Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நளினி முருகன்: உறவினர்களுடன் வீடியோ காலில் பேச அனுமதி!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நளினி முருகன்: உறவினர்களுடன் வீடியோ காலில் பேச அனுமதி!

spacer.png

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் இருவரும் உறவினர்களுடன் வாடஸ் அப் காலில் பேச அனுமதி அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக 30 ஆண்டுகளாக நளினி மற்றும் முருகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2020 ஏப்ரல் மாதம் இறுதியில் முருகனின் தந்தை இலங்கையில் உயிரிழந்தபோது இறுதிச் சடங்கைக் கூட வீடியோ காலில் பார்க்கத் தமிழக அரசு அனுமதிக்கவில்லை.

 

இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா, ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் முருகன், நளினி இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமணி அம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அந்த மனுவில் முருகனின் தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்க்க அரசு அனுமதிக்காதது குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் இருவரையும் பேச அனுமதித்தால் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் பன்முக விசாரணை முகமையின் விசாரணை பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

2011ஆம் ஆண்டு அரசாணையின்படி சிறைக் கைதிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதி இல்லை. இந்தியாவில் உள்ள உறவினர்களுடன் பத்து நாளைக்கு ஒரு முறை மாதம் ஒன்றுக்கு 30 நிமிடத்திற்கு மிகாமல் மூன்று அழைப்புகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும் அது சிறைவாசிகளின் அடிப்படை உரிமை அல்ல என்றும் தமிழக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் வாட்ஸ்அப் வீடியோகால் மூலம் பேச அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.


https://minnambalam.com/politics/2021/06/17/36/nalini-murugan-chennai-hc-order

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இது உண்மையாயின், காசு இருந்தால், 7 கலியாணம் கட்டலாம் எண்டதை, மாறி வேறு விதமாக எடுத்துள்ளனர் என்றே சொல்ல முடியும்.... அற்பனுக்கு காசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம். இந்த ரிஷாட், அகதியாக புத்தளம் வந்த ஒருவர். அவர் கொழும்பு 7 பகுதியில் வீடு வாங்குமளவுக்கு ஊழலால், பணம் சேர்த்த விதம், வெளிப்படையானது. அவர் அதுகுறித்து ஒருபோதும் கவலைப்படவில்லை. புத்தம் புதிய ஆடி காரில், மன்னாரில் இருந்து, கடத்திய இந்திய கஞ்சாவை கல்கமுவ என்னும் சிங்கள ஊரில், போலீசார் செக் பண்ணி, அனைவரையும் கைது செய்ய, இவர் போன் போட்டு, போலீசாரை பயமுறுத்தி, அனைவரையும் விடுவித்தார். ஈஸ்டர் குண்டு வெடிப்புகளின் பின்னர், கைதான இவரது நண்பரும், தொழிலதிபருமான ஒருவர் குறித்து அப்போதைய ராணுவ தளபதிக்கு, மிடுக்குடன், எங்கே அவர், எப்போது விடுவிப்பீர்கள் என்று கேட்டு அடாவடி பண்ணினார். இன்று அதே குண்டு வெடிப்பு தொடர்பில் அவர் உள்ளே இருக்கிறார். இந்த முஸ்லீம் அரசியல் வாதி, 3 அல்லது 4 உறுப்பினர்களை எப்படியாவது எடுத்து பெரும்பான்மையில்லாமல் தவிக்கும் பெரிய கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம், தன்னை எந்த அரசும் கை வைக்க முடியாது என்று இறுமாப்புடன் எல்லா அடாவடிகளையும் செய்து கொண்டிருந்தார். ஈஸ்டர் குண்டு வெடிப்புகளின் பின்னர் கூட, இவர் மீது போலீசார் கை காட்டிய போதும், இவர் ரணிலுக்கு பெரும்பாண்மை பலம் தேவைப்பட்டதால், தினாவெட்டாக பதில்கள் அளித்துக் கொண்டிருந்தார். அவரது போதாத காலம், மகிந்தாவுக்கு இவரது அல்லது இஸ்லாமிய கட்சிகள் ஆதரவே இல்லாமல் 2/3 பெரும்பாண்மை கிடைக்க, இவரது அடாவடிகள், தில்லுமுல்லுகள், குடும்பத்துடன் போட்ட ஆட்டங்கள் எல்லாம் கிழித்து தோரணமாக தொங்க விடப்படுகின்றன. இந்த முறை மகிந்தா அரசுக்கு, எந்த ஒரு இஸ்லாமிய கட்சிகள் ஆதரவும் தேவை இல்லை என்ற நிலையில், அந்த கட்சிகள் காய்ந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக, எந்த அரசு பதவிக்கு வந்தாலும், அதில், குபீர் என்று பாயும், முஸ்லீம் காங்கிரசும், அதன் தலைவர் ஹக்கீமும் முகடை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அரசுக்கு எதிராக வாயே திறக்காமல் இருப்பதனால், கிழக்கில், இஸ்லாமியர்கள், சாணக்கியனை, சுமந்திரனை அணுகுகிறார்கள்.
  • ஐயோ பாவமே ….. ஜெயிலில் இருக்கிறார்… குடும்பத்துக்கு ஒரு பிரச்ச்னை…. ஓடி போய் உதவ முடியாத நிலை …… மாரடைப்பு…….. இப்படி எல்லாம் மாய்மாலம் போட்டது பொய்யா கோபால்? மாத்திரையை வாங்கி ஜன்னலுக்கால எறிஞ்சிருகார் தானைத்தலைவர். தெற்காசியாவில் அரசியல்வாதிகள் வழக்குகளில் மாட்டுப்பட்டதும் ஓடிப்போய் ஆஸ்பத்திரியில் படுப்பது வழக்கம்தான். அப்பவே இதை சொல்ல நினைத்தேன்.. ஆனால் இப்பா தானாவே வெளியே வந்திட்டு.
  • அச்சொட்டான கேள்விகள்.👌 என்ர மனதில் இருந்த எண்ணங்களை தகுந்த சொற்களால் அப்படியே எழுதிப்போட்டியள். 👏👏 இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் இதில் இருக்கும் பாதிக்கு கூட அவங்களில் ஒருவனாலும் விடையென்ன, உருப்படியான மறுமொழியே கொடுக்க முடியாது என்பது திண்ணம். ---------------------------   இஞ்சயிருந்து அங்க ஒப்பந்தத்தால் திரும்பிப் போன ஆக்களையே கவனத்தில் எடுக்காத அவங்கட கிந்திய அரசு, - ஓமண்ணை, 1991 காவாலிகளின் தலைவன் ரஜீவ் மேலே அனுப்பப்பட்டபோது, கோவையில் ஒரு மலை அடிவாரத்தில் வாழ்ந்து வந்த(அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்ட) இஞ்ச இருந்து திரும்பிப்போன மலையக மக்கள் மீது கோவை காவல்துறையினர் பாரிய வன்முறையினை கட்டவிழ்த்து விட்டனர், உசாவல் என்ட பேரில் - இஞ்ச இருக்கிற மலையக மக்களையா கவனத்தில் எடுக்கப்போகிறது? சரி அதை விடுங்கோ, கிளிநொச்சியில் குடிஅமர்த்தப்பட்ட பெரும்பாலான மலையக மக்கள் வன்னி மக்களோடே பெருமளவு கலந்து போயினர். இளந்தலைமுறையின் பேச்சு வழக்கும் மாறிவிட்டது. அவர்களில் சிலபேர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் வித்தாகினர். அவங்களை எதுக்காக இப்போது அன்னியப்படுத்தப் பார்க்கிறீர்கள்?   ----------------------   நீங்கள் இன்று வரை ஆதரவளிக்கும் உங்கள் இந்திய அரசே உங்களை கவனிக்கவில்லை, இதில் அடுத்தவனை ஏன் குறை சொல்கின்றனர்? அதிலும், இப்போது போரால் முற்றாக  நலிவுற்றுப் போயிருக்கும் ஒரு சமூகத்தைப் பார்த்து?  இப்போதைய சூழ்நிலையில் இப்படி எழுதுவதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. வெறுப்பே இன்னமும் மேலோங்கும்! பழைய கசப்புகளை வைத்து ஏலாத இக்காலத்தில் வெறும் வார்த்தைகளால் பழிதீர்க்கப் பார்க்கும் மட்டமான அரசியல் நோக்கம் கொண்ட கட்டுரை இது!    (அந்தக் காலத்தில் மலையகத் தமிழர்களை ஏன் யாழில் குடி அமர்த்தவில்லை என்பதை என் தாய்மூலம் கேட்டறிந்த பின்னரே இதை எழுதியுள்ளேன்)  
  • இன மத வேறுபாடுகளை தாண்டி ஒரு சிறுமியின் பாலியல் வன் கொலையை கண்டிக்க முடியாத அளவுக்கு அரசியல் ஆதாய கணக்கு கண்ணை மறைக்கிறது. சாணாக்கியனை தவிர சகல வடக்கு கிழக்கு தமிழ் அரசியல்வாதிகளும் வாய் மூடிகளாய் இருப்பது ஏன்? இவர்களை விட மனிதநேயமுள்ள சிங்களவர்கள் சிலர் இதில் அக்கறையாக உள்ளார்கள். வெட்கம்கெட்ட தமிழ் அரசியல்வாதிகள்.
  • இலங்கை ஊடக ஜாம்பவான், ஆர்.ராஜமகேந்திரன் காலமானார் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAJAMAHENDRAN - NEWS FIRST இலங்கையின் ஊடக ஜாம்பவான், கேப்பிட்டல் மஹாராஜா குழுமத் தலைவர், ஆர்.ராஜமகேந்திரன் இன்று (25) காலமானார். கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில வார காலமாக சிகிசிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக, அவரது நிறுவனத்துக்கு சொந்தமான 'நியூஸ் பெஸ்ட்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சக்தி, சிரச, எம்.ரி.வி, நியூஸ்பெஸ்ட் ஆகிய ஊடக நிறுவனங்களின் உரிமையாளராக ஆர்.ராஜமகேந்திரன் விளங்கினார். யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆர்.ராஜமகேந்திரன், இலங்கையின் அரசியல், வர்த்தகம், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தனது செல்வாக்கை செலுத்தியிருந்தார்.   பல ஆட்சி மாற்றங்களின் போது, ஆர்.ராஜமகேந்திரனின் செல்வாக்கு அதில் காணப்பட்டதாக ஒவ்வொரு தடவையும் கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமிழர்களுக்கு சுதந்திரமாக நடமாட முடியாத சூழல் காணப்பட்ட தருணத்தில், சக்தி தொலைக்காட்சியை அவர் தொடங்கினார். பட மூலாதாரம்,ARUN PRASATH அதேபோன்று, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இலங்கையில் முதல் தடவையாக ஊடக நிறுவனத்தை ஆரம்பித்தவர் அவரே. அது மாத்திரமன்றி, தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி சேவையான சன் குழுமத்துடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு, இலங்கையில் தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காலப் பகுதிகளில் இந்திய சினிமாவை தமிழர்களின் வீடுகளில் பார்வையிடும் வாய்ப்பை அவர் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். அதேவேளை, ரஜினிகாந்த் நடிப்பில் 1981ம் ஆண்டு வெளியான தீ திரைப்படத்தின் கூட்டு தயாரிப்பாளராக அவரது நிறுவனம் விளங்கியது. இலங்கையில் ரஜினிகாந்த்தை வைத்து திரைப்படம் எடுத்த பெருமை இவரை சாரும் என கூறப்படுகின்றது. இந்த வகையில், இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியது மாத்திரமின்றி, தமிழக சினிமாவுடன் இவரது தொடர்பு இறுதி வரை காணப்பட்டது. இதேவேளை, ஆர்.ராஜமகேந்திரனின் மறைவுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது இரங்கலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. ஆர்.ராஜமகேந்திரனிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நீண்ட பிணைப்பினை நினைவுகூர்வதாக அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-57958939
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.