Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மெரிம்புலா(Merimbula) - மனதை மயக்கும் ஒரு கடலோரப் பிரதேசம்


Recommended Posts

மெரிம்புலா(Merimbula) 

large.C6F2C108-F385-4B83-81BD-5C512FC68FA8.jpeg.74b551fe57d0e4b73f70e77455b6aac4.jpegஅவுஸ்ரேலியாவின்  நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தென்பகுதியில்  உள்ள ஒரு கடற்கரை நகரம். அங்கே போகும் சந்தர்ப்பம் ஒன்று கடந்த மார்கழியில் கிடைத்தது.. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

அவுஸ்ரேலியாவின் அழகு அதன்  நெரிசல் மிகுந்த, இயந்திரமான வாழ்க்கையுடைய நகர்புறங்களை விட இம்மாதிரியான இயற்கையோடு அமைந்த காடுகள், மலைகள், ஏரிகள் பண்ணைகள் நிறைந்த அமைதியான கிராமங்களிலேயே உள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

மெரிம்புலா என்பது அவுஸ்ரேலிய பூர்வீக குடிகளின் மொழியில் ‘இரண்டு ஏரிகள்’ என்பதிலிருந்து உருவானது, இது நகரின் தெற்குப் பகுதியில் உள்ள மெரிம்புலா ஏரி மற்றும் வடக்குப் பக்கத்தில் சிறிய Back ஏரி ஆகியவற்றைக் குறிக்கிறது. அமைதியான இந்த நீர்ஏரிகளில் கயாக்(Kayak )மற்றும் ஸ்டாண்ட்-அப்துடுப்பு பலகை(Stand-up Paddle board)) போன்றவற்றில் ஈடுபடமுடியும்.. 

4-C9-A688-C-694-E-431-A-BDB5-6135-E99-DE

மெரிம்புலாவிற்கு போகும் வழியில்,
போம்போ ஹெட்லேண்ட் குவாரி(Bombo Headland Quarry) ஒன்றை பார்க்க முடிந்தது..

large.4FA87A6E-F35F-449F-A467-2FCEF9F56789.jpeg.8e576ba15589f90cdfeb0885ca019e24.jpegபல ஆண்டுகளாக நீல உலோகத்தை உற்பத்தி செய்த ஒரு பிரதேசம், ஆனால் இப்போது மூடப்பட்டு வரலாற்றுமிக்க இடமாக பட்டியிலிடப்பட்டுள்ளது. 

இங்கே, பாம்போ ஹெட்லாண்டின் அசாதாரண பசால்ட் பாறைகள் அதிகளவில் காணப்படும். பசால்ட் என்பது கரிய நிறமுடைய பாறை ஆகும். 
large.2D629887-E8BD-48E1-AB55-1A99F2509C7A.jpeg.0fb81ea8f32791d99ae726d0d354234a.jpegஇந்த பாறை வடிவங்கள் பிராந்தியத்தின் வளமான சுரங்க வரலாற்றை கூறும் (1880கள் மற்றும் 1900 களில்) நீல உலோகத்தை தயாரிக்கும் குவாரி ஆகும். இப்பொழுது குவாரி மூடப்பட்டு, புவியியல் ஆராய்ச்சிதளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

8543-BD3-F-7317-4785-90-A1-EEEB1769-E7-A

மெரிம்புலாவிலிருந்து, தில்பா-தில்பா(Tilba- Tilba), மிஸ்ரி கடற்கரை(Mystery Bay), நீலக்கடற்கரை(The Blue Pool), வாகோங்கா (Wagonga Head), நரோமா(Narooma), ஹேண்ட்கர்சீப் கடற்கரை(Handkerchief Beach) மற்றும் Tuross Head போன்ற இடங்களை பார்க்க முடியும்.


 தில்பா-தில்பா(Tilba- Tilba)

4396-A8-F9-B3-C6-4-F91-8-D02-27-ED90746-
பசுமையான மலைகள், பள்ளத்தாக்கு மற்றும் குலாகா மவுண்ட் ஆகியவை பின்னணியில் உள்ள மிக அழகான அமைந்துள்ள கிராம்புற இடமாகும்..

B5-F062-AA-A4-B6-4-CDE-AD92-184-A19-F0-A
பழைமை வாய்ந்த முன்னொரு காலத்தில் எரிமலையாக இருந்த குலாகா  மலை, அவுஸ்ரேலிய பூர்வீக குடிகளான யூயின் பழங்குடி மக்களுக்கு ஆன்மீக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். 

அடுத்ததாக சென்ற இடம் :- மர்ம கடற்கரை(Mystery Beach 🏖)


large.E68C3A66-B286-4053-9672-EDF2000C2BD5.jpeg.c6574a6b4d556b7592756797bb02e029.jpeg

உள்ளூர் மக்களின் கதைப்படி, 1880 ஆம் ஆண்டில் புதிய தங்கக் களங்களை ஆய்வு செய்யும் பணியில் ஒரு புவியியலாளர், லாமண்ட் யங், அவரது உதவியாளர் மற்றும் மூன்று ஆண்கள் காணாமல் போனதைச் சுற்றியுள்ள மர்மத்திலிருந்து மர்ம விரிகுடாவின்/மர்ம கடற்கரை என்ற பெயர் உருவாகியதாக கூறுகிறார்கள். 

கடலோர யுயின் என்ற பூர்வீக்குடிகள் இந்த பகுதியில் தற்போதும் முகாமிட்டு, பாராம்பரிய முறையில் மீன் பிடித்து வருகின்றனர்.. அதேபோல கடற்கரையோடு அமைந்த Caravan parkல் வெளியாட்களும் முகாமிட்டு, விடுமுறையை கழிக்கின்றனர்.. 

 large.EDF5069C-F7C5-451D-BD8F-53745214B176.jpeg.c26a29cad798d40515e3f78df79eb8bd.jpeg
இந்த கடற்கரை மான்டேக் தீவு (பரங்குபா) பின்னணியில் அமைக்கப்பட்டிருப்பதுடன், பாறைகள் நிறைந்த ஒரு வியத்தகு நிலப்பரப்புடன், உள்ளதால், நீங்கள் கடல் மற்றும் மணற்தீவுகளை பார்க்கும்போது மர்மகதைகளில் வரும் இடங்களைப்பார்ப்து போல உணருவீர்கள்..

பல சிறிய மணல் தீவுகள்/குன்றுகள் காணப்படுவதால், பலவிதமான கடல் வாழ்வு உயிரினங்களுக்கு புகலிடங்களை  வழங்குகிறது.. 

5-F36-E4-E4-252-B-49-F1-8-B7-E-066-A1394

இங்கே எனக்கும் கூட வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் ஒன்று ஏற்பட்டது..

-தொடரும்

Edited by பிரபா சிதம்பரநாதன்
 • Like 8
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே எனக்கும் கூட வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் ஒன்று ஏற்பட்டது..

உங்கள் வாழ்க்கையில் முக்கியமானவர்கல் எவரையும் சந்தித்தீர்களோ? 

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யோசித்துப் பார்த்தால், பூர்விக குடிகளுக்கு சொந்தமான ஒரு முழு கண்டத்தையுமே ஆட்டையை போட்டு இருக்கிறார்கள், 18ம் நூறாண்டில் வந்து சேர்ந்த பிரிட்டிஷ்காரர்கள்.

உள்ள அடாத்தா இருந்து கொண்டு, முதலில் வெள்ளைகள் மட்டும் என்றார்கள், இப்ப அகதி வரக்கூடாது என்கிறார்கள்....

காலம் 🤭

Edited by Nathamuni
 • Like 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே எனக்கும் கூட வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் ஒன்று ஏற்பட்டது..

-தொடரும்

தொடருங்கள்.. வாசிக்க ஆவலாக உள்ளோம்.👌

 • Like 1
Link to comment
Share on other sites

Mystery Beachன் தொடர்ச்சி….

இங்கே சிறிய/நடுத்தர அளவான, ஓரளவிற்கு உயரமான பாறைத்தீவுகள் கடலில் இருக்கின்றன.. 

large.E4FF7F2A-6471-41BE-B102-FF01D8366E78.jpeg.969b527c0ba181990b10bc3aae6e836a.jpegஅப்படியான ஒரு பாறையின் மீது ஆர்வக்கோளாறில் ஏறி 🧗‍♀️கடலின், அலையின் சத்தத்தை கையடக்க தொலைபேசியில் பதிந்துக் கொண்டிருக்கையில், என்னோடு வந்திருந்தவர்” பிரபா! அலையடித்துக் கொண்டு போகப்போகுது, கவனம்” என்று சொல்லிமுடிக்கவில்லை பெரிய அலையொன்று எதிர்பாராதவிதமாக என்மீது விழ, திடுக்கிட்டு நானும் விழ(நடந்தது கையடக்கதொலைபேசியில் வீடியோவாக பதிவாகியிருந்தமையால் அதை இப்படி படங்களாக இணைத்து போடமுடிந்தது👇🏼)

2130-D7-F3-84-AD-45-C4-A04-C-7-D3-ACBD85

அந்த நிமிஷத்தில் தள்ளி நின்றிருந்த இன்னொரு பெண்மணி எடுத்த ஷாட்தான் இது. சரியான சமயத்தில் “கிளிக்”செய்ததை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.. படத்திலிருந்து என் உருவத்தை snipping tool உதவியுடன் எடுத்துவிட்டு இணைத்துள்ளேன்..👇🏼

large.C0F7E232-93FF-4E60-93CC-07394E7A7736.png.5107db2e5354d12e85e1ff57515cf77b.png

அதிவேகத்துடன் எதிர்பாராமல் வந்த அலையில நான் தடுமாறியிருந்தால், பாறையிலிருந்து உருண்டு கடலுக்குள் விழுந்து காணாமல் போயிருப்பேன்😰.. 
எதிர்பாராதவிதமான ஒரு அனுபவம்!!

large.07A3FEC6-E5F3-4A26-A8EE-26AC397D7DEB.jpeg.101dae33255cbfef98e4368c59f7c0d8.jpeg

 

என்னை கவர்ந்த இன்னொரு கடற்கரை, இந்த நீலக்கடற்கரை.. - The Blue Pool

6-B995-E7-E-A04-A-4-A09-AC30-05-BA68-C54

Bermugaiயில் உள்ள நீலக்கடற்கரை, அந்த கடலின் நீலம் என்னவொரு அழகு!!! ஆழ்ந்த கருமையான நீலம் அதற்கேற் விதத்தில் உள்ள கரும்பாறைகள், பார்த்துக்கொண்டே இருக்கலாம்!!

large.1618A66B-FD12-4FD7-AEC8-CC3FF2F2F6AD.jpeg.f2221876d188433209904e48c5bf25d4.jpeg

பசிபிக் பெருங்கடலை பார்த்தபடி இருக்கும் இந்த கடற்கரையில் திமிங்கலங்களை, அவற்றின் வசந்தகால இடம்பெயர்வின் போது பார்க்க வாய்ப்புள்ளது. 
50-E7-ABC1-26-FB-4-A6-A-997-E-055-E7-D94

இங்கே கடல் நீரைக்கொண்ட பாறைகளினலான நீச்சல் குளம் உள்ளது.. அத்துடன் ஸ்நோர்கெல்லிங் செய்யவும் உகந்த இடமாகும்.

large.AED5EBCE-3097-4351-9733-FF4D4ED44694.jpeg.f19de39d34cf3e5f208549c940be0b1f.jpeg
 

-தொடரும்

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
 • Like 6
Link to comment
Share on other sites

large.8111DCC2-6603-45FE-BEA3-A904FA177ED2.jpeg.1c6d3fd5ecfe64ea81175af7d2c24293.jpeg

63932-F66-C43-C-4260-A913-37-BED7147485.

நரோமா ஒரு நீலாம்பரி.. 
அவுஸ்ரேலிய பூர்வீகுடிகளின் மொழியில் நரோமா என்றால் “ தெளிந்த நீலக்கடல்”,. அவர்கள் சரியான பெயரையே இந்த நகருக்கு வைத்திருக்கிறார்கள். ஏனெனில் அது நியூ சவுத் வேல்ஸின் தென் கடற்கரையின் யூரோபோடல்லா பகுதியில் உள்ள இந்த அழகான நகரத்தின் நீரின் வண்ணங்கள் மனதை கொள்ளை கொள்ளும். கடற்கரைகளின் நீலம், அருகிலுள்ள ஏரிகளின் அமைதியான நீலம், மாண்டேக் தீவைச் சுற்றியுள்ள கடலின் ஆழமான நீலம் மற்றும் பச்சையும் நீல நிறமும் கலந்த அழகிய வாகோங்கா இன்லெட்டின் நீர் போன்றவை.. இந்த நகரத்தின் அழகை மெருகூட்டுகிறது; 


9-C070-FC1-242-E-4-ADF-A836-F959538-E439

அடுத்து சென்ற இடம், இன்னொரு வித்தியாசமான பெயரைக்கொண்ட ஹேண்ட்கர்சீப் கடற்கரை என்று குறிப்பிடப்படும்👇🏼.
3-D4788-A8-9-E0-F-45-CB-971-D-654722-DCA

இங்கே நங்குட்கா ஏரி கடலை வந்தடையும் இடம், 300 மீட்டர் நீளமுள்ள மணல் பாதையை கொண்டுள்ளதால் இது குழாய் சவாரிக்கு(tube ride)அருமையான இடம், ஏனெனில் இந்த நீரோட்டமானது உங்களை மிதமான வேகத்தில் தள்ளும் அத்துடன் கடலுடன் சேரும் இடத்தில் நீங்கள் எழுந்து நின்று வெளியேறக்கூடிய அளவுக்கு நீர் பெரும்பாலும் ஆழமற்றதும் ஆகும்.. ஆனால்  இதன் ஆழமானது நீரோட்டங்களின் தன்மைக்கு ஏற்பவும் காலநிலைக்கு ஏற்பவும் மாறுபடலாம் என்பதுடன் சரியான பாதுகாப்பின்றி நீந்துவது ஆபத்திலும் முடியலாம். 
 

இந்த இடத்திலிருந்து 30 நிமிட கார் ஓட்டத்தில் கடற்கரையோரத்தில் பல வடிவங்களில் இயற்கையாக அமைந்த பாறைகளை பார்க்கமுடியும்

large.B10DD6CC-1EDE-4A6A-9FDA-DC5FE28302C6.jpeg.42551b363de2aaa80b125b728e30b60c.jpeg

ஒட்டக வடிவ பாறை, கண்ணாடி பாறை மற்றும் அவுஸ்ரேலிய வடிவ பாறை.. இப்படி பல. 
large.6C894CD8-6B26-4B7E-B489-0A850CE2251D.jpeg.9d1573f6c6f3b6003834d1895411ad5d.jpeg

சிட்னிக்கு திரும்பும் வழியில் Bega என்ற இடத்தில் உள்ள சீஸ் தொழிற்சாலை உள்ளது. அங்கே என்னை கவர்ந்த ஒரு படத்தை கீழே இணைத்துள்ளேன்.. ஆண் பெண்ணை எப்படி வித்தியாசப்படுத்தி உள்ளார் எனப்பாருங்கள்!

11-C38-F78-EFDD-485-F-98-A2-32-D97937-C9

இறுதியாக டூரோஸ் ஹெட் ஒரு அழகிய கடலோர கிராமமாகும், இது டூரோஸ் ஏரி மற்றும் கொய்லா ஏரி ஆகிய இரண்டு ஏரிகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இங்கே நோர்போக் தீவு பைன் மரங்கள் உயரமாக மற்றும் நேர்த்தியாக ஒரு lookoutற்கு ஒன்று என்ற ரீதியில்
வளர்ந்துள்ளது.

large.4C01D79A-8524-401D-8075-CA42758548CC.jpeg.df7c1683af8b077b5a80bfccb4ee3c12.jpeg

இந்த மரமும் இந்த quoteம் நன்றாக பொருந்தியுள்ளன..☺️


மெரிம்புலா பயணம் நிறைவுபெற்றது.. 
நன்றி. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
 • Like 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

large.4C01D79A-8524-401D-8075-CA42758548CC.jpeg.df7c1683af8b077b5a80bfccb4ee3c12.jpeg

 

இயற்கையையும் 
அதன் அழகையும் 
நீங்கள் ரசிக்கும் ரசனையை 
நாங்கள் ரசிக்க கூடியதாக இருக்கிறது 
 

 • Thanks 1
Link to comment
Share on other sites

On 4/7/2021 at 21:56, ரஞ்சித் said:

 

 

On 5/7/2021 at 15:44, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

 

11 hours ago, Maruthankerny said:


 

யாழ் இணையத்திற்கும் என்னை ஊக்குவிக்கும் உங்களுக்கும் மற்றைய யாழ் கள உறவுகளுக்கும் மிக்க நன்றி.. 

 

On 4/7/2021 at 22:12, Nathamuni said:

யோசித்துப் பார்த்தால், பூர்விக குடிகளுக்கு சொந்தமான ஒரு முழு கண்டத்தையுமே ஆட்டையை போட்டு இருக்கிறார்கள், 18ம் நூறாண்டில் வந்து சேர்ந்த பிரிட்டிஷ்காரர்கள்.

உள்ள அடாத்தா இருந்து கொண்டு, முதலில் வெள்ளைகள் மட்டும் என்றார்கள், இப்ப அகதி வரக்கூடாது என்கிறார்கள்....

காலம் 🤭

உண்மைதான்

இனி உங்கள் ஊர் அமைச்சர் ப்ரீதி பட்டேலும் அகதிகளாக வருவோரை, அவுஸ்ரேலியா செய்வது போல( அகதிகளை Christmas Island, Nauru Island தங்க வைப்பது போல) UKற்கு வெளியே(?) தங்க வைத்து, அதன்பின்புதான் விசாரனைகள் நடைபெறும் என கூறுவதாக செய்திகள் வருகிறதே? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அருமையான கட்டுரையும் படங்களும் பிரபா. 

இந்த 18 மாதங்களில் நான் அதிகம் மிஸ் பண்ணுவது இந்த பிரயாணம் செய்ய முடியாமையைதான்.

இது போன்ற கட்டுரைகள் அதற்கு ஒரு மாற்றாக அமைகிறது.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2021 at 08:50, பிரபா சிதம்பரநாதன் said:

அதிவேகத்துடன் எதிர்பாராமல் வந்த அலையில நான் தடுமாறியிருந்தால், பாறையிலிருந்து உருண்டு கடலுக்குள் விழுந்து காணாமல் போயிருப்பேன்😰.. 
எதிர்பாராதவிதமான ஒரு அனுபவம்!!

அருமையான காட்சிகள்.
சுற்றுலாக்கள் போகும் போது ஆர்வக் கோளாறினால் பல விடயங்கள் துணிந்து செய்துவிடுவோம்.அதுவே ஆபத்தாகவும் முடிந்துவிடும்.

பயணக் கட்டுரையை மிகவும் ரசிக்கத்தக்க படங்களுடன் சேர்த்து இணைத்துள்ளீர்கள்.
மிகவும் நன்றி.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இந்த 18 மாதங்களில் நான் அதிகம் மிஸ் பண்ணுவது இந்த பிரயாணம் செய்ய முடியாமையைதான்.

சார்! நீங்கள் ரவல் ஏஜன்சி ஏதும் நடத்துகின்றீர்களா? 😷

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சார்! நீங்கள் ரவல் ஏஜன்சி ஏதும் நடத்துகின்றீர்களா? 😷

🤣 அப்படி இல்லை…புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய கலாசாரங்கள் ….பழகி விட்டால்… ஒரு போதை மாதிரி…

Link to comment
Share on other sites

23 hours ago, ஈழப்பிரியன் said:

 

 

On 7/7/2021 at 23:03, goshan_che said:

 

மிக்க நன்றி.. 

உண்மையில் இந்த மாதிரி இடங்களுக்கு தனியாக போவதையே விரும்புவதுண்டு, ஏனெனில் அப்பொழுதுதான், முழுமையாக இயற்கையுடன், உங்களை ஈடுபடுத்த முடியும்.. தனித்து உங்களது எண்ண அலைகளுடன் இருக்கமுடியும்.. ஆனால் எனக்கு அப்படியான சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை, என்பதால் மற்றவர்களுடன் குழுக்களாக போனாலும் கூடியவரையில் அந்தந்த இடங்களுக்கே உரிய தனித்துவமான அம்சங்களை ரசிப்பதுண்டு.. 

புதிய இடங்கள், பழக்கவழக்கங்கள், எல்லாமே ரசிக்ககூடியவை.. 

 

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

படங்களும் அவற்றின் விளக்கங்களும் சிறப்பாக இருக்கின்றது......நன்றி சகோதரி.......!   👍

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு பயணக்கதை பிரபா...!
மிகவும் அழகிய கண்டமொன்றில் வசிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது!

அனேகமாக வீட்டில் எல்லோரும் வேலை செய்வதால்..ஈஸ்டர் மற்றும் கிறிஸ்துமஸ் காலங்ககளிலேயே இப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கின்றது!

அப்போதெல்லாம் கடற்கரை ஏரியாக்களில் தங்குமிடம் கிடைக்காது! அதனால் மானிலக் காட்டுப் பகுதிகளுக்குத் தான் போகக் கிடைக்கும்! அதுவும் காம்பிங் ஏரியாக்களில் தங்கி நாயுடன்  புஸ் வாக்கிங் போவது தான் மிகவும் விருப்பமானதாக உள்ளது! இதனால் நிறைய உள்ளூர் அவுசிகளுடனும், அபோரிஜினல் இனத்தவருடனும் பழகும் சந்தர்ப்பங்கள் நிறையக் கிடைக்கின்றன!

ஊருக்கும், இங்கையும் ஒரு சின்ன வித்தியாசம் தான்...!


அங்கே சேவல் கூவிப் பொழுது விடிகின்றது!
இங்கே கூக்குப்புரா கூவிப் பொழுது விடிகின்றது..!😄

 • Thanks 1
Link to comment
Share on other sites

10 hours ago, suvy said:

 

 

2 hours ago, புங்கையூரன் said:

 

 

மிக்க நன்றி..

நீங்கள் கூறியபடி மிக அழகிய கண்டமென்றில் வாழும் வாய்ப்பு கிடைத்துள்ளது.. அதே போல வீட்டிலிருந்த படி வேலை, ஊருக்கு போக முடியாத நிலை.. எல்லாம் சேர்ந்து மனம் இந்த மாதிரி இடங்களை நாடுகிறது. 

ஆனால் எங்களவர்களில் பெரும்பாலானோர், எங்கே போனாலும் குறிப்பிட்ட சில விடயங்களையே எப்பொழுதும் திரும்ப திரும்ப கதைப்பார்கள்( அடுத்து என்ன உணவு, tution கதைகள் and தமிழ் tv serials) அந்தந்த இடங்களில் உள்ள தனித்துவமான விடயங்களை அனுபவிப்பதற்கு விரும்புவதில்லை. இதனாலேயே இப்பொழுது இந்தமாதிரிப் பயணங்கள் ஒரு சலிப்பை தந்துவிடுகிறது.. 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
 • Like 2
Link to comment
Share on other sites

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வவுனியாவில் மாவீரர் நாள் நினைவேந்தலில் உருவப்படத்தை எடுத்துச்சென்ற பொலிஸார் ! By VISHNU 27 NOV, 2022 | 06:11 PM K.B.சதீஸ்  வவுனியா நகரசபை மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டின் போது பொலிஸார் வருகைதந்து விபரங்களை திட்டியுள்ளனர். இதனையடுத்து மாவீரர்களை நினைவுகூரும் திருவுருவப்படத்தில் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதாக உள்ளதென தெரிவித்து குறித்த உருவப்படத்தினையும் அங்கிருந்து பொலிஸார் எடுத்து சென்றனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் மாவீரரின் பெற்றோர் பொலிஸாருடன் முரண்பட்ட போதிலும் பொலிஸார் உருவப்படத்தை எடுத்து சென்றதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். எனினும் குறித்த உருவப்படத்திற்கு ஏற்பாட்டாளர்கள் கறுப்பு நிற வர்ணம் தீட்டி மீண்டும் வைத்து அஞ்சலி செலுத்தினர். https://www.virakesari.lk/article/141427
  • உலக மாந்தர்: 2020,21, 22 மிக மோசமான ஆண்டுகள். 2023 : கொஞ்சம் அங்க பாரு கண்ணா😎
  • இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின் கூற்று ஜனநாயகத்திற்கு விரோதமானது - ஹிருணிக்கா By DIGITAL DESK 5 27 NOV, 2022 | 01:43 PM (எம்.வை.எம்.சியாம்)    நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்திருக்கும்  தற்போதைய  சூழ்நிலையில்  அப்பாவி மக்கள் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல்  வீதிகளில் இறங்கி போராடும் நிலையில் அதனை இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் என்று கூறும் ஜனாதிபதியின் செயற்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும்.  மேலும் ஹிட்லர் போன்ற தலைவர்களுக்கு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது. அவர்களின் பயணம் குறுகியது என  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி ரணில் வீதியில் இறங்கி போராட வேண்டாம், கூச்சலிட வேண்டாம் என்கிறார். இது சிறந்த தலைவர் ஒருவருடைய பண்பல்ல.  ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கக்கூடிய  தீர்வும் இதுவல்ல. முதலில் நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை கண்டறிய வேண்டும். பின்னர் அதற்கு தீர்வைப்  பெற்றுக் கொடுக்க வேண்டும். முதலில் ஏன் அப்பாவி மக்கள் வீதிக்கு இறங்கி போராடுகிறார்கள்? என்பதை அறிய வேண்டும்  பசியின் காரணமாகவே அவர்கள் இவ்வாறு போராடுகிறார்கள்.  நாட்டு மக்களின் வாழ்க்கை தற்போது பாரியதொரு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. அதன்காரணமாகவே அவர்கள் போராடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் போராட்டங்களும் வன்முறைகளும்  பசியின் காரணமாகவே முதலில் ஏற்படும்.  இரண்டாவது மனநிலை விரக்தியின் காரணமாக ஏற்படும்.  முன்னர் ஒரு தடவை மனம் விரக்தி அடைந்து அதன் ஊடாக முழு நாடும்  தீ பற்றி எரிந்ததை மறக்க முடியாது.  மற்றொரு தடவை அவ்வாறானதொரு நிலைக்கு நாட்டை கொண்டு செல்வதற்கு வாய்ப்பளிக்க முடியாது. இவ்வாறு நிலை ஏற்பட முன்னர் அதனை நிறுத்த வேண்டும். பொருளாதார நெருக்கடிகளை தாங்கிக்கொள்ள முடியாமல் வீதியில் இறங்கி போராடும் அப்பாவி மக்களை இராணுவத்தை க் கொண்டு அடக்குவேன், அவசரகால சட்டத்தை அமுல்ப்படுத்துவேன் என்று ஹிட்லர் போன்று செயல்படுவேன் என்று கூறுவது இதற்கான தீர்வல்ல.  நாட்டின் தலைவர்கள் மகாத்மா காந்தியை போன்று அவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள வேண்டும்.  காந்தி போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள் வரலாற்று புத்தகங்களில் நல்ல பக்கங்களில் எழுதப்படுகின்றன . ஆனால் ஹிட்லர் போன்ற தலைவர்களின் பெயர்களை மக்கள் கேட்கும் போதே வெறுக்கின்றனர் . தலைவர்ள் காந்தி போன்று இருக்க வேண்டும். ஹிட்லர் போன்றல்ல.  மேலும் ஹிட்லர் போன்ற தலைவர்களுக்கு நீண்டகாலம் பயணிக்க முடியாது. அவர்களின் ஆட்சி காலம் மிகக் குறுகியது என்றார். https://www.virakesari.lk/article/141398
  • பனை மரத்தில வெள்வாலா, நம்ம கிம்முக்கே சவாலா 🤣. இந்த ஏவுகணை போதுமா? பைடன் - இந்த ஏவுகணை போதுமா? இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா? ———— நம்ம தலைவன் கிம் நேரடியாக அமெரிக்காவை தாக்காது, கிரேட்ட டொரெண்ட்டோ ஏரியாவ சல்லி சல்லியா நொருக்கினால் - அமெரிக்கா வழிக்கு வரும். அமெரிக்காவின் ஒற்றை தலைமை உலகுக்கு ஆபத்து. அமெரிக்கா vs நம்ம தலை என்ற இரெட்டை தலைமைதான் உலக அமைதிக்கு நல்லம். #நீ நடத்து தல ❤️🇰🇵❤️
  • இறங்கியதும்  அடிச்சாண்டா நம்ம கனடா!  👏
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.