Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புலிகளின் உள்நாட்டு உற்பத்தி சேணேவிகள்(Artillery) மற்றும் உந்துகணைகள் - ஆவணம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறி 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

 • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!

 


எல்லா(Hello)…

வணக்கம் தோழர்களே...

இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் போரின் போது உருவாக்கப்பட்டு சமர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகையான உந்துகணைகள் மற்றும் சேணேவிகள் பற்றியே.

முதலில் சேணேவி(Artillery) பற்றி பார்ப்போம். இவர்கள், சேணேவிகளில் நெடுந்தூர வீச்சுக் கொண்ட தெறோச்சிகள்(Howitzer) முதல் குறுந்தூர வீச்சுக் கொண்ட கணையெக்கிகள்(Mortar) வரை விளைவித்திருந்தனர்(produce). இவற்றிற்கான எறிகணைகளையும்(Shell) அவர்களாகவே மானுறுத்தியிருந்தனர்(Manufacture) என்பது குறிப்பிடத்தக்கது.

 


 • செம்மைப்படுத்தப்பட்ட சேணேவி (improvised artillery)

1) இது 106 மி.மீ பின்னுதைப்பற்ற சுடுகலனின் குழலைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.. இதன் காவுவண்டியானது புலிகளால் இதற்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாகும்.

main-qimg-ce868a581883467fc60f95526bfdaa0f.png

 


 • உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட சேணேவி ( Indigenously produced Artillery)

கீழ்கண்ட சேணேவிகள் எதற்குப் பயன்படுத்தப்பட்டன என்பது பற்றி எனக்குத் தெரியாது! தயவுகூர்ந்து இது பற்றி அறிந்தவர்கள் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்..

1. இந்த உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலும். மேலும் இதற்கு காவுவண்டி பொருத்தப்பட்டுள்ளது.

main-qimg-c312103dc0f51b09ea3ba0cdcf01260f.png

கழுத்துப்பகுதி:

main-qimg-451c812aa4d4e3326fcf5ebab609d651.png

சக்கரத்துடன் கூடிய அடிப்பகுதி:

இந்த அடிப்பகுதி ஆனது புலிகளின் உந்துகணை ஏவுபலைகையின் அடிப்பகுதியினை ஒத்தது ஆகும். இதன் அடிப்பகுதியில் உள்ள அந்த இரு தண்டுகளையும் விரித்து ஒடுக்கலாம்.

main-qimg-2fba74cea05dd2dbd6554ab545b2cec2.png

நுனிக்குழாய்:

main-qimg-792f02f67ad82fc1ad9a46e425da9915.png

2)இதே போன்று மற்றொன்று பின்னால் தெரிகிறது பாருங்கள்.. அதுவும் இதே வகையைச் சேர்ந்ததே….

main-qimg-29d162387b2823d0fcefd14210cb3c34.png

3). இந்த உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது.

main-qimg-ce9fd0c947d438206849b5ced7aa864b.png

4) புலிகளிடம் இருந்த மற்றொரு வகையான உந்துகணை கணையெக்கி.. இது எதற்குப் பயன்பட்டது என்பது பற்றிய செய்திகள் ஏதும் எனக்குத் தெரியவில்லை. இந்த உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது.

main-qimg-2fd57ba0f894e059b22247b1bc002b86.png

'3 படங்களை ஒருங்கிணைத்தே இப்படத்தினை உருவாக்கினேன்'

மேற்கண்ட படைக்கலத்தின் அடிப்பகுதி:

main-qimg-c249b5044844000827e47af77c55e7f7.png

→ மேலுள்ள அனைத்துப் படங்களும் திரைப்பிடிப்பே!

 


 • பாபா கணையெக்கி - Baba Mortar

இது 1980களின் பிற்பகுதியில் விளைவிக்கப்படட்டது ஆகும். இதை விளைவித்தவர் புலிகளின் அப்போதைய தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் கொச்சரையர்(Captain) வாசு ஆவார்.

இதில் செம்மைப்படுத்தப்பட்ட 120 மிமீ எறிகணைகளானவை எறிகணைகளாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சுற்றுகளில் தார் இருந்ததால், அவை தரையில் மோதியபோது தீயினை ஏற்படுத்தின.

main-qimg-9c2b17929c94159ef06fd90946bb49b0.png

'பாபா கணையெக்கியினுள்(Mortar) எறிகணையினை(shell) போராளிகள் தாணிக்கின்றனர்(Load)'

main-qimg-1c7e6e47aecac9f78e8e9ec06bd692db.png

'அந்த கணையெக்கியின் முழுப் படம்'

→ மேலுள்ள அனைத்துப் படங்களும் திரைப்பிடிப்பே!

பாபா கணையெக்கியின் 120 மிமீ எறிகணைகள்.

main-qimg-b18db6bfe26b0b8f98a20f63c3bdce28.png

 

 


 • பசீலன் 2000 உந்துகணை கணையெக்கி (Pasiilan 2000 Rocket Mortar)

புதுப்புனைந்தவர்: பேரரையன்(கேணல்) ராயு / குயிலன் (மாவீரர்)

எண்ணிக்கை: 11 (ஆதாரம்

இது முற்றிலும் விடுதலைப் புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது. இதைக் குத்துவதற்கென்றே புலிகளிடம் தனிப் பிரிவே இருந்தது. அதன் பெயர் 'பசீலன் மோட்டார் பிரிவு' என்பதாம். இதுதான் ஈழத்தமிழரின் முதலாவது சேணேவிப் பிரிவு(Artillery unit) ஆகும்.

இது புலிகளால் 80களில் பயன்படுத்தப்பட்ட பாபா கணையெக்கி எனப்படும் கணையெக்கியின்(mortar) கால்வழியே(successor) ஆகும்.. இதற்கான எறிகணையினைக் கூட புலிகள் உள்நாட்டில்தான் விளைவித்திருந்தனர். இந்த எறிகணையின் வெடிப்பொலியானது எதிரிகளை கொல்கிறதோ இல்லையோ அவர்களின் காதுகளை செவிடாக்கி செந்நீரை வரவழைக்கும் என்பதே முதன்மையான புலனம்.. இந்த பேரொலியைக் கேட்கும் பாதிபேர் அந்த இடத்திலே நெஞ்சிடி வந்து புத்தனின் பாதத்தைக் காணச் சென்றுவிடுவார்கள்.. அப்படி ஒரு பேரிடி கேட்கும், இது வீழ்ந்துவெடிக்கும் இடத்தில்! அது மட்டுமல்ல இதை ஏவுபவருக்கும் இதே சிக்கல் உண்டு, ஆனால் அது எதிரிக்கு ஏற்படுவதைவிட குறைவானதே!... பிற்காலங்களில் ஏவுபவருக்கான இந்த சிக்கல் சரிசெய்யப்பட்டு விட்டது.

இது புலிகளின் உருமறைப்பு (camouflage) மற்றும் மறைக்கும் தாக்குதல்(conceal attacking) பாணிக்கு ஏற்ப தெறோச்சி(artillery) அல்லது பல்குழல் போன்றவற்றால் ஏற்படுத்தப்படும் நிலையான முகவாய் எரிப்புகளைப் (muzzle flares) போன்று இதன் எறிகணை வெளியிடுவதில்லை. ஆனால் தொடக்க காலங்களில் குத்தும்(fired) போது ஏற்படுத்தும் பேரொலியானது இதன் இருப்பிடத்தை காட்டிகொடுக்கும் வாய்ப்பிருந்து பின்னர் சரிசெய்யப்பட்டது. இது வெடிக்க வேண்டுமெனில் செங்குத்தாக அதன் நுனி தரையை நேராக மோதுவதாக வீழவேண்டும். இதனால் இதன் தொடக்க காலங்களில் செங்குத்தாக வீழாத எறிகணைகள் வெடிப்பதில்லை.. ஆனால் ஒருசில ஆண்டுகளில் இந்த சிக்கல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சரிசெய்யப்பட்டது.

1) இதுதான் தமிழீழத்தின் முதலாவது பசீலன் 2000 உந்துகணை கணையெக்கி. இது பேரரையன் ராயு அவர்களின் மேற்பார்வையில் சோதிக்கப்பட்டது.

main-qimg-5c2b6583b9666daf54656c1c2ce4bbca.png

main-qimg-d2f4b484f28df89ed36fcac4e3c21ca9.png

main-qimg-3d0892f10937b531e86b2e6f1f3a3bef.png

'வானை நோக்கி சீறிச்செல்லும் முதலாவது எறிகணை'

2) இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. இந்நிழற்படமானது 90களில் எடுக்கப்பட்து ஆகும்

main-qimg-f55b91c50c35d60ea6a7c35a007b468e.jpg

'இரண்டு புலி வீரர்கள் மேசை போன்ற ஒன்றின் மீது ஏறி நிற்கின்றனர்.. கீழே ஒரு வீரன் பசீலனுக்கான எறிகணையினை சுமந்தபடி நிற்கின்றார்'

main-qimg-7bbab02c60314baf13c4ef39e03b759a.jpg

'பசீலனுக்கான எறிகணை தாணிக்கப்படுகிறது (loaded)'

3) இதே போன்ற விதத்தைச் சேர்ந்த பசீலன் 2000 கணையெக்கிகள் புலிகளிடம் 2 இருந்துள்ளது. மேலதிகமாக இருந்ததா என்று அறியமுடியவில்லை. இந்த உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது.

main-qimg-36a7fe5a0658ea21685d19dc154c6ae3.png

'சில்லுக்கு அருகில் இருப்பதுதான் இதற்கான எறிகணை'

மேற்கண்டதின் பின்பகுதி:

main-qimg-772a824d557a7b393afdecb8bfc9c0cf.png

4) இதே போன்ற விதத்தைச் சேர்ந்த பசீலன் 2000 கணையெக்கிகள் புலிகளிடம் 2 இருந்துள்ளது.

1)இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது.

main-qimg-88b8939863a143042b222e605379553f.jpg

2) இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது.

main-qimg-afab12cbabc48886a674162f29315233.jpg

main-qimg-3f36427173c1520b7857b306185ce89f.png

main-qimg-83dc6f53f39f2db4d3ddc5d47c32cdc0.png

main-qimg-1477cf35b54961c96eb01cb51108fc97.png

'சிங்களத் தரைப்படை வீரன் பசீலன் 2000 கணையெக்கியில் உள்ள ஒரு சக்கரத்தினை தன் கையால் சுற்றுகிறார். இந்த சக்கரத்தினை சுற்றுவதால் இதன் குழல் தாழ்ந்துயரும்.'

main-qimg-450e78c75eece262134e7fdeeb313f5a.png

main-qimg-f7f2b9037bd4e2462701c1d8226867ed.png

 

5) பசீலன் 2000 உந்துகணையின் மற்றொரு விதம்.

இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. மேலும் இதன் சுடுகுழல் கட்டையாகவும் உள்ளது.

main-qimg-90cd0678b6afbda800794fdf577fcf52.png

main-qimg-8b1913e98d8b19ec2583a3d3e6a54576.png

மேற்கண்ட பசீலனுக்கான எறிகணைகள்:

main-qimg-d21e326b81424fd7fde27ebc71cb3c43.png

 

 

எறிகணை நீளம்: 5'

நெடுக்கம்(range): 15 - 25 km

வெடியுளை(war head): 65–70 kg

வெடியுளை வகை : TNT

main-qimg-93560d230c0525b4b8a1716217790198.jpg

'பசீலன் எறிகணையை தூக்கி நிறுத்தும் பசீலன் மோட்டார்(கணையெக்கி) பிரிவுப் போராளி '

 

எறிகணை நீளம்: ஆனால் இது மேலே உள்ள எறிகணையை விட உயரம் குறைந்தது.

நெடுக்கம்(range): தெரியவில்லை

வெடியுளை(war head): தெரியவில்லை

மேற்கண்ட எறிகணையை விட இது உயரம் குறைந்தது.

main-qimg-3e738dca40c112b3ffdce01c8886a864.png

 

எறிகணை நீளம்: ஆனால் இது மேலே உள்ள எறிகணையை விட உயரம் குறைந்தது.

நெடுக்கம்(range): தெரியவில்லை

வெடியுளை(war head): தெரியவில்லை

மேற்கண்டதை விடச் சிறியவை இவை:

main-qimg-311995a87e21daa5ac60e9d7f6f2c388.png

 

வகை 4 எறிகணை:-

main-qimg-02e674e55138b1006dc7701779c67b13.png

 

மாமா & வகை 4 எறிகணை:

main-qimg-c50af68bc8add1367af57200b6645e7b.jpg

main-qimg-d233be305e1b32f7e6abb89161282fe7.jpg

 

2) பசீலனுக்கான பிறிதொரு வகையைச் சேர்ந்த எறிகணை:

எறிகணை நீளம்: ஆனால் இது மேலே உள்ள எறிகணையை விட உயரம் குறைந்தது.

நெடுக்கம்(range): தெரியவில்லை

வெடியுளை(war head): தெரியவில்லை

main-qimg-8852879648a59c2c41e6831230ed6ac1.png

 


 • எறிகணை (shell)

1) மொக்கன் (Mokkan)

புதுப்புனைந்தவர்: பேரரையன்(கேணல்) சாள்ஸ் அன்ரனி (மாவீரர்)

எறிகணை நீளம்: 10'

நெடுக்கம்: தெரியவில்லை

வெடியுளை(war head): 300 kg

வெடியுளை வகை : C4

இது ஒரு வகையான எறிகணை.. இதுவும் விடுதலைப் புலிகளால் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டதுதான். இதை ஏவுவதற்கான சேணேவி(artillery) பற்றிய செய்திகள் ஏதும் எனக்குக் கிடைக்கப்பெறவில்லை.

main-qimg-cc22686694057ab2ca39c45ecd30d018.png

'வகை -56 - 2 துமுக்கியுடன்(rifle) நிற்பவர்கள் சிங்கள இராணுவத்தினர்'

main-qimg-cc75b7af125a524e4fb0a63ba94277a7.jpg

எறிகணையின் கழுத்துப்பகுதி:

main-qimg-46bdab9aca0e50edadf93aac292d83fa.png

 

2) ராகவன் 152மிமீ எறிகணை

இந்த 152 மிமீ எறிகணைகள் பல்வேறு நெடுக்கத்தில் இருந்தன.

Ragavan Shells.jpg

 

 


அடுத்து, உந்துகணைகள் பற்றிப் பார்போம். இவை புலிகளால் நான்காம் ஈழப்போரில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இவையெல்லாம் அவர்களின் உள்நாட்டுப் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டன ஆகும்.

 • உந்துகணைகள் மற்றும் அதற்குரிய செலுத்திகள் (Rockets & their respective launchers)

1) பண்டிதர் 1550(Pandithar 1550)

இதன் வெடியுளையில் மூன்று முனைகள் உண்டு.

 • புதுப்புனைந்தவர்: பேரரையன்(கேணல்) சார்ள்ஸ் அன்ரனி (மாவீரர்)
 • 'பண்டிதர்' என்னும் பெயர்காரணம்: விடுதலைப் புலிகளின் உறுப்பினர் இள பேரரையன்(லெப்.கேணல்.) பண்டிதர் அவர்களின் நினைவாகச் சூட்டப்பெற்றது
 • பட்டப் பெயர்: சமாதானம்(Samaathaanam)
  • பெயர்க்காரணம்: அதன் ஒலி மற்றும் அது தரும் தாக்கம் ஆகிய இரண்டும் இரு தரப்புகளுக்கும் இடையில் சமாதானத்தை உண்டாக்குமளவு சக்தியானது என்றுதான் அப்படி அழைக்கப்பட்டது.
 • வெடியுளை(war head): 214 kg
 • வெடியுளை வகை : C4
 • உந்துகணை நீளம்: 14'
 • நெடுக்கம்: 6 km
 • இருப்பில் இருந்த இழுவையுடன் கூடிய ஏவுபலகைகள் (launchpad with trailer): 15
 • நேரடி தாக்கம்: 50m சுற்றுவட்டத்தை அழிக்கும்

இந்த உந்துகணைகள் விடுதலைப் புலிகளால் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டவை ஆகும். அதனை துக்கி தாணிப்பதற்கு(load) குறைந்தது இருவர் என்றாலும் வேண்டும்.. இந்த உந்துகணையை இயக்க சுமார் ஆறு பேர் தேவை. இதனை இயக்கும் இடத்தில் இயக்குபவர்கள் நிக்கமட்டார்கள், சுமார் 50 மீற்றர் துரத்தில் நின்றுதான் இயக்கவைப்பர்கள். இது இலக்கில் வீழ்ந்து வெடிக்கும் போது பாரிய ஒலி கேட்கும் ,அதன் துண்டுகள் கூட படையினரில் படத்தேவையில்லை இது வெடிக்கும் போது எழும் சத்தமே படையினரை கொன்றுவிடும் .

இந்த உந்துகணைகள் முதன் முதலில் முகமாலை முன்னரணில் உள்ள படையினர் மீதுதான் சோதித்துப் பார்க்கபட்டது . அதன் பின்னர் தான் இந்த உந்துகணையின் மானுறுத்தல்(manufacturing) அதிகரிக்கபட்டு மன்னார் ,வவுனியா, மணலாறு போன்ற களமுனைகளுக்கு அனுப்பிவைக்கபட்டது.

ஆனால் சமாதானம் பின்னர் பயன்படுத்தப்படவில்லை. அவற்றை காவிச்செல்வது, செயல்படுத்துவது போன்ற செயற்பாடுகளுக்கு மேலதிக போராளிகள் தேவைப்பட்டதால் முகமாலை முன்னரங்கு பகுதி சண்டைகளோடு உள்ளூர் விளைவிப்புக்கள் நிறுத்தப்பட்டன.

main-qimg-adad10bf85738816a9b3c01af1e67352.png

'பின்பகுதி.. கீழிருந்து மேனோகிய பார்வை'

main-qimg-affb299bb5d9de2359c23c917dde9eda.png

'பக்கவாட்டுத் தோற்றம்.. உந்துகணை அதன் ஏவுபலகை மேல் வைக்கப்பட்டுள்ளது. ஏவுபலகை காவுவண்டியுடன் பொருத்தப்பட்டுள்ளது'

main-qimg-f1d1c52ac1ed532083c4c71d2c7bb43c.png

'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை.. உந்துகணை அதன் ஏவுபலகை மேல் வைக்கப்பட்டுள்ளது. ஏவுபலகை காவுவண்டியுடன் பொருத்தப்பட்டுள்ளது'

main-qimg-723a3ffcce5909bfaf2ff273e74720e0.png

'காவுவண்டியில் பொருத்தப்பட்டுள்ள ஏவுபலகைகள்'

main-qimg-e8dcab6bdfc82b53570ae8edf64b546e.png

'காவுவண்டியில் பொருத்தப்பட்டுள்ள ஏவுபலகைகள்'

main-qimg-891319f91ee6dcdde651270c9c5a7778.png

'முன்பக்கம்.. மூன்று முனைகளும் தெரிகிறது ஆனால் அதில் ஒரு முனை மட்டும் கழற்றப்பட்டுள்ளது'

main-qimg-123a462f67fc48474c181a1ff18878fe.png

'உந்துகணை நிலத்தில் வைக்கப்பட்டுள்ளது.. பின்னிருந்து முன்னோக்கிய பார்வை(back to front view)'

வெடிக்கும் காட்சி:

main-qimg-0bfaa24f3a2c5615ed167198907effb3.png

'உற்றுப் பார்க்கவும்; மூன்று முனையும் வெடித்து மூன்று தீப்பிழம்பாய்த் தெரிகிறது'

 

2) சண்டியன் (Sandiyan)

சமாதனம் போன்று இது படையினருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது . ஆனால் படையினர் இதன் பெயரை சொல்லி அச்சப்படும் அளவிற்கு இதன் தாக்கம் இருந்தது. இந்த உந்துகணை முதன்முதலாக 2000 ஆண்டு 3ம் மாதமளவில் சாளஸ் அன்ரனி அவர்களால் முல்லை.சாலைத் தளத்தில் பரிசோதிக்கப்பட்டு வெற்றிகரமாக உறுதிசெய்யப்பட்டது.

 • புதுப்புனைந்தவர்: பேரரையன்(கேணல்) சார்ள்ஸ் அன்ரனி (மாவீரர்)

உந்துகணை நீளம்: 4'

நெடுக்கம்: <15 km

வெடியுளை(war head): 65 kg

வெடியுளை வகை : C4

தாக்க சுற்றுவட்டம் : 800m

main-qimg-fc155a20f035259681edf0d2c8e5cb19.jpg

'சண்டியனை ஏவ ஆயத்தமாகும் புலிவீரன்'

main-qimg-65dd7a8161092806c3caa56980a54a2a.jpg

'சண்டியனை ஏவிட்டு காவுவண்டியின் ஏற்றக்கோணத்தை மாற்றும் புலிவீரர்கள்'

main-qimg-c270f3073401b0c202fbaec0a172039a.jpg

'நிலையான ஏவுபலகையில் உந்துகணை வைக்கப்பட்டுள்ளது. |பின்னிருந்து முன்னோக்கிய பார்வை'

main-qimg-96b523ab625f92fb27a29b3dd124a644.jpg

'நிலையான ஏவுபலகையில் உந்துகணை வைக்கப்பட்டுள்ளது. |பின்னிருந்து முன்னோக்கிய பார்வை'

main-qimg-7b5479af05e76fa0048ff31154600d0b.jpg

'நிலையான ஏவுபலகையில் உந்துகணை வைக்கப்பட்டுள்ளது. |பக்கவாட்டுத் தோற்றம்'

main-qimg-38cd289d74eac35944bc6dc09ae9148c.jpg

'முழுமையடையாத உந்துகணை ஏவுபலகையில் வைக்கப்பட்டுள்ளது. ஏவுபலகை காவுவண்டியுடன் பொருத்தப்பட்டுள்ளது'

main-qimg-b060de16be8b9453993704384d65d87a.png

main-qimg-8907879d5612676456a6dc74ae0acc85.png

'சண்டியன் உந்துகணையின் அடிப்பகுதி. அடிப்பகுதியில் தெரியும் இந்த தந்திரிகை(wire) மூலம் தான் இது இயக்கப்படுகிறது (கொளுத்தப்படுகிறது)'

main-qimg-5db2fea3167a69312ff6a8432cc4d1a9.png

'

'இங்குதெரியும் மொத்த ஏவுபலகை கொண்ட காவுவண்டிகளின் எண்ணிக்கை = 8'

3) இந்திய அமைதிப்படை என்னும் பசுத்தோல் போர்த்திய ஓநாய்களிடம் புலிகளால் ஒப்படைக்கப்பட்ட ஆய்தங்களின் ஒரு தொகுதி.. இதில் நன்கு உத்துப்பாருங்கள், வெள்ளை நிற வெடியுளை(war head) கொண்ட இரண்டு உந்துகணைகள் தெரிகின்றன. ஆனால் அவற்றின் வகை என்னவென்று என்னால் அடையாளம் காண முடியவில்லை.

main-qimg-62268f3b08a725a57b32c57cd788a12d.jpg

4) சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்ட 'சண்டியன் உந்துகணை'யின் இருபக்கமும் வேறுபாடான இரு உந்துகணைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.. அவை பற்றிய எந்தவொரு புலனமும் தெரியவில்லை.

main-qimg-e2512655130fa03ea7d8e4504d150e23.png

 

5)போருக்குப் பின்னான காலத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு வேறுபாடான உந்துகணை.

main-qimg-525bd516dd8a1b51c98a8b2451cdfe20.jpg

 

 


 • பல்குழல் உந்துகணை செலுத்திகள் (multi barrel rocket launchers)

கடைசியாக புலிகளால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட பல்குழல் உந்துகணை செலுத்திகள் பற்றியும் அவற்றில் எறிகணையாகப் பயன்படுத்தப்பட்ட உந்துகணைகள் பற்றியும் காண்போம்.

ஈழத்தீவிலே முதன்முதலில் பல்குழல் உந்துகணையினை பயன்படுத்தியவர்கள் புலிகளே. இவர்கள் இதை 1987 ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்துகின்றனர்

இந்திய அமைதிப்படை என்னும் பெயரில் வந்த இந்திய படைகளால் 1987 இல் மேற்கொள்ளப்பட்ட பவான் நடவடிக்கையின் போது புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட உள்நாட்டு பல்குழல் உந்துகணை செலுத்திகள்:-

main-qimg-5eee8d2ddca3876fdbbcf50d083834a8.png

இதன் பிறகு அதாவது 1990 இல் இருந்து புலிகளிடம் மொத்தம் 5 பல்குழல் உந்துகணை செலுத்திகள் இருந்ததாக அறியப்படுகிறது.. அவற்றுள் ஒன்று மட்டுமே வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டதை நான் இங்கு இணைக்கவில்லை. ஏனைய நான்கும் உள்நாட்டிலே புலிகளால் உருவாக்கப்பட்டவை.. நான் இங்கு புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ப.கு.உ.செ பற்றி மட்டுமே குறிப்புகளைக் கொடுக்கிறேன்.

இவற்றினை புலிகள் தங்களின் படகுகளிலும் காவிச்சென்று எதிரியின் தளங்கள் மீது கடலில் இருந்தபடியே உந்துகணைத் தாக்குதல் நடத்துவார்கள். அதிலும் குறிப்பாக திருகோணமலைத் துறைமுகம் மீது கடந்த 2000 ஆம் ஆண்டு நடத்தபட்ட பல்குழல் தாக்குதல் குறிப்பிடத்தக்கதாகும்

1) அறுகுழல் கொண்ட ப.கு.உ.செ

எறிகணை: 107mm

பெரும வீச்சு நெடுக்கம் (max. firing range): 8km

சிறும வீச்சு நெடுக்கம்(min. firing range): 1km

குத்தும் வீதம்(rate of fire): 10 சுற்றுகள்/ நிமிடம்

இந்த பல்குழல் உந்துகணை செலுத்தியை பார்பதற்கு ஏதோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது போன்று தோற்றமளிக்கிறது. உள்ளூரிலே அவர்களால் இவ்வாறு உருவாக்கப்பட்டமை பெரும் மலைப்பாக உள்ளது. இது காவுவண்டியில்தான் பொருத்தப்பட்டிருந்தது.

main-qimg-35b174030a8c6b2a75ade50f0ec5f8f6.png

main-qimg-fe6f5d481730574418b2fc878485d8a6.png

main-qimg-d4a3b12eda24e3e933ba3a3c529c20a1.png

main-qimg-fcea94efef6ccd97fda37df46cb002ae.jpg

'உந்துகணைகள் தாணிக்கப்பட்டுகின்றன (load). தாணிப்பவர் சிங்கள தரைப்படை வீரர்'

main-qimg-387107375ba3c86b7c8a80b30ea84bcd.jpg

'உந்துகணைகள் தாணிக்கப்பட்டுள்ளன'

 

2) அறுகுழல் கொண்ட ப.கு.உ.செ

எறிகணை: 107mm

பெரும வீச்சு நெடுக்கம் (max. firing range): 8km

சிறும வீச்சு நெடுக்கம்(min. firing range): 1km

குத்தும் வீதம்(rate of fire): 10 சுற்றுகள்/ நிமிடம்

main-qimg-98c6465740fb675431703ca3d5176cd4.png

main-qimg-e3d93be2c7ffb71bc3395e91b03cfadc.png

 

3) நாற்குழல் கொண்ட ப.கு.உ.செ

எறிகணை: 107mm

பெரும வீச்சு நெடுக்கம் (max. firing range): 8km

சிறும வீச்சு நெடுக்கம்(min. firing range): 1km

குத்தும் வீதம்(rate of fire): 10 சுற்றுகள்/ நிமிடம்

ப.கு.உ.செ சில்லுக்கு அருகில் உள்ளவைதான் இதற்கான உந்துகணைகள். இதுவும் காவுவண்டியில்தான் பொருத்தப்பட்டிருந்தது.

main-qimg-2dd07524001ae19de304c493993431ab.jpg

 

4)ஒற்றைக்குழல் கொண்ட ப.கு.உ.செ

எறிகணை: 107mm

பெரும வீச்சு நெடுக்கம் (max. firing range): 8km

சிறும வீச்சு நெடுக்கம்(min. firing range): 1km

குத்தும் வீதம்(rate of fire): 10 சுற்றுகள்/ நிமிடம்

இதுவும் காவுவண்டியில்தான் பொருத்தப்பட்டிருந்தது.

main-qimg-219bb9762be130d1a71853020157edd1.png

 


உசாத்துணை:

படிமப்புரவு

தொகுப்பு & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

இதுதான் புலிகளின் பண்டிதர் மற்றும் சண்டியன் உந்துகணைகளுக்கான ஏவுபலகை ஆகும்

 

 

 

 

விடுதலைப் புலிகளின் உள்நாட்டு தயாரிப்பு சேணேவிகள்: https://eelam.tv/watch/வ-ட-தல-ப-ப-ல-கள-ன-உள-ந-ட-ட-தய-ர-ப-ப-ச-ண-வ-கள-artilleries_nMg2loPYTgbtmsJ.html

 

 

இதனுள்தான் விடுதலைப் புலிகளின் உள்நாட்டு தயாரிப்பு சேணேவிகளின்(Artillery) நிகழ்படம் உள்ளது. முற்றிலும் சிதைந்த நிலையில் இந்நிகழ்படம் உள்ளது. யாரேனும் இதனை HD விருத்திற்கு(version) மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலிகளால் வெளிநாட்டில் வாங்கப்பட்ட பல்குழல் உந்துகணை செலுத்தியின் பெயர்:  

சீன வகை-63 12 குழல்  107மிமீ  ப.உ.செ. | Chinese T-63 12 Barrel 107mm  MBRL

 

 

இது மட்டக்களப்பு தொப்பிக்கல்லில் இருந்து சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்டது  ஆகும்

 

ltte-mbrl.jpg

 

unnamed (1).jpg

 

 

 

 

குறிப்பு: அடோய்... தொப்பிக்கல் வேறு; குடும்பிமலை வேறு... இரண்டையும் போட்டு குழப்பியடிக்க வேண்டாம்!

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By நன்னிச் சோழன்
   நம் வரலாற்றை
   நாமே எழுதுவோம்'
   ------------------------
   எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!  
   என்னிடம் இருக்கின்ற விடுதலைப் புலிகளின் இழுவை தெறோச்சிகளின்(Towed Howitzer) நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
    
    
   விடுதலைப் புலிகளிடம் இருந்த தெறோச்சிகள் இழுவை தெறோச்சிகள்(Towed Howitzer) ஆகும்; அவர்களிடம் தானே-பிலிறுந்திய தெறோச்சிகள்(Self-Propelled Howitzer) இருந்திருக்கவில்லை. ஏன் எம் பகையான சிங்களபப்டைகளிடத்தில் கூட அவை இருந்திருக்கவில்லை.  புலிகளின் இத்தெறோச்சிகளை இயக்கிய படையணி 'கிட்டு பீரங்கிப் படையணி' ஆகும். இது முற்றுமுழுதாக தெறோச்சிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட படையணியாகும். இப்படையணியில் ஆண்பெண் என இருபால் போராளிகளும் பணிபுரிந்தனர்.
    
    
   கிட்டு பீரங்கிப் படையணியின் இலச்சினை | Logo of Kittu Artillery Brigade   
   வரலாற்றில் மறைக்கப்பட்டது!
    
    
   எனக்கு கிடைக்கப்பெற்ற இயக்கத்தின் எந்தவொரு ஆவணத்திலோ இல்லை அவர்களின் புத்தகங்களிலோ இந்த படையணியின் இலச்சினை இடம்பெறவில்லை. விடுதலைப் புலிகள் இந்தப் படையணியின் இலச்சினையினை படையணி பற்றிய கமுக்கத்தினை பேணுவதற்காக மறைத்தார்களா இல்லை வேறு ஏதேனும் காரணங்களால் மறைத்தார்களா என்பது பற்றி நானறியேன். ஆனால் இப்படையணியின் இலச்சினை சிதைவுற்ற  இரண்டு திரைபபிடிப்புகளை நான் தேடியெடுத்துள்ளேன். அவற்றை வாசகரின் கனிவான வாசிப்பிற்காக இங்கே பதிவிடுகிறேன். 
    

   'இதுதான் கிட்டு பீரங்கி படையணியின் சின்னம்'
   சின்னத்தின் மேற்பக்கத்தில் வளைவாகத் தெரிவதில்தான் கிட்டு பீரங்கிப் படையணிக்கான முழக்கம் எழுதப்பட்டிருந்தது.
    

   'கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்..'
   இந்த வெள்ளையாகத் தெரிவதில் 'கேணல் கிட்டு பீரங்கிப் படையணி' என்று எழுதப்பட்டிருந்தது. அது அரை வட்ட வடிவத்தில் இருந்தது. இது Maroon பின்புல நிறங்கொண்ட சின்னம் ஆகும். மேற்கண்ட படங்களை வைத்துப் பார்க்கும்போது கிட்டுவும் குட்டிசிறியும் ஒரே மாதிரியான தோற்றங் கொண்ட சின்னங்கள் என்பது புலப் படுகிறது. எதற்கும் தேடி எடுங்கள்.
    
   இவை மட்டுமே இப்படையணியின் இலச்சினை பற்றிய தகவல்கள் கொண்ட படங்கள் ஆகும். இப்படையணி போராளிகளை அறிந்தோர் அவர்களிடம் இதனது இலச்சினையினை வேண்டி வரைந்து எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    
    
    
     இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
    
  • By நன்னிச் சோழன்
   'நம் வரலாற்றை
   நாமே எழுதுவோம்'
   ------------------------
   எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!  
   என்னிடம் இருக்கின்ற விடுதலைப் புலிகளின் கணையெக்கிகளின்(Mortar) நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
    
   புலிகளின் இக்கணையெக்கிகளை இயக்கிய படையணிகள் 'குட்டிசிறி மோட்டார் படையணி'(வட தமிழீழம்) & 'ஜோன்சன் மோட்டார் படையணி'(தென் தமிழீழம்) என்பனவாகும். இவை முற்றுமுழுதாக கணையெக்கிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட படையணிகளாகும். இப்படையணிகளில் ஆண்பெண் என இருபால் போராளிகளும் பணிபுரிந்தனர். 
   இப்படையணிகள் தவிர்த்து விடுதலைப் புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 'பசீலன் 2000' என்ற உந்துகணை கணையெக்கியினை இயக்குவதற்கு மேஜர் 'பசீலன் மோட்டார் பிரிவு' என்ற தனிப்பிரிவே இருந்தது. இப்பிரிவின் செயல்பாட்டுக் காலம் பற்றிய தகவல்கள் 1992 இற்கு பின் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் இதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர் சூட்டப்பெற்ற முதலாவது சேணேவிப் பிரிவாகும்(Artillery Unit) என்பது ஓர் வரலாற்றுத் தகவல். இப்பெயர் சூட்டல் தோராயமாக 1989 ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கலாமென என்று எண்ணுகிறேன். ஏனெனில் அந்த ஆண்டில்தான் இக்கணையெக்கி புதுப்புனையப்பட்டது(invented) ஆகும்.
   இந்த பசீலன் 2000 என்ற கணையெக்கிக்கு முன்னர் 'பாபா மோட்டார்' என்ற அதிகளவில் நெருப்பை கக்கும் கணையெக்கி  விடுதலைப்புலிகளிடம் பயன்பாட்டில் இருந்தது. ஆனால் இதை இயக்குவதற்கு ஏதேனும் தனிப் பிரிவிருந்ததா என்று நான் தேடி வாசித்த எந்தவொரு புத்தகங்களிலும் இல்லை. (வாசகர் யாருக்கேனும் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.)  
    
    
   குட்டிசிறி மோட்டார் படையணியின் இலச்சினை | Logo of Kuttisri Mortar Brigade
    

   இதில் உள்ள பின்புல நிறம் பிழை. பின்புலத்தில் கீழ்க்கண்ட கொடியில் உள்ளவாறு மேலே மஞ்சளும் கீழே சிவப்பும் வர வேண்டும்.
    

    
    
    
    
   ஜோன்சன் மோட்டார் படையணியின் இலச்சினை | Logo of Johnson Mortar Regiment
    
   தென் தமிழீழத்தின் ஏழு இலச்சினைகளும் வைத்திருக்கிறேன். ஆனால் எது ஜோன்சன் மோட்டார் படையணியினது என்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்ததும் இங்கே வெளியிடுகிறேன்.
    
    
    
    
    இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
    
 • Topics

 • Posts

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.