Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மட்டக்களப்பு கடல் பகுதியில் இறந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு கடல் பகுதியில் இறந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்

 
IMG-20210619-WA0014-1-696x315.jpg
 6 Views

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகளும் ஒரு டொல்பின் மீனும் இன்று  கரையொதிங்கியுள்ளது.

இன்னும் பல ஆமைகள் கடலில் மிதந்து வருவதாகதாக இன்று கடல் தொழிலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

IMG-20210619-WA0013.jpg

கடந்த 21 ஆம் திகதி எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள்  கப்பலில் தீ பரவியதிலிருந்து இதுவரை 40 இற்க்கும் மேற்பட்ட கடலாமைகளின் உடல்களும் 05 டொல்ஃபின்களின் உடல்களும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கரையொதுங்கியுள்ளன.

கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன், இறந்த நிலையில் கரையொதங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டுசென்றுள்ளனர்.

22-7.jpg

இந்நிலையில், தீ விபத்துக்குள்ளான எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து குப்பைகளை அகற்ற 2021 மே 26ஆம் திகதி ஆரம்பித்த கடற்கரை சுத்தம் செய்யும் பணிகளை கடற்படை ஏனைய பங்கேற்பாளர்களுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

உஸ்வெட்டகெய்யாவ முதல் கெபுன்கொட வரை 9 கிலோமீற்றர் பாதிப்புக்குள்ளான கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ள உஸ்வெட்டகெய்யாவ, எலெனேகொட, சரக்குவா மற்றும் கெபுன்கொட கடற்கரைப் பகுதிகள் கப்பல் குப்பைகளால் பெரிதும் மாசடைந்துள்ளன என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

IMG-20210619-WA0015.jpg

மேலும் அந்தக் கடலோரப் பகுதிகளில் கடற்படை மேற்கொண்ட துப்புரவு முயற்சிகளிலிருந்து தீ விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியேறிய 1500 தொன்களுக்கும் அதிகமான குப்பைகள் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

https://www.ilakku.org/?p=52768

 
 
 
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒருபோதும் நீக்கக்கூடாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் எங்கும் பரிந்துரைக்கவில்லை. ஒருசில தமிழ் பத்திரிகைகளில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல் முற்றிலும் பொய்யாகும் என ஆணைக்குழு நேற்று சுட்டிக்காடியது. முன்னைய ஆணைக்குழுகள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று கலாநிதி ஜஹான் பெரேரா சாட்சியமளிக்கையில் இடையில் குறுக்கிட்ட ஆணைக்குழுவின் தலைவர், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கூடாது என இடைக்கால அறிக்கையில் ஆணைக்குழு பரிந்துரை செய்திருப்பதாக ஒருசில இணையத்தளங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. இது மற்றிலும் பொய்யான செய்தியாகும் என சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் தொடர்ந்து தெளிவுபடுத்துகையில், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஆணைக்குழு இரண்டுவிதமான பரிந்துரைகளை செய்திருக்கின்றது. ஒன்று குருகிய கால திட்டம் மற்றது நீண்டகால திட்டம். குருகிய கால திட்டமாக, யாரேனும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டால், அவர் தொடர்பான பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க, அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் குழு அமைக்கப்படவேண்டும். ஆலோசனைக்குழுவின் பரிந்துரைக்கமைய  ஜனாதிபதி குறித்த நபரை தடுப்புக்காவலில் நீண்டகாலம் வைக்காமல் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடல், அதேபோன்று நீண்டகாலம் ஒருவரை தடுப்புக்காவில் வைத்துக்கொண்டிருக்காமல் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருந்தால் உடனடியாக வழக்கு தொடுக்கவும் இல்லாவிட்டால் அவரை விடுவிக்கவேண்டும் போன்ற உடடியான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என பரிந்துரை செய்திருக்கின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கூடாது என ஜனாதிபதி விசாரணைக்குழு எங்கும் பரிந்துரைக்கவில்லை | Virakesari.lk
    • 2017 இல் அரசு சிந்தித்து இருப்பதாய், நான் சொல்லி இருக்கிறேன். அவ்வளவு தான். ttps://www.gov.uk/government/news/more-undergraduate-medical-education-places "The proposals include newly trained medics serving a minimum term with the NHS, with those who leave before this time is up having to repay some of the fees that the NHS invests in them."  கருத்தை பதியும்  போது 2017 இல் அரசு சிந்தித்து இருந்ததை நான் அறியவில்லை, அதனால் , பெட்டிஷன் அவசியம் என்றே கருதினேன்.   இப்போது அறிந்து கொண்டேன். பெட்டிஷன் தேவை இல்லை. இதனால், பெட்டிஷன் பற்றிய வாதம், விவாததை மூடி விடுவோம்.  ஆனால், இந்த மருத்துவ பயிற்சி   கட்டணம், அதுக்கு எவர் பொறுப் என்பதை பற்றி, நான் சாராம்சமாக பதிந்தது, முன்பு அறிந்தவைகளில் இருந்து.  விலாவாரியாக சொன்னது, உங்களின் கேள்வியான வெளிநாட்டு மாணவரின்  செலவையும் அரசா பொறுப்பேற்கிறது என்பததற்கு. எதுவாயினும், பற்றி மருத்துவ கட்டணம் பற்றிய வாதம் முடியட்டும்.   திரி (FULLFILMENT business model) தொடரட்டும்.    
    • (எம்.மனோசித்ரா)   கொவிட் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா பிரயாணம் செய்வதற்கு தடை விதித்துள்ள 21 நாடுகளிடம் அந்த தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் குறித்த நாடுகளுடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் , கட்டார் , மலேசியா , சிங்கப்பூர் , இத்தாலி , பிலிப்பைன்ஸ் , ஜேர்மன் , நோர்வே , ஜப்பான் , அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிடமே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் விமான நிறுவனங்கள் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றுடன் இணைந்து கூட்டு வேலைத்திட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் நாட்டின் சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. கொவிட் தொற்றின் விளைவாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தடையை நீக்குங்கள் : 21 நாடுகளிடம் இலங்கை கோரிக்கை | Virakesari.lk
    • அறிவுரை... ஆகா... நன்றி... சும்மா... கொடுப்போம்... எல்லோ... உலகத்தில் இலவசமாக கிடைப்பது...  அதுவும் உங்களிடம் தராளமாக... இரவு, பகலா... 
    • ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம்🤣 பண்டைய தமிழ் கலாச்சார சின்னங்களான, ரியோ, மொக்கன் கடை, மலாயன் கபே, ஆரிய பவான் போன்றவற்றை சுத்தி காட்டும் ஒரு diving டூருக்கும் சேர்த்து புக் பண்ணினால் டிஸ்கவுண்ட் உண்டு🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.