Jump to content

சீன அரசு தமிழை ஊக்குவிக்கிறது!


Recommended Posts

சீன அரசு தமிழை ஊக்குவிக்கிறது!

Quellbild anzeigen

கடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இவற்றை பார்க்கும் இணைய பயன்பாட்டாளர்களுக்கு ஆச்சர்யம் மட்டுமின்றி, அவர்களது பின்னணி குறித்த பல்வேறு கேள்விகளும் எழுகின்றன.சீனாவிலுள்ள யுனான் மாநிலத்திலுள்ள யுனான் மின்சு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் கலாசார கல்லூரியில் வங்காளம், நேபாளி, சிங்களம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கான துறைகள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு 2017ஆம் ஆண்டு தமிழ் துறை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு, கடந்தாண்டு ஆண்டு மார்ச் முதல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

யுன்னான் மின்சு பல்கலைக்கழக தமிழ் துறையின் செயல்பாடுகள் குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளரும், துணைப் பேராசிரியருமான நிறைமதியிடம் (சீனப் பெயர் கிகி ஜாங்) கேட்டபோது, “நாங்கள் தமிழ் மொழியில் நான்காண்டுகள் இளங்கலை பட்டப் படிப்பை வழங்கி வருகிறோம். தமிழ் மொழி குறித்த அறிமுகமே இல்லாத ஆறு சீன மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். அவர்களுக்கு முதலாமாண்டு அடிப்படை படிப்பு, பேச்சு, எழுத்து குறித்தும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழர்களின் இலக்கியம், கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பியல்புகளையும் சொல்லித் தருகிறோம்என்று கூறுகிறார்.

இந்த படிப்பில் சேருவதற்கான அடிப்படை தகுதி என்ன? உதவித்தொகை ஏதாவது வழங்கப்படுகிறதா? என்று கேட்டபோது, “இந்த படிப்பிற்கு சீனாவை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முதற்கட்ட நுழைவுத் தேர்வுக்கு பிறகு தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களிடம் அதற்குரிய காரணங்களை கேட்டறிந்துவிட்டு தகுதியான மாணவர்களை தேர்வு செய்கிறோம். தமிழை படிக்கும் மாணவர்களையும், என் போன்ற ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் சீன அரசு குறிப்பிடத்தக்க அளவில் உதவித்தொகைளையும் வழங்குகிறதுஎன்று நிறைமதி கூறுகிறார்.

நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?”

சீனர்கள் தமிழ் படிப்பதற்கான காரணம் என்ன? இது சீன அரசாங்கத்தின் மறைமுக சதித்திட்டமா? தமிழை படித்துவிட்டு இவர்கள் என்ன செய்வார்கள்? உள்ளிட்ட சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் முன்வைக்கும் பல்வேறு கேள்விகளை நிறைமதியிடம் கேட்டதற்கு, “தமிழ் மொழிக்கும் சீனாவிற்கும் பல நூற்றாண்டுகளாக நெருங்கிய தொடர்பு உள்ளது. அதுமட்டுமின்றி, அன்று தொட்டு இன்று வரை வர்த்தகத்தில் சிறந்த நண்பர்களாக திகழ்ந்து வருகிறோம். இதை கலை, விளையாட்டு, கல்வி போன்றவற்றிற்கும் விரிவுபடுத்துவதற்கு சீனா விரும்புகிறது.

அதுமட்டுமின்றி, பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடாக விளங்கும் இந்தியாவை முழுவதுமாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்கு தென்னிந்தியாவை அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டை புரிந்துகொள்வது அவசியம் என்பதால் நாங்கள் தமிழ் மொழியையும், அதன் கலாசாரம், இலக்கியம், கலைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்வதற்கு முயற்சித்து வருவதன் ஒருபடியே இது.

எனவே, எங்களது மாணவர்கள் தமிழ் மொழியை மட்டுமின்றி அதன் சிறப்பியல்புகள் குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளும் விதமாக அவர்களது மூன்றாமாண்டு படிப்பை முழுவதும் தமிழகத்தில் கற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு விரைவில் தமிழ்நாட்டு பல்கலைக்கழங்களுடன் ஆசிரியர்-மாணவர் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளோம்என்று விவரிக்கிறார்.

247 எழுத்துகளை பார்த்து பயந்துவிட்டேன்

முற்றிலும் தமிழ் மொழியின் அறிமுகமே இல்லாத சீன மாணவர்கள் படிப்பை தொடங்கிய சில மாதங்களிலேயே மொழியை ஆர்வத்துடன் கற்று கொண்டதுடன், தங்களது எண்ணங்களை அழகான கையெழுத்தில் தமிழிலேயே எழுதுவதாக தெரிவித்து இந்த துறையின் சார்பில் வெளியிடப்பட்ட புகைப்படங்களும், காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவலான பாராட்டை பெறுவதை பார்க்க முடிகிறது.

தமிழ் மொழியில் 247 எழுத்துகள் உள்ளதை கண்டு மிகவும் பயந்துவிட்டேன். ஆனால், தமிழை தொடர்ந்து படித்து, படித்து அதனால் ஈர்க்கப்பட்டு விட்டேன்.

இதுகுறித்து, அங்கு பயிலும் மாணவர் மகிழனிடம் கேட்டபோது, “முதலில் தமிழை புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக தமிழ் மொழியில் 247 எழுத்துகள் உள்ளதை கண்டு மிகவும் பயந்துவிட்டேன். ஆனால், தமிழை தொடர்ந்து படித்து, படித்து அதனால் ஈர்க்கப்பட்டு விட்டேன். பொங்கல் விழா கொண்டாடுதல், தமிழ் உணவு சாப்பிடுதல், தமிழ் திரைப்படங்களை ரசித்தல் முதலியவற்றின் மூலம் தமிழர்களின் கலாசாரத்தை புரிந்துகொள்வதற்கும், தமிழ் மொழியை மேலும் ஆர்வமாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்வதற்கும் உதவுகிறதுஎன்று அவர் கூறுகிறார்.

இந்தி தெரியாததால் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட தமிழ் இளைஞர்- நடந்தது என்ன?

கனடா பிரதமர் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்தது உண்மையா?

தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது. தமிழ் மொழியை கற்றுக்கொள்வது கடினமாக இருந்தாலும், அதை ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டு, தமிழர்களுடன் செம்மையாக உரையாடல் நடத்த விரும்புகிறேன்என்று கூறுகிறார் கயல்விழி என்னும் மாணவி.

கயல்விழி

படித்த பிறகு என்ன செய்வார்கள்?

தமிழ் மொழியின் சிறப்பியல்புகள், தமிழர்களின் வரலாறு, கலாசாரம், பண்பாடு போன்றவற்றையெல்லாம் தவிர்த்து தமிழை படிப்பதால் சீனர்களுக்கு பிரகாசமான வேலைவாய்ப்பு உள்ளதாக உறுதிபட கூறுகிறார் நிறைமதி.

எங்களிடம் நான்காண்டு பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. உதாரணமாக, சென்னையில் பல்வேறு சீன நிறுவனங்களின் கிளைகளும், தொழிற்சாலைகளும், துணை நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் உயரதிகாரிகளாக உள்ள சீனர்களுக்கு மாண்டரின், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளே தெரிந்துள்ளதால் மற்ற பணியாளர்களுடன் இயல்பாக உரையாடுவது கடினமாக உள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய உடையில் ஆசிரியருடன் மாணவர்கள்

இந்நிலையில், மாண்டரின், ஆங்கிலம் மட்டுமின்றி தமிழும் தெரிந்த சீனர் ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் என்ற இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் எங்களது முயற்சி இருக்கும். அதுமட்டுமின்றி, பொதுவாகவே தமிழ் திரைப்படங்களை ஆர்வத்துடன் பார்க்கும் சீனர்களுக்கு பெருந்தடையாக இருந்துவரும் மொழிபெயர்ப்பை மேற்கொள்வதிலும் பணிவாய்ப்புகள் உள்ளன.

தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து படித்து, அதில் ஆராய்ச்சி செய்வதற்கும், எதிர்கால சீனர்களுக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்லும் ஆசிரியராகவும் பணிபுரிவதற்கு வாய்ப்புள்ளதுஎன்று நிறைமதி மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

நான் பட்டம் பெற்ற பிறகு தமிழ்நாட்டிற்கு சென்று மேலதிக கற்றல்களையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, ஒரு தேர்ந்த தமிழ் ஆசிரியராக விரும்புகிறேன்என்று கயல்விழி கூறுகிறார்.

மாணவர் மகிழன் பேசும்போது, “நான் தமிழ்நாட்டில் சில காலம் வாழ்ந்து அங்குள்ள கலாசாரத்தில் முழுமையாக மூழ்க விரும்புகிறேன். வாழ்நாள் முழுவதும் தமிழ் சார்ந்த பணிகளை மேற்கொள்வதுடன், சீன-இந்திய நட்புக்கு ஒரு பாலமாக மாற வேண்டுமென விரும்புகிறேன்என்று தனது கனவை முழுவதும் தமிழிலேயே விவரிக்கிறார்

https://www.bing.com/     Jan 22, 2019,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நாங்கள் மன்டரின் படிக்கத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://tamil.cri.cn/ தமிழ் சீனா  வானொளி .

51 minutes ago, சுவைப்பிரியன் said:

அப்ப நாங்கள் மன்டரின் படிக்கத் தேவையில்லை.

இலங்கை முழுக்க அவர்களின் கைகளுக்கு போனபின் மாண்டரின் இலங்கையின் உத்தியோக பூர்வ மொழியாக இருக்கும். .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

சீன அரசு தமிழை ஊக்குவிக்கிறது!

நாங்களும் சீன மொழி படிச்சு அவையளை ஊக்குவிக்க வேணும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நாங்களும் சீன மொழி படிச்சு அவையளை ஊக்குவிக்க வேணும்

 

பிள்ளை தன் மேல சாய வா என்று தமிழில தானே சொல்லுறா.... பிறகெதுக்கு எங்களுக்கு சீனம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.