Jump to content

துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா,  ஜனாதிபதியின் விசேட  பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார் என சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றம் 2016 இல் துமிந்தா சில்வாவிற்கு மரணதண்டனை விதித்தது.

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள  துமிந்த சில்வாவின்  வழக்கினை மீண்டும் விசாரிக்க நியமிக்கப்பட்ட  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விடுதலை செய்ய பரிந்துரைத்தது.

இந்நிலையில், இன்று (24.06.2021) துமிந்த சில்வாவா ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய கொலையாளிகளை வெளியே சுதந்திரமாக நாடு எங்குள்ளது? ஐந்துக்கு மேற்பட்ட நீதிபதிகள் விசாரித்து சந்தேகமின்றி குற்றவாளியென நிருபிக்கபட்ட நபர். நீதி இங்கு சுதந்திரமாக செயல்படுகின்றதா?

வயதுபோக போக போக எனக்கு மட்டுலல்ல என்னுடய சிங்கள நண்பர்களும் கூட சொல்கிறர்கள். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியதில் தவறில்லலை என.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துமிந்த சில்வாவின் விடுதலை சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குட்படுத்தியுள்ளது - அமெரிக்கா விசனம்.

(நா.தனுஜா)

உயர்நீதிமன்றத்தினால் மரணதண்டனை உறுதிப்படுத்தப்பட்ட துமிந்த சில்வா பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையானது சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குட்படுத்தியுள்ளதாக அமெரிக்கா விசனம் வெளியிட்டுள்ளது.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/127909/alaina-teplitz.jpg

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். 

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டமையை நாம் வரவேற்கின்றோம். எனினும் கடந்த 2018 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தினால் மரணதண்டனை உறுதிசெய்யப்பட்ட துமிந்த சில்வாவின் விடுதலையானது சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே உடன்பட்டிருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் சமத்துவமான நீதி ஆகியவை உறுதிசெய்யப்படுவது அவசியமாகும்.

துமிந்த சில்வாவின் விடுதலை சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குட்படுத்தியுள்ளது - அமெரிக்கா விசனம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமன்னிப்புக்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார் ? ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி 

(நா.தனுஜா)

அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார் ? என்று கேள்வியெழுப்பியுள்ள  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இது தொடர்பில் மேலும் பல கேள்விகளை ஜனாதிபதியிடம் முன்வைத்து அவைகுறித்த விபரங்களைப் தமக்கும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

இந்த கேள்விகளுக்கான பதில்கள் திருப்திகரமானவையாக அமையாதபட்சத்தில், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு நியாயமற்றது என்றும் அது சட்டத்தின் ஆட்சியும் நீதித்துறையின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் சீர்குலைவதற்கே வழிவகுக்கும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சட்டவிரோதமான ஒன்றுகூடலில் அங்கம் வகித்தமை மற்றும் கொலைக்குற்றச்சாட்டின் அடிப்படையில் மேல்நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அந்தத் தீர்ப்பு முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான உயர்நீதிமன்றத்தின் விசேட குழுவினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தண்டனைக்குள்ளான துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்.

ஜனாதிபதி இத்தகைய பொதுமன்னிப்பை வழங்குவதற்கு இலங்கை அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைய குறித்த வழக்கை நடத்திய நீதிபதியிடமிருந்து அறிக்கை பெறப்பட வேண்டும்.

பின்னர் அந்த அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படுவதுடன் சட்டமா அதிபர் மற்றம் நீதியமைச்சர் ஆகியோரின் ஆலோசனையும் பெறப்பட வேண்டும். அவர்கள் இருவரும் அதுகுறித்த தமது பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே இந்த பொதுமன்னிப்பானது குறித்த வழக்கை விசாரணைசெய்து தீர்ப்பளித்த நீதிபதிகள், சட்டமா அதிபர் மற்றும் நீதியமைச்சர் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக வழங்கப்பட்டதா? என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு இருக்கின்றது.

ஆகவே இதுவிடயத்தில் மேற்படி தரப்பினரால் அறிக்கையோ, அபிப்பிராயமோ அல்லது பரிந்துரைகளோ முன்வைக்கப்பட்டதா என்பதையும் அவ்வாறெனில் துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டதா? அல்லது வழங்கவேண்டாம் என்று பரிந்துரைக்கப்பட்டதா? என்பதை வெளிப்படுத்துமாறுகோரி ஜனாதிபதிக்கு நாம் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறோம்.

இவ்வாறான பொதுமன்னிப்பை வழங்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் காணப்பட்டாலும், அது எப்போதும்; சட்டரீதியாகவே அணுகப்பட வேண்டும். அத்தகைய அதிகாரம் தன்னிச்சையான முறையிலோ அல்லது தெரிவுசெய்யப்பட்ட அடிப்படையிலோ பயன்படுத்தப்படக்கூடாது.

கடந்த காலத்திலும் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு எந்த அடிப்படையில் கைதிகள் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்ற விடயம் தெளிவுபடுத்தப்படாமல், சில கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

அத்தகைய சந்தர்ப்பங்களிலும் சட்டத்தரணிகள் சங்கம் தற்போது எடுத்திருக்கும் நிலைப்பாட்டையே எடுத்திருந்தது. ஆகவே இதுகுறித்து ஜனாதிபதிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படுத்துமாறு வலியுறுத்தியிருக்கின்றோம்.

Image

Image

அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு துமிந்த சில்வா எவ்வடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார்?, இந்தப் பொதுமன்னிப்பை வழ்ஙகும்போது கவனத்தில்கொள்ளப்பட்ட பிரதான விடயங்கள், தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனையோரின் வழக்குகளிலிருந்து துமிந்த சில்வாவின் வழங்கு விலக்களிக்கப்படுவதற்கான காரணம், துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னர் ஜனாதிபதியினால் இந்த வழக்கை விசாரணை செய்து தீர்ப்பளித்த நீதிபதிகளிடம் அறிக்கை கோரப்பட்டதா? ஆமெனில், அந்த அறிக்கையின் உள்ளடக்கம் என்ன?, இந்தப் பொதுமன்னிப்பு தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டதா? ஆமெனில், அதன் உள்ளடக்கம் என்ன?, இந்தப் பொதுமன்னிப்பு தொடர்பில் நீதியமைச்சரிடம் பரிந்துரைகள் கோரப்பட்டதா? ஆமெனில், அதன் உள்ளடக்கம் என்ன? ஆகியவை தொடர்பில் வெளிப்படுத்த வேண்டும் என்றே கடிதம் மூலம் கோரியிருக்கிறோம்.

இந்தக் கேள்விகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் திருப்தியளிக்கவில்லை எனின், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு நியாயமற்றதும் தன்னிச்சையானதுமாகும். அது சட்டத்தின் ஆட்சி சீர்குலைவதற்கும் நீதித்துறையின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வீழ்ச்சிகாண்பதற்குமே வழிவகுக்கும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்புக்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார் ? ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி  | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

வணக்கம் சட்டத்தரணிகளே, சர்வாதிகாரியிட்டைநீங்கள் யாரும் கேள்வி கேட்க முடியாது தெரியாதோ

Link to comment
Share on other sites

தமிழ் மக்களைக் கொன்ற படையினரையும் வெளி நாட்டு பெண்மணியை கொன்றவரையும் விடுதலை செய்யும் போது கொண்டாடிய சிங்கள மக்கள் இன்று துமிந்தவின் விடுதலையை எதிர்ப்பது வேடிக்கை.  

பாதாள உலக குழுக்கள் பலவற்றைத்  தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்த  பாரத லக்ஷ்மன் எனும் ரவுடியை கொன்ற இன்னொரு ரவுடிக்கு மன்னிப்பளித்ததை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், ஆனால் சிறுவர்கள் உட்பட பல தமிழ் மக்களை கொன்றவருக்கு கொடுக்கும் மன்னிப்பை எதிர்ப்பார்கள்.

காலம் ஒரு பூமராங் போன்றது என்பதை சிங்கள மக்கள் விரைவில் உணருவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நிழலி said:

நானும் கிட்டத்தட்ட இப்பிடித்தான் யோசித்தேன். மிருசுவிலில் பலரை கொலை செய்தவன் இலகுவாக வெளியில் வரும்போது, இதுக்கு ஏன் இவ்வளவு அலப்பறை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனப்படுகொலையையே செய்திட்டு ஹாயா இருக்கிறவங்களுக்கு.. இதெல்லாம் பெரிய விசயமே அல்ல.

என்ன எங்களுக்கு  கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் நாங்களே தவறானவர்களை சிங்களவன் பக்கம் அனுப்பி தவறவிட்டு வருகிறோம்.

அந்த வரிசையில்..சிங்களவர்களோடு வாழ்வது பெருமை புகழ் சுமந்திரன் தொடங்கி சிங்கள அரச பயங்கரவாதத்தை பற்றி மூச்சும் விடாமல்.. அவர்களின் காலை நக்கி பிழைக்கும் நாயாய் இருப்பதில் பெருமை புகழ் சுண்டக்காய் சுரேந்திரன் வரை.. இதுகாறுகள் இருக்கும் வரை தமிழகளுக்கும் நியாயமில்லை.. இப்படியான நிகழ்வுகளுக்கும் குறைவிருக்காது. 

இதில் புலிகள் விடுதலை என்ற வாசகத்தை போட தமிழ் எலும்பு பொறுக்கிகளுக்கு தீனியாக.. அப்பாவிகளை பிடிச்சு சிறையில் வைச்சிட்டு.. புலிப்பட்டம் கண்டி விடுவதும் அடங்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா  தனது கைங்கரியத்தை தமிழ் கைதிகளின் விடுதலை மூலம் நிறைவேற்றி விடலாம் என நினைத்து இறங்கியிருப்பார்.  தமிழரின் விடுதலையால் சிங்களம் கொதிக்கும், பிரச்சனை கிளம்பும் அந்த இடைவெளியில் தான் சயிக்கிள் ஓடலாம் என்று நினைத்திருப்பார். ஆனால் இனி இவர் எடுக்கும் ஒவ்வொரு அடியும் இவருக்கு எதிராகவே திரும்பும் வாய்ப்புள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துமிந்த சில்வா விடுதலை – மரண தண்டனைக் கைதிகள்  உணவுத் தவிர்ப்பு போராட்டம்

1-77.jpg?resize=493%2C309&ssl=1
 32 Views

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில்  உள்ள மரண தண்டனை கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக தளர்த்துமாறு கோரி சுமார் 74 மரண தண்டனைக் கைதிகள் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருவதனால் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

அதே நேரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு அளித்ததுபோல தங்களையும் விடுதலை செய்யுமாறும்  அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்ட 235 கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது குறித்து ஏற்கனவே நீதி அமைச்சினால் ஜனாதிபதி செயலகத்திற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://www.ilakku.org/?p=53342

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.