Jump to content

"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்!

HemavandhanaPublished:June 21 2021, 13:32 [IST]

சென்னை: "கர்த்தரின் மறுபிறவி போல தன்னை காட்டிக்கிட்டு வர்றார் சீமான்.. ஆனால், இதுவரைக்கும் சீமான் என் விஷயத்துக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.. ஆமா, நான் தப்பு பண்ணிட்டேன்னு இதுவரைக்கும் வாய் திறந்து சொல்லவில்லை.. ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்துட்டோமேன்னு கூட நினைக்காமல் அசால்ட்டா இருக்கார்.. அதனால் முதல்வர் ஸ்டாலின்தான், சீமான் விஷயத்தில் தலையிட்டு, எனக்கு ஒரு நியாயம் பெற்று தர வேண்டும் வேண்டும்" என்று நடிகை விஜயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளி

விஜயலட்சுமி

அதுதான் சமீப காலமாக, பத்மா சேஷாத்ரி பள்ளி, சிவசங்கர் பாபா முதல் மாஜி அமைச்சர் மணிகண்டன் வரை கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.. இதுதான் பெண்களுக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் தந்து வருகிறது.. அந்த வகையில் நடிகை விஜயலட்சுமிக்கும், புது நம்பிக்கை பிறந்துள்ளது.. தன்னுடைய பிரச்சனைக்கு இந்த ஆட்சியில் நிச்சயம் ஒரு வழி கிடைக்கும் என்ற முனைப்பில், திமுக அரசின் கதவை தட்டி உள்ளார்.

தமிழகம்

குற்றச்சாட்டு

தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை கல்யாணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவர் நடிகை விஜயலட்சுமி... இதை பல முறை மீடியா முன்பு பகிரங்கமாகவே சொல்லி உள்ளார்.. புகார் தந்துள்ளார்.. அதேபோல, தனிப்பட்ட முறையில் வீடியோ வெளியிட்டும், சீமானை தாக்கி பேசியிருந்தார்.

அமைச்சர்

மணிகண்டன்

இப்போது, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டதை போல் தன்னுடைய புகாரில் சீமானை கைது செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமி மறுபடியும் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:

குற்றச்சாட்டு

வீடியோ

'சீமான் அவர்களால் கடந்த 4 வருடங்களாக நான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறேன்.. அதுவும் சமூக வலைத்தளங்களில் மூலம் மட்டுமே என்னுடைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றேன். அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.. அமைச்சர் மணிகண்டன் கைதாகும் போது சீமான் ஏன் கைதாகவில்லை? நான் எத்தனையோ ஆதாரங்களை நான் வெளியிட்டும் ஏன் அவைகளின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. 10 வருஷத்துக்கு முன்பு போலீஸில் புகார் துந்தேன்.. ஆனால், அந்த வழக்கிலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆதாரம்

திமுக

சீமானுக்கு எதிராக இந்த வழக்கில் என்னிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.. அதனால், இந்த ஆதாரங்கள் அனைத்தையும் திமுகவில் உள்ள மூத்த தலைவர்களிடம் தெரிவிக்க போகிறேன்.. இந்த வழக்கில் கிட்டத்தட்ட நான் 10 வருடங்களாக நியாயம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறேன்.. இந்த வழக்கில் திமுக சார்பில் இருந்து எனக்கு நிச்சயம் ஒரு விடிவு காலம் பிறக்கும்.

வருத்தம்

கர்த்தர்

கர்த்தரின் மறுபிறவி போல தன்னை காட்டி கொண்டு வருகிறார்.. இதுவரைக்கும் சீமான் வருத்தம் தெரிவிக்கவில்லை.. ஆமா, நான் தப்பு பண்ணிட்டேன்னு இதுவரைக்கும் வாய் திறந்து சொல்லவில்லை.. ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்துட்டோமேன்னு கூட நினைக்காமல் அசால்ட்டா இருந்துட்டு வர்றார்.

பழிவாங்கல்

முதலமைச்சர்

திமுக இன்னைக்கு பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறதுன்னு சொல்றாங்களே, அப்படின்னா நாம் தமிழர் கட்சியும் இன்னைக்கு இதைதான் பண்ணியிருக்காங்க.. சீமான் இன்னைக்கு எதை சுட்டிக் காட்டுகிறாரோ, அதைதான் இவ்வளவு காலம் நானும் சுட்டிக்காட்டிட்டு வர்றேன். அதனால், முதலமைச்சர் ஸ்டாலின், இந்த வழக்கு சம்பந்தமா நடவடிக்கை எடுக்கணும்னு நான் கேட்டுக்கறேன்.

பப்ளிசிட்டி

அதிமுக

நான் பப்ளிசிட்டிக்காக இதை சொல்லவில்லை.. என்னுடைய வழக்கு பெரிது.. இதை அதிமுகவை வைத்து அன்னைக்கு மூடிட்டாங்க.. அதிமுக ஆட்சியில் எனக்கு நியாயமே கிடைக்காமல் செய்தாங்க.. இன்னைக்கு வரைக்கும் அவருடைய ஆட்கள் என்னை அசிங்கமா பேசிட்டுத்தான் இருக்காங்க.

ஆட்சி

நியாயம்

இன்னைக்கு ஆட்சியில் இருப்பவர்கள், எல்லாவற்றிற்கும் ஒரு நியாயத்தை வழங்கிட்டு வரும்போது, ஒரு பெண்ணுடைய வாழ்க்கை கேவலம் கிடையாது, அது திமிரின் உச்சம் என்பதை காட்ட வேண்டும் என்று நான் கேட்டுக்கறேன்.. திமுகவில் இருக்கும் பெரியவங்க இந்த வீடியோவை பாருங்க.. யார் கிட்ட கொண்டு போய் சேர்க்கணுமோ, தயவுசெய்து சேர்த்துடுங்க. திமுக எனக்கு நியாயம் வாங்கி தரணும்... நம்பிக்கையா காத்துக்கிட்டு இருக்கேன்' என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர்

நடவடிக்கையா?

சமீப காலமாக முதல்வர் ஸ்டாலினுடன், சீமானுக்கு நல்ல இணக்கம் இருந்து வருகிறது.. இவர்களின் ஒவ்வொரு முறை சந்திப்பும், நட்பான பேச்சும் சோஷியல் மீடியாவில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.. ஒருவேளை வரப்போகும் பஞ்சாயத்து தேர்தலில் நாம் தமிழருடன் திமுக கூட்டணி வைக்கக்கூடும் என்ற அளவுக்கு யூகங்களும் கிளம்பி வரும் நிலையில், சீமானுக்கு எதிரான இந்த வழக்கை திமுக கையில் எடுக்குமா? விஜயலட்சுமியின் கண்ணீர் கோரிக்கைக்கு என்ன பதில் சொல்ல போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://tamil.oneindia.com/news/chennai/actress-vijayalakshmi-appeal-to-cm-mk-stalin-for-arrest-naam-tamizhar-party-seeman-424576.html 

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விஜய லட்சுமி… விசயம் இன்னும் முடியேல்லையா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்!

ஸ்ராலின், உதய நிதி, அவங்க தாத்தா… எல்லாரும் இந்த விசயத்திலை….

பழம் திண்டு… கொட்டை போட்ட ஆக்கள்.

அவங்களிடம் நீதி கேட்கப் போகலாமா? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

குற்றச்சாட்டு

வீடியோ

'சீமான் அவர்களால் கடந்த 4 வருடங்களாக நான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறேன்.. அதுவும் சமூக வலைத்தளங்களில் மூலம் மட்டுமே என்னுடைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றேன். அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.. அமைச்சர் மணிகண்டன் கைதாகும் போது சீமான் ஏன் கைதாகவில்லை? நான் எத்தனையோ ஆதாரங்களை நான் வெளியிட்டும் ஏன் அவைகளின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. 10 வருஷத்துக்கு முன்பு போலீஸில் புகார் துந்தேன்.. ஆனால், அந்த வழக்கிலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆதாரம்

திமுக

சீமானுக்கு எதிராக இந்த வழக்கில் என்னிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.. அதனால், இந்த ஆதாரங்கள் அனைத்தையும் திமுகவில் உள்ள மூத்த தலைவர்களிடம் தெரிவிக்க போகிறேன்.. இந்த வழக்கில் கிட்டத்தட்ட நான் 10 வருடங்களாக நியாயம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறேன்.. இந்த வழக்கில் திமுக சார்பில் இருந்து எனக்கு நிச்சயம் ஒரு விடிவு காலம் பிறக்கும்.

பொண்ணு பிழைக்க தெரிஞ்ச பொண்ணு 
பேமண்ட் கொஞ்சம் பெருசா இருக்கும் போலயே , அறை வாடகை கட்ட வக்கில்லாமல் நடுத்தெருவில் நின்று கூவும்போது சீமான் நல்லவர் இப்போது சீமானுக்கெதிராக நடவடிக்கை, பார்த்தும்மா இப்படித்தான் பச்சைத்தமிழனின் ரசிக குஞ்சுகள் உசுப்பேத்தி உடம்பை ரணகளப்படுத்தி விட்டு நடுவில் விட்டுவிட்டு எஸ்கேப் ஆனவை , ஊப்பிகள் வேறு தினுசான பேர்வழிகள், மகளீர் பாசறை செயலாளர் இடுப்பிலேயே பம்பரம் விட்ட எமகாதகனுகள் கும்மென்று இருக்கும் உங்களை கும்மியெடுத்து விடுவானுகள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

ஸ்ராலின், உதய நிதி, அவங்க தாத்தா… எல்லாரும் இந்த விசயத்திலை….

பழம் திண்டு… கொட்டை போட்ட ஆக்கள்.

அவங்களிடம் நீதி கேட்கப் போகலாமா? 😁

🤣 தமிழ் சினிமால சின்ன வில்லன பற்றி பெரிய வில்லனிடம் முறையிடும் சீன் வருமே அது போலத்தான் இதுவும்🤣.

6 minutes ago, அக்னியஷ்த்ரா said:

பொண்ணு பிழைக்க தெரிஞ்ச பொண்ணு 
பேமண்ட் கொஞ்சம் பெருசா இருக்கும் போலயே , அறை வாடகை கட்ட வக்கில்லாமல் நடுத்தெருவில் நின்று கூவும்போது சீமான் நல்லவர் இப்போது சீமானுக்கெதிராக நடவடிக்கை, பார்த்தும்மா இப்படித்தான் பச்சைத்தமிழனின் ரசிக குஞ்சுகள் உசுப்பேத்தி உடம்பை ரணகளப்படுத்தி விட்டு நடுவில் விட்டுவிட்டு எஸ்கேப் ஆயிட்டினம் , ஊப்பிகள் வேறு தினுசான பேர்வழிகள், மகளீர் பாசறை செயலாளர் இடுப்பிலேயே பம்பரம் விட்ட எமகாதகனுகள் கும்மென்று இருக்கும் உங்களை கும்மியெடுத்து விடுவானுகள்  

ஒருக்கா அப்பீடீக்கா சொல்லுது, மறுக்கா இப்டீக்கா சொல்லுது, மறுபடியும் அப்டீக்கா சொல்லுது.

இதில பொறுத்த நேரத்தில அண்ணன் ஹரி நாடார வேற உள்ள தூக்கி வச்சிட்டாங்க.

ஆனா நிச்சயம் இத வச்சு திருட்டு திமுக செம அரசியல் லாபம் பாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹோட்டல்ல சாப்பிட்டு பில்லு கொடுக்காம போனா, கடையை பூட்டின பிறகு, பில்லை தூக்கிட்டு காலெக்சன் கிளிம்பிடுவாங்க....😁

சீமான் 5 லட்ச்சம், ஸ்டாலின் கிட்ட கொடுத்தாரு, எனக்கு ஒரு ரூபா கூட கொடுக்கவில்லை என்று கோபப்பட்டார். இவருக்கு தேவை பணம். 😁

இவர் போலீசுக்கு போக மாட்டார், போவது போல காட்டி பணம் பறிக்க தான் முயல்வார்.

இவர் சீமானிடம் பணம் இல்லை என்று, ஆளை கழட்டி விட்டு, பெங்களூரு போய், அங்கே ஒருவரை பிடித்து கலியாணம் வரை சென்றார். அதுவும் இவரது attitude காரணமாக குழம்ப, வேறு பல இடம் போய்....பின்னர்  சீமான் மேல் தாக்குதல் தொடங்கினார்.

திமுக, அரசியல் ரீதியாக ஏதாவது செய்யும், அதன் மூலம் பணம் வரும் என்று நினைக்கிறார்.

காரம் சாப்பிட்டா, விக்கல் வரும், விஜயலெஸ்சுமிக்கு உதவினா சிக்கல் வரும்.... சொல்வது திமுகவின் பாலிமர் டிவி. 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்வத்தினடிப்படையில் சீமான்மீது வழக்கு தொடுக்கிறார்களோ கைது செய்கிறார்களோ என்பதெல்லாம் அவர்களது சட்டம் அரசியல் சம்பந்தமான பிரச்சனைகள் , ஆனால்

பத்மா சேஷாத்திரி பள்ளி, சிவங்கர்பாபா விஷயங்களும் உங்கள் விஷயமும் ஒன்றல்ல விஜயலட்சுமி.

அவை பாதிக்கப்பட்ட பெண்களின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட பாலியல் சீண்டல்கள் என்று பாதிக்கப்பவர்களால் தொடுக்கப்பட்ட வழக்கு.

ஆனால் மாஜி அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினி விஷயமும் உங்கள் விஷயமும் ஒன்றேதான், நீங்கள் இருவரும் விரும்பியே உங்கள் தனிப்பட்டவாழ்வில் அவர்களுடன் நெருக்கத்தை பேணினீர்கள், அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பானவர்கள்.

திருமணம் செய்யவில்லை ஏமாற்றிவிட்டார் என்று சொல்லி கலாச்சாரம் கண்ணியம் காக்கும் நீங்கள், திருமணத்தின் முன்னர் ரகசிய வாழ்வை வைத்திருந்தது மட்டும் கலாச்சாரம் கண்ணியத்திற்குரியதா?

சாந்தினியும் நீங்களும் நிச்சயமாக இந்த சம்பவங்களில் பாதிக்குமேல் பங்காளிகள்.

சிலமாதங்கள் முன்னாடி தற்கொலை செய்யபோறேன் என்றீர்கள், பின்பு மறுபடியும் நாளைக்கு சாகபோறேன் ரஜனி சார் உதவி செய்யவேண்டும் என்று செயற்கை சுவாச குளாய்களை பொருத்தியபடி ஆஸ்பத்திரியில் படுத்திருந்தீர்கள்,

ரஜனி உதவி செய்ததா தெரியவில்லை ஆனால் உங்கள் நிலமையை பார்த்து பரிதாபபட்டு அங்கே வந்து உதவி செய்த ரவிபிரகாஷ் எனும் நடிகர்மீதே பின்பு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி புகார் கொடுத்தீர்கள். 

அந்த சம்பவம் முடிந்ததும் நீங்களும் நடிகை வனிதாவும் நடமாடும் நகைகடை ஹரிநாடாருடன் நெருக்கத்தை பேணியதாகவும் தமிழக ஊடகங்களில் செய்திகள் உண்டு . 

அவர் உதவியுடன் படவாய்ப்பே இல்லாத நீங்கள்  மாதவாடகையே லட்சங்களில் செலவு செய்து எப்படி இருந்தீர்கள் என்று கேள்வியும், ஹரிநாடார்  கைதின் பின்னர் 3 மாத வாடகை பாக்கியால் விரட்டியடிக்கப்பட்டீர்கள் என்றும் தமிழக ஊடகங்களில் செய்திகள் சாரை சாரையாக வந்திருக்கிறது.

கூட்டி கழித்து பார்த்தால் எப்போ எல்லாம் பண கஷ்டம் வருகிறதோ அப்போ மட்டுமே நீங்கள் பரபரப்பை கிளப்புகிறீர்கள், சீமான்மீது கொந்தளிக்கிறீர்கள்  என்பதை எளிதில் எல்லோரும் புரிந்து கொள்வார்கள், பட வாய்ப்புகளும் ஹரிநாடார் பெரும் புள்ளிகளின் நட்பும் இருந்துவிட்டால் சீமான் கதையை பற்றி பேசமாட்டீர்கள் என்பதும் கடந்தகால வரலாறு.

இன்றைய முதல்வர் ஸ்டாலின்மீதுகூட அன்றைய தொலைக்காட்சி அறிவிப்பாளர்களான பெப்சி உமா, பாத்திமா பாபு போன்றவர்களுக்கு நெருக்கடி கொடுத்தார் என்று புகார்கள் உண்டு அவர் யோக்கியமே அந்த ரேஞ்சில் இருக்கு நீங்கள் அவரிடம்போய் நியாயம் கேக்கிறீர்கள்?

கண்டிப்பாக இது சீமானுக்கு வக்காலத்து வாங்கவோ ஆதரவாகவோ செய்யும் பதிவல்ல, உங்கள் குற்றசாட்டுக்களில் நேர்மை தன்மை இல்லை என்பதை சுட்டிக்காட்ட மட்டுமே இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, valavan said:

கண்டிப்பாக இது சீமானுக்கு வக்காலத்து வாங்கவோ ஆதரவாகவோ செய்யும் பதிவல்ல, உங்கள் குற்றசாட்டுக்களில் நேர்மை தன்மை இல்லை என்பதை சுட்டிக்காட்ட மட்டுமே இது.

👆🏼👌

34 minutes ago, valavan said:

இன்றைய முதல்வர் ஸ்டாலின்மீதுகூட அன்றைய தொலைக்காட்சி அறிவிப்பாளர்களான பெப்சி உமா, பாத்திமா பாபு போன்றவர்களுக்கு நெருக்கடி கொடுத்தார் என்று புகார்கள் உண்டு அவர் யோக்கியமே அந்த ரேஞ்சில் இருக்கு நீங்கள் அவரிடம்போய் நியாயம் கேக்கிறீர்கள்?

பாத்திமா பாபுவுக்கு நிகழ்ந்த வன்கொடுமை நெருக்கடிக்கும் மேலானது. பெப்சி உமாவுக்கு நெருக்கடி இருந்ததாக இன்றுதான் கேள்வி படுகிறேன்.

36 minutes ago, valavan said:

ஆனால் மாஜி அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினி விஷயமும் உங்கள் விஷயமும் ஒன்றேதான், நீங்கள் இருவரும் விரும்பியே உங்கள் தனிப்பட்டவாழ்வில் அவர்களுடன் நெருக்கத்தை பேணினீர்கள், அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பானவர்கள்.

திருமணம் செய்யவில்லை ஏமாற்றிவிட்டார் என்று சொல்லி கலாச்சாரம் கண்ணியம் காக்கும் நீங்கள், திருமணத்தின் முன்னர் ரகசிய வாழ்வை வைத்திருந்தது மட்டும் கலாச்சாரம் கண்ணியத்திற்குரியதா?

இந்தியாவில் சட்டம் கொஞ்சம் வித்தியாசம் என நினைக்கிறேன்.

மேற்குலகில்…ஆம் கல்யாணம் முடிப்பதாக சொன்னேன். ஒன்றாக வாழ்ந்தோம்… இப்போ கல்யாணம் முடிக்கும் முடிவை மாற்றி விட்டேன் என்று சொன்னால்… சட்டம் அதை ஏற்று கொள்ளும்.

ஆனால் இந்தியாவில் கல்யாணம் முடிப்பதாக வாக்குறுதி தந்து, என்னுடன் கூட வாழ்ந்து பின் வாக்குறுதியை மீறினார் என்பது ஒரு வகையான குற்றம் என்றே நினைக்கிறேன்.

நேற்றைய மணி கண்டன் பற்றிய செய்தியில் நீதிபதி இதை சுட்டி காட்டி, எம் ஐ ஆர் ஐ மாற்றி எழுதும் படி பொலிசுக்கு சொல்லி உள்ளார் என போடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்து 

விஜயலக்சுமியோடு சீமான் கணவன் மனைவியாக வாழ்ந்தார் என்றே நினைக்கிறேன்.

கல்யாணம் பண்ணி கொள்வதாக சொன்னாரா என்பது தெளிவில்லை.

விஜயலக்சுமி தருணம் பார்த்து மாறி மாறி கதைக்கிறார் என்பது வெளிப்படை. 

இது பணத்துக்காக என்றே நினைகிறேன்.

ஆனால் சீமான் மீது 100%மாக அவதூறு செய்கிறார் என்பதும் உண்மையல்ல.

Link to comment
Share on other sites

எனக்கு சீமானின் அரசியல் கொள்கைகளில் உடன்பாடு இல்லாவிடினும் இவ்வாறான சேறடிப்புகளைக் கொண்ட செய்திகளுக்கு எந்த ஆதரவும் இல்லை. இருவரின் அந்தரங்களை பாதுக்காக்க முடியாத ஒருவரின் கொச்சைத்தனமான நடவடிக்கைகளுக்கு யாழ் களமும் மேடையாக அமைவதை தவிர்ப்பதே நல்லது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

எனக்கு சீமானின் அரசியல் கொள்கைகளில் உடன்பாடு இல்லாவிடினும் இவ்வாறான சேறடிப்புகளைக் கொண்ட செய்திகளுக்கு எந்த ஆதரவும் இல்லை. இருவரின் அந்தரங்களை பாதுக்காக்க முடியாத ஒருவரின் கொச்சைத்தனமான நடவடிக்கைகளுக்கு யாழ் களமும் மேடையாக அமைவதை தவிர்ப்பதே நல்லது..

இது தனியே ஒருவரின் அந்தரங்கம் மட்டும் இல்லை. இதில் ஒரு அரசியல்வாதியின் கண்ணியம், நம்பகத்தன்மை,  என்பனவும் சம்பந்தபட்டுள்ளன. ஒரு அரசியல் தலைவரின் அரசியலை எடை போட இவற்றை ஆராய்வது இன்றி அமையாதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமக்கெதிராகப் பேசுபவர் பெண் என்றாலே அவர் மீது "நடத்தை" தொடர்பான குற்றச்சாட்டை வதந்தியாகப் கிளப்பி விடும் ஒரு அரசியல் வாதி பற்றிய பெண் விவகாரத்தை அலசுவதில் தவறில்லை! (அனந்தி சசிதரன்  பற்றிய செய்தி உதாரணம்!)

Link to comment
Share on other sites

24 minutes ago, Justin said:

 தமக்கெதிராகப் பேசுபவர் பெண் என்றாலே அவர் மீது "நடத்தை" தொடர்பான குற்றச்சாட்டை வதந்தியாகப் கிளப்பி விடும் ஒரு அரசியல் வாதி பற்றிய பெண் விவகாரத்தை அலசுவதில் தவறில்லை! (அனந்தி சசிதரன்  பற்றிய செய்தி உதாரணம்!)

அதாவது அவர் செய்வதாக நீங்கள் குறிப்பிடும் தகாத செயலை நாமும் செய்ய வேண்டும் என்று?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

அதாவது அவர் செய்வதாக நீங்கள் குறிப்பிடும் தகாத செயலை நாமும் செய்ய வேண்டும் என்று?

அதுக்குத்தான் இன்னொரு பெண்ணையும் இதற்குள் இழுத்து  விட்டிருக்கோறோம் இல்ல....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

அதாவது அவர் செய்வதாக நீங்கள் குறிப்பிடும் தகாத செயலை நாமும் செய்ய வேண்டும் என்று?

நிழலி,

இதை ஆங்கிலத்தில் எழுதினால் மக்கள் கடுப்பாக கூடும் என்பதால் கடந்த பதிவில் எழுதவில்லை. பத்திரிகை உலகில் அடிப்படை test ஒன்று உள்ளது. ஒருவரின் அந்தரங்கத்தை எழுத முன் இந்த test பிரயோகிப்பார்கள்.

அந்த டெஸ்டானது:

Is it in the public interest to publish this story? Or is it a story in which the public are interested ?

இந்த செய்தி மக்கள் நலன் சம்பந்த பட்டதா? அல்லது வெறுமனே மக்கள் அறிய விரும்புபதா (கொசிப்பா)?

ஒரு அரசியல் தலைவரின் மீதான மக்களின் நோக்கு, நம்பிக்கை அவர் தனிவாழ்வோடு பிண்ணி பிணைந்தது. குறிப்பாக இந்த குற்றசாட்டுகளை பற்றி அவர் ஒரு தகுந்த தன்னிலை விளக்கம் கொடுக்காத போது.

கிளிண்டன் மொனிக்கா லிவின்சி வழக்கை ஏன் இவ்வாறு கடந்து போகவில்லை?

ஒரே காரணம்தான்.

அனந்தி மீது வாறியிறைக்கப்பட்டது சேறு. அங்கே பாதிக்க பட்டதாக எந்த ஆணும் முறையிடவில்லை. ஆகவே அவை ஆதாரமற்ற வெறும் வதந்திகள்.

ஆனா இங்கே ஒருவர் பொலீசில் முறைபாடு கொடுத்துள்ளார். 

உண்மையில் உங்களுக்கும் இரெண்டுக்குமான வித்தியாசம் விளங்கவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நிழலி said:

அதாவது அவர் செய்வதாக நீங்கள் குறிப்பிடும் தகாத செயலை நாமும் செய்ய வேண்டும் என்று?

மேலே கோசான் சொன்ன கருத்து அரைவாசிக்காரணம், எனவே ஆமோதித்திருக்கிறேன்!

அடுத்த பாதிக் காரணம்: hypocrisy என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம். அது முன்னே வரத் துடிக்கும் தலைவர்கள், பிரபலங்களாக இருக்கும் போது அவசியம். ஒருவனைக் கள்வன் என்று சீமான் சொன்னால், சீமானின்  பண வரவு ஆய்வுக்குள்ளாவது நியாயமானது. ஒருவரை நடத்தைப் பிறழ்வுடையவர் என்று சீமான் சொன்னால் , அவரது நடத்தைப் பிறழ்வாகத் தெரியும் நடவடிக்கை ஆய்வுக்குள்ளாவது நியாயமானது.

31 minutes ago, விசுகு said:

அதுக்குத்தான் இன்னொரு பெண்ணையும் இதற்குள் இழுத்து  விட்டிருக்கோறோம் இல்ல....???

சீமான் கட்சிக்கு 6% வாக்குக் கிடைத்த போது நீங்கள் சொன்னது: "இனி அவர்களில்லாமல் நிகழ்ச்சிகள் நடக்கக் கூடாது!"( உடனே நிழலி யாழ் அப்படியெல்லாம் நடந்து கொள்ளாது என்று மறுக்க வேண்டியிருந்தது!)

பந்தியில் இடம் வேணுமெண்டால் விமர்சனங்கள் பொது வெளியில் வைக்கப் படும் போதும் அதை எதிர் கொள்ள வேண்டும். நோகாமல் நொங்கு தின்ன முயலக் கூடாது!

(நான் குறிப்பிட்ட பெண்ணின் பெயரை சீமான் குழு இழுத்து விட்டு, அதற்கு யாழ் தம்பிகள் நியாயம் கற்பித்த போது, இதே கரிசனை விசுகருக்கு எங்கே போனதென யோசிக்கிறேன், பதில் தெரியுமென்பதால் சிரித்து 🤣நகர்கிறேன்!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

மேலே கோசான் சொன்ன கருத்து அரைவாசிக்காரணம், எனவே ஆமோதித்திருக்கிறேன்!

அடுத்த பாதிக் காரணம்: hypocrisy என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம். அது முன்னே வரத் துடிக்கும் தலைவர்கள், பிரபலங்களாக இருக்கும் போது அவசியம். ஒருவனைக் கள்வன் என்று சீமான் சொன்னால், சீமானின்  பண வரவு ஆய்வுக்குள்ளாவது நியாயமானது. ஒருவரை நடத்தைப் பிறழ்வுடையவர் என்று சீமான் சொன்னால் , அவரது நடத்தைப் பிறழ்வாகத் தெரியும் நடவடிக்கை ஆய்வுக்குள்ளாவது நியாயமானது.

சீமான் கட்சிக்கு 6% வாக்குக் கிடைத்த போது நீங்கள் சொன்னது: "இனி அவர்களில்லாமல் நிகழ்ச்சிகள் நடக்கக் கூடாது!"( உடனே நிழலி யாழ் அப்படியெல்லாம் நடந்து கொள்ளாது என்று மறுக்க வேண்டியிருந்தது!)

பந்தியில் இடம் வேணுமெண்டால் விமர்சனங்கள் பொது வெளியில் வைக்கப் படும் போதும் அதை எதிர் கொள்ள வேண்டும். நோகாமல் நொங்கு தின்ன முயலக் கூடாது!

(நான் குறிப்பிட்ட பெண்ணின் பெயரை சீமான் குழு இழுத்து விட்டு, அதற்கு யாழ் தம்பிகள் நியாயம் கற்பித்த போது, இதே கரிசனை விசுகருக்கு எங்கே போனதென யோசிக்கிறேன், பதில் தெரியுமென்பதால் சிரித்து 🤣நகர்கிறேன்!)

தவறு நான் அப்படி  எங்கும் எழுதியதாக ஞாபகமில்லை

இனி நடக்காது என்று  எழுதியிருக்கலாம்

அடுத்தது

பெண்களை  இழுக்காதீர்கள் இழுக்காதீர்கள் என்றபடி

முடிந்ததை  இங்கே இழுத்து  விட்டதை  தான் குறிப்பிட்டேன்

மற்றும்படி  நான் யாழுக்கு  வருவதற்கும் நேரத்தை  செலவளிப்பதற்கும் ஒரு  நோக்குண்டு

அதற்காக  சிலவற்றை  கடந்து  போவதுண்டு

அது தப்பென்றாலும் செய்யவேண்டியுள்ளது

அது  தப்பென்று  உங்களுக்கு உறைத்தால் என்னை மன்னித்தருள்க....

ஏனெனில் அதைத்தான் தொடர்வேன்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

வேறு திரி பற்றி விரிவாக விவரிக்க விரும்பவில்லை! நீங்களே திரும்பிப் போய்ப் பார்க்கலாம் விசுகர்!

உங்கள் நோக்கம் காரணமாகவே  நீங்கள் இதை விட மோசமாக இழுத்து விடப் பட்ட திரிகளில் கள்ள மௌனம் சாதித்துக் கடந்து போனீர்கள் என்பதையே  நானும் மேலே சுட்டிக் காட்டியிருக்கிறேன்! அதே போல இங்கே திடீர் கரிசனைக்கும் அதே நோக்கம் காரணம்.

இதை யாழ் வாசகர்களுக்கு உரிய சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டுவது மட்டுமே என் நோக்கம்! உங்களைக் கட்டுப் படுத்துவதல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

எனக்கு சீமானின் அரசியல் கொள்கைகளில் உடன்பாடு இல்லாவிடினும் இவ்வாறான சேறடிப்புகளைக் கொண்ட செய்திகளுக்கு எந்த ஆதரவும் இல்லை. இருவரின் அந்தரங்களை பாதுக்காக்க முடியாத ஒருவரின் கொச்சைத்தனமான நடவடிக்கைகளுக்கு யாழ் களமும் மேடையாக அமைவதை தவிர்ப்பதே நல்லது..

எனது கருத்தும் இதே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மௌனம் சம்மதம்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக நீதிபதிகள் வந்துவிட்டார்கள் ....... திரிக்கு 

இனி கண்ணகி மாதவிக்கு தீர்ப்பு கிடைக்குதோ இல்லையோ?

சிலப்திகரத்துக்கும் சீமான்தான் காரணம் என்று இங்கிருப்பவர்கள் 
நம்புமட்டும் திரியை போட்டு உருட்டுவதே எங்கள் மக்கள் சேவை!

திருமணம் முடிந்த பிறகுகூட 
உங்களுக்கு பிடிக்காவிடின் விவாகரத்து வாங்கி போக முடியும் என்றாலும் 
எவ்வளவுதான் விஜலயலெட்ட்சுமி காரக்ட்டர் கீழாக இருந்தாலும் 
சீமான் இறுதிவரை வாழவே வேண்டும் என்று 
பஞ்சாயத்து ......அதாவது மக்கள் ஜனநாயக .... உலக விஞ்ஞான ...தொல்லியல் நிபுணத்துவ ...
அறிஞர்கள் அரகோட்ப்பாட்டு பஞ்சாயத்து தீர்ப்பு என்பதை இங்கே எல்லோருக்கும் அறிய தருகிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

தீர்ப்பு யார் எழுதியது? படுக்கையறை விவகாரத்திற்கெல்லாம் தீர்ப்பு எழுதுவதும், விதி வைப்பதும்  வலது சாரிக் கட்டுப் பெட்டிகளின் வேலையல்லவா?😎

"யார் குற்றம் செய்யாதவனோ அவன் மரிய மதலேனாள் மீது முதற்கல்லை எறியட்டும்!" என்றார் 2000 ஆண்டுகள் முன்பு வாழந்த ஒரு சோசலிஸ்ட்!

சீமானும் தம்பிகளும் கல் எறிந்த போது இதை நினைத்திருக்க வேண்டுமென்று மட்டுமே சொல்லப் படுகிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

ஹோட்டல்ல சாப்பிட்டு பில்லு கொடுக்காம போனா, கடையை பூட்டின பிறகு, பில்லை தூக்கிட்டு காலெக்சன் கிளிம்பிடுவாங்க....😁

சீமான் 5 லட்ச்சம், ஸ்டாலின் கிட்ட கொடுத்தாரு, எனக்கு ஒரு ரூபா கூட கொடுக்கவில்லை என்று கோபப்பட்டார். இவருக்கு தேவை பணம். 😁

இவர் போலீசுக்கு போக மாட்டார், போவது போல காட்டி பணம் பறிக்க தான் முயல்வார்.

இவர் சீமானிடம் பணம் இல்லை என்று, ஆளை கழட்டி விட்டு, பெங்களூரு போய், அங்கே ஒருவரை பிடித்து கலியாணம் வரை சென்றார். அதுவும் இவரது attitude காரணமாக குழம்ப, வேறு பல இடம் போய்....பின்னர்  சீமான் மேல் தாக்குதல் தொடங்கினார்.

திமுக, அரசியல் ரீதியாக ஏதாவது செய்யும், அதன் மூலம் பணம் வரும் என்று நினைக்கிறார்.

காரம் சாப்பிட்டா, விக்கல் வரும், விஜயலெஸ்சுமிக்கு உதவினா சிக்கல் வரும்.... சொல்வது திமுகவின் பாலிமர் டிவி. 🤗

சினிமா எனும் கனவுத்தொழிற்சாலை 
சீரழிக்கும் பெண்களின் எண்ணிக்கை இங்கு அமெரிக்காவிலேயே 
பல லட்ஷம்.

இதற்கு அடிப்படை காரணம் 
இவர்கள் வெளியுலக அறிவு அற்ற வெறும் 16-18 வயதுக்கு உட்பட்ட காலத்திலேயே 
கனவுத்தொழிற்சாலைக்கு வேலைக்கு போகிறார்கள்.

பணம் புகழ் வந்து கொட்டும் என்ற ஆசை எல்லோராலும் கொடுக்கப்படுகிறது 
சினிமா என்பது 95வீதம் காமம் சார்ந்தது 5 வீதம் கலை சார்ந்து இருந்தாலும் 
அவை குப்பைக்குத்தான் தகுதி என்று பார்வையாளர்கள் ஆகிய எங்களாலயே தூக்கி 
எறியப்படுகிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. 

இவர்களின் அழகும் காமமும் களையப்பட்ட பின்பு 
கறிவேப்பிலை ஆகும்போது .... வெளியுலகில் கால் பாதிக்க 
இவர்களுக்கு வெளியுலக அறிவு என்பது 1 வீதம் கூட இல்லை 
வேறு எந்த தொழிலோ கல்வி அறிவோ கூட பலருக்கு இல்லை 

சிலருக்கு திரும்பி போவதற்கு குடும்பம் இருந்தால் 
அதிர்ஷ்ட்டம் என்றுதான் எண்ணுகிறேன் 
இடையில் இவர்களுக்கு கிடைக்கும் சினிமா அறிமுகத்தால் 
சிலர் குடும்பங்களையும் மதிக்காது நடந்து மீண்டும் போக முடியாத நிலையை தோற்றுவிக்கிறார்கள் 

தமிழ் சினிமா முன்னணி நடிகை நயன்தார ( இன்று அதிக அளவு சம்பளம் வாங்குபவர் என்று எண்ணுகிறேன்)
இவரின் கதையே கறிவேப்பிலை கதைதான் எனும்போது 
பாட்டுக்கு டான்ஸ் அடபோனவர்கள் நிலை என்னவாக இருக்கும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

திருமணம் முடிந்த பிறகுகூட 
உங்களுக்கு பிடிக்காவிடின் விவாகரத்து வாங்கி போக முடியும் என்றாலும் 
எவ்வளவுதான் விஜலயலெட்ட்சுமி காரக்ட்டர் கீழாக இருந்தாலும் 
சீமான் இறுதிவரை வாழவே வேண்டும் என்று 
பஞ்சாயத்து ......அதாவது மக்கள் ஜனநாயக .... உலக விஞ்ஞான ...தொல்லியல் நிபுணத்துவ ...
அறிஞர்கள் அரகோட்ப்பாட்டு பஞ்சாயத்து தீர்ப்பு என்பதை இங்கே எல்லோருக்கும் அறிய தருகிறோம். 

இங்கே யாரும் தீர்ப்பு சொல்ல வரவில்லை மருதர்,

மேலே தெளிவாக வல்லவனுக்கான பதிலில் சொல்லி உள்ளேன், எமக்கு புலப்பட்ட மேற்கத்தைய சட்டம் போலன்றி, இந்தியாவில் திருமணம் செய்வதாக கூறி உடன் வாழ்ந்தால் இங்கு போல இலகுவாக பிரிந்து போக முடியாது போலுள்ளது என்பதை.

ஆகவே இந்தியாவை பொறுத்தவரை திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்து கூடி வாழ்ந்து விட்டால், திருமணம் செய்து பின் விவாகரத்துதான் செய்ய வேண்டும் போல இருக்கிறது 🤦‍♂️. அதுதான் ஒரே வழி போலுள்ளது.

ஆகவே மேற்கத்தேய கண்ணாடிகளினூடு இதை பார்த்து கருத்தாளர் மீது ஏரிந்து விழுவதில் ஒரு பயனும் இல்லை.

வடிவாக கவனியுங்கள் இங்கே சீமான் மீது கொடுக்கபட்டிருப்பது என்னுடன் மனமொத்து உல்லாசமாக இருந்தார் என்ற புகார் அல்ல,

என்னை கல்யாணம் செய்வதாக கூறி எமாற்றி விட்டார் என்பதே புகார்.

ஒரு அராசியல்வாதி ஏமாற்றுகிறார், என்ற புகாரை தூய அரசியலை விரும்பும் எளிய பிள்ளைகள் யாரும் “அந்தரங்கம்” என கடந்து போக மாட்டார்கள். 

நீங்களும் அப்படித்தானே?

பிகு

அதுவும் நாங்கள் யார்? 

இருக்கும் கட்டிடத்தை வெள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் அல்ல, அதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட போகும் தூய அரசியல் புரட்சியாளர்கள் என்கிறார் சீமான். 

அப்படி பட்ட தூய அரசியல் தலைவன் மீது  இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தால் அதை அலசுவதுதானே தூய அரசியல் பேசும் எளிய பிள்ளைகளின் முதல் கடமை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

இதில் சீமானை பற்றி அலச என்ன இருக்கிறது?
இது 20 வருடத்துக்கு முன்னைய கதை 

வேண்டியதெல்லாம் அலசி முடிந்தது என்பதை விடவும் 
நீதிமன்று தீர்ப்பளித்து முடிந்த விடயம் 

அப்ப அப்ப வியலடிச்சுமிக்கு பண கஸ்ட்ரம் 
மற்றவர்களால் ஏமாற்றம் வரும்போது 
இவர் இந்த சீமான் சீனை கடந்த 15 வருடமாக போட்டுவருகிறார் 

யாழில் மட்டும் எனக்கு தெரிய 10 திரி இருக்கிறது.

எங்களுக்கு என்ன வேலையா? வெட்டியா?
அலசினா போச்சு ......  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.