Jump to content

சென்னை: யூடியூபர் மதனின் மறுபக்கங்கள்..! - மனைவி கிருத்திகா சிக்கியது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலைமறைவாக இருக்கும் யூடியூபர் மதனின் மறுபக்கங்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கின்றன. கைதான அவனின் மனைவி கிருத்திகா, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் யூடியூபர் மதனின் ஆபாசப் பேச்சுக்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதிலிருந்தும் காவல்துறைக்கு புகார்கள் வந்தன. சென்னை புளியந்தோப்பு காவல் சரக சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்த புகாரின் அடிப்படையில், போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா விசாரணை நடத்தினார். இந்தச் சமயத்தில் சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி என்பவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் வினோத் குமார், யூடியூபர் மதனுக்கு சம்மன் அனுப்பினார். ஆனால் சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த வேங்கைவாசலில் குடும்பத்துடன் தங்கியிருந்த மதன், தலைமறைவாகிவிட்டதால் சம்மனை போலீஸாரால் கொடுக்க முடியவில்லை.

யூடியூபர் 'டாக்ஸிக்' மதன்
 
யூடியூபர் 'டாக்ஸிக்' மதன்

இந்தச் சமயத்தில்தான் யூடியூபர் மதனின் முழு பயோட்டாவை சைபர் க்ரைம் போலீஸாருக்கு ஒருவர் ஆன்லைன் மூலம் அனுப்பிவைத்தார். அதில் மதனின் முழுப் பெயர் மதன்குமார். அவரின் அப்பா பெயர் மாணிக்கம். சொந்த ஊர் சேலம். மதன்குமாரின் மனைவி பெயர் கிருத்திகா. கைக்குழந்தை ஒன்று உள்ளது போன்ற விவரங்கள் இருந்தன. அதன் பிறகு சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கிருத்திகாவைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாகக் கூறப்படுகிறது.

 

காதல் திருமணம்

இது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``இன்ஜினீயரிங் படித்துவிட்டு, தடை செய்யப்பட்ட `பப்ஜி’ கேம் பிரியர்களை குறிவைத்து யூடியூப் சேனல்களை மதன் தொடங்கியிருக்கிறார். அதற்கு அட்மினாக அவரின் மனைவி கிருத்திகா இருந்திருக்கிறார். இவர்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். இருவரும் சேர்ந்து யூடியூப் சேனல்களை நடத்திவந்திருக்கின்றனர். கணவன், மனைவியான மதனும் கிருத்திகாவும் பப்ஜி கேம் பிரியர்கள். பப்ஜி கேமில் சூப்பர் சாட்டிங் மூலம் பேசியபடியே லைவ்வாக விளையாட முடியும். அதனால் மதன் லைவ்வாக கேமின் ட்ரிக்ஸ், டிப்ஸ்களைக் கூறுவார். அந்த விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள், சிறுமிகள் என அனைவரும் மதனின் பேச்சுகளை ஆர்வமாகக் கேட்டு ரசித்துவந்திருக்கின்றனர்.

யூடியூபர் மதன்
 
யூடியூபர் மதன்

விளையாடும்போது மதன், அவ்வப்போது பெண்களைக் குறித்து ஆபாசமாகப் பேசுவார். அதற்கு அவரின் மனைவி கிருத்திகாவும் பதிலளிப்பார். அதைக் கேட்கும் மற்றவர்கள் என்ன விளையாட்டின்போது இப்படிப் பேசுகிறார்கள் என்று கருதுவதுண்டு. ஆனால் அதை பலர் ரசித்தும் வந்திருக்கின்றனர். இதுதான் மதன் யூடியூப் சேனல் பிரபலமானதற்கு முக்கியக் காரணம். மதனின் ஆபாசப் பேச்சுகள், அநாகரிக வார்த்தைகளைக் கேட்க தனி ரசிகர்கள் இருந்தனர். யூடியூபில் லட்சக்கணக்கில் சப்ஸ்கிரைபர்கள் வந்ததும், யூடியூப் சேனல்கள் மூலம் வருமானம் வரத் தொடங்கின. அது கிருத்திகா, மதனின் வங்கிக் கணக்கில் வந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாயைச் சம்பாதித்த மதனும் கிருத்திகாவும் நன்கொடை மூலமாகவும் மற்றவர்களை ஏமாற்றி பணத்தைச் சம்பாதித்தனர்.

 

பணம் மட்டுமே குறிக்கோள்:

கணவன், மனைவியான மதன், கிருத்திகாவின் முகங்கள் யூடியூப் சேனலில் தெரியாது. டிபி போட்டோவாக பள்ளிப் பருவத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில போட்டோக்களை மதன் பயன்படுத்திவந்தார். அதனால் கிருத்திகாவையும் ஒரு சப்ஸ்கிரைபர் என்றுதான் மற்றவர்கள் கருதிவந்தனர். லைவ் முடிந்ததும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ காலில் வருகிறேன் என மதன் கூறும்போது அதற்கு கிருத்திகாவும் ஓகே என்று சொல்லும் ஆடியோவைக் கேட்டு, மற்ற பப்ஜி கேம் பிரியர்கள் அதிர்ச்சியடைந்தாலும், தாங்களும் வீடியோ காலில் செல்வோம் என்ற ஆசையில் தூண்டப்படுவார்கள். அதுதான் மதன், கிருத்திகாவின் மாஸ்டர் பிளான். அது தெரியாமல் ஏராளமானவர்கள் மதனுடன் வீடியோ காலில் வந்து பேசி பணத்தை இழந்திருக்கின்றனர்.

யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா
 
யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா

மதன், கிருத்திகா ஆகியோருக்கு யூடியூப் சேனல்கள், நன்கொடை மூலம் பணம் வரத் தொடங்கியதும் இருவரின் லைஃப் ஸ்டைலும் மாறத் தொடங்கியிருக்கிறது. சொகுசு கார்களையும், சொகுசு பங்களாக்களையும் வாங்கிய இருவரும் ஆடம்பரமாக வாழ்ந்துவந்திருக்கின்றனர். மீசையில்லாத மதனின் முகத்தைக்கூடப் பார்க்காமல் அவனோடு ஏராளமான சிறுவர், சிறுமிகள், இளம் வயதுடையவர்கள் ஆபாச சாட்டிங் செய்துவந்திருக்கின்றனர். அதையெல்லாம் ஆதாரமாகச் சேகரித்திருக்கிறோம். பல இடங்களுக்கு இன்பச் சுற்றுலாவுக்குச் சென்றிருக்கின்றனர். மதனின் வலையில் சில பெண்களும் வீழ்ந்திருக்கின்றனர். ஆனால் அது எதையும் கிருத்திகா கண்டுகொள்ளவில்லை. பணம் மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருந்திருக்கிறது.

 

கிருத்திகா சிக்கியது எப்படி?

யூடியூப் சேனல்களின் அட்மினாக இருந்த கிருத்திகா, மதனின் ஆபாசப் பேச்சுகள் கொண்ட வீடியோக்களை அப்லோடு செய்துவந்திருக்கிறார். இந்தத் தகவல் கிடைத்த பிறகுதான் கிருத்திகாவிடம் விசாரணை நடத்தி அவரைக் கைதுசெய்திருக்கிறோம். அதனால் நீதிபதி முன் கிருத்திகாவை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தோம். மதன் குறித்துக் கேட்ட கேள்விகளுக்கு கிருத்திகா எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதியாகவே இருந்தார்.

மதன்
 
மதன்

போலீஸார் தேடுவதையறிந்த கிருத்திகாவும் மதனும் சென்னையிலிருந்து சேலத்துக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு மனைவியையும் கைக்குழந்தையும் விட்டுவிட்டு மதன் பெங்களூருக்குச் சென்றிருக்கிறார். கிருத்திகாவுடன் மதன் போனில் பேசிய தகவலைவைத்தே கிருத்திகாவைப் பிடித்தோம். பெங்களூரில் தலைமறைவாக மதன் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு டீம் அங்கு சென்றிருக்கிறது. தற்போது மதன், செல்போனைப் பயன்படுத்துவதில்லை.

 

மதனின் மறுபக்கங்கள்

அதனால் அவரின் நண்பர்கள் கிருத்திகாவின் தோழிகள், குடும்பத்தினர் ஆகியோரை ரகசியமாகக் கண்காணித்துவருகிறோம். இதற்கிடையே மதனுக்கு முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதனால் விரைவில் மதனைக் கைதுசெய்துவிடுவோம். மதனுக்கு யூடியூப் சேனல் மூலம் மாதம் 10 லட்சம் ரூபாய் கிடைத்துவந்திருக்கிறது. மதன் பயன்படுத்திய காரின் மதிப்பு மட்டும் 2 கோடி ரூபாய் என தெரியவந்திருக்கிறது. மதனின் கம்ப்யூட்டர் லேப்டாப், கிருத்திகாவின் செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.``மதன் சிறு வயது முதலே ப்ளே பாய் போன்று வலம் வந்திருக்கிறாராம். ப்பஜி கேம் பிரியரான கிருத்திகா, இன்ஜினீயரிங் படித்திருக்கிறார். அவரையும் தன்னுடைய கவர்ச்சிகரமான பேச்சு மூலம் காதலித்திருக்கிறார். மதனும் கிருத்திகாவும் இணைந்து வாழ்ந்து வந்த பிறகுதான் திருமணம் செய்திருக்கின்றனர். மதனுக்குத் தோழிகள் நட்பு வட்டாரம் அதிகம். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்த மதன், ஸ்டைலாகப் பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். அதையே தன்னுடைய பிசினஸாக மாற்றியிருக்கிறார்" போன்ற தகவல்கள் கிருத்திகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை: யூடியூபர் மதனின் மறுபக்கங்கள்..! - மனைவி கிருத்திகா சிக்கியது எப்படி? | Chennai police arrested you tuber madan wife - Vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூடியூபர் மதனின் பேச்சைக் கேட்கமுடியவில்லை : நீதிமன்றம்!

 

spacer.png
யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாகக் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரின் பேச்சுகளைக் கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி மதன் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியது.

பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. எனினும் விபிஎன் என்ற தொழில்நுட்பம் மூலம் பப்ஜியை பலர் விளையாடி வருகின்றனர்.  இந்த விளையாட்டைச் சிலருடன் இணைந்து விளையாடுவதோடு, அதனை யூடியூபில் குரல் வர்ணனையுடன் நேரலையாக சேலத்தைச் சேர்ந்த மதன் என்ற இளைஞர் ஒளிபரப்பி வந்தார்.

 

TOXIC MADAN 18+ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வந்த மதன், குரல் வர்ணனையில் ஆபாசமான  வார்த்தைகளைப் பேசி வந்தார். அவர் வெளியிடும் வீடியோக்களில் பெண்களை ஆபாசமாகப்  பேசுவது, அவருடன் விளையாடுபவர்களை தரக்குறைவாகப் பேசுவது இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி என்பவர்  மதன் மீது  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில்,  மதன் நடத்தும் சேனலை பெரும்பாலும் சிறுவயதில் உள்ளவர்கள் அதிகமாகப் பார்க்கிறார்கள். மிகவும் ஆபாசமான அருவருக்கத்தக்க வகையிலான இவருடைய பேச்சு  யூடியூபில் தினமும் வெளியாகிறது. அவர் வெளியிடும் வீடியோக்களை பார்ப்பவர்களின் மனதில் தவறான எண்ணத்தை உருவாக்கும். எனவே அவரது சேனலை தடை செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

தொடர்ந்து மதன் மீது மாநிலம் முழுவதும் இருந்து ஆன்லைன் மூலம் 167 புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகார்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து மதன் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டம்,  சிறுவர்களைத் தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாகப் பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் மதன் தலைமறைவானார். இந்நிலையில், சேலத்திலிருந்த மதன் வீட்டிலிருந்து அவரது தந்தை, மனைவி ஆகியோர் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர்.

 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆபாச வார்த்தைகளுடன் மதன் பேசிவந்த 'டாக்சிக் மதன் 18+' என்ற யூடியூப் சேனலின் நிர்வாகியாக அவரது மனைவி கிருத்திகா இருந்து வந்தது தெரியவந்தது.  மதனுடன் வீடியோக்களில் ஆபாசமாகப் பேசிய பெண்ணின் குரல் அவரது மனைவியுடையதுதான்  என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கிருத்திகாவைக் கைது செய்த போலீசார் நேற்று (ஜூன் 16) எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  கிருத்திகாவை ஜூன் 30ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  

இதனிடையே மதன் பெண் ஒருவரிடம் பேசும்  ஆடியோ ஒன்று வெளியானது. அதில், “நான் ஜெயிலுக்கு செல்ல வாய்ப்பே இல்லை. அப்படியே சென்றாலும்  திரும்ப வந்து இதை விட வேகத்துடன் யூட்யூப் சேனலை நடத்துவேன். அதற்கு மதன் ‘யூ டியூப் சேனல் என்றே பெயர் வைப்பேன். நித்யானந்தா போன்றவர்கள் எல்லாம்  வெளியில் இருக்கும் போது என்னை கைது செய்து விடுவார்களா. இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்” என்று மதன் பேசுகிறார்.

spacer.png

இந்நிலையில் இன்று (ஜூன் 17)  செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜூவால்,  “மதனை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறோம்.  இந்த வழக்கில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதற்கு ஆதாரம் உள்ளது. விசாரணை நடந்து வருவதால் இதுகுறித்து மேலும் கூறமுடியாது. விரைவில் கைது செய்வோம்” என்றார்.

அதுபோன்று முன் ஜாமீன் கேட்டு மதன் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதன்குமார் தரப்பில்,  சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில்  மதன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

காவல்துறை தரப்பில், மதனின் வீடியோக்களை பார்ப்பவர்களில் 30 சதவிகிதம் பேர் பள்ளி மாணவர்கள் தான். மதனுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் மதனின் ஆடியோக்கள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மதனின் பேச்சை காதுகொடுத்து கேட்முடியாத அளவிற்கு உள்ளது.  யூடியூப்பில் மதன் பேச்சை கேட்டுள்ளீர்களா என மதன் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு, வழக்கிற்காக சில பகுதிகளை கேட்டதாக மதன் தரப்பில், பதிலளிக்கப்பட்ட நிலையில்,முழுமையாக கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

அதே சமயம் மதனின் யூடியூப் பதிவுகளை ஒன்றாக சேர்த்து, சிடியாகவோ, பென் டிரைவிலோ தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.


 

https://minnambalam.com/politics/2021/06/17/21/youtube-madan-case-chennai-high-court-order

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூடியூபர் டாக்சிக் மதன் கைது!

spacer.png

தலைமறைவாக இருந்த யூடியூபர் டாக்சிக் மதனை தர்மபுரியில் வைத்து தனிப்படை போலீசார் இன்று(ஜூன் 18) கைது செய்தனர்.

சேலத்தைச் சேர்ந்த மதன் என்பவர் TOXIC MADAN 18+ என்ற யூடியூப் சேனல் மூலம் 10 லட்சம் வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தி, பப்ஜி விளையாட்டு குறித்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பணத்தை அள்ளி வந்துள்ளார். அவருடன் ஆன்லைனில் விளையாடும் சிறுவர்கள் மற்றும் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி வந்துள்ளார். இதுதொடர்பாக மதன் மீது அளிக்கப்பட்ட 167 புகார்களின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவான மதனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

இதற்கிடையில் மதன் நடத்தி வந்த யூடியூப் சேனலின் அட்மினான அவரின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பப்ஜி மதன், போலீசாரால் என்னை கைது செய்ய முடியாது என சவால் விட்டிருந்த நிலையில் தர்மபுரியில் மதன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரிக்கு சென்று பதுங்கியிருந்த மதனை சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசாரை பார்த்து அதிர்ச்சியடைந்த மதன், போலீசார் காலில் விழுந்து கதறி அழுததாகவும், தான் செய்தது தவறுதான் என்று கூறி குற்றங்களை ஒப்புக் கொள்வதாகவும் தன்னை மன்னித்துவிடுமாறும் கெஞ்சியதாகவும் கூறப்படுகிறது.

வெளியே செல்லும்போது அடையாளத்தை மறைப்பதாக கண்ணாடி அணிந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், பொறியியல் படித்த தனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு பப்ஜி விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டதாகவும், யூடியூப் மூலமாக ரூ. 4 கோடி வரை சம்பாதித்துள்ளதாகவும் போலீசார் விசாரணையில் மதன் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மதனின் இரண்டு ஆடி கார்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள், லேப்டாப், ஐபேட் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதனின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில், மதனின் பேச்சுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மதன் கைது செய்யப்பட்டதையடுத்து, மதனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மதன் இன்று மாலைக்குள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தியபின் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

https://minnambalam.com/politics/2021/06/18/23/youtuber-toxic-mathan-arrested-in-tharmapuri

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.