Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஒட்டகச்சிவிங்கியை விட உயரமான காண்டாமிருகம் - 2.65 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்ததாக தகவல்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
19 ஜூன் 2021
காண்டாமிருகம்

பட மூலாதாரம்,YU CHEN

ஒரு மிகப் பெரிய காண்டாமிருக இனத்தை சீனாவின் வட மேற்குப் பகுதியில் கண்டுபிடித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது நிலத்தில் நடக்கும் மிகப் பெரிய பாலூட்டிகளில் ஒன்றாக இருந்திருக்கும் என கூறப்படுகிறது.

21 டன் எடை கொண்ட (இது நான்கு ஆப்பிரிக்க யானைகளின் எடைக்குச் சமம்) தி பராசிராதெரியம் லின்சியான்ஸ் (The Paraceratherium linxiaense) என்கிற காண்டாமிருக இனம் 26.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

கொம்பு இல்லாத அந்த காண்டாமிருகத்தினால் ஏழு மீட்டர் உயரமுள்ள மரம், செடி கொடிகளை மேய முடிந்திருக்கும் என்பதால், அது ஒட்டகச்சிவிங்கியை விட உயரமானதாக கருதப்படுகிறது.

சீனாவில் இருக்கும் கான்சு மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவத்தைக் கொண்டு இந்த புதிய காண்டாமிருக இனம் தொடர்பான விஷயங்கள் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.'கம்யூனிகேஷன் பயாலஜி' என்கிற அறிவியல் சஞ்சிகையில், கடந்த வியாழக்கிழமை இது குறித்த ஆராய்ச்சிகள் பிரசுரிக்கப்பட்டு இருக்கின்றன.

 

அதில், கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவின் வாங்ஜியாசுவான் என்கிற கிராமத்துக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவத்தை பகுப்பாய்வு செய்த போது, அது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பெரிய காண்டாமிருக இனங்களில் இருந்து, முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

முழுமையாக பாதுகாக்கப்பட்டிருக்கும் இப்புதிய இன காண்டாமிருகத்தின் மண்டை ஓடு மற்றும் தாடை எலும்பை எடுத்துக் கொண்டால், அதன் மண்டை ஓடு மிகவும் மெலிதானவையாகவும், டபே (Tapir) என்கிற உயிரினத்தைப் போல அதன் மூக்குப் பகுதி மரங்களைப் பற்றுவதற்கு ஏதுவானதாக இருந்ததைக் சுட்டிக் காட்டுகிறது என தலைமை ஆராய்ச்சியாளர் மற்றும் பெய்ஜிங்கில் இருக்கும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வெர்டெப்ரேட் பேலியான்டாலஜி அண்ட் பேலியாந்த்ரோபாலஜி முனைவர் டெங் டாவ்வின் ஆராய்ச்சி கூறுகிறது.

மேலும், இப்புதிய இன காண்டாமிருகம், ஒரு காலத்தில் பாகிஸ்தானில் வாழ்ந்து வந்த பிரம்மாண்ட காண்டாமிருக இனத்துக்கு மிக நெருக்கமாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்து இருக்கிறது. ஆக இந்த காண்டாமிருக இனம் மத்திய ஆசியா முழுக்க பயணித்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

வட மேற்கு சீனா முதல் இந்தியா பாகிஸ்தான் எல்லை வரை இந்த காண்டாமிருக இனம் சுற்றித் திரிந்து இருக்கிறது என்றால், அந்த காலத்தில் திபெத் பீடபூமிப் பகுதிகளில் சில பகுதிகள் தாழ்வான பகுதிகளாக இருந்திருக்கும் என்பதை காட்டுகிறது.

"வெப்பமண்டல காலநிலை அந்த பிரம்மாண்ட காண்டாமிருகத்தை மத்திய ஆசியாவை நோக்கி நகர அனுமதித்திருக்கிறது. அந்த கலத்தில் திபெத் பீடபூமி பகுதி உயர்ந்து எழாமல் இருந்திருக்கலாம்" என பேராசிரியர் டெங் டாவ் கூறினார்.

ஒட்டகச்சிவிங்கியை விட உயரமான காண்டாமிருகம் - 2.65 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்ததாக தகவல் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மலையக சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை   மலையகத்தைச் சேர்ந்த சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் எவையுமில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், சிறுமி தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து எந்த வாக்குமூலத்தையும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர், இன்னொரு நபரே என்ன நடந்தது என வாக்குமூலம் வழங்கினார் என்று  மருத்துவர்களே குறிப்பிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சிறுமி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது நிபுணர்களின் ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/there-is-no-evidence-that-the-hill-girl-committed-suicide-national-child-protection-authority/  
  • முதியோர் துஸ்பியோகத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட வேண்டும் – யாழ் மறை மாவட்டக் குருமுதல்வர்   சிறுவர் துஸ்பிரயோகத்திற்கெதிராக குரல்கள் எழுப்பப்படுவதுபோல் முதியோர் துஸ்பியோகத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட வேண்டும் என யாழ் மறை மாவட்டக் குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். சில்லாலை புனித யாகப்பர் ஆலய திருவிழா திருப்பலி இன்று  நடைபெற்றபோது திருவிழா திருப்பலியை தலமையேற்று ஒப்புக்கொடுக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தற்போது இணையத்தளங்களில், பத்திரிகைகளில் சிறுவர் துஸ்பிரயோகம், சிறுமி கொலை தொடர்பாக செய்திகள் வெளிவருகின்றது. குறித்த சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டாள், தீயில் எரிந்துள்ளாள் என்றும் இதன்பின்னர் சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கவனயீர்புக்கள் இடம்பெற்று சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதேபோல் முதியோர் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் இந்தவிடயங்கள் கவனிக்கப்பட வேண்டும். வயோதிபர்களது மாண்புகள், முக்கியத்துவங்கள், அனுபவங்கள் மதிக்கப்பட வேண்டும் திருத்தந்தை இந்த வருடம் ஜூலை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முதியோருக்காக செபிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இனி ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதியோர்தினம் அனுஸ்டிக்கப்படும். முதியோரும் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் அவமானப் படுத்தப்படுகிறார்கள். அவர்கள் துணையில்லாது முதுமையாலும் துன்பப்படுகிறார்கள். தமது பிள்ளைகளால் துன்பப்படுத்தப்படுகிறார்கள் சொத்துக்களை பறிப்பதற்காக துன்பப்படுகிறார்கள். இவ்வாறான  முதியோர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்” என்றார்.   https://www.ilakku.org/voices-should-also-be-raised-against-the-abuse-of-the-elderly/
  • அமைதி மதத்தினர்களை குளிர்ச்சியடைய செய்கிறாராம். ஆனால் குற்றவாளிகளை ஊக்குவிக்கிறார் பாதுகாக்கிறார்.
  • அதுதான் உண்மை.        தமிழரைக்காட்டித் தமது நலனை அடைய முனையும் மேற்குலகின் மென்னழுத்தத்தைக்கூட ஏற்கமுடியாத சிங்கள ஆளும்தரப்பு ரணிலைவைத்துத் தமது நலன்களையடைய நகர்த்தியுள்ள அரசியல். இந்த அரசியலில் தமிழர்தரப்பை சம் குழுமம் இழுத்து இந்தக்குழியில் விழுத்தி மண்ணைப்போட்விட்டு நகர்வது உறுதி.
  • இவங்கள் இரண்டுபேரும் ஒரு ஊத்தைவாளி ஆக்கள் அண்ணை. மேற்கண்ட கட்டுரையினை எழுதும் அளவிற்கு இவங்களுக்கு வக்கில்லை. விடிஞ்சால் பொழுதுபட்டால் எமது தொடர்பான கேள்விகளில் ஈழத்தில் நடந்த எல்லாவற்றிற்கும் புலிகள்தான் காரணம் என்று தாளம்போட்டு பாட்டிசைக்கிற ஆக்கள்.  மேலும், இவையள் இரண்டுபேரும் தமிழ்நாட்டுக்காரர் என்பதால் தமிழ்நாட்டு அரசியல் கட்சியான திமுக-வின் தீவிர விசிறிகள். திமுக பற்றிய மறுமொழிகளில் எங்களை தேவையில்லாமல் உள்ளுக்கு இழுத்து ஏதேனும் சொறிச்சேட்டை விடுவினம்.  இவையள் இரண்டு பேரின்ர கொள்கைகள் (அவையளின்ர வாயாலே நித்தம் உரைப்பவை): தலைவர் மாமா போராடியதே தவறு. பணிந்து போயிருக்க வேண்டும்.  அத்தோடு சில நேரங்களில் 'தலைவர் மாமா வீரர், தீரர் ஆனால் மோசமான பயங்கரத்தின் மறு வடிவம்' என்ற பொருளிலும் எழுதுவினம்.  அமிர்தலிங்கம் மிகவும் நல்லவர். (புசுபுசு பூனை என்ட ரேஞ்சிற்கு எழுதுவினம்) கருணாநிதியை ஏதோ கடவுள் என்ட ரேஞ்சிற்கு எழுதுவினம். வந்த இந்தியக் காவாலிகள் மிகவும் நல்லவர்கள். தலைவர் மாமாதான் தேவையில்லாமல் அவங்களுக்கு எதிரா ஆயுதம் தூக்கினவர்.  இந்தியக் காவாலிகள் பாதக செயலகள் எதுவும் செய்யவில்லை. என்கேனும் ஓரிரண்டு சிறியவை நடந்திருக்கலாம். அவையாவும் தெரியாத்தனமாக நடந்தவை.  யாழ்ப்பாணிக்கு இந்த அழிவு தேவைதான் (அழிவுற்றது யாழ் மட்டுமோ? அப்ப கண்ணுக்கு முன்னால் அழிஞ்ச எங்கட வன்னி என்ன மிளிருதோ? கண் பிடரிக்குள் போலும்!)   மொத்தத்தில், ஒரு தமிழ்நாட்டு திமுக ஆதரவுத் தமிழனின் நிலைப்பாடு & மனநிலை (எந்தக் காலத்திலும் எங்கள் வலிகள் விளங்காத ஒரு இனம்) என்னாவோ அது இந்த ஊத்தைவாளியளின்ர வாயில் இருந்து வரும். இது மட்டுமல்ல, கோரா திமுகாவின்ர ஒட்டு மொத்த கருத்தும் இவையள் இரண்டுபேரின்ர கருத்தோடு ஒத்துப்போபவையே. அவ்வளவே! இதில் கவனிக்க வேண்டியது என்னவெண்டால், வாழ்வது ஈழத்தில், ஆனால் ஆதரவு கிந்தியாவிற்கும் திமுகாவிற்கும். இனப்பாசம் எண்டும் ஒண்டு இருக்கல்லோ!  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.