Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு
 

அரசாங்கம் குறித்து அதிருப்தியடைந்துள்ள அமைச்சர் விமல்வீரவன்சவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகிள்ளன.
மூன்றாம் தரப்பொன்றின் முயற்சிகள் காரணமாக இருவருக்கும் இடையில் இணக்கப்பாடொன்று ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல பௌத்தமதகுரு ஒருவர் இருவருக்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
wimal-ranil-300x169.jpg
2024 ஜனாதிபதி தேர்தலில் உருவாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் பொதுவேட்பாளராக விமல்வீரவன்சவை நியமிப்பதற்கு ரணில்விக்கிரமசிங்க சம்மதித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமல் வீரவன்ச தரப்பினர் தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடிக்கவேண்டும் சரியான தருணம் வரும்போது மைத்திரிபால சிறிசேன போன்று அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமல்வீரவன்ச பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளில் கண்வைத்துள்ளார் என்பது வெளிப்படையான உண்மை ஆனால் அதற்கான வேறு தந்திரோபாயங்களை வழிமுறைகளை பின்பற்றுவது என குறிப்பிட்ட பௌத்தமதகுரு உட்பட இந்த திட்டத்தை முன்னெடுப்பவர்கள் தீர்மானித்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமல்வீரவன்ச கட்சியில் தற்போது காணப்படும் நிலையிலிருந்து மேலும் வளருவதற்கு அனுமதிக்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்பது அடிப்படையாக வைத்தே அவர்கள் வேறு வழிமுறைகள் குறித்து சிந்தித்துள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு செல்வதில்லை என உறுதியான தீர்மானத்துடன் காணப்பட்ட முன்னாள் பிரதமர் அந்த முடிவை மாற்றியுள்ளமை தற்செயலான விடயமில்லை –எதிர்காலத்தில் எதிர்பார்க்காத பல அரசியல் மாற்றங்கள் நிகழக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Link to comment
Share on other sites

இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை ரணில் எடுப்பார் என்று நான் நம்பவில்லை. ரணிலுக்கு, ஐ.தே.க வுக்கு இருக்கும் சிறுபான்மை இனத்தவர்களின் ஆதரவு விமலின் மூலம் முற்றாக இல்லாமல் போய்விடும். அத்துடன், விமலுக்கு சிங்களவர் மத்தியில் கூட பெரிய ஆதரவு இல்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

நரி களமிறங்கி உள்ளார். பல  திருப்பங்களை காணலாம்.

அமெரிக்க சார்பு கொள்கை உள்ளவர்கள் இனி வரவேற்கப்படுவார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ரணிலை இறக்குவது, இந்தியா... விரைவில் புரியும்😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஜனாதிபதி தேர்தல் பரப்புரை இப்போதே ஆரம்பித்து விட்டது.
பசிலுக்கு எதிராக ரணில் களத்தில் இறங்கிவிட்டார் .
அதாவது சஜித்துக்கு ஆதரவாக

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி மகிந்தவுக்கு ஆப்பு(பம்) அடிக்க ஒரு சில மாதங்களுக்கு முன் கொழும்பு டெலிகிராப் ஒரு செய்தி போட்டது.

ரணிலின் மனைவி மைத்திரி பொது வேட்பாளராக களம் இறங்குவார் என்றது அந்த செய்தி.

எல்லாரும் அந்த செய்தியை பார்த்து சிரித்தோம்.

ஆனால் உண்மையிலேயே பொது வேட்பாளர் ஆகியது மைத்திரிபால சிறிசேன.

மைத்திரியை பொது வேட்பாளர் ஆக்கும் திட்டம் உள்ளது என்பதை முகர்ந்து பிடித்த கொழும்பு டெலிகிராப் - எந்த மைத்திரி என்பதில் கோட்டை விட்டது.

ஆகவே இந்த செய்தி நம்ப கடினமாக இருந்தாலும்  - இதன் பின்னால் சில நகர்வுகள் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

ஆகவே இந்த செய்தி நம்ப கடினமாக இருந்தாலும்  - இதன் பின்னால் சில நகர்வுகள் இருக்கலாம்.

விமல் வரலாம்... ஆனாலும் அது சஜித்திற்கான
ஒரு சந்தர்ப்பமாகவும்... ராஜபக்சேக்களுக்கானா
ஒரு அடியாகவும்.... இருக்கலாம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ரணிலை இறக்குவது, இந்தியா... விரைவில் புரியும்😎

உங்களுக்குதான் உள்வீட்டு விசயங்கள் அத்துப்படியாச்சே. எடுத்து விடுங்கோ நாதம்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் கூடிய போலியான நைக் காலணி! சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் கூடிய காலணிகள் என வெளியிடப்படும் வீடியோவில் உள்ளது போலியான நைக் (NIKE) காலணிகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நைக் (NIKE) சின்னம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் தாங்கிய ஒரு ஜோடி காலணிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியமை தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ள காலணிகள் நைக் (NIKE) நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை என, NIKE Inc நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக, அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் புலமைச் சொத்துக்களின் துஷ்பிரயோகம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நிறுவனத்தின் நடைமுறைக்கு ஏற்ப பொருத்தமான முன்னெடுப்புகள் நடைமுறைப்படுத்தப்படுமென NIKE, Inc நிறுவனம் அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக, வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. https://newuthayan.com/தமிழீழ-விடுதலைப்-புலிகளி/
  • வாழ்த்துக்களுக்கு நன்றி  பாஞ் ஐயா😊 நன்றி  நிலாமதி அக்கா😊 நன்றி நுணா😊 நன்றி குமாரசாமி ஐயா😊 தமிழன் என்றாலே அடங்காதவன்தானே😉 நன்றி புங்கை அண்ணா😊 நன்றி நந்தன்😊 எனக்கு கொடுவாள் தாற பிளான் போலிருக்கு😁 வாழ்த்துக்களுக்கு நன்றி  ஈழப்பிரியன் ஐயா😊 வாழ்த்துக்களுக்கு நன்றி  தமிழ் சிறி ஐயா😊
  • Meditation Music for Relaxing and Studying, Gain Focus Back and Improve your Concentration கடல் அலைகளினொடு இதமான இசை
  • “ரிஷாட் வாசஸ்தலம் எனக்கு வேண்டாம்” August 2, 2021 ரிஷாட் பதியுதீன், முன்னாள் வர்த்தக அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய வாசஸ்தலத்தை, தற்போது பயன்படுத்தும் அமைச்சர் பந்துல குணவர்தன, அந்த வாசஸ்தலத்தை மீண்டும் கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளார். கொழும்பு-7, மெகென்சி வீதி, 37ஆம் இலக்க இல்லத்தையே ரிசாட் பயன்படுத்தினார். அதனை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது பயன்படுத்துகின்றார். அந்த இல்லத்தையே அமைச்சர் பந்துல குணவர்தன கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளார் என அவரது ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசெம்பர் மாதம் தொடக்கம், ,தற்போதைய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அந்த இல்லத்தை கையளிக்க பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. ஆனால், குறித்த இல்லத்தில், தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ள பல சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சந்தேகங்கள் வெளிவரம் நிலையில், குறித்த இல்லத்தின் இரண்டு அறைகள் பொலிஸாரால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த இல்லைத்தை புனரமைப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 12 மில்லின் ரூபாய் பணத்தை செலவு செய்ய, தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன, வறுமை நிலையிலுள்ள சிறுமிகள் குறித்த வீட்டுக்குள் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் பாரதூரமானது என்றார். குறித்த உத்தியோகப்பூர்வ இல்லத்தை மீண்டும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தனவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://globaltamilnews.net/2021/164118    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.