Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

செல்வச்சந்திரன் மரணமும் நினைவுகளும்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Friday, July 2, 2021

 https://youtu.be/2oeotNpiNwY

IMG-20210626-WA0007.jpg
IMG-20210627-WA0008.jpg
 

வணக்கம் சாந்தி, இன்று காலை சிறையில் இருந்து மீண்ட 16பேர் பற்றியும் இன்னும் விடுதலைக்கான நாளை எதிர்பார்த்திருக்கும் எல்லோர் பற்றியும் பேசினோம். நீண்ட நாட்களின் பின் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. எங்கட செல்வச்சந்திரன்  இறந்துவிட்டான்.

 அவன் இன்று மதியம் குளிக்க கிணத்தடிக்கு போன நேரம் மயங்கி விழுந்து இறந்து போனான்.

அவனுக்கு ஆதரவு தேவைப்பட்ட காலம் நீங்கள் செய்த மருத்துவ உதவிகள் ஆதரவு பற்றி அடிக்கடி பேசிக்கொள்வோம். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். 

நம் ஒவ்வொருவரின் வாழ்வும் இப்படித்தான் முடியப் போகிறது. நாங்கள் சிறையில் அனுபவித்த சித்திரவதைகளின் தாக்கம் அதனால் எம் உடல்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எங்களை இப்படித்தான் கொல்லப் போகிறது. 

சிறையில் நடந்த சித்திரவதைகள் பற்றி என்னால் விளங்கப்படுத்த முடியாது. நாளை இதுபோலவே நானும் இறந்து போகலாம். 

இரவு 12.25 வீட்டுக்குள் போனதும் தொலைபேசியில் வந்திருந்த 

குரல் வழியான குறுஞ்செய்தியில் செல்வச்சந்திரனின்  மரணச் செய்தியை சிறையில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு விடுதலையான நண்பர் ஒருவர் குரல் பதிவிட்டிருந்தார். 

செல்வச்சந்திரன்...,

2011ம் ஆண்டு தைமாதம் எனக்கு அறிமுகமானான். 

செல்வச்சந்திரன்...., 

அக்கா அக்கா என அவன் சொன்ன கதைகள் அவன் சிரிப்பு..., ஞாபகங்களில் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. 

IMG-20210703-WA0002.jpg
 

 

தான் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னான். எனினும் தன் மரணம் பற்றிப் பேசியது இல்லை. வாழ்வேன் எனும் நம்பிக்கை தான் அவனோடு பேசிய பொழுதுகளில் உணர்ந்திருக்கிறேன். 

கல்வி கற்க வேண்டிய காலத்தில் அவன் பாதை மாறியது நீண்ட இலட்சிய ஓட்டத்தில் அவனும் ஒருவனாகினான். காலக்கடனைத் தீர்க்க செல்வச்சந்திரன் தன்னை ஒப்படைத்தான். 

காலநதி அவனைச் சிறையில் அடைத்து அவன் உயிர்நதியை இடையறுத்து நோயாளியாக்கியது. ஆனால் ஒருநாள் சிறையிலிருந்து விடுதலை பெறுவேன் என்ற அவனது நம்பிக்கை நிறைவேறி ஒன்றரை வருடத்தில் இறந்துவிட்டான். 

25.06.21 அன்று மதியம் குளிக்க கிணத்தடிக்குப் போன செல்வச்சந்திரன் மயங்கி விழுந்தான். மருத்துவம் கிடைக்க முன்னே அவன் உயிர் பிரிந்துவிட்டது. 

IMG-20210703-WA0001.jpg

 

செல்வச்சந்திரனுக்கு என்ன நடந்தது? 

2வது தடவையாக மாரடைப்பு வந்து இறந்து போனான். சொல்கிறது மருத்துவ அறிக்கை. 

வாழும் கனவுகளோடு வாழத்தொடங்கியவன் இவ்வுலகிலிருந்தும் எங்களிடமிருந்தும் பிரிந்து விட்டான். 

2011 காலம் நேசக்கரம் ஊடாக செல்வச்சந்திரனின் குடும்பத்தினருக்கு தொழில் முயற்சி உதவியை வழங்கியும். கொஞ்சக்காலம் மருத்துவ உதவிக் கொடுப்பனவினை வழங்கியவர்களுக்கும் நன்றி. 

26.06.21 

சாந்தி நேசக்கரம்

https://mullaimann.blogspot.com/2021/07/blog-post.html?m=1

 

 

 

Edited by shanthy
http:// https://youtu.be/2oeotNpiNwY
 • Sad 7
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

செல்வசந்திரனிற்கு கண்ணீர் அஞ்சலிகள்🙏🏾

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

சிறிய வேண்டுகோள் மீளவும் நேசக்கரத்தை ஆரம்பித்தால் என்ன...? படிக்கும் பிள்ளைகளிலருந்து இன்னும் எத்தனை பேர் அவதிப் பட்டுக கொண்டு இருப்பார்கள்...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

நம் ஒவ்வொருவரின் வாழ்வும் இப்படித்தான் முடியப் போகிறது. நாங்கள் சிறையில் அனுபவித்த சித்திரவதைகளின் தாக்கம் அதனால் எம் உடல்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எங்களை இப்படித்தான் கொல்லப் போகிறது. 

சிறையில் நடந்த சித்திரவதைகள் பற்றி என்னால் விளங்கப்படுத்த முடியாது. நாளை இதுபோலவே நானும் இறந்து போகலாம். 

ஆழ்ந்த இரங்கல்கள்!!

 

14 minutes ago, யாயினி said:

 

 

உடல் பாதிப்பு மட்டுமல்ல, சிறையில் இருந்து அனுபவதித்த சித்ரவதைகளினால் வரும் உளப் பாதிப்புகள், வெளியே வந்தபின் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்க முடியாமல் ஏற்படும் உளைச்சல்கள்.. இப்படி எத்தனை உள்ளது..இது சம்பந்தமாக ஏதும் நடைபெறுகிறதா? ஆனால் அவற்றை இந்த திரியில் எழுதுவது சரியா தெரியவில்லை.. 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

காலம் தின்று விட்ட எமது வரலாற்றைப் போல…,

வரலாற்றின் எழுதுகோல்களும்,

மௌனத்துடன் விடை பெறுகின்றன!

இயலாமை மீண்டும்…மீண்டும்,

ஏளனத்துடன் எக்காளமிடுகின்றது!

இதயம் கனத்த அஞ்சலிகள்..!

சாந்தி மீண்டும் நேசக்கரத்துக்கு உயிர் கொடுங்கள்…!

 

 

Edited by புங்கையூரன்
எழுத்துப் பிழை
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, யாயினி said:

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

சிறிய வேண்டுகோள் மீளவும் நேசக்கரத்தை ஆரம்பித்தால் என்ன...? படிக்கும் பிள்ளைகளிலருந்து இன்னும் எத்தனை பேர் அவதிப் பட்டுக கொண்டு இருப்பார்கள்...

நேசக்கரம் இயங்கிக் கொண்டிருக்கிறது யாமினி.

5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்!!

 

 

உடல் பாதிப்பு மட்டுமல்ல, சிறையில் இருந்து அனுபவதித்த சித்ரவதைகளினால் வரும் உளப் பாதிப்புகள், வெளியே வந்தபின் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்க முடியாமல் ஏற்படும் உளைச்சல்கள்.. இப்படி எத்தனை உள்ளது..இது சம்பந்தமாக ஏதும் நடைபெறுகிறதா? ஆனால் அவற்றை இந்த திரியில் எழுதுவது சரியா தெரியவில்லை.. 

 

எல்லா முயற்சிகளும் நிதியுதவி இல்லாமல் சிரமங்களை எதிர்கொள்கிறோம்.

 

2 hours ago, புங்கையூரன் said:

 

சாந்தி மீண்டும் நேசக்கரத்துக்கு உயிர் கொடுங்கள்…!

 

 

நேசக்கரம் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. விளம்பரப்படுத்தல் பெரிதாக இல்லாமல் அமைதியாக வேலைகள் நடக்கிறது.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

2011  , 2012 ,2013 காலப்பகுதியில் இங்கே சிறையில் பாடுவோர் பற்றிய பதிவுகள் பகிர்ந்திருக்கிறேன். 

செல்லச்சந்திரனுக்கு கள உறவு தான் உதவியிருந்தார். என்னால் அந்த பதிவை எடுக்க முடியவில்லை. 

யாராவது அந்த இணைப்பினை கண்டால் தாருங்கள். 

நேசக்கரம் ஊடாக உதவியவர்கள் பலர். ஆவணமாக யாவும் இருக்கிறது.  உடனே தேடி எடுக்க முடியவில்லை.

உதவிய உறவே நன்றி . உங்களை இங்கே அறியத் தாருங்கள்.

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

2 hours ago, shanthy said:

2011  , 2012 ,2013 காலப்பகுதியில் இங்கே சிறையில் பாடுவோர் பற்றிய பதிவுகள் பகிர்ந்திருக்கிறேன். 

செல்லச்சந்திரனுக்கு கள உறவு தான் உதவியிருந்தார். என்னால் அந்த பதிவை எடுக்க முடியவில்லை. 

யாராவது அந்த இணைப்பினை கண்டால் தாருங்கள். 

நேசக்கரம் ஊடாக உதவியவர்கள் பலர். ஆவணமாக யாவும் இருக்கிறது.  உடனே தேடி எடுக்க முடியவில்லை.

உதவிய உறவே நன்றி . உங்களை இங்கே அறியத் தாருங்கள்.

 

வணக்கம் சாந்தியக்கா

முகநூலில் எனது  பெயரை இணைத்து  விட்டிருக்கிறீர்கள்??

ஏனென்று புரியவில்லை?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

 

வணக்கம் சாந்தியக்கா

முகநூலில் எனது  பெயரை இணைத்து  விட்டிருக்கிறீர்கள்??

ஏனென்று புரியவில்லை?

நேசக்கரம் ஊடாக அரசியல் கைதிகளுக்கு பலர் உதவினார்கள். நீங்களும் கூட. அந்த வரிசையில் உங்களையும் Tag பண்ணியுள்ளேன். 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

செல்வச் சந்திரனுக்கு, கண்ணீர் அஞ்சலிகள். 

Link to comment
Share on other sites

 

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவரின் மரணம் எதனால் ஏற்பட்டது என்பதற்கான நடுநிலை உடற்கூற்று பகுப்பாய்வு அவசியம். இவரின் மரணம் செயற்கையானதா.. மன உளைச்சல் சார்ந்ததா.. அல்லது நஞ்சூட்டல் சார்ந்தா என்பதை கண்டறிவது மிக முக்கியம்.. எதிர்காலத்தில் இப்படியான மரணங்களை தவிர்க்க.

கண்ணீரஞ்சலி. 

 • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By ampanai
   பயங்கரவாத தடைச்சட்டத்தில் 14 வருடங்களுக்கு முன்னர் அந்த கோத்தபாய இராசபக்சேவை கொலைசெய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டவர்களில் சந்திரபோஸ் செல்வச்சந்திரன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
   இவர் மீதான குற்றங்களுக்கு ஆதாரம் இல்லாததாலும் அவரின் குற்ற ஒப்புமூலத்தை நிராகராதித்த நீதவான் சந்திரபோஸ் செல்வச்சந்திரனை விடுதலை செய்துள்ளார்.
   இவர் கோத்தபாய இராசபக்சேவை கொலை செய்ய முயற்சித்தவர்களில் நாலாவது சந்தேக நபராவார்.
   இவர் ஒரு புற்றுநோய் சிகிச்சை பெறுபவரும் ஆவார்.
   A Tamil prisoner who was in prison for 14 years on an alleged offence of an attempt on the life of former Defence Secretary Gotabaya Rajapaksa, was acquitted by the Colombo High Court today.
   Five Tamil accused were indicted in the high court under the PTA on December 4, 2013 for the alleged offences purportedly committed on December 1, 2006 at the Kollupitiya Piththala junction.
   The trial on the 4th accused Chandrabose Selvachandran was conducted before High Court Judge Pradeep Hettiarachchi.
   After having heard the submissions of both parties and evidences, the Judge observed that the confession had been rejected in the voir dire inquiry and there was no other credible evidences forwarded by the prosecution.
   After the conclusion of the trial, the high court judge acquitted the 4th accused who is a cancer patient.
   K.V. Thavarasha P.C instructed by Ms. Tharmarajah Tharmaja appeared for the accused. Deputy Solicitor General Rohantha Abeysuriya appeared for the state. (S.S Selvanayagam)
   http://www.dailymirror.lk/breaking_news/After-14-years-in-jail-Tamil-prisoner-acquitted/108-179898
 • Topics

 • Posts

  • பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசியத்தை ஊட்டும் உணவகம்! AdminSeptember 25, 2021 பிரான்சு பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசிய உணர்வையும் உணவோடு ஊட்டும் அதிசய உணவகம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவரின் அழகிய வர்ணப்படம் வருபவர்களை வரவேற்பதுடன், உள்ளே தமிழீழத் தேசியத் தலைவரின் இல்லம்,புதல்வன் பாலச்சந்தின், முதல் மாவீரர் சங்கர், தியாகி அன்னை பூபதி, தியாக தீபம் திலீபன்,முதல் பெண் மாவீரர் மாலதி, முதல் கரும்புலி மில்லர்,கடற் கரும்புலி அங்கையற்கண்ணி, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்டவர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சினிமாப் பாடல்களை முற்றாகத் தவிர்த்து தமிழீழத் தாயகப் பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும். அத்தோடு மிகவும் சுத்தமான முறையில் குறித்த உணவகம் பேணப்படுகிறது. இது தமிழ்த்தேசிய உணர்வாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது எனவும், இவ்வாறான ஓர் உணவகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு என்று அதன் உரிமையாளர் உணர்வோடு எரிமலைக்குத் தெரிவித்தார். (எரிமலையின் செய்திப் பிரிவு)   http://www.errimalai.com/?p=67487
  • தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த கருத்தை சமூக இணைவுடன் வெளிப்படுத்தச் செய்யும் பொது முயற்சி ஆரம்பம் வடக்கு-கிழக்கைப் பிரதேசவாரியாகவும் தேசியப்பட்டியலூடாகவும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இயன்றவரை ஒன்றிணைந்து ஈழத்தமிழர்களின் கூட்டு உரிமை சார்ந்த நிலைப்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இது தொடர்பில், கடந்த வருட இறுதியிலும் இவ்வருட ஆரம்பத்திலும் ஒன்றிணைந்த நிலைப்பாட்டை மேற்கொள்ளச் செய்யும் சந்திப்புகளை நடாத்துவதில், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் முயற்சியோடு மதத்தலைவர்களும் இணைந்து ஊக்குவித்தோம். சில கூட்டங்களைத் தலைமையேற்றும் நடாத்தியிருந்தோம். சமீபத்தைய நாட்களில் மீண்டும் இதைப் போன்ற ஒரு வரலாற்றுத் தேவை எழுந்திருப்பதாகச் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் எம்மைத் தொடர்புகொண்டு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் சிக்கல்கள் எழும்போது, அவற்றைத் தீர்த்துவைக்கவென மீண்டும் மீண்டும் புதிதாக முயற்சிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, ஒரு பொதுவான மாற்றீட்டு அணுகுமுறையை வகுத்துக்கொள்வதை ஆராய்ந்து செயற்படுத்துவதே பொருத்தமாகத் தெரிகிறது. இவ்வாறான ஒரு முயற்சியை முன்னெடுப்பதில் முதற்கட்டமாகச் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் கருத்துகளைப் பெற்று, அவற்றைப் பரிசீலித்து, அடுத்;தகட்டமாகப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாகவும் கூட்டாகவும் கலந்துரையாடி, தக்க வழி ஒன்றை வகுக்க ஆவன செய்வதற்காகப் பூர்வாங்கச் செயற்குழு ஒன்றை எமது மேற்பார்வையில் உருவாக்கிவருகிறோம். வடக்கு-கிழக்கு இணைந்து மேற்கொள்ளும் இம்முயற்சியில் சட்டத்துறை சார்ந்த இளந்தலைமுறையோடு, சிவில் சமூக மற்றும் மரபுரிமைச் செயற்பாடுகளில் இயங்கிய அனுபவம் கொண்டவர்களும், ஊடக அமையங்களை ஸ்தாபித்துச் செயற்பட்ட அனுபவம் வாய்ந்தவர்களுமாக, எந்தவித அரசியற் கட்சிப் பின்னணியும் இல்லாத ஐவர் இணைக்கப்பட்டுள்ளார்கள். முதற்கட்டமாக, இவர்கள் கல்வி மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்களோடு கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் பூர்வாங்கக் குழுவின் பொதுத் தொடர்பை சட்டத்துறை சார்ந்த மூவர் கையாள்வது பொருத்தம் என்ற அடிப்படையிலும், இளைய தலைமுறையின் பங்கேற்பு இவ்வாறான முயற்சிகளுக்கு அவசியம் என்ற நோக்கோடும், மேலும் இரண்டு சட்டத்தரணிகள், இயன்றவரை பால், மத, மற்றும் பிரதேச சமத்துவத்துடன் இணைக்கப்பட்டு பொதுத்தொடர்பைக் கையாளவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். செயற்குழு மற்றும் பொதுத்தொடர்பில் பங்கேற்பவர்களின் விபரங்களை, ஆரம்பக் கலந்துரையாடல்கள் முடிவடைந்ததும் வெளிப்படைத்தன்மையோடு அறியத்தரும் பணியை மன்னாரைச் சேர்ந்த அ. அன்ரனி றொமோள்சன் எனும் சட்டத்தரணியிடம் கையளித்திருக்கிறோம். இந்தக் குழுவில் இணைந்து கொள்ளவும், ஆலோசனைகளை வழங்கவும், இம் முயற்சியை ஊக்குவித்துச் செயற்படவும் விரும்புவோர் participate@tamildemocracy.org என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தமது தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். கல்வித்துறை, சட்டத்துறை, மனித உரிமை, ஊடகத்துறை மற்றும் இதர சமூகப் பரப்புகளில் இருந்து கருத்துக்களை உள்வாங்கி, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரோடும் கலந்தாலோசித்து, உகந்த ஒரு பொறிமுறையை வகுக்கும் பணியை முன்னெடுக்கவேண்டும் என்ற நல்லாசியுடன் இம் முயற்சியை ஆரம்பித்து வைப்பதில் மனநிறைவடைகிறோம். அனைவரின் ஆதரவும் இம்முயற்சிக்குக் கிட்ட இறையருளை வேண்டிநிற்கிறோம். அதி. வண. கலாநிதி கி. நோயெல் இம்மானுவேல் ஆயர், திருகோணமலை மறை மாவட்டம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கயிலை ஆதீனம் http://www.samakalam.com/தமிழ்ப்-பாராளுமன்ற-உறுப்/  
  • பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் ஆத்திரமூட்டும் செயல்கள் அரசியல் சுயநிர்ணயத்திற்காக போராடுவதற்கு மக்களை மேலும் உறுதியளிக்கும் – நீதியரசர் விக்னேஸ்வரன் இறந்தவர்கள் எந்த அளவுக்கு அதிகாரங்களின் மனசாட்சியைத் தொந்தரவு செய்கிறார்கள் என்பதையே தற்போதைய பொலிஸாரின் செயல் காட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேலும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்கள், மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் நினைத்தால் அவர்களே ஏமாற்றப்படுவார்கள்.அதாவது இவ்வாறான செயற்பாடுகள் இந்த நாட்டில் அரசியல் சுயநிர்ணயத்திற்காக போராடுவதற்கு மக்களை மேலும் உறுதியளிக்கும் என மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இறந்த வீரர்களை நினைவுகூறுவதற்கு மக்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கும் முன் நீதிமன்றங்கள் மிகவும் கவனத்துடன் இருக்கும் என்று நம்புகிறேன்.கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால் மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.செல்வராசா கஜேந்திரனை, பொலிஸார் இழுத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லும் காணொளி காட்சியை நானும் பார்த்தேன். இறந்தவர்களை நினைவுகூரும் விழாவில் அவர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு பொதுவான குற்றவாளியைப் போல பொலிஸாரினால் இழுத்துச் செல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். மேலும், எனக்குத் தெரிந்தவரை நாம் இறந்தவர்களை நினைவில் கொள்ள முடியாது என்று எந்த சட்டமும் இல்லை.இதேவேளை பொலிஸாரின் இந்தச் செயல், இறந்தவர்கள் எந்த அளவுக்கு அதிகாரங்களின் மனசாட்சியைத் தொந்தரவு செய்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இறந்த ஆவிகளால் தொந்தரவு இல்லாமல் அமைதியாக தூங்குவது அவர்களுக்கு கடினமாக இருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக திலீபன் அமைதியான சத்தியாகிரியாக இருந்தார். அவர் உன்னத காரணங்களுக்காக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். உன்னத காரணங்களுக்காக இறந்த ஒரு அமைதியான எதிர்ப்பாளரை மக்கள் நினைவு கூர்வது பற்றி அரசாங்கம் ஏன் கலங்குகிறது? என அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.(15)   http://www.samakalam.com/பொலிஸாரினால்-மேற்கொள்ளப/
  • ‘தாய்நிலம்’ ஆவண பட நிகழ்வில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு: சம்பந்தன்- விக்னேஸ்வரன் கூட்டாக ஆரம்பித்து வைப்பர். September 25, 202 தமிழ் மக்களின் தாயகமான வடக்கு-கிழக்கில் காலம் காலமாக அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் ‘தாய்நிலம்: நில அபகரிப்பு – இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று ( ThaaiNilam: Land Grabbing – The Real Pandemic for the Tamils in Sri Lanka) என்ற ஆவணப் படம் எதிர்வரும் சனிக்கிழமை மாலை இலங்கை நேரப்படி 5.30 மணிக்கு ( லண்டன் நேரம் பிற்பகல் 1.00 மணி, டொரண்டோ மற்றும் நியுஜேர்சி நேரம் காலை 8 மணி) திரையிடப்படவுள்ளது. இந்த ஆவணப்படத்தை சோமீதரன் இயக்கியுள்ளார். இந்த ஆவண பட திரையிடல் நிகழ்வை தொடர்ந்து ‘இலங்கையின் இனஞ் சார்ந்த நில ஆக்கிரமிப்பு: முறைகள், விளைவுகள் மற்றும் தமிழ் நில பாதுகாப்பு’ ( Sri Lanka’s Ethnocratic Land Grabs: Methods, Consequences, and Tamil Land Defence ) என்ற இணையவழி கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் இந்தியாவில் 30 வருடங்களுக்கு மேலாக மக்களின் நில உரிமைகளுக்காக போராடும் செயற்பாட்டாளரான கலாநிதி மேதா பட்கார் அம்மையார், சென்னை பல்கலைக்கழ பேராசிரியர் ராமு மணிவண்ணன், அமெரிக்காவின் ஓக்லாந்து நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் அனுராதா மிட்டால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்வில் இஸ்ரேல் நாட்டில் இருந்து பேராசிரியர் ஓரன் யிப்டசெல் அவர்கள் முதன்மை உரை ஆற்றுவார். இந்த குழு விவாதத்தை தொடர்ந்து ஈழத்தை பூர்வீகமாக கொண்ட கனடாவின் புகழ்பெற்ற இசை கலைஞரான ஷான் வின்சென்ட் டி போலின் இசை நிகழ்வு ஒன்று 20 நிமிடங்களுக்கு இடம்பெறும். ஆவண படம் திரையிட்ட பின்னர், அந்த படம் தொடர்பிலான ஆய்வு ரீதியான கலந்துரையாடல் ஒன்றில் இளையோர்கள் கலந்துகொள்வார்கள். இந்த கலந்துரையாடலில் பிரித்தானியா, தமிழ் நாடு மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து இளையோர்கள் கலந்துகொள்வர். இந்த நிகழ்வினை பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுடன் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் அவர்கள் கூட்டாக ஆரம்பித்துவைப்பார். தாய்நிலம் என்ற இந்த ஆவண படத்தை தமிழ் மக்கள் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டும் என்றும் அதன்பின்னர் நடைபெறும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் இந்த நிகழ்வையும் ஆவண பட வெளியீடையும் ஏற்பாடு செய்துள்ள நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். “எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 5. 30 மணிமுதல் சில மணி நேரங்களுக்கு உங்கள் நேரத்தை தயவுசெய்து ஒதுக்கிவைத்து இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று நீதியரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். Zoom Link: https://bit.ly/LandGrab2021 Webinar ID: 841 5154 5684 Passcode: TH2021 ஊடகப் பிரிவு – தமிழ் மக்கள் கூட்டணி https://globaltamilnews.net/2021/166437  
  • கடும் பயணக்கட்டுப்பாடுகளுடன் இலங்கை திறக்கப்படுகிறது! September 25, 2021 ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்டதைப் போல் இல்லாமல், கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஒக்டோபர் 1ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் நாடு திறக்கப்படக்கூடுமென தகவல்கள் வெளியாககியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 76ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, நியூயோர்க் சென்றுள்ளார். அதனால், கொவிட்-19 தொற்றொழிப்பின் ஜனாதிபதி செயலணியின் நேற்றைய (24.09.21) கூட்டம் நடைபெறவில்லை. எனினும், ஒக்டோபர் முதலாம் திகதிக்குப் பின்னர் நாட்டை திறப்பதற்கு தேவையான கட்டுப் பாடுகளை ஆராய்ந்து அறிக்கையிடுமாறு கடந்த கூட்டத்தின் போது, விடயதானத்துக்குப் பொறுப்பானவர்களிடம் ஜனாதிபதி பணித்திருந்தார். கொவிட்-19 தொற்றொழிப்பின் ஜனாதிபதி செயலணி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூடி ஆராய்ந்து முடிவெடிக்கும். எனினும், ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர், ஒக்டோபர் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர், பிறிதொருநாளில் அச்செயலணி கூடி முடிவெடுக்கக் கூடும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, நாடு, தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்ததன் ஊடாக நல்ல பெறுபேறுகள் கிடைத்துள்ளன எனத் தெரிவித்த ராகம வைத்திய பீடத்தில் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா, கடுமையாக கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணியாளர்களை அழைப்பது 25 சதவீதத்தில் மட்டுப்படுத்தவேண்டும். பொது போக்குவரத்தில் பயணிகளை ஏற்றிச்செல்வது 50 சதவீதமாக இருக்கவேண்டும் என்றும் பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார். திருமண வைபவங்கள் உள்ளிட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுகூடும் நிகழ்வுகளை முழுமையாக தடைசெய்யமுடியும் எனத் தெரிவித்துள்ள அவர், நாட்டை முழுமையாக திறக்கவேண்டுமாயின் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் செயற்றிட்டம் 70-80 சதவீதங்களுக்கு அண்மித்திருக்க வேண்டும். நாட்டை முடக்கியிருந்த இந்தக்காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கை திருப்தியடையும் வகையில் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://globaltamilnews.net/2021/166432
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.