Jump to content

தமிழ் சினிமாவின் ஆக்ஸிஜன், ரசிகர்களின் தலைவன்…'உங்கள் விஜய்' எப்படி உருவானார்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமாவின் ஆக்ஸிஜன், ரசிகர்களின் தலைவன்…'உங்கள் விஜய்' எப்படி உருவானார்? #fanboyseries-1

விஜய்

விஜய்

'விஜய்' இந்த பெயர் தமிழ் சினிமாவிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. சாதாரண நடிகராக திரையுலகில் அறிமுகமாகி இன்று நம்பர் 1 நாயகன் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கிறார் விஜய்.

கோலிவுட்டின் கமர்ஷியல் சினிமாக்கள் மீதும், கமர்ஷியல் பட ஹீரோக்கள் மீதும் சில கலைப்படைப்பாளிகளுக்கும், அறிவுஜீவிகளுக்கும் எப்போதும் ஒரு பெருங்கோபமும் ஆதங்கமும் இருப்பதுண்டு. அவர்களைப் பொறுத்தவரை மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தப்படும் படங்கள் மட்டுமே நல்ல சினிமா. அதை விடுத்து மற்ற பொழுதுபோக்குப் படங்கள் எல்லாம் ரசிக்கத் தகுதியவற்றவை, அவற்றை படமாக்க பெரிய மெனக்கெடல்கள் எதுவும் தேவைப்படுவதில்லை.

உண்மையில் நல்ல சினிமா கெட்ட சினிமா என்பதைத்தாண்டி, வெகுஜன ரசனையிலிருந்து மாறுபட்டு வெளியாகும் படங்களுக்கு இருக்கும் ஜனநாயகத்தன்மையைவிட மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் கமர்ஷியல் படங்களே அதிகப்படியான ஜனநாயகத்தன்மையை இயற்கையாகவே தங்களுக்குள் பொதிந்து வைத்துள்ளன.

நாள் முழுவதும் உழைத்து, அலுத்து. களைத்து முன் வரிசையில் டிக்கெட் எடுத்து பார்க்கும் சாமானியன் தொடங்கி, பாப்கார்ன் வாங்கவே 300 ரூபாய் செலவழிக்கும் எலீட் ஆடியன்ஸ் வரை பரந்து விரிந்து எல்லா தரப்பு ரசிகர்களையும் உள்ளிழுத்துக் கொள்ளும் அந்த ஜனரஞ்சகம்தான் கமர்ஷியல் படங்களின் ஜனநாயகத்தன்மைக்கான சான்று.

 

இந்த கமர்ஷியல் ஜனநாயகத்தில் வென்ற நடிகர்கள் கோட்டையில் கொடியேற்றும் அளவுக்கு செல்வாக்கு பெற்றது கோலிவுட்டின் அழிக்கமுடியாத வரலாறு. எவ்வளவுக்கு எவ்வளவு செல்வாக்கை பெற்றுத்தருமோ அதே அளவுக்கு இந்த வகை படங்கள் ரிஸ்க் ஆனவையும்கூட.

விஜய்
 
விஜய்

ஒரு இயல்பற்ற வித்தியாசமான படம் தோற்கும்போது ஏற்படும் இழப்பை விட ஒரு கமர்ஷியல் படம் தோற்கும் போது ஏற்படும் இழப்பும் நஷ்டமும் அதிகம். அந்தத் தோல்வி தயாரிப்பாளர்-நடிகர்-இயக்குநர் தொடங்கி டெக்னீஷியன்கள் வரை எல்லோரையுமே பாதிக்கும். ஒன்றிரண்டு படங்களிலேயே கரியர் காலியான நட்சத்திரங்கள் ஏராளம். கமர்ஷியல் எனும் முரட்டு குதிரையிடம் எத்தனை முறை அடிபட்டு விழுந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து வித்தையை கற்றுக்கொண்டு நீண்ட நெடிய வெற்றிப் பயணத்தை மேற்கொள்பவர்கள் வெகுசிலரே. அந்த வெகு சிலரில் மிக முக்கியமானவர் ஜோசப் விஜய்!

'விஜய்' இந்த பெயர் தமிழ் சினிமாவிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. சாதாரண நடிகராக திரையுலகில் அறிமுகமாகி இன்று நம்பர் 1 நாயகன் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கிறார்.

மூச்சு முட்டிக் கொண்டிருந்த திரையரங்குகளுக்கு விஜய்யின் படங்களே ஆக்ஸிஜனாக உயிர் கொடுக்கிறது. சினிமா நடிகர் என்பதைத்தாண்டி விஜய்யின் மீது வெறித்தனமாக அன்பு செலுத்த ஒரு பெருங்கூட்டமே உருவாகியிருக்கிறது. ஐ.டி ரெய்டின் போது நெய்வேலியில் விஜய்க்கு ஆதரவாக பெருங்கடலென கூடிய அந்த கூட்டமே இதற்கு சாட்சி. ஓடிடி- க்கள் மூலம் சினிமா முற்றிலும் வேறொன்றாக உருமாறிக் கொண்டிருக்கும் சூழலில், திரையரங்கின் மூலம் கோலிவுட்டிற்கு கிடைத்திருக்கும் கடைசி சூப்பர்ஸ்டார் விஜய்யே!

 

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் விஜய் என்ற நிலையில் சிலருக்கு விஜய்யை தெரிந்திருக்கலாம். 90-களின் கட்டக்கடைசியில் பிறந்து ஒரு 2கே கிட்டாக வளர்ந்ததால் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி என்ற நிலைக்கு விஜய் உயர்ந்தபிறகுதான் அவர் எனக்கு அறிமுகமானார். எந்த படத்திலிருந்து விஜய்யை பிடிக்கும் என கேட்டால், ஒரு பதிலை என்னால் சொல்லவே முடியாது. எவ்வளவு யோசித்து பார்த்தாலும் எந்த படத்திலிருந்து விஜய்யை பிடிக்க ஆரம்பித்தது என்கிற கேள்விக்கு மட்டும் எப்போதும் விடை தெரிந்ததில்லை. காரண காரியம் எதுவுமின்றி நினைவு தெரிந்த நாளிலிருந்தே மனதுக்கு பிடித்த நடிகர் விஜய் மட்டுமே.

விஜய்
 
விஜய்

‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பிரியமானவளே’, ‘குஷி’ போன்ற படங்களுக்கு கைப்பிள்ளையாக இருக்கும்போது என்னையும் சேர்த்து தூக்கி சென்றிருக்கிறார் அம்மா. அப்போதே விஜய்யின் முகம் எனக்குள் அழுத்தமாக பதிந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். '’இவன தூக்கிட்டு போய் விஜய் படமா பார்த்தது பெரிய தப்பா போச்சு. இப்ப விஜய்...விஜய்னு உசுரவிடுறான்’' என பின்னாட்களில் அம்மாவை புலம்பவிடும் அளவுக்கு விஜய் நேசனாக வளர்ந்தேன்.

'விஜய்' என்றவுடன் அனிச்சையாக வள்ளி ஆச்சியும் எனக்கு ஞாபகம் வந்துவிடுகிறார். வள்ளி ஆச்சிக்கு 60+ வயது இருக்கும். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர். எனக்கும் என் தம்பிக்கும் டஃப் கொடுக்கும் அளவுக்கு தீவிரமான விஜய் ரசிகை. ‘வில்லு’ படத்தின் ட்ரெய்லரில் விஜய் பேசும் ‘'வில்லு... பவர்ஃபுல்லு'’ என்கிற வசனத்தை நாங்கள் பேசிக்காட்ட உட்காந்து ரசித்துக்கொண்டே இருப்பார்.

ஒருமுறை எங்கள் தெருவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் ஒரு சிறுவர் கூட்டம் விஜய் பாடலுக்கு டான்ஸைப்போட, ஸ்பீக்கர் சத்தத்தை கேட்டு தேய்த்துக்கொண்டிருந்த பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு விறுவிறுவென ஓட்டமும் நடையுமாக விநாயகர் மேடை பக்கம் ஓடினார் வள்ளி ஆச்சி. அந்த விஜய் பாடல் முடியும் வரை ஒரு ஓரமாக நின்று சிறுவர்களின் டான்ஸை பார்த்துவிட்டே வீட்டிற்கு திரும்பினார். ஓட்டமும் நடையுமாக விஜய் பாடலை பார்க்க வள்ளி ஆச்சி சென்றது ஒரு சித்திரமாக அப்படியே மனதில் நிற்கிறது.

 

60+ வயதில் இருந்த வள்ளி ஆச்சியும் விஜய் ரசிகர். திருமண வயதில் இருந்த அவருடைய மகனும் விஜய் ரசிகர். குட்டீஸ்களாக இருந்த நாங்களும் விஜய் ரசிகர்கள். கிட்டத்தட்ட ஒரு மூன்று தலைமுறை ரசிகர் பட்டாளத்தை பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பே விஜய் உருவாக்கி வைத்திருந்தார். ஒரு நடிகர் உச்சத்துக்கு உயர இதைவிட வேறென்ன தகுதி வேண்டும்?

விஜய்
 
விஜய்

விஜய் என்பவர் ஒரு நடிகர் என்பதை தாண்டி ஒரு உணர்வாக அன்றாட வாழ்வோடு கலந்தே இருந்தார். அப்பா வெறித்தனமான ரஜினி ரசிகர். 'இளந்தென்றல் ரஜினி ரசிகர் மன்றம்' என ரஜினியின் ஆரம்பகாலத்திலேயே அவருக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய இளசுகளின் கூட்டத்தில் ஒருவர். ரஜினிக்காகவும் ரஜினி படங்களுக்காகவும் ஊருக்குள் பல அலப்பறைகளை செய்திருக்கிறார். 'கொடி பறக்குது' படத்திற்கு பெட்டி வர லேட் ஆனதால் ஒருநாள் முழுக்க தியேட்டர் வளாகத்திலேயே காத்துகிடந்து, மறுநாள் லத்தி அடியெல்லாம் வாங்கி படம் பார்த்த அனுபவத்தையெல்லாம் கேட்டு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அந்த வெறித்தனமான ரசிகரின் ஜீன்களே கொஞ்சம் ஓவராக இருந்ததில் எந்தவித ஆச்சரியமுமில்லை.

பள்ளியில் படிக்கும்போது தமிழாசிரியர் ஒரு முறை சினிமா பார்த்து கெட்டுப்போகாதீர்கள் என்ற வகையில் வழக்கமான அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது 'ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா’, ‘கமலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா’ என கேட்டுவிட்டு கடைசியாக 'உங்கள் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?’ எனக்கேட்டார். விஜய்க்கு மட்டும் அந்த 'உங்கள் விஜய்' என்கிற பட்டம் ஏன்?

வள்ளி ஆச்சி மாதிரியான எம்.ஜி.ஆர் காலத்து ஆட்களையும் விஜய்யால் எப்படி கவர முடிகிறது? நாளை பார்க்கலாம்!

 

https://cinema.vikatan.com/story-feed

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்க‌னுக்கு இஸ்ரேலுக்கு 3.3 மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் அவ‌ங்க‌ட‌  கால் தூசுக்கு ச‌ம‌ம்.................... உக்கிரேனுக்கே உத்த‌ன‌ பில்லிய‌ன் டொல‌ர‌ அமெரிக்க‌ன் அள்ளி அள்ளி கொடுத்த‌து அமெரிக்காவோடு ஒப்பிடும் போது  ஈரான் பணரீதியா கொஞ்சம் கச்டப்பட்ட நாடு.....................................
    • சுவீட்னர் நியாபகத்தை பாதிக்குமாம் - நான் ஏற்கனவே கண்ணாடியை கட்டிலுக்கு கீழே வைத்து விட்டு, பிரிஜ்ஜுக்குள் தேடுற ஆள்🤣. அதனால் இப்போ எல்லாம் பப்பாயா ஜூஸ் வித் அவுட் சுகர்தான்.  சொர்கம் அண்ணா இலங்கை - எங்க போனாலும் கிடைக்கும். இந்த நாட்டில் போய் பப்பாயா ஜூஸ் எண்டு கேட்டா ஒண்டு ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி பாக்கிறார்கள் அல்லது பப்பாளி தோட்டத்தின் விலை சொல்கிறார்கள். (சில கொச்சிகாய்களை தூவி விட்டுளேன் - உங்களுக்கு அல்ல, விலக்கி விட்டு குடிக்கவும்🤣).
    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.