Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

“என்னை தாக்கிய இளைஞன் 15 வருடங்களுக்கு மேல் சிறையில்” தண்டனை போதுமானது! - சரத் பொன்சேகா


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இதுவரை வெளியில் விடப்பட்டவர்கள் சாதாரண  வாழ்வை  வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா??

இந்த இணைப்பில் இருப்பவர் போலானவர்கள் நிலமை இன்னும் மாறவில்லை. 

https://mullaimann.blogspot.com/2012/11/blog-post.html?m=1

11 வருடங்கள் முன்பு எழுதிய பதிவு. 

இவர்கள் போன்றோரின் நிலையில் மாற்றம் அல்லது பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். 

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
12 hours ago, கிருபன் said:

“என்னை தாக்கிய இளைஞன் 15 வருடங்களுக்கு மேல் சிறையில்” தண்டனை போதுமானது!

June 23, 2021
spacer.png

தான் குண்டுத் தாக்குதலுக்கு முகங்கொடுத்திருந்தாலும், தனக்கு எதிராகத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றே தான் விரும்புவதாகத் தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தாக்குதலை நடத்திய இளைஞன் 15 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இன்றி சிறையில் இருக்கிறார் அவருக்கு அந்தத் தண்டனையே போதுமெனவும் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையிலான நேற்றையப் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘ஒரு தடவை நான் வழக்கு விசாரணைக்காக வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சென்றிருந்தேன். நீதிமன்றத்தில் எனக்கு அருகில் மற்றொரு இளைஞரும் அமர்ந்திருந்தார். அவரின் பெயர் மொரிஷ்.

என் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்திய தற்கொலை தாரியை அழைத்து வந்த வாகனத்தின் சாரதியே அந்த இளைஞன். நான் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தபோதே, என் மீதான தாக்குதலை நடத்திய இளைஞரும் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்தார். அந்த இளைஞருடன் தற்போதும் தொலைபேசியில் பேசுவேன்.” எனவும் தெரிவித்தார்.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் என் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடத்துக்குப் பின்னர் தாக்குதலுடன் தொடர்புடைய மொரிஸ் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது 15 வருடங்களுக்கு மேலாக வழக்கு விசாரணைகள் இன்றி சிறைச்சாலையில் இருக்கிறார். அவருக்கு அந்தத் தண்டனையே போதும் எனவும் பொன்சேகா தெரிவித்தார்.
 

https://globaltamilnews.net/2021/162623

 

(திரிக்கு தொடர்பில்லாதது என நினைக்கிறேன்.. இருந்தாலும் எழுதிவைத்து விட்டு செல்கிறேன்)

மொரிஸா...🤔

இவர் 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாவர் என செய்தியில் உள்ளது...

இதே பெயருடைய இன்னொரு அண்ணாதான் கேணல் சாள்ஸ் அவர்களின் வீரச்சாவிற்குப் பின்னர் தென்னிலங்கை புலனாய்வுப் பொறுப்பேற்றவர் என அறிந்தனான்.  இவர் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொழும்பில் நடுவீதியில் சிங்கள புலனாய்வாளர்கள் மடக்கிப் பிடிக்க எத்தனித்தபோது சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைய முயற்சி செய்தபோது சிங்களம் அவரை கைப்பற்றி மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியபின் பலத்த உசாவலுக்கு உட்படுத்தியது...

எனவே இருவரும் ஒருவரா இல்லை வேறு வேறாட்களா என்பது தெரியவில்லை .... எது எப்படியோ விடுதலை ஆனால் பெருமகிழ்வே...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுத பயமா இருக்கு 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, நன்னிச் சோழன் said:

 

(திரிக்கு தொடர்பில்லாதது என நினைக்கிறேன்.. இருந்தாலும் எழுதிவைத்து விட்டு செல்கிறேன்)

மொரிஸா...🤔

இவர் 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாவர் என செய்தியில் உள்ளது...

ஒரு வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி இல்லை. பார்த்தவர் பார்க்காதவர் துணை நின்றவர் தூர நின்று பார்த்தவர் என பலரைக் கொண்டது.

உதாரணம் :- மத்தியவங்கி தாக்குதலில் பிரதான குற்றவாளிகள் வரிசையில் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 300வருட அச்சு அத்தோடு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.  அதன் பொருள் தலைவர் தாக்குதல் களத்தில் நின்றார் என்று குற்றம் சாட்டப்படவில்லை.

Edited by shanthy
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்வதென்று தெரியவில்லை.. வாசிக்கும்போது நெஞ்சில் பெரும் பாரம் அழுத்துகிறது… எத்தனை எத்தனை ஆயிரம் உறவுகள் தம் இளமைய இனத்துக்காக தொலைத்துவிட்டு சிறையிலும் புதைகுழியிலுமாய்… எனக்கு சாந்தியின் கவிதைதான் நாபகத்துக்கு வருகுது..

“எல்லாம போயிற்று
எல்லார் உயிரும் என்னைப்போல
இன்னும் வாழ்வதில் எத்தனை பிரியமுடன்
வாழாது போயினர்..?
வரலாறு எழுதிய கதைகளில் அவர்கள்
பெயரிட்ட பிள்ளைகளும்
துணைவந்த துணைவிகளும்
தனித்துப்போயினர்..."😢😢😢

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 17 பேர் சிறையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளனர்

J
1034754082Welikada.jpg
 47 Views

பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 17 பேருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க இருப்பதையடுத்து, அவர்கள்  சிறையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளனர்

நாளை நடைபெறவுள்ள பொசன் பண்டிகையை முன்னிட்டு இந்த பொது மன்னிப்பை ஜனாதிபதி வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் 17 பேரும் விடுதலைப் புலிகள் அமைப்பில் பணியாற்றிய குற்றத்திற்காக பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருபவர்களாவர். அவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனைக் காலத்தை விட நீண்ட காலம் அவர்கள் சிறையிலிருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகளின் முன்னாள் போராளி சந்தேக நபர்கள் 17 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டு பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த  தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதியின் தீர்மானம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதியின் தீர்மானம் நாளை தமக்கு கிடைக்கும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=53183

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இளமையையும், எதிர்காலத்தையும், குடும்ப பாசத்தையும் தொலைத்துவிட்டு அவமானத்தையும், இருளையும் மட்டுமே கண்டு ஒளியின் கீற்று நம்மேல் விழாதா என்று காத்திருந்து மடிந்த என் உறவுகளின் ஆன்மா சாந்தியடைய வேண்டும். இருப்பவர்கள் மீண்டும் இயல்பு வாழ்வை ஆரம்பிக்க வேண்டிய சாதகமான காலம் கனிய இறைவனை வேண்டுவதோடு நமக்காய் இந்திய சிறைச் சாலைகளில் வாடுவோரும் விடுவிக்கப்படவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதும் எல்லோரும் நம் உறவுகள் விடுவிக்கப்படவேண்டும் என்றே விரும்புகிறோம்.. ஆனால் நல்லாட்சியில் இருக்கும்போது சரத் பொன்சேகாவுக்கு வராத மனிதாபிமானம், இரண்டு தடவை அரச கட்டிலில் தந்தையார் இருக்கும்போது நாமலுக்கு வராத மனிதாபிமானம் இப்போ வந்ததென்ன? காரணம் என்ன? என்பதே நம் ஒவ்வொருவரின் கேள்வி. ஆக தமக்கு விரும்பிய நேரம் பிடிப்பார்கள், அடைப்பார்கள்.  தமக்கு தேவையான நேரத்தில் விடுவிப்பார்கள் என்பதையே கலந்துரையாடுகிறோம். சிலர் ஏதோ அவர்கள் பரோபகாரம் செய்கிறார்கள் என்பது போலவும், தாம் அவர்களுக்குத்தான் வாக்குபோடுவதற்கு ஒரு காரணம் சொல்வதற்கு நம்மை குற்றவாளிகளாக்க முயற்சிக்கிறார்கள்.  எப்படியும் அவர்களுக்குத்தான் இவர்களது வாக்கு என்பது தெளிவானது. காரணம்  வேற புதிதாய் கிடைத்துள்ளது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்போதாவது சிங்களத்தலைவர்கள் பேச்சளவிலேனும் தமிழ் மக்களின் அத்தியாவசியப்பிரச்சனைகளில் முக்கியமான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி பேசுவது வரவேற்கத்தக்கது, ஆனால் இன்னும் கள்ள மவுனம் சாதிக்கும் தமிழ் அரசியல்வாதிகளை என்ன சொல்வது?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, vasee said:

 இன்னும் கள்ள மவுனம் சாதிக்கும் தமிழ் அரசியல்வாதிகளை என்ன சொல்வது?

அந்த மௌனம்;  ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் பாவிக்கும் துருப்புசீட்டு இல்லாமற் போய்விடுமோ என்கிற கவலையாயிருக்கலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

ஆக தமக்கு விரும்பிய நேரம் பிடிப்பார்கள், அடைப்பார்கள்.  தமக்கு தேவையான நேரத்தில் விடுவிப்பார்கள் என்பதையே கலந்துரையாடுகிறோம். சிலர் ஏதோ அவர்கள் பரோபகாரம் செய்கிறார்கள் என்பது போலவும், தாம் அவர்களுக்குத்தான் வாக்குபோடுவதற்கு ஒரு காரணம் சொல்வதற்கு நம்மை குற்றவாளிகளாக்க முயற்சிக்கிறார்கள்.  எப்படியும் அவர்களுக்குத்தான் இவர்களது வாக்கு என்பது தெளிவானது. காரணம்  வேற புதிதாய் கிடைத்துள்ளது.

உங்கள் வாக்குகளை தாருங்கள் சிறையில் வாடும் எல்லா முன்னாள் போராளிகளையும் விடுவிப்பேன் என்று 
சிங்களம் சொன்னால் ஆயுள் முழுதும் அந்த சிங்களத்திற்கே வாக்களிப்பேன், இந்திய எஜமானர்களை சந்தோஷப்படுத்தவும் தங்களது தனிப்பட்ட தற்காலிக அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள புலிகளை தீவிரவாதிகள் என்றும் போராளிகள் என்றும் மாற்றி மாற்றி நேரத்திற்கொரு முறை கூத்தாடும் கூத்தாடிகளை விட சிங்களத்தின் இந்த ஒரு வாக்குறுதி போதும், எமக்காக போராடிய அந்த ஜீவன்கள் மிச்சமிருக்கும் வாழ்நாளையாவது நிம்மதியாக கழிக்கட்டும்  

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் வழவில்லை எனநினைக்கிறீர்களா?? அவர்களை சிங்களவர்களை விட அதிகம் துரத்துவது தமிழர்களே 

"அதிகம் துரத்துவது தமிழர்களே "   ஹ்ம்... ஹ்ம்...


 நான் இருக்கும் ஊரில் முன்னணி வீரரொருவரின் மனையாள் தனது பெண் மகவை தனியே வளர்த்தெடுத்து பல்கலை கல்வி அளித்தது பொறுப்பான வேலை ஒன்றிலும் அமர்த்தி விரைவில் திருமணமும் செய்து கொடுக்கிறார் .


எங்கட ஆட்களால் ஆக்கப் பட்ட சமூகமே அவருக்கு 2010 இலிருந்து உதவியாக இருந்து வருகிறது.


 இன்றைக்கும் தனது துணைவரின் படத்தை வைத்து விளக்கேற்றி விட்டு தான் ஒவ்வொரு நாளும் அலுவல் பார்க்க தொடங்குவார்இ 2009 யில் சரணடைந்த கணவருடன் அவருக்கு இன்னமும் தொடர்பில்லை .


தத்தம் செய்து கொடுப்பது தொடங்கி சகல திருமண நிகழ்வுகளிலும் எங்கட ஆக்களை கொண்ட இதே சமுகம் தான் முன்னுக்கு நிண்டு செய்யப் போகுது ..


"அதிகம் துரத்துவது தமிழர்களே "   ஹ்ம்... ஹ்ம்...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

17 பேர்தானே 
இவ்விரண்டு ,மும்மூன்று,நன்னான்கு  பேர்களாக சேர்ந்து யாழ் உறவுகள்  ஒருவரை  பொறுப்பெடுத்தாலே போதுமே 17 பேருடைய வாழ்க்கையும் செட்டில்....யார் யார் மணிகட்ட தயார் ....? நாம எப்போதுமே ஓ.கே அதுவும் முன்னாள் போராளிகள் என்றால் டபிள் ஓ.கே (துரோகியாக இருப்பதாலோ என்னவோ), இங்கிருந்தே ஆரம்பிக்கலாம் ,சாந்தி அக்காவும்  திரியில் ஆக்டிவாக இருக்கிறார் 

Edited by அக்னியஷ்த்ரா
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

17 பேர்தானே 
இவ்விரண்டு ,மும்மூன்று,நன்னான்கு  பேர்களாக சேர்ந்து யாழ் உறவுகள்  ஒருவரை  பொறுப்பெடுத்தாலே போதுமே 17 பேருடைய வாழ்க்கையும் செட்டில்....யார் யார் மணிகட்ட தயார் ....? நாம எப்போதுமே ஓ.கே அதுவும் முன்னாள் போராளிகள் என்றால் டபிள் ஓ.கே (துரோகியாக இருப்பதாலோ என்னவோ), இங்கிருந்தே ஆரம்பிக்கலாம் ,சாந்தி அக்காவும்  திரியில் ஆக்டிவாக இருக்கிறார் 

எல்லோரும் இணைந்து அவர்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவியை செய்வோம். எனது பங்களிப்பை நானும் வழங்குவேன்.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.