Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66 152 மிமீ தெறோச்சி & வகை-83 122மிமீ தெறோச்சிகள்

 

 

cmowe.jpg

 

n e.jpg

 

fu.jpg

 

w.jpg

 

image(2).png

 

image(3).png

 

909.jpg

 

910.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66 152 மிமீ தெறோச்சி & வகை-83 122மிமீ தெறோச்சிகள்

 

 

f3i.jpg

 

oi3.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-66 152 மிமீ தெறோச்சி & வகை-83 122மிமீ தெறோச்சிகள்

 

 

இழுவை தெறோச்சிகள் ஏவுநிலைகளுக்கு இழுத்துவரப்படுகின்றன

 

image(10).png

 

1234567.jpg

 

32de.jpg

 

 

e.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வகை-83 122மிமீ தெறோச்சி & வகை-66 152 மிமீ தெறோச்சி

 

 

12341.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

வகை-83 122மிமீ தெறோச்சி & வகை-66 152 மிமீ தெறோச்சி

 

23ed.jpg

 

image(9).png

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

152mm தெறோச்சி

 

afwq32.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

இடது புறத்தில் தெறோச்சியை ஒட்டி நிற்பவர் பேரரையர்(கேணல்) இளங்கீரன் போன்று இருக்கிறார்.

 

ltte howitzer.png

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

122mm தெறோச்சி

 

dasdha.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஓயாத அலைகள் - 3

152mm தெறோச்சி

 

ltte-artlery.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சிங்களப் படைகளால் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இழுவை தெறோச்சிகளின்(Towed howitzers) எண்ணிக்கை:

 • 152 மிமீ தெறோச்சி - 15
 • 130 மிமீ தெறோச்சி - 12
 • 122 மிமீ தெறோச்சி - 10
 • 85 மிமீ தெறோச்சி - 2

ஆதாரம்: 

https://web.archive.org/web/20160304055103/http://www.defence.lk/news/20110801_Conf.pdf

https://www.dailymail.co.uk/news/article-2227251/Cyclone-Neelam-Tonnes-military-hardware-belonging-Tamil-Tigers-uncovered.html

 

கைப்பற்றியவை தவிர மண்ணோடு உறங்குபவை எத்தனை என்பது பற்றி எனக்குத் தெரியாது. (உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட தெறோச்சிகள் தவிர்த்து)

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

எல்லா மக்களே...

இத்துடன் என்னிடம் இருந்த அத்துணை தெறோச்சிகளின் படிமங்களையும் யாழில் ஏற்றிவிட்டேன். எதிர்காலத்தில் எங்கேனும் ஏதேனும் கிடைத்தால் கொண்டு வந்து பதிவிடுகிறேன்.

இவற்றை வாசகர்கள் அனைவரும் பதிவிறக்கி வைத்து எமது வரலாற்றை பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

நன்றி.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்+

அடேய், இந்த படிமங்களின் மேல் தங்களின் பெயர்களை எழுதி வெளியிடும் மலத்தினும் கீழான பிறவிகளே; நாய்களே... இதை வாசித்தாவது திருந்துங்கடா...

 

 

https://www.eelamview.com/2021/07/02/ltte-pictures-logos/

 

இவை, தமிழீழத்தின் சொத்துகள், உங்கள் கொப்பன் கோத்தை சம்பாதித்தது இல்லை. பல்லாயிரம் போராளிகள் & மக்களின் குருதியில் விளைந்தவை. கொம்பனி நினைத்திருந்தால் இவற்றில் 'நிதர்சனம், அருச்சுனா' என்று தங்கள் கலையகங்களின் பெயர்களை இட்டு வெளியிட்டிருக்கலாம். ஆனால், எக்காலத்திலும் தமிழீழத்தின் தம்பி தங்கைகள் இவற்றை மறுபயன்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக பதிப்புரிமை இல்லாமல்(வெறும் எழுத்து வடிவில்தான் பதிப்புரிமை கொடுத்தனர், அதற்கு மதிப்பில்லை) இப்படிமங்களை வெளிநாடுகளிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவற்றை இன்று உங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக பயன்படுத்துகிறீர்கள்...

என்டைக்கடா திருந்தப்போகிறீர்கள்? இப்படி நீங்கள் சம்பாதிக்கும் சொத்துகள் உங்களிடம் நிலைக்காது; கூடாது. கடவ!

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By நன்னிச் சோழன்
   எல்லா(hello)...
   வாங்கோ! வாங்கோ !
   வணக்கம்...
   என்னென்டு சொன்னால் இன்றைக்கு நாங்கள் பார்க்கப்போவது விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றியே. 
    
   இதனை நான் 'H I Sutton'-இல் வெளியாகிய கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றிய சில தகவல்களை தழுவியே எழுதினேன்.
    
   கடற்புலிகளிடம் இருந்தவை உண்மையில் நீர்மூழ்கிகள் தானா?
   இதற்கு இரு விடையுமே உண்டு. ஆம், இல்லை..
   புலிகளால் கட்டப்பட்டவையில் 60 விழுக்காடு மெய்யான நீர்மூழ்கிகள் அல்ல.. ஆனால் அவை மெச்சத்தக்க தாழ் தோற்றுருவ கலன்கள்(low profile vessels), மாந்த ஏவரிகள் (human torpedoes ), அரை நீர்மூழ்கிகள்(semi-submarines) மற்றும் ஒற்றை நீரடி வளிவழங்கி நீர்மூழ்கிகள் (one snorkel submarine) ஆகும்... இவற்றினை புலிகள் போரில் கையாண்டிருந்தார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை.. ஆனால் புலிகள் இவற்றைப் பயன்படுத்தி பொருட்களை தருவித்திருந்தனர் என்பது மட்டும் உறுதி. 2008இல் நடத்தப்பட்ட ஓர் கரும்புலித் தாக்குதலில் தாழ் தோற்றுருவ கலன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது…
    
    
   நான் இங்கே நீர்மூழ்கி என்று பலர் கண்டு குழம்பும் புலிகளின் கலன்களைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்; படங்களை இணைத்துள்ளேன்.. ஏனைய கலன்களைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை!
    
    
   சரி, முதலில் ஆம் என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம்.
   நீர்மூழ்கிகள் (submarine): பொதுவாக மெய்யான நீர்மூழ்கிகள் என்பவை அரை-நீர்மூழ்கிகள் மற்றும் தாழ் தோற்றுருவ கலன்களை விட கட்டுவது, பராமரிப்பது மற்றும் பணியாற்றுவது மிகவும் கடினம். எதிரொலிக்கருவி(sonar) மற்றும் ஏவரிகள்(torpedoes) உதவியின்றி அவைகளின் தந்திரோபாய நன்மைகளும் மிகவும் குறைவாகவே உள்ளன, எனவே கடற்புலிகள் அவற்றைக் கட்டுவதில் பெரியளவில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. ஆகவேதான் அவர்கள் ஒப்பீட்டளவில் சில நீர்மூழ்கிகளைக் கட்டினார்கள், அவை குறைந்தபட்சம் ஒரு நீரடி வளிவழங்கியாவது (snorkel) மேற்பரப்பை எட்டி முழுமையாக நீரில் மூழ்கும் திறன் கொண்டதாக இருந்தது.
   ஆனாலும் அவர்கள் 2 மெய்யான இயங்குநிலை நீர்மூழ்கிகளைக் கட்டியிருந்தார்கள். அத்தோடு மேலும் மூன்று நீர்மூழ்கிகளும் கிடைக்கப்பெற்றது.. ஆனால் அது இயங்குநிலை நீர்மூழ்கியா என்பதைப் பற்றிய புலனங்கள் ஏதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.. புலிகளால் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஏனைய இரண்டு பெரிய வகை நீர்மூழ்கிகளும் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கியதால் முடிக்கப்படாமல் விடப்பட்டிருந்தன, இதனால் அவற்றின் இறுதிவடிவம் எவ்வாறு இருந்திருக்க முடியும் என்பதை எம்மால் ஊகிக்க முடியவில்லை.. போர் இன்னும் கொஞ்ச நாட்கள் நீடித்திருக்குமானால் புலிகளின் இந்தப் புதிய நீரடி போரியல் முறையையும் நாம் அறிந்திருக்கலாம்.
    
   1) &2)
   கீழே உள்ள இரு மெய்யான நீர்மூழ்கிகளும் தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாக (travel) முடியும். ஆகையால் இது இராணுவ வேலைகளுக்கு பயன்படுத்தப்பட இயலாது. ஆனால் இவையே புலிகளால் பின்னாளில் கட்டப்பட்ட நீர்மூழ்கிகள் போன்ற மெச்சத்தக்க கலன்களின் கட்டுமானத்திற்கு வித்திட்டவையாகும்.
   'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நீர்மூழ்கிகள் '


   'மேலே pink நிறத்தில் உள்ள நீர்மூழ்கியின் உட்புறம்'

   'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளம்'
   3)
   இரும்பாலான இந்நீர்மூழ்கி ஆனது டிசம்பர் மாதம் 1995 ஆம் வல்வெட்டித்துறையில் வைத்து சிறிலங்கா தரைப்படையினரால் கைப்பற்றப்பட்டது .. இதில் 1- மட்டுமே செலவாகலாம்.. (travel) அளவு (அடியில்): 18.7 x 3.5 X 4.5   'மேற்கண்டதின் பின் புறம்'
   4)
   புலிகளால் இது வரைக்கும் முழுமையாக் கட்டப்பட்ட ஒரே ஒரு நீர்மூழ்கி: புலிகளால் கட்டப்பட்ட முதல் செயல்படும் மெய்யான நீரில் மூழ்கக்கூடியவற்றில் ஒன்று . இது ஓராள் செலவாகக் கூடிய நீர்மூழ்கியாகும். புறம்போக்கி குழாயின் அளவு மற்றும் பற்றாக்குறை இது மின்கலம் மூலம் இயக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.   'உயர் பின்பக்க பார்வை'
    
   5)பெப். 27 . 2009 அன்று சிறிலங்காத் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்ட மற்றுமொரு நீர்மூழ்கி. இந்தச் செய்தியை யூரியூப்பில் இருந்து எடுத்தேன்.

   'கடற்கலத்தின் முன்பக்கம்' | படிமப்புரவு: இப்படம் என்னால் தொகுக்கப்பட்டது ஆகும்.. 3 படங்களை ஒன்றிணைத்தே இப்படத்தினை உருவாக்கினேன்..

   தலைப்பகுதி

   தலைப்பகுதி

   தலைப்பகுதி

   'பக்கவாட்டுப் பகுதியில் அந்த இராணுவ அதிகாரி ஏதோ ஒன்றினைபற்றிச் சுழற்றிக்கொண்டு இருக்கிறார்'

   பின்பக்கம்

   பின்பக்கம்

   'பின்பகுதி.. அருகில் உடைந்து விழுந்திருப்பது தான் நீங்கள் மேலே கண்ட அந்த திட்டுப்போன்ற பகுதி'


   'சுழலி'

   'சுக்கான் உடன் கூடிய சுழலி'
   6)
   கீழ்க்கண்ட நீர்மூழ்கி எலும்புக்கூடானது பாதியே முற்றாக கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இது முற்றிலும் கட்டி முடிக்கப்படாமையால் இது பற்றிய புலனங்கள் ஒன்றும் கிடைக்கபெறவில்லை.. ஆனால் இதில் உள்ள பெருமளவான உலத்தப்பட்ட (welded) எஃகு பட்டைகளை(steel plates) வைத்துப் பார்க்கும் போது இதனால் அதிக அளவு ஆழம் செல்ல முடியாது என்பது உற்றது (fact) ஆகும். இது முற்றிலும் முடிக்கப்படாமையால் இது எவ்வாறு இருந்திருக்கும் என்று அறுதியிட்டு கூற இயலாது. ஆனால் இது கட்டி முடிக்கப்பட்டிருந்தால் இதுவே புலிகளின் முதலாவது பெரிய முழுஇயக்கம் கொண்ட நீர்மூழ்கி ஆகியிருக்கும் என்பதில் ஐயமில்லை... அவ்வளவு சிறப்பாக இதன் எஃகு பட்டைகள் உலத்தப்பட்டிருந்தன. நீளம்: 30அடி (10m) இக்கலத்தால் 1360 kg வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


    
   7)
   மற்றொரு நீர்மூழ்கியின் கட்டி முடிக்கப்படாத எலும்புக்கூடு. சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்டவைகளிலே இதுதான் மிகப்பெரியது ஆகும். நீளம்: 360 அடி உயரம் : 10 அடி


   😎
   கடற்புலிகளால் பாதியிலேயே விட்டுவிடப்பட்ட மற்றுமோர் நீர்மூழ்கிக்கான உதிரிப்பாகங்கள்.

   9)
   கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்டுகிறது. இதால் 5 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும். இது இரண்டு பகுதிகளாக கட்டப்பட்டு பின்னர் ஒட்டப்பட்டுளது, முக்கிய சேரல் கிடைமட்டமாக பக்கங்களில் தெரிகிறது இயங்கும். நீளம் : 25.5 அடி உயரம் : 5 அடி அகலம் : 9.5 அடி

   'மேற்கண்டதின் பின் புறம்'

   'மேற்கண்டதின் நீரடி வளி வழங்கி(snorkel)'
    
    
   சரி,இனி இல்லை என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம். மேலே நான் கூறியதைப் போல நீர்முழ்கிகள் கட்டுவது அவ்வளவு இலகு இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட புலிகள் அவற்றிற்கு ஈடாக இவற்றினைக் கட்டினார்கள்.
   தாழ் தோற்றுருவ கலம் (low profile vessel): தாழ் தோற்றுருவ கலன்கள் நீரில் மிகக் தாழ்வாக ஓட வடிவமைக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட முழு மேலோடும் (hull) நீரில் மூழ்கியுள்ளன, ஆனால் மேல்தளம் மட்டும் மேற்பரப்புக்கு மேலே தெரியும். இதன்மூலம் கதுவீகளின் கண்ணில் மண்ணைத் தூவுவதுடன் அவற்றைக் கண்டறிவதையும் கடினமாக்குகிறது, மேலும் இதனைச் சுடுவதும் கடினமான காரியம் ஆகும். இருப்பினும் இவ்வகைக் கலன்கள் வேகத்தில் கொஞ்சம் குறைவே, ஏனெனில் வேகமான படகுகளுடன் ஒப்பிடும்போது இவற்றின் இயந்திரம் தண்ணீரின் மேற்பரப்புக்குக் கொஞ்சம் கீழ்வழியாக அதிகமாக உந்தி தள்ள வேண்டும்.. ஆனால் படகுகள் அலைமேலே மேலோடினை தூக்கிக்கொண்டு வேகமாக உந்தி ஓடும்.
   இது 2 வெளியிணைப்பு மின்னோடியைக் (out board motor) கொண்டது! வட்டு வரைக்குமான உயரம் : 5.0' - 5.3' 1)
   'இந்த இரண்டு கொளுக்கிகள் போன்று இருப்பவைக்கு முன்னால்த்தான் கதுவீ (radar) பொருத்தப்படிருந்தது'


   'படத்தின், முன்புறத்தில் திறந்த நிலையில் இருக்கும் அறையினுள்தான் மீகாமன் இருப்பார்….. பின்புறத்தினுள் தெரியும் அந்த இரு அறைகளுக்குள்தான் பண்டங்கள் வைக்கப்படும்'

   'மீகாமன் அறையினுள் இறங்கி நிற்கும் ஓர் சிறீலங்காத் தரைப்படை வீரன்'

   'கலத்தின் பின்புறத்தின் மேற்பகுதி'

   'கலத்தின் பின்பகுதி'
   மேற்கண்ட கடற்கலனின் முழு நிகழ்படத்தினையும் காண: https://youtu.be/dHvnGWoDnTU?t=268
    
    
   2) இது தான் புலிகளின் முதலாவது தாழ் தோற்றுருவக் கலனாக இருந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

   3)
   மிக நொவ்வு கலத்தின்(VSP) மேலோட்டு(hull) வடிவம் கொண்ட ஓர் தாழ் தோற்றுருவ கலம்.. இதுதான் கடற்புலிகளால் கட்டப்பட்டதிலேயே மிகவும் சீரிய மேம்படுத்தப்பட்ட வடிவம் கொண்ட தா.தோ.க ஆகும். பார்த்துப் பார்த்து செதுக்கியிருகிறார்கள்!
   இது உள்ளிணைப்பு மின்னோடியைக் (inboard motor) கொண்டது!
   படிமப்புரவு :H I Sutton
   மேற்கண்ட கலனின் பல்வேறுபக்க தோற்றங்கள்:
   'பின்பகுதி'
    
    
   தாழ் தோற்றுருவ மிக நொவ்வு கலம் (low profile very slender vessel): 1)    
   2)
   நீளம்: 30 அடி    
    
   அரை நீர்மூழ்கிகள் (semi submarine) : தாழ் தோற்றுருவ கருத்தாய்வுகளை ஒரு படி மேலே கொண்டு, நீரில் பாதியளவு மூழ்கக்கூடிய / கிட்டத்தட்ட முற்றிலும் நீரில் மூழ்கும் கலன்களே இந்த அரை நீர்மூழ்கிகள் ஆகும். இருப்பினும், செலுத்தறை(cock pit), காற்று உட்கொள்ளல் (air intakes) மற்றும் இயந்திர புறம்போக்கி(engine exhaust) பொதுவாக மேற்பரப்புக்கு மேலே இருக்கும். தா.தோ.க (LPV) விட இவை மிகவும் வலுவாக கட்டப்பட வேண்டும், மிக விரிவான பதிப்புகள் நீரடி வளிவழங்கிகளைத் தவிர முற்றிலும் நீரில் மூழ்கி இயங்குகின்றன - இவை ‘நீரடி வளிவழங்கி நீர்மூழ்கி’ (snorkel submarine) என்றும் அழைக்கப்படுகின்றன.
   இக்கலங்களை எதிரொலிக்கருவி மூலமோ இல்லை கதுவீ மூலமோ கண்டறிவது கடினமாகும்.
   கீழே நீங்கள் பார்ப்பவை அனைத்தும் எஃகால் ஆனவை
   1)
   நீளம்: 7.3m அகலம்: 1.2m உயரம் : 5.6' - 6' இதற்குள் ஓரிருக்கை மட்டுமே இருந்தது
   'ஓட்டியிருக்கை'
   2)
   கீழ்க்கண்ட வகை நீர்மூழ்கியில் கதுவீ(radar) பூட்டப்படிருந்தது.. அத்துடன் உள்ளே ஒட்சியன் குடுவையும் இருந்தது. இதால் 15 பேர் வரை காவிச்செல்ல இயலும். இந்தக் கலம் ஆனது சரளையுடன்(ballast) வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்துநெறிக்கு(navigation) உதவ ஒரு புவி நிலை காட்டியையும் கொண்டிருந்தது. நீளம்: 47 அடி
   அகலம்: 8 அடி
   உயரம் : 7 அடி
   வளி வழங்கியின் உயரம் உயரம் : 6' - 6.2-
   இதற்கான ஆற்றல் வழங்குவது உந்தியுடன் கூடிய உள்ளிருக்கும் பொறியாகும்.
   பொறியின் ஆற்றல்: 400–800 HP


   'முன்பக்கத்திலிருந்து சத்தார் பார்வை'


   'மேற்புறத் தோற்றம்'

   'முன்புறத் தோற்றம்'
   'உட்புறத் தோற்றங்கள்'


   'ஓட்டியிடம் & steering wheel'

   எப்படி ஓட்டுவார்கள் என்று விளக்குகிறார் ஓர் சிங்களத் தரைப்படை வீரர்'

   'பின்பகுதி (தெரிவது சுழலி ); அருகில் சிங்கள இராணுவ வீரர்கள் உள்ளனர்.'

   'சுழலி '
   3)
   இக்கலமானது கோகுலன்-45 ஐ விடச் சிறியது.
   நீளம்: 5.4 m அகலம்: 1.5 m

   4)
   கீழ்க்கண்ட கலனானது இதேபோன்ற (மேலே தா.தோ.க இல் கடைசியாக நான் காட்டியுள்ளது) புதுமையான எஃகு தாழ் தோற்றுருவ கலனுடன் நெருக்கமாக தொடர்புடையது, மேலும் இவை ஒரே வடிவமைப்பாளரால் ஒரு சோடியாக கட்டப்பட்டிருக்கலாம். இருப்பினும் முன்னோக்கி உள்ள செலுத்தறையானது பாய்விறக்க (dive) துடுப்புகளை இருபுறமும் கொண்டு ஆழம் மற்றும் பாய்விறக்கத்தை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. செலுத்தறை நீர்காப்புக் கொண்டது அல்ல, ஆனால் கூரையில் ஒரு அணுகல் புழைவாயில்(access hatch) கொண்டுள்ளது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது இத ஒரு ஈர-நீர்மூழ்கி (wet-submarine) என்பதற்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன, ஆக இதன் குழுவினர் பாய்விறக்க உடை அணிய வேண்டும்.
   இருப்பினும், மேலோட்டு(hull) வடிவத்தை வைத்துப் பார்க்கும் போது பெரும்பாலான நேரங்களில் செலுத்தறையுடன்(cockpit) குறைந்தபட்சம் ஓரளவு மேற்பரப்புக்கு மேலே செலவழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
   நீளம் : 8m உயரம் : 4.2'   'மேற்கண்ட நான்கு புகைப்படங்களும் ஓட்டுநர் இருக்கும் உள்ளிடம் தொடர்பானவை'
   5) புதைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட பிறிதொன்று:

   இனி நீங்கள் கீழே பார்ப்பவை அனைத்தும் கண்ணாடியிழைகளால் (fibre glass) ஆனவை
   6)
   இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்(travel).


   'உட்புறத் தோற்றம்'
   7)
   நீளம்: 4.30m அகலம்: 1.20m உயரம்:1.18m இந்த நீமூழ்கியின் பெயர் 'கோகுலன்-2 ' என்பதாகும். இது 1993 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் இந்திய காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

   'மேற்கண்ட கடற்புலிகளின் அரை நீர்மூழ்கியானது கோயம்புத்தூரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது'
   8 )
   கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்டுகிறது. இதால் 10 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும். 

   'முன்னிருந்து சத்தார் பார்வை'

   'மேலிருந்த பார்வை'

   'பின்னிருந்து சத்தார் பார்வை'

   'பக்கவாட்டுப் பார்வை'

   'நடுப்பகுதியை கீழிருந்து மேனோகிய பார்வை'

   'பின்பகுதிப் பார்வை'
    
    
   அடைக்கப்பட்ட மாந்த ஏவரிகள் (enclosed human torpedoes): முதலில் மாந்த ஏவரிகளை விளக்குகிறேன்.. இதில் புலிகளிடம் பல வகைகள் இருந்தாலும் பார்ப்பதற்கு நீர்மூழ்கிகள் போல இருப்பவைப் பற்றி மட்டும் இங்கே கொடுக்கிறேன். இவை கடற்புலிகளிடம் இருந்த அலைமேற் செலவாகும் கரும்புலிகளால் உருவோட்டப்படும்(sail) கலன்களைப் போல இவை நீரடியில் உருவோட்டப்படும் ஏவரிகள் ஆகும்.
   இது ஒரு கைடென்(kaiten) வகுப்பு ஏவரியாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்.


   'உள்ளிருந்து முன்னோக்கிய பார்வை'


   'உட்பகுதி'
    
   2) இது ஒரு கைரென்(kaiten) வகுப்பு ஏவரியாகும்.
   இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்    
    
   தாழ் தோற்றுரு அடைக்கப்பட்ட மாந்த ஏவரி(low profile enclosed human torpedo): 1)
   இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்   'பின்பகுதி'
   2)
   இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்

   படத்தில் முன்னால் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி.
    
   3) இடது புறத்தில் உள்ளது தாழ் தோற்றுருவ மிக நொவ்வு கலம் (Low profile Very slender vessel); வலப்புறத்தில் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி.    
    
   கூடுதல் செய்திகள்:  
   உசாத்துணை :
   H I Sutton Sundayobserver.lk - Sri Lanka Colombo Dockyard - Wikipedia Cedric-class patrol boat - Wikipedia Sea Tigers of the LTTE | Richard Pendavingh Very Slender Vessel - Wikipedia ltte wepons dossier படிமப்புரவு
   ஒரு சில படங்கள் என்னுடைய கணினியின் துணைகொண்டு வடிவமைக்கப்பட்டது H I Sutton - Covert Shores http://quora.com Sri Lanka Brief All You Need to Know BEFORE You Go - Updated 2020 (Trincomalee, Sri Lanka) - Tripadvisor (Tamil Tigers Deserted Homemade Submarine Yard Sri Lanka: Operational Mini Submarine of LTTE Found Vanni and Nilaveli, Sri Lanka Flickr FIRST EVER LTTE OPERATIONAL SUBMARINE TAKEN OUT FROM VELLAMULLIVAIKKAL SEA Getty Images Emerging Out Of The Shadows Flickr Sri Lanka: Interesting LTTE Boats Captured This is what they used. The LTTE of Sri Lanka - One of the worlds most brutal terrorist groups. Sri Lanka Army Captures Boat Building Facility of Terrorists Explore Sri Lanka Twitter. It's what's happening. ReviewGuru Steemit ரூபபாகிணி தொலைக்காட்சி https://www.jvpnews.com/srilanka/04/198644  
   ஆக்கம் & வெளியீடு
   நன்னிச் சோழன்
  • By நன்னிச் சோழன்
   "தோற்றிடேல், மீறி 
   தோற்றிடினும் வரலாறின்றி சாகேல்!"
   -நன்னிச் சோழன்
    
   எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….! This document is solely made for an educational purpose only  
   எல்லா(hello)...
   வணக்கம் நண்பர்களே …/\…
   நாம் இவ்வாவணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்.. இன்னும் சில நாட்களில் இது முடிவடையப்போகிறது!
   இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களின் தரைப்படையான தரைப்புலிகள் மரபுவழி படைத்துறையாக மாற்றம் பெறத் தொடங்கிய 1990 ஆம் அண்டில் இருந்து அவர்கள் தோற்கடிக்கப்பட்டு ஆய்தங்கள் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு வரை அவர்கள் அணிந்திருந்த சீருடைகள் பற்றியே.
   இச்சீருடைகள் பற்றிய பதிவில் 'பச்சை வரிப்புலி'யின் 4 விதமான விருத்துகள் பற்றியும் தரைப்புலி படையணிகளின் பல்வேறு விதமான சீருடைகள் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறேன்.
   வாருங்கள் தாவுவோம், பதிவிற்குள்!
    
   மடலம் ஒன்று:
    
   இவ்வரிப்புலி சீருடையின் தோரணி பற்றி நான் விரித்து எழுதிய ஓர் முழுமையான பதிவு:
   இதை வாசித்த பின்னர் கீழே சென்றால் வரிப்புலியின் தோரணி பற்றீ முழுமையாக அறியலாம்!
    
    
   விடுதலைப் புலிகளின் சீருடைகள் பற்றி:- விடுதலைப் புலிகளின் சீருடையினை வரிப்புலி என்றும் வரியுடை(சேர்த்தே எழுதுதல் வேண்டும்) என்றும் அழைப்பர். நிறங்களை முன்னொட்டாக சேர்த்து வழங்கும் போது...
   நீல வரி பச்சை வரி கறுப்பு வரி அதில் இருக்கும் அந்தக் கோடுகளை வரி என்று விளிப்பர்.
   வரியின் உட்புறத்தில் இந்நிறங்கள் ஏதும் தெரியாது. அதில் வரியில் உள்ள மூன்று நிறங்களில் எது மெல்லிய நிறமாக உள்ளதோ அதுவே உள்நிறமாக இருக்கும். அந்த சீருடையினை அணியும் போது படங்கு விரிப்பினை அணிவது போன்ற கனத்தை உணர்வீர்கள்.
   இடது கையின் தோள்மூட்டிற்கு கீழே புயந் தொடங்கும் இடத்தில் 3 தூவல்(pen) வைப்பதற்கு ஏற்ப குழல் போன்று 3 குதைகள்(loop) இருக்கும். அவற்றின் கீழ்ப்பகுதி அடைக்கப்பட்டிருக்கும். தோளில் தோள் மணைக்கான(shoulder board) துண்டங்கள் இருக்கும். தோள் தொடங்கும் இடத்திற்கு அருகில் தோள் மணை துணிக்கு குறுக்காக ஒரு துண்டமானது (small piece of cloth) தோள் மணையோடு பொம்மிக்கொண்டு நிற்பதாக தைக்கப்பட்டிருக்கும்.(தெளிவிற்கு கீழே உள்ள பிரசாந்தன் அண்ணாவின் படத்தை காண்க) இது பெரும்பாலானோரின் வரிப்புலியில் இருந்தது. ஆனால் வரிச்சீருடை அல்லாத ஏனைய சீருடைகளில் எப்பொழுதும் இருந்தது. அதுவும் 2002 ஆம் ஆண்டிற்குப் பின் எவருடைய சீருடையிலும் இல்லை.
   குப்பி & தகடு வெளியில் தெரியாது. மேற்சட்டையால் ஏற்படும் மறைப்பால் உள்ளிருக்கும். மேற்சட்டையின் முன்புறத்தில் படைத்துறைச் சீருடைக்கு இருக்கும் நான்கு பக்குகள்(pocket) இருக்கும். அதாவது மேலே வலம்-இடமாக இரண்டும் கீழே வலம்-இடமாக இரண்டும் இருக்கும். கையின் முடித்தலானது சாதாரண நீளக்கைச் சட்டைக்கு இருக்கும் முடிதல் போன்று இருக்கும்.
   நீளக் காற்சட்டைக்கு, மேற்பக்கத்தின் இரு கால்களிற்கும் சாதாரண நீளக் காற்சட்டைக்கு இருப்பது போன்ற பக்குகளும் முழங்காலிற்கு சற்று மேலே படைத்துறை சீருடைக்கு இருப்பது போன்ற இரு பக்குகளும் இருக்கும். நீளக் காற்சட்டையின் பின்புறத்தின் இருகுண்டியிலும் இரு பக்குகள் இருந்தன. காலின் முடித்தலானது உலகளாவிய படைத்துறைக்கு இருப்பது போன்ற தெறி கொண்ட கொச்சுத்துண்டு வைத்து தைக்கப்பட்டிருக்கும்.
   பெண்கள் சீருடையினை அணிந்து இடைவாரினை அணியும் போது மேற்சட்டையினை வெளியில் விட்டு அதன் மேற்றான் இடைவாரினை அணிவர். அந்த இடைவாரானது பச்சை நிறத்திலோ அல்லது கறுப்பு நிறத்திலோ இருக்கும். ஆண்கள் சீருடையினை உள்ளுடுத்திய பின்னர் சாதாரணமாக இடைவார் அணிவது போன்று இடைவாரினை அணிவர்.
   → குறிப்பு: நான்காம் ஈழப்போர் வரை சமர்க்களங்களில் இச்சீருடையினை பலர் அணிவர்; சிலர் அணியார். அணியாதோர் குடிமை(Civil) உடைகளை அணிவர். ஆனால் நான்காம் ஈழப்போரில் 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இச்சீருடை அணிவதை புலிகளில் பெருமளவானோர் தவிர்த்தே வந்தனர் .
    
   1989 இறுதி - 1995 வரையிலான பச்சை வரிப்புலி இனி புலிகளின் பச்சை வரிப்புலியினைப் பற்றிக் பார்ப்போம். இச்சீருடையினை அணிந்து திருமதி அனிதாப் பிரதாப் அவர்களிற்கு 1990 ஆண்டின் மார்ச் மாத செவ்வி வழங்கினார், தவிபு தலைவர். மேலும் 1989 ஆம் ஆண்டைச் சேர்ந்த நிகழ்படம் ஒன்றில் மணலாறு காட்டில் புலிகளில் பயிற்சி பாசறையில் இச்சீருடை அணிந்த ஆண்பெண் போராளிகள் பயிற்சி எடுக்ப்பதைக் கண்டுள்ளேன். எனவே இது 1990 ஆண்டிற்கு முன்னரே பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. இது தான் வரியுடைகளிலே வெளிவந்த முதலாவது சீருடையாகும். இதற்குத் தொப்பியாக கறுப்பு நிற வரைகவியினை அணிந்திருந்தனர், புலிவீரர்.
   இதில் இருந்த நிறங்களாவன:
   பச்சை கபிலம் வெள்ளை இந்த சீருடையில் வெள்ளை ம் கொண்ட வரிகள் தடிப்பாக இருந்ததால் அந்நிறமே எடுப்பாக இருந்தது.

   'இடது பக்கத்தில் இருந்து முதலாவதாக நிற்பவர் சாள்ஸ் அன்ரனி போராளி கதிரவன் ஆவார் | ஆண்டு: 1994 என்கிறது Royalty Free Stock Photos, Illustrations, Vector Art, and Video Clips'
   (இதே சீருடையினைத்தான் பெண்களும் அணிந்திருந்தனர்)
   (இதே காலகட்டதில் உபிகை(RPG) அணியும் இந்தச் சீருடைதான் அணிந்திருந்தது)

   '1991 ஆம் ஆண்டு ஆ.க.வெ. நடவடிக்கையின் பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கிய முன்னேற்ற சமரின்போது கைப்பற்றப்பட்ட மண்ணரணில் உள்ள காவலரணிற்கு கீழே அமர்ந்திருக்கும் கட்டளையாளர்கள் (சேர்ப்பன்(Admiral) சூசை & 'சமர்க்கள நாயகன்' பிரிகேடியர் பால்ராஜ்) இருவரும் அணிந்திருக்கும் சீருடையினை நோக்குக. | படிமப்புரவு: eelamview'
   ஆனால் இதே காலத்தில் பெண்களின் 'மகளிர் படையணி'யின் ஒரு பிரிவு(unit) கீழ்க்கண்ட நிறத்திலான சீருடை அணிந்திருந்தது.

   '1993 ஆம் ஆண்டு வெளியான படம் | இந்தக் கால கட்டத்தில் ஆண்புலிவீரர் ஆரும் இது போன்ற சீருடை அணிந்ததில்லை |படிமப்புரவு: Tamilmaaran'
   மேற்கண்ட சீருடைக்கான தொப்பியும் அதே நிறத்தில்தான் அணியப்பட்டிருந்தது. கீழ்க்கண்ட படத்தில் அதைக் காண்க:-

   'படிமப்புரவு: viduthalaippulikal'

   ''1993 ஆம் ஆண்டு வெளியான படம் | நாளிதழில் இருந்து எடுத்த படம் எனப்தால் படத்தின் நிறம் கொஞ்சம் மாறி விட்டது. மேலுள்ள படிமத்திலுள்ள நிறமே சரியான நிறமாகும் | 'படிமப்புரவு: viduthalaippulikal'
   இதே கால கட்டத்தில் தொடங்கி 2002 ஆம் ஆண்டுவரை புலிகளின் படையணியினர் ஒரு விதமான சீருடை போன்ற உடை ஒன்றினை சமர்க்களங்களில் அணிந்து வந்தனர். அதன் படம்:
   நிறம்:-
   ஒரு வித பச்சை நிறம் ஒரு வித சாம்பல் நிறம் போன்ற நிறம் இவ்வுடையானது நான் மடலம் மூன்றில் குறிப்பிட்ட அந்த மஞ்சள் நிற மேற்சட்டை போன்றதே. ஆனால் இது அதனினிறு கொஞ்சம் மேம்பட்டது ஆகும். ஏனெனில் 1987 இல் வெறும் மேற்சட்டை மட்டுமே. ஆனால் இக்காலத்தில் மேற்சட்டையோடு அதற்குத் தகுந்த நீளக் காற்சட்டையும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த மேற்சட்டையில் இரு விதமான நிறங்களில் 4 விதமான தோரணிகள்(patterns) இருந்தன..

   'இவைதான் அந்த நாங்கு விதமான பாங்கங்கள் ஆகும் (முதல் படத்திற்கு நிறமூட்டப்பட்டுள்ளது. அதன் உண்மையான நிறம் அதற்கு அருகில் உள்ள படங்களில் உள்ள சீருடை நிறமே) | 'படிமப்புரவு: google'
   மேலுள்ள நான்கு பாங்கங்களில் மூன்று பாங்கங்கள் கீழே உள்ளதை நோக்குக:-

   ஆனால் நீளக்காற்சட்டை ஒரே ஒரு நிறத்தில் மட்டுமே இருந்தது. அது ஒரு விதமான கடும் பச்சை ஆகும்(தெளிவான நிறத்திற்கு மேலே முதற் படிமத்தைக்(Image) காண்க)

   'நான் மேற்கூறிய பச்சை நிறமும் சாம்பல் நிறமும் கொண்ட மேற்சட்டை இப்படிமத்தில் தெரிவதை நோக்குக | படிமப்புரவு: 'google

   'நான் மேற்கூறிய பச்சை நிறமும் சாம்பல் நிறமும் கொண்ட மேற்சட்டை இப்படத்தில் தெரிவதை நோக்குக | படிமப்புரவு: viduthalaippulikaL'

   'இப்படிமத்தில் உள்ள எல்லோரும் நான் மேற்கூறிய உடை அணிந்துள்ளதை நோகுக | படிமப்புரவு: viduthalaippulikaL'

   'இவர்கள் இருவரும் நான் மேற்கூறிய உடை அணிந்துள்ளதை நோக்குக | படிமப்புரவு: viduthalaippulikaL''

   தவிபு தலைவரின் மெய்க்காவலரும் அச்சிருடையினை அணிந்திருப்பதை நோக்குக்கும் போது, இச்சீருடையானது கிட்டத்தட்ட ஒரு பொதுச் சீருடை போன்று எல்லோராலும் அணியப்பட்டிருப்பது தெரியவருகிறது. இதே போன்ற உடையினை கடற்புலிகளும் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
   இக்கால கட்டத்தில் தென்தமிழீழத்தில் தரிபெற்றிருந்த புலிவீரர் வரிப்புலியோடு சிங்களத் தரைப்படையின் உருமறைப்புக் கொண்ட சீருடையினையும் தம் சீருடையாக அணிந்திருந்தனர்.
    
   1994 இன் இறுதி/1995 - 1996 வரையிலான பச்சை வரிப்புலி இவ்வரிப்புலிக்கும் முன்னைய வரிப்புலிக்குமான வேறுபாடு யாதெனில் முன்னைய வரிப்புலியில் இருந்த வெள்ளை நிறமானது இவ்வரிப்புலியில் ஒரு விதமான கடும் பழுப்பு (பழுப்பு is not brown.. இந்திய தமிழில் என்னவோ எனக்குத் தெரியாது. கீழே உள்ள நிறம் ஈழத் தமிழில் பழுப்பு எனப்படும்.) நிறமாக காட்சியளித்தது. இச்சீருடைக்கு இவர்கள் அணிந்திருந்த சுற்றுக்காவல் தொப்பி கொஞ்சம் வேறுபாடானது. அது பற்றி நான் மேற் குறிப்பிட்டுள்ள தொப்பி பற்றிய பதிவில் கண்டுகொள்க.

   'படிமப்புரவு: google'
   இவ்வாண்டில் ஆண்களும் பெண்களும் இந்நிறத்திலான சீருடையினையே அணிந்திருந்தனர்.

   'ஜெயந்தன் படையணியினர் - Troopers of Jeyanthan Brigade'
   உபிகை அணியினரும் இச்சீருடையே:

   இக்கால கட்டத்தில் தென்தமிழீழத்தில் தரிபெற்றிருந்த புலிவீரர் வரிப்புலியோடு சிங்களத் தரைப்படையின் உருமறைப்புக் கொண்ட சீருடையினையும் தம் சீருடையாக அணிந்திருந்தனர்:-

   'படிமப்புரவு: viduthalaippulikal'

   'படிமப்புரவு: viduthalaippulikal'

   'படிமப்புரவு: viduthalaippulikal'
    
   1996 ஆம் ஆண்டு அணியப்பட்ட சீருடை இது முந்தைய சீருடையில் இருந்து நிறத்தால் மட்டும் வேறுபட்டது ஆகும். அதாவது முந்தைய சீருடையின் நீலம் மற்றும் பச்சை ஆகியவை நன்கு தேசுவாக்கப்பட்டிருக்கின்றன, இச்சீருடையில். இது ஓராண்டிற்கும் குறைவாகவே அணியப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் 1996 இற்குப் பின் இந்நிறத்திலான வரிப்புலிச் சீருடைப் படிமங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.


    
   1997 - 2002 வரையிலான பச்சை வரிப்புலி இக்கால கட்டத்தில் இவர்கள் அணிந்த சீருடையானது முன்னைய இரு சீருடை விருத்துகளைக் காட்டிலும் கொஞ்சம் வேறுபாடானது. இதில் பழுப்பு நிறம் இல்லை. அதற்குப் பகரமாக நன்கு மங்கிய வெள்ளை போன்ற நிறம் இருந்தது. இந்த நிறமே இதில் இருந்த மூன்று நிறங்களில் மிகவும் ஒடுங்கிய நிறமாகும். ஏனைய இரண்டும் இதை விட கொஞ்சம் தடிப்பானவை.
   மொத்தமாக இச்சீருடை பற்றிச் சொல்ல வேண்டுமானால் இச்சீருடையானது தோற்றத்தில் பார்வைக்கு மங்கியதாக காட்சியளிக்கிறது!

   ' ஓ.அ.-2 இல் (1997) திட்டத்தை விளக்கும் பிரிகேடியர் தீபன்(இ) & கட்டளை வழங்கும் பிரிகேடியர் ஜெயம்(வ) | நான் கூறிய பச்சை வரியினை இருவரும் அணிந்துள்ளதை நோக்குக | படிமப்புரவு: Pulikalinkural'
   இக்கால கட்டத்தில் பெண்களும் இதே சீருடையினைத்தான் அணிந்திருந்தனர்.
   இந்த காலகட்டத்தில் இச்சீருடை தவிர்த்து வேறு நிறத்திலான/ பாங்கத்திலான சீருடை அணிந்தோர்:-
   இம்ரான் - பாண்டியன் படையணியின்… → விக்டர் கவச எதிர்ப்புப் படையணி(1997–2002):-
   இவர்கள் விடுதலைப் புலிகளின் முதன்மைச் சீருடையான நான் மேற் குறிப்பிட்டுள்ள கிடைமட்ட பச்சை வரி கொண்ட சீருடையில் இருந்து வேறுபட்டு நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்திருந்தனர். இவர்கள் தலையில் சூரியக் காப்பு தொப்பி அணிந்திருந்தனர். (தொப்பி பற்றிய மேலதிக விளக்கத்தை முதல் மடலத்தில் கண்டு கொள்க). இந்நிலைக்குத்தான வரியினை முதன் முதலில் அணிந்தது இப்படையணியினரே.

   'ஆடவர் | படிமப்புரவு: viduthalaippulikaL''
   (இதே சீருடையினைத்தான் பெண்களும் அணிந்திருந்தனர்)
   → மயூரன் குறிசூட்டுப் பிரிவு(?-2009)
   இவர்களும் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்திருந்தனர்.

   'புலிகளின் குறிசூட்டுநரும்(Sniper) பொட்டுநரும்(Spotter) | படிமப்புரவு: nitharsanam''
   → சிறப்பு உந்துருளி படையணி(?-2002)
   இக்காலத்தில் இவர்கள் கிடைமட்ட வரியினை அணிந்திருந்தனர்.

   'படிமப்புரவு:outlookindia'
   - - - -
   2. இக்காலத்திய துணைப்படையின் சீருடை பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை!
   - - - -
   வண்ணாளன் உந்துருளி படையணி (?- 05-2004) இவர்கள் பச்சை நிற மட்டு. சீருடையினையே தங்களின் சீருடையாக அணிந்திருந்தனர்.

    
   2002 - 19.05.2009 வரையிலான பச்சை வரிப்புலி இது தான் புலிகளின் சீருடைகளின் செந்தரப்படுத்தப்பட்ட காலம் ஆகும். இக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பச்சை வரிப்புலி சீருடையில் மேற்கண்ட இரு வரிப்புலி விருத்துக்களிலும்(version) பயன்படுத்தப்பட்ட ஒரு விதமான நீல நிறம் விடுக்கப்பட்டு அதற்குப் பகரமாக கபில நிறமும், முன்னைய விருத்துக்களில் இருந்த வெள்ளை/மங்கிய வெள்ளை/ஒருவித கபிலம் போன்ற நிறம் விடுக்கப்பட்டு அதற்குப் பகரமாக மஞ்சளும் பச்சையும் கலந்த ஒரு விதமான நிறமும், முன்னைய விருத்துக்களில் இருந்த பச்சை விடுக்கப்பட்டு அதற்கும் பகரமாக இன்னொரு வித பச்சை நிறமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த பச்சை வரிக்கோடுகளின் இரு மருங்குகளிலும் சிலும்பியது போன்றதான ஒரு தோரணி இருந்தது.
   மொத்தத்தில் ஒரு வீரனை நன்கு மிடுக்காக எழுப்பிக் காட்டக்கூடியவாறு இச்சீருடை விருத்து அமைந்திருந்தது. (கீழ்க்கண்ட படத்தில் சீருடையினைக் கண்டு கொள்க)

   'ஜெனீவா ஒப்பந்த காலத்தில் கிளிநொச்சியில் அமைந்திருந்த அரசியற்றுறை தலைமையகத்தில் வகை-81 துமுக்கியை(Rifle) ஏந்தி காவலிற்கு நிற்கும் தரைப்புலி வீரர் இருவர் இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக | படிமப்புரவு: Gettyimages''
   கீழ்க்கண்ட படிமத்தினை வைத்து வரிப்புலி சீருடையினை அறிந்துகொள்க.
   → படிமத்தினை நன்கு அண்மையாக்கிப் பார்த்தால் சிலும்பிய தோரணி, வரிப்புலி சீருடை என்ன வகையிலான துணியில் செய்யப்பட்டது, அதன் நிறங்கள் என்னென்ன, தொப்பி எப்படிப்பட்டது, அதன் அளவுகள் என்னென்ன என்பது போன்ற தகவல்களை அறியலாம்.

   'பூநகரிப் படையணியின் பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணியின் பீகே சூட்டாளார்களில் ஒரு போராளி பயிற்சி நிறைவு நாளான சூலை 13, 2007 அன்று தன்னுடைய பயிற்சிப் பாசறையில் நிற்கின்றார். | படிமப்புரவு: Alamystockphotos
   இச்சீருடை அணிந்திருந்த 'படையணி'கள்:
   → சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி

   → மாலதி படையணி

   → சோதியா படையணி

   → ஜெயந்தன் படையணி

   'படிமப்புரவு: TamilNet'
   → பூநகரி படையணி:-

   'படிமப்புரவு: அலாமி'
   → திலகா படையணி

   → பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி

   யாழ். செல்லும் படையணி 4.1 படையணி  
    
   இந்த காலகட்டத்தில் இதே தோரணியிலான சீருடையினை வேறு தோற்றத்தில் அணிந்தோர்:-
   1) கிட்டு பீரங்கிப் படையணி:-
   இவர்கள் கிடைமட்ட வரி அணிந்திருந்தனர். ஆனால் அதன் மேல் சிங்கள உருமறைப்புக் கொண்ட சன்னத் தகை கஞ்சுகம்(Bullet proof vest) அணிந்திருந்தனர். கஞ்சுகத்தின் முதுகுப் புறத்தில் ஒரு ஏ.கே - 47 அ ஏ.கே - 56 துமுக்கியினை கொளுவியிருந்தனர். காதில் காதடைப்பான்(earmuff) போட்டிருந்தனர். இப்படையணியில் ஆண்களும் பெண்களும் இருந்தனர். இருவரும் தெறொச்சியை(Howitzer) இயக்கினர்.

   'பெண்கள் பிரிவினர்'

   'முன் தெறோச்சியை ஆண்களும் பின் தெறோச்சியை பெண்களும் இயக்குவதை நோக்குக | இருவரும் சன்னத் தகை கஞ்சுகம் அணிந்து காதடைப்பான் அணிந்துள்ளதை நோக்குக | படிமப்புரவு: viduthalaippulikaL'

   'கீட்டு பீரங்கிப் படையணியினர் படைத்தகையின் போது'
   இவர்களும் படைத்தகையின்போது குட்டிசிறி படையணி அணியும் அதே நிறத்திலான துணியைத்தான் அணிவர். மேற்கண்ட படத்தினையும் கீழ்க்கண்ட படத்தினையும் ஒப்புநோக்குக.
   2)ஜோன்சன் மோட்டார் படையணி
   இவர்கள் மட்டக்களப்பின் ஏனைய படையணிகள் போன்றே 'வெறும் பச்சை' நிறச் சீருடையினையே தம் சீருடையாக அணிந்திருந்தனர்.
   3) குட்டிசிறி மோட்டார் படையணி
   (விடுதலைப் புலிகளின் மோட்டார் பிரிவு கிட்டு பீரங்கிப் படையணி தொடங்கப்பட்ட காலத்தில்(1997) அதனுட்பட்ட ஒரு பிரிவாகவே தொழிற்பட்டது. அதன் பின்னர் ஒரு 2000 ஆம் ஆண்டு காலபகுதியில்தான் அது தனியாக ஒரு படையணியாக தொழிற்பட்டது என்பதை கவனத்தில்கொள்க.)
   கணையெக்கி பெண் போராளிகள் தொடக்க காலத்தில் கீழ்கண்டது போன்ற வெளிறிய பச்சை நிறத்திலான சீருடையினை அணிந்து தலையில் கறுப்பு நிறத் தொப்பியினை அணிந்திருந்தனர். ஆனால் இவர்களின் கட்டளையாளர்கள் பச்சை வரிப்புலியினையே அணிந்திருந்தனர்.
   கணையெக்கிப் ஆண் போராளிகள் தொடக்க காலத்தில் வெளிறிய பச்சை நிறத்திலான சீருடை அணிந்தது குறைவு. பச்சை வரிப்புலியினையே பெரும்பாலும் அணிந்திருந்தனர்.

   'ஜெசிக்குறுயி எதிர் சமரின் போது கணையெக்கியை(Mortar) இயக்கும் ஆண் போராளிகள்'

   ' அணிநடையில் ஈடுபட்டுள்ள பெண் போராளிகள்'

   'கணையெக்கியை(Mortar) இயக்கும் பெண் போராளிகள்'
   ஜெயசிக்குறுயிற்குப் பின்னரான காலத்தில்(ஒரு 2000 ஆம் ஆண்டுக்கு கிட்டாவாக) பெண்போராளிகளும் ஆண்போராளிகளும் பச்சை வரிப்புலியினை அணியத் தொடங்கி விட்டனர். இயக்கும்போது அதன் மேல் சிங்கள உருமறைப்புக் கொண்ட சன்னத் தகை கஞ்சுகம்(Bullet proof vest) அணிந்திருந்தனர். காதில் காதடைப்பான்(earmuff) போட்டிருந்தனர். இப்படையணியில் ஆண்களும் பெண்களும் இருந்தனர். இருவரும் கணையெக்கியை(Mortar) இயக்கினர்.


    
   → முன்னிலை நோக்குநர் அணி(FOT):-
   அனைத்து சேணேவிப் படையணிகளின்(Artillery Brigades) முன்னிலை நோக்குநரும் பச்சை வரிப்புலியே!

    
   இந்த காலகட்டத்தில் இச்சீருடை தவிர்த்து வேறு நிறத்திலான/ பாங்கத்திலான சீருடை அணிந்தோர்:- 1) இம்ரான் - பாண்டியன் படையணியின்…
   → விக்டர் கவச எதிர்ப்புப் படையணி(2002–2009) & சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி(2003–2009) :-
   இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்திருந்தனர். தலையில் சூரியக் காப்பு தொப்பி அணிந்திருந்தனர்.

   'படைத்தகையில்(parade) ஈடுபட்டிருக்கும் விக்டர் கவச எதிர்ப்புப் படையணி | படிமப்புரவு: Tamilnet.com''
   → சூரன் கவச அணி
   இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்திருந்தனர். தலையில் நெகிழ்வான மகுடக்கவி(Floppy hat) அணிந்திருந்தனர்.
   2002 இற்கு முன்னர் இவர்கள் கிடைமட்ட வரியே அணிந்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

   'படிமப்புரவு: Tamilnet.com'
   இதன் ஓட்டுநர் ஒரு சாதாரண தகரி ஓடுநர் என்னவெல்லாம் அணிவாரோ அதையே அணிந்திருந்தார்.
   கீழ்க்கண்ட படத்தில் புலிகளின் வகை-55 முதன்மை சண்டைத் தகரியின்(Main battle tank) சூட்டாளர்(Gunner) அணிந்துள்ள தலைக் கவசத்தை காண்க:-

   → பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு - இவர்கள் பற்றி நாளை வெளியிடும் இத்தொடரின் கடைசிப் பாகத்தில் விரிவாக எழுதுகிறேன்.
   → சிறப்பு உந்துருளி படையணி (2002/2003–2009)
   இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்து தலையில் செவிமறை நெகிழ்வான மகுடக்கவி (earflap floppy hat) அணிந்திருந்தனர். இது இவர்களின் சீருடையாகும்.

   → → அதிவேக உந்துருளி சிறப்பு அணி (2004 - 2009 )
   இவர்கள் உந்துருளிப் படையணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்கள் ஆவர். இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்து தலையில் சுற்றுக்காவல் தொப்பி(Patrol cap) அணிந்திருந்தனர்.

   'உண்ணோட்டமிடும்(inspection) தவிபு தலைவர் 'படிமப்புரவு: TamilNet'

   'படைத்தகையில்(parade) ஈடுபடும் அதிவேக உந்துருளி அணியினர் 'படிமப்புரவு: TamilNet'
   ஆனால் வீதிகளில் சுற்றுக்காவலிற்கோ இல்லை களவேலைகளுக்குச் செல்லும் போது உந்துருளி படைஞர் தலையில் தலைச்சீரா அணிந்து உடலில் கறுப்பு Jacket அணிந்து செல்வார்.


   'ஆழிப்பேரலையின்போது| 'படிமப்புரவு: fb'
   2. ராதா வான்காப்புப் படையணி
   இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்து தலையில் சுற்றுக்காவல் தொப்பி(Patrol cap) அணிந்திருந்தனர். அதன் வரியும் நிலைக்குத்தே.

   'வான் எதிர்ப்பு ஏவுகணை அணியினன் | மேஜர் சுவர்ணன்'

   'ZPU-2 வானூர்தி எதிர்ப்பு சுடுகலத்தால் குண்டுதாரியை(Bomber) சுட இலக்கு வைக்கும் வான்காப்பு வீரன்(Air defence soldier) | படிமப்புரவு: viduthalaippulikal'
   3. கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை!
   1)இந்தப் பிரிவின் பெயர் எனக்குத் தெரியவில்லை

   இந்தப் புலிமகளின் வில்லையில் தனித்துவமான எந்தவொரு இலச்சினையும் இல்லாமல் விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது.

   - - - -
    
   4. தென் தமிழீழத்தில் இருந்த படையணிகள்:-
   தென் தமிழீழத்தில் இருந்த ஒருசில படையணிகளின் சீருடை பற்றிய எத்தகவலும் என்னிடம் இல்லை.
   → வினோதன் படையணி
   Sap Green நிற சீருடையும் நீல நிற வரைகவியும் அணிந்திருந்தனர்.

   - - - -
   → விசாலகன் & வினோதன் படையணி:-
   இச்சீருடையினைத்தான் 2005 இற்குப் பின்னாரான காலத்தில் இவ்விரு படையணியினரும் அணிந்திருந்தனர். 2005 முன்னர் இதே சீருடை அணிந்திருந்தாலும் தலையில் வரைகவி(beret) அணிந்திருந்தனர்.

   'படிமப்புரவு: viduthalaippulikal'
   - - - -
   →மதனா படையணி
   இச்சீருடையானது 2005 ஆம் ஆண்டு வரை அணியப்பட்டது. அதன் பிறகு தொப்பியில் மட்டும் மாற்றம் ஏற்பட்டது. அதாவது வரைகவி(beret) விடுத்து தொப்பிக்கு(கீழுள்ள இரண்டாவது படத்தைக் காண்க) மாறினர். ஆனால் உடை நிறத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

    
   → மதனா படையணி / அன்பரசி படையணி (!?)
   கீழ்க்கண்ட படத்தில் நிற்கும் வீரிகள்(கீழே பச்சை நிறச் சீருடையில் இருப்போர்) மதனா அ அன்பரசி படையணியினரே. ஆனால் சரியாக எப்படையணியைச் சேர்ந்தவர்கள் என்பது அறிய முடியவில்லை.

   'படவிளக்கம்: 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த முகமாலைச் சமரின் போது களம் காண அணியமாய் பெண்புலிகள்'

   'மேற்படத்தில் உள்ளவர்களும் இப்படத்தில் உள்ளவர்களும் வெவ்வேறு நிறத்திலான இடுப்பு பட்டி கட்டியிருக்கின்றனர்.. எனவே இரு வேறு விதமான படையணியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்'
   தென் தமிழீழ போராளிகள் வடதமிழீழ போரளிகளிடம் இருந்து கொஞ்சம் வேறுபாட்டுடனான அணிநடை செய்வர். அதாவது இவர்கள் வட தமிழீழ போரளிகளைப் போன்று கையை நேரே விசுக்கினாலும் அதனுடன் கூடுதலாக கையை சத்தாராகவும் விசுக்குவர். (கீழ்க் கண்ட படத்தில் இருப்பது போன்று)

   'மட்டு-அம்பாறை பெண்கள் படையணியின் அதிகாரிகள் படைத்தகையில்(parade) ஈடுபடுகின்றனர்'
   - - - -
   → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை!

   - - - -
   → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை!
   மேலே உள்ள கடும் பச்சை நிறத்தோடு சேர்த்து Sap Green போன்ற நிறத்திலான சீருடையினை ஒரு படையணி அணிந்திருந்தது.

   'துரோகி கருணாவின் பெண்கள்| கருணா பிரிந்த அன்றோ அடுத்த நாளோ எடுத்த படம் | இப்படத்தில் கறுப்பு மற்றும் கடும் பச்சை நிறத்தோடு Sap Green நிறத்திலான சீருடை அணிந்த இருவர் முன்னால் நிற்பதை நோக்குக'

   'துரோகி கருணா & அவனது மெய்க்காவலன் & அவனது பெண்கள் | கருணா பிரிந்த பின்னர் எடுத்த படம் | இப்படத்தில் உள்ள் பெண்கள் நான்கு விதமான சீருடை(வரிப்புலி, கறுப்பு, கடும் பச்சை, Sap Green) அணிந்துள்ளனர் | இப்படத்தில் இடது பக்கத்தில் இருந்து முன்வரிசையில் இரண்டாமராக நிற்கும் பெண்ணின் சீருடையை நோக்குக. விதப்பாக(specific) நோக்க நான் அம்புக்குறியிட்டுள்ள இடத்தில் பார்க்கவும்.'
   - - - -
   → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை!
   இப்படையணியில் ஆண்கள் மட்டுமே பணியாறினர்.

   இந்த படையணியைச் சேர்ந்தவர்கள் 2004 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரை கீழ்க்கண்ட நீல நிறத்திலான வரைகவியினை அணிந்திருந்தனர்.

   'இப்படம் ~2002/3 ஆண்டைச் சேர்ந்தது'
   2004 இற்குப் பிறகு இப்படையணி பற்றி எந்தவொரு தகவலும் இல்லை!
   - - - -
   → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை!

   'கிழக்கில் இருந்த ஒரு உபிகை*(RPG) படையணி படைத்தகையில் ஈடுபடும் காட்சி | இப்படம் 2004 ஆம் ஆண்டிற்கு முந்தையது'
   *உபிகை - உந்துகணை பிலிறுந்திய கைக்குண்டு
   - - - -
   → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை!
   இப்படையணியில் ஆண்களும் பெண்களும் இருந்தனர்.

   'படைத்தகையில் ஈடுபடும் ஆண் & பெண் போராளிகள்'
   மேற்கண்ட படையணியைச் சேர்ந்தவர்கள் 2004 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரை கீழ்க்கண்ட நிறத்திலான தொப்பியினை அணிந்திருந்தனர். ஆனால் உடை நிறத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

   'படைத்தகையில் ஈடுபடும் போராளிகள் | இப்படம் 2004 ஆம் ஆண்டிற்கு முந்தையது | இவர்கள் இக்காலத்தில் சிங்களத்தின் தரைப்படை உருமறைப்புக் கொண்ட செண்டாட்டத் தொப்பியினை(Baseball cap) அணிந்திருந்தனர்.'

   'மேற்குறிப்பிட்டுள்ள சீருடையினை அணிந்துள்ள ஒரு புலிவீரன்ர். இப்படம் நான்காம் ஈழப்போரில் எடுக்கப்பட்டதாகும் | படிமப்புரவு: PULT'


   'இப்படையணியைச் சேர்ந்தவர்களும் பச்சை நிறச்சீருடை அணிந்தோரும் ஒன்றாக நிற்கும் படிமம் | கருணா துரோகி ஆனதிற்குப் பின் எடுக்கப்பட்ட படிமம் | படிமப்புரவு: கூகிள்'
   - - - -
   → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை!
   இப்படையணியைச் சார்ந்தவர்கள் சிறீலங்கா இராணுவத்தின் சீருடையினை தம் சீருடையாக அணிந்திருந்தனர். தலையில் அதே உருமறைப்பிலான தொப்பி அணிந்ததோடு ஒரு சிலர் பச்சைநிற செண்டாட்ட தொப்பியினையும் அணிந்திருந்தனர்.

   'தென் தமிழீழத்தில் நடந்த நிகழ்வொன்றில் பெண்போராளிகள் இருவர் அச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக'

   'கருணாவின் மெய்க்காவலர் அச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக'

   'சிங்கள படைத்துறைச் சீருடையினை தம் படையணிச் சீருடையாக அணிந்த பெண்ணொருவர் நடுவில் நிற்பதை நோக்குக. | அவரைச் சுற்றி இருநிறங்களிலான சீருடை அணிந்தோர் கணையெக்கியுடன்(mortar) நிற்பதை நோக்குக '

   'நான் அம்புகுறியிட்டுள்ளோர அச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக'

   'இதில் நான் அம்புக்குறியிட்டுள்ளவர்கள் இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக. | 55 வது பயிற்சி முகாமில் இருந்து 400 ஆண்கள் போராளிகள் மற்றும் மட்டக்களப்பின் 30 வது பயிற்சி முகாமில் இருந்து 300 பெண் போராளிகள் வெளியேறியதைக் குறிக்கும் விழா வியாழக்கிழமை தவிபு கட்டுப்பாட்டில் உள்ள மட்டக்களப்பிலுள்ள தரவை மத்திய பயிற்சி பாசறையில் நடைபெற்றதைக் காட்டும் படம். | படிமப்புரவு: தமிழ்நெட்'
   - - - -
   → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை!

   - - - -
    
   → 'அன்பரசி படையணி'யின் சரியான சீருடை எனக்குத் தெரியவில்லை!
   1)ஒரு படிமம் சாம்பலிலும் ஒன்னொரு படிமம் பச்சை நிறத்திலும் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே இவ்விரண்டிலும் எது சரியென்று என்னால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
   (இப்படிமங்கள் யாவும் ஒக்டோபர் 2002 ஆம் ஆண்டு மாலதி அக்காவின் 15 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளன்று எடுக்கப்பட்டதாகும்)   'சிதைந்த படத்தினை புனரமைத்தபோது இந்த நிறத்தில் வந்தது..'
    
   - - - -
   → இளங்கோ படையணி
   இப்படையணியின் பெயரையும் கீழ்க்கண்ட சீருடை அணிந்தோரே இப்படையணியினர் என்ற தகவலையும் நிதர்சனத்தின் திருகோணமலை பற்றிய ஒரு நிகழ்படக்(video) கோப்பில் இருந்தே எடுத்தேன்.

   'பெண்கள்'

   'ஆண்கள்'

   'மேற்கண்ட இரு படத்திலும் இருப்பது போன்ற சீருடை அணிந்தோர் இப்படத்திலும் உள்ளதைக் காண்க'

   'மாவீரர் துயிலுமில்லம் ஒன்றில் பச்சை வரிப்புலி, கடும்பச்சை நிறச் சீருடை, ஈ ஒரு வித கறுத்த சீருடை ஆகியவற்றை அணிந்து செல்லும் போராளிகள்'
   கீழ்க்கண்ட படிமத்தில் இச்சீருடை நன்கு தெளிவாகத் தெரிவதை நோக்குக:-

   'படிமப்புரவு: நிதர்சனம்'
   5.
   விடுதலைப்புலிகளின் ஆய்த ஆராச்சி மற்றும் விளைவிப்புத் தொழிற்சாலைகளில் பணி புரிவோர் அணியும் சீருடை. இதை ஆண்களும் பெண்களும் அணிவர்.
   சாம்பலும் Pink கலந்த நிறம் போன்ற நிறத்திலான சீருடை இது!

    
   6.பெயர் தெரியா படையணி

   இவ்வீரர் அணிந்துள்ள சீருடையினை நோக்குக. இது ஒரு விதமான நீலத்தில் உள்ளது. ஆனால் இப்படையணியின்/பிரிவின் பெயர் எனக்கு தெரியவில்லை.

   'இது 20-12-2008 அன்று வன்னிச் சமர்க்களத்தில் வகை - 85 12.7mm சுடுகலனை இயக்கும் இரு புலிவீரர்களும் இந்நீல நிறத்திலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக'

   'அதே போன்ற நீலச் சீருடை அணிந்து ஒரு புலிவீரர் (கஞ்சுகம்(vest)அணியாமல் நிற்பவர்) நிற்பதை நோக்குக. | அவருக்கு அருகில் நிற்கும் இருவரும் (கஞ்சுகத்தோடு நிற்போர்) ஊரகத் தொண்டர் சிறப்புப் படையினர் ஆவர்'
   - - - -
    
   7. தமிழீழ தேசிய துணைப்படை
   இவர்கள் தொடுத்த கட்டம்போட்ட சீருடையினை அணிந்திருந்தனர். அதில் அக்கட்டங்கள் உருமறைப்பு நிறங்களைக் கொண்டிருந்தன. இவர்களில் இரு பிரிவுகள் இருந்ததாக அறியப்படுகிறது.
   இத்தேசியத் துணைப்படையினர் இருவிதமான சீருடை அணிந்திருந்தனர். இருவிதத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பீர்வால் அணியப்பட்டிருக்கலாம் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் நான் கீழே குறிப்பிட்டுள்ள இரு நிறத்திலுமான சீருடையினை அணிந்த மாவீரர் படங்கள் ஏராளம் இணையத்தளங்களில் உள்ளது
   ஒன்று கீழே காட்டப்பட்டுள்ள பச்சை நிறம் கொண்ட சீருடையாகவும்...

   மற்றொன்று கீழே காட்டப்பட்டுள்ள ஒருவித சாம்பல் நிறங்கொண்ட சீருடையாகவும் இருந்தது.

   மேற்கண்ட உருமறைப்பிலான சீருடை அணிந்துள்ள பெண்புலிகள்:-   'இரு நிறத்திலான சீருடையும் அணிந்துள்ள இரு வேறு ஆட்கள்'
   இதே போன்று இவர்களின் மற்றொரு பிரிவு கீழ்க்கண்ட நிறத்திலான சீருடையினை அணிந்திருப்பர்.   '2002 காலத்தில் வன்னியில் எடுக்கப்பட்ட படம்'
   - - - -
   8 ) வேவுப்புலிகள்:
   இவர்கள் ரெக்கி(வேவு) எடுப்பதற்காக செல்லும் போது மட்டும் சிங்கள தரைப்படையின் உருமறைப்பு ஆடை அணிந்து, காலில் நெடுஞ்சப்பாத்து(boots) அணிந்து, தலையில் விடுதலைப்புலிகளின் சடாய்மா முக்காடு(ghilie hood) அணிந்து செல்வர். இலக்கை நெருங்கியதும் குழைகள் கட்டிச் செல்வர். சில பேர் சடாய்மா உடுப்பும்(Ghilie suit) அணிவர்.
   மற்றும்படி இவர்களின் சீருடையும் பச்சை வரிப்புலிதான்.

   'சிறீலங்கா தரைப்படையின் சீருடை அணிந்து ஊடுருவிச் செல்லும் வேவுப்புலிகள் | படிமப்புரவு: நிதர்சனம்'

   'தலையில் விடுதலைப்புலிகளின் உருமறைப்பு கொண்ட சடாய்மா முக்காடு உள்ளதை நோக்குக | படிமப்புரவு: நிதர்சனம்'
   - - - -
   9)படப்பிடிப்பாளர்:
   இச்சீருடையானது ஒற்றை நிறத்திலானது ஆகும். இது ஒரு விதமான மங்கிப்போன கபில நிறம் ஆகும். இச்சீருடையினை அணிந்து படவத்தோடு படப்பிடிப்பாளர்கள் நிற்கும் படிமங்கள் கீழ்க்கண்டதொன்றைத் தவிர்த்து வேறேதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.

   'இந்நிழற்படமானது பேரரையர்(Col) ராஜு அவர்களின் வீரவணக்க நிகழ்வின்போது எடுக்கப்பட்டது ஆகும். 2002'
    
   உசாத்துணை:
   செ.சொ.பே.மு. முற்றுமுழுதாக எனக்குக் கிடைத்த படங்களின் காலங்களை வைத்தே இவற்றைக் கணித்து எழுதியுள்ளேன். ஆக்கம் & வெளியீடு
   நன்னிச் சோழன்
 • Topics

 • Posts

  • வாழ்த்துக்களுக்கு நன்றி  பாஞ் ஐயா😊 நன்றி  நிலாமதி அக்கா😊 நன்றி நுணா😊 நன்றி குமாரசாமி ஐயா😊 தமிழன் என்றாலே அடங்காதவன்தானே😉 நன்றி புங்கை அண்ணா😊 நன்றி நந்தன்😊 எனக்கு கொடுவாள் தாற பிளான் போலிருக்கு😁 வாழ்த்துக்களுக்கு நன்றி  ஈழப்பிரியன் ஐயா😊 வாழ்த்துக்களுக்கு நன்றி  தமிழ் சிறி ஐயா😊
  • Meditation Music for Relaxing and Studying, Gain Focus Back and Improve your Concentration கடல் அலைகளினொடு இதமான இசை
  • “ரிஷாட் வாசஸ்தலம் எனக்கு வேண்டாம்” August 2, 2021 ரிஷாட் பதியுதீன், முன்னாள் வர்த்தக அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய வாசஸ்தலத்தை, தற்போது பயன்படுத்தும் அமைச்சர் பந்துல குணவர்தன, அந்த வாசஸ்தலத்தை மீண்டும் கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளார். கொழும்பு-7, மெகென்சி வீதி, 37ஆம் இலக்க இல்லத்தையே ரிசாட் பயன்படுத்தினார். அதனை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது பயன்படுத்துகின்றார். அந்த இல்லத்தையே அமைச்சர் பந்துல குணவர்தன கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளார் என அவரது ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசெம்பர் மாதம் தொடக்கம், ,தற்போதைய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அந்த இல்லத்தை கையளிக்க பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. ஆனால், குறித்த இல்லத்தில், தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ள பல சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சந்தேகங்கள் வெளிவரம் நிலையில், குறித்த இல்லத்தின் இரண்டு அறைகள் பொலிஸாரால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த இல்லைத்தை புனரமைப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 12 மில்லின் ரூபாய் பணத்தை செலவு செய்ய, தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன, வறுமை நிலையிலுள்ள சிறுமிகள் குறித்த வீட்டுக்குள் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் பாரதூரமானது என்றார். குறித்த உத்தியோகப்பூர்வ இல்லத்தை மீண்டும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தனவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://globaltamilnews.net/2021/164118    
  • காயங்களின்றி காலம் எதையும் வாழ்க்கையில் கற்றுக் கொடுப்பதில்லை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.