Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தங்கள் அட்டூழியங்களையும், அடக்குமுறைகளையும் மறைப்பதற்கு இவர்களைப்போன்றோருக்கு பதவிகளையும், வேலைவாய்ப்புக்களையும் வழங்கி தங்களுக்கு சார்பான பிரச்சார முகவர்களாக சிங்களம் பாவிக்கிறது. அடிபணியாதவர்களை ஏதிலிகளாக வைத்து, புலம்பெயர்ந்தவர்கள் செய்யும் உதவிகளை தடுத்து, தம்வழியாக வரவைத்து, புலம்பெயர்ந்தவர்களுடன்   உறவை ஏற்படுத்தி, சர்வதேசத்தின்  குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்கும் தாமே தமிழருக்கு உதவிகளை, வேலைவாய்ப்புகளை செய்வதுபோல் காண்பிப்பதற்கும் இவ்வாறானவர்கள்  செய்திகளை அரசாங்கத்திற்கு வழங்கியும், அரசாங்கத்தை புகழ்ந்து ஒரு மாயையை ஏற்படுத்துவதற்கும் உதவுகிறார்கள்.

Link to comment
Share on other sites

 • Replies 64
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

valavan

தனி மனிதன் ஆனாலும் சரி அல்லது ஒரு இனம் ஆனாலும் சரி அடிபட்டு தோற்றுவிட்டால் அடிமாடாய் போய்விடுவோம் அடிமைப்பட்டுவிடுவோம். ஆயுதங்கள் கொண்டு ஒரு கொடூர எதிரியுடன் மோதியவர்கள் தோற்றுவிட்டால் ஊரைவிட்டு

கிருபன்

இது வெறுப்பு இல்லை.  குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் புத்த மதத்தினராக இருந்தால் அவர்களே விகாரையைக் கட்டிக்கொள்ளலாம். ஆனால் கட்டுவது யார்? எதற்காகக் கட்டுகின்றார்கள் என்று தெரியவில்

goshan_che

இல்லை அவர் பூதன் என நினைகிறேன் 🤣. மகனே பூதா, @Buthan அந்நிய இந்தியர்களின் இந்து மதம், அன்நிய நேபாளிகளின் பெளத்தம், மத்திய கிழக்கு மதங்கள், இவை எல்லாவற்றையும் துறந்து  உடா

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Buthan said:

எனக்கு முன்னால் தோன்றுமாறு அவருக்கு சவால் விடுகிறேன்

  யாராவர்... புத்தரோ? அவரே யாரும் கண்ணில் தெரியக்கூடாது என்பதற்காக  இரவில் காணிப்பிடிக்கிறார். முடிந்தால் கேட்டுப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கெளதம புத்தர் தாக்கப்பட்டார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

கிருபன் ஜி,

உங்கள் மனோ தத்துவ ஆய்வுகூடமல்ல யாழ்🤣.

யாழ் களத்தில் இருப்பவர்கள் ஒரே மாதிரியே தொடர்ந்தும் உரையாடுவதால் புதிதாக அறிய பெரிதாக எதுவுமில்லை. அதுதான் புதியவரான பூதன் புத்தூக்கம் தரும் வித்தியாசமான சிந்தனையுடன் வந்துள்ளார் என்று வரவேற்று நாகரீகமான உரையாடலுக்கான ஒரு பதில் போட்டேன். ஆனால் அவரோ மிகவும் புளித்து, நொதித்துக்கொண்டிருக்கும் மதவிரோத சிந்தனைகளைத்தான் கொண்டிருக்கின்றார்.☹️ மதங்களைப் பற்றிய தத்துவ ரீதியான விமர்சனங்களுக்கும், மதவிரோதக் கருத்துக்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தெரியாதவராக இருக்கின்றார். 

வெளிநாட்டு மண்ணில் வாழ்ந்துகொண்டு (அனுமானம்தான்) பெருமளவு மக்களால் பின்பற்றப்படும் மதங்களை தூற்றியும், சிங்கள பெளத்தர்கள் வாழாத  குருந்தூர் மலையை சிங்களவர் அடாத்தாக கையகப்படுத்துவதை ஆதரித்தும் எழுதுவதன் மூலம், மிகவும் பிற்போக்குச் சிந்தனையை வைத்திருக்கும் ஒருவர் என்று வெளிச்சம்போட்டு காட்டுகின்றார். 

யாழ் களம் இப்படியான பலரின் சிந்தனையை மாற்றி, புடம்போட்டு, முற்போக்குவாதிகளாக உருவாக்கிவிட்டுள்ளது😀

எனவே பூதனும் தொடர்ந்தும் யாழில் இருப்பதன் மூலம், இங்கு 20 வருடங்களாக உரையாடியவற்றை படிப்பதன்மூலம், வன்மமும், குரோதமும் எதுவித பயனுமற்றவை என்பதை உணர்ந்துகொள்வார். 😉 

 

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மறவன் புலவு சச்சிதானந்தம் கோஷ்ட்டியோ தெரியவில்லை. அதே பாணியில் இந்து - பெளத்த ஒற்றுமை பற்றிப் பேசுகிறார். பாரதீய ஜனாதாவின் இலங்கைக்கான தூதரவோ என்னமோ? ஆளை யாரெண்டு பாருங்கப்பா. 

 • Haha 1
 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரஞ்சித் said:

மறவன் புலவு சச்சிதானந்தம் கோஷ்ட்டியோ தெரியவில்லை. அதே பாணியில் இந்து - பெளத்த ஒற்றுமை பற்றிப் பேசுகிறார். பாரதீய ஜனாதாவின் இலங்கைக்கான தூதரவோ என்னமோ? ஆளை யாரெண்டு பாருங்கப்பா. 

நேபாளத்திலிருந்து புத்தரை தாங்கிவந்து, சந்தர்ப்பவசத்தால் தமிழன் என்று உரிமை கொண்டாடிக்கொண்டு, கள்ளமாய் காணி பிடிக்கும் கும்பலுக்கு வக்காலத்து வாங்கும் ஆள் யாரோ? இதில தமிழர் என்று வேற பெருமைப்படுகிறாராம். சிங்களத்தின் அடிமை என்று சொல்வதிலும் பெருமை.

1 hour ago, கிருபன் said:

மதவிரோத சிந்தனைகளைத்தான் கொண்டிருக்கின்றார்.

 மத குரோதத்தை உருவாக்கினால், புத்தர் ஆரவாரமில்லாமல் அமைதியாய் உறைந்து விடலாம் என்று கல்லெறிந்து பார்த்திருப்பார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2021 at 04:19, Buthan said:

 

வெளிநாட்டு மதம் காலனித்துவவாதிகள் நம்மீது திணிக்கப்பட்டது, இன்னும் சிலர் அதைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் கதவுகளைத் தட்டி, ஏழை மக்களை வற்புறுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுபவர்கள் இல்லாத இடங்களில் தேவாலயங்களைக் கட்டினர், பின்னர் முயற்சித்து மதமாற்றம் செய்கிறார்கள். இதுதான் உண்மையான பிரச்சினை, புத்த கோவில்கள் அல்ல. மக்கள் வெளிநாட்டு மதத்திற்கு மாறுவது ஏன் ஏற்றுக்கொள்ளத்தக்கது? ஆனால் புத்த மதத்திற்கு அல்ல. எந்தவொரு வெளிநாட்டு மதமும் நம் நிலத்தில் புத்த மதத்தை விட மோசமானது.

 ஏனைய வெளிநாட்டு மதங்கள் திணிக்கப்படும் பொழுது தமிழ் மொழி அழியவில்லை அந்த மத போதனைகள் தமிழில் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.......தமிழ் பிரதேசத்தில்  தமிழ் மொழியை அழித்து சிங்கள மொழியையும் பெளத்ததையும் இராணுவத்தின் மூலம் பரப்புவதை ஏற்றுகொள்ள முடியாது...

 எமக்கு மொழி முக்கியம் மதங்கள் அல்ல

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த வாரம் உபயம் அவர தான் போலுள்ளது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப என்னதான் முடிவு தெளிவாக சொல்லுங்கள். பௌத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டல் பற்றி, அதற்கு மறுப்புத் தெரிவித்து எமது தமிழர் தரப்பு ஏதாவது அறிக்கை விட்டார்களா? அத்து மீறிய செயலாக அறிவித்தார்களா? அல்லது நமது தனித்துவங்களைத் தாரவார்த்து சிங்களத்திற்கு எழுதிக் கொடுத்து விட்டார்களா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வல்வை சகாறா said:

இப்ப என்னதான் முடிவு தெளிவாக சொல்லுங்கள். பௌத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டல் பற்றி, அதற்கு மறுப்புத் தெரிவித்து எமது தமிழர் தரப்பு ஏதாவது அறிக்கை விட்டார்களா? அத்து மீறிய செயலாக அறிவித்தார்களா? அல்லது நமது தனித்துவங்களைத் தாரவார்த்து சிங்களத்திற்கு எழுதிக் கொடுத்து விட்டார்களா?

சரி சரி நீங்கள் இப்பவும் யாழில் இருக்கிறியள்.ok வா.😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, சுவைப்பிரியன் said:

சரி சரி நீங்கள் இப்பவும் யாழில் இருக்கிறியள்.ok வா.😁

அடுப்படிப்பூனை அவ்வளவு சீக்கிரம் யாழை விட்டு போய்விடமுடியுமா?

சதா எல்லாவற்றையும் வாசிக்கிறனாக்கும்.

இங்க கனபேர் கிரீடங்களோட சுத்தினம் நமக்கு பூந்திரிதான்... 🙃

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒன்றைக் கவனித்தீர்களா? இத்திரியின் தலைப்பிற்கும் புதிதாக வந்திருக்கும் கருத்தாளர் இடும் கருத்திற்கும் தொடர்பிருக்கிறதா? குருந்தூர் மலையில் சைவ வழிபாட்டுத் தலத்தில் பெளத்த சிங்கள விகாரை தமிழர் தாயகத்தில் அரச ராணுவ ஆதரவுடன், பயணக் கட்டுப்பாடுகள் இருக்கும் இக்காலகட்டத்திலும் அடாத்தாக நடைபெறுகிறது என்பதே விபரிக்கப்பட்டது. ஆனால், அத்தலைப்பினை மாற்றி பெளத்த சிங்கள ஆக்கிரமிப்பினை மறைத்து, விவாதத்தை திசை திருப்பி நடப்பதை பெளத்த விரிவாக்கம் என்று ஆதரியுங்கள் என்றும், ஆனால் கிறீஸ்த்தவ ஆக்கிரமிப்பை அகற்றுங்கள் என்று இத்திரிக்குச் சம்பந்தமேயில்லாத ஒன்றைக் கொண்டுவந்து இனவழிப்பையும், ஆக்கிரமிப்பையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்கிறார். 

இவரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அவை அகற்றப்படவேண்டியவை. 

இவரின் சில அநாகரீகமான கருத்துக்களை அகற்றியமைக்கு நிர்வாகத்திற்கு நன்றி கூறும் அதேவேளை, இவரது ஏனைய கருத்துக்கள் தொடர்பாகவும் கவனமெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பூதனின் கருத்துக்களை பார்க்கும் போது எனக்கு இருவர் ஞாபகம் வருகிறார்கள் 
முதலாமவர் அர்ஜுன் சம்பத் 
இரண்டாமவர் சுரேன் ராகவன் 

அதிலும் முதலாமவர் பூதனுக்கு அட்சர பிசகில்லாமல் பொருந்துகிறார், பூதனுக்கு எங்கேயோ மிஷனரிகள் கடுக்காய் கொடுத்திருக்கினம் போல 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 28/6/2021 at 13:14, ரஞ்சித் said:

தமிழர் தாயகத்தின் பூர்வீக மதம் சைவம். தமிழர்களை இனக்கொலை புரிந்து இன்று முற்றாக விழுங்கி ஏப்பம் விட நினைக்கும் சிங்கள பெளத்தம் எமக்கு பூர்வீக மதமல்ல. தமிழ் சைவர்கள் பெளத்த இனக்கொலையாளிகளுக்கு எப்போதும் அந்நியர்களே!

 

கம்போடியா,இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஆயிரம் வருடங்களுக்கு முதல் பல சைவக்கோவில்களை பெளத்த மதவாதிகள் அழித்திருக்கின்றனர் ....லிங்கங்கள் பல கைவிடப்பட்ட நிலையில் இன்றும் உண்டு

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.