Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

துறைமுக நகர் குறித்து இந்தியா இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(லியோ நிரோஷ தர்ஷன்)

கொழும்பு துறைமுக நகரத்துடனான சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து இலங்கை தனது இருதரப்பு ஒத்துழைப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.

கடல்சார் பாதுகாப்பை உள்ளடக்கிய  பகிரப்பட்ட பரஸ்பர இருதரப்பு சிறப்பு ஒத்துழைப்பை நினைவில் கொள்ள வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

டெல்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர்அரிந்தம் பக்ஷி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தியாவின் பாதுகாப்பை கருதி துறைமுக நகரின் நகர்வுகள் குறித்து அவதானித்து வருகின்றோம். 

குறிப்பாக துறைமுக நகர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகுமா என்ற கோணத்தில் அவதானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

துறைமுக நகர் குறித்து இந்தியா இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை  | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பிழம்பு said:

துறைமுக நகர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகுமா என்ற கோணத்தில் அவதானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதாவது உங்களை சுற்றி இருக்கும் நாடுகள் எல்லாம் உங்களது பாதுகாப்பை அனுசரிச்சு நடந்து கொள்ள வேண்டும்.

ஆனால் நீங்கள் எவரோட பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாமல் நீங்கள் நினைத்ததை அவர்கள் நாடுகளில் அரங்கேற்ற பார்ப்பீர்கள் அப்படியா?

இந்த எகத்தாளத்திற்காவது சீன மொழியை கற்று சீனர்களுடன் ஐக்கியமாகிவிடலாம் .

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த எச்சரிக்கைகான பதில்தான் ரோ அவசரமாக இலங்கைக்கு பல வருடங்களின் பின் தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செய்த வயோதிப சேனாதிபதி மீதான நேற்றைய சிஐடி விசாரணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சன்மாஸ்டர் இந்தியாவுக்காக கதை சொல்கிறார்.

 

 

இந்த நூடில்ஸ் கதை சண் மாஸ்டர் இங்க இருந்துதான் எடுத்தவர்.🤣

 

  • Haha 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜெர்மனியில் ஒரு சில புள்ளிகளால் இலவச மருத்துக்கல்வியைப் பெற முடியாமல்....  காத்திருக்கவும் விரும்பாமல்.... அதைத்தான் கற்பேன்... என்று விடாப்பிடியாக நின்ற ஒருவருக்கான.....  மருத்துவத்தை படிப்பதற்கான ஒரு வருடக்  கட்டணம் 12.௦௦௦ யூரோ 7 வருடங்கள்  84.௦௦௦ யூரோ ( 6 வருடம் தான் பொதுவானது ) வாழ்க்கைச் செலவு, வாடகை  ஒரு மாதம் 1000 யூரோ ஏழு வருடங்கள்  84  மாதம் 84.௦௦௦ யூரோ அதில் அரச உதவித் தொகை 42.௦௦௦ யூரோ( அதுவும் அவர்  திருப்பித் தரவேண்டும் அரசுக்கு ) சொச்சம் போனால் மிகுதி 112.௦௦௦ யூரோ இத்தனை காசைக் கட்டிப் படித்த மருத்துவத் துறையைக் கை விட்டால்  ( அப்படி நடக்கக்கூடாது என்று இப்போதும் நினைப்பேன் ) கட்டியவர்கள்  மனம் என்ன பாடுபடும். இது  நாடுகளுக்கும் பொருந்தும் .
    • இந்த திரியில் எழுப்பபட்ட இன்னொரு விடயம் பிரித்தானிய பல்கலைகழகங்கள் தனியார் நிறுவனங்களே - என்பது. பக்கிங்ஹாம், ரீஜெண்ட், யூனிவர்சிட்டி ஒப் லோ, இன்னும் ஐந்து ஆறு யூனிகள்தான் முழுக்க முழுக்க தனியார் யூனிகள் (இவற்றில் மருத்துவம் கற்பிப்பதில்லை என உறுதியாக நம்புகிறேன் - ஆராயவில்லை).  மிகுதி எல்லாம் சுயாட்சி கட்டமைப்புகள். தனியார் பகுதியின் (private sector) சில பண்புகளை கொண்டும் (பலதை கொள்ளாமலும்). அரசாங்க பகுதியின் (public sector) பல பண்புகளை கொண்டும் (சிலதை கொள்ளாமலும்) இயங்குவன. கீழே ஒரு துணைவேந்தரின் பதிவு. https://www.theguardian.com/education/2006/jun/20/highereducation.comment
    • நிச்சயமாக ஒருவர் மருத்துவம் படிக்கச் செல்லும் பொது அவரின் பின்னால் இன்னொருவர் காத்திருக்கின்றார் . ஆகவே முன்யோசனையுடன் செல்ல வேண்டும் அதற்கான விருப்பும் சேவை மனப்பான்மையும் கொள்ளவேண்டும். உதவித் தொகை பெற்றுப் படிப்பவர்கள் கட்டாயம் சில கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ளவேண்டும். மருத்துவராகத் தொடர்ந்து வேலை செய்ய முடியாதவர்கள் ( வேலையழுத்தம், குடும்பம், மன அழுத்தம் ) இவர்களுக்கு என்ன செய்யலாம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். மற்றையவர்கள் வேறு தொழில்களை பணம்  ஈட்டும் குறிக்கோளுடன் நாடும்போது கடனையும் அவர் பெற்ற  உதவித்  தொகையையும் திருப்பித் தருவதே முறை. மருத்துவத் துறையில் கட்டணமாகக் கட்டப்படும் தொகையை விட அதிகமான தொகை பராமரிப்பு மற்றும் இன்னபிற செலவுகள்... நீங்கள் கூறியது சரியே. முடிவாக ஒரு வைத்தியராக தனது கடமையைத் தொடங்கி   நாடுவிட்டு நாடு சென்று பணமீட்ட முயற்சிப்பவர்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை விதிப்பது தவறல்ல. இலங்கை  போன்ற நாடுகளில் மட்டும் அல்ல இலவசக் கல்வியைப் பெற்ற மருத்துவர்கள் குறைந்த பட்ஷம் சில  வருடங்கள் அந்த அந்த நாடுகளிலேயே  சேவையாற்ற வேண்டும் என்ற கருத்தை நானும் வலியுறுத்துகின்றேன். மருத்துவத்துறை பணமீட்டும் ஒரு தொழில் என்பதை விடுத்து அது ஒரு சேவை என நினைப்பவர்கள் தொடர்ந்தும் அந்தத் தொழிலிலேயே நிற்பார்கள். அப்படியானவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தல் ஒரு சிறப்பான அம்சம்.      .      
    • பச்சை பச்சையாகத் தொடர்ந்து காய்த்து யாழைக் குளிரவைக்கும் தோழர் புரட்சிக்கு வாழ்த்துக்கள்!!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.