Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கிஷோர் கே.சாமி மீது ரோகிணி போலீஸ் புகார்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தன்னைப் பற்றியும் மறைந்த தன் கணவர் ரகுவரன் குறித்தும் அவதூறாக பதிவிட்டதாக கிஷோர் கே. சுவாமி என்பவர் மீது சென்னை நகரக் காவல்துறையில் திரைக்கலைஞர் ரோகிணி புகார் அளித்துள்ளார்.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் தொடர்ந்து எழுதி வந்த கிஷோர் கே சுவாமி, பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் ஆபாசமாகவும் அவதூறாகவும் எழுதிவந்த நிலையில், அவர் மீது பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் பெண்கள் புகார்களை அளித்தனர். இவற்றில் சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே. சுவாமி, ஜாமீனில் விடப்பட்டார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை குறித்து சில நாட்களுக்கு முன்பாக அவதூறான கருத்து ஒன்றைப் பதிவுசெய்தார். இது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில், அவரை சென்னை சங்கர் நகர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்குப் பிறகு, பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஏற்கனவே அளித்திருந்த புகாரில் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜூன் 30ஆம் தேதிவரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

ரோஹிணி

பட மூலாதாரம்,ROHINI

இந்த நிலையில் திரைக்கலைஞர் ரோகிணி ஆன்லைன் மூலம் சென்னை நகரக் காவல் துறையிடம் ஆன்லைனில் புகார் ஒன்றைப் பதிவுசெய்துள்ளார்.

அதில், தன்னைப் பற்றியும் மறைந்த தனது கணவர் ரகுவரன் குறித்தும் ஃபேஸ்புக்கில் அவதூறாக கிஷோர் கே சாமி எழுதியுள்ளதாக ரோகிணி புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் கீழ்ப்பாக்கம் காவல்துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கிஷோர் கே. சுவாமி கைது செய்யப்பட்டபோது அரசியல் தலைவர்கள் சிலர் அவருக்கு ஆதரவாகப் பதிவிட்ட நிலையில், சில வருடங்களுக்கு முன்பாக கிஷோர் பல தலைவர்களைப் பற்றி மிக இழிவாகவும் அவதூறாகவும் எழுதிய ஃபேஸ்புக் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை முன்வைத்து சிலர் நியாயம் கேட்டனர்.

இந்தப் பதிவில்தான் ரோகிணி - ரகுவரன் தம்பதி குறித்து கிஷோர் மிக மோசமாக எழுதியிருந்தார். அதை முன்வைத்தே இப்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை ரோஹிணிக்கும் நடிகர் ரகுவரனுக்கும் 1996ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ரிஷிவரன் என்ற மகன் உள்ளார். 2004ல் இந்த தம்பதி விவகாரத்து பெற்றனர். இருப்பினும் ரகுவரனின் கடைசி காலத்தில் அவருடன் சுமூகாகவே ரோஹிணி பழகி வந்தார்.

கிஷோர் கே.சாமி மீது ரோகிணி போலீஸ் புகார்: "ரகுவரன் பற்றியும் என்னைப் பற்றியும் அவதூறாக பதிவிட்டார்" - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

 • Replies 79
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Days

Top Posters In This Topic

Popular Posts

Nathamuni

நீங்கள், எதனை, எதனூடு முடிச்சு போடுகிறீர்கள்? உதாரணமாக, நான் உங்களை, இங்கிருந்து நீங்கள் காதை பொத்துற மாதிரி வீடியோ போட்டு திட்டினால், சுந்தர் பிச்சைக்கு சொல்லுவீர்களா அல்லது, பஸ்சை பிடித்து ஒட்ட

நிழலி

ஆபாசமாக திட்டியவர் மீது ரோகிணி புகார் கொடுத்தது போன்று அனந்தியை ஆபாசமாக திட்டியவர் மீது புகார் கொடுக்க சொல்வது எப்படி தொடர்பில்லாமல் தெரிகின்றது உங்களுக்கு? அனந்தியை திட்டி படு ஆபாசமாக பேசியவர்கள் தமி

Maruthankerny

இதிலும்விட மிகவும் கீழ்த்தரமாக இங்கே யாழ் களத்தில் நடக்கிறது  முதலில் நாம் அதனை தடுப்போம் பின்பு தூரகங்களுக்கு மனு கொடுப்போம் 

சமூகவலைத்தளங்களில் எதையும் எப்படியும் வரம்பு மீறி எழுதலாம், ஆபாசமாக திட்டலாம் என்பவர்களுக்கும், முக்கியமாக அரசியலில், பொது வெளியில் இருக்கும் பெண்களை பாலியல் ரீதியில் எவ்வளவு ஆபாசமகாகவும், அசிங்கமாகவும்திட்டிக் கொண்டு இருக்கும் ஒழுக்கம் கெட்டவர்களுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளும் முறைப்பாடுகளும் நல்ல பாடங்களை கற்பித்து கொடுக்கும் என நம்புகின்றேன். 

அனந்தியும் இந்திய தூதராலயமூடாக தன்னை ஆபாசமாக திட்டிய கோழைகளுக்கு எதிராக சரியான வழியில் முறைப்பாடு செய்தால் நல்லது.

இந்தச் செய்தியும் இதை போன்றவர்களுக்கு எதிரான செய்தி:

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, நிழலி said:

சமூகவலைத்தளங்களில் எதையும் எப்படியும் வரம்பு மீறி எழுதலாம், ஆபாசமாக திட்டலாம் என்பவர்களுக்கும், முக்கியமாக அரசியலில், பொது வெளியில் இருக்கும் பெண்களை பாலியல் ரீதியில் எவ்வளவு ஆபாசமகாகவும், அசிங்கமாகவும்திட்டிக் கொண்டு இருக்கும் ஒழுக்கம் கெட்டவர்களுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளும் முறைப்பாடுகளும் நல்ல பாடங்களை கற்பித்து கொடுக்கும் என நம்புகின்றேன். 

அனந்தியும் இந்திய தூதராலயமூடாக தன்னை ஆபாசமாக திட்டிய கோழைகளுக்கு எதிராக சரியான வழியில் முறைப்பாடு செய்தால் நல்லது.

இந்தச் செய்தியும் இதை போன்றவர்களுக்கு எதிரான செய்தி:

 

நீங்கள், எதனை, எதனூடு முடிச்சு போடுகிறீர்கள்?

உதாரணமாக, நான் உங்களை, இங்கிருந்து நீங்கள் காதை பொத்துற மாதிரி வீடியோ போட்டு திட்டினால், சுந்தர் பிச்சைக்கு சொல்லுவீர்களா அல்லது, பஸ்சை பிடித்து ஒட்டாவா போய், பிரித்தானிய தூதரகத்திடம் முறையிடுவீர்களா? சொல்லுங்கோ, நிழலி...சொல்லுங்கோ? 

விடியோவை யாழ்பாணத்திலை போன இடத்திலை, போட்டு இருந்தால், என்ன செய்வீர்கள்?

சரி, திட்டுறதுக்கு எண்டு பக்கவாத்தியம் மியூசிக், ஜெர்மினியிலை இருந்து வந்திருந்தால், ஜேர்மன் எம்பசிக்குமெல்லே போகோணும்.

IT யில் இருக்கும் உங்களிடம், இதனை எதிர்பார்க்கவில்லை.

youtube ரிப்போர்ட் பண்ணும் வசதிகள் உண்டு.

அரசியலை ஒருபக்கமாக வைத்து விடுங்கள். (இருந்தாலும் ஒரு குறிப்பு: திட்டியவர் சிங்கப்பூர், திட்டு வாங்க கூடிய அளவில், இந்திய அரசியல் வாதியின் தனிப்பட்ட வாழ்வினை தொட்டவர், இலங்கை, ஊடகம் அமெரிக்கா. இதுக்கு, இந்திய தூதரகம் என்ன செய்யலாம் என்று யோசிக்கவில்லையா?)

இந்திய தூதரகம் இப்ப, சம்பந்தரோடை வலு பிஸி. உதே அவயலுக்கு தலை போற பிரச்சனையாக இருக்கும்.

youtube என்பது ஒரு அமெரிக்க ஊடகம். நமக்கு கேடு கெட்ட  வார்த்தைகளாக தெரிபவை, அங்கே, சாதாரண விடயம். இது உங்களுக்கு புரியாததல்ல.

இந்த மதன் சிக்கலுக்குள்ளான ஒரே விசயம்: அவரது சேனலுக்கு சிறுபிள்ளைகளை வரவழைத்து ஆபாசமாக பேசினார் என்பதை.

சிறுபிள்ளைகள் என்ற விசயம் youtube கரிசனைகள் கொள்ளலாம். ஆனாலும், மதன் விடயத்தில், இந்திய நீதிமன்றம் அதனை தண்டித்தால் மட்டுமே சானலை முடக்கும்.

மதன், சாட்டை, சுந்தரவள்ளி, பழனி அனைத்துமே, youtube பொறுத்தளவில் பணம் காய்க்கும் மரங்கள். 

நீங்களும், நானும் ஒருவரை ஒருவர் திட்டி வீடியோ போட்டால், அதனை சனம் விழுந்து, விழுந்து பார்க்குது எண்டால், விசயம் என்ன தெரியுமா? நானும், நீங்களும், பிசினஸ் ஐடியா போட்டு, இந்த வேலை இல்லாத, விடுப்பு பார்க்கும் சனத்தின் நேரத்தில் பணம் சம்பாதிக்க,  அலுவல் பார்க்கிறோம். 

இது புரிந்தால், இந்த youtube வீடியோ போட்டு, சம்பாதிக்கலாமே, எதுக்கு, it வேலை, வரி, டென்ஷன் என்று யோசிக்க தொடங்கி விடுவீர்கள்.

மேலும், இந்த மதனுக்கும் மனைவிக்கும், ஆளுக்கொரு BMW கார்கள், இரண்டு வீடுகள்.... அவர்களது மாத வருமானம் 6 லட்சம் இந்திய ரூபா. இது போலீஸ் கணிப்பு.

ஆனாலும், சிறைக்கு போனாலும், வரி கட்டுவதால், முதல் வகுப்பு.  

Edited by Nathamuni
 • Like 1
Link to comment
Share on other sites

36 minutes ago, Nathamuni said:

நீங்கள், எதனை, எதனூடு முடிச்சு போடுகிறீர்கள்?

உதாரணமாக, நான் உங்களை, இங்கிருந்து நீங்கள் காதை பொத்துற மாதிரி வீடியோ போட்டு 

 

ஆபாசமாக திட்டியவர் மீது ரோகிணி புகார் கொடுத்தது போன்று அனந்தியை ஆபாசமாக திட்டியவர் மீது புகார் கொடுக்க சொல்வது எப்படி தொடர்பில்லாமல் தெரிகின்றது உங்களுக்கு? அனந்தியை திட்டி படு ஆபாசமாக பேசியவர்கள் தமிழகத்திலும் உள்ளனர். (அல்லது சிங்கபூர் ஆள் திட்டியது மட்டும்தான் நீங்கள் அறிந்ததாக இருக்கலாம்) தமிழகம் இந்தியாவில் இருப்பதால் இந்திய தூதரகத்தின் மூலம் புகார் கொடுக்க சொல்லும் போது உங்களுக்கு ஏன் அது தவறாக தெரிகின்றது.

36 minutes ago, Nathamuni said:

 

 

youtube ரிப்போர்ட் பண்ணும் வசதிகள் உண்டு.

 


நான் யுடீயூப் இற்கு சென்று முறையிடச் சொல்லவில்லை. ஆபாசமாக திட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கத்தான் சொல்கின்றேன். சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக தனி நபர்களின் படங்களை தரவேற்றுகின்றவர்களில் இரந்து தரங்கெட்ட வகைகளில் பதிவுகள் போடுகின்றவர்கள் வரைக்கு நடவடிக்கை எடுப்பது Cyber crime பிரிவு. அங்கு தான் புகார் கொடுப்பது. சமூகவலைத்தளங்களின் CEO விடம் அல்ல

 

36 minutes ago, Nathamuni said:

 

IT யில் இருக்கும் உங்களிடம், இதனை எதிர்பார்க்கவில்லை.

 

 

உங்களுக்கு என்  IT துறை பற்றிய புரிதலும் இல்லை, சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசுகின்றவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுப்பது பற்றிய புரிதலும் இல்லை. ஆனால் இவ்வாறு எதிலும் ஒரு தெளிவான புரிதல் இல்லாமல் மற்றவர்களின் தொழில்களை கருத்துகளில் இழுத்து கருத்தாடுவது ஒன்றும் உங்களுக்கு புதுதும் இல்லை.

Edited by நிழலி
ஒரு வரி சேர்க்க
 • Like 1
Link to comment
Share on other sites

இதிலும்விட மிகவும் கீழ்த்தரமாக இங்கே யாழ் களத்தில் நடக்கிறது 
முதலில் நாம் அதனை தடுப்போம் பின்பு தூரகங்களுக்கு மனு கொடுப்போம் 

 • Like 1
Link to comment
Share on other sites

1 minute ago, Maruthankerny said:

இதிலும்விட மிகவும் கீழ்த்தரமாக இங்கே யாழ் களத்தில் நடக்கிறது 
முதலில் நாம் அதனை தடுப்போம் பின்பு தூரகங்களுக்கு மனு கொடுப்போம் 

இவ்வாறு சாதாரணமாக நீங்கள் சொல்லிவிட்டு இருக்க முடியாது.

யாழில் எங்கே எந்த இடத்தில் எவரை ஆபாசமாக திட்டியோ, பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ அல்லது அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ அது இன்றும் மறைக்கப்படாமல் உள்ளது எனக் காட்டவும். இதை ஒரு சவாலாகவே சொல்கின்றேன். ஒரு பதிவையாவது காட்டவும்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நிழலி, என்னாச்சு, கோவிக்கிறீர்கள்?

IT யில் இருப்பவர்களுக்கு லாஜிக் முக்கியம் என்பதனை சொல்லவே, அவ்வாறு சொன்னேன். உங்கள் தொழிலை இழுத்து நக்கல் அடிக்க அல்ல என்பதும் உங்களுக்கு புரியும்.

முதலில், அடிப்படை விடயம் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.

ரோகினி, இப்போது முறைப்பாடு செய்ய போனது அரசியல் தூண்டுதல் காரணமாக. அவர் சம்பந்தமான பேச்சினை, இந்த மனிதர் கிசோர் செய்தது, அதிமுக காலத்தில்.

அதுவே சாட்டை துரைமுருகனுக்கும் நடக்கிறது.

இது நீதிமன்றில் நில்லாது. கருத்து சுதந்திரம் என்றே முடியும். இதுவும் உங்களுக்கு புரியாதது அல்ல.

அரசியல் வேண்டாம் என்றேன். இருந்தாலும் பெயர் குறிப்பிடாமல் சொல்கிறேன். ஐயன் கார்த்திகேயன் தனது சேனலை வளர்க்க, இலங்கையில், வீட்டில் இருக்கும் பெண்மணியின் வாயை கிளற, அதுக்கு சிங்கப்பூரில் இருந்து ஒருத்தர் பதிலை போட, அதனை முறைப்பாடு எடுத்து, டெல்லிக்கு அனுப்பி, இந்திய அரசும், சிங்கப்பூர் அரசும், இலங்கை அரசும் ராஜதந்திர வேலைகள் செய்து, தீர்வு காணவேண்டும் என்கிறீர்களா? இந்திய தூதரகத்துக்கு, இதுவா வேலை? 

Link to comment
Share on other sites

1 minute ago, நிழலி said:

இவ்வாறு சாதாரணமாக நீங்கள் சொல்லிவிட்டு இருக்க முடியாது.

யாழில் எங்கே எந்த இடத்தில் எவரை ஆபாசமாக திட்டியோ, பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ அல்லது அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ அது இன்றும் மறைக்கப்படாமல் உள்ளது எனக் காட்டவும். இதை ஒரு சவாலாகவே சொல்கின்றேன். ஒரு பதிவையாவது காட்டவும்

ஆபாசமாக திட்டியோ

பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ

அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ

இவற்றை செய்பவர்களின் நோக்கம் என்ன?
அதே நோக்கத்தை இந்த மூன்றையும் தவிர்த்து செய்தால் தகுமா? 

Abusive என்பது எந்த வடிவம் எடுத்தாலும் அது களையப்பட வேண்டும்.
Abuse  செய்பவர்களின் நோக்கமே இன்னொருவரை துன்புறுத்துவதுதான் 
பிஸிக்கல் ரீதியாக செய்ய பலம் இல்லாதபோது வார்த்தை பிரயோகமாக செய்கிறார்கள். 

போராளிகள் மீது பரப்பப்படும் அவதூறுகள் என்ன நோக்கில் இருக்கிறது?
புலிகள் இன்னாரை சுட்டிருந்தால் இவரை புலிகள் சுட்டார்கள் என்பதுக்கும் 
றோட்டில் போனவர்களை புலிகள் சுட்டார்கள் எண்பதுக்கும் இடையில் 
என்ன ரீதியான மனப்பாங்கு இருக்கிறது?

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
22 minutes ago, நிழலி said:

இவ்வாறு சாதாரணமாக நீங்கள் சொல்லிவிட்டு இருக்க முடியாது.

யாழில் எங்கே எந்த இடத்தில் எவரை ஆபாசமாக திட்டியோ, பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ அல்லது அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ அது இன்றும் மறைக்கப்படாமல் உள்ளது எனக் காட்டவும். இதை ஒரு சவாலாகவே சொல்கின்றேன். ஒரு பதிவையாவது காட்டவும்

அதுக்கு தான் நாம் நிர்வாகத்தினை சார்ந்து இருக்கிறோம். 

முதலில், யூடியூபில் முறைப்பாடு கொடுக்கவேண்டும். சைபர் கிரைம் என்பது, ஒருவரை ஏமாத்தினால், மோசடி செய்தால் மட்டுமே கண்டு கொள்ளும். மேலும், சிறுவர், சிறுமியர் பாலியல் வக்கிரகம், யூடியூபில் ஏத்த முடியாது. 

உதாரணமாக, MGR பாட்டு ஒன்றினை 10 செக்கனுக்கு மேல் போட்டாலே, யூடூப்பில், இது ஏத்த முடியாது (copy rights) என்று சொல்லி விடும். அவ்வளவு கண்டிப்பாக சிஸ்டத்தினை வைத்து உள்ளனர்.

சும்மா, அவன் என்னை திட்டினான், பேசினான் என்று போய் நின்றால், அதனை தீர்க்க அவர்களுக்கு (சைபர் கிரைம்) நேரமோ, ஆட்களோ கிடையாது. 


 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

 

மேலும், இந்த மதனுக்கும் மனைவிக்கும், ஆளுக்கொரு BMW கார்கள், இரண்டு வீடுகள்.... அவர்களது மாத வருமானம் 6 லட்சம் இந்திய ரூபா. இது போலீஸ் கணிப்பு.

ஆனாலும், சிறைக்கு போனாலும், வரி கட்டுவதால், முதல் வகுப்பு.  

பையன் மனைவியை பக்கவா வித்து இருக்கிறான் 
என்ன என்ன மாதிரி எல்லாம் உழைக்கிறது உலகம் 

2 minutes ago, Nathamuni said:

 

சும்மா, அவன் என்னை திட்டினான், பேசினான் என்று போய் நின்றால், அதனை தீர்க்க அவர்களுக்கு நேரமோ, ஆட்களோ கிடையாது. 


 

அந்த சனியன் பிடிச்ச கொம்பனியில் இப்போது ஆட்களே கிடையாதுபோலவே இருக்கிறது 
எல்லாம் கொம்ப்யூட்டர்தான்.

நான் யாரோ இணைத்த வீடியோவை நேரம் இண்மையால் பின்பு பார்ப்பதற்காக 
எனது லிஸ்ட்டில் சேர்த்து இருந்தேன் 

அது பயங்கரவாதம் சார்ந்தது என்று என்னை மூன்று மாதம் தடை விதித்து வைத்து இருந்தது 
ஆனால் அப்பீல் பண்ண முடியும் என்று வரும் ... நீங்கள் எழுதலாம் அனால் அந்த சைடில் யாரும் வாசிப்பதில்லை. தடை தடைதான் 
 

Link to comment
Share on other sites

5 minutes ago, Maruthankerny said:

ஆபாசமாக திட்டியோ

பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ

அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ

இவற்றை செய்பவர்களின் நோக்கம் என்ன?
அதே நோக்கத்தை இந்த மூன்றையும் தவிர்த்து செய்தால் தகுமா? 

Abusive என்பது எந்த வடிவம் எடுத்தாலும் அது களையப்பட வேண்டும்.
Abuse  செய்பவர்களின் நோக்கமே இன்னொருவரை துன்புறுத்துவதுதான் 
பிஸிக்கல் ரீதியாக செய்ய பலம் இல்லாதபோது வார்த்தை பிரயோகமாக செய்கிறார்கள். 

 

இவ்வாறு இங்குள்ளவர்களை Abusive ஆக (Physical லாக அல்லது mentally யாக ) எவராவது திட்டிய கருத்து ஒன்றைக் காட்டவும். 

போராளிகளையும் அவர்களின் தியாகங்களையும் கொச்சைபடுத்துவதில் முன்னிலை வகிப்பது எது என்றால், தான் சொல்லும் கருத்துகள் வலு இழக்கும் போது அவர்களை திரிகளில் இழுத்து அவர்களின் பின்னால் தங்கள் கருத்து பஞ்சத்தை மறைப்பதும் ஆகும். இந்த பதிலில் அதைத் தான் நீங்கள் செய்கின்றீர்கள்.

நான் முதல் கேட்ட மாதிரி ஒரு பதிவை காட்டவும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

சமூகவலைத்தளங்களில் எதையும் எப்படியும் வரம்பு மீறி எழுதலாம், ஆபாசமாக திட்டலாம் என்பவர்களுக்கும், முக்கியமாக அரசியலில், பொது வெளியில் இருக்கும் பெண்களை பாலியல் ரீதியில் எவ்வளவு ஆபாசமகாகவும், அசிங்கமாகவும்திட்டிக் கொண்டு இருக்கும் ஒழுக்கம் கெட்டவர்களுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளும் முறைப்பாடுகளும் நல்ல பாடங்களை கற்பித்து கொடுக்கும் என நம்புகின்றேன். 

அனந்தியும் இந்திய தூதராலயமூடாக தன்னை ஆபாசமாக திட்டிய கோழைகளுக்கு எதிராக சரியான வழியில் முறைப்பாடு செய்தால் நல்லது.

இந்தச் செய்தியும் இதை போன்றவர்களுக்கு எதிரான செய்தி:

 

இதை நீங்கள் ஏன் சம்பவம் நடந்த போது கூறவில்லை.( கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் எதற்கு) 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

அனந்தியும் இந்திய தூதராலயமூடாக தன்னை ஆபாசமாக திட்டிய கோழைகளுக்கு எதிராக சரியான வழியில் முறைப்பாடு செய்தால் நல்லது.

இந்திய தூதுவராலயம் எப்ப தொடக்கம் தன்ரை வேலைய  மாற்றியது .?

Link to comment
Share on other sites

11 minutes ago, Nathamuni said:

அதுக்கு தான் நாம் நிர்வாகத்தினை சார்ந்து இருக்கிறோம். 

 


 

நீங்கள் நிர்வாகத்தை மட்டுமே இது தொடர்பாக சார்ந்து இருக்க தேவையில்லை.

உதாரணத்துக்கு யாழில் ஒருவர் எழுதும் கருத்து ஒன்று இன்னொருவரையோ அல்லது பொது வெளியில் இருக்கின்ற ஒருவரையோ நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஆபாசமாக, பாலியல் ரீதியில் திட்டியோ அல்லது உண்மைக்கு முற்றிலும் புறம்பாக எழுதியோ இருப்பின் அவர் யாழ் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளாமல் நேரிடையாக சைபர் குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரம் உள்ள ஒரு இடத்தில் முறையிட முடியும். அவர்கள் யாழில் வந்து உங்கள் விபரங்களை கேட்பின் யாழ் நிர்வாகமும் அதை மறுக்காமல் கொடுக்க வேண்டும். இது தான் இன்றைய நிலையில் உள்ள சட்டம். இவற்றுக்கு கட்டுப்பட்டுத்தான் யாழ் மற்றும் ஏனையை ஆரோக்கியமான தளங்கள் இயங்குகின்றன.

Link to comment
Share on other sites

1 minute ago, நிழலி said:

இவ்வாறு இங்குள்ளவர்களை Abusive ஆக (Physical லாக அல்லது mentally யாக ) எவராவது திட்டிய கருத்து ஒன்றைக் காட்டவும். 

போராளிகளையும் அவர்களின் தியாகங்களையும் கொச்சைபடுத்துவதில் முன்னிலை வகிப்பது எது என்றால், தான் சொல்லும் கருத்துகள் வலு இழக்கும் போது அவர்களை திரிகளில் இழுத்து அவர்களின் பின்னால் தங்கள் கருத்து பஞ்சத்தை மறைப்பதும் ஆகும். இந்த பதிலில் அதைத் தான் நீங்கள் செய்கின்றீர்கள்.

நான் முதல் கேட்ட மாதிரி ஒரு பதிவை காட்டவும்.

என்ன நிழலி பகிடி விடுகிறீர்கள்?
நியானி நீங்கள் எல்லாம் வெட்டும் கருத்துக்கள் என்ன?

இப்போ இதிலேயே நீங்கள் என் மீது உங்கள் சொந்த வாரத்தை பிரோயோகம் பாவித்து 
என்னை பற்றி இல்லாதைத்தாநீ எழுதுகிறீர்கள்?
இதில் என்ன கருத்து பஞ்சம்? 

நாங்கள் இன்னும் ஒரு பாத்து கருத்து பரிமாற்றம் செய்தால் 
எப்படி இருக்கும்? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

இவ்வாறு இங்குள்ளவர்களை Abusive ஆக (Physical லாக அல்லது mentally யாக ) எவராவது திட்டிய கருத்து ஒன்றைக் காட்டவும். 

போராளிகளையும் அவர்களின் தியாகங்களையும் கொச்சைபடுத்துவதில் முன்னிலை வகிப்பது எது என்றால், தான் சொல்லும் கருத்துகள் வலு இழக்கும் போது அவர்களை திரிகளில் இழுத்து அவர்களின் பின்னால் தங்கள் கருத்து பஞ்சத்தை மறைப்பதும் ஆகும். இந்த பதிலில் அதைத் தான் நீங்கள் செய்கின்றீர்கள்.

நான் முதல் கேட்ட மாதிரி ஒரு பதிவை காட்டவும்.

நிழலி இன்று ஏதோ அப்செட் ஆகி இருக்கிறார் என்று மட்டும் புரிகிறது.

நான் மீண்டும் சொல்கிறேன். யாராவது என்னை மோசமாக திட்டினால், முதலில் ரிப்போர்ட் பண்ணுவது நிர்வாகத்திடம். 

திட்டியவர் வாழும் நாட்டின் தூதரகத்தில் அல்ல.

அதனையே நானும் சொல்கிறேன், youtube ரிப்போர்ட் வசதி செய்து இருக்கிறது.

தமிழகத்தில் ஒரு அரசியல் தலைவர் குறித்து, தூண்டப்பட்ட ஒரு நடிகை, நேரடியாகவே, தூசனை வார்த்தைகளினால் திட்டினார். அதுகுறித்து சைபர் கிரைம் எதுவுமே செய்யவில்லை.

அதனால் தான் சொல்கிறேன், அவர்களுக்கு நேரமோ, ஆட்களோ இல்லை.

மோசடி, சமூக வலைத்தளம் ஊடாக தொடர்பாகி, பாலியல் உறவு கொண்டு, கை விடல் (பாலியல் பலாத்காரத்துக்கு சமானம்) போன்றவையே அவர்கள் விசாரணைக்கு எடுப்பார்கள்.

Link to comment
Share on other sites

Just now, Maruthankerny said:

என்ன நிழலி பகிடி விடுகிறீர்கள்?
நியானி நீங்கள் எல்லாம் வெட்டும் கருத்துக்கள் என்ன?

இப்போ இதிலேயே நீங்கள் என் மீது உங்கள் சொந்த வாரத்தை பிரோயோகம் பாவித்து 
என்னை பற்றி இல்லாதைத்தாநீ எழுதுகிறீர்கள்?
இதில் என்ன கருத்து பஞ்சம்? 

நாங்கள் இன்னும் ஒரு பாத்து கருத்து பரிமாற்றம் செய்தால் 
எப்படி இருக்கும்? 

நியானியும் நானுன் வெட்டும் கருத்துகள் இவ்வாறான தரங்குறைந்த மற்றும் அனாகரீகமான தனிமனித தாக்குதல் மற்றும் யாழ் விதிகளை மீறுகின்ற கருத்துகள். 

அத்துடன் உங்களுக்கு விமர்சனத்துக்கும் ஆபாசமாக / பாலியல் ரீதியில் திட்டுவதற்கும் இடையில் இருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் கூட தெரிகின்றது இல்லை. இதைச் சுட்டிக் காட்டுவதும் உங்கள் கருத்துகளினூடாக உங்களைப் பற்றி எழும் பிம்பம் சார்ந்து விமர்சனம் வைப்பதும் ஆபாச / தரங்கெட்ட / பாலியல் ரீதியிலான / உண்மைக்கு புறம்பான விடயங்கள் அல்ல.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நியானியும் நானுன் வெட்டும் கருத்துகள் இவ்வாறான தரங்குறைந்த மற்றும் அனாகரீகமான தனிமனித தாக்குதல் மற்றும் யாழ் விதிகளை மீறுகின்ற கருத்துகள். 

அத்துடன் உங்களுக்கு விமர்சனத்துக்கும் ஆபாசமாக / பாலியல் ரீதியில் திட்டுவதற்கும் இடையில் இருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் கூட தெரிகின்றது இல்லை. இதைச் சுட்டிக் காட்டுவதும் உங்கள் கருத்துகளினூடாக உங்களைப் பற்றி எழும் பிம்பம் சார்ந்து விமர்சனம் வைப்பதும் ஆபாச / தரங்கெட்ட / பாலியல் ரீதியிலான / உண்மைக்கு புறம்பான விடயங்கள் அல்ல.

ok, cool down bro.... not a good day, it seems!!!

Link to comment
Share on other sites

44 minutes ago, Maruthankerny said:

இதிலும்விட மிகவும் கீழ்த்தரமாக இங்கே யாழ் களத்தில் நடக்கிறது 
முதலில் நாம் அதனை தடுப்போம் பின்பு தூரகங்களுக்கு மனு கொடுப்போம் 

மருதங்கேணி, மீண்டும் நிர்வாக ரீதியில் கேட்கின்றேன், யாழில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விதமான ஒரு கருத்தை காட்டவும். 

முக்கியமாக இங்கு சொல்லப்பட்டு இருக்கும் செய்தியில் உள்ள சம்பவத்தை விட கீழ்த்தரமான ஒரு பதிலை / பதிவைக் காட்டவும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

மருதங்கேணி, மீண்டும் நிர்வாக ரீதியில் கேட்கின்றேன், யாழில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விதமான ஒரு கருத்தை காட்டவும். 

டபாரெண்டு, கருத்தாளர் நிழலி, நிர்வாகத்தரா மாற ஆலய பரிபாலன சபை விடாது என்று நினைக்கிறேன்.  :grin:

Link to comment
Share on other sites

10 minutes ago, நிழலி said:

மருதங்கேணி, மீண்டும் நிர்வாக ரீதியில் கேட்கின்றேன், யாழில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விதமான ஒரு கருத்தை காட்டவும். 

நீங்கள் குற்றம் நடக்கிறது 
ஆனால் மகா குற்றம் இல்லை என்கிறீர்கள்

பின்பு என்னிடம் என்ன ஆதாரம் கேட்க்கிறீர்கள்? 

இன்னொரு மனிதரை மனோரீதியாக தாக்குவது என்பதும் 
தனிமனித தாக்குதலும் ஒரே விடயம்தான் 

அண்ணளவாக "கருத்து பஞ்சம்" என்ற சொற்பிரயோகம் பாவித்து 
நீங்களே அதை நிரூபணம் ஆக்கி இருக்கிறீர்கள் 

புலிகள்மீது அவ்வாறு யாரும் எழுதுவதில்லை என்று நீங்கள் கூறவேண்டும் 
அல்லது உங்கள் பாணியில் அவை பெருத்த அவதூறு இல்லை என்று ஒரு 
வாதத்தை முன்வைக்க வேண்டும் 

அதைவிடுத்து என்மீதே ஒருவகையான சொற்பிரயோகம் பாவித்துக்கொண்டு 
என்ன ரீதியான ஆதாரத்தை எதிர்பார்க்கிறீர்கள்?

நான் தேடி இணைத்தால் 
அவை பெருத்த விடயம் இல்லை எனும்போது 
அதை தடுக்க ஏதும் வழி இருக்கிறதா? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

நியானியும் நானுன் வெட்டும் கருத்துகள் இவ்வாறான தரங்குறைந்த மற்றும் அனாகரீகமான தனிமனித தாக்குதல் மற்றும் யாழ் விதிகளை மீறுகின்ற கருத்துகள். 

தெலுங்குவந்தேறி என்று தலையங்கம் போடலாம் தனிப்பட்டவர்கள் எழுதினால் பிழை என்கிறீர்கள் அது பக்க சார்பானதுதானே ?

எனக்கு புள்ளி வழங்கியது அந்த அடிப்படையிலே நீங்களே அனுமதி கண்டும் காணாமல் விடுவியல்  நான் எழுதினால் மட்டும் குத்துமாக்கும் ?

Link to comment
Share on other sites

3 minutes ago, பெருமாள் said:

தெலுங்குவந்தேறி என்று தலையங்கம் போடலாம் தனிப்பட்டவர்கள் எழுதினால் பிழை என்கிறீர்கள் அது பக்க சார்பானதுதானே ?

இவ்வாறு தெலுங்கர்களை வந்தேறிகள் என்று அவமானப்படுத்தும் அல்லது எந்த இனக் குழுமத்தையும் அவமானப்படுத்தும் கீழ்த்தரமான தலைப்புகளை நாங்கள் அனுமதிப்பதில்லை. அப்படி எங்கள் கண்களில் அகப்படாமல், தவறு என்று தெரிந்தும் எவரும் முறையிடாமல் இருக்கும் ஒரு பதிவை / பதிவுகளைக் காட்டவும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

தெலுங்குவந்தேறி என்று தலையங்கம் போடலாம் தனிப்பட்டவர்கள் எழுதினால் பிழை என்கிறீர்கள் அது பக்க சார்பானதுதானே ?

என்ன பெரும்ஸ்,

இதில கோஷான இழுத்து விட்டு நிழலியோட சேத்து ரெண்டு சாத்து, சாத்துற எண்ணம் போல🤣.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
29 minutes ago, நிழலி said:

நீங்கள் நிர்வாகத்தை மட்டுமே இது தொடர்பாக சார்ந்து இருக்க தேவையில்லை.

உதாரணத்துக்கு யாழில் ஒருவர் எழுதும் கருத்து ஒன்று இன்னொருவரையோ அல்லது பொது வெளியில் இருக்கின்ற ஒருவரையோ நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஆபாசமாக, பாலியல் ரீதியில் திட்டியோ அல்லது உண்மைக்கு முற்றிலும் புறம்பாக எழுதியோ இருப்பின் அவர் யாழ் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளாமல் நேரிடையாக சைபர் குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரம் உள்ள ஒரு இடத்தில் முறையிட முடியும். அவர்கள் யாழில் வந்து உங்கள் விபரங்களை கேட்பின் யாழ் நிர்வாகமும் அதை மறுக்காமல் கொடுக்க வேண்டும். இது தான் இன்றைய நிலையில் உள்ள சட்டம். இவற்றுக்கு கட்டுப்பட்டுத்தான் யாழ் மற்றும் ஏனையை ஆரோக்கியமான தளங்கள் இயங்குகின்றன.

நீங்கள் சைபர் குற்றங்கள் குறித்து தவறாக புரிந்து கொண்டுளீர்கள் என்று நினைக்கிறேன்.

மீண்டும் சொல்கிறேன், நான் உங்களை, ஆபாசமாக திட்டினேன் என்று நீங்கள் நினைத்தால், போக வேண்டியது, போலீஸ் அல்ல, புரோகிராசியர்.

மான நஷ்ட வழக்கு போடு அவன் மேலே என்று சொல்வீர்கள்.

நான் பெரிய வியாபார பிஸ்தா, ஒரு 10,000 டொலர் தாருங்கள், ஒரே மாதத்தில் 100,000 மாக திருப்பி தருவேன் வ்ந்தரு சொல்லி விட்டு, பணத்துடன் ஓடி விட்டால், போக வேண்டியது போலீஸ், புரோகிராசியர் அல்ல.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கை சொல்வதென்ன? விரிவான ரிப்போர்ட் 21 செப்டெம்பர் 2021, 09:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNDIPR   படக்குறிப்பு, ஜூலை மாதத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கையை அளித்த நீதிபதி ஏ.கே. ராஜன் மற்றும் குழுவினர். மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அது பற்றிய ஒரு விரிவான ரிப்போர்ட் இது. மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அந்தத் தேர்வித் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. இந்தக் குழுவில் சமூக சமத்துவதற்கான மருத்துவர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், முன்னாள் துணை வேந்தர் எல். ஜவஹர் நேசன், மருத்துவத் துறைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா உள்ளிட்ட 9 பேர் இடம்பெற்றிருந்தனர். நீட் தேர்வானது சமூக, பொருளாதார, கூட்டாட்சி அரசியலை எவ்விதத்தில் பாதித்திருக்கிறது, அரசுப் பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற, நகர்ப்புற ஏழைகளை இந்தச் சேர்க்கைமுறை எவ்விதத்தில் பாதித்திருக்கிறது என்பதை ஆராய்வது, அப்படித் தடைகள் இருந்தால் அந்தத் தடைகளை நீக்குவதற்கான வழிகளைப் பரிந்துரைப்பது, மாணவர்களைத் தேர்வுசெய்ய நீட் தேர்வு சமத்துவமான வழிதானா என்பதை ஆராய்வது, காளான்களைப் போல முளைத்து வரும் நீட் பயிற்சி மையங்கள் தமிழகக் கல்வி முறையின் மீது ஏற்படும் தாக்கத்தை ஆராய்வது போன்றவை இந்தக் குழுவின் பணிகளாக வரையறுக்கப்பட்டிருந்தன. விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள் நீட் தேர்வு அச்சம்: தற்கொலை செய்துகொண்ட கூலி தொழிலாளி மகள் நீட் தேர்வு முறையை ஆராய்ந்த இந்தக் குழு, அந்தத் தேர்வு முறையில் உள்ள பல்வேறு பிரச்னைகளை முன்வைத்தது. அதன்படி, 1. நீட் தேர்வானது, ஒரு மாணவரிடம் படிப்படியாக மேம்படும் கல்வித் திறமைகளைக் கணக்கில் கொள்வதில்லை. 2. நீட் தேர்வில் தேர்ச்சி என்பது, கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. 3. நீட் தேர்வானது கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட தேர்வு முறையில் தேர்ச்சியடைவதை முன்வைக்கிறது 4. நீட் தேர்வானது கலாசார ரீதியாக, பிராந்திய ரீதியாக, மொழி ரீதியாக, சமூக பொருளாதார ரீதியாக பாரபட்சமாக இருக்கிறது.   படக்குறிப்பு, நீட் தேர்வு வந்தபின் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேரும் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதைக் காட்டும் தரவுகள். ஏ.கே. ராஜன் குழு அமைக்கப்பட்ட பிறகு, அந்தக் குழு பொதுமக்கள், அமைப்புகளிடமிருந்து கருத்துகளைக் கோரியது. மொத்தமாக 86,342 கருத்துகள் வந்திருந்தன. இதில் 65,007 பேர் நீட் தேர்வை எதிர்த்தனர். 18,966 நீட் தேர்வை ஆதரித்தனர். 1,453 பேருக்கு கருத்து இல்லை. 916 பேர் ஏற்கனவே அனுப்பிய கருத்துகளையே திரும்ப அனுப்பியிருந்தார்கள். நீட் தேர்வுக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட வாதங்கள்: 1. நீட் தேர்வு எழுதினால் தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களில் சேரலாம். 2. நீட் தேர்வை 3 முறை எழுத முடியும். 12ஆம் வகுப்புத் தேர்வைத் திரும்பவும் எழுத முடியாது. 3. நீட் தேர்வினால், மாநில கல்வி வாரிய மாணவர்களும் சிபிஎஸ்இ படித்த மாணவர்களும் ஒரே மாதிரி மதிப்பிடப்படுவார்கள். 12ஆம் வகுப்புத் தேர்வினால் அது நடக்காது.   படக்குறிப்பு, நீட் வந்தபின் ஸ்டேட் போர்டு மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பு குறைந்துள்ளதையும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பு அதிகமாகியுள்ளதையும் காட்டும் தரவுகள். 4. நீட் தேர்வு மனப்பாடம் செய்து கற்றுக்கொள்வதற்கு மாறாக, புரிந்துகொண்டு எழுதுவதை முன்வைக்கிறது. இது நல்லது. 5. தமிழ்நாட்டில் கற்றுக்கொடுக்கும் முறை மேம்பட வேண்டும். நீட் தேர்வை நடத்தினால், காலப்போக்கில் கற்றுக்கொடுப்பது மேம்பட்டு, கோச்சிங் மையங்கள் தேவைப்படாது. 6. நீட் தேர்வு இட ஒதுக்கீட்டைப் பாதிப்பதில்லை. ஆகவே இதனால், சமூக நீதி பாதிக்கப்படாது. 7. உச்ச நீதிமன்றமே நீட் தேர்வு தேவை என சொல்லிவிட்டது. நீட் தேர்வுக்கு எதிரான வாதங்கள் 1. நீட் தேர்வு வந்த பிறகு மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்வது குறைந்திருக்கிறது. 2. மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்தை நீட் தேர்வு ஏற்படுத்துகிறது. 12 ஆண்டுகள் படித்த படிப்பை இந்தத் தேர்வு புறக்கணக்கிறது. மேலும், இந்தியாவில் பல்வேறு பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் உள்ள நிலையில்,பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்கள் பெரிதும் படிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 3. நீட் தேர்வு 'கோச்சிங்' மையங்களை ஊக்குவிக்கிறது. பயிற்சி இல்லாமல் யாரும் தேர்ச்சி பெற முடியாது. லட்சக்கணக்கில் பணம் செலுத்தி இரண்டு - மூன்று ஆண்டுகளாகவது படிக்க வேண்டும். 4. தனியார் பள்ளிக்கூடங்களில் 11ஆம் வகுப்பிலேயே நீட் கோச்சிங் வகுப்புகளைத் துவங்கி விடுகிறார்கள். வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரும் தொகையை இதற்காகச் செலவிடுகிறார்கள்.   படக்குறிப்பு, நீட் அமலாவதற்கு முந்தைய சில ஆண்டுகளைப்போல் அல்லாமல், நீட் வந்தபின் அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் குடும்ப வருவாய் உள்ள மாணவர்கள் எம்பிபிஎஸ்-இல் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 5. கிராமப்புறங்களில் இருந்து மருத்துவ கல்வியைப் படிப்பவர்கள், படித்து முடித்த பிறகு கிராமப்புறங்களில் பணியாற்ற முன்வருவார்கள்.ஆனால், நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து எம்பிபிஎஸ் முடிப்பவர்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணியாற்றவே விரும்புவார்கள். 6. நீட் தேர்வு சமூக நீதி, மனிதத்தன்மை, சமத்துவத்திற்கு எதிரானது. பழங்குடியினத்தினர், ஒடுக்கப்பட்ட வகுப்பினர், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்வதை நீட் தேர்வு தடுக்கிறது. 7. நீட், மாநில அரசின் உரிமைகளில் தலையிடுகிறது. 8. நீட் தேர்வு அறிமுகமான பிறகு, தமிழ்நாடு மாணவர்களுக்கு மருத்துவ உயர் கல்வியில் இடம் கிடைப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. 9. நீட் தேர்வுக்குப் பிறகு, வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என போலியான சான்றிதழைப் பெற்று மருத்துவ இடங்களைப் பறிக்கிறார்கள். 10. 3 மணி நேரத்தில் 180 கேள்விகளுக்குப் பதிலளிப்பது என்பது பெரிய அளவில் பயிற்சி இருந்தால்தான் நடக்கும். பயிற்சி பெறாத கிராமப்புற மாணவர்களால் இதை எதிர்கொள்ளவே முடியாது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநில கல்வி, மருத்துவ சேர்க்கை போன்ற பல்வேறு அம்சங்களில் ஏற்பட்ட தாக்கத்தை இந்த அறிக்கை பட்டியலிடுகிறது. முதலாவதாக, மாநில கல்வி வாரியத்தின் கீழ் படிப்பவர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. 2011ல் மாநில கல்வி வாரியத்தின் கீழ் 716543 மாணவர்கள் படித்த நிலையில், இது 2017ல் 893262ஆக உயர்ந்தது. ஆனால், அதற்குப் பிறகு வெகுவாகச் சரிந்து, 2020ல் 779940க்கு வந்துவிட்டது. 2017க்கும் 2020க்கும் இடையில் 113,322 மாணவர்கள் மாநிலக் கல்வி வாரியத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். அதேபோல, தமிழ் வழிப் படிப்பை விட்டுவிட்டு ஆங்கில வழியில் படிப்பது அதிகரித்திருக்கிறது.   படக்குறிப்பு, நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர விண்ணப்பித்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், தாழ்த்தப்பட்டோர், பளக்குடியின வகுப்புக மாணவர்களின் எண்ணிக்கை. அதேபோல, மாநில கல்வி வாரியத்தின் கீழ் படிக்கும் மாணவர்களில் அறிவியல் பிரிவைத் தேர்வுசெய்யும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில், நீட் தேர்வு அறிமுகமான பிறகு அது குறைந்து வருகிறது. 2017ல் 3,84,407 பேர் அறிவியல் பிரிவில் படித்த நிலையில், 2020ல் இந்த எண்ணிக்கை 280315ஆக குறைந்திருக்கிறது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநில கல்வி வாரியத்தின் கீழ் படித்தவர்கள் மருத்துவக் கல்வியில் சேருவது வெகுவாகக் குறைந்திருக்கிறது. 2010-2011ல் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படித்தவர்களில் 2,332 பேருக்கு மருத்துவ கல்வியில் இடம் கிடைத்தது. சிபிஎஸ்இ மாணவர்கள் 14 பேர்தான் எம்பிபிஎஸ்ஸில் சேர்ந்தார்கள். ஆனால், நீட் தேர்வு அறிமுகமான பிறகு இது வெகுவாக மாறியது. 2020-2021ல் சிபிஎஸ்இயில் படித்த 1,604 பேர் எம்பிபிஎஸ் பெற்றார்கள். சிபிஎஸ்இயின் கீழ் படித்தவர்களுக்கு நீட் தேர்வு வெகுவாக உதவியிருப்பதை இந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது. அதேபோல, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தமிழ் வழியில் படிப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக, தமிழ்வழியில் படித்த 19.79 சதவீத மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. ஆனால், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தமிழ் வழியில் படித்த 1.99 சதவீத மாணவர்களுக்கே இடம் கிடைத்துள்ளது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் எம்பிபிஎஸ் இடங்களைப் பெற்றனர். 2016- 17ல் அரசுக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 65.17 % இடங்களைக் கிராமப்புற மாணவர்களே பெற்றனர். ஆனால், 2020 - 2021ல் இது 49.91 % ஆகக் குறைந்துள்ளது. முதல் தலைமுறை மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேருவதையும் இந்தத் தேர்வு வெகுவாகக் குறைத்திருக்கிறது. 2016 - 17ல் மருத்துவ கல்வி இடங்களைப் பெற்றவர்களில் 24.94 சதவீதம் பேர் முதல் தலைமுறை மாணவர்கள். ஆனால், 2020 - 21ல் இந்த சதவீதம் 14.46ஆக குறைந்திருக்கிறது.   படக்குறிப்பு, நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர விண்ணப்பித்த முதல் தலைமுறை பட்டதாரி மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி அல்லாதவர்களின் எண்ணிக்கை. நீட் தேர்வு வந்த பிறகு, பல முறை தேர்வு எழுதி எம்பிபிஎஸ் இடங்களைக் கைப்பற்றுவதும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. 2010 - 11ல் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்களில் 92.85 % பேர் முதல் முறையாக தேர்வு எழுதியவர்கள். ஆனால், 2020-21ல் இது 28.58 %ஆக குறைந்துள்ளது. மீண்டும் மீண்டும் தேர்வெழுதியவர்களே 71.42 % இடங்களைப் பிடித்துள்ளனர். ஏ.கே. ராஜன் குழுவின் முடிவுகள் மேலே சொன்ன புள்ளிவிவரங்களை வைத்து ஏ.கே. ராஜன் குழு சில முடிவுகளை முன்வைத்தது. 1. நீட் தேர்வானது, பலதரப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை மருத்துவக் கல்வியில் குலைக்கிறது. சமூகத்தில் வசதியான பிரிவினருக்கு சாதகமாக இருப்பதோடு, பின்தங்கிய நிலையில் இருப்பவர்களின் மருத்துவக் கனவைக் குலைக்கிறது. தமிழ் வழியில் படித்தோர், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள், 2.5 லட்ச ரூபாய் வருமானத்திற்கு கீழே உள்ளவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தினர், பழங்குடியினர் ஆகியோர் இந்தத் தேர்வால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். 2. நீட் தேர்வானது, மீண்டும், மீண்டும் தேர்வழுதுபவர்களுக்கே சாதகமானதாக இருக்கிறது. முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு பாதகமாக இருக்கிறது. 3. நீட் தேர்வு மாணவர்களிடம் பெரும் அழுத்தத்தையும் பதற்றத்தையும் உருவாக்குகிறது. இந்தத் தேர்வில் நடக்கும் முறைகேடுகள், மாணவர்களிடம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. 4. தரமான மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதை நீட் தேர்வு உறுதிசெய்யவில்லை. மாறாக குறைவான திறனுள்ள மாணவர்கள் எம்பிபிஎஸ் இடங்களைப் பெறுவதையே உறுதிசெய்கிறது. மாறாக, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை நடத்தும்போது தரமான மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெறுகிறார்கள்.   படக்குறிப்பு, நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர விண்ணப்பித்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டும் தரவுகள். 5. மருத்துவ படிப்பில் முதுநிலை இடங்களில் 50 சதவீதத்தையும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பரிவில் 100 சதவீதத்தையும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிப்பதால், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இது மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பை குலைக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படாததால், இது சமூக நீதிக்கு எதிரானது. 6. இந்த பாரபட்சமான நீட் தேர்வினால், மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படிப்பவர்கள் கல்வி முறை மீதே நம்பிக்கை இழக்கிறார்கள். 7. நீட் தேர்வுக்கு முந்தைய மருத்துவர்கள், பிந்தைய மருத்துவர்கள் என பிரித்துப் பார்த்தால், நீட் தேர்வுக்குப் பிந்தைய மருத்துவர்கள் அனைவரும் வசதியான, நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அடிமட்ட சமூகத்தின் பல்வேறு விதமான வித்தியாசங்கள் குறித்த புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். இதனை துவக்கத்திலேயே சரிசெய்யா விட்டால், வருங்காலத்தில் இது மிக மோசமாக எதிரொலிக்கும். ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரைகள் நீட் தேர்வு தொடர்பான பிரச்னையை சரி செய்ய ஏ.கே. ராஜன் குழு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. 1. நீட் தேர்வை அகற்றுவதற்கான சட்டரீதியான வழிகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். 2. 2007ஆம் ஆண்டின் 3வது சட்டத்தைப் போல, மருத்துவக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நீக்குவதற்கான ஒரு சட்டத்தை இயற்றி அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். 3. எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கைக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும். பல்வேறு வாரியங்களைச் சேர்ந்த மாணவர்கள் போட்டியிடுவதால், அதனை சமப்படுத்த ஒரு முறையைக் கையாளலாம். 4. மாணவர்களின் சமூக, பொருளாதார பின்னணி அவர்களின் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை வெகுவாகப் பாதிக்கிறது. ஆகவே, அவற்றை அடையாளம் கண்டு சரிசெய்ய வேண்டும். அவர்களை மதிப்பிட "Adversity Score" என்ற முறையைப் பின்பற்ற வேண்டும். 5. 12ஆம் வகுப்புவரை எல்லா மட்டங்களிலும் மனப்பாடம் செய்து, பயிற்றுவித்து தேர்வடைவதை ஊக்குவிக்காமல், கற்பதை ஊக்குவிக்க வேண்டும். 6. எல்லா நிகர்நிலை பல்கலைக்கழகங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். https://www.bbc.com/tamil/india-58634626
  • கொத்து ரொட்டி... இங்குள்ள ஜேர்மன் காரருக்கும், மிக விருப்பமான உணவு. இங்கு நடக்கும், கலாச்சார விழாக்களில்... அதன் ருசியை அறிந்த, வெள்ளைகள்.. கொத்து ரொட்டி கடைக்கு முன், வரிசை கட்டி நிற்கும்.  ஆனால்... கொத்து ரொட்டி, தமிழர் சாப்பாடு இல்லை என்றே நான் நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.   
  • 14 ஆம் இடத்தில் இருந்து அரக்கேலாது போலிருக்கு!!   RR   185 PBKS   (0.3/20 ov, target 186)2/0 Punjab Kings need 184 runs in 117 balls. CRR: 4.00  • RRR: 9.43
  • முஸ்லிம்களின் வாக்குகளை எப்படி அள்ளுவது என ரூடோ அறிந்தே வைத்துள்ளார்.
  • கச்சான் விக்கிற கதிரைமலை ஆச்சி தான் உடன ஞாபகத்திற்கு வந்தவ, அவ கோவில்லயும் விப்பா. கோவில் இல்லா காலங்களில் வீடு வீடா கச்சானும் விப்பா.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.