Jump to content

மட்டக்களப்பில் பரபரப்பு: வியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனகராசா சரவணன்

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

அதில் காயமடைந்த இளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில், மென்டர்சன் வீதியிலேயே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடு உள்ளது.அவ்வீட்டுக்கு முன்பாகவே இன்று (21) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் லொறியொன்றின் சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது.

இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட வேளையிலேயே அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய அந்த அதிகாரி, பொலிஸில் சரணடைந்துள்ளார்.

image_66d2c086e8.jpgimage_4d573d4821.jpgimage_c9a0248002.jpgimage_0b5bb234f0.jpg


Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு துப்பாக்கிப் பிரயோகத்தின் திடுக்கிடும் பின்னணி வெளியானது

J.A. George 

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

அதில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மட்டக்களப்பு சின்னஊறணி பகுதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாகவே இன்று (21) மாலை 5.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

மணல் லொறியொன்றின் சாரதியே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறிய பொலிஸ் பேச்சாளர், சம்பவம் இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மூன்று நாட்களுக்கு முன்னதாக டிப்பர் சாரதியுடன் பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பிரதிபலனாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

குறித்த டிப்பர் சாரதி, முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர்,  துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய அந்த உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Tamilmirror Online || மட்டக்களப்பு துப்பாக்கிப் பிரயோகத்தின் திடுக்கிடும் பின்னணி வெளியானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுபேருக்குமிடையிலான வாய்தகறாறு இன்று துப்பாக்கி சூட்டில் முடிந்திருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கிச் சூட்டை அடுத்து வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு- பதற்றநிலை!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு- பதற்றநிலை!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடிய நிலையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை  ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையிலேயே மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியில் ஒன்றுகூடியுள்ளனர்.

இதன்போது, பெருமளவானோர் ஒன்றுகூடிய நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக கோசங்களை எழுப்பி வருகின்றனர்.

இதையடுத்து, அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Gun-Shot-in-Batticalao-Minister-Viyalenthiran-Home-Front-5-1.jpg

https://athavannews.com/2021/1224120

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் எனது தனிப்பட்ட பகையோ! கட்சி சார்ந்த அரசியலோ இல்லை! – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

BeFunky-collage-18.jpg?6bfec1&6bfec1

மட்டக்களப்பு நகர் – மன்ரசா வீதியில் அமைந்துள்ள எனது வீட்டுக்கு முன்னால் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத், மன வேதனையைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது, நான் கொழும்பில் இருந்த நிலையில், தொலைபேசி ஊடாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதிக்க கூறியதுடன் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை உடன் முன்னெடுக்குமாறும் நீதியை நிலை நாட்டுமாறும், பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட அனைவருக்கும் பணிப்புரை விடுத்துள்ளேன்.

எனது வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் பிறிதொரு நபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் மேற்படி நபர் காயமடைந்து, அதன் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதில் மிக மிக வேதனை அடைகின்றேன். காலம் தாழ்த்தாது உரிய நீதியை நியாயத்தை நாட்ட கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளேன். அத்துடன் இந்த விடயத்தில் எந்த எனது தனிப்பட்ட விதமான பகையோ! கட்சி சார்ந்த அரசியலோ! இல்லை என்பதையும் தெளிவாகவும் , ஆணித்தரமாகவும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

எஸ்.வியாழேந்திரன்,
இராஜாங்க அமைச்சர்

 

https://www.meenagam.com/துப்பாக்கி-சூட்டு-சம்பவத/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் பிறிதொரு நபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் மேற்படி நபர் காயமடைந்து,

தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தராக இருப்பாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தராக இருப்பாரோ?

பெயர் வெளியே வராத படியால்… சிங்களம் அல்லது முஸ்லீமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீதியில் சென்றவரை அழைத்து வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டார் – சம்பவத்தினை நேரில் கண்டவர்

 
IMG_0125-696x522.jpg
 51 Views

வீதியால் சென்றுகொண்டிருந்தபோது, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் அழைத்தே அவர் மீது துப்பாக்கிசூடு நடாத்தியதாக சம்பவத்தினை நேரில் கண்டவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மட்டக்களப்பு,ஊறணி,மன்றேசா வீதியில் உள்ள அமைச்சர் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற அமைச்சரின் மெய்பாதுகாவலரினால் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

மெய்பாதுகாவலருக்கும் குறித்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து மெய்பாதுகாவரால் குறித்த குடும்பஸ்தர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் சின்ன ஊறணியை சேர்ந்த 35வயதான மகாலிங்கம் பாலசுந்தரன் என்பவரே உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிசூடு நடாத்திய மெய்பாதுகாவலர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிசூடு நடாத்திய துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறையினர்,குற்றத்தடவியல் பிரிவினர்,புலனாய்வுத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். இதன்போது குறித்த பகுதிக்கு செல்ல ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

IMG_0127.jpg

தாங்கள் மன்ரேசா வீதியில் உள்ள வீடு ஒன்றில் காசு வாங்கிவிட்டு முச்சக்கர வண்டியில் செல்லும்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக மரத்தின் கீழ் இருந்த மெய்பாதுகாவலர் குறித்த நபரை அழைத்ததாகவும்  பின் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்ற நிலையில் திடீர் என மெய்பாதுகாவலர் இடுப்பிலிருந்து துப்பாக்கியை எடுத்து குறித்த நபரின் தலை மீது சுட்டதாகவும் உயிரிழந்த நபருடன் சென்றவர் தெரிவித்துள்ளார்.

மண் ஏற்றிச்செல்லும் வாகனத்தின் சாரதியாக கடமையாற்றும் உயிரிழந்தவர்,கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக தனது வாகனத்துடன் வந்தபோது இராஜாங்க அமைச்சரின் வாகனங்கள் வீதியை மறித்து நின்றுள்ளது. இதையடுத்து வாகனங்களை வீதியோரத்தில் நிறுத்துமாறு உயிரிழந்தவர் கூறிய நிலையில் அங்கு வாய்த்தர்க்கம் இடம்பெற்றதாகவும் அதன் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

https://www.ilakku.org/?p=53063

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“நான் பொலிஸ் என துப்பாக்கியை எடுத்ததும் வெடித்தது நண்பன் கீழே வீழ்ந்தான் ” - நேரில்கண்டவர் பரபரப்பு தகவல்.

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றது.

குறித்த சம்பவத்தில் மட்டக்களப்பு ஊரணியை சேர்ந்த 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர்  உயிரிழந்தார்.

சம்பவத்தையடுத்து பிரதேச மக்கள் போராட்டங்களை மேற்கொண்ட நிலையில், இராஜாங்க அமைச்சரின் வீடு அமைந்துள்ள பகுதி பொலிஸாரின் பாதுகாப்புக்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற  நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் இன்று செவ்வாய்கிழமை காலை 11.00 மணியில் சென்று பார்வையிடப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், துப்பாகிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி சாரதி பரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதியும் உயிரிழந்தவரின் நண்பனுமான விஜயராஜா தெரிவிக்கையில்,

நானும் நன்பணுமான பாலேந்திரனும் முச்சக்கரவண்டியில் வீதியால் சென்ற போது எங்களை கூப்பிட்டு வரவழைத்து நான் யார் என்று தெரியுமா நான் பொலிஸ் என துப்பாக்கியை எடுத்ததும் வெடிச்சது, எனது நண்பன் கீழேவிழுந்தான்.

நானும் பாலசுந்தரமும் நண்பர்கள் சம்பவதினமான நேற்று அமைச்சரின் வீடு அமைந்துள்ள மென்ரசா வீதியிலுள்ள வீடு ஒன்றில் மண் கொடுப்பது தொடர்பாக முச்சக்கரவண்டியில் சென்று திரும்பிவரும் போது அமைச்சரின் வீட்டின் முன்பகுதியிலுள்ள வெற்றுக்காணியிலுள்ள மரம் ஒன்றில் குறித்த மெய்ப்பாதுகாவலர் இருந்துள்ளார். இதன்போது அவரை கண்டு முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு எனது நண்பன் கோரினார் நான் நிறுத்தாமல் சென்றேன்.

இருந்தபோதும் நண்பன் முச்சக்கரவண்டியை திருப்பி எடுங்கோ பொலிஸார் கூப்பிடுவதாகவும் கதைத்துவிட்டு போவோம் என்றார். அதனையடுத்து நான் முச்சக்கரவண்டியை திருப்பிக்கொண்டு அமைச்சரின் வீட்டின் முன்னால் வீதியில் நிறுத்தியபோது  வீதிக்கு வந்த மெய்ப்பாதுகாவலர் நண்பனிடம் கேட்டார் என்னடா கைகாட்டிச் சென்றனீ என அதற்கு நண்பன் நீ யார் என்றார் அப்போது மெய்ப்பாதுகாவலர் இதை கேட்க நீயார் என இருவருக்கும் வாய்த்தர்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து மெய்ப்பாதுகாவலர் நண்பனை கழுத்தில் கையை வைத்து தள்ளிக் கொண்டுபோனபோதும் நான் யாரு என்று தெரியுமா பொலிஸ் என துப்பாகியை மெய்ப்பாதுகாவலர் எடுத்ததும் வெடித்தது நண்பன் கீழே வீந்துள்ளான் இரத்தம் வெளியேவந்தது அதன் பின்னர் எனது முச்சக்கரண்டியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றேன்.

அதேவேளை மூன்று தினங்களுக்கு முன்னர் மெய்பாதுகாவருடன் நண்பனுக்கு பிரச்சினை நடந்திருக்கின்றது எனக்கு அதுபற்றி தெரியாது என்றார்.

“நான் பொலிஸ் என துப்பாக்கியை எடுத்ததும் வெடித்தது நண்பன் கீழே வீழ்ந்தான் ” - நேரில்கண்டவர் பரபரப்பு தகவல் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் வைத்து தலையிலேயே சுட்டார்கள் – பல விடயங்களை அம்பலப்படுத்தும் சகோதரி

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் சகோதரி ஸ்தலத்தில் நடந்த பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் நண்பரொருவர் நேரடி சாட்சியம் வழங்கியிருந்த நிலையில் உயிரிழந்தவரின் சகோதரி இவ்வாறு கண்ணீர் மல்க வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதன்படி, “ஏன் அவரை சுட வேண்டும். என்வென்றாலும் கூப்பிட்டு பேசியிருக்கலாம் தானே? அமைச்சர் இல்லாத போது பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அங்கு என்ன வேலை?

 

 

எனது சகோதரர் பயணித்தது சாதாரணமான, எல்லாருக்கும் பொதுவான ஒரு வீதி. என்ற போதும் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக செல்லும் போது வாகனத்திலிருந்து கீழே இறங்கி தான் செல்ல வேண்டும் என அந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கூறியுள்ளார்.

எனது சகோதரரை தலையிலேயே சுட்டுள்ளார்கள். எனவே இந்த உண்மைகள் எல்லாம் தெரியவர வேண்டும் எனில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தனது வீட்டின் சிசிடிவி காணொளிகளை வெளிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
 

https://www.meenagam.com/வியாழேந்திரனின்-வீட்டிற/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.