Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சென்னை: யூடியூபர் மதனின் மறுபக்கங்கள்..! - மனைவி கிருத்திகா சிக்கியது எப்படி?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தலைமறைவாக இருக்கும் யூடியூபர் மதனின் மறுபக்கங்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கின்றன. கைதான அவனின் மனைவி கிருத்திகா, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் யூடியூபர் மதனின் ஆபாசப் பேச்சுக்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதிலிருந்தும் காவல்துறைக்கு புகார்கள் வந்தன. சென்னை புளியந்தோப்பு காவல் சரக சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்த புகாரின் அடிப்படையில், போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா விசாரணை நடத்தினார். இந்தச் சமயத்தில் சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி என்பவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் வினோத் குமார், யூடியூபர் மதனுக்கு சம்மன் அனுப்பினார். ஆனால் சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த வேங்கைவாசலில் குடும்பத்துடன் தங்கியிருந்த மதன், தலைமறைவாகிவிட்டதால் சம்மனை போலீஸாரால் கொடுக்க முடியவில்லை.

யூடியூபர் 'டாக்ஸிக்' மதன்
 
யூடியூபர் 'டாக்ஸிக்' மதன்

இந்தச் சமயத்தில்தான் யூடியூபர் மதனின் முழு பயோட்டாவை சைபர் க்ரைம் போலீஸாருக்கு ஒருவர் ஆன்லைன் மூலம் அனுப்பிவைத்தார். அதில் மதனின் முழுப் பெயர் மதன்குமார். அவரின் அப்பா பெயர் மாணிக்கம். சொந்த ஊர் சேலம். மதன்குமாரின் மனைவி பெயர் கிருத்திகா. கைக்குழந்தை ஒன்று உள்ளது போன்ற விவரங்கள் இருந்தன. அதன் பிறகு சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கிருத்திகாவைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாகக் கூறப்படுகிறது.

 

காதல் திருமணம்

இது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``இன்ஜினீயரிங் படித்துவிட்டு, தடை செய்யப்பட்ட `பப்ஜி’ கேம் பிரியர்களை குறிவைத்து யூடியூப் சேனல்களை மதன் தொடங்கியிருக்கிறார். அதற்கு அட்மினாக அவரின் மனைவி கிருத்திகா இருந்திருக்கிறார். இவர்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். இருவரும் சேர்ந்து யூடியூப் சேனல்களை நடத்திவந்திருக்கின்றனர். கணவன், மனைவியான மதனும் கிருத்திகாவும் பப்ஜி கேம் பிரியர்கள். பப்ஜி கேமில் சூப்பர் சாட்டிங் மூலம் பேசியபடியே லைவ்வாக விளையாட முடியும். அதனால் மதன் லைவ்வாக கேமின் ட்ரிக்ஸ், டிப்ஸ்களைக் கூறுவார். அந்த விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள், சிறுமிகள் என அனைவரும் மதனின் பேச்சுகளை ஆர்வமாகக் கேட்டு ரசித்துவந்திருக்கின்றனர்.

யூடியூபர் மதன்
 
யூடியூபர் மதன்

விளையாடும்போது மதன், அவ்வப்போது பெண்களைக் குறித்து ஆபாசமாகப் பேசுவார். அதற்கு அவரின் மனைவி கிருத்திகாவும் பதிலளிப்பார். அதைக் கேட்கும் மற்றவர்கள் என்ன விளையாட்டின்போது இப்படிப் பேசுகிறார்கள் என்று கருதுவதுண்டு. ஆனால் அதை பலர் ரசித்தும் வந்திருக்கின்றனர். இதுதான் மதன் யூடியூப் சேனல் பிரபலமானதற்கு முக்கியக் காரணம். மதனின் ஆபாசப் பேச்சுகள், அநாகரிக வார்த்தைகளைக் கேட்க தனி ரசிகர்கள் இருந்தனர். யூடியூபில் லட்சக்கணக்கில் சப்ஸ்கிரைபர்கள் வந்ததும், யூடியூப் சேனல்கள் மூலம் வருமானம் வரத் தொடங்கின. அது கிருத்திகா, மதனின் வங்கிக் கணக்கில் வந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாயைச் சம்பாதித்த மதனும் கிருத்திகாவும் நன்கொடை மூலமாகவும் மற்றவர்களை ஏமாற்றி பணத்தைச் சம்பாதித்தனர்.

 

பணம் மட்டுமே குறிக்கோள்:

கணவன், மனைவியான மதன், கிருத்திகாவின் முகங்கள் யூடியூப் சேனலில் தெரியாது. டிபி போட்டோவாக பள்ளிப் பருவத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில போட்டோக்களை மதன் பயன்படுத்திவந்தார். அதனால் கிருத்திகாவையும் ஒரு சப்ஸ்கிரைபர் என்றுதான் மற்றவர்கள் கருதிவந்தனர். லைவ் முடிந்ததும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ காலில் வருகிறேன் என மதன் கூறும்போது அதற்கு கிருத்திகாவும் ஓகே என்று சொல்லும் ஆடியோவைக் கேட்டு, மற்ற பப்ஜி கேம் பிரியர்கள் அதிர்ச்சியடைந்தாலும், தாங்களும் வீடியோ காலில் செல்வோம் என்ற ஆசையில் தூண்டப்படுவார்கள். அதுதான் மதன், கிருத்திகாவின் மாஸ்டர் பிளான். அது தெரியாமல் ஏராளமானவர்கள் மதனுடன் வீடியோ காலில் வந்து பேசி பணத்தை இழந்திருக்கின்றனர்.

யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா
 
யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா

மதன், கிருத்திகா ஆகியோருக்கு யூடியூப் சேனல்கள், நன்கொடை மூலம் பணம் வரத் தொடங்கியதும் இருவரின் லைஃப் ஸ்டைலும் மாறத் தொடங்கியிருக்கிறது. சொகுசு கார்களையும், சொகுசு பங்களாக்களையும் வாங்கிய இருவரும் ஆடம்பரமாக வாழ்ந்துவந்திருக்கின்றனர். மீசையில்லாத மதனின் முகத்தைக்கூடப் பார்க்காமல் அவனோடு ஏராளமான சிறுவர், சிறுமிகள், இளம் வயதுடையவர்கள் ஆபாச சாட்டிங் செய்துவந்திருக்கின்றனர். அதையெல்லாம் ஆதாரமாகச் சேகரித்திருக்கிறோம். பல இடங்களுக்கு இன்பச் சுற்றுலாவுக்குச் சென்றிருக்கின்றனர். மதனின் வலையில் சில பெண்களும் வீழ்ந்திருக்கின்றனர். ஆனால் அது எதையும் கிருத்திகா கண்டுகொள்ளவில்லை. பணம் மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருந்திருக்கிறது.

 

கிருத்திகா சிக்கியது எப்படி?

யூடியூப் சேனல்களின் அட்மினாக இருந்த கிருத்திகா, மதனின் ஆபாசப் பேச்சுகள் கொண்ட வீடியோக்களை அப்லோடு செய்துவந்திருக்கிறார். இந்தத் தகவல் கிடைத்த பிறகுதான் கிருத்திகாவிடம் விசாரணை நடத்தி அவரைக் கைதுசெய்திருக்கிறோம். அதனால் நீதிபதி முன் கிருத்திகாவை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தோம். மதன் குறித்துக் கேட்ட கேள்விகளுக்கு கிருத்திகா எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதியாகவே இருந்தார்.

மதன்
 
மதன்

போலீஸார் தேடுவதையறிந்த கிருத்திகாவும் மதனும் சென்னையிலிருந்து சேலத்துக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு மனைவியையும் கைக்குழந்தையும் விட்டுவிட்டு மதன் பெங்களூருக்குச் சென்றிருக்கிறார். கிருத்திகாவுடன் மதன் போனில் பேசிய தகவலைவைத்தே கிருத்திகாவைப் பிடித்தோம். பெங்களூரில் தலைமறைவாக மதன் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு டீம் அங்கு சென்றிருக்கிறது. தற்போது மதன், செல்போனைப் பயன்படுத்துவதில்லை.

 

மதனின் மறுபக்கங்கள்

அதனால் அவரின் நண்பர்கள் கிருத்திகாவின் தோழிகள், குடும்பத்தினர் ஆகியோரை ரகசியமாகக் கண்காணித்துவருகிறோம். இதற்கிடையே மதனுக்கு முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதனால் விரைவில் மதனைக் கைதுசெய்துவிடுவோம். மதனுக்கு யூடியூப் சேனல் மூலம் மாதம் 10 லட்சம் ரூபாய் கிடைத்துவந்திருக்கிறது. மதன் பயன்படுத்திய காரின் மதிப்பு மட்டும் 2 கோடி ரூபாய் என தெரியவந்திருக்கிறது. மதனின் கம்ப்யூட்டர் லேப்டாப், கிருத்திகாவின் செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.``மதன் சிறு வயது முதலே ப்ளே பாய் போன்று வலம் வந்திருக்கிறாராம். ப்பஜி கேம் பிரியரான கிருத்திகா, இன்ஜினீயரிங் படித்திருக்கிறார். அவரையும் தன்னுடைய கவர்ச்சிகரமான பேச்சு மூலம் காதலித்திருக்கிறார். மதனும் கிருத்திகாவும் இணைந்து வாழ்ந்து வந்த பிறகுதான் திருமணம் செய்திருக்கின்றனர். மதனுக்குத் தோழிகள் நட்பு வட்டாரம் அதிகம். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்த மதன், ஸ்டைலாகப் பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். அதையே தன்னுடைய பிசினஸாக மாற்றியிருக்கிறார்" போன்ற தகவல்கள் கிருத்திகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை: யூடியூபர் மதனின் மறுபக்கங்கள்..! - மனைவி கிருத்திகா சிக்கியது எப்படி? | Chennai police arrested you tuber madan wife - Vikatan

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யூடியூபர் மதனின் பேச்சைக் கேட்கமுடியவில்லை : நீதிமன்றம்!

 

spacer.png
யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாகக் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரின் பேச்சுகளைக் கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி மதன் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியது.

பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. எனினும் விபிஎன் என்ற தொழில்நுட்பம் மூலம் பப்ஜியை பலர் விளையாடி வருகின்றனர்.  இந்த விளையாட்டைச் சிலருடன் இணைந்து விளையாடுவதோடு, அதனை யூடியூபில் குரல் வர்ணனையுடன் நேரலையாக சேலத்தைச் சேர்ந்த மதன் என்ற இளைஞர் ஒளிபரப்பி வந்தார்.

 

TOXIC MADAN 18+ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வந்த மதன், குரல் வர்ணனையில் ஆபாசமான  வார்த்தைகளைப் பேசி வந்தார். அவர் வெளியிடும் வீடியோக்களில் பெண்களை ஆபாசமாகப்  பேசுவது, அவருடன் விளையாடுபவர்களை தரக்குறைவாகப் பேசுவது இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி என்பவர்  மதன் மீது  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில்,  மதன் நடத்தும் சேனலை பெரும்பாலும் சிறுவயதில் உள்ளவர்கள் அதிகமாகப் பார்க்கிறார்கள். மிகவும் ஆபாசமான அருவருக்கத்தக்க வகையிலான இவருடைய பேச்சு  யூடியூபில் தினமும் வெளியாகிறது. அவர் வெளியிடும் வீடியோக்களை பார்ப்பவர்களின் மனதில் தவறான எண்ணத்தை உருவாக்கும். எனவே அவரது சேனலை தடை செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

தொடர்ந்து மதன் மீது மாநிலம் முழுவதும் இருந்து ஆன்லைன் மூலம் 167 புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகார்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து மதன் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டம்,  சிறுவர்களைத் தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாகப் பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் மதன் தலைமறைவானார். இந்நிலையில், சேலத்திலிருந்த மதன் வீட்டிலிருந்து அவரது தந்தை, மனைவி ஆகியோர் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர்.

 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆபாச வார்த்தைகளுடன் மதன் பேசிவந்த 'டாக்சிக் மதன் 18+' என்ற யூடியூப் சேனலின் நிர்வாகியாக அவரது மனைவி கிருத்திகா இருந்து வந்தது தெரியவந்தது.  மதனுடன் வீடியோக்களில் ஆபாசமாகப் பேசிய பெண்ணின் குரல் அவரது மனைவியுடையதுதான்  என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கிருத்திகாவைக் கைது செய்த போலீசார் நேற்று (ஜூன் 16) எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  கிருத்திகாவை ஜூன் 30ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  

இதனிடையே மதன் பெண் ஒருவரிடம் பேசும்  ஆடியோ ஒன்று வெளியானது. அதில், “நான் ஜெயிலுக்கு செல்ல வாய்ப்பே இல்லை. அப்படியே சென்றாலும்  திரும்ப வந்து இதை விட வேகத்துடன் யூட்யூப் சேனலை நடத்துவேன். அதற்கு மதன் ‘யூ டியூப் சேனல் என்றே பெயர் வைப்பேன். நித்யானந்தா போன்றவர்கள் எல்லாம்  வெளியில் இருக்கும் போது என்னை கைது செய்து விடுவார்களா. இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்” என்று மதன் பேசுகிறார்.

spacer.png

இந்நிலையில் இன்று (ஜூன் 17)  செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜூவால்,  “மதனை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறோம்.  இந்த வழக்கில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதற்கு ஆதாரம் உள்ளது. விசாரணை நடந்து வருவதால் இதுகுறித்து மேலும் கூறமுடியாது. விரைவில் கைது செய்வோம்” என்றார்.

அதுபோன்று முன் ஜாமீன் கேட்டு மதன் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதன்குமார் தரப்பில்,  சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில்  மதன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

காவல்துறை தரப்பில், மதனின் வீடியோக்களை பார்ப்பவர்களில் 30 சதவிகிதம் பேர் பள்ளி மாணவர்கள் தான். மதனுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் மதனின் ஆடியோக்கள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மதனின் பேச்சை காதுகொடுத்து கேட்முடியாத அளவிற்கு உள்ளது.  யூடியூப்பில் மதன் பேச்சை கேட்டுள்ளீர்களா என மதன் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு, வழக்கிற்காக சில பகுதிகளை கேட்டதாக மதன் தரப்பில், பதிலளிக்கப்பட்ட நிலையில்,முழுமையாக கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

அதே சமயம் மதனின் யூடியூப் பதிவுகளை ஒன்றாக சேர்த்து, சிடியாகவோ, பென் டிரைவிலோ தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.


 

https://minnambalam.com/politics/2021/06/17/21/youtube-madan-case-chennai-high-court-order

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யூடியூபர் டாக்சிக் மதன் கைது!

spacer.png

தலைமறைவாக இருந்த யூடியூபர் டாக்சிக் மதனை தர்மபுரியில் வைத்து தனிப்படை போலீசார் இன்று(ஜூன் 18) கைது செய்தனர்.

சேலத்தைச் சேர்ந்த மதன் என்பவர் TOXIC MADAN 18+ என்ற யூடியூப் சேனல் மூலம் 10 லட்சம் வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தி, பப்ஜி விளையாட்டு குறித்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பணத்தை அள்ளி வந்துள்ளார். அவருடன் ஆன்லைனில் விளையாடும் சிறுவர்கள் மற்றும் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி வந்துள்ளார். இதுதொடர்பாக மதன் மீது அளிக்கப்பட்ட 167 புகார்களின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவான மதனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

இதற்கிடையில் மதன் நடத்தி வந்த யூடியூப் சேனலின் அட்மினான அவரின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பப்ஜி மதன், போலீசாரால் என்னை கைது செய்ய முடியாது என சவால் விட்டிருந்த நிலையில் தர்மபுரியில் மதன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரிக்கு சென்று பதுங்கியிருந்த மதனை சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசாரை பார்த்து அதிர்ச்சியடைந்த மதன், போலீசார் காலில் விழுந்து கதறி அழுததாகவும், தான் செய்தது தவறுதான் என்று கூறி குற்றங்களை ஒப்புக் கொள்வதாகவும் தன்னை மன்னித்துவிடுமாறும் கெஞ்சியதாகவும் கூறப்படுகிறது.

வெளியே செல்லும்போது அடையாளத்தை மறைப்பதாக கண்ணாடி அணிந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், பொறியியல் படித்த தனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு பப்ஜி விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டதாகவும், யூடியூப் மூலமாக ரூ. 4 கோடி வரை சம்பாதித்துள்ளதாகவும் போலீசார் விசாரணையில் மதன் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மதனின் இரண்டு ஆடி கார்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள், லேப்டாப், ஐபேட் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதனின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில், மதனின் பேச்சுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மதன் கைது செய்யப்பட்டதையடுத்து, மதனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மதன் இன்று மாலைக்குள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தியபின் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

https://minnambalam.com/politics/2021/06/18/23/youtuber-toxic-mathan-arrested-in-tharmapuri

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழ்ச்செல்வனின் படுகொலையில் கருணாவின் பங்கு மூலம் : அமெரிக்க இலங்கைத் தமிழர் ஒன்றியம் தம்மீதான இனக்கொலையினை முளையிலிருந்தே அனுபவித்துவரும் தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாதத்தின் உளவுத்துறையின் பிற்போக்குத்தனமான  நடவடிக்கைகள் பற்றிச் சிறிதளவேனும் சந்தேகம் இருக்கப்போவதில்லையென்பது திண்ணம். ஆகவே அவர்களின் மனதில் இன்று இருக்கும் ஒரே கேள்வி, "இவ்வளவு கையாலாகாத்தனமான சிங்கள உளவுத்துறையினால் தமிழ்ச்செல்வனின் இடத்தினைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிந்தது எப்படி?" என்பதுதான். இதற்கான பதில் அமெரிக்க, பிரித்தானிய, இந்திய செய்மதிகளினால் எடுக்கப்பட்ட உயர் தெளிவுகொண்ட ஒளிப்படங்கள் சிங்கள விமானப்படைக்கு வழங்கப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கிறது. தமிழ்ச்செல்வனின் படுகொலை தமிழர்களின் அரசியல்த்துறைப்பொறுப்பாளரின் படுகொலை என்பது இலங்கையின் பல்வேறு தரப்பினரிடையேயும் வேறுபாடான உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தனது முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தில் கிடைத்த வெற்றிக்கு நிகராக கொழும்பில் சிங்கள அரசும், சாதாரண சிங்களர்களும் தமிழ்ச்செல்வனின் படுகொலையினைக் கொண்டாடுகிறார்கள். சில பிராமணர்களைத் தவிர மொத்தத் தமிழினமுமே தமிழ்ச்செல்வனின் படுகொலைக்காக இரங்கி அழுகிறது. ஆனால், இருபக்க உணர்வுகள் எப்படியானவையாக இருந்தாலும்கூட, இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுவரும்  பல நடுநிலையாளர்களைப் பொறுத்தவரை செல்வனின் படுகொலையென்பது சமாதான முயற்சிகளில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிக்கப் பெரியது என்பது தெளிவு. இப்படுகொலையின் பின்னர் சமாதான முயற்சிகள் எவ்வழியில் பயணிக்கப்போகின்றன எனும் ஐயம் தமிழர்களை மட்டுமல்லாமல் சிங்களவர்களையும் ஆட்கொண்டிருப்பது தெரிகிறது. உடனடி அதிர்ச்சியிலிருந்தும், தாங்கொணாத் துயரிலிருந்தும் தன்னைச் சிறுகச் சிறுக விடுவித்துக்கொண்டு சுதாரித்துவரும் தமிழினத்தின் மனதில் எழுந்துவரும் ஒரு கேள்வியென்னவென்றால், தமிழ்ச் செல்வனைப் படுகொலை செய்யுமுன்னர் அவரது ரகசிய வாசஸ்த்தலத்தினை சிங்கள விமானப்படை அறிந்துகொண்டது எவ்வாறு என்பதுதான். தமிழ்ச் செல்வனின் படுகொலையினை பாரிய வெற்றியாகக் கொண்டாடிவரும் சிங்கள அரசியல்வாதிகள் அவ்வப்போது வெளியிட்டுவரும் அறிக்கைகளைப் பார்க்கும்போது நிச்சயமாக இந்த படுகொலை நடவடிக்கையில் வெளிநாட்டு உதவிகள் அவர்களுக்குக் கிடைத்திருப்பதைக் காட்டுகின்றது.  தமிழரின் போராட்டங்களை ஒத்த சுதந்திரப் போராட்டங்களின் சரித்திரத்தினைப் பார்க்கும்போது மனிதநேயத்திற்குப் புறம்பான, அப்பாவிகளின் அவலங்களை தமது வெளியுறவுக்கொள்கையின் பலன்களுக்காகப் பாவித்துவரும் அமெரிக்க பிரித்தானிய ராஜதந்திரங்களின் கைவண்ணம் இப்படுகொலையிலும் இருப்பது புலனாவதுடன், இந்தியாவின் ஆசீரும், தொழிநுட்ப உதவியும்  இப்படுகொலையில் பங்குகொண்டிருப்பதும் தெரிகிரது.  சந்திரிக்கா குமாரதுங்க அதிபராக இருந்த காலத்தில் புலிகளின் கட்டுமானங்கள் பற்றியும், அவை நீண்டகால அடிப்படையில் இலங்கையின் பாதுகாப்பிற்கு விளைவிக்கக் கூடிய ஆபத்துக்கள் குறித்தும் அமெரிக்காவின் கொழும்புத் தூதரகம் தொடர்ச்சியான எச்சரிக்கைகளையும், பாதுகாப்பு அறிக்கைகளையும் வெளியிட்டுவந்தது பலருக்கும் நினவிலிருக்கலாம். இவ்வாறான பல பாதுகாப்பு அறிக்கைகளில் அமெரிக்கா புலிகள் தொடர்பான பல உயர் தெளிவுகொண்ட செய்மதிப் படங்களினூடாக சேகரித்த தகவல்களையே இலங்கை அரசுக்கு வழங்கி வந்திருந்தது. அக்காலப்பகுதியில் அமெரிக்காவினால் எடுக்கப்பட்ட செய்மதிப் புகைப்படங்கள் தரையில், கூட்டமாகவும், தனியாகவும் நடமாடும் மனிதர்களைத் துல்லியமாக இனங்காணும் ஆற்றலினை அன்றே பெற்றிருந்ததாக அறியமுடிகிறது. ஆனால், இன்றோ நிலைமை வேறு. இன்றிருக்கும் செய்மதிப் புகைப்படக் கருவிகள் தரையில் நடமாடும் ஒருவரை மிகவும் துல்லியமாக அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், அவர் கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் வகை மற்றும் அதில் காணப்படும் நேரம் முதற்கொண்டு பல நுண்ணிய தகவல்களை படம்பிடிக்கும் ஆற்றலினைப் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத் தகது. அண்மையில் கூகிள் நிறுவனத்திற்கும் அமெரிக்க அரசுக்கும் இடையிலான செய்மதிப் புகைப்பட சிக்கலொன்றில், கூகிள் நிறுவனம் பாவிக்க எத்தனித்த, அமெரிக்க அரசின் செய்மதி ஒளிப்படத் தரத்தினை மிஞ்சும்  உயர் தெளிவுகொண்ட புகைப்படங்களை அனுமதிப்பதில்லையென்று அமெரிக்க அரசாங்கம் முடிவெடுத்திருந்தது குறிப்பிடத் தக்கது. இதுதொடர்பாக கருத்துவெளிட்ட அமெரிக்காவின் தேசிய செய்மதிமூல புலநாய்வுத்துறையின் தளபதி வைஸ் அட்மிரல் ரொபெட் முர்ரெட், அதி தெளிவுகொண்ட செய்மதி ஒளிப்படங்கள் இணையத்தில் பரவுவதை முற்றாகத் தடைசெய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டதும் குறிப்பிடத் தக்கது. இதன் விளைவாகவே நாம் இன்றிருக்கும் கூகிளின் தெளிவு குறைந்த செய்மதி ஒளிப்படங்களைக் காணவேண்டியேற்பட்டிருக்கிறது. 1999 ஆம் ஆண்டு ஒளிப்படங்களை எடுக்கவென விண்ணிற்கு அனுப்பப்பட்ட செய்மதியான இகோனோஸ் - 2 எனும் செய்மதியூடாகக் கிடைக்கும் தரங்குன்றிய  ஒளிப்படங்களே இன்றுவரை எமக்குக் கிடைத்து வருகின்றன.
  • முகுந்தன் என்ற பிரபல எழுத்தாளர் தனது முகப்பக்கத்தில் பகிர்ந்து கொண்ட தகவல்களை அப்படியே தந்துள்ளோம்……   ஒன்றை MD 90 மோட்டச் சைக்கிளில் புத்தளத்திற்கு வந்தவர் 15/16 வருடங்களாக அமைச்சராக இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜனநாயக கட்சியின் தலைவர் குறித்த இனத்தின் மக்கள் பிரநிதி 04 பாராளுமன்ற உறுப்பினரை கொண்ட கட்சியின் தவைவர் 169 பிரதேச சபை உறுப்பினரை கொண்ட கட்சியின் பிரதிநிதி நாட்டின் முக்கிய செல்வந்தர் ஆசியாவின் முக்கிய செல்வந்தர் தர வரிசையில் உள்ளவர் 70+ கம்பனிகளின் Chairman, MD/ CEO 2000+ ஏக்கர் காணிகளை அசையா சொத்துகளாக கொண்டவர். (இலங்கை காணி உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் வயல் காணி+ மேட்டு நிலம் உள்ளங்களாக ஒரு தனி நபர் 75 ஏக்கர் மட்டுமே சட்ட ரீதியாக வைத்திருக்க முடியும். ஆகவே தான் தனது  தாயார், சிறிய தாயார் பெரிய தாயார் அத்தை மனைவி மனைவியின் சகோதர/ சகோதரிகள் சகோதரன் சகோதரனின் மனைவி சகோதரனின் மனைவியின் சகோதர/ சகோதரிகள் என்று முறையில் பட்டியல் நீளும் அத்தோடு தொலைக்காட்சி அலைவரிசை, வானொலி அலைவரிசை ஆகியவற்றுக்கு சொந்தக்காரன் ஆகியவர் தனது வீட்டில் சிறுமியை வேலைக்கு அமர்த்தியது மட்டுமல்லாது அந்த சிறுமியை துஷ்பிரோகத்திற்கு உள்ளாக்கியதிலும் இந்த மக்கள் பிரதிநிதிக்கும் பங்கு இருக்குமா? சந்தர்ப்பம் கிடைக்கும் போது இவரும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து இருப்பாரா என்றே சந்தேகம் எழுகிறது. உயிர்த்த ஞாயிறு (April-21) குண்டு வெடிப்பில் தொடர்பு என்ற வகையில் தன்னை கைது செய்த போது மனித உரிமை மீறல் அது இது என்று எல்லாம் கதறிய போது ஒரு வேளையில் அரசின் பழிவாங்கல் தானோ என நினைத்தோம். இப்போது புரிகிறது. சிறுமியை துஷ்பிரயோகம் செய்யும் நிலைமைக்கு கூட அஞ்சாத இவர்கள் நிச்சயமாக தேவாலயத்திற்கு குண்டு வைப்பதற்கு ஒத்துழைக்க தயங்கி இருக்க மாட்டார்கள் என்றே சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். அத்தோடு சிறுமியை தனது வீட்டில் வைத்து அவரும் துஷ்பிரயோகம் செய்திருக்க கூடலாம்/ அவரும் உடந்தையாக இருந்திருக்கலாம்/ கண்டும் காணாதது போல் கடந்து சென்று இருக்கலாம். இதில் எதுவுவே இல்லை என்று மட்டும் மறுக்க முடியாது. இங்கு குற்றம் நிருபிக்கபட்டால் உடந்தையாக இருந்தவர் உட்பட குடும்பத்தோடு அதி உச்ச தண்டையாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். நீதியின் பிடியில் குற்றத்திற்கு நியாயமான தீர்ப்பு வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் முதற்கொண்டு சம்மந்தப்பட்ட அவரின் மனைவி மனைவியின் சகோதரர் மனைவியின் தந்தை என துஷ்பிரயோகம் செய்தவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் என அனைவருக்கும் அதி உச்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அத்தோடு சிறுமி என்றும் பாராமல் வேலைக்கு அனுப்பிய பெற்றோர், தரகர் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.   முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த ஹிஷாலினி மறுநாளே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயதாக டயகம பகுதியினை சேர்ந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் குறித்து விசாரிக்கும் பொலிஸ் குழுவினர், இன்று பிற்பகல் ரிசாத் பதியுதீனின் வீட்டை ஆய்வு செய்துள்ளனர். இதன்போது அங்கிருந்து விசாரணை அதிகாரிகள் ஒரு லீட்டர் போத்தலில் மண்ணெண்ணெய் கொண்டு வந்திருப்பதையும் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாரணையை நடத்திய மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், சிறுமி தன்னை் தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு நிராகரிக்கப்படும் என்று கூறியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை,நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான சிறுமி தற்கொலை செய்துகொண்டமைக்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரண தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணிக்காக அழைத்து வரப்பட்ட மலையக பெண்கள் 11 பேர் கடுமையான பாலியல் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என திவயின ஊடகம் செய்தி வெளியிட்டிருந்ததுடன்,அவர்களில் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நான் சமீபத்தில் அறிந்த Acai Berry பற்றி சில தகவல்கள்.. Acai berry-   Acai berryயிலும் அதிக Antioxidants உள்ளதாக அறியப்பட்டதால் Super  Food வகையில் ஒன்றாக சமீபகாலமாக இதன் பயன் பற்றி அதிகம் பேசப்படுகிறது..  Acai berryயின் பிறப்பிடம் அமேசன் காடுகளில் உள்ள Acai பனை மரங்கள்…Acai பனை மற்றும் berries Euterpe genus எனும் இனத்தைச் சேர்ந்தவை.  இவை பெரும்பாலும் அமேசன் சதுப்பு நிலங்களில் வளர்க்கப்படுகின்றன. அத்துடன் அங்குள்ள பழங்குடி பழங்குடியினரின் முக்கிய உணவாகவும் உள்ளது. மேலும் ஊட்டச்சத்து மிக்க இந்த பெர்ரிகள், அடர்ந்த சிவப்பு மற்றும் அடர்ந்த ஊதா நிறத்தை உடையவை. இனிப்பு சுவை மிகவும் குறைந்த இந்த பழத்தில் நார்ச்சத்து, புரதசத்து, கார்போஹைட்ரேட்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மட்டுமல்லாது வைட்டமின்கள்:- வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி மற்றும் தாதுசத்துக்கள்:- கல்சியம், சோடியம்,பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்தும் உள்ளது Acai berryயிலும் உள்ள மேற்கூறிய ஊடச்சத்துகளால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இதய ஆரோக்கியத்திற்கு, இலகுவான சமீபாட்டு நடைமுறைக்கு, சரும ஆரோக்கியத்திற்கு என இதன் பயன்களை கூறிக்கொண்டு போகலாம்.. அதே போல, இதனை அதிகளவு உட்கொள்வதும் கூடாது. அத்துடன் வேறு ஏதாவது berry பழங்களிற்கு அலர்ஜி உள்ளவர்களும் இதை சாப்பிடக்கூடாது என கூறப்படுகிறது.. அத்துடன் இங்கே அவுஸ்திரேலியா supermarkets பழங்களாக கண்டதில்லை, powder அல்லது pulp ஆகவே வாங்கலாம். இன்று எனது காலை உணவாக இந்த Acai berry frozen pulp, Strawberry, Blueberry மற்றும் பால் சேர்த்து செய்த milkshake 👇🏼 https://en.m.wikipedia.org/wiki/Açaí_palm  
  • சில யாழ் தமிழர்கள், மலையக தமிழர்களை மோசமாக நடத்தினர் என்பதற்கு இந்த யாழிலேயே பல கருத்தாளர்கள் மலையக சிறுமிகளை வேலைக்கு வைத்தல் பற்றிய திரியில் தாம் கண்டதை எழுதியதை பார்த்தாலே விளங்கும். சிலதை உண்மையான அணுகுமுறையில் அணுக வேண்டும். வன்னி, திருமலை, மட்டகளப்பு, மலையகம் எங்கினும் தம்மை யாழ் தமிழர்கள் நடத்திய விதம் பற்றி ஒரு அதிருப்தி இருக்கிறது. பெருமளவில். இப்படி அத்தனை மாவட்ட மக்களும் உணரும் படி இது ஒன்றும் பொய்யாக கட்டமைக்கபட்டதாக இருக்காது. இதற்கும் போராட்டத்துக்கும் பெரிய தொடர்பில்லை. ஆனால் இது பொய்யுமல்ல. அதே போல் நாடு கடத்தப்பட்ட மலையகமக்களை, மடு ரெயில் நிலையத்தில் வைத்து இறக்கி, வன்னியில் குடியேற்றிய யாழ் தமிழர்களும் இருந்தார்கள். இப்போ வன்னியில் இருக்கும் அந்த மக்கள், இன்னும் மலையகத்தில் இருக்கும் மக்களை விட சற்று மேம்பட்டே இருப்பதும் உண்மையே. அனைத்து இயக்கங்களும் இவர்களை பாரபட்சம் இன்றி நடத்தியதும் உண்மை. ஆகவே இதில் இரு வேறு கோணங்கள் உண்டு. ஆனால் இதை போராட்டத்துடன் இணத்து கதைப்பது - மடை மாற்றும் வேலைதான்.
  • இது உண்மையாயின், காசு இருந்தால், 7 கலியாணம் கட்டலாம் எண்டதை, மாறி வேறு விதமாக எடுத்துள்ளனர் என்றே சொல்ல முடியும்.... அற்பனுக்கு காசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம். இந்த ரிஷாட், அகதியாக புத்தளம் வந்த ஒருவர். அவர் கொழும்பு 7 பகுதியில் வீடு வாங்குமளவுக்கு ஊழலால், பணம் சேர்த்த விதம், வெளிப்படையானது. அவர் அதுகுறித்து ஒருபோதும் கவலைப்படவில்லை. புத்தம் புதிய ஆடி காரில், மன்னாரில் இருந்து, கடத்திய இந்திய கஞ்சாவை கல்கமுவ என்னும் சிங்கள ஊரில், போலீசார் செக் பண்ணி, அனைவரையும் கைது செய்ய, இவர் போன் போட்டு, போலீசாரை பயமுறுத்தி, அனைவரையும் விடுவித்தார். யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வமாக வந்து, இரகசியமாக, நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில், சாரத்துடன், ஹெல்மெட்டும் போட்டுகொண்டு, சாதாரண, வியாபார நானா போல பொம்மைவெளிப்பக்கம் போய் யாரையோ சந்தித்து இருந்தார். இரகிசயமாக ஒரு நிருபர் பின்னாலே போய், என்ன இந்த பக்கம் என்று கேட்க, அசடு வழிந்து.... இவர்கள் எப்படி வாழ்கின்றனர் என்று பார்க்க வந்தேன் என்று சமாளித்து நகர்ந்தார். ஆனால் சந்திப்பின் நோக்கம் வேறு என்றார்கள்.  ஈஸ்டர் குண்டு வெடிப்புகளின் பின்னர், கைதான இவரது நண்பரும், குண்டுதாரி ஒருவரின் தந்தையும், தொழிலதிபருமான ஒருவர் குறித்து அப்போதைய ராணுவ தளபதிக்கு, மிடுக்குடன், எங்கே அவர், எப்போது விடுவிப்பீர்கள் என்று கேட்டு அடாவடி பண்ணினார். இன்று அதே குண்டு வெடிப்பு தொடர்பில் அவர் உள்ளே இருக்கிறார். இந்த முஸ்லீம் அரசியல் வாதி, 3 அல்லது 4 உறுப்பினர்களை எப்படியாவது எடுத்து பெரும்பான்மையில்லாமல் தவிக்கும் பெரிய கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம், தன்னை எந்த அரசும் கை வைக்க முடியாது என்று இறுமாப்புடன் எல்லா அடாவடிகளையும் செய்து கொண்டிருந்தார். வில்பத்து காடழிப்பு, முல்லைத்தீவு காடழிப்பு எல்லாம் இந்த உறுப்பினர்களை பெறும் அரசியல் நோக்கம் கொண்டது. கடந்த தேர்தலில், மன்னாரிலும், புத்தளத்திலும் வாக்காளராக சட்ட விரோதமாக பதித்திருந்த இஸ்லாமியரை, புத்தளத்தில் வாக்களித்த பின்னர், பஸ்களில் ஏத்தி, வாக்களிக்க மன்னாருக்கு, கொரோன மத்தியிலும் கொண்டு போனார் என்ற குற்றசாட்டில் விசாரணை நடக்கிறது. ஈஸ்டர் குண்டு வெடிப்புகளின் பின்னர் கூட, இவர் மீது போலீசார் கை காட்டிய போதும், ரணிலுக்கு பெரும்பாண்மை பலம் தேவைப்பட்டதால், இவர் தினாவெட்டாக பதில்கள் அளித்துக் கொண்டிருந்தார். அவரது போதாத காலம், மகிந்தாவுக்கு இவரது அல்லது இஸ்லாமிய கட்சிகள் ஆதரவே இல்லாமல் 2/3 பெரும்பாண்மை கிடைக்க, இவரது அடாவடிகள், தில்லுமுல்லுகள், குடும்பத்துடன் போட்ட ஆட்டங்கள் எல்லாம் கிழித்து தோரணமாக தொங்க விடப்படுகின்றன. இந்த முறை மகிந்தா அரசுக்கு, எந்த ஒரு இஸ்லாமிய கட்சிகள் ஆதரவும் தேவை இல்லை என்ற நிலையில், அந்த கட்சிகள் காய்ந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக, எந்த அரசு பதவிக்கு வந்தாலும், அதில், குபீர் என்று பாயும், முஸ்லீம் காங்கிரசும், அதன் தலைவர் ஹக்கீமும் முகடை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். ரவூப் ஹக்கீம் விடயத்தில் கூட, ஒரு விதவை பெண் உடன் தொடர்பில் இருந்து, அந்த பெண், இந்த சிறுமி போலவே, தீயினால் மரணித்து, சந்திரிகா காலத்தில் அமைச்சராக இருந்த காரணத்தினால் தப்பினார் என்ற கதையும் உள்ளது. இவர்கள், அடித்த கூத்துக்கள், அடாவடிகள், தில்லுமுல்லுகள் வெளியே வந்து தம்மை சிக்க வைக்கும் என்றே அரசுக்கு எதிராக வாயே திறக்காமல் இருப்பதனால், கிழக்கில், இஸ்லாமியர்கள், சாணக்கியனை, சுமந்திரனை அணுகுகிறார்கள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.