம்பம் கட்டமைக்கப்படுகிறது போலவே எனக்கு படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலிருந்து ஆயுத தாரிகள் தமிழகம் ஊடுருவல் என்ற செய்தி தொடர்பான உண்மைத்தன்மை என்ன என்பது வெளியானது.

 

இலங்கையில் இருந்து ஆயுததாரிகள் சிலர் தமிழகத்திற்குள்

 ஊடுருவியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தி இதன் பின்னணியைக் கண்டறிந்துள்ளனர்.
 
 
இதுகுறித்து பி.பி.சி. தமிழ்ச் சேவை விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளது.
 
 
கடந்த 12ஆம் தேதி வெளிநாட்டு செல்பேசி எண்ணில் இருந்து இலங்கையில் இருந்து பேசுவதாகக் கூறி மதுரை திடீர் நகர காவல் நிலையத்துக்கு அழைப்பு வந்தது. அதில், இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த நசீர், அமீன், பராகத்துல்லா ஆகியோர் ஏகே 47 ரக துப்பாக்கிகளை இலங்கையில் இருந்து கடத்திக் கொண்டு மீன்பிடி படகில் இந்தியா வருவதாக மறுமுனையில் பேசிய நபர் கூறினார்.
 
 
பின்னர் மீண்டும் சில மணி நேரம் கழித்து அதே நபர் காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு, இந்தியாவுக்கு வரும் மூவருக்கும் அந்த ஆயுதங்களை கொடுத்தது இலங்கை கடற்படை அதிகாரிகள்தான் என்றும் கூறி இணைப்பை துண்டித்தார்.
 
மிகவும் தீவிரமாக கருதப்பட வேண்டிய தகவல் இது என்பதால் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர காவல் படை, மத்திய உளவுத்துறையை தமிழ்நாடு காவல்துறையினர் எச்சரித்தனர்.
 
தீவிரவாத செயல்பாடுகள் மீது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ அதேபோன்ற நடவடிக்கைகளை அனைத்து புலனாய்வுத்துறைகளும் பின்பற்றின. இந்திய உளவுத்துறை மூலம் இலங்கையில் உள்ள கடற்படைக்கும் இது பற்றிய தகவல் பகிரப்பட்டது.
 
ஆயுத கடத்தலில் இலங்கை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற விசாரணையும் முடுக்கி விடப்பட்டது என்று உள்துறை அதிகாரி தெரிவித்தார்.
 
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஏதேனும் எச்சரிக்கை குறிப்பு இந்தியாவில் இருந்து வந்ததா என்று கேட்கப்பட்டது. ஆனால், அத்தகைய தகவல் தங்களுக்கு வரவில்லை என்று இந்திய தூதரகம் கூறியது.
 
மறுபுறம் தமிழ்நாட்டுக்கு நேரடியாக வராமல் கேரளா வழியாக ஆயுதங்கள் கடத்தப்பட்டு வரலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கேரள காவல்துறையும் எச்சரிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் எல்லை மாவட்டங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.
 
இந்த விவகாரத்தில் இலங்கை காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் டிஐஜி அஜித ரோஹண, இந்த எச்சரிக்கை தகவல் தொடர்பாக இன்டர்போல் காவல்துறையிடம் மேலதிக குறிப்புகள் தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.
 
முன்னதாக, இரண்டு சிங்கள மொழி பேரும் இலங்கையர்கள் மற்றும் 23 பேர் தூத்துக்குடிக்கு சட்டவிரோதமாக படகில் வந்து பின்னர் அங்கிருந்து மதுரையில் உள்ள தொழில்பேட்டையில் தங்கியிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அவர்களை தமிழ்நாடு க்யூ பிரிவு காவல்துறையினர் கடந்த 10ஆம் தேதி கைது செய்தனர்.
 
அவர்கள் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி மூன்று ஃபைபர் படகுகள் மூலம் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்ததாக தெரிய வந்ததால், அவர்களுக்கும் மதுரை காவல் நிலையத்துக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்புக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.
 
பிடிபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையின் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் காவல்துறையின் சந்தேகத்தை வலுப்படுத்தியது.
 
இதற்கிடையே, தமிழ்நாடு காவல்துறையின் தீவிரவாத செயல்பாடுகளை கண்காணிக்கும் க்யூ பிரிவினர், மதுரை காவல் நிலையத்துக்கு கடந்த 12ஆம் தேதி வந்த மர்ம அழைப்புகளின் பின்னணியை விசாரித்தனர்.
 
அதில், வெளிநாட்டு செல்பேசி எண்ணில் இருந்து காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசிய நபர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
 
பனைக்குளத்தைச் சேர்ந்த தாஜுதீன், பஹருல் அமீன், அன்வர் ராஜா, ஷேக் அலாவுதீன், ஹுசேன் ஆகியோர் அதே பகுதியில் உள்ள ஐந்து சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து அங்கு தகர கொட்டகை போட்டுள்ளதாகவும், இது பற்றி நூருல் அமீன் மூலம் உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளியிட்டதாகவும் தெரிய வந்தது.
 
- நன்றி : பி.பி.சி. தமிழ்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.