Jump to content

செல்வச்சந்திரன் மரணமும் நினைவுகளும்

Recommended Posts

Friday, July 2, 2021

 https://youtu.be/2oeotNpiNwY

IMG-20210626-WA0007.jpg
IMG-20210627-WA0008.jpg
 
வணக்கம் சாந்தி, இன்று காலை சிறையில் இருந்து மீண்ட 16பேர் பற்றியும் இன்னும் விடுதலைக்கான நாளை எதிர்பார்த்திருக்கும் எல்லோர் பற்றியும் பேசினோம். நீண்ட நாட்களின் பின் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. எங்கட செல்வச்சந்திரன்  இறந்துவிட்டான்.

 அவன் இன்று மதியம் குளிக்க கிணத்தடிக்கு போன நேரம் மயங்கி விழுந்து இறந்து போனான்.

அவனுக்கு ஆதரவு தேவைப்பட்ட காலம் நீங்கள் செய்த மருத்துவ உதவிகள் ஆதரவு பற்றி அடிக்கடி பேசிக்கொள்வோம். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். 

நம் ஒவ்வொருவரின் வாழ்வும் இப்படித்தான் முடியப் போகிறது. நாங்கள் சிறையில் அனுபவித்த சித்திரவதைகளின் தாக்கம் அதனால் எம் உடல்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எங்களை இப்படித்தான் கொல்லப் போகிறது. 

சிறையில் நடந்த சித்திரவதைகள் பற்றி என்னால் விளங்கப்படுத்த முடியாது. நாளை இதுபோலவே நானும் இறந்து போகலாம். 

இரவு 12.25 வீட்டுக்குள் போனதும் தொலைபேசியில் வந்திருந்த 

குரல் வழியான குறுஞ்செய்தியில் செல்வச்சந்திரனின்  மரணச் செய்தியை சிறையில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு விடுதலையான நண்பர் ஒருவர் குரல் பதிவிட்டிருந்தார். 

செல்வச்சந்திரன்...,

2011ம் ஆண்டு தைமாதம் எனக்கு அறிமுகமானான். 

செல்வச்சந்திரன்...., 

அக்கா அக்கா என அவன் சொன்ன கதைகள் அவன் சிரிப்பு..., ஞாபகங்களில் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. 

IMG-20210703-WA0002.jpg
 
தான் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னான். எனினும் தன் மரணம் பற்றிப் பேசியது இல்லை. வாழ்வேன் எனும் நம்பிக்கை தான் அவனோடு பேசிய பொழுதுகளில் உணர்ந்திருக்கிறேன். 

கல்வி கற்க வேண்டிய காலத்தில் அவன் பாதை மாறியது நீண்ட இலட்சிய ஓட்டத்தில் அவனும் ஒருவனாகினான். காலக்கடனைத் தீர்க்க செல்வச்சந்திரன் தன்னை ஒப்படைத்தான். 

காலநதி அவனைச் சிறையில் அடைத்து அவன் உயிர்நதியை இடையறுத்து நோயாளியாக்கியது. ஆனால் ஒருநாள் சிறையிலிருந்து விடுதலை பெறுவேன் என்ற அவனது நம்பிக்கை நிறைவேறி ஒன்றரை வருடத்தில் இறந்துவிட்டான். 

25.06.21 அன்று மதியம் குளிக்க கிணத்தடிக்குப் போன செல்வச்சந்திரன் மயங்கி விழுந்தான். மருத்துவம் கிடைக்க முன்னே அவன் உயிர் பிரிந்துவிட்டது. 

IMG-20210703-WA0001.jpg

செல்வச்சந்திரனுக்கு என்ன நடந்தது? 

2வது தடவையாக மாரடைப்பு வந்து இறந்து போனான். சொல்கிறது மருத்துவ அறிக்கை. 

வாழும் கனவுகளோடு வாழத்தொடங்கியவன் இவ்வுலகிலிருந்தும் எங்களிடமிருந்தும் பிரிந்து விட்டான். 

2011 காலம் நேசக்கரம் ஊடாக செல்வச்சந்திரனின் குடும்பத்தினருக்கு தொழில் முயற்சி உதவியை வழங்கியும். கொஞ்சக்காலம் மருத்துவ உதவிக் கொடுப்பனவினை வழங்கியவர்களுக்கும் நன்றி. 

26.06.21 

சாந்தி நேசக்கரம்

https://mullaimann.blogspot.com/2021/07/blog-post.html?m=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வசந்திரனிற்கு கண்ணீர் அஞ்சலிகள்🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

சிறிய வேண்டுகோள் மீளவும் நேசக்கரத்தை ஆரம்பித்தால் என்ன...? படிக்கும் பிள்ளைகளிலருந்து இன்னும் எத்தனை பேர் அவதிப் பட்டுக கொண்டு இருப்பார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

நம் ஒவ்வொருவரின் வாழ்வும் இப்படித்தான் முடியப் போகிறது. நாங்கள் சிறையில் அனுபவித்த சித்திரவதைகளின் தாக்கம் அதனால் எம் உடல்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எங்களை இப்படித்தான் கொல்லப் போகிறது. 

சிறையில் நடந்த சித்திரவதைகள் பற்றி என்னால் விளங்கப்படுத்த முடியாது. நாளை இதுபோலவே நானும் இறந்து போகலாம். 

ஆழ்ந்த இரங்கல்கள்!!

14 minutes ago, யாயினி said:

உடல் பாதிப்பு மட்டுமல்ல, சிறையில் இருந்து அனுபவதித்த சித்ரவதைகளினால் வரும் உளப் பாதிப்புகள், வெளியே வந்தபின் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்க முடியாமல் ஏற்படும் உளைச்சல்கள்.. இப்படி எத்தனை உள்ளது..இது சம்பந்தமாக ஏதும் நடைபெறுகிறதா? ஆனால் அவற்றை இந்த திரியில் எழுதுவது சரியா தெரியவில்லை.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வசந்திரனிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் தின்று விட்ட எமது வரலாற்றைப் போல…,

வரலாற்றின் எழுதுகோல்களும்,

மௌனத்துடன் விடை பெறுகின்றன!

இயலாமை மீண்டும்…மீண்டும்,

ஏளனத்துடன் எக்காளமிடுகின்றது!

இதயம் கனத்த அஞ்சலிகள்..!

சாந்தி மீண்டும் நேசக்கரத்துக்கு உயிர் கொடுங்கள்…!

Link to comment
Share on other sites

5 hours ago, யாயினி said:

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

சிறிய வேண்டுகோள் மீளவும் நேசக்கரத்தை ஆரம்பித்தால் என்ன...? படிக்கும் பிள்ளைகளிலருந்து இன்னும் எத்தனை பேர் அவதிப் பட்டுக கொண்டு இருப்பார்கள்...

நேசக்கரம் இயங்கிக் கொண்டிருக்கிறது யாமினி.

5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்!!

உடல் பாதிப்பு மட்டுமல்ல, சிறையில் இருந்து அனுபவதித்த சித்ரவதைகளினால் வரும் உளப் பாதிப்புகள், வெளியே வந்தபின் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்க முடியாமல் ஏற்படும் உளைச்சல்கள்.. இப்படி எத்தனை உள்ளது..இது சம்பந்தமாக ஏதும் நடைபெறுகிறதா? ஆனால் அவற்றை இந்த திரியில் எழுதுவது சரியா தெரியவில்லை.. 

எல்லா முயற்சிகளும் நிதியுதவி இல்லாமல் சிரமங்களை எதிர்கொள்கிறோம்.

2 hours ago, புங்கையூரன் said:

சாந்தி மீண்டும் நேசக்கரத்துக்கு உயிர் கொடுங்கள்…!

நேசக்கரம் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. விளம்பரப்படுத்தல் பெரிதாக இல்லாமல் அமைதியாக வேலைகள் நடக்கிறது.

Link to comment
Share on other sites

2011  , 2012 ,2013 காலப்பகுதியில் இங்கே சிறையில் பாடுவோர் பற்றிய பதிவுகள் பகிர்ந்திருக்கிறேன். 

செல்லச்சந்திரனுக்கு கள உறவு தான் உதவியிருந்தார். என்னால் அந்த பதிவை எடுக்க முடியவில்லை. 

யாராவது அந்த இணைப்பினை கண்டால் தாருங்கள். 

நேசக்கரம் ஊடாக உதவியவர்கள் பலர். ஆவணமாக யாவும் இருக்கிறது.  உடனே தேடி எடுக்க முடியவில்லை.

உதவிய உறவே நன்றி . உங்களை இங்கே அறியத் தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

2 hours ago, shanthy said:

2011  , 2012 ,2013 காலப்பகுதியில் இங்கே சிறையில் பாடுவோர் பற்றிய பதிவுகள் பகிர்ந்திருக்கிறேன். 

செல்லச்சந்திரனுக்கு கள உறவு தான் உதவியிருந்தார். என்னால் அந்த பதிவை எடுக்க முடியவில்லை. 

யாராவது அந்த இணைப்பினை கண்டால் தாருங்கள். 

நேசக்கரம் ஊடாக உதவியவர்கள் பலர். ஆவணமாக யாவும் இருக்கிறது.  உடனே தேடி எடுக்க முடியவில்லை.

உதவிய உறவே நன்றி . உங்களை இங்கே அறியத் தாருங்கள்.

வணக்கம் சாந்தியக்கா

முகநூலில் எனது  பெயரை இணைத்து  விட்டிருக்கிறீர்கள்??

ஏனென்று புரியவில்லை?

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

வணக்கம் சாந்தியக்கா

முகநூலில் எனது  பெயரை இணைத்து  விட்டிருக்கிறீர்கள்??

ஏனென்று புரியவில்லை?

நேசக்கரம் ஊடாக அரசியல் கைதிகளுக்கு பலர் உதவினார்கள். நீங்களும் கூட. அந்த வரிசையில் உங்களையும் Tag பண்ணியுள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வச் சந்திரனுக்கு, கண்ணீர் அஞ்சலிகள். 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் மரணம் எதனால் ஏற்பட்டது என்பதற்கான நடுநிலை உடற்கூற்று பகுப்பாய்வு அவசியம். இவரின் மரணம் செயற்கையானதா.. மன உளைச்சல் சார்ந்ததா.. அல்லது நஞ்சூட்டல் சார்ந்தா என்பதை கண்டறிவது மிக முக்கியம்.. எதிர்காலத்தில் இப்படியான மரணங்களை தவிர்க்க.

கண்ணீரஞ்சலி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.