Jump to content

கரும்புத் தோட்டத்தில் விவசாயம் - விரும்புவோருக்கு மணல் அனுமதி: அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள கரும்புத் தோட்டக் காணியில் உடனடியாக விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், மணல் அகழ்வதற்கான அனுமதிகளை வழங்குவதன் மூலம் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், மாவட்ட செயலகத்தில் இன்று (18.09.2021) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்றது. 

கரும்பு தோட்டமாக அடையாளப்படுத்தப்படுகின்ற சுமார் 196 ஏக்கர் விஸ்தீரனமான நிலப்பரப்பு, நீண்ட காலமாக சரியான பராமரிப்பு இன்றி காணப்படுகின்றது.

குறித்த காணியில் பயிர்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கு அந்நப் பிரதேசத்தினை சேர்ந்த சமூக அமைப்புக்கள் ஆர்வம் வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், இன்றைய கூடடத்தில்  அதுதொடர்பாக ஆராயந்து தீரமானம் மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகின்றவர்கள் தேவையான அனுமதிகளைப் பெற்று உடனடியாக சிறுபோக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் முழுமையாக கரும்புத் தோட்டம்  உருவாக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கின்ற போதிலும், உடனடியாக அதனை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும்.

எனவே, உப உணவுப் பயிர்செய்கையை மேற்கொள்வதுடன் படிப்படியாக கரும்புப் செய்கை அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கு பொருத்தமான இடங்களை தெரிவு செய்து, தேவையானளவு அனுமதிகளை விரும்புகின்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் என்ற அடிப்படையில், ஒரு வார காலப் பகுதிக்குள் குறித்த அனுமதிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கரும்புத் தோட்டத்தில்  விவசாயம் - விரும்புவோருக்கு மணல் அனுமதி: அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

மணல் அகழ்வதற்கு பொருத்தமான இடங்களை தெரிவு செய்து, தேவையானளவு அனுமதிகளை விரும்புகின்றவர்களுக்கு வழங்குவதன் மூலம்

இந்தத் தொழிலை இவர் கைவிடவே மாட்டார். கடற்தொழில் அமைச்சருக்கு இங்கு என்ன வேலை? எல்லாவற்றுக்குள்ளும் தலை வைத்து, தான் செய்தேன் என்று படம் பிடிக்க உதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புத்தோட்டத்தின் சொந்தக்காரன் யார், எதற்காக நிலம் பயன்பாடின்றி விடப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தபின்னர் நல்ல காரணங்களின் அடிப்படையில் வெளியார் பயன்பாட்டுக்கு உரிமையாளரின் அனுமதியை கோரி பெறவேண்டும். தனியார் நிலங்களை வெறுமனே விடப்பட்டுள்ள காணிகள் என்பதற்காக அவற்றை அத்துமீறி பயன்படுத்தும் அடாவடித்தனத்திற்கு டக்கிளஸ் என்றுமே ஒரு முன்னுதாரணம். யாழில் சிறீதர் திரையரங்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதா தெரியவில்லை. 

சிங்கள பவுத்த இனவெறியாளர்களின் அதே கொள்கைகள், நிலைபாடுகளைத்தான் மாண்புமிகு மீன்பிடி அமைச்சரும் பின்பற்றி வருகிறார். கடலில் காணிபிடிக்க முடியாதென்பதால் தரையில் தனது செயற்பாடுகளை அமைச்சர் சைட் பிசினஸ் ஆக ஆரம்பித்து விட்டார். போதாகுறைக்கு இலங்கை கடலுக்கு இப்போது கஷ்டமான காலமும் கூட.

கடலுக்குள் மீன்குஞ்சு விடுறார், ஆமை விடுறார், இரால் விடுறார் இதோ இத்துப்போன பஸ் வண்டிகளையும் கொண்டுபோய் கடலுக்குள் இறக்கியும் விட்டார். அண்மைகாலங்களில் வழக்கதிலும் அதிகமான செய்திகள் படங்களுடன் இணையங்களில்  வெளிவர ஏற்பாடும் செய்கிறார். சிறந்த மக்கள் தலைவனாக ஒரு மாய விம்பத்தை கட்டியெழுப்ப வேறு என்ன வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.