Jump to content

தமிழீழ விடுதலைப் புலிகளின்.... முன்னாள் உறுப்பினர்கள் உட்பட, 93 கைதிகள் விடுதலை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, shanthy said:

நாங்கள் விரும்புகிறோமோ இல்லையோ அவர்கள் தங்கள் இனத்தவரில் காட்டும் கரிசனம் மாறப்போவதில்லை. 

எம்மவர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர் அதுபற்றி அவர்கள் அடுத்த கட்ட வாழ்க்கை பற்றி பேசலாம். 

அதைவிடுத்து துமிந்த சில்வா பற்றிய ஆராய்ச்சியை நிறுத்துவது நல்லது. 

இது கருத்துக்களம்.

அடுத்த கட்ட நடவடிக்கை(உதவிகள் )என்று வரும்போது அதுபற்றி பேசலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகளில் மூவர், சிறைச்சாலை அதிகாரிகளினால் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.

இன்று(புதன்கிழமை) பிற்பகல் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துவரப்பட்ட குறித்த மூவரையும் சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

விடுதலைப்புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த அவர்கள் இன்றைய தினம் தமது உறவினர்களை சந்தித்தது போன்று, நீண்ட காலமாக சிறையில் உள்ள ஏனையவர்களையும் விடுவித்து, அவர்களின் குடும்பத்துடன் இணைக்குமாறு ஜனாதிபதியிடம் தாங்கள் வேண்டுவதாகவும், தம்மை விடுவித்த ஜனாதிபதிக்கும், ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

https://athavannews.com/2021/1224761

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் விடுதலை!

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இன்று(புதன்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைதிகளில் 16 தமிழ்  அரசியல் கைதிகளும், 77 சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் உள்ளடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையிலேயே யாழ்ப்பாண சிறைச்சாலையில்  இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் பயங்கரவாத தடுப்பு தடைச்சட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 17 ஆம் திகதி  கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1224720

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:

ஐரோப்பிய ஒன்றிய தீர்மானமே தமிழ் கைதிகள் விடுவிப்புக்கு காரணம் – மனோ

mano-ganesan-1-696x387.jpg
 27 Views

சில தினங்களுக்கு முன் வந்த ஐரோப்பிய ஒன்றிய GSP+ தொடர்பான தீர்மானம், ஐநா மனித உரிமை ஆணையர் கூறிய கருத்து மற்றும் செப்டம்பரில் ஆணையர் வெளியிட உள்ள இலங்கை பற்றிய “வாய்மொழி அறிக்கை” ஆகியவைதான், ராஜபக்ச அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நீண்டகாலம்” சிறையில் இருக்கும், தமிழ் கைதிகள் விடுதலை பற்றி நேற்று முதல் நாள் அமைச்சர் நாமல் சபையில் விசேட அறிவிப்பு செய்தார்.

கடத்த சில வாரங்களுக்கு முன், எம்பீக்கள் சார்ள்ஸ், ஸ்ரீதரன் ஆகியோர் முன்னெடுப்பில், தமிழ் எம்பீக்கள் கட்சி பேதமின்றி, வெளி விவகார அமைச்சர் தினேஷை சந்தித்தோம். அதன் தொடர்ச்சியே இது என நேற்று அமைச்சர் தினேஷ் என்னிடம் கூறினார்.

இவை நல்ல நிகழ்வுகளே..!

சில தினங்களுக்கு முன் வந்த ஐரோப்பிய ஒன்றிய GSP+ தொடர்பான தீர்மானம், ஐநா மனித உரிமை ஆணையர் கூறிய கருத்து மற்றும் செப்டம்பரில் ஆணையர் வெளியிட உள்ள இலங்கை பற்றிய “வாய்மொழி அறிக்கை” ஆகியவைதான், ராஜபக்ச அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு காரணம்.

ஆனால் இவற்றை சொல்லி நாம் இன்று “காரசாரமான அரசியல்” செய்ய தேவையில்லை.

அதேபோல், சமூக ஊடகங்களில் “அரசுக்கு எதிராக எழுதினார்கள்” என சமீப சில மாதங்களாக பயங்கரவாத தடை சட்டம் மூலம், கைதாகும் நபர்கள் பற்றியும் பேச வேண்டும்.

நீதி அமைச்சர் பக்கத்தில் இருக்கும்போது, அமைச்சர் நாமல் எதற்கு இதைப்பற்றி பேச வேண்டும் என்பதும் ஒரு கேள்வி.

ஆனால் இவற்றை எல்லாம் காரணங்களாக கூறி, பல்லாண்டுகளாக சிறையில் வாடும் “நீண்டகால” கைதிகளின் விடுதலையை குழப்பி விடக்கூடாது.

எமது நல்லாட்சியின் போது, 2015க்கும், 2019க்கும் இடையில் சுமார் 100 தமிழ் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டார்கள்.

இதை நமது அரசு சத்தமில்லாமல் செய்தது. அதேபோல் இதையும் சத்தமில்லாமல் செய்ய வேண்டும்.

ஏறக்குறைய தமது இளமைக்காலம் முழுவதையும் சிறைகளில் கழித்து விட்ட இந்த “மனிதர்கள்” படிப்படியாக விடுவிக்கப்பட கூடிய சூழலை பொறுப்புடன். பொறுமையாக ஏற்படுத்துவோம்.

அதேபோல் தொடர்ந்தும் எமது அழுத்தங்களை கவனமாக முன்னெடுப்போம்.

https://www.ilakku.org/?p=53227

நீங்கள் அமைச்சராக இருந்த போது ஏன் விடிவிக்கவில்லை என்பதை சொல்லாமல்...

இந்த விடுதலையின் பின்னால் கோத்தாவின் மகிந்த கும்பலின் அரசியல் இருந்தாலும்.. சர்வதேச அழுத்தங்கள் இருந்தாலும்.. இவர்கள் விடுவிக்கப்பட வேண்டியவர்களே.

இவர்களைப் போல்.. எல்லாம் தமிழ் அரசியல் கைதிகளும்.. ஏலவே சொல்லப்பட்ட பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட வேண்டியவர்கள்.

அதேபோல்.. முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நினைகூறல்.. பேஸ்புக்கில் தேசிய தலைவரின் படம் போட்டது.. ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத சுமந்திரனை கொலை செய்ய முயற்சி.. என்றெல்லாம்.. 2009 க்குப் பின் பிடித்து வைத்துள்ள எல்லா அப்பாவிகளையும்.. அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். இது கோத்தாவின் மனிதாபிமானத்தின் பெயரில் அல்ல.. அந்த கைதிகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை நீதியின் பாலாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

இது கோத்தாவின் மனிதாபிமானத்தின் பெயரில் அல்ல.. அந்த கைதிகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை நீதியின் பாலாகும்.

இனி கோத்தாவுக்கும், நாமலுக்கும் புகழ்மாரி பொழியப்போகிறார்கள். அவர்கள் எங்கள் நிலத்தை பிடித்து எங்களை ஏதிலிகளாக ஆக்கிவிட்டு திருப்பி தந்தால் ஏதோ அவர் தன்ர நிலத்தை தானமாக தந்ததுபோல் புகழ்ச்சி, எங்கள் வீட்டை உடைத்துப்போட்டு தங்கள் இஷ்டத்துக்கு ஒரு வீட்டை கட்டித்தந்தால் பரோபகாரம் செய்ததுபோல் மகிழ்ச்சி, இளைஞரை சிறையில் அடைத்து அவர்களது இளமை, எதிர்காலம் எல்லாவற்றையும் அழித்துவிட்டு விடுதலை செய்தால் அது அவரின் பெருந்தன்மை, இதுதான் நாம். தனக்காக உயிரை விட்ட போலீஸ்காரருக்காக அவரின் குடும்பத்தையே பொறுப்பெடுத்தார் ஒரு தமிழன். ஆனால் சிங்களவரினால், சிங்களவருக்காக எத்தனை தமிழர் உயிர் விட்டார்கள் அவர்களது குடும்பம் நடுத்தெருவில்.  அவன் தொடர்ந்து வேறொரு வழியில் தன் நாச வேலையை செய்துகொண்டே இருப்பான் தமிழர் தன் காலடியில் இருக்கவேண்டும், தன்னை புகழவேண்டும் என்பதற்காக. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 16 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன

June 24, 2021
 
Share
images.jpg?resize=318%2C159&ssl=1
 51 Views

இன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பையடுத்து விடுதலை செய்யப்பட்ட 16 முன்னாள் போராளிகளின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

Fomer-LTTE.jpg?resize=696%2C367&ssl=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இன்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 16 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன

ஒருவர் கைது செய்யப்பட்டால் அவருடைய தண்டனை கைது செய்யப்பட்ட நாளிலிருந்தா?

அல்லது தண்டனை பெற்ற நாளிலிருந்தா எண்ணப்படுகிறது?

யாராவது விபரம் தெரிந்தவர்கள் பிளீஸ்.

Link to comment
Share on other sites

3 hours ago, ஈழப்பிரியன் said:

ஒருவர் கைது செய்யப்பட்டால் அவருடைய தண்டனை கைது செய்யப்பட்ட நாளிலிருந்தா?

அல்லது தண்டனை பெற்ற நாளிலிருந்தா எண்ணப்படுகிறது?

யாராவது விபரம் தெரிந்தவர்கள் பிளீஸ்.

தீர்ப்பு வழங்கப்படும் நாளிலிருந்து. 

மற்றும் எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்களோ அதன்படி விளக்கமறியல் காலம் மாறுபடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, shanthy said:

தீர்ப்பு வழங்கப்படும் நாளிலிருந்து. 

மற்றும் எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்களோ அதன்படி விளக்கமறியல் காலம் மாறுபடும். 

தகவலுக்கு நன்றி சாந்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

நல்ல விடயம்

Link to comment
Share on other sites

உலகில் எந்தவொரு நாட்டிலும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் தண்டனைக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடம் இருக்கும் போது அல்லது ஆறுமாதம் இருக்கும் நிலையில், விடுதலை செய்யப்படுவது அறம் சார்ந்த மரபு. அதற்குப் பெயர் பொது மன்னிப்பு அல்ல.
இன்று விடுதலை செய்யப்பட்ட 16 தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவதற்கு இன்னமும் பதினொரு மாதங்களே இருக்கும் நிலையில், பொது மன்னிப்பு என்ற பெயரில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வழக்குத் தொடுக்கப்படாமலும் மற்றும் மரண தண்டனை, ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டு இன்னும் பத்து வருடங்கள் அல்லது இருபது வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய கைதிகளை விடுதலை செய்திருந்தால், அதனைப் பொது மன்னிப்பு என்று கூறியிருக்கலாம்.
ஆகவே பொது மன்னிப்பு என்று கூறாமல், அறம் சார்ந்த மரபு அடிப்படையில் குறித்த 16 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்து, மரண தண்டனை அல்லது ஆயுட் தண்டனைக் கைதிகளில் குறைந்தது பத்துப் பேரையாவது தெரிவுசெய்து விடுதலை செய்திருந்தால், அதனைப் பொது மன்னிப்பு என்று சொல்லிப் பெருமைப்பட்டிருக்கலாம்.
நல்லிணக்கம் என்பதில் கொஞ்சமேனும் நம்பிக்கையும் பிறந்திருக்கும். ஆனால் நடந்தது வெறுமனே அரசியல். அதற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்வேறு.
தமிழர்களுக்குத் தனித்துவமாக எந்தவொரு தீர்வையும் வழங்கி விடக்கூடாது என்பதால், 1980 ஆண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற பெயரில் வடக்குக் கிழக்கு மாவட்டங்களுக்கு மாத்திரம் வழங்க வேண்டிய மாவட்ட அபிவிருத்தி சபை முறையை, சிங்கள மாவட்டங்களுக்கும் வழங்க ஜே.ஆர் அன்று தீர்மானித்தார்.
அது குழம்பிப்போக 1987 ஆம் ஆண்டு வடக்குக் கிழக்கு இணைக்கப்பட்ட மாகாண சபை முறையை உருவாக்கிபோது, சிங்கள மாகாணங்களையும் உருவாக்கி அதற்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டன.
அதேபோன்று 16 தமிழ் அரசியல் கைதிகளையும் தனித்துவமாக விடுதலை செய்யக்கூடாது என்ற நோக்கிலும், அவர்களுக்கு அரசியல் கைதிகள் என்ற அந்தஸ்த்து வந்துவிடக்கூடாதென்ற பின்னணியிலும் நான்கு பேரரைக் கொலை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிந்த சில்வாவையும் சேர்த்து விடுதலை செய்திருக்கிறார்கள்.
இந்த நயவஞ்சக அரசியல்தான் கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் காண்கிறோம்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், அடிக்கடி நல்லிணக்கம் என்று மார் தட்டுகின்ற சிங்கள ஆட்சியாளர்களுக்குப் பௌத்த சமயத்தின் அடிப்படைக் கோட்பாட்டைக்கூட மதிக்கத் தெரியாத பாிதாபம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை பாருங்கோ நுணா! நாங்கள் இந்த அரசுக்குத்தான் வோட்டுப்போடப்போறோம். ஒரு லட்ஷம் வேலைவாய்ப்பின்கீழ் இருநூறுபேருக்கு அதில எனக்கும் வேலை தந்திருக்கினம். வீடு கட்டித்தருகின. இப்போ இளைஞனாய்ப் சிறை போய் வயதாளிகளாய், நோயாளிகளாய் எங்கட கையில தந்திருக்கினம். இன்னும் சிலரை பிடிக்கப்போயினம். நாங்கள் அடிமைகள். அவர்கள் செய்வதை கைதட்டி வரவேற்க ஆயத்தமாய் இருக்கிறோம். நீங்கள் சும்மா எங்களை குழப்பாதைங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருக்கின்ற அமிர்தநாயகம் நிக்சனின் ஆய்வைவிட தாயகத்தில் விடுதலையான விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெற்றோர் உறவினர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதே முக்கியம்.அவர்கள் சொன்னது -
தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியேனும் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனஅமைச்சர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றில் தெரிவித்துள்ளமை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.வரலாற்றில் முதற்தடவையாக ஆளும் அரசாங்கத்தின் பொறுப்பு மிகு அமைச்சர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது எமது உறவுகளின் துரித விடுதலைக்கான நல்லெண்ண சமிக்ஞை என்றே நம்புகிறோம்.அது மட்டுமன்றி ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் வேண்டுகோளையும் அதற்கு சாதகமாக பதிலளித்த நீதி அமைச்சரின் கருத்தையும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு கைதிகளின் விடுதலை விவகாரத்தை ஆதரித்திருந்தமை முக்கியமான விடயம்.நீண்ட நெடுங்காலம் சிறையில் வாடும் எமது பிள்ளைகளின் உண்மை நிலையை சகோதர சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்திருக்கின்றமையானது எமது உறவுகளின் விடுதலைக்கு தீர்வை தருகின்ற முதற் புள்ளி என்றே கருதுகின்றோம். சமூகங்களுக்கிடையில் புரையோடிப்போயுள்ள இன முரண்பாடுகளுக்கு தீர்வை அடைய இதை விட பொருத்தமானதொரு நல்லெண்ண செயற்பாட்டைகாண முடியாது.

Link to comment
Share on other sites

13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இதைவிட வேறு விளக்கம் எழுத முடியாது.💖

ஆய்வாளர்களுக்கு சிறைச்சாலை வதையைப் புரிந்து கொள்ள முடியாது. ஒரு சிறைக்கைதி தனது தண்டனைக் காலத்திலிருந்து ஒருநாள் முந்தி விடுதலையானால் கூட அவர்களுக்கு ஆயிரம் நாளைக் கடந்த நிம்மதி கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

இதைவிட வேறு விளக்கம் எழுத முடியாது.💖

ஆய்வாளர்களுக்கு சிறைச்சாலை வதையைப் புரிந்து கொள்ள முடியாது. ஒரு சிறைக்கைதி தனது தண்டனைக் காலத்திலிருந்து ஒருநாள் முந்தி விடுதலையானால் கூட அவர்களுக்கு ஆயிரம் நாளைக் கடந்த நிம்மதி கிடைக்கும்.

நான் எழுத நினைத்தது நீங்கள் எழுதி உள்ளீர்கள் 

5 hours ago, satan said:

இஞ்சை பாருங்கோ நுணா! நாங்கள் இந்த அரசுக்குத்தான் வோட்டுப்போடப்போறோம். ஒரு லட்ஷம் வேலைவாய்ப்பின்கீழ் இருநூறுபேருக்கு அதில எனக்கும் வேலை தந்திருக்கினம். வீடு கட்டித்தருகின. இப்போ இளைஞனாய்ப் சிறை போய் வயதாளிகளாய், நோயாளிகளாய் எங்கட கையில தந்திருக்கினம். இன்னும் சிலரை பிடிக்கப்போயினம். நாங்கள் அடிமைகள். அவர்கள் செய்வதை கைதட்டி வரவேற்க ஆயத்தமாய் இருக்கிறோம். நீங்கள் சும்மா எங்களை குழப்பாதைங்கோ.

சரி ஒரு விடுதலையான போராளியினை எடுத்து அவருக்கு வீடு கட்டி , ஏதாவது தொழில்வாய்ப்பை ஏற்படுத்த முன்வாருங்கள் அதை விடுத்து எந்த நேரமும் முட்டையில் மயி... புடுங்காதீங்க 🥵

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் எழுத நினைத்தது நீங்கள் எழுதி உள்ளீர்கள் 

சரி ஒரு விடுதலையான போராளியினை எடுத்து அவருக்கு வீடு கட்டி , ஏதாவது தொழில்வாய்ப்பை ஏற்படுத்த முன்வாருங்கள் அதை விடுத்து எந்த நேரமும் முட்டையில் மயி... புடுங்காதீங்க 🥵

நம்பிக்கையான அமைப்புக்கள் அல்லது தனிநபர்கள் எதாவது உண்டா இந்த செயலை முன்னின்று எடுத்து செய்ய 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

நம்பிக்கையான அமைப்புக்கள் அல்லது தனிநபர்கள் எதாவது உண்டா இந்த செயலை முன்னின்று எடுத்து செய்ய 

அந்த அந்த பிரதேசங்களில் இருக்கும் கிராம சேவகரை நீங்களே தொடர்பு கொள்ளுங்கள் அதுவே உன்மையாகவும் இருக்கும் விடுதலை செய்யப்பட்டவர்கள் பெயர் விபரங்கள் விலாசம் , தொலைபேசி இலக்கம் எல்லம் வெளியிட்டு இருந்தார்கள் அண்ண அதை வைத்தும் தொடர்புகொள்ளலாம் 

எதற்கும் உங்களுக்கு அங்கே அதாவது அவரது பிரதேசத்தில் உங்களுக்கு தெரிந்த ஒருவரையும் தொடர்பில் வைத்துருந்தாக் இன்னும் நல்லது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த அந்த பிரதேசங்களில் இருக்கும் கிராம சேவகரை நீங்களே தொடர்பு கொள்ளுங்கள் அதுவே உன்மையாகவும் இருக்கும் விடுதலை செய்யப்பட்டவர்கள் பெயர் விபரங்கள் விலாசம் , தொலைபேசி இலக்கம் எல்லம் வெளியிட்டு இருந்தார்கள் அண்ண அதை வைத்தும் தொடர்புகொள்ளலாம் 

எதற்கும் உங்களுக்கு அங்கே அதாவது அவரது பிரதேசத்தில் உங்களுக்கு தெரிந்த ஒருவரையும் தொடர்பில் வைத்துருந்தாக் இன்னும் நல்லது 

தகவலுக்கு நன்றி ராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, putthan said:

நம்பிக்கையான அமைப்புக்கள் அல்லது தனிநபர்கள் எதாவது உண்டா இந்த செயலை முன்னின்று எடுத்து செய்ய 

தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியோடு சேர்ந்தும் செயற்படலாம் விரும்பினால்.

Link to comment
Share on other sites

205712529_3957065097755232_5635191923320

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பாதாள உலக பிரமுகர் துமிந்த சில்வா அவர்களுக்கு வெறும் 5 ஆண்டுகளில் பொது மன்னிப்பு வழங்கபட்டு இருக்கின்றமை.....................
சில மாதங்களுக்கு முன்னர் ஆயுத வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கபட்டு இருந்தது .
இதே போல கடந்த ஆண்டு குழந்தைகள் உட்பட எட்டு தமிழர்களை படுகொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்க அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கபட்டு இருந்தது
நல்லாட்சி காலத்தில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தண்டனை கைதியாக தடுத்து வைக்கப்பட்டு இருந்த பௌத்த மத குருவான ஞானசார தேரரை அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கபட்டு இருந்தது
அதே போல இவோன் ஜோன்சன் என்ற இளம் பெண்ணை கொலை செய்த வழக்கின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த ஜுட் ஷரமந்த ஜெயமஹா என்கிற இளைஞரையும் அவர்களுக்கும் நல்லாட்சி அரசாங்கத்தில் பொது மன்னிப்பு வழங்கபட்டு இருந்தது
ஆனால், இதே நாட்டில்
ரகுபதி சர்மா எனப்படும் சைவ மதகுரு ஒருவர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் 300 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இன்றைக்கும் தண்டனை கைதியாக சிறையில் இருக்கின்றார்
மன்னாரை சேர்ந்த கவிஞர் அஹ்னாவ் ஜசீம் அவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக தனது சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டு தடுத்து வைக்க பட்டு இருக்கிறார்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.அரூரன் எனும் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற பொறியலாளர் 2008 இல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்
பயங்கரவாத சட்டத்தின் கீழ் பலவந்த படுத்தி குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தாய் இல்லாத இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்த சுதாகரன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்
இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான கனகசபை தேவதாசன் அவர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்
மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா அவர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்
மேற்குறிப்பிட்டவர்கள் வெறும் உதாரணம் மட்டுமே
இவர்களை போல நூற்றுக்கணக்கானவர்கள் எவ்வித அடிப்படை காரணங்களும் இன்றி பயங்கரவாத சட்ட த்தின் கீழ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள்
சமூக தளபதிவுகளில் அடிப்படையில் மட்டும் 80 இற்கும் அதிகமானவர்கள் அண்மைய மாதங்களில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள்
இதுபோதாதென்று ஆயிரக்கணக்கான இளையவர்கள் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டு இருக்கிறார்கள்
ஆனால் இவர்கள் யாருமே துமிந்த சில்வா போன்று படுகொலைகளில் எடுபடவில்லை .
போதைவஸ்து கடத்த வில்லை
பாதாள உலக முகவர்களாக செயல்படவில்லை ..
ஆகவே அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல
இன்றைக்கு விடுதலை செய்யப்பட்ட 16 தமிழ் அரசியல் கைதிகள் போன்று பயங்கரவாத சட்ட பிரிவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகலரும் விடுதலை செய்ய பட வேண்டும் .
அதே போல பயங்கரவாத சட்டமும் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும்.
Link to comment
Share on other sites

19 hours ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாட்டில் இருக்கின்ற அமிர்தநாயகம் நிக்சனின் ஆய்வைவிட தாயகத்தில் விடுதலையான விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெற்றோர் உறவினர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதே முக்கியம்.அவர்கள் சொன்னது -
தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியேனும் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனஅமைச்சர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றில் தெரிவித்துள்ளமை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.வரலாற்றில் முதற்தடவையாக ஆளும் அரசாங்கத்தின் பொறுப்பு மிகு அமைச்சர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது எமது உறவுகளின் துரித விடுதலைக்கான நல்லெண்ண சமிக்ஞை என்றே நம்புகிறோம்.அது மட்டுமன்றி ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் வேண்டுகோளையும் அதற்கு சாதகமாக பதிலளித்த நீதி அமைச்சரின் கருத்தையும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு கைதிகளின் விடுதலை விவகாரத்தை ஆதரித்திருந்தமை முக்கியமான விடயம்.நீண்ட நெடுங்காலம் சிறையில் வாடும் எமது பிள்ளைகளின் உண்மை நிலையை சகோதர சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்திருக்கின்றமையானது எமது உறவுகளின் விடுதலைக்கு தீர்வை தருகின்ற முதற் புள்ளி என்றே கருதுகின்றோம். சமூகங்களுக்கிடையில் புரையோடிப்போயுள்ள இன முரண்பாடுகளுக்கு தீர்வை அடைய இதை விட பொருத்தமானதொரு நல்லெண்ண செயற்பாட்டைகாண முடியாது.

அமிர்தநாயகம் நிக்சன் கொழும்பில் உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nunavilan said:

வெளிநாட்டில் இருக்கின்ற அமிர்தநாயகம் நிக்சனின்

சீசீ... அவர் புலம்பெயர்ந்தவர் என்றுதான் சொல்ல வேண்டும். அப்போதான் நான் மட்டும்தான் ஊரில் இருக்கிறேன், நான் சொல்வது தான் சரி, இங்கு எல்லோரும் நன்றாக நடத்தப்படுகிறோம். சும்மா அரசாங்கத்தை குறை கூறாதீர்கள் இங்கு வந்து அரசாங்கத்தோடு சேர்ந்து முதலீடுகளை செய்யுங்கள் முடிந்தால். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.