Jump to content

குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

June 17, 2021
spacer.png

சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்று வந்த முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புனரமைக்கப்படும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இராணுவத்தினரின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி  மேஜர் ஜென்ரல் உபாலி ராஜபக்ஸவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, குறித்த கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக, குருந்தூர் மலை விகாரைக்கான உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பண்டைய சிலை இல்லமும் விரைவில் தோண்டப்படவுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது. கடந்த ஒருமாத காலமாகப் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இறுக்கமான சுகாதார நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்த நிலையில் மீண்டும் மண்டபங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளரம குறிப்பிடத்தக்கது

https://globaltamilnews.net/2021/162432/

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

புத்தன் அண்ணா,
அவன் விகாரை கட்டினால் உங்களுக்கு என்ன பிரச்சினை. உங்களுக்கு சோறு முக்கியம் அதுக்காக அவங்கடை *** கழுவவும் தயங்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாதவூரான் said:

புத்தன் அண்ணா,
அவன் விகாரை கட்டினால் உங்களுக்கு என்ன பிரச்சினை. உங்களுக்கு சோறு முக்கியம் அதுக்காக அவங்கடை *** கழுவவும் தயங்க கூடாது.

அதுதானே எனக்கு என்ன?ஆனால் ஒன்று சொல்ல தானே வேணும் "நாங்கள் மாறினாலும் அவங்கள் மாறமாட்டாங்கள்" என்பதை ஏனையோருக்கு அறிய தரவேண்டியது இருப்பது எமது கடமையல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, putthan said:

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

யார் அந்த கறுப்பாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

யார் அந்த கறுப்பாடு

நான் பெயர் சொல்ல மாட்ட்ன். பிறகு தெரியும் தானே. உள்ள வெடிகுண்டுகள் எல்லாம் இதுக்கை நிண்டு ஒரே டும் டும் தான்.💣 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

எவன் புலி என்று உச்சரிக்கிறானோ அவன் எங்களுக்கு விரோதி....
நான் நேசனல் ஜொகிரபி  சனலை பார்ப்பதில்லை காரணம் அவர்கள் அதிகம் புலி சிங்கத்தை வேட்டை ஆடுவது போல அடிக்கடி காட்டுகிறார்கள் ....பக்கசார்பான சனல் போல தெரிகின்றது புலம் பெயர்ந்த கோஸ்டிகள் அந்த சனலுக்கு காசு கொடுக்கினம் போல இருக்கு..... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

48க்கு முன்பே திட்டமிடப்பட்டு படிப்படியாக முன்னேறி வரும் திட்டம் இது.

70 களிலேயே கொக்காவிலில் ஒரு குடியேற்றத்தை நிறுவ யோசித்துள்ளார்கள்.

83-2009 வேகம் மட்டுப்பட்டிருந்தது. இப்போ மட்டற்று தொடக்கிறது.

இதை செய்தியாக படித்து ஆதங்கத்தை பகிர்வதை தவிர எதையும் செய்ய கூடிய நிலையில் யாரும் இல்லை.

53 minutes ago, குமாரசாமி said:

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

ஆனால் நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது. 

சொந்த நாட்டில் நிகழும் நில அபகரிப்பை தடுக்க எதுவும் செய்ய வக்கற்ற நிலையில் - தமிழ் நாட்டில் ஒரு குறித்த அரசியல்வாதியை எதிர்த்தும், ஆதரித்தும் நாம் ஏதோ வரலாற்று கடமை செய்வதாக நம்மை நாமே ஏமாற்றுகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சட்டாம்பியார் நீதிமன்றத்துக்கு இதுகளை கொண்டுபோக மாட்டார். அரபிக்கல்லூரி, துமிந்த சில்வா போன்றோருக்காகத்தான் வாதாடுவார். பயணத்தடை அமுலில், கொரோனாத்தடை உள்ள நேரத்தில் இதுகள் செய்யலாமோ, கூடலாமோ? ஏழைத்தமிழர் வயிற்று பிழைப்புக்காக வெளியில் வந்தால் மட்டும் தண்டிப்பது என்ன நீதி? என்று நீதிமன்றத்தில் கேட்கக்கூடாதோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

83-2009 வேகம் மட்டுப்பட்டிருந்தது. இப்போ மட்டற்று தொடக்கிறது.

இதை செய்தியாக படித்து ஆதங்கத்தை பகிர்வதை தவிர எதையும் செய்ய கூடிய நிலையில் யாரும் இல்லை.

உண்மை புலம்பிக் கொண்டு மண்டையை போட வேண்டியது . தான்....வேறு என்னத்தை செய்ய ?கிட்ட தட்ட 30 வருடங்கள் உயிர் தியாகம் செய்து தடுத்த சகல போராளிகளுக்கும் 🙏🙏

Just now, satan said:

எங்கட சட்டாம்பியார் நீதிமன்றத்துக்கு இதுகளை கொண்டுபோக மாட்டார். அரபிக்கல்லூரி, துமிந்த சில்வா போன்றோருக்காகத்தான் வாதாடுவார். பயணத்தடை அமுலில், கொரோனாத்தடை உள்ள நேரத்தில் இதுகள் செய்யலாமோ, கூடலாமோ? ஏழைத்தமிழர் வயிற்று பிழைப்புக்காக வெளியில் வந்தால் மட்டும் தண்டிப்பது என்ன நீதி? என்று நீதிமன்றத்தில் கேட்கக்கூடாதோ? 

மீன் விற்றால் கைது விகாரை கட்டினால் விசிலடிக்கும் சிங்கள ஜனதாவ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் எங்கட தலையள் விடுகிற பிழை. சிங்களவனுக்காக வாதாடுவினம். தன் மக்களுக்காக, உரிமைக்காக வாயே திறக்க மாட்டினம். பிறகு தாங்கள் தான்  தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று பல்லவி பாடுவினம்.

அதுகளும் கலைச்சு போட்டுதுகள் ....இவ்வளவு காலமும் குத்திமுறிந்து வெளிநாட்டு தூதுவர்களுடன் கதைத்தது தான் மிச்சம்... இருந்தும் அதில் சில நன்மைகள் உண்டு...இரத்தம் சிந்தியும்,உயிர் தியாகம் செய்தும் சரவதேசம் பார்க்காத நிலையில் இன்று சில காய் நகர்த்தல்கள் (சர்வதேசம் அவர்கள் நலன் சார்ந்து) நடை பெறுகிறது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனி மனிதன் ஆனாலும் சரி அல்லது ஒரு இனம் ஆனாலும் சரி அடிபட்டு தோற்றுவிட்டால் அடிமாடாய் போய்விடுவோம் அடிமைப்பட்டுவிடுவோம்.

ஆயுதங்கள் கொண்டு ஒரு கொடூர எதிரியுடன் மோதியவர்கள் தோற்றுவிட்டால் ஊரைவிட்டு வெளியேறிவிடவேண்டும் அல்லது உயிரை விட்டுவிடவேண்டும் இல்லையேல் காலம் முழுவதும் எதிரியின் அவமானபடுத்தலை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் அதை பார்த்துக்கொண்டே  வாழ்ந்து முடிக்கவேண்டும்.

இதுதான் இன்றைய எம் இனத்தின் நிலை, இது இனிமேல் போக போக  இதைவிட மோசமாக  இருக்கபோகிறது என்பதை நினைத்தால் பல ஆயிரம் மைல்கள் கடந்து வாழ்ந்தாலும் சிங்களவன் கைகளுக்கு இடையே எம் கழுத்து நெரிக்கப்படுவதுபோல் மூச்சு திணறும் உணர்வு.

அந்த இரக்கமற்ற தேசத்திலிருந்து எஸ்கேப் ஆன எங்களுக்கே அப்படியென்றால் அங்கே  இருக்கும் எம்மவர்களின் நிலையை  நினைத்தால், என்னவாக போகிறார்களோ என்று தெரியவில்லை.

ஆயுதபோராட்டம் நடந்த காலத்தில் போர்க்கால இருளாகதான் இருந்தது ஆனால் பார்வை இருந்தது, என்றாவது ஒருநாள் வெளிச்சத்தை பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

தற்போது இருளுக்குள் வாழும்போது பார்வையும் சேர்த்து பறி போய்விட்டது. என்னதான் ஆக போகுதோ எம்மினத்தின் எதிர்காலமும் இருப்பும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் பறிபோகும் தமிழர் நிலங்கள்: பயணத்தடையிலும் விகாரைக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

21-60c9fe922669d-696x522.jpeg
 48 Views
இலங்கையில்  கோவிட் 19 தீவிர பரவல்நிலை காரணமாகப் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புனருஸ்தானம் செய்யப்பட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
 
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 13 .06.2021 (ஞாயிற்றுக்கிழமை ) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் பிரதானி மேஜர் ஜென்ரல் உபாலி ராஜபக்சவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
 
21-60c9fe9244fb8-1024x768.jpeg
 
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, 13.06.2021 அன்று இந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக குருந்தூர் மலை விகாரைக்கான உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கடந்த மே 18 அன்று குருந்தூர் மலையில் தொல்பொருள் துறை புராதன ஸ்தூபியின் அகழ்வாராய்ச்சியை முடித்த நிலையில், குருந்தாவசோக ரஜமாஹா விகாரைக்கான புனருஸ்தான பணிகள் பிரித்தோதும் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அத்தோடு பண்டைய சிலை இல்லமும் விரைவில் தோண்டப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
21-60c9fe9217012.jpeg
 
இந்த நிலையிலேயே மீண்டும் மண்டபங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளது.
 
ஒன்றுகூடுவதற்கு ஆலயங்களில் சமய நிகழ்வுகளை நடாத்துவதற்குத் தடைகள் விதிக்கப்பட்டு தமிழர் பரதேசங்களில் கைது நடவடிக்கையில் இடம்பெற்று வரும் நிலையில், அந்த நிலைமைகளுக்கு மாறாக குருந்தூர் மலையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
21-60c9fe925fa6a.jpeg
 
ஏற்கனவே நில அளவை திணைக்களத்தால் 79 ஏக்கர் நிலங்கள் குருந்தூர் மலை தொல்லியல் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளன.
 
குருந்தூர் மலை புராதன விகாரையின் பிரதான தளம் தற்போது 420 ஏக்கர் என வரையறுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் , வடக்கின் பாரிய சிதைவுகளைக் கொண்ட நிலப்பரப்பைக் கொண்ட பௌத்த பூமி குருந்தூர் மலை எனவும் மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் குருந்தூர் மலை விகாரைக்கான புனித பூமி தொல்பொருள் தளத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று தொல்பொருள் துறை குறிப்பிடுவதாகவும் குருந்தூர்மலை விகாரைக்கான உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
21-60c9fe92354e9.jpeg
 
குருந்தூர் மலையைச் சூழவும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான வயல் நிலங்கள், குடியிருப்பு விவசாய காணிகள் என்பன காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, valavan said:

தனி மனிதன் ஆனாலும் சரி அல்லது ஒரு இனம் ஆனாலும் சரி அடிபட்டு தோற்றுவிட்டால் அடிமாடாய் போய்விடுவோம் அடிமைப்பட்டுவிடுவோம்.

ஆயுதங்கள் கொண்டு ஒரு கொடூர எதிரியுடன் மோதியவர்கள் தோற்றுவிட்டால் ஊரைவிட்டு வெளியேறிவிடவேண்டும் அல்லது உயிரை விட்டுவிடவேண்டும் இல்லையேல் காலம் முழுவதும் எதிரியின் அவமானபடுத்தலை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் அதை பார்த்துக்கொண்டே  வாழ்ந்து முடிக்கவேண்டும்.

இதுதான் இன்றைய எம் இனத்தின் நிலை, இது இனிமேல் போக போக  இதைவிட மோசமாக  இருக்கபோகிறது என்பதை நினைத்தால் பல ஆயிரம் மைல்கள் கடந்து வாழ்ந்தாலும் சிங்களவன் கைகளுக்கு இடையே எம் கழுத்து நெரிக்கப்படுவதுபோல் மூச்சு திணறும் உணர்வு.

அந்த இரக்கமற்ற தேசத்திலிருந்து எஸ்கேப் ஆன எங்களுக்கே அப்படியென்றால் அங்கே  இருக்கும் எம்மவர்களின் நிலையை  நினைத்தால், என்னவாக போகிறார்களோ என்று தெரியவில்லை.

ஆயுதபோராட்டம் நடந்த காலத்தில் போர்க்கால இருளாகதான் இருந்தது ஆனால் பார்வை இருந்தது, என்றாவது ஒருநாள் வெளிச்சத்தை பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

தற்போது இருளுக்குள் வாழும்போது பார்வையும் சேர்த்து பறி போய்விட்டது. என்னதான் ஆக போகுதோ எம்மினத்தின் எதிர்காலமும் இருப்பும்?

நான் ஓர் நாட்டுக்கு செல்கிறேன் அது எனக்கு புதிது எனது கலை கலாச்சாரங்கள் முற்று முழுதாக களையப்பட்டு வாழப்பழகிக்கொள்கிறேன்  அது எனது இசைவாக்கமாகிறது 

தற்போது இலங்கையும் யுத்தம் முடிந்து புதிய நாடு அவர்கள் சட்டம் அதற்குள் நாங்களும் இதை எதிர்ப்பவர்கள் மேல் நான் சொன்ன வசனத்துக்குள் புதுந்துகொண்டவர்கள்  அவர்கள் அங்கே வாழப்பழகிக்கொண்டவர்கள். நாங்கள் பழகிக்கொள்ள பழக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் ,  இதை உங்களைப்போல் புரிந்து கொண்டவர்களிடம் மட்டுமே இப்படியான பதிலகளை எதிர்பார்க்கலாம் . 😍

அதாவது  கு*** டி கழுவுறம்  கிழக்கில் கு... சொல்ல மாட்டார்கள் வடக்கில்  சொல்வார்கள் என நினைக்கிறன் பழக்க தோசம் எந்த நாடு சென்றாலும் மாறாது எனவும் நினைக்கிறன் .🤐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது நாட்டுக்குள் வாழப் போகிறவர்கள் அந்த நாட்டு பழக்க வழக்கங்களோடு தங்கள் வழக்கங்களையும் சேர்த்தே கொண்டுசெல்கிறார்கள். தங்களது வழக்கங்களை களைந்து சோரம் போய் வாழவில்லை என நினைக்கின்றேன். இங்கு நாம் பிறந்து, வளர்ந்தநாடு. எமது உரிமைகள் பலவந்தமாக பிடுங்கப்பட்டிருக்கிறது. தட்டிக்கேட்க முடியாவிட்டாலும் முண்டுகொடுக்காமலிருக்கலாம். அப்படி அடிமையாய் வாழுவதற்கு இது ஒன்றும் முடிக்குரிய நாடல்ல, ஜனநாயக நாட்டில் எமது உரிமைகளை பெற முடியாத  போது நமக்கு  தேர்தல்களும் தேவையில்லை, பிரதிநிதிகளும் தேவையில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் ஓர் நாட்டுக்கு செல்கிறேன் அது எனக்கு புதிது எனது கலை கலாச்சாரங்கள் முற்று முழுதாக களையப்பட்டு வாழப்பழகிக்கொள்கிறேன்  அது எனது இசைவாக்கமாகிறது 

தற்போது இலங்கையும் யுத்தம் முடிந்து புதிய நாடு அவர்கள் சட்டம் அதற்குள் நாங்களும் இதை எதிர்ப்பவர்கள் மேல் நான் சொன்ன வசனத்துக்குள் புதுந்துகொண்டவர்கள்  அவர்கள் அங்கே வாழப்பழகிக்கொண்டவர்கள். நாங்கள் பழகிக்கொள்ள பழக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் ,  இதை உங்களைப்போல் புரிந்து கொண்டவர்களிடம் மட்டுமே இப்படியான பதிலகளை எதிர்பார்க்கலாம் . 😍

அதாவது  கு*** டி கழுவுறம்  கிழக்கில் கு... சொல்ல மாட்டார்கள் வடக்கில்  சொல்வார்கள் என நினைக்கிறன் பழக்க தோசம் எந்த நாடு சென்றாலும் மாறாது எனவும் நினைக்கிறன் .🤐

தனி,
முக்கியமான விசயத்தை மறந்து கதைக்கிறியள். இங்கே யாரும் உங்களுடைய கலை கலாச்சாரங்களை மறந்து வாழுங்கோ என்று வற்புறுத்தவில்லை. ஆனால் இலங்கையில் அப்படியல்ல. ஒன்றைத்திணிக்கும் போது பெரும்பாலான மக்கள் எதிர்க்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் அடிமையாகிறார்கள்.நீங்கள் எல்லாத்தையும் மறந்து வாழப்போறன் எண்டால் வாழுங்கோ யாரும் உங்களைக் கேட்கமாட்டினம். ஆனால்நான் வாழுறன் ஆகவேநீயும் வாழு என்றோ,நீங்கள் வாழுவது தான் சரியானது ,மற்றவர்கள் செய்வது எல்லாம் பிழையானது என்று சொல்லமுடியாது. உங்கள் எசமானர்களுக்கு வெள்ளையடிப்பதற்காக அடிமையாக வாழக்கூட தீர்மானித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, வாதவூரான் said:

எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த உலகு இலகுவானது. இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்பவர்களுக்கு அது சவாலானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2021 at 14:26, வாதவூரான் said:

பல விளக்குகள் அணைந்து இருக்கிறது  ஒரு விளக்கு எரிந்து வெளிச்சம் காண்பிக்க போவதில்லை  

யுத்தம் முடிந்த பிறது  ஆர்ப்பாட்டகள் , கண்டனங்களால் , பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது  இதனால் சாதகமான சம்பவங்கள் ஏதேனும் நடந்திருக்கிறதா சொல்லுங்கள் , வடகிழக்கு பிரிக்கப்பட்டது நல்லாட்சி அரசாங்கத்துக்கு வெள்ளையடித்தார்கள் இணைக்கமுடிந்தததா அரசியல் வாதிகளாலே ஒன்றையும் அசைக்கமுடியவில்லை அடிமையாகி போனமக்களால என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்  நீங்கள் சொன்ன அடிமையான மக்கள்தான் இங்கே ஓரலவுக்கேனும்  கைது காணாமல் போதல் என்பவற்றில் இருந்து  நிம்மதியாக வாழ்கிறார்கள் .

அதை நீங்கள் அடிமைகள் என புரிந்துகொண்டால்  நான் ஒன்றும் செய்ய முடியாது நீங்கள் ஒன்றை மறந்து கதைக்கிறியள் நான் இலங்கையை  பற்றி கதைக்கிறன்   நான் இதுவரை எந்த எசமானிக்கும்  வெள்ளையடிப்பதில்லை என் மனதுக்கு பட்டதை எழுதுகிறேன் .

நான் அடிமையாக வாழவில்லை  அதை நீங்கள் இங்கிருந்து பார்த்தால் மட்டுமே உணர்ந்துகொள்ளமுடியும் பசியுள்ளவனுக்கே தெரியும் ஒரு பிடி சோற்றின் அருமை 
நன்றி 

On 18/6/2021 at 15:19, satan said:

எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த உலகு இலகுவானது. இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்பவர்களுக்கு அது சவாலானது.

அப்படியானால் நித்தியானந்தா  போல தனித்தீவு வாங்கவேண்டும்  எப்படி வசதி சாட்டான் இதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் முயற்சிக்க வேண்டும்  அப்படி தீவு வாங்கினால்  வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களை அங்கே குடியிருக்க வசதிகளை செய்யலாம் நாங்கள் இப்படித்தான் வாழ்வோம் என 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது, அங்கு போராடினாற்தான் வாழ முடியும். போராடாமல் தலையாட்டி வாழ்ந்தால் எப்போதுமே அடிமைகளாகவே இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இந்த வெறுப்பு ஏன்? வெளிநாட்டு மதங்கள் தமிழ் தாயகத்தில் எல்லா இடங்களிலும் தங்கள் பிரார்த்தனை வீடுகளை கட்டி வருகின்றன. நம் மக்களும் வெட்கமின்றி வெள்ளைக் கடவுள்களிடம் மண்டியிடுகிறார்கள். தமிழ் தாயகத்தில் பூர்வீக மதம் ஏன் தங்கள் வழிபாட்டுத் தலங்களை உருவாக்க முடியாது? புத்தர் தமிழர்களுக்கு அந்நியமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Buthan said:

இது வெறுப்பு இல்லை.  குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் புத்த மதத்தினராக இருந்தால் அவர்களே விகாரையைக் கட்டிக்கொள்ளலாம். ஆனால் கட்டுவது யார்? எதற்காகக் கட்டுகின்றார்கள் என்று தெரியவில்லையா? 

சைவ மக்கள், கிறிஸ்த்தவர்கள், முஸ்லிம்கள் தாங்கள் வாழும் இடங்களில் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக கோவில்களையும், தேவாலயங்களையும், மசூதிகளையும் அமைப்பதை யாரும் எதிர்ப்பதில்லை.

புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லாத இடங்களில், பூர்வீக தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்தி முழு நாடுமே சிங்களப் புத்தர்களுக்குச் சொந்தமானது என்று தம்மதீபக் கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடும், சிங்களப் பெளத்த மேலாதிக்கத்தை தமிழர்கள், மற்றைய இனங்கள் மீது ஏவும் வகையிலும் இராணுவ, அரச இயந்திரங்களை எல்லாம் பாவித்து, அடாத்தாக குருந்தூர் மலையில் விகாரையைக் கட்டும்போது அதனை எதிர்க்கத்தான் வேண்டும்.

அரசின் சிங்களக் குடியேற்றங்களையும், தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு, தமிழர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து விரட்டியடிப்பதையும் ஆதரிப்பவர்களால்தான் இப்படியான அடாத்தான அபகரிப்பை சரியென்று சொல்லமுடியும். 

புத்தர் தமிழர்களுக்கு அந்நியமில்லை என்பதால்தான் கந்தரோடையில் தமிழ் பெளத்த சின்னங்க்கள் உள்ளன. ஆனால் தமிழர்கள் இப்போது பெளத்தர்கள் இல்லை.

Link to comment
Share on other sites

17 hours ago, satan said:

வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது, அங்கு போராடினாற்தான் வாழ முடியும். போராடாமல் தலையாட்டி வாழ்ந்தால் எப்போதுமே அடிமைகளாகவே இருக்க வேண்டும்.

9 hours ago, கிருபன் said:

இது வெறுப்பு இல்லை.  குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் புத்த மதத்தினராக இருந்தால் அவர்களே விகாரையைக் கட்டிக்கொள்ளலாம். ஆனால் கட்டுவது யார்? எதற்காகக் கட்டுகின்றார்கள் என்று தெரியவில்லையா? 

சைவ மக்கள், கிறிஸ்த்தவர்கள், முஸ்லிம்கள் தாங்கள் வாழும் இடங்களில் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக கோவில்களையும், தேவாலயங்களையும், மசூதிகளையும் அமைப்பதை யாரும் எதிர்ப்பதில்லை.

புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லாத இடங்களில், பூர்வீக தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்தி முழு நாடுமே சிங்களப் புத்தர்களுக்குச் சொந்தமானது என்று தம்மதீபக் கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடும், சிங்களப் பெளத்த மேலாதிக்கத்தை தமிழர்கள், மற்றைய இனங்கள் மீது ஏவும் வகையிலும் இராணுவ, அரச இயந்திரங்களை எல்லாம் பாவித்து, அடாத்தாக குருந்தூர் மலையில் விகாரையைக் கட்டும்போது அதனை எதிர்க்கத்தான் வேண்டும்.

அரசின் சிங்களக் குடியேற்றங்களையும், தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு, தமிழர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து விரட்டியடிப்பதையும் ஆதரிப்பவர்களால்தான் இப்படியான அடாத்தான அபகரிப்பை சரியென்று சொல்லமுடியும். 

புத்தர் தமிழர்களுக்கு அந்நியமில்லை என்பதால்தான் கந்தரோடையில் தமிழ் பெளத்த சின்னங்க்கள் உள்ளன. ஆனால் தமிழர்கள் இப்போது பெளத்தர்கள் இல்லை.

வெளிநாட்டு மதம் காலனித்துவவாதிகள் நம்மீது திணிக்கப்பட்டது, இன்னும் சிலர் அதைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் கதவுகளைத் தட்டி, ஏழை மக்களை வற்புறுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுபவர்கள் இல்லாத இடங்களில் தேவாலயங்களைக் கட்டினர், பின்னர் முயற்சித்து மதமாற்றம் செய்கிறார்கள். இதுதான் உண்மையான பிரச்சினை, புத்த கோவில்கள் அல்ல. மக்கள் வெளிநாட்டு மதத்திற்கு மாறுவது ஏன் ஏற்றுக்கொள்ளத்தக்கது? ஆனால் புத்த மதத்திற்கு அல்ல. எந்தவொரு வெளிநாட்டு மதமும் நம் நிலத்தில் புத்த மதத்தை விட மோசமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Buthan said:

ஆ, அப்படியா..😧

ஐயா.. 

இலங்கைத் தமிழர் சைவர்களா அல்லது இந்துக்களா என்பதற்கு ஆற அமர இருந்து தெளிவான பதிலைத் தாருங்கள். 

பின்னர் எந்தச் சமயம் ஆபத்தானது என்ற விவாதத்திற்கு வருவோம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.