Jump to content

மேதகு - முதற்பார்வை

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஈழப் போராட்டம் பற்றி செயற்கையான புனைவுகள், அந்நியமான வசன நடைகள், வரலாற்றுக்கு புறம்பான பதிவுகள் இல்லாமல், தெளிவான கதை சொல்லும் பாங்குடன், முடிந்தளவு யதார்த்ததை ஒட்டி இதுவரை வந்த ஆகச்சிறந்த திரைப்படம் எது என்றால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம் - மேதகு.

முதல் பிரேமிலேயே தமிழரின் தொன்மையை தொட்டு படம் ஆரம்பிக்கிறது.

குமரிக்கண்டம் வரை ஆண்ட இனம் என்ற முகவுரை படத்தின் வரலாற்றுப் புரிதல் பற்றிய ஐயப்பாட்டை ஆரம்பத்தில் தோற்றுவித்தாலும், அடுத்த காட்சிலேயே - 1995 இன் மதுரை மாவட்ட கிராமம் ஒன்றில் நடக்கும் “மாவீரன் கூத்தோடு” அண்மைய வரலாற்றில் ஆழமாக படம் இறங்கும் போது அந்த ஐயப்பாடு மறைந்து விடுகிறது.  

குழந்தை பிறந்து, வளரும் பருவம் என்று மெதுவாக நகரும் கதை, சிறுவன் பிரபாகரன் “ நாம் ஏன் அப்பா திருப்பி அடிக்கவில்லை” என்று கேட்கும் காட்சியில் இருந்து டாப் கியரில் எகிறுகிறது.

படத்தின் அத்தனை பாத்திரத்தேர்வுகளும் அபாரம்.  

குறிப்பாக அந்த பதின்மவயது பிரபாகரன் வேடம் ஏற்கும் கதாநாயகன், முக அமைப்பும், வார்த்தை தேர்வும், தொனியும், உடல் மொழியும், கண் அசைவும், தலைவரை பின்னாளில் கண்ட பலர் கற்பனை செய்து வைத்திருக்கும் “தம்பி”யை அப்படியே கண் முன் கொண்டு வருகிறார்.

அதே போல் பார்வதி அம்மாள், வேலுப்பிள்ளை ஐயா, தந்தை செல்வா, துரையப்பா, சிறிமா, பண்டரநாயக்க, குட்டிமணி பாத்திரங்களும் கச்சிதம்.

பொதுவாக பெரிய பாத்திரங்கள் எல்லாமுமே 70-90% ஈழத்தமிழை ஒத்து பேசுவது சிறப்பு. அதுவும் அந்த பார்வதி அம்மாள் பாத்திரத்தின் ஈழத் தமிழ் அதி சிறப்பு.

சில இடங்களில் இலக்கிய தமிழ் வலிந்து தொனிப்பதாக படுகிறது. குறிப்பாக சிறு பாத்திரங்களில்.

பெளத்த பிட்சுகள் பேசும் சிங்களம் கர்ணகடூரமாக இருக்கிறது. ஒருவகையில் பழி தீர்கிறார்களோ என்னமோ🤣

படத்தை நகர்த்தி செல்லும் கூத்து ஒரு நல்ல கதை சொல்லும் உத்தி. ஆனால் அரிதாக சில இடங்களில் கொஞ்சம் இழுபடுவதான உணர்வு.

பச்சை நிற பஸ், யாழ் மாவட்ட சூழலில் காடு, மலை என்று பொருத்தாமல் இருந்தாலும், இவை கதை ஓட்டத்தை பாதிக்கவில்லை. 

இளவயது பிரபாகரன் கடற்கரையோரத்தில் தன் தந்தைக்கு தன் நியாயத்தை எடுத்து சொல்லும் காட்சியை இன்னும் அழகாக செதுக்கி இருக்கலாம். சில காட்சிகளுக்கு கொஞ்சம் சினிமாதனமும் தேவைதான். இந்த காட்சியில் அதற்குரிய பவர் மிஸ்ஸிங்.

தியாகி சிவகுமாரனுக்கு அவருக்குரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது 🙏🏾

படத்தின் மைனஸ் என்றால் அந்த தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை காட்சிகள்தான். வரலாற்றுக்கு அமைவாகவும் இல்லாமல், நாடகதனமாக காட்சிகள் அமைகிறது.

ஆனால் ஸ்ரீ எதிர்ப்பு கலவர காட்சிகள் தத்துரூபமாக படமாக்கப்பட்டுள்ளன.

படம் ஒரு சாராரின் கருத்தை மட்டுமே பதிகிறது என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஆனால் பிராசார படம் போல கொள்கை முழக்கம் செய்யாமல், தமது பார்வையை மட்டுமே முன் வைக்கிறது. 

படம் நாயகர்கள் என்றும் வில்லனகள் என்றும் துரோகிகள் என்றும் வர்ணிப்பவர்களை பெரும்பாலனா ஈழத்தமிழ் மக்களும் அவ்வாறே கருதுவார் என்பது என் முடிவு.

முடிவாக இதுவரை இந்தியாவில் இருந்து வந்த ஈழம் பற்றி பேசிய படங்களை விட மட்டும் அல்ல, நிதர்சனம் படைப்புகளை விடவும் கூட இந்த படம் ஒரு படி மேல் என்றேபடுகிறது.

மேதகு - பெயர் சொல்லும் பிள்ளை

 • Like 14
 • Thanks 6
Link to comment
Share on other sites

 • Replies 125
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

ஈழப் போராட்டம் பற்றி செயற்கையான புனைவுகள், அந்நியமான வசன நடைகள், வரலாற்றுக்கு புறம்பான பதிவுகள் இல்லாமல், தெளிவான கதை சொல்லும் பாங்குடன், முடிந்தளவு யதார்த்ததை ஒட்டி இதுவரை வந்த ஆகச்சிறந்த திரைப்படம்

பிரபா சிதம்பரநாதன்

இந்த படத்தை(தெருக்கூத்தை) பார்ப்பவர்களில் நானும் ஒருத்தியாகி ஒன்றியப்போனேன்.. என் மனதில் எழுந்தவை - படத்தின் ஆரம்பம் குமரிகண்டதை தொட்டு எங்களது கலையான தெருக்கூத்து வடிவில் கதையை படமாக்கியது.. வித

ரஞ்சித்

படத்தின் தாக்கத்திலிருந்து விடுபட சில கணங்கள் ஆகிற்று. எனக்கு இதனை ஒரு படம் என்று சாதாரணமாகப் பார்த்துவிட்டுக் கடந்துசெல்ல முடியவில்லை. எங்கள் வாழ்க்கையில் நாம் பார்த்த மிக முக்கியமான ஒரே மனிதனின

 • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி, கோசான். 
உங்கள், விமர்சனத்தை பார்த்த பின்...
படத்தை... எப்படியாவது, பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்துள்ளது. :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

மிக்க நன்றி, கோசான். 
உங்கள், விமர்சனத்தை பார்த்த பின்...
படத்தை... எப்படியாவது, பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்துள்ளது. :)

கட்டாயம் பாருங்கள்.

இதை வாட்சப்பில் இதர வழிகளிலும் பரப்பி எல்லாரையும் பார்க்கவும் தூண்டுங்கள். 

இப்படி ஒரு படத்தை எடுத்தமைக்கு நாம் செய்யகூடிய கைமாறாக இருக்கட்டும்.

அடுத்த பாகங்கள் வருவது நம் கையில்தான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

கட்டாயம் பாருங்கள்.

இதை வாட்சப்பில் இதர வழிகளிலும் பரப்பி எல்லாரையும் பார்க்கவும் தூண்டுங்கள். 

இப்படி ஒரு படத்தை எடுத்தமைக்கு நாம் செய்யகூடிய கைமாறாக இருக்கட்டும்.

அடுத்த பாகங்கள் வருவது நம் கையில்தான்.

நிச்சயமாக... நாம் தான், செய்ய வேண்டும்  கோசான்.

பணத்தை கட்டி... எப்படி, காணொளியை பார்ப்பது என்ற...
விடயத்தை... "Screenshot" மூலம், காண்பிக்க முடிந்தால்தான்...
(நான் உட்பட) பலரும்... உள்ளே வருவார்கள் என நினைக்கின்றேன்.

யாழ்.கள. உறுப்பினர்களுக்கு,  படம் பிடித்திருந்தால்,
ஐந்து டொலரை விட... அதிக பணம் செலுத்தி,
தமது, நன்றியை... தெரிவிப்பார்கள். 

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

நிச்சயமாக... நாம் தான், செய்ய வேண்டும்  கோசான்.

பணத்தை கட்டி... எப்படி, காணொளியை பார்ப்பது என்ற...
விடயத்தை... "Screenshot" மூலம், காண்பிக்க முடிந்தால்தான்...
(நான் உட்பட) பலரும்... உள்ளே வருவார்கள் என நினைக்கின்றேன்.

யாழ்.கள. உறுப்பினர்களுக்கு,  படம் பிடித்திருந்தால்,
ஐந்து டொலரை விட... அதிக பணம் செலுத்தி,
தமது, நன்றியை... தெரிவிப்பார்கள். 

நான் பார்த்த முறை

1. லேப்டாப்பில் கூகிள் குரோம் வெப் பிரவுசரை  தரவிறக்கவும்.

large.5D7FAB71-900F-4E28-BD1E-BD6253A2FB33.jpeg.bc0df36d37fbcdd08a0578a6c70ee605.jpeg

2. பின்னர் www.bsvalue.com என்ற முகவரிக்கு போகவும்.

3. அங்கே இப்படி ஒரு ஸ்கிரீன் வரும்.

large.74CA1C1E-14FD-4BA2-96A0-DBB923F09ED5.jpeg.f5146a20c0c1490362229e41b473b427.jpeg

4. இதில் உங்கள் நாட்டை தெரிவு செய்து, மொபைல் இலக்கத்தை கொடுக்கவும். 

5. உங்கள் மொபைலுக்கு ஒரு நாலு இலக்க கோட் டெக்ஸ்ட் மெசேஜாக வரும்.

6. ஸ்கிரீனில் அடுத்துவரும் பெட்டியில் அந்த கோடை இட்டு, உங்கள் பெயர் கொடுத்து ரிஜெஸ்டிரேசனை பூர்த்தியாக்கவும். 

7. ரெஜிஸ்ரேசன் பூர்த்தியானதும் இந்த ஹோம் ஸ்கிரீன் வரும்.

large.32D81B7F-E27D-4B2E-902F-401061A7DA90.jpeg.243102a27a81e35824d60daed36e6787.jpeg

8. இதில் படத்தின் மேல் கிளிக் பண்ணினால் - உங்கள் மொமபைல், இமெயில் இவற்றுடன் கிரெடிட் கார்ட் தகவலையும் கேட்கும். அவற்றை கொடுத்து அழுத்தினால் - மீண்டும் 7 இல் உள்ள ஹோம் ஸ்கிரீன் வரும்.

9. அதில் போய் படத்தை அழுத்தினால் படம் ஓடத்தொடங்கும். படம் லோட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கலாம்.

 • Thanks 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நன்றி,  கோசான். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

கோசான் எவ்வளவு பணம் தான் எடுக்கிறார்கள்?

கடனட்டை கொடுக்கிறபடியால் தெரிந்து வைத்திருப்பது நல்லதல்லவா?

என்னைப்போல கிரெடிட் கார்ட் இல்லாத பிரஜைகளுக்கு வேறு வழி ஏதாவது இருக்கா? பேபால் எண்டு.....?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

கோசான் எவ்வளவு பணம் தான் எடுக்கிறார்கள்?

கடனட்டை கொடுக்கிறபடியால் தெரிந்து வைத்திருப்பது நல்லதல்லவா?

5 யூ எஸ். 

எனது அக்கவுண்டை ஒன்லனில் செக் பண்ணி பார்த்தேன். சொல்லிய அளவுதான் எடுத்துள்ளார்கள்.

https://razorpay.com எனும் நிறுவனம் மூலம்தான் காசு எடுக்கிறார்கள்.

* பண விசயம். முடிவு உங்களது. எனக்கு நம்பகமாகவே படுகிறது.

6 minutes ago, குமாரசாமி said:

என்னைப்போல கிரெடிட் கார்ட் இல்லாத பிரஜைகளுக்கு வேறு வழி ஏதாவது இருக்கா? பேபால் எண்டு.....?

இல்லை அண்ணை. நானும் பேபால் விரும்பிதான். ஆனால் இல்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

5 யூ எஸ். 

எனது அக்கவுண்டை ஒன்லனில் செக் பண்ணி பார்த்தேன். சொல்லிய அளவுதான் எடுத்துள்ளார்கள்.

https://razorpay.com எனும் நிறுவனம் மூலம்தான் காசு எடுக்கிறார்கள்.

* பண விசயம். முடிவு உங்களது. எனக்கு நம்பகமாகவே படுகிறது.

இல்லை அண்ணை. நானும் பேபால் விரும்பிதான். ஆனால் இல்லை.

தகவலுக்கு நன்றி கோசான்.

இது ஒரு படத்துக்கு மட்டுமா அல்லது மாத சந்தாவா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மனிதனின் வாழ்க்கை கூட நூறுவீதம் சரியாக அமைவதில்லை. அது போல் திரைப்படங்களும் விவரண காணொளிகளும் எக்காலத்திலும் 💯 சரியாக அமைந்ததில்லை.
கிட்டு எனும் சிறியவனுக்கு மனமார்ந்த  பாராட்டுக்கள்.

கோஷான் உங்களின் கண்ணோட்டத்திற்கும் நன்றிகள். 👍🏽

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி கோசான்.

இது ஒரு படத்துக்கு மட்டுமா அல்லது மாத சந்தாவா?

ஒரு படத்துக்கானது. 

3 minutes ago, குமாரசாமி said:

மனிதனின் வாழ்க்கை கூட நூறுவீதம் சரியாக அமைவதில்லை. அது போல் திரைப்படங்களும் விவரண காணொளிகளும் எக்காலத்திலும் 💯 சரியாக அமைந்ததில்லை.
கிட்டு எனும் சிறியவனுக்கு மனமார்ந்த  பாராட்டுக்கள்.

கோஷான் உங்களின் கண்ணோட்டத்திற்கும் நன்றிகள். 👍🏽

உண்மைதான் 100% வரலாற்றை ஒட்டி என்றும் சொல்ல முடியாது. உதாரணமாக சிவகுமாரனும் தலைவரும் ஒரே குழுவில் இருப்பதாக காட்டுகிறார்கள். நானறிந்த வரையில் இது உண்மையில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

ஒரு படத்துக்கானது. 

உண்மைதான் 100% வரலாற்றை ஒட்டி என்றும் சொல்ல முடியாது. உதாரணமாக சிவகுமாரனும் தலைவரும் ஒரே குழுவில் இருப்பதாக காட்டுகிறார்கள். நானறிந்த வரையில் இது உண்மையில்லை.

ஊடக வளர்ச்சியையும் விஞ்ஞான வளர்ச்சியையும் வைத்து ஒரு விடயத்தை நூறு வீதம் எதிர்பார்க்கின்றோம்.
இதற்கான பரிசுதான் முள்ளிவாய்க்கால் அழிவு.

Link to comment
Share on other sites

29 minutes ago, goshan_che said:

ஒரு படத்துக்கானது. 

உண்மைதான் 100% வரலாற்றை ஒட்டி என்றும் சொல்ல முடியாது. உதாரணமாக சிவகுமாரனும் தலைவரும் ஒரே குழுவில் இருப்பதாக காட்டுகிறார்கள். நானறிந்த வரையில் இது உண்மையில்லை.

ஐயா மன்னிக்கவும் இவர்களுக்கு தெரியாமல் தானே அவர் தனியாக செயல்படுவது போல் வருகிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் காட்டுவதால் ( குழம்பி விட்டீர்கள் போல் உள்ளது) 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, appan said:

ஐயா மன்னிக்கவும் இவர்களுக்கு தெரியாமல் தானே அவர் தனியாக செயல்படுவது போல் வருகிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் காட்டுவதால் ( குழம்பி விட்டீர்கள் போல் உள்ளது) 

அப்படியா வருகிறது?

தலைவர் ஒரு மதிலின் மீது இருந்து நடந்தவற்றை விளக்கி சொல்லும் போது அவரை சூழ இருக்கும் குழுவில் இருக்கும் ஒருவர்தான் பின்னர் சிவகுமாரன் என அடையாளப்படுத்த படுகிறார் என நான் நினைக்கிறேன். 

ஒரே தோற்றமுடை இருவரை பார்த்து குழம்பிவிட்டேனோ?

Link to comment
Share on other sites

3 minutes ago, goshan_che said:

அப்படியா வருகிறது?

தலைவர் ஒரு மதிலின் மீது இருந்து நடந்தவற்றை விளக்கி சொல்லும் போது அவரை சூழ இருக்கும் குழுவில் இருக்கும் ஒருவர்தான் பின்னர் சிவகுமாரன் என அடையாளப்படுத்த படுகிறார் என நான் நினைக்கிறேன். 

ஒரே தோற்றமுடை இருவரை பார்த்து குழம்பிவிட்டேனோ?

அவர் வெள்ளை நிறம். பக்கம் நிற்பவர் கறுப்பு நிறம் அல்லவா. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, appan said:

அவர் வெள்ளை நிறம். பக்கம் நிற்பவர் கறுப்பு நிறம் அல்லவா. 

ஓம் இப்போ திரும்பி அந்த சீனை பார்த்தேன். இரு வேறு ஆட்கள்தான். உடல்வாகு ஒன்றாய் இருப்பதால் குழம்பி விட்டேன்.

படம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

...

4. இதில் உங்கள் நாட்டை தெரிவு செய்து, மொபைல் இலக்கத்தை கொடுக்கவும். 

5. உங்கள் மொபைலுக்கு ஒரு நாலு இலக்க கோட் டெக்ஸ்ட் மெசேஜாக வரும்.

...

கைப்பேசி எண்ணிற்கு ஒரு மெசேஜ்ஜும் வரவில்லை. :shocked:

கிணத்துல போட்ட கல்லு மாதிரி 'கப்சிப்' :)

சிலமுறை முயன்றும் பயனில்லை.

இந்நாட்டிலிருந்து பார்க்க இயலாது போல தெரிகிறது. 🤔

பகிர்விற்கு நன்றி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ராசவன்னியன் said:

கைப்பேசி எண்ணிற்கு ஒரு மெசேஜ்ஜும் வரவில்லை. :shocked:

கிணத்துல போட்ட கல்லு மாதிரி 'கப்சிப்' :)

சிலமுறை முயன்றும் பயனில்லை.

இந்நாட்டிலிருந்து பார்க்க இயலாது போல தெரிகிறது. 🤔

பகிர்விற்கு நன்றி.

ஓ அப்படியா…சில வேளை முன்னால் இருக்கும் 0 ஐ போடாமல் கைபேசி எண்ணை போட்டு பாருங்கள்.

உதாரணமாக எமது நம்பர் 07123456789 என்றால் 7123456789 என்று.

உங்கள் நாடு கொஞ்சம் கறார்தானே. எனக்கும் சில தளங்களை அங்கு வரும் போது பார்க்க முடியாமல் போவதுண்டு. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

+9710***
971**
0**
**

என எல்லா காம்பினேசனிலும் முயற்சித்தாயிற்று. ஒன்றும் பலனில்லை.

ADDRESS

SHIV DREAMZ PRODUCTION
NO.6,FLAT NO.14,
Srinivasa Apartments
Kodambakkam - 600024 Prakasam Street, T.Nagar, Chennai, Tamil Nadu, 600017

EMAIL

info@blacksheepvalue.com

மேற்கண்ட முகவரிக்கு தான் முறைப்பாடு எழுதணும்.

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ராசவன்னியன் said:

+9710***
971**
0**
**

என எல்லா காம்பினேசனிலும் முயற்சித்தாயிற்று. ஒன்றும் பலனில்லை.

ADDRESS

SHIV DREAMZ PRODUCTION
NO.6,FLAT NO.14,
Srinivasa Apartments
Kodambakkam - 600024 Prakasam Street, T.Nagar, Chennai, Tamil Nadu, 600017

EMAIL

info@blacksheepvalue.com

மேற்கண்ட முகவரிக்கு தான் முறைப்பாடு எழுதணும்.

நானும் முதலில் நாட்டை தெரிவு செய்து பின் phone number(without country code) போட்டும் சரிவரவில்லை. சிறிது நேரத்திற்கு பின் திரும்பவும் முயற்சி செய்த பொழுது அவர்களது home page வந்தது.. அதிலே  Methagu என தேடினால் வரும் அதை  படத்தை click  செய்யும் பொழுதுதான் உங்களது phone நம்பரை கேட்கும்.. உங்களது நாட்டின் பெயரை type செய்தால் code number தானாக வரும் பின் phone number எழுதினால் மேற்கொண்டு அதுவே மற்றயை விடயங்களை promptபண்ணும்.. email and credit card details.. அத்துடன் credit card details கொடுத்து கட்டணம் அறவிடப்படும் பொழுது அந்தந்த நாடுகளை பொறுத்து codeம் 4 இலக்கம் அல்லது 8 இலக்கத்தில் வரும்

நான் இப்படித்தான் பார்த்து முடித்தேன்

E4-A6-D34-D-4-FE0-4-B31-9544-003-D8728-A

இதைவிட  apple storeல் அவர்களது bsvale app தரவிறக்கம் செய்து பார்ப்பதும் இலகு என நினைக்கிறேன்

4-D4-A281-D-8-C6-F-40-B0-AF02-E99-A98883

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நானும் முதலில் நாட்டை தெரிவு செய்து பின் phone number(without country code) போட்டும் சரிவரவில்லை. சிறிது நேரத்திற்கு பின் திரும்பவும் முயற்சி செய்த பொழுது அவர்களது home page வந்தது.. அதிலே  Methagu என தேடினால் வரும் அதை  படத்தை click  செய்யும் பொழுதுதான் உங்களது phone நம்பரை கேட்கும்.. உங்களது நாட்டின் பெயரை type செய்தால் code number தானாக வரும் பின் phone number எழுதினால் மேற்கொண்டு அதுவே மற்றயை விடயங்களை promptபண்ணும்.. email and credit card details.. 

நான் இப்படித்தான் பார்த்து முடித்தேன்

E4-A6-D34-D-4-FE0-4-B31-9544-003-D8728-A

இதைவிட  apple storeல் அவர்களது bsvale app தரவிறக்கம் செய்து பார்ப்பதும் இலகு என நினைக்கிறேன்

4-D4-A281-D-8-C6-F-40-B0-AF02-E99-A98883

ஆரம்பத்தில் எனக்கு ஐஓஎஸ் அப் ஸ்டோரில் இறக்கிய அப்பில் படம் ஓடவில்லை. ஆனால் இப்போ போய் தட்டினால் - ஓடுகிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஆரம்பத்தில் எனக்கு ஐஓஎஸ் அப் ஸ்டோரில் இறக்கிய அப்பில் படம் ஓடவில்லை. ஆனால் இப்போ போய் தட்டினால் - ஓடுகிறது.

நீங்கள் ஒருதரம் உங்களது email, phone கொடுத்தமையாலும் , கட்டணம் கட்டியபடியால் இருக்கலாம்.. 

நான் இன்னமும் App Store download செய்யவில்லை.. 

Phone screen சிறியது என்பதால் laptopல்தான் பார்க்கவிரும்பி, laptopல்தான் முதலில் download செய்தேன்

2 hours ago, appan said:

ஐயா மன்னிக்கவும் இவர்களுக்கு தெரியாமல் தானே அவர் தனியாக செயல்படுவது போல் வருகிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் காட்டுவதால் ( குழம்பி விட்டீர்கள் போல் உள்ளது) 

நீங்கள் கூறுவது போலதான், அவர் செயல்படுவது இவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பதாகத்தான் படத்தில் கூறப்படுகிறது.. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி கோஷான் & பிரபா ........!   👍

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

என்னைப்போல கிரெடிட் கார்ட் இல்லாத பிரஜைகளுக்கு வேறு வழி ஏதாவது இருக்கா? பேபால் எண்டு.....?

எனக்கு ஒரு சீடி அனுப்புங்கள்  

எனக்கு காட் கீட் என்று எதுவும் இல்ல  அநேகமா இலங்கையில் பார்க்க இயலாது என நினைக்கிறன் சாமீ

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.