Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

“இலங்கை மண்ணின் தோற்றோர்” ஆங்கில நூல் ஐந்து மொழிகளில் வெளியீடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

“இலங்கை மண்ணின் தோற்றோர்” ஆங்கில நூல் ஐந்து மொழிகளில் வெளியீடு

“இலங்கை மண்ணின் தோற்றோர்” ஆங்கில நூல் ஐந்து மொழிகளில் வெளியீடு

வன்னி மண்ணின் பிரபல்யமான ஆங்கில எழுத்தாளரான யோகராசா அச்சுதனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “இலங்கை மண்ணின் தோற்றோர்” எனும் நூல் அண்மையில் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது.

யேர்மன், பிரெஞ்சு, டச்சு, போர்த்துகீசு, பொலிஸ் மற்றும் இத்தாலிய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள குறித்த நூல் உலகின் பிரபல்யமான இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

பிரபல சிங்கள எழுத்தாளரான புண்ணியகாந்தி விஜயநாயக்கவினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “காத்திருக்கும் பூமி” எனும் நூலினை விமர்சித்து எழுதப்பட்ட இந் நூல் சமூக முன்னேற்றத்திற்காக இலங்கை மக்கள் எதிர் கொண்ட தனிமனித மற்றும் சமூக பிரச்சனைகளை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து இலங்கை ஆங்கில இலக்கிய வளர்ச்சிக்கு வலுச்சேர்த்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யோகராஜா அச்சுதன் “பாழாய்ப்போன வாழ்க்கை”, “அதிசய குணப்படுத்தல்” மற்றும் “அப்பாவே ” போன்ற நல்லிணக்கத்திற்கான ஆக்கங்கள் எனும் தொனிப்பொருளில் எழுதப்பட்ட ஆங்கில கவிதைகளின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாசகர் மனதில் இடம்பிடித்த இலங்கை தமிழ் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1223281

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். உதாரணம்: தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதறே ஒரேழுத்து ஒரு மொழியாகும். ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்துப் பயன்பெறவும்.  இதை படித்தாலே இந்த பகுதியில் கேட்கப்படும் 3 கேள்விகளுக்கும் எளிதாக பதிலளித்துவிடலாம். ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் அ-சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா ஆ- பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம் இ- சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம். ஈ- பறக்கும் ஈ, தா, குகை, தேனீஉ-சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம் ஊ-இறைச்சி, உணவு, ஊன், தசை எ-வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம் ஏ- அம்பு, உயர்ச்சிமிகுதி ஐ-அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை ஒ-மதகு, (நீர் தாங்கும் பலகை) ஔ-பூமி, ஆனந்தம் க-வியங்கோள் விகுதி கா-காத்தல், சோலை கி-இரைச்சல் ஒலி கு-குவளயம் கூ-பூமி, கூவுதல், உலகம் கை-உறுப்பு, கரம் கோ-அரசன், தந்தை, இறைவன் கௌ-கொள்ளு, தீங்கு சா-இறத்தல், சாக்காடு சீ- லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல் சு-விரட்டடுதல், சுகம், மங்கலம் சே-காலை சை-அறுவறுப்பு ஒலி, கைப்பொருள் சோ- மதில், அரண் ஞா- பொருத்து, கட்டு தா- கொடு, கேட்பது தீ-நெருப்பு , தீமை து-உண் தூ-வெண்மை, தூய்மை தே-கடவுள் தை-தமிழ்மாதம், தைத்தல், பொருத்து நா-நான், நாக்கு நி- இன்பம், அதிகம், விருப்பம் நீ-முன்னிலை ஒருமை, நீக்குதல் நூ- யானை, ஆபரணம், அணி நே- அன்பு, அருள், நேயம் நை- வருந்து நோ- துன்ப்பபடுதல், நோவு, வருத்தம் நௌ- மரக்கலம் ப-நூறு பா- பாட்டு, கவிதை பூ- மலர் பே- நுரை, அழகு, அச்சம் பை- கைப்பை போ- செல், ஏவல் ம- சந்திரன், எமன் மா- பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம் மீ- மேலே , உயர்ச்சி, உச்சி மூ- மூப்பு, முதுமை மே- மேல் மை- கண்மை (கருமை), அஞ்சனம், இருள் மோ- மோதல், முகரதல் ய- தமிழ் எழுத்து எனப்தின் வடிவம் யா- ஒரு வகை மரம், யாவை, இல்லை வ- நாலில் ஒரு பங்கு “கால்” என்பதன் தமிழ் வடிவம் வா- வருக, ஏவல் வி- அறிவு, நிச்சயம், ஆகாயம் வீ- மலர் , அழிவு வே- வேம்பு, உளவு வை- வைக்கவும், கூர்மை வௌ- வவ்வுதல் நோ- வருந்து ள- தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம் ளு- நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம் று- எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம் நன்றி-https://aasiriyarsangamam.blogspot.com/2018/09/blog-post.html
  • பல வெற்றிகளுக்கு வேவுத்தகவல்களை மிகத் துல்லியமாக பெற்றுத்தந்தவர் மேஐர் அசோக்.   வேவுப்புலி  மேஐர் சேரன் / அசோக் குணசிங்கம் குணராஐ் வீரச்சாவு  02.8.1994 1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த அசோக் பயிற்சியின் பின் வலிகாமப் பகுதியில் நின்று பல்வேறு களம் கண்ட ஒரு வீரனாவான் கந்தையாவைப் போலவே இவனும் பலாலிக்கான ஒரு வேவுக்காரன்.ஆனால் இவனோ வலிகாமப் பகுதியிலிருந்து தனது வேவு நடவடிக்கையை ஆரம்பித்தான்.ஒவ்வொருமுறை வேவு நடவடிக்கையின் போதும் இவனது தூரம் அதிகரித்துக் கொண்டபோனது.   அதிலும் ஒரு ஆனந்தம் ஏனெனில் தான் ஓடித்திரிந்து விளையாடிய தான் படித்த பாடசாலை இவைகளை சக போராளிகளுடன் பகிர்ந்து கொண்டதுடன் .குறைந்தளவு போராளிகளுடன் எதிரிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவது.)எதிரியின் ஆக்கிரமிப்புத்தான் இதற்க்கு காரணம்.அந்தநேரம் எம்மிடம் எதிரியின் போர் விமானங்களையோ போர் உலங்குவானுர்திகளையோ சுட்டு வீழ்த்துவதற்க்கு  விமான எதிர்ப்பு ஏவுகணைகளோ விமான எதிர்ப்பு ஆயதங்களோ இருக்கவில்லை.எம்மிடம் இருந்த மிகப் பலம் வாய்ந்த ஆயுதமான உயிராயுதம்   அதாவது கரும்புலிகள்.இவர்களைப்பயன்படுத்தி ஒரு பெரும்தாக்குதலுக்குத் திட்டம் தீட்டப்பட்டது.அதாவது எமது மக்களினதும் போராளிகளினதும் சாவுக்குக் காரணமான விமானங்களை அதன் இருப்பிடம் தேடிச் சென்று அழிப்பதே திட்டமாகும் .இது இலகுவான காரியமல்ல எத்தனையோ இராணுவ காவலரன்கள் இராணுவ ரோந்துகள் இராணுவ மினிமுகாம்கள் இவைகளை   மிகவும் அவதானத்துடன் செல்லவேண்டும்.அதே நேரம்சின்னத் தவறாகிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அதேவேளைஎதிரியும் உசாராகிவிடுவான் சிறுகச் சிறுக சேர்த்த   அசோக் தலைமையிலான அணியின் வேவுத்தகவலின் அடிப்படையில்பலாலி விமான நிலையம் மீது ஒரு தாக்குதல் மேற்கொள்வதற்கான திட்டம் தீட்டப்பட்டு அணிகள் புறப்பட்டுசென்று கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக இராணுவத்தூடனான நேரடி மோதலில் பல வெற்றிகளுக்கு வேவுத்தகவல்களை மிகத் துல்லியமாக பெற்றுத்தந்த மேஐர் அசோக் 02 .08.19994அன்று வீரச்சாவடைந்தார்.இருப்பினும்  இவர்  இவர் கூட்டிச் சென்ற  கரும்புலிகள்தமது இலக்கை வெற்றிகரமாக அழித்து வீரச்சாவடைந்தனர்.           அசோக்கின் சகோதரி 26.06.2000அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வெடமருந்து ஏற்றிச் சென்ற  உகண கப்பலை மூழ்கடித்து வீரச்சாவடைந்த கடற்கரும்புலி மேஐர் சந்தனா ஆகும்.     எழுத்துருவாக்கம் - சு.குணா.   https://www.thaarakam.com/news/5b236bd2-2e34-496c-aba1-0af6c0b34d47
  • அளவற்ற நன்மைகளை  தரும் கிருத்திகை நாள் விரதம்       பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள். தண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள் முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம் தியானம் கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும். இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவுண்ண வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும். கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும். மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும். கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள் என்பது கருத்து. இவ்வளவு பெருமை வாய்ந்தது கிருத்திகா நட்சத்திரம்.
  • தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் கூடிய போலியான நைக் காலணி! சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் கூடிய காலணிகள் என வெளியிடப்படும் வீடியோவில் உள்ளது போலியான நைக் (NIKE) காலணிகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நைக் (NIKE) சின்னம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் தாங்கிய ஒரு ஜோடி காலணிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியமை தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ள காலணிகள் நைக் (NIKE) நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை என, NIKE Inc நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக, அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் புலமைச் சொத்துக்களின் துஷ்பிரயோகம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நிறுவனத்தின் நடைமுறைக்கு ஏற்ப பொருத்தமான முன்னெடுப்புகள் நடைமுறைப்படுத்தப்படுமென NIKE, Inc நிறுவனம் அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக, வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. https://newuthayan.com/தமிழீழ-விடுதலைப்-புலிகளி/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.