Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நம் வாழ்வியலில் எல்லாமே செயற்கையாகப் போய்விட்டது.

உணவிலிருந்து உறவு வரை எல்லாமே செயற்கை

செயற்கையாகவே வாழப் பழகிவிட்ட நமக்கு

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த சங்கத்தமிழர் வாழ்வியல் வியப்பளிப்பதாகவுள்ளது.

கடற்கரை ஓரம்!
நாவல் மரத்திலிருந்து நாவல் கனி வீழ்ந்து கிடக்கிறது,
கரிய கனியாயினும் இனிய கனி ஆதலால் அதனை வண்டு மொய்த்திருக்கிறது.
வண்டும் கருமை நிறம் கொண்டது ஆதலால், கனியைக் உண்ண வந்த நண்டு வண்டைப் பிடித்தது.
நண்டிடமிருந்து தப்பிக்க. வண்டு ஒலி எழுப்பியது. வண்டின் ஒலி இனிய யாழோசை போல இருக்கிறது.

அவ்வேளையில் இரைதேடி வந்தது நாரை.

நாரைக்கு அஞ்சிய நண்டு வண்டை விட்டு நீங்கிச் சென்றது.

இவ்வழகிய காட்சி அகவாழ்வியலை இயம்ப துணைநிற்கும் சங்கப்பாடலாக இதோ...

“பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து,
5 கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும், சிறிய
10 ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?-மகிழ்ந்தோர்
கள்களி செருக்கத்து அன்ன
காமம்கொல்?-இவள் கண் பசந்ததுவே!“


நற்றிணை 35. (நெய்தல்)
அம்மூவனார்.

கூற்று - மண மனைப் பிற்றைஞான்று புக்க “தோழி நன்கு ஆற்றுவி்த்தாய்“ என்ற தலைமகற்கு சொல்லியது.

காதலுக்குத் துணைநின்ற தோழியிடம் தலைவன் பிரிவின்போது நீ தலைவியை நன்கு ஆற்வி்த்தாய் என்றான். அதற்கு தோழி தலைவியின் பொருட்டு நான் தாய்க்கு அஞ்சினேன். அவளின் பிரிவாற்றைமை நீங்க நீயே விரைந்து வந்து காத்தாய் என்றாள். மேலும் தலைவி உன் சிறு பிரிவையும் தாங்கமாட்டாள். அதனால் அவளை நீங்காது இருத்தல் வேண்டும் என்கிறாள்.

பாடலின் விளக்கம் உரையாடலாக

தலைவி - வா தோழி! வா! உன்னைப் பார்த்து எவ்வளவு நாட்களானது..

தோழி - ஆம் நீண்ட நாட்களானது.. எப்படியிருக்கிறாய்..?

தலைவி - எனக்கென்ன நான் நன்றாக இருக்கிறேன்.

தலைவன் - வா தோழி நன்றாக இருக்கிறாயா..?

தோழி - நன்றாக இருக்கிறேன். தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்..?

தலைவன் - நான் நன்றாக இருக்கிறேன்..

தோழி - திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது..?

தலைவன் - மிகவும் நன்றாக இருக்கிறது. மகிழ்வாக உள்ளோம். இந்த மகிழ்ச்சிக்குக் காரணம் நீயல்லவா..

தோழி - நான் என்ன பெரிதாகச் செய்துவிட்டேன்.

தலைவன் - நாங்கள் காதலித்த போது எனது பிரிவில் வாடியிருந்த தலைவியின் வருத்தத்தைப் போக்கி நன்கு ஆற்றுவித்தாய் இந்த உதவியை மறக்க முடியுமா..?

தோழி - நீயே விரைந்து வந்து காத்தாய் அவளின் பிரிவின் வருத்தத்தைப் போக்கினாய். இதில் எனது பங்கு என்ன இருக்கிறது..

தலைவன் - உனது பேச்சில் உனது பெருந்தன்மை வெளிப்படுகிறது.

தோழி - பொங்கி எழும் கடல் அலை மோதிய மணல் அடுத்த கடற்கறை. அங்கு நாவல் மரத்திலிருந்து கனிகள் விழுந்திருக்கும். அக்கனிகளை மொய்தவாறு கரிய வண்டினங்கள் இருக்கும். கரிய வண்டுக்கும், கரிய நாவற்கனிக்கும் எவ்வித மாறுபாடும் இல்லாது இருக்கும். நாவற்கனியைக் கொள்ள வந்த நண்டு கரிய வண்டை பழம் என்று எண்ணிக் கைக்கொள்ளும். வண்டினங்களோ நண்டிடமிருந்து தப்பிக்க யாழ்போல ஒலி எழுப்பும். அப்போது இரைதேடி அங்கு வந்த நாரையைக் கண்டு நண்டு அவ்விடத்தைவிட்டு நீங்கியது. இத்தகு கடல்துறை விளங்கும் மாந்தை நகரம் போன்றது இவளின் நலம்.

நீ களவுக்காலத்தில் சிறிது நீ்ங்கினாலும் இவள் தாங்காது பசலை கொள்வாள்.

மது அருந்தி பழக்கப்பட்டோர் மது கிடைக்காதபோது மனம் வருந்தி வேறுபாடு கொள்வர். அதுபோல உனது பிரிவை சற்றும் தாங்கமாட்டாள் இவள் அதனால் இவளை நீங்காது வாழவேண்டும்..

தலைவன் - நான் இவளை நீங்குவேனா…!!

தோழி - மகிழ்ச்சி!

உள்ளுறைப் பொருள் -

நாவற்கனி - தலைவி.
வண்டு - தோழி.
நண்டு - பெற்றோர்.
நாரை - தலைவன்.

கனியை வண்டு மொய்த்தது போலத் தலைவியைத் தோழி சூழ்ந்திருந்தாள்.
நண்டாகப் பெற்றோர் காதலைத் தடுக்க முயல நாரையாகத் தலைவன் வந்து தலைவியின் இற்செறிப்புத் துயர் நீக்கித் வரைவு (திருமணம்) மேற்கொண்டான்.

சங்கப் புலவர்கள் சங்ககால வாழ்வியலை எடுத்தியம்ப இயற்கையைத் துணையாகக் கொண்டார்களா..?

இயற்கையை எடுத்தியம்ப சங்ககால வாழ்வியலைத் துணையாகக் கொண்டார்களா..?

என வியக்கும் வகையில் சங்கஇலக்கியங்களில் இயற்கை வாழ்விலோடு கலந்திருக்கிறது.https://eegarai.darkbb.com/t149093-topic

 
 
 

 

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழக சட்டசபையின்... நூற்றாண்டு விழா இன்று! தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த விழாவின் தலைமை விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு தலைமை செயலக வளாகத்தில் 5 அடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை உயர் பொலிஸ் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் 7 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி செல்லும் வழிநெடுகிலும் 10 அடிக்கு பொலிஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1231915
  • சமீபத்திய அரசியலில்... இரு பெரும் துரோகங்களை, மக்கள் எதிர்கொண்டுள்ளனர் – ஹரிணி அமரசூரிய சமீபத்திய அரசியல் வரலாற்றில் பொதுமக்கள் இரு பெரும் துரோகங்களை எதிர்கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர ஒன்றிணைந்த மக்கள், அந்த ஆட்சியால் அதிருப்தி அடைந்தனர். பின்னர் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை பற்றிய வாக்குறுதிகளின் அடிப்படையில் 2019 இல் மக்கள் மீண்டும் நம்பிக்கையை இழந்துள்ளதாக ஹரிணி அமரசூரிய கூறினார். துரோகங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது பல்வேறு வழிகளில் தீர்வுகளைத் தேடுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அதே தரப்பினர் தற்போதும் மக்களை மீண்டும் ஏமாற்றவும் காட்டிக் கொடுக்கவும் புதிய தோற்றத்துடன் வெளியே வரத் தயாராகி வருகின்றன என்றும் ஹரிணி அமரசூரிய கூறினார். எனவே மக்கள் மீண்டும் ஏமாறாமல் தடுப்பதற்கு அனைத்து முற்போக்கு சிந்தனையுடைய அனைவரையும் ஒன்றிணையுமாறு அவர் அழைப்பு விடுத்தார். https://athavannews.com/2021/1231911
  • பாவேந்தரும் தமிழும்     எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு (சங்கநாதம்: 1-2)   எனும் முழக்கம், தமிழக மேடைகளிலும், தமிழ் உணர்வு கொண்ட ஏடுகளிலும், தமிழர்களிடையேயும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓர் எழுச்சிக்குரல்; தமிழ் உணர்ச்சியின் வெளிப்பாடு. இந்த உணர்ச்சியின் பிறப்பிடம் பாவேந்தர் பாரதிதாசனின் உள்ளம். பாரதிதாசனின் இந்த உள்ள உணர்ச்சியை அவரது பாடல்களில் பெரும் அளவில் பார்க்கலாம். தமிழ் மீதுகொண்ட பற்றால், அதைத் தன் உயிரினும் மேலாக நேசித்தமையால், தமிழை என் உயிரே என்று அழைத்து மகிழ்ந்தார். அதன் இனிமையின் சிறப்பினையும் பல பாடல்கள் மூலம் எடுத்துக்காட்டுகின்றார். விருப்பத்துக்குரிய பொருளை, தேன், பால், என்றும் கண், உயிர் என்றும் கூறும் மரபைக் கவிஞர்களிடம் காணலாம். அடியார் பலர் இறைவனை இவ்வாறு பாடியுள்ளனர். பாரதிதாசன் தமிழ் மொழியைத் தேன், பால், கண், உயிர் என்று கருதிப் பாடியுள்ளார். மொழியை இவ்வாறு வருணித்துப் பாடும் மரபும் புதியது. இம்மரபுக்கு முன்னோடியாய்த் திகழ்ந்தவர் பாரதிதாசன்.   1.1.1 தமிழ் உயிர் போன்றது   தமிழ் மொழி மீது பாரதிதாசனுக்கு அளவு கடந்த பற்று உண்டு. இதனை அவரது பாடல்களில் பரவலாகக் காணலாம். வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம், அவர் தமது தமிழ்ப் பற்றை வெளியிடுவார். தமிழைத் தன் உயிரினும் மேலாக மதித்தார், போற்றினார். எனவே,   செந்தமிழே ! உயிரே ! நறுந்தேனே ! செயலினை மூச்சினை உனக்களித்தேன் (பாரதிதாசன் இசையமுது, தமிழ்: 5)   என்று பறை சாற்றுகின்றார். இனிய தேன்போன்ற தமிழ்மொழிக்குத் தன் வாழ்வையே, வாழ்க்கையின் செயல்பாடுகள் முழுவதையுமே அர்ப்பணித்தார். எனவே தான், ‘செயலினை மூச்சினை உனக்களித்தேன்’ என்று கூறுகிறார்.   • தமிழெனும் அமிழ்தம்   பொதுவாக, அமிழ்தம் (அமுதம்) என்றால் உணவு என்று பொருள். வானுலகில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவிற்கும் அமிழ்தம் என்று பெயர். அது மிகவும் சுவை உடையது என்றும், அதை உண்பதினால் தான், தேவர்கள் சாகா வரத்துடன் வாழ்கிறார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. நல்ல சுவையான உணவை உண்ணும் போதுகூட, "ஆகா! என்ன சுவை! என்ன சுவை! ‘அமிழ்தம்’ போன்றல்லவா இருக்கிறது” என, தேவர்கள் உண்ணும் உணவை மனத்திற்கொண்டு, கூறுகிற மரபு உண்டு. பாரதிதாசனுக்கோ தமிழே அமிழ்தமாகின்றது. எனவே   தமிழுக்கும் அமுதென்று பேர் ! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் (இன்பத் தமிழ்: 1-2)   என்று பாடுகிறார். பாரதிதாசன் இன்றும் நம்மிடையே உயிர்ப்புடன் உலவவும், நம் உணர்வினைத் தூண்டவும் அவர் படைப்புகள் தானே காரணம்! எனவே தமிழை அமிழ்தம் என்றும் உயிர் என்றும் சொன்ன சொற்கள் மிகை அல்லவே!   • தமிழெனும் உயிர்   இயற்கையில் பல்வேறு வகையான சுவைகள் இருக்கின்றன. நன்கு பழுத்த பழத்தின் சுளையில் இனிமை இருக்கிறது. கரும்புச் சாற்றிலும் இனிமை உண்டு. தேனிலும் இனிமை உண்டு. காய்ச்சிய வெல்லப் பாகிலும் இனிமை இருக்கிறது. பசுவின் பாலிலும் இனிமை இருக்கிறது. தென்னையின் இளநீரிலும் இனிமை இருக்கிறது. அவ்வாறு ஆயின் தமிழில் என்ன இருக்கிறது? இதோ பாரதிதாசன் கூறுவதைக் கவனியுங்கள்: http://www.tamilvu.org/courses/degree/c011/c0114/images/c0114101.jpg காட்சி   கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும், நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் ! (பாரதிதாசன் கவிதைகள் - முதல் தொகுதி 19. தமிழின்இனிமை, முதல் பாடல்)   (கழை = கரும்பு) என்ன நண்பர்களே! “எனினும்”, “இருந்தாலும்” என்று பாரதிதாசன் கூறுவதின் பொருள் என்ன? தமிழில் “இனிமையைக் காண்கிறேன் என்று சொல்ல அவர் தயங்குகிறாரா? சற்று எண்ணிப் பாருங்கள். ‘இனிப்புடையதாயிருத்தல்’. ‘உயிர்ப்பு உடையதாயிருத்தல்’ - இவற்றுள் எது மிகுதியும் விரும்பத்தக்கது? உயிர் இல்லையேல் சுவைப்போருக்கு இனிப்பு ஏது, நுகர்ச்சி ஏது? கனி, கரும்பு, தேன், பாகு, பால், இளநீர் - அனைத்தின் சுவையும் உயிர் என்ற ஒன்று இருந்தால் தானே நுகரமுடியும். தமிழ் மொழியின்பால் கவிஞர் கொண்ட ஆழ்ந்த பற்று இதில் தெரிகிறதல்லவா! வடலூர் இராமலிங்க வள்ளலார் ‘தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க் கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் பருப்பும் தேனும் கலந்த கலவையை விடச் சுவையானவன் இறைவன்’ என்றார். பாரதிதாசனுக்கு அந்த உணர்வை, இனிமையைத் தமிழ் தந்திருக்கிறது. “சோலையினுள் மலர்களின் தேன் அருந்தவரும் வண்டின் ஒலியையும், புல்லாங்குழல் (Flute) ஒலியையும், வீணையின் இசையையும், குழந்தைகளின் மழலைப் பேச்சினையும் கேட்டு மகிழ்ந்து, அவற்றோடு மெய்மறந்து ஒன்றி இருக்கிறேன். ஆனால் அவற்றிடமிருந்து என்னை நான் விடுவித்துக் கொள்ள இயலும். தமிழை விட்டு என்னால் பிரிய முடியாது. ஏன் என்றால், தமிழும் நானும் உடலும் உயிரும் போன்றவர்கள்” இதனைத்,   தமிழும் நானும் மெய்யாய் உடல் உயிர்கண்டீர் (பாரதிதாசன் கவிதைகள் முதல்தொகுதி 19. தமிழின் இனிமை, மூன்றாவது பாடல்)   என்று குறிப்பிடுகிறார். மேலும், தமிழ் மொழி தமிழ்மக்களின் உயிராக இருப்பதால், உலகிலுள்ள அனைத்தையும் வெல்லும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்று பறைசாற்றுகின்றார்.   தமிழ் எங்கள் உயிர் என்பதாலே - வெல்லும் தரமுண்டு தமிழருக்குப் புவிமேலே (பாரதிதாசன் கவிதைகள் முதல்பகுதி 23. எங்கள் தமிழ், வரிகள்: 9 - 10)   ஒவ்வொரு மனிதனும், தன் உயிரைப் பேணிப் பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும், மேம்பாடு அடையச் செய்வதற்கும், எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வான். அதைப்போல நம் உயிர் போன்ற தமிழைப் பாதுகாப்பதற்கும் வளர்ச்சியடையச் செய்வதற்கும் நாம் எல்லாவித முயற்சிகளையும் தியாகங்களையும் செய்வதற்குத் தயார் ஆக வேண்டும் என்று கூறுகிறார் பாரதிதாசன்.   1.1.2 தமிழின் இனிமை   ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு வகையான இன்பம் கிடைக்கும். சிலருக்குப் பொருள் ஈட்டுதல் இன்பம் தரும். ஒரு சிலருக்கு அவர்கள் வகிக்கும் பதவி இன்பம் நல்கும். புகழ் இன்பம் வழங்கும். ஆனால் பாரதிதாசனுக்கு எது இன்பம் தருகிறது தெரியுமா? தாய்மொழியாம் தமிழ் இன்பம் தருகிறது. தமிழ் தரும் இன்பத்தைத் தம் பாடல்களின் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார். தமிழுக்கு இன்னொரு பெயர் உண்டு. அது உங்களுக்குத் தெரியுமா? என்று வினவும் பாரதிதாசன்,   இன்பம் எனப்படுதல் - தமிழ் இன்பம் எனத் தமிழ்நாட்டினர் எண்ணுக. (முதல் பகுதி : தமிழ் உணவு, வரிகள்: 36 - 37)   என்று குறிப்பிடுகிறார். எனவே, தமிழுக்கு இன்பம் என்று இன்னொரு பெயருண்டு. தமிழ் நாட்டினரே அதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். தமிழ் என்ற உடனே, இன்பம் தானாக வந்து கிட்ட வேண்டும். அந்த இன்பத்தை நீங்கள் நுகர வேண்டும் என்று கூறுகிறார். (கிட்டுதல் = அடைதல், கிட்ட = அடைய) இயற்கையில் அமைந்துள்ள பல பொருள்களை நாம் நுகரும் போது அவை நமக்கு இன்பம் தருகின்றன. அவற்றை மனத்தில் நினைத்த உடனே, இன்ப உணர்வு ஏற்படும். அதைப்போல் தமிழைப் பற்றி நினைத்த உடனேயே இன்ப உணர்வு வரும். தமிழ் இன்பம் தருவதால், அது அமுதம் போன்றது என்று குறிப்பிடுகிறார். அமுதத்தை உண்ணும் போது கிடைக்கும் மகிழ்ச்சி, அல்லது இன்பம், தமிழைப் படிக்கும் போது கிடைக்கும். எனவே,   இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு இன்பம் தரும்படி வாய்த்த நல் அமுது ! (முதல் தொகுதி, 23. எங்கள் தமிழ் - வரிகள்: 1 - 2)   என்று இனிமையின் எல்லை எனக் கருதப்படும் அமுதத்தையே தமிழ் இன்பத்திற்கு இணையாகக் கூறுகிறார் பாரதிதாசன். http://www.tamilvu.org/courses/degree/c011/c0114/html/c0114101.htm
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.