Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ரணில் வாறார்? நிலாந்தன்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ரணில் வாறார்? நிலாந்தன்!

June 20, 2021

spacer.png

 

அண்மை வாரங்களில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இரண்டு நகர்வுகள் ஈழத்தமிழர்களுக்கு உற்சாகமூட்டக்கூடியவை. அதேசமயம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடியவை. முதலாவது நகர்வு அமெரிக்கக் கொங்கிரசின் வட கரோலினாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்திருக்கும் ஒரு முன்மொழிவு. அது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தை தாயகம் என்று ஏற்றுக்கொள்ளும் ஒரு முன்மொழிவு. அது இனிமேல்தான் அமெரிக்க கொங்கிரசிலும் செனட் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் அதில் ஓர் அழுத்தப் பிரயோக நோக்கம் இருக்கிறது. அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தின் மீது ஏதோ ஒருவித அழுத்தத்தை பிரயோகிக்க விரும்புகிறது என்று பொருள். இது முதலாவது.

இரண்டாவது ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம் இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தப்போவதாக எச்சரித்திருக்கிறது. 2017ஆம் ஆண்டு அச்சலுகையை மீளப்பெற்றபோது இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு சில வாக்குறுதிகளை வழங்கியது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது அல்லது அதை அனைத்துலகத் தரத்துக்குத் திருத்துவது, மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசப் பிரகடனங்களை நடைமுறைப்படுத்து ஆகிய வாக்குறுதிகளே அவை. அவ்வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை பற்றி மீளாய்வு செய்யவேண்டும் என்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் எச்சரித்துள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்படுமாக இருந்தால் அது இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை பாதிக்கும்.ஏற்கனவே இலங்கைத்தீவு கடன் பொறிக்குள் சிக்கியிருக்கிறது. கொரோனா வைரஸ் மேலும் பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்தியிருக்கிறது. ஒருபுறம் கடன் இன்னொருபுறம் கொரோனா இரண்டுக்கும் நடுவே தடுமாறுகிறது நாடு.யுத்தத்தின் விளைவாக வீழ்ச்சியுற்ற இலங்கைத்தீவின் பொருளாதாரம் இன்றுவரையிலும் மீண்டுஎழவில்லை. யுத்தகாலத்தில் பட்ட கடன்களை தீர்க்க முடியாதிருந்த ஒரு பின்னணியில்தான் இலங்கைத்தீவு சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கியது. தொடர்ந்தும் கடனை அடைக்க கடனை வாங்குவதன் விளைவாக இலங்கைத்தீவின் பொருளாதாரம் முன்னேற முடியாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸின் தாக்கத்தால் இலங்கைக்கு வருமானம் ஈட்டித்தரும் துறைகளான உல்லாசப் பயணத்துறை தைக்கப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி,மத்திய கிழக்கில் தொழில் புரிவோரின் உழைப்பு போன்றன பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

ஒருபுறம் கடன் இன்னொருபுறம் வைரஸ். அதனால்தான் வைரசைக் கட்டுப்படுத்த முழு அளவிலான சமூக முடக்கத்துக்கு போக அரசாங்கம் தயாரில்லை. சமூகத்தை முழுமையாக முடக்கினால் அது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும். எனவே பொருளாதாரத்தை பாதிக்காத ஒரு சமூக முடக்கத்தைத்தான் அரசாங்கம் சிந்திக்கின்றது. இது சிலசமயம் வைரஸ் பெருக்கத்தை அதிகப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையும் நிறுத்தப்படுமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பலவீனமடையும். எனவே அதன்மூலம் ஐரோப்பிய நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு செய்தியை உணர்த்த முற்படுகின்றன.அதாவது சீனாவை நோக்கி செல்வதிலும் மனித உரிமைகளை மீறி செல்வதிலும் இலங்கை அரசாங்கத்துக்குள்ள வரையறைகளை உணர்த்த முற்படுகின்றன என்று எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் முன்னெடுத்து வரும் நகர்வுகளின் பின்னணியில்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மறுபடியும் நாடாளுமன்றத்துள் நுழைகிறார். யுத்தம் இலங்கைத் தீவின் இரண்டு பாரம்பரிய கட்சிகளையும் தோற்கடித்து விட்டது. இலங்கையின் பழம்பெரும் கட்சிகளான யு.என்.பியும் எஸ்.எல்.எப்.பியும் சிதைந்து போய்விட்டன. அவற்றின் சிதைவுகளில் இருந்து தாமரை பொட்டு கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் தோற்றம் பெற்றுள்ளன. இவ்வாறு சிதைந்துபோன ஒரு கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மறுபடியும் அரங்கினுள் நுழைகிறார்.

அவர் ஒரு வலிய சீவன் எல்லாத் தோல்விகளின்போதும் நெருக்கடிகளின் போதும் ஒருகல உயிரியான அமீபாவைப் போல வழுக்கி வழுக்கி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு வலிய சீவன்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கட்சி இரண்டாக உடைந்தது. சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கூட்டு உருவாகியது. அதன்பின் நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் தோல்வியைக் கண்டது. அதற்கு கிடைத்த ஒரே தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கப்போவதாக கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் கடும் தோல்வியின் பின்னணியில் தேசியப்பட்டியல் மூலம் உள்நுழைவதற்கு ரணில் தயங்கினார். தவிர சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவம் ஒரு கட்டத்துக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்றும் அவர் கருதியிருக்கலாம். எனவே தன்னுடைய காலம் வரும் வரையிலும் அவர் காத்திருந்தார் என்றும் நம்பலாம். ஆயின் இப்போது அந்த காலம் வந்துவிட்டதா?

இல்லை அப்படிக் கூறமுடியாது. ஆனால் சஜித் பிரேமதாச தனது தலைமைத்துவத்தை நிரூபிக்க தவறி விட்டார் என்பது மட்டும் பெருமளவுக்கு நிரூபணமாகியிருக்கிறது. அவர் எதிர்க்கட்சித் தலைவராக வந்ததிலிருந்து நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கவர்ச்சியான விதத்தில் தன்னை நிரூபிக்கத் தவறியிருக்கிறார். சஜித் தன்னை நிரூபிக்க தவறியமைக்கு பின்வரும் வலிமையான காரணங்கள் உண்டு.

முதலாவது சிங்கள் பௌத்த அரசியலில் காணப்படும் சாதி ஏற்றத்தாழ்வு. சிங்கள பௌத்த உயர் குழாம் அவரை அங்கீகரிக்கத் தயாரில்லை. அவர் தன் கட்சிக்குள்ளேயே போராட வேண்டியிருக்கிறது. இது ஒரு அடிப்படையான தடை. இதே தடை அவருடைய தகப்பனுக்கும் இருந்தது. ஆனால் தகப்பனை செதுக்கிய காலகட்டம் வேறு. மகனைச் செதுக்கும் காலகட்டம் வேறு.

இரண்டாவது காரணம்-யுத்த வெற்றி வாதத்துக்கு தலைமை தாங்கும் ராஜபக்சக்களை மேவி இனவாதத்துக்கு தலைமை தாங்க நாட்டில் ஒருவராலும் முடியாதிருப்பது. இனவாதத்தை கையில் எடுத்தால்தான் ராஜபக்சக்களை சமாளிக்கலாம். ஆனால் அது விடயத்திலும் சஜித் பிரேமதாச வெற்றிபெற முடியவில்லை. யுத்த வெற்றி வாதம் காரணமாக தாமரை மொட்டு கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கிறது. அந்த பலத்தை உடைக்க எந்த ஒரு எதிர்க்கட்சியாலும் முடியவில்லை.

மூன்றாவது காரணம். உலகப் பொதுவான கொரோன வைரஸ். அதுவும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு தடைதான். அரசாங்கத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி வீதியில் இறக்குவதற்கு வைரஸ் ஒரு தடையாக இருக்கிறது. உலகம் முழுவதுமே மக்கள் எழுச்சிகளையும் திரட்சிகளையும் வைரஸ் நீர்த்துப்போகச் செய்திருக்கிறது. நல்ல உதாரணம் ஹொங்கொங்கில் நடந்த போராட்டம். எனவே வைரஸ் இது விடயத்தில் அரசுகளுக்கே அதிகம் சேவகம் செய்திருக்கிறது. இதுவும் சஜித் தனது தலைமைத்துவத்தை நிரூபிக்க முடியாமல் போனதற்கு ஒரு காரணம்தான்.

இதுபோன்ற பல காரணங்களினாலும் ஓர் எதிர்க்கட்சி தலைவராக சஜித் சோபிக்கத் தவறிவிட்டார். இந்த இடையூட்டுக்குள்தான் ரணில் நாடாளுமன்றத்துக்குள் வருகிறார். சஜித்தின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பானது சம்பிக்க ரணவக்க போன்றோரை இணைத்துக்கொண்டு ஐக்கிய மக்கள் கூட்டணியாக எழுச்சி பெறக்கூடிய வாய்ப்புக்கள் தொடர்பில் உரையாடப்படும் ஒரு பின்னணியில் ரணில் நாடாளுமன்றத்துக்குள் வருகிறார்.

இலங்கைத்தீவில் இருக்கக்கூடிய ஏனைய எந்தத் தலைவரையும் விட ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஒரு திரட்சியை ஏற்படுத்த தேவையான தகுதி ரணிலுக்கு உண்டு என்று மேற்கு நாடுகள் நம்பக்கூடும். உருவாகக்கூடிய புதிய கூட்டுக்கு அவர் ஒன்றில் தலைமை தாங்கலாம் அல்லது முன்னைய ஆட்சி மாற்றத்தின் போது சந்திரிக்கா செயற்பட்டதை போன்று ஒரு நொதியமாகச் செயல்படலாம். அவருடைய பாத்திரம் எப்படிப்பட்டதாகவும் அமையலாம். ஆனால் அவரை அரங்கில் செயற்படு நிலையில் வைத்திருக்க வேண்டிய தேவை மேற்கிற்கு உண்டு.

ராஜபக்சக்களின் யுத்தவெற்றி வாதம் எனப்படுவது 2009க்கு பின்னரான இனவாதத்தின் புதிய வளர்ச்சி. அதை தோற்கடிப்பதற்கு தேர்தல் அரசியலில் ஒரே ஒரு கூட்டினால்தான் முடியும். அது என்னவெனில் இலங்கைத் தீவில் உள்ள மூன்று இன மக்களும் சேர்ந்துருவாக்கும் ஒரு கூட்டு. அதிலும் குறிப்பாக யுத்தவெற்றி வாதத்தின் பங்காளிகள் மத்தியிலிருந்து ஒரு பகுதியை உடைத்து எடுக்கவும் வேண்டும். இதுதான் 2015இல் நடந்தது.

அந்த தோல்வியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில்தான் ராஜபக்சக்கள் தனிச் சிங்கள வாக்குகளை கேட்டு கடந்த தேர்தல்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றார்கள். எனவே இனிமேலும் அவர்களை தோற்கடிப்பதற்கு மூவினத் தன்மை பொருந்திய ஒரு கூட்டு அவசியம். அப்படி ஒரு கூட்டை உருவாக்கத்தக்க சக்தி நாட்டில் இப்பொழுது ரணிலுக்குத்தான் அதிகம் உண்டு என்று மேற்கு நாடுகள் சிந்திக்கின்றனவா? ஆனால்,2015இல் நடந்தது மீண்டும் ஒரு தடவை நடப்பதற்கு ராஜபக்சக்கள் இடம் கொடுப்பார்களா? அல்லது சீனா இடம் கொடுக்குமா? என்ற கேள்விகளுக்கு விடை கண்டால்தான் ஒரு ஆட்சி மாற்றத்தை குறித்து சிந்திக்க முடியும்.

கடனும் வைரஸும் அரசாங்கத்தை சிங்கள மக்கள் முன் அம்பலப்படுத்தி விட்டன. பொருட்களின் விலைகள் ஏறிக்கொண்டு போகின்றன. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அள்ளிக்கொடுத்த மக்கள் இப்பொழுது அரசாங்கத்தின் மீது கடுமையான அதிருப்தியோடு காணப்படுகிறார்கள்.. ஆனால் இங்குள்ள பிரச்சனை என்னவென்றால் இரண்டு வைரஸ்களை முன்னிறுத்தி அரசாங்கம் சிங்கள-பௌத்த ஆதரவுத் தளத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதே.

முதலாவது வைரஸ் இனவாதம்.அதுதான் யுத்தவெற்றி வாதம். யுத்த வெற்றி வாதத்தை முன் நிறுத்தி அதன் மூலம் எல்லாப் பிரச்சினைகளையும் கடந்து போகலாம் என்பதே இலங்கைத்தீவின் நவீன அரசியல் அனுபவமாக காணப்படுகிறது. அதை ராஜபக்சக்கள் வெற்றிகரமாக செய்ய முடியும். ஏனெனில் யாரும் பெற்றுக்கொடுத்திராத ஒரு யுத்த வெற்றியை அவர்கள் சிங்கள மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். எனவே இந்த முதலாவது வைரஸ் வீரியம் இழக்காத வரையிலும் ராஜபக்சக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு பலமான கூட்டணியை ஏற்படுத்தினாலும் அது நீண்ட காலத்துக்கு தாக்குப் பிடிக்குமா?

இரண்டாவது வைரஸ் உண்மையான வைரஸ்.கொரோனா. இது எதிர்க்கட்சிகள் ஒரு திரட்சிக்கு போவதற்கு தடையாக காணப்படுகிறது. இந்த இரண்டு வைரஸ்களின் காரணமாகவும் இலங்கை தீவில் ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஒரு திரட்சியை ஏற்படுத்துவதில் வரையரைகள் உண்டு. இவ்வாறான ஒரு பின்னணியில்தான் ரணில் மறுபடியும் களமிறக்கப்பட்டிருக்கின்றார்.

ஆனால்,மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் இலங்கை அரசாங்கத்தை சீனாவிடமிருந்து பிரிக்கப் போதுமானவை அல்ல என்பதை கடந்த காலம் நிரூபித்திருக்கிறது. தொடர்ந்தும் ராஜபக்சக்களை நெருக்கினால் அவர்கள் மேலும்மேலும் சீனாவை நோக்கி போவார்கள். ஏனெனில் இலங்கைத்தீவின் மிகவும் சிறிய பொருளாதாரத்தைக் கடன்சுமையில் இருந்து காப்பாற்றுவது சீனாவின் மிகப் பிரம்மாண்டமான பொருளாதாரத்துக்கு ஒரு பொருட்டேயல்ல. எனவே சீனா தொடர்ந்தும் ராஜபக்சக்களைப் பாதுகாக்கும். மேற்கிடமிருந்து வரக்கூடிய எந்த ஓர் அழுத்தமும் குறிப்பாக இன்னும் இரண்டு மாதங்களில் ஐநாவில் உருவாக்கப்படவிருக்கும் போர்க்குற்றம் தொடர்பான தகவல் திரட்டுவதற்கான பொறிமுறையும் இலங்கைதீவில் யுத்தவெற்றி வாதத்தை அப்டேட் செய்யவே உதவும். எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் ரணிலின் வருகை உடனடிக்கு ராஜபக்ஷக்களுக்கு அல்ல சஜித்துக்குத்தான் நெருக்கடியை ஏற்படுத்தும்.

 

https://globaltamilnews.net/2021/162529

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ரணில் வாறார்?

ரணில் எப்பவும் சும்மா வரமாட்டார்.

கையில கோடாரியோடு தான் வருவார்.

இந்த தடவை யாரை பிழக்க போகிறார்?

சமாதான தூதுவராக அமெரிக்கா ஐரோப்பாவுக்கும் போவாரோ?

 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By கிருபன்
   பசில் ஒரு மந்திரவாதியில்லை ? நிலாந்தன்.
   July 25, 2021

   அமெரிக்கா வழங்கிய மிலேனியம் சலேன்ச் உதவித்தொகையை நிராகரித்த ஒரு அரசாங்கம் அமெரிக்காவின் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்சவை நிதியமைச்சராக நியமித்திருக்கிறது. இதை அகமுரண் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது மேற்கு நாடுகளோடு சுதாகரித்துக்கொள்ளும் ஓர் உத்தி என்று எடுத்துக் கொள்வதா ?
   கடந்த சில வாரங்களாக இலங்கை அரசாங்கம் மேற்கு நாடுகளைச் சமாளிக்கும் விதத்தில் சில நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தாவிட்டால் அல்லது அகற்றாவிட்டால் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்காது என்ற தொனிப்பட எச்சரிக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதைத்தொடர்ந்து இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு ஒரு குழுவை நியமித்தது. இது முதலாவது கட்டம்.
   இரண்டாவது கட்டம் பலவிதமான ஊகங்களின் மத்தியில் அமெரிக்காவிற்கு சென்று திரும்பிய பசில் ராஜபக்சவுக்கு நிதி அமைச்சு வழங்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் இரட்டை பிரஜாவுரிமை பெற்ற ஒருவரை இவ்வாறு நிதியமைச்சராக நியமித்ததன்மூலம் அரசாங்கம் மேற்கு நாடுகளுக்கு சாதகமான ஒரு சமிக்ஞையைக் காட்டுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. மேற்கு நாடுகள் ஓர் ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கும் ஒரு பின்னணியில் ஆட்சி மாற்றத்திற்கு பதிலாக ராஜபக்சக்கள் ஒர் ஆளை மாற்றியிருக்கிறார்களா ?
   ஆனால் பஸில் வந்து என்ன செய்யப்போகிறார்? ஏற்கனவே ஐந்து ராஜபக்சக்கள் செய்யாத எதை அவர் செய்வார் என்று எதிர்பார்ப்பது? மூத்த மூன்று ராஜபக்சக்களில் பசில் ராஜபக்ச ஒரு ராஜதந்திர ஆளுமை என்று வர்ணிக்கப்படுகிறார். ஒரு புறம் அவரை 10 வீதம் கமிஷன் எடுப்பவர் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இன்னொருபுறம் திரை மறைவில் காய்களை நகர்த்தி நினைத்த காரியத்தை கச்சிதமாக முடிப்பவர் என்று அவரைப் பற்றி ஒரு பிம்பம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் பஸில் நிதியமைச்சராக வந்ததனால் சரிந்து விழும் பொருளாதாரத்தை நிமிர்த்தக் கூடியதாக இருக்குமா?
   நிச்சயமாக இல்லை. ஏனெனில் இலங்கைத்தீவின் பொருளாதாரம் எப்பொழுது சரியத் தொடங்கியது? இலங்கைத் தீவில் இனங்களுக்கிடையே அமைதியின்மை ஏற்பட்டபோதுதான் அந்தச் சரிவு ஏற்படத் தொடங்கியது. 1960களில் சிங்கப்பூரை விட முன்னிலையில் நின்ற ஒரு தீவு இப்பொழுது பங்களாதேசிடம் கடன் வாங்கும் ஒரு நிலைமை வந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் இனப்பிரச்சினைதான். தென் ஆசியாவில் முதன் முதலாக நாட்டை திறந்த சந்தை பொருளாதாரத்துக்கு திறந்து விட்டவர் ஜே.ஆர் ஜெயவர்த்தனதான். ஆனால் 78ஆம் ஆண்டு திறந்த சந்தைக்கு திறந்துவிடப்பட்ட இலங்கைத்தீவு கிட்டத்தட்ட 43 ஆண்டுகளின் பின் எங்கே நிற்கின்றது ?திறந்த சந்தை பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்ட ஏனைய வறிய நாடுகள் முன்னேறிய அளவுக்கு இலங்கைதீவினால் முன்னேற முடியவில்லை. காரணம் மிகவும் எளிமையானது. இனப் பிரச்சினைதான் அடிப்படைக் காரணம். தீர்க்கப்படாத இனப்பிரச்சினையே எல்லாப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் காரணம்.
   இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும் இனப்பிரச்சினை பொருளாதார பிரச்சினையின் மீது பிரதிபலித்ததா? அல்லது பொருளாதார பிரச்சினை இனப்பிரச்சினையின் மீது பிரதிபலித்ததா?
   பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்தபின் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் இரண்டு விடயங்களில் தோல்வியடைந்தார்கள். ஒன்று பல்லினத்தன்மை மிக்க ஒரு தீவை கட்டியெழுப்புவது. இரண்டாவது சுதேச நோக்கு நிலையிலிருந்து பொருளாதாரத்தை கட்டி எழுப்புவது. அதாவது காலனித்துவ நோக்கு நிலையிலிருந்து கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்திற்கு மாற்றீடாக இலங்கை நோக்கு நிலையில் இருந்து ஒரு சுதேச பொருளாதாரத்தை கட்டி எழுப்புவது

   இவை இரண்டிலும் அடைந்த தோல்விகளின் விளைவே ஜேவிபியின் முதலாவது ஆயுதக் கிளர்ச்சியாகும். அதன்பின் பொருளாதார பிரச்சினைகளை எதிர் கொள்வதற்காக ஜெயவர்த்தனா 1978இல் நாட்டை திறந்த சந்தை பொருளாதாரத்திற்கு திறந்துவிட்டார். ஆனால் அது கெடுபிடிப் போர்க்காலம். மேற்கின் விசுவாசியான ஜெயவர்த்தனா நாட்டை மேற்கை நோக்கித் திறந்துவிட அதற்கு எதிராக சோவியத் சார்பு இந்தியா இனப்பிரச்சினையில் தலையிட்டது. இதன் விளைவாக இனப்பிரச்சினை அடுத்தகட்ட வளர்ச்சியை அடைந்தது. இனப்பிரச்சினையின் வளர்ச்சியோடு பொருளாதாரம் முற்றாகப் படுத்துவிட்டது. இனப்பிரச்சினை உள்ளவரை பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை.
   அப்படி என்றால் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின் பொருளாதாரம் செழித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக 2009க்கு பின்னர் தான் நாடு சீனாவின் கடன் பொறிக்குள் விழுந்தது. அப்படி என்றால் என்ன நடந்தது? அங்கேயும் மிக எளிமையான ஒரு விடை உண்டு. இனப்பிரச்சினை தான் காரணம். 2009இல் தோற்கடிக்கப்பட்டது ஆயுதப் போராட்டமதான். அது ஒரு காரணம் அல்ல. அது ஒரு விளைவு. காரணம் இன ஒடுக்குமுறைதான். இன ஒடுக்குமுறையின் விகார வடிவம்தான் ஆயுதப்போராட்டத்தை தோற்கடித்தது. ஓர் இனப்படுகொலை மூலம் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டது. எனவே 200இல் அவர்கள் பெற்ற யுத்த வெற்றி என்பது அதன் இயல்பிலேயே ஓர் அரசியல் வெற்றியாக மாற்ற முடியாத ஒன்றாக இருந்தது. ஏனெனில் அது இனப்படுகொலையில் இருந்து பிரிக்கப்படவியலாத ஒரு வெற்றியாகும்.
   இவ்வாறு யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற முடியாத ராஜபக்சக்கள் அந்த யுத்த வெற்றியை ஒரு தேர்தல் முதலீடாக மாற்றினார்கள். அதுதான் யுத்த வெற்றி வாதம். இங்கிருந்துதான் 2009க்குப் பின்னரான பொருளாதாரத் தோல்விகள் தொடங்கின. யுத்த வெற்றியை ஓர் அரசியல் வெற்றியாக மாற்றினால்தான் அந்த அரசியல் வெற்றியை ஒரு பொருளாதார வெற்றியாக மாற்றலாம். அரசியல் ஸ்திரம் இல்லையென்றால் வெளியிலிருந்து முதலீடுகள் வராது. பொருளாதாரத்தை நிமிர்த்த முடியாது. இதுதான் கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுதான் பொருளாதாரம் தொடர்ந்தும் சரியக் காரணம்.
   இவ்வாறானதொரு பின்னணியில்தான் ஈஸ்டர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதுவும் பொருளாதாரத்தை பாதித்தது. முஸ்லிம்களை தவிர்த்துவிட்டு இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. ஈஸ்டர் குண்டு வெடிப்பானது முஸ்லிம்களோடு இணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் வரையறைகளை ஏற்படுத்தியது. அதன்பின் வைரஸ் தொற்று ஏற்பட்டது. அது பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு வீழ்த்தியது. இப்பொழுதும் இலங்கை தீவு ஒருபுறம் வைரஸ் இன்னொருபுறம் கடன் பொறி இரண்டுக்குமிடையே சிக்கியிருக்கிறது.
   இந்த சிக்கலிலிருந்து இலங்கைதீவை விடுவிக்க ஒரு மீட்பராக பஸில் உள்ளே கொண்டு வரப்படுவதாக ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படுகிறது. ஆனால் ஒரு பஸில் என்ன ஆயிரம் பசில்கள் வந்தாலும் சரிந்து விழும் பொருளாதாரத்தை நிமிர்த்த முடியாது. ஏனென்றால் பொருளாதாரத்தை நிமிர்த்துவது என்பதை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்றால் யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றுவதில் இருந்துதான். அதை ராஜபக்சக்கள் செய்வார்களா? நிச்சயமாக முடியாது. ஏனென்றால் பசில் ராஜபக்சவை உள்ளே கொண்டு வந்ததன் பிரதான நோக்கமே வம்ச ஆட்சியை பாதுகாப்பதுதான். மகிந்த ராஜபக்ச உடல்ரீதியாக பலங்குன்றும்போது பிரதமர் பதவியை பசிலுக்கு வழங்கி குடும்ப ஆட்சியை அடுத்தகட்டத்துக்கு பாதுகாப்பதே பசிலை உள்ளே கொண்டு வந்ததன் பிரதான நோக்கமாகும். ராஜபக்களைப் பொறுத்தவரை குடும்ப ஆட்சியை பாதுகாப்பது என்பது யுத்த வெற்றி வாதத்தை அடுத்தகட்டத்துக்கு அப்டேட் பண்ணுவதுதான். யுத்த வெற்றி வாதத்தை அப்டேட் பண்ணுவது என்பது யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றத் தயாரற்ற ஓர் அரசியல்தான். எனவே பசிலைக் கொண்டு வந்து அரசியல் அற்புதங்களை நிகழ்த்த முடியுமா?
   மாறாக பசிலின் வருகையால் ஒரு மாற்றம் நிகழ்கிறது என்ற தோற்றத்தை கட்டியெழுப்பும் நோக்கத்தோடு ராஜபக்சக்கள் அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் சில சமயோசிதமான சுதாகரிப்புக்களைக் குறித்து சிந்திக்கக்கூடும். குறிப்பாக ஐநாவின் நிலைமாறுகால நீதிப் பொறிமுறை தொடர்பில் அவர்கள் உள்நாட்டு வடிவிலான ஒரு நிலைமாறுகால நீதிப் பொறிமுறை குறித்து சுதாகரிப்புக்கள் எதையாவது செய்யக்கூடும்.
   ஏற்கனவே அப்படிப்பட்ட சுதாரிப்புக்கான வாய்ப்புகளை அவர்கள் திறந்து வைத்திருக்கிறார்கள். நிலைமாறுகால நீதியின் கீழ் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகமும் இழப்பீட்டு நீதிக்கான அலுவலகமும் தொடர்ந்தும் இயங்குகின்றன. எனவே நிலைமாறுகால நீதிக்கான வாய்ப்புக்களை அவர்கள் ஒரு தோற்றத்துக்காகவேனும் பேணி வருகிறார்கள். அதை வைத்துக்கொண்டு அந்த வழியில் அவர்கள் புதிய முன்னேற்றங்களை காட்டக் கூடும்.
   ஆனால் என்னதான் முன்னேற்றங்களைக் காட்டினாலும் வரும் செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கான ஆதாரங்களையும் தகவல்களையும் திரட்டும் பொறிமுறையை அவர்களால் தடுத்து நிறுத்த முடியுமா ? அது கடந்த ஜெனிவாத் தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்பட விருக்கும் ஒரு பொறி முறையாகும். அந்த பொறிமுறையை இப்பொழுது அவர்கள் முனைப்பு காட்டும் அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகளின் மூலம் தடுத்து நிறுத்த முடியாது என்பதே இலங்கை பொறுத்து ஐநாவின் யதார்த்தம் ஆகும். எனவே அந்த பொறிமுறை வரும் செப்டம்பர் மாதம் இயங்கத் தொடங்கும்.
   அது கொழும்பில் மேற்கு நாடுகளுக்கு எதிரான உணர்வலைகளை நொதிக்கச் செய்யும். தமது யுத்தவெற்றி நாயகர்களை குற்றவாளிகளாக்கக்கூடிய ஆதாரங்களை திரட்டப்போகும் ஒரு பொறிமுறையாகவே அதனை ராஜபக்சக்கள் பார்ப்பார்கள். அவ்வாறுதான் அதை சிங்கள மக்களுக்கும் உருப்பெருக்கி காட்டுவார்கள். அதன்மூலம் நாட்டில் ஐநாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் எதிரான உணர்வலைகளை அதிகப்படுத்தலாமே தவிர தணிக்க முடியாது. எனவே இப்பொழுது அரசாங்கத்தின் முன் இருக்கும் தெரிவுகள் மிகவும் குறைந்தவையே. என்னதான் காய்களை நகர்த்தினாலும் அதற்கு வரையறைகள் உண்டு. ஏனென்றால் யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றுவதுதான் பொருளாதார வெற்றிக்கான முக்கிய முன்நிபந்தனை ஆகும். அதைச் செய்ய அரசாங்கத்தால் முடியாது. மேலும் நிலைமாறுகால நீதி தொடர்பில் மிகவும் பிந்தி ஏதும் சுதாகரிப்புக்களை செய்தாலும்கூட அது வரும் செப்டம்பர் மாதம் ஐநாவால் உருவாக்கபடவிருக்கும் பொறிமுறையை தடுத்து நிறுத்த போவதில்லை. எனவே திருப்பகரமான மாற்றங்களை ஏற்படுத்துவதென்றால் பசிலிடம் ஏதும் மந்திரக்கோல் இருக்கவேண்டும்.
    
   https://globaltamilnews.net/2021/163830
    
  • By கிருபன்
   தண்டனையாக மாறிய தனிமைப்படுத்தல் ? நிலாந்தன்.
   July 18, 2021

   பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யப் போவதாக கூறிவரும் அரசாங்கம் தென்னிலங்கையில் தனக்கு எதிராகப் போராடிய செயற்பாட்டாளர்களைத் தனிமைப்படுத்தற் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருந்து நேற்று முன்தினம் விடுவித்தது. பௌலிங்-bowling விளையாட்டில் ஒரே அடியில் பல இலக்குகளை விழுத்துவதைப் போல அரசாங்கமும் தனிமைப்படுத்தல் சட்டத்தை வைத்து தனது அரசியல் எதிரிகளை வீழ்துகிறது. என்ற தொனிப்பட ஒரு சிங்களக் கார்ட்டூனிஸ்ட் அண்மையில் ஒரு கார்ட்டூன் வரைந்திருக்கிறார்.
   தனிமைப்படுத்த சட்டத்தை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக எப்பொழுதோ பயன்படுத்த தொடங்கி விட்டது. வைரஸ் தொற்றுக் காலத்தை சாட்டாக வைத்து தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையை நிராகரிப்பதில் தொடங்கி தமிழ் மக்களுடைய எதிர்ப்புப் போராட்டங்களின்போது அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டத்தை பயங்கரவாதத் தடைச்சட்டம் போல பயன்படுத்தியது. இதில் விதிவிலக்காக காணப்படுவது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணிதான். அங்கேயும்கூட தொடக்கத்தில் அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் மூலம் போராட்டத்துக்கு தலைமை தாங்கக்கூடிய நபர்களை முடக்கப்பார்த்தது. ஆனால் பேரணி அதிகம் மக்கள்மயப்பட்ட காரணத்தால் ஒரு கட்டத்தில் அது அரசாங்கத்தால் தடுக்க முடியாத ஒரு எல்லைக்கு போய்விட்டது. ஆனால் அதுவல்லாத ஏனைய எல்லாப் போராட்டங்களின்போதும் அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டத்தை உபயோகித்து பெரும்பாலான போராட்டங்களை தடுத்திருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கிறது.
   இது இப்பொழுதுதான் சிங்கள கார்ட்டூனிஸ்ட்களுக்கு தெரிகின்றதா? கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளை முடக்கியதில் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கும் ஒரு பங்குண்டு. அதைவிட முக்கியமாக அவ்வாறு எதிர்ப்புக் காட்டத் தேவையான சக்தி எதிர்க்கட்சிகளிடமும் இருக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்த்துப் போராடிய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு முதலில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டார்கள். அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் அவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அதாவது நோயற்ற ஒருவரை நோயாளியாக்கும் புதிய தண்டனை முறை.
   கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தனிமைப்படுத்தல் சட்டங்களை தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் பயன்படுத்தியது. தமிழ் மக்களை ஒடுக்க அவர்களுக்கு ஒரு சட்டம் தேவை. அது பயங்கரவாத தடைச்சட்டமாகவும் இருக்கலாம் அல்லது தனிமைப்படுத்தல் சட்டமாகவும் இருக்கலாம். ஏதோ ஒரு சட்டத்தை முன்வைத்து அவர்கள் தமிழ் மக்களின் போராட்டங்களை ஒடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதைத்தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்கள் செய்தார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மறுபரிசீலனை செய்வதென்பது ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்தின் நேரடி விளைவு. ஆனால் இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்யப் போவதாகக் கூறப்படும் ஒரு காலகட்டத்தில்தான் தனிமைப்படுத்தல் சட்டத்தை உபயோகித்து போராட்டங்கள் நசுக்கப்படுகின்றன. எனவே இங்கு ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. பயங்கரவாத பயங்கரவாதத் தடைச்சட்டம் இல்லையென்றாலும் அவர்களுக்கு போராட்டங்களை நசுக்க வேறு ஏதோ ஒரு சட்டம் இருக்கும் என்பதுதான். இது எதைக் காட்டுகிறது ?
   ஒடுக்கும் மனோநிலையைத்தான் காட்டுகிறது. அந்த மனோநிலையானது எப்பொழுதும் தனக்கு வசதியாக சட்டங்களை உருவாக்கிக் கொள்ளும். எனவே இங்கே பிரச்சினை என்னவென்றால் சட்டங்கள் அல்ல. சட்டங்கள் கருவிகளே. பிரச்சினையாக இருப்பது அந்த கருவிகளைப் பயன்படுத்தி ஒடுக்கும் மனோநிலைதான்.
   அண்மையில் ஒரு சிவில் சமூக செயற்பாட்டாளர் என்னிடம் சொன்னார். “தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்திகள் புகைய தொடங்கிவிட்டன. ஒரு கட்டத்தில் அவை நெருப்பாக மூளும். அரசாங்கத்துக்கு எதிரான இத்திரட்சியில் தமிழ் மக்களும் பங்கெடுக்க வேண்டும். அப்படி பங்கெடுத்தால்தான் இந்த அரசாங்கத்தை தோற்கடிக்கலாம். சிங்கள மக்களோடு இணையாமல் இப்பொழுது தென்னிலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்பதே கடந்த கால வரலாறு” என்று.
   அதில் உண்மை உண்டு. இலங்கைத் தீவு பிரித்தானியரிடம் இருந்து விடுபட்டதிலிருந்து இன்றுவரையிலுமான தேர்தல் களத்தை பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். எந்த ஒரு கட்சியாவது பெரும் பலத்தோடு ஆட்சிக்கு வரும் பொழுது அதனை வீழ்த்துவதற்கு எதிர்கட்சிகள் அணி சேர்க்கின்றன. இந்த அணிச்சேர்க்கைகளில் தர்மம் இல்லாமல் இருக்கலாம். இந்த அணி சேர்க்கைகளில் இனவாதமும் இருக்கும். ஆனாலும் இவ்வாறான கூட்டு முன்னணிகள் மூலம்தான் மிகப் பலம் பொருந்திய ஓர் அரசாங்கம் எப்பொழுதும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிச் சேர்க்கை என்பது இலங்கை அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக காணப்படும் ஒரு போக்கு.

   வெல்லக் கடினமான பெரும்பான்மையோடு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வரும்போது அதை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டுக்குப் போகும். அப்படித்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெல்லக்கடினமான ஒரு பெரும்பான்மையைப் பெறும் பொழுது ஐக்கிய தேசிய கட்சி தமிழ் முஸ்லிம் தரப்புக்களோடு இணைந்து அதை எதிர்கொள்ளும். கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது அதுதான் நடந்தது. இந்த வரலாற்றுப் போக்கின் அடிப்படையில் சிந்திப்பவர்கள் இப்பொழுது தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் கசப்பு வெறுப்பு ஏமாற்றம் போன்றவற்றை அரசாங்கத்துக்கு எதிரான ஒரு திரட்சியாக மாற்றுவதற்கு மறுபடியும் தமிழ் முஸ்லிம் மக்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டுத் தேவை என்று உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள்.
   ஆனால் இங்கு இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும். முதலாவது, அத்தகைய ஒரு கூட்டின் மூலம் இப்போதுள்ள அரசாங்கத்தை மாற்றலாமா? என்பது. இரண்டாவது எப்படிப்பட்ட ஒரு மாற்றம் தமிழ் மக்களுக்கு தேவை ?என்பது.
   முதலாவதாக ஒரு ஆட்சிமாற்றத்துக்கான வாய்ப்புக்களைப் பார்க்கலாம். 2015ஆம் ஆண்டு அப்படி ஒரு கூட்டை உருவாக்கி தமது ஆட்சி கவிழ்க்கப்பட்ட அனுபவத்தை வைத்துத்தான் ராஜபக்சக்கள் தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற ஒரு முடிவுக்கு போனார்கள். மிகக் குறிப்பாக 2018 ஆட்சி குழப்பத்தின் போதும் மஹிந்த ராஜபக்ச நினைத்தபடி காய்களை நகர்த்த முடியாமல் போனது. அதற்கு காரணம் தமிழ் சிங்கள பிரதிநிதிகள் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதுதான். அதை இன்னும் கூர்மையாக சொன்னால் கொழும்பை யார் ஆள்வது என்பதனை தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் தீர்மானித்தார்கள்.
   அதை வைத்துதான் ராஜபக்சக்கள் ஒரு முடிவை எடுத்தார்கள். இனிமேலும் அவ்வாறு சிறிய மக்கள் கூட்டங்கள் கொழும்பை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் ஒரு நிலைமை வரக்கூடாது என்று. ஈஸ்டர் குண்டுவெடிப்பு அவர்களுடைய வழிகளை இலகுவாக்கிக் கொடுத்தது. முடிவில் மூன்றில் இரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மையைப் பெற்று அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.

   இப்பொழுது அந்தப் பெரும்பான்மை அதன் மினுக்கத்தை இழக்கத் தொடங்கியிருப்பதாகக் கருதப்படும் ஒரு பின்னணியில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் சக்திகள் புதிய கூட்டணிகளைப் பற்றிச் சிந்திப்பதாக தெரிகிறது. அதற்குரிய நகர்வுகளிலும் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் எந்த அடிப்படையில் ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கேட்கிறார்களோ அந்த அடிப்படை இப்பொழுதும் பலமாக உண்டு என்பதுதான். கொழும்பை யார் ஆள்வது என்பதை தமிழர்களும் முஸ்லிம்களும் தீர்மானிக்கக்கூடாது என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். அந்த அடிப்படையில்தான் தனிச்சிங்கள வாக்குகளை கேட்டுப் பெற்றார்கள். அவ்வாறு தனிச் சிங்கள வாக்குகளை கேட்பது என்பது பிரயோகத்தில் தமிழ் சிங்கள மக்களுக்கு எதிரானதுதான். எனவே தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் எதிரான உணர்வுகளை தொடர்ந்தும் தக்கவைப்பதன் மூலம் அவர்கள் இப்பொழுது ஆட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களையும் வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களையும் எளிதாகக் கடந்து போகலாம்.
   அதற்குரிய மிக வாய்ப்பான ஒரு சந்தர்ப்பத்தை வரும் செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் உருவாக்கப்படவிருக்கும் ஒரு பொறிமுறை அவர்களுக்கு வழங்கும். கடந்த ஜெனிவா தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்படவிருக்கும் இப்பொறிமுறையானது இலங்கை தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளையும் ஆதாரங்களையும் திரட்டுவதற்கானது. அப்பொறிமுறை வரும் செப்டம்பர் மாதம் செயற்படத் தொடங்கும். வரும் செப்டம்பர் மாதம் ஐநாவின் நிதி ஆண்டு தொடங்கும். அப்பொழுது தான் அப்பொறிமுறைக்குத் தேவையான நிதி வழங்கப்படும். அவ்வாறான ஒரு பொறிமுறை செயற்படத் தொடங்கும் பொழுது அது கொழும்பில் அதிகரித்த அளவில் பதட்டத்தையும் கொந்தளிப்பையும் ஒரு இன அலையையும் உற்பத்தி செய்யப் போதுமாக இருக்கும். அந்த இன அலையை வைத்து அரசாங்கம் இப்போது ஏற்பட்டிருக்கும் எல்லா குழப்பங்களையும் வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார எதிர்விளைவுகளையும் இலகுவாகக் கடந்து போகக் கூடியதாக இருக்குமா?இது முதலாவது

   இரண்டாவது தென்னிலங்கையில் அரசுக்கு வழங்கப்பட்ட தனிச்சிங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதன் பளபளப்பை இழக்கத் தொடங்குவதை வைத்து சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களை இணைத்து ஒரு புதிய கூட்டை உருவாக்கி ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று சிந்திப்பவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு தேவையாக இருப்பது ஆட்சி மாற்றம் அல்ல. அரசுக் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றம்தான். ஒடுக்கும் மனோநிலையில் ஏற்பட வேண்டிய மாற்றம்தான். இலங்கைத்தீவின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பு எனப்படுவது சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் ஒடுக்கும் மனோநிலையின் விளைவுதான். எனவே அந்த மனோநிலையில் மாற்றம் வேண்டும். அந்த மனோநிலையின் உபகரணம் ஆகிய அரசுக் கட்டமைப்பில் மாற்றம் வேண்டும். பல்லினத்தன்மை மிக்க பல்சமயப்பண்புமிக்க ஒரு இலங்கைதீவை கட்டியெழுப்ப தயாரற்ற எந்த ஒரு மாற்றமும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஏமாற்றமாகவே முடியும்.
    
    
   https://globaltamilnews.net/2021/163532
    
  • By கிருபன்
   வைரஸ் தொற்றுக்குள்ளும் ஓயாத வாட்கள் ? நிலாந்தன்!
   July 11, 2021

   அண்மையில் பிரபல ஈழத்து இசையமைப்பாளர் ஒருவரோடு கதைத்த்துக்கொண்டிருந்தேன். “அண்மையில் நீங்கள் இசையமைத்த ஒரு பாடலைக் கேட்டேன். நீங்கள் முன்பு இசையமைத்த பாடல்களின் தரத்துக்கு அது இல்லை. ஏன் இப்பொழுது உன்னதமான பாடல்களை எங்களால் உருவாக்க முடியவில்லை” என்று கேட்டேன்.
   1980களில் 90களில் நாடகங்களுக்கும் அரசியல் தேவைகளுக்கும் பாடல்களை உருவாக்கிய பலரும் இசையமைப்பாளர்களை உறங்க விடுவதில்லை. அவர்கள் உருவாக்கித்தரும் மெட்டுக்களை எடுத்த எடுப்பில் ஏற்றுக் கொள்வதுமில்லை. இது போதாது இது போதாது இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று கேட்டு தொடர்ச்சியாக நச்சரித்து ஒரு பாடல் அதன் உன்னதமான உச்சத்தை அடையும் வரையிலும் இசையமைப்பாளரை ஓய்ந்திருக்க விடமாட்டார்கள்.
   இப்படித்தான் அந்த காலத்தில் உன்னதமான பாடல்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இப்பொழுது அப்படி இல்லையே என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் “நீங்கள் சொன்னது போல போதாது போதாது என்று கேட்பவர்கள் இப்பொழுது குறைவு. இப்பொழுது என்னிடம் இசையமைக்க வரும் பலரும் நான் எதை இசையமைத்துக் கொடுக்கிறேனோ அதைப் பெற்றுக் கொண்டு போகிறார்கள். நானும் வெற்றிலைச் செலவுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன் உன்னதமான பாடல்களைக் கேட்டு வருபவர்கள் குறைவு “என்று.
   இந்த உரையாடலின் போக்கில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த வாள்வெட்டுச் சம்பவம் பற்றியும் கதை வந்தது. கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் உள்ள பாடல்களை உருவாக்கும் ஒரு ஸ்டூடியோ தாக்கப்பட்டுள்ளது . வாட்களை உருவியபடி தாங்கள் செய்வது ஒரு சாகசச் செயல் என்று கருதி ஒரு சிறு பகுதி இளையோர் தங்களுக்கென்று பாடல்களை உருவாக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அவர்களுடைய சாகச உணர்வுகளை நல்வழிப்படுத்தி தலைமை தாங்க எங்களுடைய அரசியல்வாதிகளால் முடியவில்லை என்று சுட்டிக்காட்டிய போது அவர் சொன்னார்… ”நீங்கள் சொன்னதுபோல போதாது போதாது என்று கூறி உன்னதமான பாடல்களை கேட்கவும் ஆட்கள் இல்லை இந்த இளைஞர்களின் சாகச உணர்வுக்கு தலைமை தாங்கவும் ஆட்கள் இல்லை” என்று.
   அண்மையில் யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட ஒரு மோதலில் ஒருவருடைய கை துண்டாடப்பட்டது. ஒரு குழுவுக்கு ஆதரவாக பாடலை உருவாக்கி யூடியூப்பில் பதிவேற்றம் செய்த ஒரு ஸ்டூடியோவே தாக்குதலின் இலக்கு என்று கூறப்படுகிறது.
   கடந்த 12 ஆண்டுகளில் பெருமளவுக்கு யாழ்ப்பாணத்திலும் சிறிதளவுக்கு யாழ்ப்பாணத்துக்கு வெளியிலும் நடந்த இதுபோன்ற தாக்குதல்களில் இதுவரையிலும் ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான தாக்குதல்களின்போது காயங்களே ஏற்பட்டுள்ளன. ஆனால் சொத்துக்களுக்கு அதிகம் சேதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே தாக்குதலாளிகளின் நோக்கம் கொலை அல்ல எதிராளியை மிரட்டுவதுதான் என்று தெரிகிறது.
   கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு பெரும் தொற்றுநோய் காலத்திலும் இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் ஓயவில்லை. குறிப்பாக அண்மையில் சமூக முடக்கம் நீக்கப்பட்ட பின்னர் மட்டும் சுமார் பத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கோண்டாவில் சம்பவத்தின் பின் போலீசார் கைப்பற்றிய ஆயுதங்களில் சில தமிழ் பக்திப் படங்களில் வரும் கடவுளர்களும் அசுரர்களும் பயன்படுத்தும் புராதன காலத்து ஆயுதங்களை ஒத்தவை. நவீன மோட்டார் சைக்கிள்களின் டிஷ் பிரேக்கை எடுத்து அதிலிருந்து அவை வார்க்கப்படுவதாக ஊடக நண்பர்கள் கூறுகிறார்கள். மேலும் போலீசார் தரும் தகவல்களின்படி கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் முப்பது வயதுக்குட்பட்டவர்கள். தாங்கள் செய்வது ஒரு குற்றச்செயல் என்பதை உணராமல் அதை ஒரு சாகசச் செயலாகக் கருதி அதற்கென்று பாடலையும் உருவாக்குகிறார்கள். ஆயின் இதை எப்படி விளங்கிக் கொள்வது?
   தாங்கள் செய்வது குற்றமா சாகசமா என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. அவர்களுக்கு யார் அதை விளங்க படுத்துவது ? நிச்சயமாக அவர்களுடைய பெற்றோர்களால் அது முடியாது. ஏனென்றால் அவர்கள் செய்வதை தடுக்கும் சக்தி தாய் தகப்பனுக்கு இருந்திருந்தால் அவர்கள் இப்படி வாட்களை ஏந்திக்கொண்டு வீதிக்கு வந்திருக்க மாட்டார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் சக்தி அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கோ அல்லது அவர்களுக்கு போதிக்கும் மதகுருக்களுக்கோ கிடையாது. அல்லது அவர்கள் பிறந்து வளர்ந்த கிராமங்களில் கருத்தை உருவாக்கவல்ல சமூகத் தலைமைகள் அல்லது உள்ளூர் தலைமைகளாலும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆசிரியர்கள் பெற்றோர் மதகுருக்கள் உள்ளூர் தலைவர்கள் போன்றவர்களால் கட்டுப்படுத்த முடியாத ஒரு வளர்ச்சிக்கு அவர்கள் போய்விட்டார்கள். அது ஒரு விகார வளர்ச்சி. மேல் சொன்ன யாருடைய செல்வாக்கின் கீழும் அவர்கள் இல்லை என்று தெரிகிறது.
   அப்படியென்றால் அவர்களை சட்டத்தால் மட்டும் கையாள முடியுமா? இல்லை. கடந்த 12 ஆண்டுகளாக சட்டத்தால் அவர்களை பொருத்தமான விதங்களில் கையாளவோ அடக்கவோ முடியவில்லை என்பதைத்தான் பார்க்கிறோம். இக்குற்றச்செயல்களில் பின்னணியில் அரசியல் நோக்கங்களைக் கொண்ட சக்திகள் இயங்குவதாக பொதுவாக ஒரு சந்தேகம் யாழ்ப்பாணத்தில் நிலவுகிறது. ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு சமூகத்தில் இளையவர்களை இலட்சியவாதத்தின் பக்கம் போகவிடாது தடுத்து திசைதிருப்பும் நோக்கத்தோடு இப்படிப்பட்ட குழுக்கள் ஊக்குவிக்கப் படுகின்றன அல்லது கண்டும் காணாமல் விடப்படுகின்றன என்று ஒரு பலமான சந்தேகம் யாழ்ப்பாணத்தில் உண்டு. போதைப்பொருள் பாவனையும் அப்படித்தான் பார்க்கப்படுகிறது. இக்குழுக்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறை போதிய அளவுக்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. எனினும் கோண்டாவில் சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையும் அரச படைகளும் இணைந்து துரிதமாக நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிகிறது.
   ஊகங்கள், வியாக்கியானங்கள் எப்படியுமிருக்கலாம். ஆனால் எல்லாவிதமான வியாக்கியானங்களுக்கும் அப்பால் இது தமிழ்ச் சமூகத்தின் பாரதூரமான வீழ்ச்சியை காட்டுகிறது. கடந்த வாரம் யாழ்ப்பான பத்திரிகைகளில் அல்லது சமூக ஊடகங்களில் அதிகம் துருத்திக்கொண்டு தெரிந்த செய்திகள் இரண்டு. ஒரு செய்தி மேற்சொன்ன வாள்வெட்டுச் செய்தி. இரண்டாவது செய்தி அந்த சம்பவத்தில் வெட்டப்பட்ட கையை உடலோடு மறுபடியும் சேர்த்து தைத்த ஒரு மருத்துவ சாதனை பற்றிய செய்தி. இந்த இரண்டும் ஒரே சமூகத்தில்தான் இடம் பெற்றன. ஒருபுறம் வாளேந்திந்திய இளைஞர்கள். இன்னொருபுறம் வெட்டிய கையை சேர்த்துத்தைத்த மருத்துவர்கள். ஒன்று குற்றச்செயல். மற்றது நற்செயல். இவை இரண்டினதும் சேர்க்கைதான் இன்றைய யாழ்ப்பாணத்தின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம்.
   தன்னை ஒரு பண்பாட்டு தலைநகரம் என்று கூறிக்கொள்ளும் ஒரு குடாநாட்டின் அறிவு, விழுமியம், பண்பாட்டுச் செழிப்பு, தலைமைத்துவம் போன்ற எல்லாவற்றின் மீதும் கேள்விகளை எழுப்பும் ஒரு அகமுரண்பாடு இது. ஏனெனில் மேற்படி இளையோர் அவற்றை குற்றச் செயல்களாக கருதி செய்யவில்லை. அவர்கள் அதை இப்பொழுதும் சாகச உணர்வுடன்தான் முன்னெடுக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் அந்த சாகச உணர்வை நெறிப்படுத்தி அதனை இலட்சியங்களை நோக்கி திருப்ப சமூகத்தில் யாருமே இல்லையா ?
   சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெரும் தொற்றுநோய் சூழலிலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் திரண்டார்கள். கறுப்பு துணியில் P2P என்று பொறிக்கப்பட்ட பட்டியைக் கட்டிக்கொண்டு சிவப்பு மஞ்சள் கொடிகளை ஏந்தியபடி மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்தது ஒரு தொகுதி இளையவர்கள்தான். அந்த ஊர்வலங்களை பார்த்தும் ஒரு செயற்பாட்டாளர் கேட்டார். இதிலும் ஒரு சாகச உணர்வு தெரிகிறது. இந்த சாகச உணர்வை அரசியல் ஆக்க சக்தியாக மாற்ற வேண்டுமென்று. இதே விளக்கம் வாளேந்திந்திய இளைஞர்களுக்கும் பொருந்தும். அதை நாங்கள் குற்றமாக பார்க்கப் போகிறோமா அல்லது வழிதவறிய சாகச உணர்வாக பார்க்கப் போகிறோமா?.
   அவர்களுக்கு தலைமை தேவையாக இருக்கிறது. அவர்களை அரவணைத்து அவர்களுடைய இளம் இரத்தத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தலைமைதாங்கி அவர்களை இலட்சியப் பாங்கான வழிகளில் வழிநடத்த தலைவர்கள் இல்லை என்பதே இங்குள்ள பிரச்சினை. உண்மையிலேயே வாளேந்திய இளைஞர்களின் தோற்றம் என்பது தலைமைத்துவ வெற்றிடத்தில் இருந்துதான் வருகிறது. தமிழ் மக்கள் மத்தியில் பொருத்தமான தலைமைகள் இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் ஒரு சிறு தொகுதி இளையோர் இவ்வாறு வழிதவறிப் போகிறார்கள்.
   கடந்த 12 ஆண்டுகளாக இவ்வாறு வழிதவறிய இளையோருக்கு தலைமை தாங்க தவறியதற்கு சமூகத்தின் எல்லாத் தரப்புக்களும் பொறுப்பேற்க வேண்டும். இந்த இளையோர் எங்களுக்குப் புறத்தியானவர்கள் அல்ல. அவர்கள் வேற்று கிரகத்திலிருந்து வேற்று நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் எங்ளுடைய பிள்ளைகள். எங்களுடைய வீடுகளில் எங்களுடைய பள்ளிக்கூடங்களில் எங்களுடைய சனசமூக நிலையங்களில் எங்களுடைய விளையாட்டு மைதானங்களில் எங்களுடைய சந்தைகளில் எங்களுடைய ஆலயங்களில் எங்களுக்கு மத்தியில் எங்களால் வளர்க்கப்பட்டவர்கள்தான். அவர்கள் இன்றைக்கு வாள் எந்துகிறார்கள் என்று சொன்னால் அதற்கு நாங்கள் எல்லாருமே பொறுப்புதான். யாரோ அவர்களுக்கு வாளைக் கொடுக்கிறார்கள் கஞ்சாவை கொடுக்கிறார்கள் என்று சூழ்ச்சி கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருப்பதற்கு பதிலாக அந்த இளையோருக்கும் எங்களுக்கும் இடையிலான தொடர்பாடல் எங்கே அறுந்தது என்பதை முழுச் சமூகமும் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.
   உங்களுடைய பிள்ளைக்கும் உங்களுக்கும் இடையே யாரோ ஒரு வெளியாள் வாளை, கஞ்சாவை கொண்டுவர முடிகிறது என்றால் உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் இடையே ஏதோ ஒரு இடைவெளி இருக்கிறது என்றே பொருள். உங்களுடைய பிள்ளை மோட்டார் சைக்கிளை முறுக்கிக்கொண்டு எங்கே போகிறான்? யாரை சந்திக்கிறான்? என்னென்ன செய்கிறான்? எப்பொழுது திரும்பி வருகிறான்? ஏன் பிந்தி வருகிறான்? அவனுடைய கைபேசியில் யார் யாருடைய இலக்கங்கள் உண்டு? கைபேசியில் அவன் உருவாக்கி வைத்திருக்கும் உலகம் எத்தகையது ? அவனுடைய கணினியில் அவன் உருவாக்கி வைத்திருக்கும் உலகம் எத்தகையது? யூ டியூப்பில் அவன் உருவாக்கி மகிழும் பாடல் எத்தகையது? அவனுடைய முகநூலில் அவன் உருவாக்கி வைத்திருக்கும் உலகம் எத்தகையது ? என்பது குறித்து எங்களில் எத்தனை பேர் நுணுக்கமாக பின்தொடர்கிறோம்?எங்களுக்கும் எங்களுடைய பிள்ளைகளுக்கும் இடையே எங்கே எப்பொழுது இடைவெளி விழுந்தது என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இது எல்லாப் பெற்றோருக்குமான ஒரு பொறுப்பு. ஆசிரியர்களுக்குமான பொறுப்பு. உள்ளூர் தலைமைகளுக்கும் மதத் தலைவர்களுக்குமான பொறுப்பு. எல்லாவற்றையும்விட முக்கியமாக அரசியல் தலைவர்களுக்கான பொறுப்பு.
   ரத்தத்துடிப்புள்ள இளையவர்களுக்குத் தலைமைதாங்க தகுதியுள்ள தலைவர்கள் யார் உண்டு ? எத்தனை கட்சிகளிடம் இளையோர் அமைப்புகள் உண்டு? குறைந்தபட்சம் பல்கலைக்கழகங்களில் மாணவ அமைப்புக்களைக் கொண்டிருக்கும் கட்சிகள் எத்தனை? இதுதான் பிரச்சினை. இளையோரின் வேகத்துக்கு தாக்குப் பிடித்து தலைமை தாங்க தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் பலரால் முடியவில்லை என்பதுதான். இளையோரின் சாகச உணர்வுக்கு சரியான தலைமைத்துவத்தை கொடுத்தால் அது ஆக்க சக்தியாக மாறும். அதற்கு ஒரு அரசியல் தரிசனம் வேண்டும்.
   இளையோருக்கு மட்டுமல்ல முழுச்சமூகத்துக்குமே ஒரு பெரும் தொற்றுநோய் காலத்தில் சமூகமுடக்க காலத்தில் வழிகாட்டுவதற்கு எத்தனை தலைவர்கள் உண்டு ? கடந்த சில வாரங்களாக இதுபற்றி நான் அடிக்கடி எழுதி வருகிறேன். சமூகமுடக்கத்தின்போது பொது மக்களோடு சேர்ந்து முடங்கி கிடப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை. அல்லது பெருந்தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை முழுக்க முழுக்க படையினரிடம் ஒப்படைத்து விட்டு வீடுகளில் முடங்கி கிடப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை. மாறாக மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும். தைரியம் ஊட்ட வேண்டும். நோய் தொற்றுக்கு எதிராக உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மக்களை பலப்படுத்த வேண்டும். வழிகாட்ட வேண்டும்.
   ஒரு பகுதி அரசியல்வாதிகளும் மக்கள் பிரதிநிதிகளும் நிவாரணம் வழங்குகிறார்கள். அதற்கும் தேவை உண்டு. ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளையும் தாயக மக்களையும் ஒருங்கிணைக்கும் முகவர்களாக செயற்பட்டால் மட்டும் போதாது. அதற்கும் அப்பால் மாற்றத்தின் முகவர்களாக நம்பிக்கையின் முன்னுதாரணங்களாக வாழும் முன் உதாரணங்களாக மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் மாற வேண்டும். அப்படி மாறினால்தான் ஒரு சமூகமுடக்க காலத்தில் சமூகத்துக்கு தைரியம் ஊட்டலாம் வழிகாட்டலாம்.
   ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எத்தனை கட்சித் தலைவர்களிடம் இது குறித்து ஆழமான தரிசனங்களும் அதற்கு வேண்டிய வாழ்க்கை ஒழுக்கமும் உண்டு ? ஒரு சமூகமுடக்க காலத்தில் தனது சமூகத்திற்கு வழிகாட்ட முடியாத தலைவர்கள் எப்படி ரத்தத் துடிப்புமிக்க இளைஞர்களுக்கு வழி காட்டுவார்கள் ? இவ்வாறு வழி காட்டப்படாத ஒரு வெற்றிடத்தில்தான் தாம் செய்வது குற்றம் என்று தெரியாமலேயே ஒரு சிறு பகுதி இளையோர் வாளோடும் கஞ்சாவோடும் நிற்கிறார்கள். அல்லது யாருடையதோ கைப்பாவைகளாக மாறியிருக்கிறார்கள். இது தொடர்பில் ஆழமான சமூகப்பொருளாதார உளவியல் விளக்கங்களின்றி தமிழ் அரசியல்வாதிகள் வெட்டப்பட்ட கையையும் கையை உடலோடு சேர்த்துத் தைத்த மருத்துவரையும் இரு வேறு பரபரப்பான தலைப்புச் செய்திகளாகக் கடந்து போகிறார்களா?
    
   https://globaltamilnews.net/2021/163285
    
  • By கிருபன்
   வடகடலில் சீனர்கள்? நிலாந்தன்.
   July 4, 2021

   வடமராட்சி கிழக்கில் வீதித்திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த மங்கோலிய முகச்சாயலைக் கொண்ட ஒருவரைக் கண்ட சுமந்திரன் அவரைச் சீனர் என்று கருதி ருவிற்றரில் ஒரு குறிப்பைப் பதிவிட்டிருக்கிறார். உள்நாட்டில் வீதித் திருத்த பணிகளிலும் சீனர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதாக அப்பதிவில் உள்ளது. ஆனால் அது சீனர் அல்ல கிழக்கை சேர்ந்த ஒரு முஸ்லிம் என்பது தெரிய வந்ததும் சுமந்திரன் தான் வெளியிட்ட தகவலுக்காக வருத்தம் தெரிவித்திருந்தார். மேலும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் சுமந்திரனுக்கு ஒரு பதில் குறிப்பையும் பதிவிட்டிருந்தது.
   வழமையாகத் தான் என்ன கதைக்கிறேன் என்பதனை நன்கு சிந்தித்து பிடி கொடாமல் கதைக்கும் சுமந்திரன் இந்த விடயத்தில் அவசரப்பட்டு ஏன் அப்படியொரு குறிப்பை டுவிட்டரில் போட்டார் ? சீனர்கள் நாடு முழுவதும் பரவி விட்டார்கள் என்ற பிரமை அவருக்கு ஏற்பட்டுள்ளதா ?ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவ்வாறு ஒரு பிரமை ஏற்படக் காரணம் என்ன? கௌதாரிமுனை கிராமசேவகர் பிரிவிற்குள் வரும் கல்முனை பந்தலடி என்ற பகுதியில் அமைந்திருக்கும் கடலட்டைப் பண்ணையில் சீனர்கள் காணப்பட்டமையும் அதற்கு ஒரு காரணமா?
   அக்கடலட்டைப் பண்ணை பற்றிய விவரத்தை முதலில் வெளிப்படுத்தியது கிளிநொச்சியை சேர்ந்த ஒரு செய்தியாளர்தான். அப்பகுதியில் சீனர்கள் கடந்த இரண்டரை மாதங்களாக கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருவது தொடர்பான தகவல்கள் அச்செய்தியாளருக்கு கிடைத்தன. மீனவர் சங்கத்தின் சில முக்கியஸ்தர்கள் சீனர்களோடு இணைந்து செயற்படுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. தனக்குக் கிடைத்த தகவலை உறுதிப்படுத்துவதற்காக கல்முனை பந்தலடிக்கு மேற்படி செய்தியாளர் சென்றிருக்கிறார். அங்கிருந்த சீனர் கடல் வழியாகப் படகின் மூலம் அந்த இடத்தைவிட்டு நீங்கிச் செல்வதை கண்டிருக்கிறார். அந்த படகில் கியூலன் Guilan (Pvt) Ltd பிரைவேட் லிமிடெட் என்று எழுதப்பட்டிருக்கிறது.
   அரியாலை கிழக்கில் ஏற்கனவே இயங்கி வரும் கடலட்டைக் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் பண்ணையிலிருந்து அவர்கள் படகுகள் மூலமாகவே கல்முனை பந்தலடிக்கி வந்து போகிறார்கள். ஊடகங்களில் அந்த இடம் கௌதாரிமுனை என்று குறிப்பிடப்பட்டாலும் அது கல்முனை பந்தலடி என்பதே சரி. கல்முனைக் கடலில் வெற்று பிளாஸ்டிக் பரல்களை பரப்பி அவற்றின்மீது குடில் ஒன்றை அமைத்து சீனர்கள் அதில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் பூநகரிப் பகுதியூடாக அதாவது தரை வழிப் பாதை ஊடாக அந்தப் பகுதிக்கு செல்வதில்லை. மாறாக கடல்வழிப் பாதை ஊடாக அரியாலை கிழக்கில் இருந்து அங்கே வருகிறார்கள். கல்முனை பந்தலடியிருந்து கிழக்கு அரியாலை இருபது நிமிடங்களுக்கு குறையாத கடற்பயணத் தூரம்
   அரியாலை கிழக்கில் ஏற்கனவே கடலட்டைக் குஞ்சு உற்பத்திப் பண்ணை ஒன்று இயங்கிவருகிறது. அந்தப்பண்ணை 2011ஆம் ஆண்டு ஒரு தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களக் குடிமகனின் பெயரில் பதியப்பட்டுள்ளது. அவர்தான்2018இல் சீனர்களை அங்கே கொண்டு வந்தார். சீனர்களோடு தமிழர்களும் வேலை செய்கிறார்கள். முகாமையாளராக இருப்பவர் ஒரு தமிழர். உதவியாளர்களாகவும் தமிழர்கள் உண்டு. அப்பண்ணை கடற்கரையில் ஒரு தனியாருக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. கடற்கரையில் 16 சீமெந்துத் தொட்டிகளை உருவாக்கி அந்த தொட்டிகளில் கடற் சூழலை செயற்கையாக ஏற்படுத்தி அதற்குள் கடலட்டைக் குஞ்சுகளை உற்பத்தி செய்கிறார்கள். இந்த கடலட்டைக் குஞ்சுகளைத்தான் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் உட்பட பெரும்பாலான கடலட்டை வளர்ப்பவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். அப்பண்ணையைத்தான் கல்முனை கடலை நோக்கி அவர்கள் விஸ்தரிக்க முயன்றதாக கருதப்படுகிறது.
   ஆனால் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் அதற்கு அனுமதி வழங்கவில்லை. அதைத்தொடர்ந்து கல்முனை பந்தலடி பகுதியைச் சேர்ந்த விநாயகர் கடற்றொழிலாளர் சங்கத்தின் பெயரால் இரண்டு ஏக்கர் காணியில் கடலட்டைப் பண்ணை ஒன்றை உருவாக்குவதற்கு பிரதேச செயலரிடம் அனுமதி கோரப்பட்டிருக்கிறது. எனினும் அனுமதி இதுவரையிலும் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் சீனர்கள் கடற்றொழிலாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலருடைய அனுசரணையோடு அங்கே கடலட்டை வளர்ப்பை தொடங்கிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.
   2009இற்குப்பின் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக தமிழ் கடற்பகுதிகளில் கடலட்டை பண்ணைகள் அதிகரித்த அளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 15 கடலட்டைகளைக் கொண்ட ஒரு கிலோ கடலட்டை கிட்டத்தட்ட 20,000 ரூபாய்க்கு போகிறது. இது சீனாவில் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துக்கு விற்கப்படுமாம். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் கடலட்டையில் பெரும்பகுதியை சீன நிறுவனங்களே கொள்வனவு செய்கின்றன.
   அரியாலை கிழக்கில் சீனர்கள் தங்கியிருக்கும் பண்ணை அமைந்திருக்கும் இடம் யாழ் குடா நாட்டின் வரைபடத்தில் குடாக்கடலை நோக்கி துருத்திக்கொண்டு தெரியும் ஒரு நிலத்துண்டு ஆகும். அப்படித்தான் கல்முனை பந்தலடியும். பெரு நிலப்பரப்பிலிருந்து கடலை நோக்கி துருத்திக்கொண்டு தெரியும் ஒரு நிலத்துண்டு அது. இவ்விரண்டு நிலத் துண்டுகளிலும் நிலை கொண்டிருப்பவர்கள் குடாக்கடலின் மீது தமது கண்காணிப்பை வைத்திருக்கலாம்.
   சர்ச்சைக்குரிய கடல் அட்டை பண்ணையில் இருந்து கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கடற்படை முகாம் உண்டு. கல்முனையில் இருந்து குறுக்காக கிட்டத்தட்ட 48 கிலோமீட்டர் தொலைவில் நெடுந்தீவு காணப்படுகிறது. நெடுந்தீவில் இருந்து குறுக்காக ஏறக்குறைய 50கிலோ மீட்டர் தொலைவிலேயே தமிழகம் காணப்படுகிறது. நெடுந்தீவும் உட்பட யாழ் குடாநாட்டின் மூன்று தீவுவுகளில் சீனா மீளப் புதுப்பிக்கப்படும் எரிசக்தித் திட்டம் ஒன்றை நிறுவ இருக்கிறது. அதற்குரிய காணிகள் சுவீகரிக்கப்பட்டு வேலியிடப்பட்டு அவற்றில் இது மின்சார சபைக்கு சொந்தமான இடம் இதற்குள் யாரும் நுழையக்கூடாது என்று அறிவித்தல் பலகை நடப்பட்டிருக்கிறது.
   எனவே கிழக்கு அரியாலை , கல்முனையில் பந்தலடி, நெடுந்தீவுமுட்பட மூன்று தீவுகள் ஆகியவற்றை இணைத்து குடாக்கடல் உள்ளடங்களாக பாக்கு நீரிணையில் நெருக்கமான ஒரு வலைப்பின்னலை உருவாக்கலாம். அப்படிப்பார்த்தால் இதை வெறுமனே கடலட்டை விவகாரமாக மட்டும் பார்க்கலாமா என்று சந்தேகிப்பவர்களும் உண்டு.
   ஆனால் சீனர்கள் உலகம் முழுவதும் தாங்கள் சந்தைகளைத்தான் திறப்பதாக கூறுகிறார்கள். தங்களுடைய பிராந்தியத்துக்கு வெளியே உலகில் எந்த ஓரிடத்திலும் தாங்கள் போர்முனையைத் திறக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். சீன விரிவாக்கம் எனப்படுவது முழுக்க முழுக்க முதலீட்டு விரிவாக்கம்தான். உட்கட்டுமான அபிவிருத்திதான். இந்த உட்கட்டுமான அபிவிருத்திகள் அனைத்தும் சீனாவை நோக்கி மூலப்பொருட்களை கொண்டு செல்லும் அதே சமயம் சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வெளிச் சந்தைக்கு கொண்டு வரும் நோக்கிலானவை. எனவே சீனா உலகம் முழுவதும் முதலீடுகளை மட்டுமே நகர்த்தி வருவதாக கூறிக் கொள்கிறது.
   மாறாக மேற்கு நாடுகள் படைகளை நகர்த்துகின்றன. உலகின் பல்வேறு இடங்களில் மேற்கு நாடுகள் படைத்தளங்களைப் பேணி வருகின்றன. ஆனால் சீனா பொதுவாக முதலீடுகளைத்தான் நகர்த்தி வருகிறது. அது ஆக்கிரமிப்பு நோக்கிலானது அல்ல என்று சீனாவை ஆதரிப்பவர்களும் சீன முதலீடுகளை ஊக்குவிப்பவர்களும் கூறிவருகிறார்கள். சீனா பல்வேறு நாடுகளின் படையெடுப்புக்கு உள்ளாக்கியதே தவிர சீனா ஒருபோதும் பிறநாடுகள் மீது படையெடுக்கவில்லை என்று அண்மையில் மகிந்த ராஜபக்ச உரையாற்றியிருந்தார். சீனக் கொமியூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு நிறைவையொட்டி நடந்த வைபவத்தில் காணொளித் தொழில்நுட்பமூடாகக் கலந்து கொண்டு அவர் அவ்வாறு உரையாற்றினார்.
   சீனாவுக்கு எதிராக தேவையற்ற பயம் ஒன்றை உலகம் முழுவதிலும் உள்ள ஒரு பகுதி விமர்சகர்கள் மற்றும் ராஜதந்திரிகள் கட்டி எழுப்பி வருவதாக சீனாவின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இது ஒருவித அச்ச நோய். அதாவது சீனா போபியா என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
   ஆனால் இது தனிய முதலீடு மட்டுமல்ல இதுவும் ஒரு ஆக்கிரமிப்புத்தான் என்று சீனாவை சந்தேகத்தோடு பார்ப்பவர்கள் கூறுகிறார்கள். பலமான ஒரு பொருளாதாரம் நிதி ரீதியாக நலிவுற்ற பொருளாதாரங்களின் மீது மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு இதுவென்றும் தேவைகளை அடிப்படையாக வைத்து இயலாமையைச் சுரண்டி ஒரு சந்தை ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.அதை சீனாவின் கடன் பொறி அல்லது சந்தை குண்டு என்றும் அவர்கள் அழைக்கிறார்கள்.
   மேலும் சீனப் பெருந்தலைவர் மாவோ சே துங் முன்பு கூறிய ஒரு கதையை அவர்கள் நினைவுபடுத்துகிறார்கள். பெரிய மீனும் சிறிய மீனும் வசிக்கும் ஒரு கடலில் பெரிய மீன் சிறிய மீன்களை தனக்கு உணவாகச் சாப்பிட்டு வந்தது. ஒரு கட்டத்தில் சிறிய மீன்கள் பெரிய மீனிடம் போய் முறையிட்டன. அப்பொழுது பெரிய மீன் கூறியது இங்கு எல்லோருமே சமம். அவரவர் அவரவருக்கு விருப்பமானதை சாப்பிடலாம் என்று. ஆனால் சிறிய மீன்களால் அவற்றின் சிறிய வாயால் எப்படி பெரிய மீனைச் சாப்பிடுவது ?
   நாடுகளுக்கிடையே நிதி ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் பொழுது பலம் தொடர்பில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் பொழுது எல்லாரும் ஒன்றுதான் எல்லாருக்கும் சம வாய்ப்பு என்று கூறும்பொழுது பலமானது பலவீனமானதை தின்றுவிடும். வறிய நாடுகளை நோக்கிய சீனாவின் முதலீடுகளும் அப்படிப்பட்டவைதான் என்று சீன முதலீடுகளை விமர்சிப்பவர்கள்சுட்டிக் காட்டுகிறார்கள்.
   இவ்வாறான வாதப்பிரதிவாதங்களின் பின்னணியில்தான் இலங்கைத் தீவிலும் சீன முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. அவை தென்னிலங்கையை தாண்டி தமிழ்ப் பகுதிகளுக்கும் பரவத் தொடங்கி விட்டன. குறிப்பாக தென்னிந்தியாவுக்கு அணக்கமாக வந்து விட்டன. இதன் விளைவாக ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் அருண்ட கண்களுக்கு இருண்டதெல்லாம் சீனாவாகத் தெரிந்ததா?
    
   https://globaltamilnews.net/2021/163039
  • By கிருபன்
   பொசன் நாடகம்? நிலாந்தன்!
   June 27, 2021

   கடந்த 12 ஆண்டுகாலத் தமிழ் அரசியலின் இயலாமையை வெளிக்காட்டும் குறிகாட்டிகளில் ஒன்று தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம். கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் வினைத்திறன் மிக்க விதத்தில் போராடவில்லை என்பதற்கு அது ஒரு குறிகாட்டி. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தமிழ் அரசியல் தலைமைகள் பொருத்தமான வெற்றிகள் எதனையும் பெறத் தவறி விட்டார்கள் என்பதற்கு அது ஒரு குறிகாட்டி.
   தமிழ்க் கட்சிகளில் துருத்திக்கொண்டு தெரியும் பலரும் சட்டத்துறை ஒழுக்கத்தை சேர்ந்தவர்கள். ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் அரசியல் கைதிகளுக்காக போராடுவதற்கென்று சட்ட உதவிக் கட்டமைப்பு எதையும் இன்று வரையிலும் எந்த ஒரு அரசியல் கட்சியும் உருவாக்கியிருக்கவில்லை. மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மையம் போன்ற எத்தனை செயற்பாட்டு அமைப்புக்கள் தமிழ்மக்கள் மத்தியில் உண்டு?
   இப்படிப்பட்ட ஒரு வெற்றிடத்தில்தான் கைதிகள் காலத்திற்கு காலம் போராடத் தொடங்குவார்கள். குறிப்பாக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க தொடங்குவார்கள். உண்ணாவிரதிகளின் உடல்நிலை நலிவுறத் தொடங்கும்பொழுது சமூகத்துக்குள் ஒரு கொதிப்பு ஏற்படும். அப்பொழுது கட்சிகள் அதில் தலையிடும். தலையிட்டு ஏதாவது வாக்குறுதியை வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைக்கும். ஆனால் வாக்குறுதியளித்தபடி கைதிகளை விடுவிக்க கட்சிகளால் முடிவதில்லை. இதுவிடயத்தில் கட்சிகளின் வேலை என்னவென்று பார்த்தால் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பதுதான் என்ற ஒரு நிலைமையே கடந்த 12 ஆண்டுகளாகக் காணப்படுகிறது. இவ்வாறானதொரு அரசியற் சூழலில்தான் அரசாங்கம் கடந்த பொசன் தினத்தை முன்னிட்டு 16 அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருக்கிறது.
   மன்னிப்பு என்றால் என்ன அர்த்தம்? அவர்கள் எந்த அரசியலுக்காகப் போராடினார்களோ அந்த அரசியல் ஒரு குற்றமாகப் பார்க்கப்படுகிறது என்று பொருள். அதனால்தான் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பானது பொது மன்னிப்பு என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக கைதிகளை விடுவிப்பது என்று ஓர் அரசியல் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
   ஆனால் விடுவிக்கப்பட்ட கைதிகளும் அவர்களின் உறவினர்களும் இது விடயத்தில் கொள்கை நிலைப்பாட்டை விடவும் தமது உறவுகள் ஆகக்கூடிய விரைவில் விடுவிக்கப்படுவது முக்கியம் என்று வலியுறுத்துகிறார்கள். கொள்கையை வலியுறுத்தும் கட்சிகள் அல்லது செயற்பாட்டு அமைப்புகள் கைதிகளை விடுவிக்கும் வல்லமையோடு இல்லை என்பதைக் கடந்த 12 ஆண்டுகள் நிரூபித்து விட்டன. இந்த இயலாமையின் பின்னணியில் அரசியல்கைதிகள் எப்படித் தண்டனையைப் பெற்றுக் கொண்டு வெளியே வரலாம் என்றே சிந்திக்கிறார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் எப்பொழுது விசாரணை? எப்பொழுது தண்டனை? என்று தெரியாமல் காலவரையறையின்றிக் காத்திருப்பதை விடவும் ஏதாவது ஒரு தண்டனையை ஏற்றுக்கொண்டு அதன்படி விடுதலை செய்யப்படும் திகதியைத் தெரிந்து கொண்டு நிம்மதியாக இருக்கலாம் என்று கைதிகள் கருதுகிறார்கள். இவ்வாறானதொரு பரிதாபகரமான சூழ்நிலையில் ஒரு பெருந் தொற்றுநோய் காலத்தில் சமூகத்தில் மறக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட ஒரு தரப்பினராக தமிழ் அரசியல் கைதிகள் காணப்படுகிறார்கள்.
   எல்லாத் தமிழ்க்கட்சிகளும் அரசியல் கைதிகளை விடுவிக்க போவதாக கூறுகின்றன. ஆனால் யாராலும் இதுவரை அது குறித்து ஓர் அரசியல் தீர்மானத்தை எடுக்குமாறு எந்தவோர் அரசாங்கத்தையும் நிர்ப்பந்திக்க முடியவில்லை. நல்லாட்சி காலத்தில் ரணில் விக்ரமசிங்கவோடு நெருக்கமாக இருந்த கூட்டமைப்பாலும் அதைச் செய்ய முடியவில்லை. அக்காலகட்டத்தில் ஒரு தொகுதி அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள் ஆனால் அதை கூட்டமைப்பு தனது சாதனையாக கூறிக்கொள்ள முடியாது என்று கைதிகள் கூறுகிறார்கள். ஏனெனில் வழமையான சட்ட நடைமுறைகளினூடாக அவர்கள் இயல்பாக விடுவிக்கப்பட்டார்களே தவிர அரசாங்கம் ஒரு கொள்கை தீர்மானத்தை எடுத்து யாரையும் விடுவிக்கவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
   இந்தவாரம் விடுவிக்கப்பட்ட 16 அரசியல் கைதிகளில் 14 பேருக்கு இது பொருந்தும். இவர்கள் அனைவரும் தண்டனை வழங்கப்பட்டவர்கள். தண்டனை காலம் முடிவதற்கு சிலருக்கு ஆகக்கூடியது 18 மாதங்களே உண்டு. குறிப்பாக இவர்களில் ஒருவருடைய தகப்பனார் மிக அண்மையில் சுன்னாகத்தில் இறந்து போனார். அக்கைதியை சற்று முன்னதாக விடுதலை செய்திருந்தால் அந்தப்பிள்ளை தன் தகப்பனை உயிரோடு பார்த்திருக்கும்.
   அரசியல்கைதிகளை விடுவிப்பது என்று அரசாங்கம் முடிவெடுத்தபின் அது குறித்து நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இந்த வாரம் உரையாற்றினார். அவருடைய உரை ஒரு தமிழ்தேசியவாதியின் உரை போலிருக்கிறது. சில கைதிகள் சிறையில் இருக்கும் காலம் தன்னுடைய வயதுக்குக் கிட்டவரும் என்று நாமல் கூறுகிறார். அவர் ஒர் அரசியல்வாதி. எனவே அவர் பேசுவதை, செய்வதை, எல்லாவற்றையும் அரசியலாகவே பார்க்கவேண்டும்.
   ஆனால் அரசியல் கைதிகள் கூறுகிறார்கள் கடந்த ஆட்சியின்போது நாமல் அவர்களோடு சிறையில் வைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவருக்கு அரசியல்கைதிகள் தொடர்பில் ஒருவித நெருக்கம் கலந்த புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று. ஏனெனில் நாமல் மகசின் சிறையில் வைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் தமிழ் அரசியல்கைதிகளோடு நெருக்கமாகப் பழகியிருக்கிறார். அது அரசியல்கைதிகளின் உணர்வுகளைப புரிந்துகொள்ள அவருக்கு உதவியிருக்கலாம். சிறையில் சில சமயம் அரசியல் கைதிகளே அவருக்கு தேனீர் தயாரித்து வழங்கியதுண்டாம். அதிலும் குறிப்பாக தேநீருக்கு வேண்டிய பொருட்களை அவர் அரசியல்கைதிகளிடம்தான் கொடுத்து வைத்திருந்தாராம். அவர்களிடம்தான் அவை பத்திரமாக இருக்கும் என்றும் அவர் நம்பினாராம். இவ்வாறு அவரோடு சிறையில் இருந்த ஒரு கைதி விடுவிக்கப்பட்ட பின் கிளிநொச்சியில் அந்தக் கைதிக்கு அவர் ஒரு வீடு கட்டிக்கொடுத்தார்.

   அவரைப் போலவே பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரரும் சிறையில் இருந்தபோது அரசியல் கைதிகளின் உணர்வுகளை அதிகம் புரிந்து கொண்டவராக காணப்பட்டதாகக் கைதிகள் கூறுகிறார்கள். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபின் அவரும் கைதிகளின் விடுதலை தொடர்பாக பேசியிருந்தமையை இங்கு நினைவுபடுத்தலாம்.
   எனவே அரசியல்கைதிகளை விடுவிப்பதற்கான நாமலின் முயற்சியானது கைதிகளோடு அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நெருக்கத்தின் விளைவாகவும் இருக்கலாம். ஆனால் அரசியலில் எந்த ஒரு தனிப்பட்ட நெருக்கமும் அதன் இறுதி விளைவைப் பொறுத்துக்கூறின் அரசியலாகவே பார்க்கப்படும். நாமல் ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே ஓர் ஆதரவுத்தளம் உண்டு. சில கிழமைகளுக்கு முன் அவர் சீனாவின் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். இப்பொழுது அரசியல்கைதிகளுக்காக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். தவிர 16கைதிகளும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றின் மூலம் வடக்கில் நாமலின் ஆதரவுத் தளத்தை பலப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் சிந்திக்கும். எனினும் எல்லாவிதமான வாதப்பிரதிவாதங்களும் அப்பால் பல ஆண்டுகளுக்குப்பின் 16கைதிகள் தமது குடும்பத்தினருடன் இணைந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியானது. அதே சமயம் மிச்சமுள்ள கைதிகள் தொடர்பில் ஓர் அரசியற் தீர்மானம் எடுக்கப்படவேண்டும்.
   அரசியல் கைதிகளின் விவகாரம் என்பது ஒரு சட்ட விவகாரம் மட்டும் அல்ல. மனிதாபிமான விவகாரம் மட்டும் அல்ல. அவற்றைவிட ஆழமான பொருளில் அது ஓர் அரசியல் விவகாரம். எனவே கைதிகளின் விடுதலை தொடர்பான தீர்மானமும் ஓர் அரசியல் தீர்மானமாகவே இருக்க வேண்டும். அவ்வாறு அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டால்தான் இப்பொழுதும் சிறையில் இருக்கும் அனைத்து கைதிகளும் விடுவிக்கப்படும் ஒரு நிலைமை வரும்.
   தவிர கஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியதைப்போல பயங்கரவாதத் தடைச்சட்டம் இருக்கும் வரையிலும் இனிமேலும் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளை நிரப்பிக் கொண்டேயிருப்பார்கள். ஏனெனில் அரசாங்கம் தமிழ்மக்களின் அரசியலை பயங்கரவாதமாக சித்தரித்து ஆயுதப் போராட்டத்தை மீளுருவாக்கம் செய்கிறார்கள் என்று கூறி யாரையும் கைது செய்யக் கூடிய ஒரு நிலைமை தொடர்ந்தும் இருக்கிறது. எனவே இங்கு பிரச்சினை தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக பார்க்கும் அச்சட்டம்தான். அச்சட்டத்தை அகற்ற வேண்டும். இது தொடர்பில் ஐரோப்பிய யூனியன் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட காரணத்தால்தான் 2017ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை சிறிய தேசிய இனங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பாவித்து வரும் ஒரு பின்னணியில் அதற்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றம் அண்மையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தவிர கடந்த திங்கட்கிழமை தொடங்கிய ஐநாவின் 47வது கூட்டத் தொடரிலும் மையக்குழு நாடுகளின் அறிக்கையில் இது சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
   பெருந்தொற்று நோயால் நாட்டின் பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் ஜிஎஸ்பி வரிச்சலுகையும் நிறுத்தப்பட்டால் நிலைமை மேலும் பாரதூரமாக மாறலாம். அதனால் அரசாங்கம் மேலும் சீனாவை நோக்கிப் போவதை தவிர வேறு வழி இருக்காது. அவ்வாறு போகக்கூடாது என்பதைத்தான் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவும் சுட்டிக்காட்டியிருக்கிறார். சீனாவிடம் கடன் வாங்குவதற்கு பதிலாக அனைத்துலக நாணய நிதியத்திடம் போகலாம் என்று அவர் ஆலோசனை கூறுகிறார்.

   எனவே 16அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பை வழங்கியதன் மூலம் அரசாங்கம் தன்னை சுதாகரித்துக் கொள்ள முயற்சிக்கிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்யப்போவதாக நிதியமைச்சர் அறிவித்திருப்பதும் ஒரு சுதாகரிப்பே. இவையாவும் ஐரோப்பிய யூனியனை சமாதானப்படுத்தும் முயற்சிகளே.
   அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளரான பாதர் சக்திவேல் சொன்னார்…. ”ஒரு புனித பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் எமது அமைப்பைப் பொறுத்தவரை இது ஒரு அமாவாசை நாள்” என்று. “ஏனென்றால் அரசாங்கம் இதுவிடயத்தில் முதலாவதாக ஓர் அரசியல் தீர்மானத்தை எடுப்பதிலிருந்து தப்பியிருக்கிறது. இரண்டாவதாக அரசியல் கைதிகளையும் துமிந்த சில்வாவையும் சமப்படுத்தியிருக்கிறது. துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பை வழங்கும் பொசன் நாடகத்தின் ஒரு பகுதியாகவே அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மன்னிப்பு கிடைக்காவிட்டாலும் அக்கைதிகளில் பலர் சில மாதங்களில் விடுதலை பெற்றுவிடுவார்கள். எனவே இதில் மன்னிப்பின் பொருளையும் அரசாங்கம் கொச்சைப்படுத்தியிருக்கிறது. மொத்தத்தில் ஒரு பொசன் நாளில் புத்த பகவானின் பெயரால் இவை எல்லாவற்றையும் செய்து புத்த பகவானையும் அவர்கள் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள்” என்று.
    
   https://globaltamilnews.net/2021/162798
    
    
 • Popular Now

 • Topics

 • Posts

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.