Jump to content

நாம் எதனால் வாசிப்பதில்லை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நாம் எதனால் வாசிப்பதில்லை?

written by செல்வேந்திரன்June 24, 2021

வாசிப்பதன் பயன்களைப் பற்றி பள்ளியிலும் கல்லூரியிலும் தொடர்ச்சியாக அறிவுரைகள் வழங்கப்பட்டாலும் நம்மால் ஏன் வாசிக்க முடியவில்லை? விரிவான ஆய்வுகள் வாசிப்பைத் தடை செய்யும் சில காரணிகளைப் பட்டியலிடுகின்றன.

குடும்பச் சூழல் – உண்மையில் பல குடும்பங்களில் வாசிப்பதற்கான சூழலே இருப்பதில்லை. வறுமை அல்லது எந்நேரமும் பூசலிடுவது அல்லது குடும்பத் தொழில் காரணமாக வாசிப்பதற்கான உளநிலைகள் அமையாமல் இருப்பது. தமிழகத்தில் இருபது சதவீத மாணவர்கள் கல்லூரிக்கு வருவதே கடுமையான வறுமைக்கு மத்தியில்தான். சில மாணவர்கள் பகுதி நேரமாக வேலை பார்த்தால்தான் கல்வியைத் தொடர முடியும் நிலையில் உள்ளார்கள். அவர்களால், உள்ளபடியே வாசிக்க இயலாது.

பயிற்சியின்மை – நமது சூழலில் ஒரு மாணவன் அதிகபட்சம் எட்டாம் வகுப்பு வரைதான் எதையாவது வாசிக்க அனுமதிக்கப்படுகிறான். பிறகு கல்லூரியில் சேரும் வரை மதிப்பெண்களுக்கான நெருக்கடியும் டீன் ஏஜ் குழப்பங்களும் வாசிக்கவிடாமற் செய்துவிடுகின்றன. ஆகவே திடீரென்று ஒரு நூலைக் கருத்தூன்றி வாசிக்கும் பயிற்சி இல்லாமல் போய்விடுகிறது. 

ஆர்வமின்மை – பல காரணங்களால் ஆர்வமின்மை உண்டாகிவிடுகிறது. ஓர் எளிய உதாரணம் சொல்வதென்றால் இன்று தமிழகத்தில் பொறியியல் பயிலும் பெரும்பான்மை மாணவர்களுக்குத் தங்கள் எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மை மனச்சோர்வினை உருவாக்கியுள்ளது. ஆகவே எதைச் செய்து என்ன ஆகப்போகிறது எனும் மனநிலை நீடிக்கிறது.

https://s3.amazonaws.com/lowres.cartoonstock.com/children-school_library-lending_library-media_center-librarian-digital_books-dgrn560_low.jpg

வழிகாட்டல் இல்லை / ஊக்குவிப்பில்லை  மிகப்பெரிய பிரச்சினையாக இது கருதப்படுகிறது. இன்று வாசிக்க நினைக்கும் இளைஞனின் கையில் முக்கியத்துவம் இல்லாத சலிப்பூட்டும் ஒரு நூல் சிக்கிவிட்டதென்றால் மிக எளிதாக ஆர்வம் இழந்துவிடுவான். பிறகு புத்தகங்களின் திசைக்கே திரும்ப மாட்டான். ஆகவே, எதை வாசிப்பது, எப்படி வாசிப்பது என்ற வழிகாட்டல் மிக முக்கியம். போலவே வாசிப்பை ஊக்குவிக்கும் ரிவார்டுகளும் மிக அவசியம்.

கவனச்சிதறல்கள் – இணையம், ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம்- விளக்கம் தேவையில்லை.

கல்வி சார்ந்த அழுத்தங்கள் – இன்று கல்லூரிகளிலேயே ஏராளமான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிலபஸ்களை முடிக்கவே நேரம் போதாத நிலையில் சில கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அன்றாடம் மாணவர்கள் விரல் ஒடியும் வண்ணம் அசைன்மெண்ட் கொடுக்கும் பேராசிரியர்களும் உண்டு. 

இதையெல்லாம் தாண்டிய ஒரு பெரிய காரணம் உண்டு. அதன் பெயர் ‘சுவாரஸ்யமின்மை’.

நமக்கு ஏன் புத்தகங்கள் சுவாரஸ்யமாக இல்லை?

பல இடங்களில் மாணவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். “சார் நான் வாசிக்கணும்னுதான் ஆரம்பிப்பேன். ரெண்டு பக்கம் வாசிச்சதும் தூக்கம் வந்துடுதான் சார்.” இன்னும் சில பேர், “எதையாவது வாசிச்சாலே கடுப்பா இருக்குது சார்” என்றார்கள். உண்மைதான். பொதுவாக வாசிப்பு செயல்பாட்டாளர்கள் காண மறுக்கும் ஓர் உண்மை இது. புத்தக வாசிப்பு குறைந்து போனதற்கு சுவாரஸ்யமின்மைதான் முதன்மையான காரணம். ஆனால் அது புத்தகங்களின் பிழை இல்லை.

அம்மா அன்றாடம் காலையில் எழுந்து அவசர அவசரமாக நமக்குக் காலை உணவை சமைத்துத் தருகிறார். அதை நாம் சாப்பிட்டு முடிப்பதற்குள் மதியம் கல்லூரியில் சாப்பிடுவதற்கான உணவையும் தயார்செய்து லஞ்ச் பாக்ஸில் அடைத்துத் தருகிறார். பெரும்பாலும் அது லெமன், தக்காளி, தயிர் சாதங்களாகவோ, கிச்சடியாகவோ, சேவையாகவோ, பிரெட் ஆம்லெட்டாகவோ, அரிசி பருப்பு சாதமாகவோ, உப்புமாவாகவோ அவசரக் கோலத்தில் தயாரிக்கப்பட்ட எளிய உணவாகத்தான் இருக்கும். மதியம் பசித்த வயிறுடன் சோற்றுப் பொட்டலத்தைத் திறக்கையில் அவசரமாகச் சமைக்கப்பட்ட வழக்கமான மெனு முகத்திலடிக்கும். 

https://glasbergen.b-cdn.net/wp-content/gallery/digilife/toon918.gif

இத்துடன் ஒப்புநோக்க பீட்ஸா கவர்ச்சியானது, வண்ணமயமானது, சூடானது, சுவையானது. ஜூஸியான அதன் சீஸ்… ஹா எழுதும்போதே என் நாக்கில் ருசி ஊறுகிறது. இரசித்து ருசித்துப் புசிக்க போதுமான அத்தனைத் தகுதிகளும் பீட்ஸாவிற்கு இருக்கிறது. இல்லையென்றால் இத்தாலியின் ஏதோ ஒரு கிராமத்தில் உருவான பண்டம் உலகம் முழுக்க குடை விரிக்க முடியாது. தமிழ்நாட்டில் ஊருக்கு நூறு கடைகள் எனும் வீதத்தில் பீட்ஸா கடைகள் கிளை பரப்பியுள்ளன. 

ஒரேயொரு கேள்விதான். அம்மாவின் அவசர லஞ்சுடன் ஒப்புநோக்க பீட்ஸா சுவையானதுதான். ஆனால் தொடர்ச்சியாக ஒரு நாளின் மூன்று வேளையும் பீட்ஸாவையே உணவாகக் கொண்டால் என்ன ஆவோம்? செத்துப் போவோம் என நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது. நீங்கள் நிஜ வாழ்வில் அதைத்தான் செய்கிறீர்கள். உங்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸாப் ஸ்டேட்டஸ் டைம்லைன்களோடு ஒப்புநோக்க புத்தகங்கள் சற்று சுவாரஸ்யம் குறைவானவைதான். ஒரு நடிகனின் சிக்ஸ்பேக் புகைப்படம், புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகிறது, நடிகையின் மொட்டை மாடி ஃபோட்டோ ஷூட், விளையாட்டு வீரனின் புதிய சிகையலங்காரம், நகைச்சுவை மீம்ஸூகள், அழகிகளின் டிக்டாக்குகள், காமெடி வீடியோக்கள், கேலிகள், கிண்டல்கள், நக்கல்கள், உலகின் ஏதோ மூலையில் நிகழும் வேடிக்கை வினோதங்கள், நண்பர்களின் சுற்றுலா புகைப்படங்கள் என நொடிக்கு நொடி நுரை கொப்பளித்தபடி ‘என்னைக் கவனி, என்னைக் கவனி’ என ஒளியாகவும் ஒலியாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை ஊடகமாக்கி, தன்னைப் பண்டமாக்கி, தன்னைக் கோமாளியாக்கி, தன்னை அரசியல் நோக்கராக்கி இந்த உலகில் முன்வைத்துக்கொண்டே இருக்கிறான். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இவற்றை விடாது பார்த்துக்கொண்டே இருப்பது மூளைக்கு டோபோமைன் ஏற்றிக்கொள்வது போல. ஒரு புதிய தகவல் என்பது மூளையின் நுட்பமான பகுதியைச் சென்று தீண்டும் டோபோமைன். ஆகவேதான் சமூக ஊடகங்களில் புழங்குபவர்களுக்கு ஒரு ஆரம்பகட்ட உற்சாகம் கிடைக்கிறது. புத்துணர்ச்சி கிடைப்பதான உணர்வு ஏற்படுகிறது. தாங்கள் பிறறியாத பலவற்றையும் தெரிந்தவர்களான ஒரு மயக்கத்தையும் உண்டாக்குகிறது. அந்த மெல்லிய ஆணவம் நாள்பட நாள்பட கெட்டிப்பட்டுப் போகிறது. எதையும் ஊன்றிக் கவனிக்கவோ நுட்பமாகப் புரிந்துகொள்ளவோ இயலாத மூளைச்சோம்பல் கொண்ட நோயாளி ஆக்குகிறது. குடியைவிடவும் பெரிய பிரச்சினை இது. இப்போதே இணைய அடிமைகளுக்கான உள ஆலோசனை நிபுணர்கள் பெருகிவிட்டார்கள். எதிர்காலத்தில் நெட்டிஸன் மறுவாழ்வு மையங்கள் நிச்சயம் அமையக்கூடும். 

https://i.pinimg.com/474x/31/4a/c4/314ac4aec1717b8f06d2cd2d7dbeb489--social-media-humor-comic-strips.jpg

ஓரொரு நிமிடமும் பரபரப்பு கூட்டும் சமூக வலைதளங்களுக்குப் பழகிய ஒருவர் புத்தகங்களைப் பொறுமையாக வாசித்தல் இயலாத காரியம். அடுத்தத் தெருவில் ஆடல் பாடல் நிகழும்போது ஒருவன் வீட்டில் அமர்ந்து பாராயணம் செய்ய முடியுமா என்ன? புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும். அதற்குரிய பொறுமையையும் மரியாதையையும் நாம் புத்தகங்களுக்கு வழங்க வேண்டும். இரண்டு பக்கம் படிப்பதற்குள் போனை எடுத்து நோட்டிபிகேஷன்ஸ் பார்ப்போமானால், நமக்கு நோய் முற்றிவிட்டது என்று பொருள். நான்கைந்து பக்கங்கள் படிப்பதற்குள் எழுந்து சென்று போனை நிரடிப்பார்க்கும் ஆவலை என்னால் கட்டுப்படுத்தவே இயலவில்லை எனச் சொல்லும் நண்பர்கள் எனக்குண்டு. 

நூல்கள் அளிக்கும் சுவாரஸ்யம் என்பது ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கை வாழும் நிகர் அனுபவம். வாழ்நாள் முழுக்க உடன் வரக்கூடியது. வாழ்வில் உக்கிரமான தருணங்களில் மனதின் அடியாழத்திலிருந்து எழுந்து வருவது. நாம் வாழும் வாழ்க்கைக்கு மேலும் நுண்ணிய அர்த்தங்களைச் சேர்ப்பது. இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கும் பெருக்கிக்கொள்வதற்கும் வழிகாட்டுவது. டிவைஸ்கள் அளிக்கும் சிற்றின்பங்கள் ஒருபோதும் இத்தகைய பேரின்ப அனுபவங்களுக்கு இணையாகாது.

டிவைஸ்களுக்கு எதிரான மனோபாவமா?

மிக மிகப் பழைய மனோபாவம் கொண்ட ஒருவனின் சொற்களாக இந்தக் கட்டுரை புரிந்துகொள்ளப்படும் அபாயம் இருக்கிறது. எகிப்து பிரமிடு ஒன்றிலிருந்து எழும்பி வந்த மம்மிக்களுள் ஒன்று பல நூற்றாண்டுகள் பழைய தொழில்நுட்பமான புத்தகங்கள், நாளிதழ்கள் என்று ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறது எனத் தோன்றலாம். ஆனால் நான் ஒருபோதும் தொழில்நுட்பத்திற்கு எதிரானவன் அல்ல. தொழில்நுட்பத்தை எதிர்ப்பவன் முழுமூடன். தொழில்நுட்பம் ஆயிரம் பகாசுரக் கரங்களுடன் வரலாற்றை உருமாற்றிக்கொண்டிருக்கும் ஒன்று. அத்துடன் மோதி வெல்லும் வல்லமை இறைவனுக்கும் இல்லை. நான் மீண்டும் மீண்டும் இளைஞர்களிடம் வலியுறுத்திச் சொல்வது ஒன்றைத்தான். தொழில்நுட்பத்தை உங்கள் தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் நீங்கள் அதை உபயோகிக்கிறீர்கள் என்று பொருள். தொழில்நுட்பம் உங்களைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால் அதன் பொருள் என்ன? நீங்கள் வெறும் கச்சாப்பொருள். அவ்வளவே. உங்களை அரைத்து துப்பிவிட்டு அது அடுத்த ஆளை நோக்கிச் சென்றுவிடும். 

https://bloximages.newyork1.vip.townnews.com/standard.net/content/tncms/assets/v3/editorial/8/05/8052e69d-c3ec-57a1-8da2-5e65789ddc2b/5b6cc1d405616.image.jpg?resize=1200%2C894

டிவைஸ்களின் பயன்பாட்டைக் குறித்து எச்சரிக்கும் ஆய்வுகள் உலகெங்கும் வெளியானபடி இருக்கின்றன. அவையெல்லாம் உங்களை வந்தடைகிறதா என்பது அச்சமாக இருக்கிறது. ஒரு டைப்ரைட்டரில் டைப் அடிக்கும் வேகத்தில் காரணகாரியம் இன்றி போனில் டைப் செய்துகொண்டிருக்கும் கம்பல்சிவ் டெக்ஸ்டிங் கற்றல் குறைபாட்டினை உருவாக்குகிறது. இந்தப் பிரச்சினை ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம். காதில் கருஞ்சரடு மாட்டி கல்லூரிக்கு வருகையிலும் போகையிலும் ஹாஸ்டலிலும் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பவர்களின் காதில் பாதகம் விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. மிகக் குறுகிய காலத்தில் செவி கேட்கும் திறனை இழக்கிறது. அதை மீட்டெடுக்க வைத்தியத்தில் வழியே இல்லை. காது கேட்கும் கருவிதான் மாட்ட வேண்டும். போன் அடிக்காத போதே அடிப்பது போன்ற உணர்வு அடிக்கடி எழுவது, பேட்டரி டவுண் ஆகும்போது உருவாகும் மன உளைச்சல், இரவிரவாகப் போன் பயன்படுத்துவதால் உருவாகும் தூக்கமின்மை, தூக்கமின்மையின் விளைவால் உடல் பருமன், செரிமானப் பிரச்சினை, மன அழுத்தம், மாதவிடாய்க் கோளாறு, நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகள். கவனமின்மை, உடல் சோர்வு, நேரத்தை நிர்வகிக்க முடியாமல் போவது போன்ற பல உப விளைவுகள். இவற்றைப் பற்றிய கவனம் நமக்கு இருக்கிறதா?

மேற்கண்டவற்றை விடவும் அபாயகரமான இரு உளவியல் சிக்கல்கள் அதிகரித்து வருவதைப் பார்க்கிறேன். ஒன்று ‘ஷேரிங் பெருமாள்களின்’ ஆளுமைக் குறைபாடு. எப்போதும் எதையாவது நண்பர்களுடனும் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துகொண்டேயிருப்பது. இந்த உளநிலையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனக்கென ஒரு ஆளுமை இல்லாதவர்கள், இல்லாத ஒரு போலி பிம்பத்தை நண்பர்கள் மத்தியில் கட்டமைக்கவே ஷேரிங் பெருமாள்களாக மாறுகிறார்கள் என்கிறார்கள் உள நிபுணர்கள். நான் எப்படிப்பட்டவன் தெரியுமா? எப்படிப்பட்ட விஷயங்கள் என்னை வந்து சேர்கின்றன தெரியுமா? உங்களுக்கு இதைத் தெரியப்படுத்தி வழிநடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என ரியல் செல்ஃபுக்குப் பதிலாக ஒரு சோஷியல் செல்ஃபை உருவாக்கும் முயற்சிதான் இது. இதிலிருந்து வெளியேறுவதற்கு ஒரு வழி இருக்கிறது. நீங்களே சிந்தித்து உருவாக்காத ஒன்றை ஒருபோதும் பரப்பாதிருப்பது. கருத்தோ, பாடலோ, டிக்டாக் வீடியோவோ, மீம்ஸோ – நீங்கள் உருவாக்கியிருந்தால் நீங்கள் ஒரு படைப்பாளி. அதை உலகத்தோடு பெருமையோடு பகிர்ந்துகொள்ளுங்கள். எவனோ உருவாக்கிய ஒன்றை அது எவ்வளவு முக்கியமானதெனினும் பரப்புவதில்லை என்பதே சரியான நிலைப்பாடு. 

இன்னொரு சிக்கல். சமூக வலைதளத்தில் நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டிருப்பது சக மனிதர்களின் வாழ்க்கைத் தருணங்களை. ஒருவர் வீடு வாங்கியிருக்கிறார், இன்னொருவர் புதிய காருடன் படம் போடுகிறார், போட்டியில் வென்றிருக்கிறார், விருது பெற்றிருக்கிறார், குடும்பத்தோடு வெளிநாட்டுக் கடற்கரையில் எடுத்த புகைப்படம், வெற்றி பெற்ற திரைப்படத்தின் சக்ஸஸ் பார்ட்டி, பணி உயர்வு, குழந்தைகள் போட்டிகளில் வென்ற செய்திகள், பண்டிகைப் பரிசுகள், குடும்பக் கொண்டாட்டங்கள், காதலியுடன் பொன்னான தருணம், அழகிய தோழியர் புடைசூழ செல்ஃபி, திருமண போட்டோ ஷூட்டுகள் எனப் பெரும்பாலும் களியாட்டுகள். நம்முடைய வாழ்வில் இத்தனை கொண்டாட்டங்கள் இல்லை. நாம் விஜயராமபுரத்திலிருந்து கிளம்பி சாத்தான்குளம் வந்து சைக்கிளை பஸ் ஸ்டாண்டில் போட்டுவிட்டு நாசரேத் பஸ் ஏறி நிறுத்தத்தில் இறங்கி காலேஜ் வரை நடந்து வகுப்பு முடிந்ததும் பழையபடி அதே வழியில் திரும்பும் அன்றாடம் உடையவர்கள். பெரிய வர்ண வேறுபாடுகளற்ற தினசரி வாழ்க்கை நம்முடையது. அடுத்தவனின் கொண்டாட்டத்தையும் வெற்றியையும் மட்டுமே சதாசர்வகாலமும் பார்த்துக்கொண்டிருப்பது உருவாக்கும் மன அழுத்தத்தைப் பற்றி நாம் யோசிப்பதே இல்லை. சாதாரணர்களின் வாழ்வில் திருமணம், வீடு, கார், பதவி உயர்வு, விருது என்பன போன்ற அசாதாரண சம்பவங்கள் நான்கைந்து தடவைதான் சாத்தியம். நாம் வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா எனும் எண்ணம் நம்மைப் போன்ற சாதாரணர்களுக்குள் எழுவது இயற்கை. நமக்கு நாமே தாழ்வுணர்ச்சியை ஏன் உருவாக்கிக்கொள்ள வேண்டும்?

https://www.exoplatform.com/blog/wp-content/uploads/2018/06/800-2.png

இந்த நூற்றாண்டின் இந்தத் தருணத்தில் இருவகை மனிதர்கள்தான் உள்ளார்கள். ஒளிரும் திரைக்கு உள்ளே இருப்பவர்கள். திரைக்கு வெளியே இருப்பவர்கள். உள்ளே இருப்பவர்கள் வென்றவர்கள். சாதனையாளர்கள். எதையாவது ஒன்றைச் செய்து காண்பித்தவர்கள். ஆகவே வெளியே நிற்கும் நாம் அவர்களை வாய்பிளந்து பார்த்துக்கொண்டே இருக்கிறோம். நீ உள்ளே நிற்கப் போகிறாயா, வெளியே நிற்கப் போகிறாயா என்பதைக் கேட்டுக்கொள். உள்ளே நிற்க விரும்பினால், உலகமே உன்னைக் கவனிக்க விரும்பினால் நீ ஒருபோதும் வெளியே நிற்காதே. உன் ஆர்வம் செல்லும் திசையை நோக்கி விசையோடு செல். இன்று தன் துறையில் முழு அர்ப்பணிப்போடு செயலாற்றி தன்னை இழப்பவர்கள் மிகவும் குறைவு. கபீரின் கவிதை ஒன்று.

செய்யும் ஒன்றை முழுதாய்ச் செய்.
எல்லாம் செய்தவனாவாய்.
இருக்கும் எல்லாவற்றையும்
செய்ய நினைத்தால்
அந்த ஒன்றையும் இழந்திடுவாய்
பூக்களும் பழங்களும் தேவையெனில்

நீ நீருற்ற வேண்டியது வேருக்கே1.

நான் வீடியோ பார்க்கிறேன் போதாதா?

“சார் என்னை என்ன வேணும்னாலும் சொல்லுங்க, எனக்கு வாசிக்க மட்டும் வராது சார்” என்பார்கள் சிலர். ஏன், கண் பார்வை சரியில்லையா என்பேன் நான். “இல்ல சார், எனக்கு என்னமோ புக்ஸ் எனக்கான மீடியம் இல்லைன்னு தோணுது சார்” என்பார்கள். ஏன், எழுத்தறிவு இல்லையா என்பேன் நான். “சார், நான் வாசிக்கறதுதான் இல்லையே தவிர நிறைய வீடியோஸ் பார்ப்பேன் சார். ஆடியோ புக்ஸ்லாம் கேட்பேன் சார்” என்பவர்களிடம் சரி, நீங்கள் சமீபத்தில் கேட்ட புதிய சிந்தனையை வெளிப்படுத்தும் உரையைக் குறிப்பிடுங்கள் என்பேன். நீங்கள் கேட்ட ஆடியோ புத்தகம் ஒன்றின் மையக்கருத்தை ஒரு பத்து நிமிடம் பேசுங்கள் என்பேன். பெரும்பாலும் ஓடிவிடுவார்கள்.

https://www.gannett-cdn.com/presto/2020/04/25/PEVC/f5ddcf0a-fb11-4029-9592-b4ff0d40eeb0-94144093_2888251057918472_104666952844181504_o.jpg

வீடியோக்களும் ஆடியோக்களும் வாசிக்க இயலாத முதியவர்கள், நோயாளிகள், பார்வைத் திறனற்றவர்கள், பாமரர்கள், நெருக்கடியான பணிகளில் இருப்பவர்களுக்காக உருவானவை. அறிவுத் தேட்டம் உள்ள ஒருவன், தனது அறிதலின் ஒரு வழியாக, தான் மட்டுமே இவற்றைப் பயன்படுத்த வேண்டுமே தவிர இதைப் பெருவழிப்பாதையென கருதிவிடக்கூடாது. வீடியோ மட்டுமே பார்த்து, ஃபேஸ்புக்கில் மட்டுமே வாசித்து அறிஞர் ஆன ஒருவரை நானும் என் நண்பர்களும் கடந்த பத்தாண்டுகளாகத் தேடிக்கொண்டிருக்கிறோம். இன்னும் சிக்கவில்லை. வீடியோக்களுக்கு நினைவில் வாழும் வீரியம் இருப்பதில்லை. சில திறன்களை மேம்படுத்திக்கொள்ள வீடியோக்கள் உதவலாம். 

ஒளிரும் திரைகளின் இன்னொரு பிரச்சினை- அவை கற்பனையை கட்டுப்படுத்துகின்றன. ஒரு உதாரணம் சொல்கிறேன். ‘பொன்னியின் செல்வன்’ வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் மனதில் உருவாவது ஒவ்வொரு வந்தியத்தேவன். திரையில் வந்தியத்தேவனாக நடிகர் விக்ரம் நடிக்கிறார் என்று வையுங்கள். அதைப் பார்க்கும் ஒவ்வொருவருக்குமே அவர் ஒரே வந்தியத்தேவன்தான். கற்பனைச் சிறகு எல்லையில்லாதது. ஒரு நாவலை வாசிக்கையில் உங்கள் அகத்தில் விரியும் சித்திரம் மிக மிக விரிவானது. நீங்கள் பார்க்கும் நிலம், மனிதர்கள், தாவரங்கள், இயற்கைக் காட்சிகள், உணர்ச்சிகள் அத்தனையும் புதியது, அந்தரங்கமானது. திரைகள் தொழில்நுட்பத்தால் செறிவாக்கின ஒற்றை அனுபவத்தை மட்டும்தான் தர இயலும்.

*

குறிப்புகள்:

1நூல்: புன்னகைக்கும் பிரபஞ்சம், மொழிபெயர்ப்பு- செங்கதிர்.

“வாசிப்பது எப்படி?” நூலிலிருந்து ஒரு பகுதி.

 

 

https://tamizhini.in/2021/06/24/நாம்-எதனால்-வாசிப்பதில்ல/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு  சிறு கதைகள்  சிறு நாவல்கள் ஆராய்ச்சி  கட்டுரைகள் கடந்து  வாசிக்க வராது

பொறுமையில்லை

ஆனால்  எனது  வீட்டில் 2  பேர்  புத்தக பூச்சிகள்

அதிலும்  கடைசி  மகள் அது  தான் வாழ்க்கையே...

இதுவும்  பிறந்ததில் இருந்து ஒருவித தயார்  படுத்தல்  தான்

அதனால் தான் வைத்தியதுறையில்  படிக்க  உதவுகிறது?

அண்மையில் வீட்டில்  சில வேலைகளை  செய்தபோது

பெரிய  மகன்  படித்த  புத்தகங்களை பார்த்து  ஏங்கிப்போனேன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

இதுவும்  பிறந்ததில் இருந்து ஒருவித தயார்  படுத்தல்  தான்

புலம்பெயர் நாடுகளில் சிறுவயதில் இருந்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கின்றார்கள். பொதுப்போக்குவரத்துப் பயணங்களில் வாசிக்காதவர்கள் மிகவும் குறைவு.

ஆனால் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பாடசாலைகளில் புத்தகம் படிப்பதை ஊக்குவிக்கும் நிலை இல்லை. அதனால் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் படிப்பவர்கள் குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும் பழக்கமாவது கணனி , ஸ்மார்ட்போன் வரையாவது இன்னும் எஞ்சியிருக்கிறது,

எழுதும் பழக்கம்தான் ஏறக்குறைய சுத்தமா இல்லாமலே போய்விட்டது. மாணவர்களை தவிர பலரிடம் அது விடைபெற்றுபோய் ரொம்ப காலம்.

பலர் கடைசியாக கடிதம் எழுதி பல வருசங்கள் இருக்கும், கையெழுத்துக்காவது ஓரளவு பயன்பட்ட எழுதும் பழக்கம் இப்போ அதுகூட அடிக்கடி பயன்படுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

புலம்பெயர் நாடுகளில் சிறுவயதில் இருந்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கின்றார்கள். பொதுப்போக்குவரத்துப் பயணங்களில் வாசிக்காதவர்கள் மிகவும் குறைவு.

ஆனால் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பாடசாலைகளில் புத்தகம் படிப்பதை ஊக்குவிக்கும் நிலை இல்லை. அதனால் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் படிப்பவர்கள் குறைவு.

யாழ்பாணத்தில் இருக்கும் அளவுக்கு ஊருக்கு ஊர் சிறிய வாசிகசாலைகள் உள்ள ஊரை, நாட்டை நான் இன்னமும் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, valavan said:

வாசிக்கும் பழக்கமாவது கணனி , ஸ்மார்ட்போன் வரையாவது இன்னும் எஞ்சியிருக்கிறது,

எழுதும் பழக்கம்தான் ஏறக்குறைய சுத்தமா இல்லாமலே போய்விட்டது. மாணவர்களை தவிர பலரிடம் அது விடைபெற்றுபோய் ரொம்ப காலம்.

பலர் கடைசியாக கடிதம் எழுதி பல வருசங்கள் இருக்கும், கையெழுத்துக்காவது ஓரளவு பயன்பட்ட எழுதும் பழக்கம் இப்போ அதுகூட அடிக்கடி பயன்படுவதில்லை.

கடிதம் எழுதும் கலை அழிகிறது என்பதை ஏற்கும் அதேவேளை எழுதுவதே மொத்தமாக அழிகிறதா என்றால் இல்லை என்றே சொல்வேன்.

நான், @Maruthankerny எல்லாம் பந்தி பந்தியா இப்போ யாழில் எழுதுவதை போல் 2000 த்துக்கு முன் சாத்தியமில்லைதானே?

 வாசிப்பது புத்தகத்தில் இருந்து இலந்திரனியல் சாதனதுக்கு தாவியது போல எழுத்தும் தாவிவிட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கடிதம் எழுதும் கலை அழிகிறது என்பதை ஏற்கும் அதேவேளை எழுதுவதே மொத்தமாக அழிகிறதா என்றால் இல்லை என்றே சொல்வேன்.

நான், @Maruthankerny எல்லாம் பந்தி பந்தியா இப்போ யாழில் எழுதுவதை போல் 2000 த்துக்கு முன் சாத்தியமில்லைதானே?

 வாசிப்பது புத்தகத்தில் இருந்து இலந்திரனியல் சாதனதுக்கு தாவியது போல எழுத்தும் தாவிவிட்டது.

 

யாழ் களம் இல்லை என்றால் எனது பாதையும் மாறிப்போயிருக்கலாம் 

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

யாழ்பாணத்தில் இருக்கும் அளவுக்கு ஊருக்கு ஊர் சிறிய வாசிகசாலைகள் உள்ள ஊரை, நாட்டை நான் இன்னமும் காணவில்லை.

அந்த வாசிகசலைகளில் பலவற்றில்  ஒரு நூலை ஆழமாக வாசிக்க கூடிய அமைதியான சூழ்நிலை உண்டா?  பொழுது போக்க அரட்டையடிக்க பலர் கூடும் இடமாக உள்ளதா?

நான் அறிய யாழ் பொது சன நூலகத்தில் மட்டும் தான் அவ்வாறான அமைதியான சூழ்நிலை இருந்தது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஆனால் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பாடசாலைகளில் புத்தகம் படிப்பதை ஊக்குவிக்கும் நிலை இல்லை. அதனால் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் படிப்பவர்கள் குறைவு.

புத்தகங்கள் வாசிப்பதற்கு ஆர்வம் இருக்க வேண்டும்
ஆர்வம் இருந்தால் சிறு சிறு இடைவெளிகளில் கூட வாசிக்கலாம்

இன்றைய காலத்தில் புத்தகங்கள்  வாசிக்கும்  ஆர்வம் குறைவதற்கான முதற்காரணி பாடசாலைக் கல்விமுறையே ஆகும் .
வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்
என்ற வாசகம் எங்கள் இளம்பிராயத்தில் மனதில் நிலைத்து நின்றது

இன்றைய காலத்தில்  இறுதி பரீடசையை கடந்துவிட்டால் காணும் என்ற நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்
வாசிப்பதற்கான நேரம் அவர்களுக்கு கிடைப்பது அரிதாகவே இருக்கின்றது   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அந்த வாசிகசலைகளில் பலவற்றில்  ஒரு நூலை ஆழமாக வாசிக்க கூடிய அமைதியான சூழ்நிலை உண்டா?  பொழுது போக்க அரட்டையடிக்க பலர் கூடும் இடமாக உள்ளதா?

நான் அறிய யாழ் பொது சன நூலகத்தில் மட்டும் தான் அவ்வாறான அமைதியான சூழ்நிலை இருந்தது.  

அரட்டை அடிப்பதற்கான இடமாக இருந்தாலும் தினசரிகள், விகடன் போன்ற சஞ்சிகைகள் கிடைக்கும் இடமாகவும் இருந்தது. தவிரவும் ஒவ்வொரு பிரதேச சபையிலும் ஒரு நூலகம் இருந்தது. அங்கே மூச்சு விட முடியாது. 

எனது காலத்தில் யாழ் நூலகத்துக்குள் போகமுடியாது. ஒன்றில் போரபாயம் அல்லது மிதிவெடி அபாயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

ஒரு நாவலை வாசிக்கையில் உங்கள் அகத்தில் விரியும் சித்திரம் மிக மிக விரிவானது. நீங்கள் பார்க்கும் நிலம், மனிதர்கள், தாவரங்கள், இயற்கைக் காட்சிகள், உணர்ச்சிகள் அத்தனையும் புதியது, அந்தரங்கமானது. திரைகள் தொழில்நுட்பத்தால் செறிவாக்கின ஒற்றை அனுபவத்தை மட்டும்தான் தர இயலும்.

உண்மைதான், நீங்கள் ஒரு நாவலை வாசிக்கும் பொழுது அதில் வரும் மனிதர்களாக மாறிவிடுவீர்கள், நீங்களும் அவர்களைப்போலவே சிரிப்பீர்கள், கண்ணீர்விடுவீர்கள், காடு மலை எல்லாம் போவீர்கள், எந்த காலகட்டத்தில் அந்த புத்தகம் எழுதப்பட்டதிற்கு அமைய அந்த இடங்களை மனக்கண் கொண்டு வர நாவல்களுக்கு மட்டுமே முடியும்.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவிரவும் தனி மனிதர்கள் தத்தம் வீடுகளில் நூலகம் வைக்கும் பழக்கம் இருந்தது. எனது சித்தப்பா முறையானவர் இப்படி வைத்திருந்தார். அதே போல் எங்கள் ஊரில் ஒரு அக்காவும் அவர்களது மாட்டு தொழுவத்தை (மாடு வித்தபின்) பூசி மெழுகி பல அரிய சிறுவர் புத்தகங்கள்  வைத்து ஒரு வாசிகசாலை உருவாக்கினார்.

டிவி, சீரியல், படம், பாட்டு, மின்சாரம் ஈறாக இல்லாத காலத்தில் வாசிப்பு மட்டுமே ஒரே பொழுது போக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

அதனால் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் படிப்பவர்கள் குறைவு.

அதனால்தான் இவ்வளவு குண்டு சட்டி நண்டு பிடி இழுவையும்  என்று நினைக்கிறேன் .

4 hours ago, goshan_che said:

யாழ்பாணத்தில் இருக்கும் அளவுக்கு ஊருக்கு ஊர் சிறிய வாசிகசாலைகள் உள்ள ஊரை, நாட்டை நான் இன்னமும் காணவில்லை.

இன்னும் எங்களூரில் கோசான் உங்களை சொல்லவில்லை வாசிகசாலைக்கும் நூலகத்துக்கும்  வித்தியாசம் தெரியாத அறிவாளிகள் உள்ளனர் .

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

அதனால்தான் இவ்வளவு குண்டு சட்டி நண்டு பிடி இழுவையும்  என்று நினைக்கிறேன் .

இன்னும் எங்களூரில் கோசான் உங்களை சொல்லவில்லை வாசிகசாலைக்கும் நூலகத்துக்கும்  வித்தியாசம் தெரியாத அறிவாளிகள் உள்ளனர் .

🤣

உங்கட குரோய்டன் லைப்ரிரரி தரமான லைப்ரரிதான். முன்பு ஒரு வேலை செய்தனான் - இடையில் 3 மணி நேர வெயிட்டிங். லைபிரரிதான் தஞ்சம். நிறைய தமிழ் புத்தகங்களும் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

எழுதும் பழக்கம்தான் ஏறக்குறைய சுத்தமா இல்லாமலே போய்விட்டது. மாணவர்களை தவிர பலரிடம் அது விடைபெற்றுபோய் ரொம்ப காலம். 

இந்த எழுதும் பழக்கம், மாணவர்களிடையும் குறைந்துவிட்டது.. அனேகமான assignments, onlineலேயே கொடுக்கப்படுவதால், grammar check, spelling எல்லாமே autocorrect இருப்பதால் பரீட்சையில் தடுமாறுவார்கள் என்ற நிலையும் உள்ளது.. 

எங்களுக்கு இந்த வசதிகள் இல்லாதமையால் வாசித்து, எழுத வேண்டிய கட்டாயம் இருந்தமையால் பெரிய பெரிய பந்திகளாக இன்றுவரை எழுதக்கூடியதாக உள்ளது.. ஆனால் இன்றைய மாணவர்களிடம் அது இல்லை.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

உங்கட குரோய்டன் லைப்ரிரரி தரமான லைப்ரரிதான். முன்பு ஒரு வேலை செய்தனான் - இடையில் 3 மணி நேர வெயிட்டிங். லைபிரரிதான் தஞ்சம். நிறைய தமிழ் புத்தகங்களும் இருக்கு.

நான் அங்கு போவதில்லை நாம் போகும்  வழமையான இடம்  Boston Spa British Library நூலகத்தில் தான் .🤣

பகிடிக்கு அடிச்சு விடுவம்  எல்லாம் உண்மையாக்க கூடாது பாஸ் இந்த தொழில் நுட்ப்பம் விரும்பிய நூல்களை கிண்டிலில்  தரும்போது அங்கு ஏன் போவன் .அப்படியும் புதியவை அறியனும்  என்றால்https://www.magzter.com/ மாதம் 10 பவுன் தான் உலகில் உள்ள அனைத்து வாரமாத வருஷ சஞ்சிகைகள் திகட்ட திகட்ட தேன்  அடைபோல் இருக்குது .

Link to comment
Share on other sites

8 hours ago, tulpen said:

அந்த வாசிகசலைகளில் பலவற்றில்  ஒரு நூலை ஆழமாக வாசிக்க கூடிய அமைதியான சூழ்நிலை உண்டா?  பொழுது போக்க அரட்டையடிக்க பலர் கூடும் இடமாக உள்ளதா?

நான் அறிய யாழ் பொது சன நூலகத்தில் மட்டும் தான் அவ்வாறான அமைதியான சூழ்நிலை இருந்தது.  

நீங்கள் திருநெல்வேலி இந்து இளைஞர் சங்க வாசிகசாலைக்கு வந்துள்ளீர்களா அதனை நிர்வகித்த பெரியவர்கள் அங்கு குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு வரும் வாசகர்கள் அமைதியைப் பேணும்படியான நிலைக்கு அதனை வைத்திருந்தார்கள். அரசு இருந்தாலும் நல்ல ஊர்ப்பெரியவர்களின் ஆட்சியைக் கொண்ட கிராமங்கள் நன்றாகவே இருந்தன.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

நான் அங்கு போவதில்லை நாம் போகும்  வழமையான இடம்  Boston Spa British Library நூலகத்தில் தான் .🤣

பகிடிக்கு அடிச்சு விடுவம்  எல்லாம் உண்மையாக்க கூடாது பாஸ் இந்த தொழில் நுட்ப்பம் விரும்பிய நூல்களை கிண்டிலில்  தரும்போது அங்கு ஏன் போவன் .அப்படியும் புதியவை அறியனும்  என்றால்https://www.magzter.com/ மாதம் 10 பவுன் தான் உலகில் உள்ள அனைத்து வாரமாத வருஷ சஞ்சிகைகள் திகட்ட திகட்ட தேன்  அடைபோல் இருக்குது .

எனக்கு kindle தரவிறக்கி வாசிப்பது இன்னமும் பிடிக்கவில்லை.. ஒரேயொரு புத்தகத்தை மட்டும்தான் kindle வாசித்தேன்.. அது மூன்று புத்தகங்களில் ஒரு புத்தகத்துடன் மேலே வாசிக்கவில்லை.. அவ்வளவுதான் எனக்கும் kindleற்குமான பழக்கம்

Link to comment
Share on other sites

9 hours ago, விசுகு said:

யாழ் களம் இல்லை என்றால் எனது பாதையும் மாறிப்போயிருக்கலாம் 

உண்மை விசுகு அவர்களே! மன நோய்க்கும் ஒரு அருமருந்தாகவே யாழ்களம் வந்தது. அன்று கருத்துக்கள உறவுகள் நெல்லுக்கு இறைத்தார்கள், நெற்பயிர் செழிப்பாக வளர்ந்தது. இன்று நெல்லுக்கு இறைத்த நீரில் புல்லும் புகுந்து செழிப்பாக வளர்ந்துவிட்டது போன்ற ஒரு தோற்றம்..🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

 

நாம் எதனால் வாசிப்பதில்லை?

 

இஙகை கருபனுக்கு விழுகிற சாத்துபடியை பாத்தாப் பிறகு வாசிப்பதை நிறுத்தி விட்டேன்😂

இங்கை கிருபனுக்கு விழுகிற சாத்துப்படியை பாத்தாப் பிறகு வாசிப்பதை நிறுத்தி விட்டேன்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கு kindle தரவிறக்கி வாசிப்பது இன்னமும் பிடிக்கவில்லை.. ஒரேயொரு புத்தகத்தை மட்டும்தான் kindle வாசித்தேன்.. அது மூன்று புத்தகங்களில் ஒரு புத்தகத்துடன் மேலே வாசிக்கவில்லை.. அவ்வளவுதான் எனக்கும் kindleற்குமான பழக்கம்

ஆரம்பத்தில் கையில் ஒரு தட்டை வைத்து படிப்பது ஒரு விதமான அந்நியத்தன்மையை கொடுத்தாலும் இரண்டு மூன்று புத்தகங்களை படித்து முடிந்தபின் கார் ஓடப்பழகிய பின் வரும் மனநிலையை கொண்டுவந்துவிடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

யாழ்பாணத்தில் இருக்கும் அளவுக்கு ஊருக்கு ஊர் சிறிய வாசிகசாலைகள் உள்ள ஊரை, நாட்டை நான் இன்னமும் காணவில்லை.

வாசிகசாலைகளில் பத்திரிகை படிப்பதும், சந்தர்ப்பம் கிடைத்தால் காட்ஸ் விளையாடுவதும் நடக்கும். ஆனால் வணிக சஞ்சிகைகளையும், வணிக நாவல்களையும் தாண்டிய வாசிப்புப் பழக்கம் ஊக்குவிக்கப்படுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

உங்கட குரோய்டன் லைப்ரிரரி தரமான லைப்ரரிதான். முன்பு ஒரு வேலை செய்தனான் - இடையில் 3 மணி நேர வெயிட்டிங். லைபிரரிதான் தஞ்சம். நிறைய தமிழ் புத்தகங்களும் இருக்கு.

ஆம். முன்னர் நல்ல புத்தகங்கள் இருந்தன. இப்போது தமிழ்ப்பிரிவு இருக்கின்றதா தெரியவில்லை. 

Tooting,  Croydon, Merton லைப்ரரிகளில் எல்லாம் உறுப்பினராக இருந்திருக்கின்றேன்! எஸ்.பொ. , சுந்தரராமசாமி, ஜானகிராமன் புத்தகங்கள் இருந்தன. 

Merton Civic Centre library மிகவும் பிடித்த இடம். Summer இல் அதன் முகப்புப் பக்கத்தில் இருந்து பிஸியான வீதியை விடுப்புப் பார்த்தபடி revision செய்த நாட்கள் அதிகம்🙂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

இஙகை கருபனுக்கு விழுகிற சாத்துபடியை பாத்தாப் பிறகு வாசிப்பதை நிறுத்தி விட்டேன்😂

இங்கை கிருபனுக்கு விழுகிற சாத்துப்படியை பாத்தாப் பிறகு வாசிப்பதை நிறுத்தி விட்டேன்.😂

ஓம். அடிக்கடி விழும். 😂 ஆனால் சாத்துபவர்கள் எல்லாம் தங்கள் குழந்தை, குட்டிகள் எல்லாம் படித்து பெரும் சாதனை படைக்கின்றார்கள், படைக்கப்போகின்றார்கள் என்று பெருமைப்படுபவர்கள். அதனால் கூழ்ப்பானைப் பல்லிகளை கண்டுகொள்வதில்லை ஏனென்றால்  இங்குள்ள சாத்துப்படி சாத்துபவர்கள் மிகமிகச் சாதாரணமான ரசனை கொண்டவர்கள்.😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கு kindle தரவிறக்கி வாசிப்பது இன்னமும் பிடிக்கவில்லை.. ஒரேயொரு புத்தகத்தை மட்டும்தான் kindle வாசித்தேன்.. அது மூன்று புத்தகங்களில் ஒரு புத்தகத்துடன் மேலே வாசிக்கவில்லை.. அவ்வளவுதான் எனக்கும் kindleற்குமான பழக்கம்

நான் kindle, iBook இல்தான் அதிகம் படிப்பது. 1000 பக்கங்கள் உள்ள புத்தகங்களை எல்லாம் கையில் தூக்கிவைத்து படிக்கமுடிவதில்லை! அதனாலேயே வாங்கிய சில புத்தங்களை kindle இலும் டவுன்லோட் செய்து படிப்பதுண்டு.

மேலும், சில வரிகளை கொப்பி பண்ணி பின்னர் பாவிக்கவும் வசதி உண்டு. இடைக்கிடை யாழில் பொன்மொழிகளாக தூவவும் உதவும்😜

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.