Jump to content

மேதகு' திரைப்படம்: ''ஜகமே தந்திரம்', 'தி ஃபேமிலிமேன்' கதைகளுக்கான பதிலடி!'- இயக்குநர் கிட்டு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு' திரைப்படம்: ''ஜகமே தந்திரம்', 'தி ஃபேமிலிமேன்' கதைகளுக்கான பதிலடி!'- இயக்குநர் கிட்டு

  • ச. ஆனந்தப்பிரியா
  • பிபிசி தமிழுக்காக
43 நிமிடங்களுக்கு முன்னர்
மேதகு

பட மூலாதாரம்,TWITTER @BS_VALUE

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த வாழ்க்கை வரலாறு, ஈழத்தமிழர்கள் போராட்டம் குறித்த பின்னணியை சித்தரிப்பதாக பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது 'மேதகு' திரைப்படம்.

பிரபாகரன் பிறப்பு, 1950-களின் பிற்பகுதியில் நடந்த இனக்கலவரம், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 1980 வரை நடந்த அரசியல் மாற்றங்கள், கல்வி போராட்டம், பிரபாகரனின் முதல் அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவானது வரை தற்போது வெளியாகியிருக்கும் முதல் பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான 'தி ஃபேமிலிமேன்' இணையத்தொடர், 'ஜகமே தந்திரம்' உள்ளிட்டவை ஈழத்தமிழர்கள் கதையை சித்தரித்ததில் பிழைகள் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்ப, தற்போது வெளியாகியிருக்கும் 'மேதகு' பரவலான பாராட்டுகளை பெற்று வருகிறது. படத்தின் இயக்குநர் கிட்டுவை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம். அவரிடம் கலந்துரையாடியதில் இருந்து,

நீண்ட நாட்கள் காத்திருப்புக்கு பிறகு 'மேதகு' படம் வெளியாகியிருக்கு. இந்த உணர்வு எப்படி இருக்கு?

படத்தை எப்படியும் வெளியிடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால், அது திரையரங்குகளில் இருக்காது, ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என்பது தெரிந்திருந்தது. எதற்கும் தயாராகவே இருந்தோம். அந்த வகையில், தற்போது பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் 'மேதகு' வெளியாகியிருப்பதில் மகிழ்ச்சி.

பிரபாகரன், ஈழத்தமிழர் போராட்டம் பதிவு எனும் போது என்ன மாதிரியான எதிர்ப்புகள் வந்தது?

படம் பொருத்தவரையில் இரண்டு விஷயங்களில் எங்களுக்கு பிரச்சனைகள் இருந்தது. ஒரு விஷயம் படத்துக்கு தேவையான பட்ஜெட். மற்றொன்று வெளியில் இருந்து வந்த எதிர்ப்புகள். 'என்ன கதை செய்து கொண்டிருக்கிறீர்கள்? எங்கே இருக்கிறீர்கள்? என்பது போன்ற விசாரிப்புகள் வரும். இதனாலேயே உடனுக்குடன் நாங்கள் படப்பிடிப்பு தளத்தையும் மாற்ற வேண்டிய சூழலும் இருந்தது. ஆனால், படக்குழு நாங்கள் இளைஞர்கள் என்பதால், இந்த பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடிந்தது.

மேதகு

பட மூலாதாரம்,KITTU

அதேபோல, ஈழத்தமிழர்கள் சிலர் படம் தொடங்கும்போது தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் இதுதான், 'இதுவரை வந்த பெரும்பாலான ஈழத்தமிழர்கள் கதையில் எங்களை சரியாக சித்தரிக்கவில்லை.

அவர்களுடைய பேச்சு வழக்கு, வலி இதுபோன்ற விஷயங்கள் எதுவும் உண்மையாக சித்தரிக்கமால், சினிமாவுக்காக சில விஷயங்கள் திரித்து காண்பிக்கப்படுகிறது. நாங்கள் நேசிக்கக்கூடிய தலைவரை இதுவரையிலும் சரியாக யாரும் காண்பிக்காதபோது, இளைஞர்கள் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? உங்களை நம்பலாமா?' என்பதுதான் அவர்களது வாதமாக இருந்தது.

ஆனால், டீசர், ட்ரைய்லர் வெளியானதும் அதில் இடம்பெற்ற காட்சிகள் பார்த்ததும் அவங்களுக்கு சரியாகதான் காட்டியிருப்போம் என்ற நம்பிக்கை வந்தது. படம் இப்போது வெளியானதும் மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் மாறியிருக்கிறது என்றே நினைக்கிறேன்".

பிரபாகரன் அவருடைய பயோபிக் எனும் எண்ணம் எப்படி வந்தது?

புத்தகங்கள் அதிகமாக படிக்கக்கூடிய நபர் நான். அதில் அதிகமாக தலைவர்கள் குறித்தான புத்தகங்கள் எனக்கு பிடிக்கும். அதில் நான் படித்த தலைவர்களில் அப்பழுக்கற்று, சமரசமற்ற ஒரு மாவீரராக என்னுடைய தேசிய தலைவரைதான் பார்க்கிறேன்.

குறிப்பாக, 2009-க்கு பிறகு இந்த வலிகள் அதிகமாகவே இருந்தது. என் இனத்தின் வலிகளை யாரும் சரியாக சொல்லவில்லை என்பதும் குறைதான். 2013-க்கு பிறகு தம்பி பாலச்சந்திரன் புகைப்படம் வெளிவந்தபோது, மாணவர் போராட்டத்தை தஞ்சாவூரில் முன்னெடுத்தோம். அப்போதிருந்தே, இந்த விஷயங்கள் எல்லாம் திரையில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

மேதகு

பட மூலாதாரம்,KITTU

பின்பு துணிந்து ஒரு குறும்படம் எடுத்தோம். 'மேதகு' படத்தின் க்ளைமேக்ஸ்தான் அந்த குறும்படத்தின் முழுக்கதையும். அதாவது, துரையப்பா படுகொலை மட்டுமே முழுதாக அதில் எடுத்திருப்போம். அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. அதன்பிறகுதான், பிறப்பில் இருந்து துரையப்பா படுகொலை வரை கூத்து வாயிலாக ஒரு பாகம் சினிமாவாக எடுக்கலாம் என்று எண்ணினோம். ஆனால், பட்ஜெட் காரணமாக இது உங்களுக்கு டாக்குமெண்ட்ரி படமாக தோன்ற வைக்கலாம். இதை ஒரு இயக்குநராக ஒத்து கொள்கிறேன். அடுத்தடுத்த பாகங்களில் இந்த குறைகள் சரிசெய்யப்படும். இப்போது நாங்கள் கொடுத்திருப்பதை எங்களால் முடிந்த அளவு சரியாகவே செய்திருக்கிறோம் என நம்புகிறேன்.

படத்துக்கான நிதி பற்றாக்குறையாக இருந்தது என்கிறீர்கள். அதை எப்படி சமாளித்தீர்கள்?

நிறைய பேர் உதவி செய்தார்கள். ஆரம்பத்தில் அமெரிக்காவில் இருந்து ஜாய், வசந்த், ஜெயசீலன், அரவிந்த் என நான்கைந்து பேர் கொண்ட குழு எங்களுக்கு உதவி செய்ய முன் வந்தார்கள். அதேபோல், அமீரகத்தில் தீபக் சாலமன், ரவி இவர்களுடைய நண்பர்கள் என அங்கு ஒரு குழு, லண்டன், தமிழ்நாடு என நண்பர்கள் குழு அவர்களால் முடிந்த அளவிற்கு எங்களுக்கு நிதி திரட்டி கொடுத்தார்கள்.

படத்தின் பட்ஜெட்டாக 30-35 லட்சம் கணக்கிட்டோம். ஆனால், முடிக்கும் போது 62-65லட்சத்திற்குள் வந்தது. இதிலும் 15 லட்ச ரூபாய் வெளியே வாங்கியிருந்தோம். அதையும் ரமேஷ் என்பவர் எங்களுக்கு தந்து உதவி செய்தார். இந்த நம்பிக்கையை மனதில் வைத்து, பட்ஜெட்டுக்கு ஏற்றார்போல, கதையை மீண்டும் மாற்றி எடுத்தோம். இந்த சிக்கல் படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்கு இருக்காது என்று நினைக்கிறேன். கதை சொல்லலிலும் இந்த பாகத்திலுள்ள குறைகளை சரி செய்துவிடுவேன்.

ஈழத்தமிழர்கள் கதையை சித்தரித்து சமீபத்தில் வெளியான 'தி ஃபேமிலிமேன்', 'ஜகமே தந்திரம்' படங்களுக்கு எதிர்ப்புகள் வந்ததே?

தவறான சித்தரிப்பை மீண்டும் மீண்டும் படமாக்குவதன் மூலம் மக்கள் அதை உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம் இந்த சித்தரிப்புகளில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, 'தி ஃபேமிலிமேன்' இணையத்தொடர் எங்களது போராட்டங்களை கொச்சைப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. எங்களது போராட்டம் உன்னதமானது. எத்தனை விதமான தவறான சித்தரிப்புகள் வந்தாலும், 'மேதகு' படத்தில் காட்டப்பட்டுள்ளது போல, 'திருப்பி அடிக்கவே' இந்த படம். சரியாக சொல்ல வேண்டும் என்றால் பதிலடி.

உண்மையான விஷயங்களை காட்டினால் அதை மக்கள் பார்ப்பார்களா என்ற பயம் பெரும்பாலான படைப்பாளிகளுக்கு உள்ளது. இந்த படம் அந்த பயத்தை முற்றிலுமாக நீக்கியிருக்கிறது என்றே சொல்வேன். இனிமேல், ஈழத்தமிழர்களுடைய போராட்ட வரலாற்றை சொல்லும் படங்கள் அதிகம் வரும் என்றே நினைக்கிறேன்".

படம் வெளியாகும் சமயத்தில் என்ன மாதிரியான பிரச்னைகளை சந்தித்தீர்கள்?

படத்தின் முன்னாட்டம் (Preview Show) காண்பித்த பிறகு உண்மை வரலாற்றைதான் காண்பித்திருக்கிறோம் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வந்தது. கடந்த மே 22-ல் படம் வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால், முன்பு படம் வெளியாக இருந்த ஓடிடி தளம் பின்வாங்கியது. மே 21 அன்று இரவு 'இந்த படம் வெளியானால் எங்களுக்கு சிக்கல்' என தொலைபேசியில் அழைத்து சொன்னார்கள். அதன் பிறகுதான் நாங்கள் பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தை அணுகினோம். 'எந்த பிரச்சனை என்றாலும் பார்த்துக்கொள்ளலாம். நல்ல கதை இது' என படத்தை வெளியிட அவர்கள் தைரியமாக முன்வந்தார்கள்.

தமிழர்களுடைய வரலாற்றையும், போராட்டத்தையும் கொண்டு போய் சேர்க்க டிஜிட்டல் தளம் உருவாக வேண்டும் என்ற ஆசையும் உண்டு

'மேதகு' கதை தெருக்கூத்து வழியாக சொல்லப்பட என்ன காரணம்?

என்னுடைய தாத்தா ஒரு கூத்தாடி. இதற்கு முன்பு கூத்து கலைகளை வீர வரலாற்றை சொல்வதற்கும், மதம், கடவுளுடைய வாழ்க்கை வரலாறு சொல்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போதுள்ள கூத்து முறைகளில் ஆபாசமாக பேசுவது என சில இடங்களில் கொச்சைப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

மேதகு

பட மூலாதாரம்,KITTU

அந்த உடைகள் எல்லாம் போட்டுக்கொண்டு அவர்கள் கம்பீரமாக இருக்கும் போது, கம்பீரமான கதையைதான் சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. கூத்து கலைஞர்களை மக்கள் இனி திரும்பி பார்க்க வேண்டும், இந்த கலையை அழிய விடக்கூடாது, நிறைய பேர் இதில் வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த முறையை தேர்ந்தெடுத்தேன்".

படத்தின் பலம் நடிகர்கள் தேர்வு, ஒளிப்பதிவு, இசை. இது குறித்து?

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரியாஸ், இசையமைப்பாளர் பிரவீன் குமார் இவர்கள் என்னுடைய முந்தைய குறும்படத்தில் வேலை பார்த்தவர்கள். தலைவர் மேல் இவர்களுக்கு ஈர்ப்பு இருந்தது. படத்திற்கு கிடைத்த இந்த தளத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார்கள். இவர்கள் மட்டுமல்ல, ஒப்பனைக்கலைஞர் அப்துல், கலை இயக்குநர் அனைவரும் அர்ப்பணிப்புடன் செய்தனர்.

நடிகர்கள் தேர்வுக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் எடுத்து கொண்டோம். கதாப்பாத்திரத்திற்கு நடிகர்கள் பொருத்தமாக இருப்பார்கள் என்று தோன்றினால், அவர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தோம்".

கிட்டு

பட மூலாதாரம்,KITTU

பிரபாகரன் அவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்தியிருக்க கூடிய படத்தில் மற்றவர்களுக்கான முக்கியத்துவம் குறைவாக உள்ளதே?

முதலிலேயே சொன்னது போல, இது ஒரு பட்ஜெட் படம். கதை யாரை நோக்கி நகர்கிறது என்பது தெளிவாக தெரிந்ததே. தேசிய தலைவருடைய எண்ண மாற்றங்கள், போராட்டங்கள் அதை மட்டுமே காண்பிக்க முடியும். உதாரணமாக சிவக்குமார் அவரை பற்றி முழுதாக காட்டவில்லை என்கிற விமர்சனம் உண்டு. அவருடைய தியாகம் குறித்து மட்டுமே இரண்டு மணி நேர கதையாக தனியாக எடுக்கலாம்.

ஆனால், இது தலைவருடைய வாழ்க்கை வரலாறு என்பதால் அவருடைய எண்ணங்களில் மாற்றம் வருவதற்கான காரணங்கள் அதற்கான சம்பவங்கள் நோக்கியே படத்தை நகர்த்த வேண்டும் என நினைத்தோம். இப்போது நிறைய இயக்குநர்கள் வருகிறார்கள். இந்த படத்திற்கு பின்பு எதெல்லாம் நாங்கள் சரியாக, விரிவாக காட்டவில்லை என்று நினைக்கிறார்களோ அதை விரிவான படமாக காட்டினால் மகிழ்ச்சிதான்

படம் வெளியான பிறகு திரைத்துறை பிரபலங்கள், ஈழத்தமிழர்கள் யாராவது உங்களிடம் பேசினார்களா?

நிறைய அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. சமூகவலைதளங்களிலும் படம் குறித்து பேசியிருக்கிறேன். இயக்குநர் வெற்றிமாறன் அவர் படம் பார்த்து விட்டு படம் குறித்தான விமர்சனத்தையும் அவருடைய கருத்தையும் பகிர்ந்தார். அவர் மட்டுமில்லை, இயக்குநர்கள் மாரிசெல்வராஜ், பொன்வண்ணன், அமீர், சேரன் இவர்கள் எல்லாரும் வாழ்த்து சொன்னார்கள்.

இவற்றை எல்லாம் விட முக்கியமாக படம் வெளிவந்த முதல் நாள் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசிய பையன், 'தலைவரை பார்த்துட்டேன்' என அழுது கொண்டே பேசினான். முன்னாள் போராளி ஒருவரும் அழைத்து, 'எங்கள் போராட்டத்தில் முக்கியமான பகுதி இது' என சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது.

முன்பு வெளியான படங்களில் ஈழத்தமிழர்கள் குறித்த சித்தரிப்புகள் தவறாக இருந்ததாக பல அரசியல் தலைவர்களும் எதிர்ப்புகள் தெரிவித்தார்கள். தற்போது, 'மேதகு' பார்த்துவிட்டு, அரசியல் தலைவர்கள் யாராவது பேசினார்களா? குறிப்பாக சீமான் அவர்கள் என்ன சொன்னார்?

சீமான் அண்ணன் சென்னையில் இல்லை. நேற்று இரவு அவர் படம் பார்த்துவிட்டதாக செய்தி கேள்விப்பட்டேன். கண்டிப்பாக படம் குறித்து பேசுவார். அதுபோல, நிறைய அரசியல் தலைவர்கள் இன்று, நாளைக்குள் படம் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார்கள்".

அடுத்தடுத்த பாகங்கள் எப்போது எதிர்ப்பார்க்கலாம்?

அடுத்தடுத்த பாகங்களுக்கான கதைகள் எல்லாம் தயார் செய்ய இருக்கிறோம். அடுத்து எப்போது படப்பிடிப்பு தொடங்கும் போன்ற விவரங்கள் எல்லாம் 'தமிழீழத் திரைக்களம்' சார்பாக முறையாக அறிவிக்கப்படும். கதையின் தேவையை பொறுத்து 3லிருந்து 5 பாகங்கள் வரை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-57648656

இந்த பிபிசி தமிழுக்கும் என்னவோ நடந்துட்டுது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஏராளன் said:

மேதகு' திரைப்படம்: ''ஜகமே தந்திரம்', 'தி ஃபேமிலிமேன்' கதைகளுக்கான பதிலடி!'- இயக்குநர் கிட்டு

இது தான் சரியான நடவடிக்கை அதைவிட்டுவிட்டு  அந்த  படத்தை தடை செய் அந்த படத்தில் நீ நடிக்க கூடாது என்ற அடாவடிகள் ஏற்று கொள்ள முடியாதவை.

Link to comment
Share on other sites

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இது தான் சரியான நடவடிக்கை அதைவிட்டுவிட்டு  அந்த  படத்தை தடை செய் அந்த படத்தில் நீ நடிக்க கூடாது என்ற அடாவடிகள் ஏற்று கொள்ள முடியாதவை.

உண்மை தான்.

ஆனால் இந்த படம் வெளிவருவதற்கு எவ்வளவு சிரமம் இன்று வரை நம்பமுடியவில்லை எப்படி விட்டார்கள் என்று. (ஆனாலும் தவறான கருத்து வேறுபாடுகள் தினிக்கப்படுவது தவறு அல்லவா எங்கள் இனத்தை கொச்சை படுத்துவது சரியா? ) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, appan said:

உண்மை தான்.

ஆனால் இந்த படம் வெளிவருவதற்கு எவ்வளவு சிரமம் இன்று வரை நம்பமுடியவில்லை எப்படி விட்டார்கள் என்று. (ஆனாலும் தவறான கருத்து வேறுபாடுகள் தினிக்கப்படுவது தவறு அல்லவா எங்கள் இனத்தை கொச்சை படுத்துவது சரியா? ) 

அடுத்தடுத்த பகுதிகளுக்கு ஆப்பு வைக்க முயலலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

சீமான் அண்ணன் சென்னையில் இல்லை. நேற்று இரவு அவர் படம் பார்த்துவிட்டதாக செய்தி கேள்விப்பட்டேன். கண்டிப்பாக படம் குறித்து பேசுவார். அதுபோல, நிறைய அரசியல் தலைவர்கள் இன்று, நாளைக்குள் படம்

ஏராளன்,

இது உங்களுக்கான கேள்வி. இந்த விடயத்தை எல்லாருடனும் கதைத்து பக்கத்தை 10 வரைக்கும் ஓட்ட நான் விரும்பவில்லை. 

கீழ் வருவது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

சீமானானோ, கார்தியோ, நாம் தமிழர் டிவிட்டர் பக்கமோ, பாக்கியராசனோ இந்த படம் பற்றி ஒரு மூச்சு கூட டிவிட்டரில் விடவில்லையே?

கருணாநிதியை கிண்டல் பண்ணி வெளியிடும் டிவிட்டில் 10% முயற்சி எடுத்திருந்தாலே #மேதகுவை இந்திய அளவில் டிரெண்ட்டாக்கி இருக்கலாம்.

”படத்தை எப்படியாவது முடங்குங்கள்” என்று சீமான் பேசிய ஆடியோ வந்தது. எவ்வளவோ முயற்சித்யும் படத்தை முடக்க முடியவில்லை. இப்போ ஒரு வரவேற்பு அறிக்கை மட்டும். அத்தோடு சரி.

மணியரசன், சுபவி, பேசுதமிழா, பாரி என பல போக்கில் உள்ளோரும் கூட ஒன்றாக வந்து இந்த படத்தை முன் தள்ளும் போது, அடிமட்ட தம்பிகள் இந்த படத்தை கொண்டாடும் போது,

சீமானும் அவரை சூழ உள்ளோரும் தமது முழு பலத்தையும் இந்த படத்தின் பின் போடாமல் ஒரு அறிக்கையில் கடந்து போனது சரிதானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

பத்து பக்கம் இழுக்க எனக்கும் விருப்பமில்லை, ஆனால் சுட்டிக் காட்ட வேண்டியதை உரிய இடத்தில் செய்ய வேண்டியது அவசியம்: காரம் குறைந்த வார்த்தைகளில் சொன்னால், சீமான் ஒரு சாதாரண மூன்றாம் தர தமிழக அரசியல் வாதி என்பதைப் பல சம்பவங்கள் வெளிக்காட்டியிருக்கின்றன - இந்த மேதகு மௌனம் தற்போதைய சம்பவம்.

சீமானின் மௌனத்தைக் கேள்வி கேட்காமல் யாழ் கள உறுப்பினர் ஒருவர் மேதகு பற்றி மௌனம் காக்கிறார் என்று ஒரு நா.த.க ஆதரவாளர் குறைப்பட்டதை எண்ணி வியக்கிறேன்!😂

Some people see, what they like to see என்பதை நிரூபிக்கும் தருணங்கள் இவை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சீமான் என்னும் புறம்போக்கு இந்த காணொளியால் கிட்டு மீது கட்சியில் இருப்போருக்கு கோபமாம். ஆனாலும் எல்லோரும் படத்தை பார்த்திருப்பார்கள், ரசித்திருப்பார்கள். வெளிப்படையான அறிக்கை ஏதும் இல்லை. படம் மக்கள் மத்தியில் ஓரளவு சென்றடைந்துள்ளதாகவே தெரிகிறது. 
இன்னொரு விடயம் சீமானும் நாம் தமிழரும் படத்தை தூக்கி பிடித்திருந்தால் வெளியிடவிடாதும் முடக்கி இருக்கலாம். இது எனது மனதில் பட்டது.

இந்த இணைப்பில் கிருஸ்ணா முத்துகுமரப்பனின் தத்துவமா தலைமையா என்ற காணொளி ராஜிவ் கல்யாணசுந்தரம் விலக்கப்பட்ட போது வந்தது.

நான் சீமான் ஆதரவாளர் இல்லை, உங்களைப்போல விமர்சனங்களோடு அவரை தொடர்ந்து கவனிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஏராளன் said:

நான் சீமான் ஆதரவாளர் இல்லை, உங்களைப்போல விமர்சனங்களோடு அவரை தொடர்ந்து கவனிக்கிறேன்.

இதனால்தான் அந்த கேள்வியை உங்களை நோக்கி முன்வைத்தேன். பதிலுக்கு நன்றி.

அந்த காணொளியில் தலைப்பு கொஞ்சம் அதிர்சியாக இருந்தாலும், காணொளி முழுவதும் சீமானை உயர்த்தி அல்லவா பேசுகிறது? இதற்காகவா கிட்டு மீதும் அவர் எடுத்த தலைவர் பற்றிய படம் மீதும் இத்துணை பாராமுகம்?

எனக்கு கிட்டு போன்றவர்கள் தமிழ் தேசியத்துக்கு உண்மையாக இருப்பதால் வேணும் என்றே ஓரம் கட்ட படுவதாகவே தெரிகிறது.

1 hour ago, Justin said:

பத்து பக்கம் இழுக்க எனக்கும் விருப்பமில்லை, ஆனால் சுட்டிக் காட்ட வேண்டியதை உரிய இடத்தில் செய்ய வேண்டியது அவசியம்: காரம் குறைந்த வார்த்தைகளில் சொன்னால், சீமான் ஒரு சாதாரண மூன்றாம் தர தமிழக அரசியல் வாதி என்பதைப் பல சம்பவங்கள் வெளிக்காட்டியிருக்கின்றன - இந்த மேதகு மௌனம் தற்போதைய சம்பவம்.

சீமானின் மௌனத்தைக் கேள்வி கேட்காமல் யாழ் கள உறுப்பினர் ஒருவர் மேதகு பற்றி மௌனம் காக்கிறார் என்று ஒரு நா.த.க ஆதரவாளர் குறைப்பட்டதை எண்ணி வியக்கிறேன்!😂

Some people see, what they like to see என்பதை நிரூபிக்கும் தருணங்கள் இவை!

மெளனம் பேசியதே🤣

Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

சீமான் என்னும் புறம்போக்கு இந்த காணொளியால் கிட்டு மீது கட்சியில் இருப்போருக்கு கோபமாம். ஆனாலும் எல்லோரும் படத்தை பார்த்திருப்பார்கள், ரசித்திருப்பார்கள். வெளிப்படையான அறிக்கை ஏதும் இல்லை. படம் மக்கள் மத்தியில் ஓரளவு சென்றடைந்துள்ளதாகவே தெரிகிறது. 
இன்னொரு விடயம் சீமானும் நாம் தமிழரும் படத்தை தூக்கி பிடித்திருந்தால் வெளியிடவிடாதும் முடக்கி இருக்கலாம். இது எனது மனதில் பட்டது.

இந்த இணைப்பில் கிருஸ்ணா முத்துகுமரப்பனின் தத்துவமா தலைமையா என்ற காணொளி ராஜிவ் கல்யாணசுந்தரம் விலக்கப்பட்ட போது வந்தது.

நான் சீமான் ஆதரவாளர் இல்லை, உங்களைப்போல விமர்சனங்களோடு அவரை தொடர்ந்து கவனிக்கிறேன்.

சீமான் வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லி இருந்தால். ஒன்றில் படம் நின்று இருக்கும் அல்லது சீமான் உள்ளே சென்று இருக்க வேண்டும். (உண்மையோ  பொய்யோ சூசை குரலால் நன்றாகவே புரியும்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, appan said:

சீமான் வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லி இருந்தால். ஒன்றில் படம் நின்று இருக்கும் அல்லது சீமான் உள்ளே சென்று இருக்க வேண்டும். (உண்மையோ  பொய்யோ சூசை குரலால் நன்றாகவே புரியும்) 

உள்ளே போக விருப்பமின்மையால் எதுவும் சொல்லாமலிருந்தார் என்றால் நம்பக் கூடியதே! அமெரிக்க தமிழ்ச்சங்க நேரலையில் கொடியை ஒழித்தது போல இருக்கலாம்!

ஆனால், கிட்டு, க.சு பெயர் சொல்லி வெளியே வந்த ஒலி நறுக்கு அதைக் காரணமாகச் சுட்டிக் காட்டவில்லையே? ஒரு வேளை அதுவும் சீமான் படத்தை விளம்பரம் செய்ய எடுத்த தந்திரமான முயற்சி என்பீர்களோ?🤔

கற்பனைக்கேது கடிவாளம் அப்பனே?

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

உள்ளே போக விருப்பமின்மையால் எதுவும் சொல்லாமலிருந்தார் என்றால் நம்பக் கூடியதே! அமெரிக்க தமிழ்ச்சங்க நேரலையில் கொடியை ஒழித்தது போல இருக்கலாம்!

ஆனால், கிட்டு, க.சு பெயர் சொல்லி வெளியே வந்த ஒலி நறுக்கு அதைக் காரணமாகச் சுட்டிக் காட்டவில்லையே? ஒரு வேளை அதுவும் சீமான் படத்தை விளம்பரம் செய்ய எடுத்த தந்திரமான முயற்சி என்பீர்களோ?🤔

கற்பனைக்கேது கடிவாளம் அப்பனே?

நியாமான காரணமாக வாதிடலாம் . தெரிந்தும் மாட்டி விடும் கூட்டத்துடன் சகாசம் கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, appan said:

நியாமான காரணமாக வாதிடலாம் . தெரிந்தும் மாட்டி விடும் கூட்டத்துடன் சகாசம் கூடாது. 

சீமானின் உண்மையான முகம் பலருக்குத் தெரிந்திருக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறீர்கள் போல! சரியே. ஆனால், அந்தப் "பலருள்" தீவிர சீமான் விசுவாசிகளும் அடக்கம்! இந்த நடிப்பைச் சுட்டிக் காட்டுவதை "மாட்டி விடுதல்" என்கிறீர்கள்?😂

விளக்கம் சரியென்றால் பதில் அவசியமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, appan said:

(ஆனாலும் தவறான கருத்து வேறுபாடுகள் தினிக்கப்படுவது தவறு அல்லவா எங்கள் இனத்தை கொச்சை படுத்துவது சரியா? ) 

படத்தில் எங்கள் இனத்தை கொச்சை படுத்தி படம் எடுப்பது தவறு தான். ஆனால் அப்படியான  படங்களை வைத்து  எங்கள் இனத்தை மற்றவர்கள் மதிப்பிட போவதில்லை. சும்மா Dark Fate Terminator படங்கள் மாதிரி பார்த்துவிட்டு போய்விடுவார்கள். படத்தை தடை செய் என்கின்ற போது தான் இனம் பற்றிய தவறான எண்ணம் வெறுப்பும் ஏற்பட சந்தர்ப்பம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிப்பார்வை என்ற பிரவீன் காந்தியின் குப்பையை முன்னின்று வெளியிடப்போய் 
கையை சுட்டுக்கொண்டதால் படம் வரட்டும் உள்ளே  என்ன சரக்கு இருக்கிறது என்று பார்த்துவிட்டு நடவடிக்கையிலிறங்க உத்தேசித்திருக்கலாம், இது எனது அனுமானம் மட்டுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2021 at 19:26, goshan_che said:

ஏராளன்,

இது உங்களுக்கான கேள்வி. இந்த விடயத்தை எல்லாருடனும் கதைத்து பக்கத்தை 10 வரைக்கும் ஓட்ட நான் விரும்பவில்லை. 

கீழ் வருவது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

சீமானானோ, கார்தியோ, நாம் தமிழர் டிவிட்டர் பக்கமோ, பாக்கியராசனோ இந்த படம் பற்றி ஒரு மூச்சு கூட டிவிட்டரில் விடவில்லையே?

கருணாநிதியை கிண்டல் பண்ணி வெளியிடும் டிவிட்டில் 10% முயற்சி எடுத்திருந்தாலே #மேதகுவை இந்திய அளவில் டிரெண்ட்டாக்கி இருக்கலாம்.

”படத்தை எப்படியாவது முடங்குங்கள்” என்று சீமான் பேசிய ஆடியோ வந்தது. எவ்வளவோ முயற்சித்யும் படத்தை முடக்க முடியவில்லை. இப்போ ஒரு வரவேற்பு அறிக்கை மட்டும். அத்தோடு சரி.

மணியரசன், சுபவி, பேசுதமிழா, பாரி என பல போக்கில் உள்ளோரும் கூட ஒன்றாக வந்து இந்த படத்தை முன் தள்ளும் போது, அடிமட்ட தம்பிகள் இந்த படத்தை கொண்டாடும் போது,

சீமானும் அவரை சூழ உள்ளோரும் தமது முழு பலத்தையும் இந்த படத்தின் பின் போடாமல் ஒரு அறிக்கையில் கடந்து போனது சரிதானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

புலிப்பார்வை என்ற பிரவீன் காந்தியின் குப்பையை முன்னின்று வெளியிடப்போய் 
கையை சுட்டுக்கொண்டதால் படம் வரட்டும் உள்ளே  என்ன சரக்கு இருக்கிறது என்று பார்த்துவிட்டு நடவடிக்கையிலிறங்க உத்தேசித்திருக்கலாம், இது எனது அனுமானம் மட்டுமே

இது வெளிப்படையாக நியாயமான காரணமாக தெரிகிறது.

இந்த படம் பற்றிய அறிவிப்பு வந்த போது @நந்தன். இவற்றை நாம் வரவேற்கும் முன் கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டும் என்று எழுதினார். அது மிக நியாமான நிலைப்பாடுதான்.

நானே கூட பட வெளியீடு பற்றி பகிர்ந்த செய்தியில் எப்படி வருமோ? என்றே எழுதினேன்.

ஆனால் படம் வெளிவந்த பிறகும், படத்தில் ஒரு குறையும் இல்லை என தெரிந்த பின்பும். அதை பற்றி ஒரு அறிக்கையை மட்டும் விட்டு விட்டு ஒட்டு மொத்த நாம் தமிழர் அமைப்பும், அதன் சமூக ஊடக படையும் மெளனம் காப்பது வேறு மாதிரியே சிந்திக்க வைக்கிறது.

பலர் சொல்வதை போல் இது கிட்டு, குகன் குமார் மீது சீமானுக்கு விருப்பமில்லை என்ற ஒரு காரணமாக மட்டும் எனக்கு தெரியவில்லை.

நிச்சயம் இப்படி ஒரு படம், அது பைனான்ஸ் பண்ணுபட்ட முறை, வெளிவந்த முறை,  அது தடைகளை தாண்டிய விதம், கிடைத்த வரவேற்பு இந்திய கொள்கை வகுப்பாளருக்கு கசப்பானதாகவே இருந்திருக்கும்.

நான் சீமான் இந்த படத்தை தடுக்க முனைந்ததையும் (அந்த ஆடியோ பொய் என்று யாரும் சொல்லுவார்கள் என நான் நினைக்கவில்லை), வெளி வந்தபின் புறகணித்ததையும் இந்த பிண்ணனியில்தான் பார்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2021 at 13:39, ஈழப்பிரியன் said:

அடுத்தடுத்த பகுதிகளுக்கு ஆப்பு வைக்க முயலலாம்.

ஆரம்பத்தில் இருந்தே முழு ஆதரவு கொடுப்பதாக காட்டி இருந்தால், படமே வராமல் போயிருக்கலாம். ஆப்பு வைப்பார்கள் என்று தான் சீமான் எதிர்ப்பது போல ஆரம்பத்தில் இருந்தே காட்டி வந்தார்களோ, யாம் அறியோம். 

முன்னர் வேறு படங்கள், சென்சரினால் தடை ஆகி உள்ளன. 

இது ஒரு தந்திரமாகவும் இருக்கலாம். 🤗

33 minutes ago, goshan_che said:

நிச்சயம் இப்படி ஒரு படம், அது பைனான்ஸ் பண்ணுபட்ட முறை, வெளிவந்த முறை,  அது தடைகளை தாண்டிய விதம், கிடைத்த வரவேற்பு இந்திய கொள்கை வகுப்பாளருக்கு கசப்பானதாகவே இருந்திருக்கும்.

இந்திய கொள்கை வகுப்பாளர்கள், புலி விசயத்தில் இறுக்கி பிடிக்க வெளிக்கிட்டு, சீனா விசயத்தில் கோட்டையை விட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இது குறித்த உங்கள் கருத்து என்ன?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இந்த படத்தை @Kuna kaviyalahan ஏன் அரசியல் குண்டு என்கிறார்?

இந்த படத்தை அதிக அளவில் தமிழ் மக்கள் பார்க்கும் போது அது ஒரு கட்டுப்படுத்த முடியாத அரசியல் மாற்றத்தை தமிழ் நாட்டில் ஏற்படுத்தலாம்.

இந்த அரசியல் குண்டை தமிழ் நாட்டு/ இந்திய ஆட்சியாளர் எப்படி செயழிழக்க செய்யலாம்? இதை வெளிவராமல் தடுப்பது. அது முடியாவிட்டால் மக்கள் அதிகம் பார்க்கும் ஓடிடி தளங்களில் வெளிவராமல் தடுப்பது.

 வெளி நாட்டில் வாழும் நாமே பல இடர் பட்டுத்தான் இந்த படத்தை பார்த்தோம். 

அப்படி இருக்க இந்த படம் எத்தனை சதவீத சராசரி தமிழ் நாட்டு மக்களை போய் சேரும்?

நிச்சயம் சென்சார் தியேட்டரில் வெளியிட விடாது. ஆனால் தடையும் பண்ண மாட்டர்கள்.

மக்கள் பார்க்காமல் பண்ணி விட்டால் போதும். 

இந்த படத்தை ஒரு சில சதவீத தமிழ்நாட்டு மக்கள் மட்டும் பார்க்கும் படி முடக்குவதுதான் இந்தியாவின் இந்த படத்தை கையாளும் தந்திரோபாயம்.

முடிந்தளவு மக்களிடம் கொண்டு போகும் வலு இருந்தும், கருணாநிதி மீதான வசவுகளை இந்திய அளவில் 2ம் இடத்தில் டிரெண்டாக்கும் சமூகவலைதள படை கூட இருந்தும், அத்தனை வாய்களையும் கட்டிப்போட்டு, இந்த படத்தை புறக்கணிப்பவர்,

எமது நண்பரா? இந்திய ஆளும் வர்க்கத்தின் நண்பரா?

6 minutes ago, Nathamuni said:

இந்திய கொள்கை வகுப்பாளர்கள், புலி விசயத்தில் இறுக்கி பிடிக்க வெளிக்கிட்டு, சீனா விசயத்தில் கோட்டையை விட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இது குறித்த உங்கள் கருத்து என்ன?  

கையிறுழுக்கும் பந்தயம் இன்னும் முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/gnanadas.kasinathar/posts/10224954432864278

"நான் ஒராள் செய்யிறதாலே என்ன பெருசா நடக்கப் போகுது, ஆருக்குத் தெரியப் போகுது"
என்னும் மனோபாவத்தில் நாம் ஒவ்வொருவரும் செய்த பல்லாயிரம் சிறு தவறுகள் ஈழவிடுதலைப் போராட்டத்தை எவ்வளவு பாதித்திருக்கும், நமக்காகப் உயிர் கொடுத்துப் போராடியவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆப்பை இறுக்கியிருக்கும் என நினைத்துப் பார்க்க வேண்டும்.
உதாரணமாக, வெளிநாடுகளில், "புலிகளுக்குப் பயந்துதான், வெளிநாடு வந்தனான்" என்று வாக்குமூலம் கொடுத்து வதிவிட உரிமையை எளிதாக வாங்கிக் கொண்ட "தீவிர புலி மற்றும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள்" எத்தனை பேர் உள்ளனர்.
லோயர்களின் மூளைச் சலவைக்கு ஆட்பட்டு இவ்வாறு கொடுத்த வாக்குமூலங்கள் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அந்தந்த நாடுகளில் பிரகடனப்படுத்துவதற்கு எவ்வாறு ஒரு சாட்சி ஆவணமாக மாறும் என அப்போது எண்ணிப் பார்த்ததில்லை.
அப்பொழுது நமக்கு நாம் சொல்லிக் கொண்டதெல்லாம்...
"நான் ஒராள் செய்யிறதாலே என்ன பெருசா நடக்கப் போகுது, இது வேறை ஆருக்குத் தெரியப் போகுது"
அதே மனோபாவத்துடந்தான் இன்னும் மக்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை "மேதகு" பட பார்வையாளர் தரவு காட்டுகிறது.
அங்கிங்கெனாது எங்கும் வாழும் தமிழர்கள் பார்த்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் "மேதகு" படத்தை. உணர்ச்சி பொங்கிடப் பதிவுகள் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நான் நினைச்சன், பாகம் 2 க்கான பணம் இதுவரை வசூலாகியிருக்கும் என்று.
ஆனால்...
நாம் போற்றும் "மேதகு" ஐக் காசு கட்டி முறைப்படி, பார்த்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 40, 000 பேர்தான்.
அதில் 90 வீதமானோர் இந்தியாவில் (தமிழ்நாட்டில்) பார்த்துள்ளனர்.
ஆக 4,000 தமிழர்கள்தான் இந்தியாவுக்கு வெளியால் முறைப்படி காசு கட்டிப் பார்த்துள்ளனர்.
உண்மையில் மனம் கொதிக்கிறது.
வெறும் 5 டொலர்கள்!
நாம் மொத்தத்தில் செலுத்தியது, 20, 000 டொலர்கள்தான். "மாஸ்டர்" படத்துக்கு நாம் செலுத்தியது இலங்கைக் காசுக்கு 50 கோடிக்கு மேல்.
வெறும் 5 டொலர்கள்!
அதைச் செலுத்தி "மேதகு" ஐப் பார்க்கும் மனோபாவம் அற்றவர்களா நாம்?
ஒவ்வொருவரும் நினைக்கிறோம்,
"நான் ஒராள் செய்யிறதாலே என்ன பெருசா நடக்கப் போகுது, வேறை ஆருக்குத் தெரியப் போகுது"
அப்படியே ஒவ்வொருதரும் செய்வதால் எதையெல்லாம் நாம் இழக்கிறோம் என நினைத்துப் பாருங்கள் உறவுகளே.
மேதகு படத்தில் பணியாற்றிய இரண்டு நடிகர்களைத் தவிர (சிறி மாவோ பாத்திரத்தில் நடித்த மலையாளப் நடிகை, அல்பிரட் பாத்திரத்தில் நடித்த நடிகர்) வேறு எவரும் இதுவரை ஒரு சதம் சம்பளம் கூடப் பெறவில்லை. எல்லோரும் தத்தமது பணத்தில் பயணம் செய்து வந்து நடித்தவர்கள். அவர்களுக்குக் குடும்பம் உள்ளது. இயக்குனர் கிட்டுவுக்குக் குடும்பம் உள்ளது. இவர்கள் யாருக்கும் இதுவரை எந்தச் சம்பளமும் வழங்கப்படவில்லை. தயாரிப்புக்காக வட்டிக்கு வாங்கப்பட்ட கடன் உள்ளது...
உறவுகளுக்கு அன்பான வேண்டுகோள்:
யார் யார் பழக்க தோசத்தில் களவாகப் பார்த்தீர்களோ அவர்கள் அனைவரும் கீழ்வரும் இணைப்புக்குச் சென்று அந்த 5 டொலர்களைக் செலுத்தி விடுங்கள்.
"மேதகு" வுக்காக இதைச் செய்யுங்கள்.
முடிந்தால் இதைப் பிரதி செய்து உங்கள் உங்கள் முகநூலில் பகிருங்கள்.
1 நபர் மற்றும் உரை இன் கார்ட்டூனாக இருக்கக்கூடும்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த பிக்கு ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட பண்டார நாயக்கவின் மனைவி சிறிமாவோ
பௌத்த பிக்குக்களை குறி வைக்காமல் தமிழர்கள் மீது குறி வைத்தது என்ற காட்சி  கேள்விக்குறி ஆகின்றது
பல இடங்களில் தேவையற்ற காட்சிகள் நீட்டிக்கப்பட்டு தேவையான காட்சிகளை சேர்க்க இயக்குனர் விரும்பவில்லை எனத் தெளிவாகத் தெரிகின்றது.
சமகாலத்தில் மேதகுவுடன் இருந்தவர்கள் பலர் தவிர்க்கப்பட்டுள்ளார்கள்.
மெதகுவை முன்னிறுத்தி எடுத்த திரைப்படமாகவிருந்தாலும் ஈழத்தமிழர்களின்
விடுதலைப் போராட்ட வரலாறு திசை மாறிச் செல்கின்றது கதையில்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

உண்மையில் மனம் கொதிக்கிறது.

என்னத்தை சொல்ல? என்னிடம் வாட்சப்பில் 2 பேர் கடவுசொல் ஏதும் உண்டா என்று நூல் விட்டார்கள். 

ஐந்து டொலருக்கு வழி இல்லாமல் வெளிநாட்டில் என்னத்தை **** எண்டு எழுதியதை அழித்து விட்டு. என்னது இப்போ வேலை செய்யவில்லை என்று சமாளித்து விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

என்னத்தை சொல்ல? என்னிடம் வாட்சப்பில் 2 பேர் கடவுசொல் ஏதும் உண்டா என்று நூல் விட்டார்கள். 

ஐந்து டொலருக்கு வழி இல்லாமல் வெளிநாட்டில் என்னத்தை **** எண்டு எழுதியதை அழித்து விட்டு. என்னது இப்போ வேலை செய்யவில்லை என்று சமாளித்து விட்டேன்.

ஒரு பக்கம் இந்தியாவும் சர்வதேசமும் எமக்கு துரோகம் செய்து விட்டது என அலறியபடி  மறு பக்கம்  தமக்குள் தாமே துரோகங்களை செய்து கொண்டிருக்கும் இனம் நம் இனம்.

ஒரு நாள் கூத்துக்கு சாறி வாங்க 1000 தொடக்கம் 5000 காசுகளை செலவழிப்பவர்கள் இனம் சம்பந்தப்பட்ட நற்செயல்களுக்கு 5 சதம் செலவளிக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அண்ணாவின் நாடகம், கருணாநிதியின் பேச்சுகளில் நையாண்டி இல்லையா?"- `மேதகு' இயக்குநர் கிட்டு

மேதகு

மேதகு

"இந்தப் படத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று என இதை வைத்துக் கொள்ளலாம்." - `மேதகு' இயக்குநர் கிட்டு.

newsletter_image.png?format=webp&w=576&dpr=1.0

விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...!

எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…!

Get Our Newsletter
'மேதகு' திரைப்படம் இணையத்தில் நேரடியாக வெளியாகி பலரின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. அதே சமயம், அதன் இயக்குநர் தி.கிட்டு மீது விமர்சனங்களும் எட்டிப் பார்க்கின்றன. அவரின் பழைய ஃபேஸ்புக் பதிவுகள் திராவிடத் தலைவர்களை ஏளனம் செய்யும் வகையிலும் கடும் விமர்சனம் செய்யும் தொனியிலும் இருக்கின்றன. இதற்குதான் தற்போது எதிர்ப்பலை உருவாகியிருக்கிறது. இது குறித்து இயக்குநர் கிட்டுவிடம் கேட்டேன்.
 
சமூக வலைதளங்களில் திராவிடத் தலைவர்களை கேலி செய்யும் வகையிலான உங்கள் பதிவுகள் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இது குறித்து உங்களது கருத்து என்ன?

`மேதகு' இயக்குநர் கிட்டு
 
`மேதகு' இயக்குநர் கிட்டு
 
"திராவிட சித்தாந்தங்களை முழுமையாக நான் ஏற்பதில்லை. எனவே, நையாண்டியாக சில பதிவுகளைப் பகிர்ந்திருப்பேன். திராவிட மேடைகளிலேயே கருத்துகளை நையாண்டியாகத்தான் பதிவு செய்வார்கள். அண்ணாவின் நாடகங்களாக இருக்கட்டும், கருணாநிதி ஐயாவின் பேச்சாக இருக்கட்டும்... எல்லாவற்றிலும் நையாண்டி இருக்கும். 'நீங்கள் பதிவு செய்வது போன்றே நையாண்டியாக நாங்களும் எங்கள் கருத்துக்களைப் பதிவு செய்வோம்' எனப் பல கருத்துகளை நானும் பகிர்ந்திருக்கிறேன். அரசியல் விமர்சனம் அதிகமாகச் செய்யும் பழக்கம் எனக்கு இருக்கிறது. 'அரசியல் லாபத்துக்காக நீங்க கூட்டணி வெச்சிக்கிறீங்க', 'சாதியா பிரிஞ்ச தலைவர்களை வெச்சி நீங்க அரசியல் பண்றீங்க' என்கிற தொனியில் என் விமர்சனம் இருக்கும். நான் முன்பு பதிவு செய்த அந்தப் பதிவுகளைத் தற்போது பகிர்ந்து என்னை விமர்சனம் செய்கிறார்கள். இந்தப் படத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று என இதை வைத்துக் கொள்ளலாம்.

சீமான், நாம் தமிழர் கட்சி
 
சீமான், நாம் தமிழர் கட்சி
 
சீமானுக்கு எதிராக நான் சில கருத்துக்களைப் பேசுவேன், அதனை வைத்து இந்தப் படத்தை நிறுத்திவிடலாம் என்றெல்லாம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சீமானின் மீது எனக்கு மரியாதை உண்டு. 2019-ல் என் குடும்ப சூழல் காரணமாக நான் அந்தக் கட்சியில் இருந்து வெளியே வந்துவிட்டேன். அவ்வளவுதான். சீமானுக்கு எதிராக என்னைத் திருப்பப்பார்த்தார்கள். அது நடக்கவில்லை என்றதும் என்னுடைய ஃபேஸ்புக் பதிவுகளை வைத்துக்கொண்டு பிரச்னை செய்கிறார்கள்.

நான் கூற வரும் கருத்துகளை நையாண்டியாகப் பதிவு செய்திருப்பேன் அவ்வளவுதான். தலைவர்களைப் பற்றி நான் பதிவிட்ட கருத்துகள் மற்றவர்களைப் புண்படுத்தி இருந்தது என்றால், அதற்கு வருத்தம் தெரிவிக்கவும் நான் தயங்க மாட்டேன். மேலும், விமர்சனம் செய்து கொண்டிருந்தது ஒரு காலம். தற்போது நான் அதையெல்லாம் கடந்து வந்துவிட்டேன். விமர்சனம் செய்வது மட்டுமே அரசியல் அல்ல என்பது புரிந்து அதனைவிட்டு விலகி வந்து சில காலம் ஆகிவிட்டது" என்கிறார் கிட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

"அண்ணாவின் நாடகம், கருணாநிதியின் பேச்சுகளில் நையாண்டி இல்லையா?"- `மேதகு' இயக்குநர் கிட்டு

கருநாநிதியின் பேச்சில் நையாண்டி மட்டுமல்ல அசிங்கமே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு': "திருமாவளவனை தாக்க இதுவே காரணம்" - இயக்குநர் கிட்டு விளக்கம்

  • ச. ஆனந்தப்பிரியா
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
மேதகு

பட மூலாதாரம்,KITTU

படக்குறிப்பு,

மேதகு திரைப்பட இயக்குநர் கிட்டு

சமீபத்தில் பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று படமாக 'மேதகு' வெளியாகி இருந்தது. படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குநர் கிட்டுவை சுற்றி சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. என்ன சர்ச்சை அதற்கு அவரது விளக்கம் என்ன?

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படத்தின் முதல் பாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் வெளியாகியது. பிரபாகரன் பிறப்பு, 1950-களின் பிற்பகுதியில் நடந்த இனக்கலவரம், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 1980 வரை நடந்த அரசியல் மாற்றங்கள், கல்வி போராட்டம், பிரபாகரனின் முதல் அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவானது வரை தற்போது வெளியாகியிருக்கும் முதல் பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பிரபாகரன் வாழ்க்கையை சித்தரித்ததில் சில குறைகள் இருந்தாலும் உண்மை நெருக்கமாக அமைந்திருக்கிறது என பரவலான பாராட்டுகளையும் படக்குழு பெற்றது.

இப்போது என்ன சர்ச்சை?

'மேதகு' திரைப்படத்தின் இயக்குநர் கிட்டு, முன்பு 'நாம் தமிழர் கட்சி'யில் இருந்தவர். இப்போது கட்சியில் இருந்து அவர் வெளியேறி விட்டார்.

இந்த நிலையில், அவர் கட்சியில் இருந்த போது சமூகவலைதள பக்கங்களில் திராவிட இயக்கங்கள் குறித்தும், தனிமனித தாக்குதல், அவதூறு, நாகரிமற்ற வார்த்தைகள் உபயோகப்படுத்தி விமர்சனம் என கடந்த 2019-ல் அவர் பதிவிட்ட பல பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த சர்ச்சைகளை தொடர்ந்து இயக்குநர் கிட்டு தனது முகநூல் பக்கத்தை தனிப்பட்ட முறையில் மாற்றியிருப்பதும் (Locked Account) விமர்சனம் ஆகியுள்ளது.

'எதிர்வினை கருத்துகள்'

பெரியார் குறித்தும், திராவிடம், பெண்கள் குறித்தும் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களாக, அவதூறாக இருக்கும் இந்த பதிவுகளை பலரும் தற்போது சமூகவலைதளங்களில் கண்டித்து வருகின்றனர். இப்படி கருத்து சொல்லியிருக்கக்கூடியவர் எப்படி இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும் என்பதுதான் அதன் சாரமாக இருக்கிறது. இந்த சர்ச்சைகள் தொடர்பாக விளக்கம் பெற இயக்குநர் கிட்டுவை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம், "கடந்த 2019-ல் தலைவர்கள் யாராவது தமிழ் தேசியத்தை எதிர்த்து கருத்து சொன்னாலோ, வன்மமாக பேசினாலோ அதற்கு எதிர்வினையாற்றும் பொருட்டு சில கருத்துகளை பதிவிட்டிருந்தோம். ஆனால், அதை எல்லாம் எதற்கு இப்போது எடுத்து பேச வேண்டும் என தெரியவில்லை. 'மேதகு' படம் நல்ல வெற்றி பெற்று மக்களிடம் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. அதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே இதை செய்கிறார்கள். அந்த சமயத்தில் அவர்கள் பேசியதற்கான எதிர்வினைதான் செய்தோம்".

திருமாவளவனை தாக்கியது ஏன்?

மேதகு

பட மூலாதாரம்,TWITTER @BS_VALUE

கிட்டுவின் முகநூல் பக்கத்தில் விசிக தலைவர் திருமாவளவனை தனிப்பட்ட முறையில் தாக்கும் விதமாக, 'அவர் திருமணம் ஆகாதவர் என்பதால்தான் கோயிலில் உள்ள சிலைகள் ஆபாசமாக தெரிகிறது' என பொருள்படும் விதத்தில் பதிவிட்டிருந்தார். அது குறித்து கேட்டபோது, 'திருமாவளவன் ஐயா ஒருமுறை மேடையில் பேசும்போது, 'கோயிலில் இருக்கக்கூடிய சிலைகள் எல்லாம் ஆபாச பொம்மைகள்' என சொல்லியிருந்தார். ஒவ்வொரு கலைக்கு பின்னும் ஒரு நுட்பம் இருக்கும். அப்படி இருக்கும் போது ஏன் அதை அப்படி சொல்ல வேண்டும்? அதற்கான எதிர்வினையாகதான் செய்தோம். மற்றபடி வேறெந்த உள்நோக்கமும் இல்லை".

'கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன்'

"கட்சியில் இருந்து விலகிவிட்ட நிலையில், இப்பொழுது மீண்டும் இந்த பதிவுகள் குறித்தோ, விமர்சனம் செய்பவர்களுடன் சண்டை செய்யவோ விரும்பவில்லை. ஏனெனில், தலைவர் படத்தை கொண்டு போய் சேர்க்க பல அரசியல் கட்சிகளும் உதவின. திராவிட இயக்கங்கள், அதில் முக்கிய பொறுப்பில் இருந்த பலரும் இந்த படம் நல்லபடியாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உதவி செய்தார்கள். அப்படி இருக்கும் போது என்னுடைய பழைய பதிவுகளை இப்போது கொண்டு வருவது என்பது தேவையில்லாதது. என்னுடைய திராவிடம்-தமிழ்த்தேசிய கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். ஆனால், இந்த சர்ச்சை தலைவருக்கு இழுக்காக இருக்கக்கூடாது என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.

திராவிடம் என்பது ஒற்றைக்குடைக்குள் வந்துவிடம். ஆனால், தமிழ்த்தேசியம் அப்படி இல்லை. திராவிடத்தை ஒட்டிய தமிழ்த்தேசியம், தூய தமிழ்த்தேசியம் என பல பிளவுகள் உண்டு. இதில் நாங்கள் ஒரு தமிழ்த்தேசியத்தின் பக்கம் நின்று பேசிக்கொண்டிருக்கிறோம். என்னுடைய அடிப்படையான தமிழ்த்தேசியம் என்ற கொள்கையில் இருந்து மாற மாட்டேன். ஆனால், இந்த மாதிரியான கருத்துகள் இனி பதிவிட கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். முந்தைய பதிவுகள் வருத்தப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என்றார்.

காணொளிக் குறிப்பு,

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் மேதகு திரைப்படம்

https://www.bbc.com/tamil/arts-and-culture-57685531

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.