Jump to content

ஆவாவிலிருந்து பிரிந்தது ஜி குழு – செல்வபுரம் வன்முறையில் ஜி குழுவே ஈடுபட்டது!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆவாவிலிருந்து பிரிந்தது ஜி குழு – செல்வபுரம் வன்முறையில் ஜி குழுவே ஈடுபட்டது!

July 4, 2021

spacer.png

கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைக்கு ஆவா குழுவிலிருந்து பிரிந்து ஜி குழுவை உருவாக்கியமையே காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

செல்வபுரம் பகுதிக்குள் புகுந்து 9 பேரை வாளினால் வெட்டி படுகாயப்படுத்தியமை மற்றும் ஸ்டியோ ஒன்றுக்கு தீவைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 13 சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருபவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் காவற்துறையினர் கூறினர்.

கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வன்முறையில் ஒருவரின்  கை துண்டாடப்பட்டதுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் பிரியந்த லியனகேயின் தலைமையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவற்துறை அத்தியட்சகரின் வழிகாட்டலில் பிரதான காவற்துறை பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்பு காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

spacer.png

சம்பவத்துடன் தொடர்புடைய 3 பிரதான சந்தேக நபர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் பொம்மைவெளியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரும் கோண்டாவிலைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் கொக்குவில் வராகி அம்மன் ஆலயத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

மூவரிடமும் முன்னெடுத்த விசாரணையில் சம்பவ தினத்தன்று 6 மோட்டார் சைக்கிள்களில் 16 பேர் இணைந்து இந்த வன்முறையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது ஆவா குழுவிலிருந்து பிரிந்த செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜி குழு என்று ஆரம்பித்தனர். அவர்கள் ஜி குழுவுக்கு பாடல் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டனர்.

அதனாலேயே அந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்த ஸ்டியோவுக்கு தீவைத்ததாகும் ஜி குழுவைச் சேர்ந்தொருக்கு வாளினால் வெட்டியதாகவும் பிரதான சந்தேக நபர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மூவரிடமிருந்து 3 கஜேந்திர வாள்களும் 2 சாதாரண வாள்களும் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டன.

மேலும் தெல்லிப்பழை, காங்கேசன்துறை, பொம்மைவெளி, கோண்டாவிலைச் சேர்ந்த 13 சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து மறைத்து வைத்துள்ளவர்களும் கைது செய்யப்படுவார்கள்.

பிரதான சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் – என்றனர்.

https://globaltamilnews.net/2021/163065

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

spacer.png

சந்தேக நபர்கள் மூவரிடமிருந்து 3 கஜேந்திர வாள்களும் 2 சாதாரண வாள்களும் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டன.

20 minutes ago, கிருபன் said:

ஆவா குழுவிலிருந்து பிரிந்த செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜி குழு என்று ஆரம்பித்தனர். அவர்கள் ஜி குழுவுக்கு பாடல் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டனர்.

IMG-20210705-112522.jpg 

ஒடியோ லாஞ்ச் எல்லாம் நடாத்துகினம். அங்கால மாவு கட்டு பெசலிஸ்ட் ஆரும் இல்லையோ.? 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

அவர்கள் ஜி குழுவுக்கு பாடல் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டனர்.

போற போக்கை பார்த்தால் கொடி,நாணயம் எல்லாம் வெளிவிடுவினம் போல இருக்கு.....

G தேசிய கீதம் வெளியிட்ட உடன் ஆவாக்கு கோபம் வந்துவிட்டது போல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

3 கஜேந்திர வாள்களும்

யாராவது தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.

Link to comment
Share on other sites

4 hours ago, putthan said:

போற போக்கை பார்த்தால் கொடி,நாணயம் எல்லாம் வெளிவிடுவினம் போல இருக்கு.....

G தேசிய கீதம் வெளியிட்ட உடன் ஆவாக்கு கோபம் வந்துவிட்டது போல...

இது பகிடியில்லை. கோவிக்காமல் எங்கட வருங்கால சமுதாயம் என்று யோசித்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

யாராவது தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.

மேலே கஜேந்திரா படத்தில் வரும் இருபக்கம் கூர்மையான வாளின் படம் விஜயகாந்த் கையில் உள்ளதே. அதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

மேலே கஜேந்திரா படத்தில் வரும் இருபக்கம் கூர்மையான வாளின் படம் விஜயகாந்த் கையில் உள்ளதே. அதுதான்.

தகவலுக்கு நன்றி.

17 hours ago, கிருபன் said:

பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது

எல்லா தமிழ் சினிமா படங்களும் பாக்கினம்போல, தொடர்ந்து சினிமா படம் தொடர்பான கைதுகள்  அதை உறுதிப்படுத்துகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்

யாழில் ஆவாகுழு தலைவர் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது- வாள்கள் மற்றும் கோடரிகள் பறிமுதல்

யாழ்ப்பாணத்தில் லீ குழு மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி இருந்த ஆவாகுழு தலைவர் உட்பட 3 சந்தேகநபர்களை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து  வாள்கள்,  கோடரிகள்,  முச்சக்கரவண்டி ஒன்று மற்றும் மோட்டர் சைக்கிள் ஆகியவற்றையும் குற்ற விசாரணைப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அண்மையில் கோண்டாவில் பகுதியிலுள்ள ஒருவர் மீது வாள்வெட்டுதாக்குதல் இடம்பெற்றதில் அவரின் கை துண்டிக்கப்பட்டு, அதனை வைத்தியர் ஒருவர் 6 மணிநேர சத்திர சிகிச்சையில் பொருத்தியுள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் தலைமையில், தலைமறைவாகிய சந்தேகநபர்களை தேடி  சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மீசாலை  காட்டுப்பகுதி மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒழித்திருந்த நிலையில் ஆவாகுழு தலைவன் உட்பட 3 சந்தேகநபர்களை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை ஆவா குழுவில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதிலிருந்து சிலர் பிரிந்து சென்று,    லீ குழு என்ற பெயரில் செயற்பட்டு வந்துள்ளனர் இந்நிலையில் லீ குழு மீது, ஆவாகுழுவினர்  கோண்டாவில் பகுதில் வைத்து தாக்குதலை மேற்கொண்டதில் லீ குழுவைச் சேர்ந்த ஒருவர் கை துண்டிக்கப்பட்டது என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2021/1226834

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Hana said:

இது பகிடியில்லை. கோவிக்காமல் எங்கட வருங்கால சமுதாயம் என்று யோசித்து பாருங்கள்.

உண்மை எங்களால் என்ன செய்ய முடியும்? செய்தியாக பார்க்க மட்டும் தான் முடியும்,,,,

16 பேர் ஆறு மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கின்றனர் என்றால் பாருங்கோவன் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய காவலிக் குழுக்கள், இயக்கம் இருந்த காலத்தில் இருந்ததா? 

Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

இத்தகைய காவலிக் குழுக்கள், இயக்கம் இருந்த காலத்தில் இருந்ததா? 

அவர்கள் இருந்தபோது இப்படி ஏதாவது சம்பவம் நடந்ததாக நான் அறியவில்லை. அது ஒரு பொற்காலம்.

ஆனால் இயக்கம் தோன்றமுதல், சில ஊர்களில் இப்படியான சம்பவங்கள் நடந்ததாக வாய்வழி கதைகள் மூலம் அறிந்தான். விபரங்கள் தெரியாது. தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் தெளிவுபடுத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Shanthan_S said:

அவர்கள் இருந்தபோது இப்படி ஏதாவது சம்பவம் நடந்ததாக நான் அறியவில்லை. அது ஒரு பொற்காலம்.

ஆனால் இயக்கம் தோன்றமுதல், சில ஊர்களில் இப்படியான சம்பவங்கள் நடந்ததாக வாய்வழி கதைகள் மூலம் அறிந்தான். விபரங்கள் தெரியாது. தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் தெளிவுபடுத்துங்கள்.

சைக்கிள் செயின்,திருக்கை வால் போன்ற ஆயுதங்கள் பாவித்து  சண்டித்தனம் பண்ணிய குழுக்கள் இருந்தன.....கொலைகளும் நடந்திருக்கின்றன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

இத்தகைய காவலிக் குழுக்கள், இயக்கம் இருந்த காலத்தில் இருந்ததா? 

கம்பவாரிதி ஜெயராஜ் - இவர் இயக்கங்களின் ஆதரவாளர் அல்ல. இவர் சொல்வதை கேளுங்கள்.

85-86 நாலு இயக்க கட்டுப்பாட்டிலும், பின்னர் புலிகள் கட்டுப்பாட்டிலும், இப்படித்தான் இருந்தது எமது ஊர்.

https://streamable.com/zei73n 

Link to comment
Share on other sites

3 hours ago, Shanthan_S said:

அவர்கள் இருந்தபோது இப்படி ஏதாவது சம்பவம் நடந்ததாக நான் அறியவில்லை. அது ஒரு பொற்காலம்.

ஆனால் இயக்கம் தோன்றமுதல், சில ஊர்களில் இப்படியான சம்பவங்கள் நடந்ததாக வாய்வழி கதைகள் மூலம் அறிந்தான். விபரங்கள் தெரியாது. தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் தெளிவுபடுத்துங்கள்.

ஒத்துக்கொள்கிறேன்.  இரவில் போதும் போதும் பயம் இருக்கவில்லை. அப்போது எங்கே குண்டு விழும் / போராடுவதா /படிப்பதா  என்பது தான் எனக்கு தெரிய இருந்த வாய்ப்புகள். புத்தி வேறுவழியில் சிந்திக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

சைக்கிள் செயின்,திருக்கை வால் போன்ற ஆயுதங்கள் பாவித்து  சண்டித்தனம் பண்ணிய குழுக்கள் இருந்தன.....கொலைகளும் நடந்திருக்கின்றன

வில்லுத் தகட்டை விட்டுட்டியள்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

கம்பவாரிதி ஜெயராஜ் - இவர் இயக்கங்களின் ஆதரவாளர் அல்ல. இவர் சொல்வதை கேளுங்கள்.

85-86 நாலு இயக்க கட்டுப்பாட்டிலும், பின்னர் புலிகள் கட்டுப்பாட்டிலும், இப்படித்தான் இருந்தது எமது ஊர்.

https://streamable.com/zei73n 

இதைத்தான் அன்று தொடக்கம் சொல்கிறோம்.
அவர்கள் காலத்தில் சகலதும் திறம்படவே நடந்தன. ஒழுங்காக நடந்தன. கட்டுக்கோப்புடன் இருந்தன.குற்றம் புரிபவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த வரலாறுகளையே தென்னிந்திய உறவுகள் தற்போது உணர ஆரம்பித்திருக்கின்றார்கள்.
இருந்தாலும் மாற்றுக்கருத்தாளர்கள் அவர்களின் தண்டனைகளை போகுமிடமெல்லாம் தூக்கி திரிவதன் மூலம்  தாங்களும் தாம் சார்ந்தவர்களும் ஏதோ ஒரு விதத்தில் குற்றவாளிகள் என்பதை ஒத்துக்கொள்கின்றார்கள் என்றே கருதமுடிகின்றது.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

 மாற்றுக்கருத்தாளர்கள் அவர்களின் தண்டனைகளை போகுமிடமெல்லாம் தூக்கி திரிவதன் மூலம்  தாங்களும் தாம் சார்ந்தவர்களும் ஏதோ ஒரு விதத்தில் குற்றவாளிகள் என்பதை ஒத்துக்கொள்கின்றார்கள் என்றே கருதமுடிகின்றது.😁

அதை விட்டால் அவர்களால் பிழைப்பு நடத்த முடியாது முக்கியமா புலம்பெயர்ந்த பிரதேசங்களில் இருந்து...

கதை எழுதுவது
கட்டுரை எழுதுவது
புத்தகம் வெளியிடுவது 
போன்ற மேற்குறிய பக்கபிசினஸ் செய்ய வேணுமல்ல....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இதைத்தான் அன்று தொடக்கம் சொல்கிறோம்.
அவர்கள் காலத்தில் சகலதும் திறம்படவே நடந்தன. ஒழுங்காக நடந்தன. கட்டுக்கோப்புடன் இருந்தன.குற்றம் புரிபவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த வரலாறுகளையே தென்னிந்திய உறவுகள் தற்போது உணர ஆரம்பித்திருக்கின்றார்கள்.
இருந்தாலும் மாற்றுக்கருத்தாளர்கள் அவர்களின் தண்டனைகளை போகுமிடமெல்லாம் தூக்கி திரிவதன் மூலம்  தாங்களும் தாம் சார்ந்தவர்களும் ஏதோ ஒரு விதத்தில் குற்றவாளிகள் என்பதை ஒத்துக்கொள்கின்றார்கள் என்றே கருதமுடிகின்றது.😁

உலகில் எதுவுமே 100% அப்படி என்றும் இல்லை 100% இப்படி என்றும் இல்லை.

நீங்கள் எல்லா மாற்று கருத்தாளர்களையும் ஒரே சட்டியில் வறுப்பதாகபடுகிறது.

சிரோமி,  நோயல் நடேசன், சோபா சக்தி போல வன்மத்தை கக்குபவர்கள் உண்டுதான், ஆனால் புலிகள் விட்ட பிழைகளை, அதீதங்களை சுட்டி காட்டுபவர் அனைவரும் இந்த வகையினர் அல்ல.

முன்பு ஒரு முறை கடஞ்சா எழுதினார் புலிகளிடம் ஒரு வகையான natural justice இருந்தது என. அது மிகவும் உண்மையும் கூட.

ஆனால் புலிகள் அளவுக்கு இல்லை எனிலும் 86க்கு முன் எல்லா இயக்கங்களிலும் இந்த ஒழுக்கம் ஓரளவு இருந்தது. ஆனால் 87 க்கு பின் அவர்கள் (மற்றைய இயக்கங்கள்) மிக மோசமான காடைகள் ஆகினர்.

புலிகளின் ஆட்சியில் குடிகளுக்கான நீதி பரிபாலனம், சட்டம் ஒழுங்கு மிக நேர்தியாக இருந்தது. நான் அறிய யாழில் அதை யாரும் மறுப்பதில்லை.

ஜெயராஜ் மீது எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அவர் புலிகளை விமர்சிப்பவரும் கூட. ஆனால் இதில் நேர்மையாக நடந்ததை நடந்தபடி கூறுகிறார்.

ஆனால் இதை சொல்லுவதால் அவர்கள் பிழையே விடவில்லை என்று அர்த்தம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

குற்றத்தை குற்றம் என்று தெரிந்து வேண்டும் என்றே செய்வது 
ஒருவரின் செயல் இன்னொருவரை பாதிப்பதால் குற்றம் ஆவது 

என்பதுக்கு இடையில் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது 

அது தவிர இன்னொரு ஆதிக்க இனத்தால் எம் இனம் திட்டமிட்டு அழிக்கபடும்போது 
சொந்த இனத்தை விற்று அற்ப பணத்துக்கும் பதவிக்கும் வாழுவது என்பது 
மனித குலத்துக்கே எதிரான ஒரு பட்ஸி 

எனது மாமா ஒருவரை (எந்த தவறும் இழைக்கவில்லை. ஊரில் உள்ள சில வெத்துவேட்டுகளின் தகவலின் அடிப்படையில்) சூசையே அடித்து கொன்றார். பின்பு உண்மையில் சாவத்துக்காக அடிக்கவில்லை அடிக்கும்போது தவறுதலாக பட்டுவிட்டது என்று கூறினார்கள். சூசை மனம் முடித்து முதன் முதலில் சோடியாக மாவின் மகளின் திருமணத்துக்கே வந்து போனார். பணமும் கொடுத்தார் இவர்கள் வாங்கவில்லை. இவ்வாறு ஈழம் பூராக ஒவ்வொரு ஊரிலும் ஒரு கதை உன்டு 

85லேயே பல இயக்கங்கள் விடுதலை போரை மறந்துவிட்டார்கள் 
டெலோ பொபியின் கல்வியங்காட்டு முகாமை நேரில் பார்த்து இருப்பவர்களுக்கு அது தெரியும் 
அது இப்போதைய ஆவா   ஆவன்னா குரூப்  தலைமை செயலகம் மாதிரிதான்.  செக்ஸ் படம் சிகரட் புகை என்பது 24/7 

புளட் 7 டெலா தலைவர் பிரான்சிசை நான் பார்த்து கொண்டு இருக்கவே கலைத்துக்கொண்டு போனார்கள் 
பின்பு சரமாரியாக வெடிச்சத்தம் மோட்டார் சையிக்கிளுடன் இறந்து கிடந்தார்  நாங்கள் பார்க்க ஓடினோம் 
ஊர் பெரியவர்கள் எங்களை துரத்தி  விட்டார்கள். மல்லாவிக்கும் துணைக்காய்க்கும் இடையில் இந்த புளட் முகம் இருந்தது .... எங்களுக்கு மாங்குள இராணுவத்தை தாண்டி செல்வத்துக்கு அந்த அளவில் பயம் இருப்பதில்லை. அந்த புளட் முகாம் பற்றிய பயம் எல்லோருக்கும் அப்போ அந்த ஏரியாவில் இருந்தது .. அதிகமாக  கடை வைத்து இருப்பவர்கள் வந்து பிஸ்கெட் பெட்டிகளை தூக்கிக்கொண்டு சென்று விடுவார்கள் 
பணம் கேட்டால் அடிதான்.   எனக்கு தெரிய அப்போ அங்கிருந்த புலிகளுக்கும் அவர்களுக்கு கொஞ்சம் பயம்தான்  இவர்களிடம் பெரிதாக ஆயுதங்கள் இருப்பதில்லை ....ஆயுதங்கள் இல்லாதவர்கள் அந்த வீதியால் பயணிப்பதை தவிர்த்து கொள்வார்கள் 

யாழ் முஸ்லீம்கள் வெளியேற்றம் என்பது ஒரு வரலாற்று தவறாக இருந்துவிட்டது 
ஆனால் இன்று அதை பற்றி எழுதும் யாருக்கும் உண்மையான புலிகளின் நிலை தெரியாது 
முஸ்லீம்கள் அங்கு இருந்து இருப்பின் தமிழ் மக்களிடமே அடிவாங்கி செத்திருப்பார்கள் அவர்கள் செய்துகொண்டிருந்த  வேலை அவ்வாறானது ... தவிர ஒருவர் இருவர் செய்தது அல்ல பள்ளிவாசலில் கூட்டம்  கூடி  பேசிதான்  செய்துகொண்டு இருந்தார்கள் 

புலிகள் ஆள் பற்றாக்குறையால் கிளித்தட்டு மறித்துக்கொண்டு திரிந்தார்கள் யாழில் எங்கு இராணுவம் 
வெளியேறினாலும் ஒரு குரூப்தான் ஓடுவதுக்கு இருந்தது  ... பலாலி இராணுவம் வெளியேறி காங்கேசன்துறை  வரை வந்து  கைப்பற்றிய பின்பு முழு பிரதேசத்தையும் காவல் அரண் அமைத்து  பாதுக்காக்க கூட  அவர்களுக்கு ஆட்கள் இல்லை  மையில் கணக்கான பிரதேசங்கள் டம்மி காவலரண் அடித்து வைத்திருந்தார்கள்.  ஒரு வாரத்தில் மாறி மாறி மூன்று வலிக்காம பொறுப்பாளர்களை இழந்தார்கள் 
வெளியில் புலி போன்று ஒரு விம்பம் இருந்ததே தவிர  உள்ளுக்கு வெறும் டப்பாதான் இருந்தது.
பின்பு கொக்காவில்  மாங்குளம் முகாம்களை தகர்த்துவிட்டு பால்ராஜ் தனது குரூப்பை கோட்டைக்கு கொண்டுவந்த பின்புதான்  ஓரளவுக்கு சமநிலைக்கு வந்தார்கள் .......அதற்கு முன்பு இராணுவம் பயத்தில் இருந்ததே தவிர  தீவு போல யாழில் எந்த வெளியில் வந்து இராணுவம் தரை இறங்கி இருந்தாலும்  ஆமிக்கு வெற்றிதான். முஸ்லீம்களின் திட்டமிடலில்தான் தீவு தரை இரக்கம் நடந்தது என்பதால் பின்பு  ஊர் மக்களை தான்  வெளிகளுக்கு சென்றிக்கு விடுவார்கள் ஒரு கை குண்டு கொடுத்து இருந்தார்கள். கெலி வந்து இறங்கினால்  எறிந்துவிட்டு ஓட சொல்லி. யாழ் முஸ்லீம்கள் இருந்து இருப்பின் ... யாழ் இராணுவத்தின் கட்டுப்பாடில்  90 கடைசியிலே வந்திருக்கும் ... அவர்கள் திட்டமும் அதுதான். 

அதே  காலத்தில் புலிகளில் இருந்த பலர் இங்கு எழுதுகிறார்கள் தயா  நந்தன் போன்றவர்கள் என்பது தெரிந்துதான் எழுதுகிறேன் ... இதுதான் உண்மை நிலை.

காத்தான்குடி பள்ளிவாசல் குண்டுவெடிப்பு என்பதன் உண்மை இன்னமும் யாருக்கும் தெரியவில்லை 
நான் அதை அறிய பல முயற்சி செய்தும் யாரும் அது பற்றி பேசுவதில்லை. புலிகளும் அதை மறுத்ததும் இல்லை. அப்போ கருணாவை விட வேறு பலர்தான் ஆளுமையோடு இருந்தார்கள் ... கோத்தாவின் வீட்டு நாயாகிய  பின்பு கூட கருணா கூட இது பற்றி ஏதும் பேசுவதில்லை.  அப்போ மடக்கிளப்பு என்றால் றீகன் கீழ்தான்  எது நடந்து இருப்பினும் அவரின் கீழ் என்ற நிலைதான் இருந்தது. அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் ஆண்டனி  அப்போ யாழில் இருந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஒரு அளவுக்கு மேல்

சரியாக

நேர்மையாக

எல்லோருக்கும் சமமாக

லஞ்சம் ஊழல் அற்று .....

இருந்ததா??

இதை ஏற்றுக் கொண்டு எழுதுபவர்களுக்கு நான் நண்பனே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

அதை விட்டால் அவர்களால் பிழைப்பு நடத்த முடியாது முக்கியமா புலம்பெயர்ந்த பிரதேசங்களில் இருந்து...

கதை எழுதுவது
கட்டுரை எழுதுவது
புத்தகம் வெளியிடுவது 
போன்ற மேற்குறிய பக்கபிசினஸ் செய்ய வேணுமல்ல....

அவர்களின் முதல் பிஸினஸ் பொம்பிளை பிடிக்கிறது 
மற்றதெல்லாம் அதை சார்ந்தது ... இந்தியாவுக்கு போவதென்றால் இந்திய விசா வேண்டும்.
ஒரு ஈழத்தமிழனாக நீங்கள் இந்திய எம்பசிக்கு 90 களில் போய்யிருப்பின் .... வரவேற்பு எப்படி என்பது 
உங்களுக்கே தெரியும் ... 

விசாவுக்கு புலிவாந்தி.... புததகம் வெளியீடு 

புலிவாந்திக்கு சன்மானம் இலங்கை இந்திய உளவு துறையால் 
டாகிளாசு சிர்த்தர்தான் போன்ற முகவர்கள் மூலம் தாராளமாக கிடைக்கும் 

கேரளாவில் பொம்பிளை பிடிக்க சன்மானம் போதிய பணம் கொடுக்கும். 

அது ஒரு சுழற்சியாக நடந்துகொண்டு இருந்தது 
புலிகள் மற்ற இயக்கத்தை தடைசெய்தபின்பு எனக்கு தெரியவே கொழும்புக்கு போதைவஸ்த்து 
கடத்திவருபவர்கள் 10-12 பேர்கள் இருந்தார்கள். பிடப்பட்டால் இயக்கம் ( ஈப்பி டெலோ புளட்) இல்லாவிட்டால்  
சொந்த வருமானம் கோட்டலில் ரூம் அப்போதைய பிரபல நடிகைகள் (எனக்கு தெரிய பானுபிரியாவுடன் படுத்தவர்களே இருக்கிறார்கள்)  முதல் கேரள ஆந்திர இறக்குமதி யுடன் உல்லாசம்.
ஊரில் பெற்றோர் உறவினர்கள் ஆள் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று அப்போதைய சாத்திரி மாரின் கல்லாவை  நிரப்பி கொண்டு இருந்தார்கள். 
அப்போ விமான போக்குவரத்து அமைச்சராக அஷ்ரப் இருந்தார் அவருக்கு ரொக்கம் மாறியதும்  ஏர்போட்டுக்கு  போன் போகும் பிடிப்பட்டவர் டாக்ஸியில் கொழும்புக்கு வருவார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ டக்ளசுடன் ஒரு 10 எடுபிடி  சித்தார்தனுடன் ஒரு 10 எடுபிடித்தான் இருந்தது 
உண்மையான எடுபிடிகளுக்கு கோல்ட் லீவ் சிகரெட்டுக்கு காசு இல்லாமல் திரிவார்கள் 

இவர்கள் வந்து கொழும்பில் நிற்குமட்டும் அவர்களுக்கும் திருவிழாதான் 
கொழும்பு முஸ்லீம் கடை பிரியாணி பியர் சிங்கள பெண்கள் மசாஜ் அப்போ கொள்ளுப்பிட்டி 
வெள்ளவத்தை சாவோஐ கோட்டல் அருகில் அதுகளும் இருந்தது 

பின்பு ஒரு போலீஸ் அதிகாரி பொறுப்பேற்று சூதாடும் குதிரை மிசின் மசாஜ் எல்லாம் பூட்டிவிட்டார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

குற்றத்தை குற்றம் என்று தெரிந்து வேண்டும் என்றே செய்வது 
ஒருவரின் செயல் இன்னொருவரை பாதிப்பதால் குற்றம் ஆவது 

என்பதுக்கு இடையில் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது 

அது தவிர இன்னொரு ஆதிக்க இனத்தால் எம் இனம் திட்டமிட்டு அழிக்கபடும்போது 
சொந்த இனத்தை விற்று அற்ப பணத்துக்கும் பதவிக்கும் வாழுவது என்பது 
மனித குலத்துக்கே எதிரான ஒரு பட்ஸி 

எனது மாமா ஒருவரை (எந்த தவறும் இழைக்கவில்லை. ஊரில் உள்ள சில வெத்துவேட்டுகளின் தகவலின் அடிப்படையில்) சூசையே அடித்து கொன்றார். பின்பு உண்மையில் சாவத்துக்காக அடிக்கவில்லை அடிக்கும்போது தவறுதலாக பட்டுவிட்டது என்று கூறினார்கள். சூசை மனம் முடித்து முதன் முதலில் சோடியாக மாவின் மகளின் திருமணத்துக்கே வந்து போனார். பணமும் கொடுத்தார் இவர்கள் வாங்கவில்லை. இவ்வாறு ஈழம் பூராக ஒவ்வொரு ஊரிலும் ஒரு கதை உன்டு 

85லேயே பல இயக்கங்கள் விடுதலை போரை மறந்துவிட்டார்கள் 
டெலோ பொபியின் கல்வியங்காட்டு முகாமை நேரில் பார்த்து இருப்பவர்களுக்கு அது தெரியும் 
அது இப்போதைய ஆவா   ஆவன்னா குரூப்  தலைமை செயலகம் மாதிரிதான்.  செக்ஸ் படம் சிகரட் புகை என்பது 24/7 

புளட் 7 டெலா தலைவர் பிரான்சிசை நான் பார்த்து கொண்டு இருக்கவே கலைத்துக்கொண்டு போனார்கள் 
பின்பு சரமாரியாக வெடிச்சத்தம் மோட்டார் சையிக்கிளுடன் இறந்து கிடந்தார்  நாங்கள் பார்க்க ஓடினோம் 
ஊர் பெரியவர்கள் எங்களை துரத்தி  விட்டார்கள். மல்லாவிக்கும் துணைக்காய்க்கும் இடையில் இந்த புளட் முகம் இருந்தது .... எங்களுக்கு மாங்குள இராணுவத்தை தாண்டி செல்வத்துக்கு அந்த அளவில் பயம் இருப்பதில்லை. அந்த புளட் முகாம் பற்றிய பயம் எல்லோருக்கும் அப்போ அந்த ஏரியாவில் இருந்தது .. அதிகமாக  கடை வைத்து இருப்பவர்கள் வந்து பிஸ்கெட் பெட்டிகளை தூக்கிக்கொண்டு சென்று விடுவார்கள் 
பணம் கேட்டால் அடிதான்.   எனக்கு தெரிய அப்போ அங்கிருந்த புலிகளுக்கும் அவர்களுக்கு கொஞ்சம் பயம்தான்  இவர்களிடம் பெரிதாக ஆயுதங்கள் இருப்பதில்லை ....ஆயுதங்கள் இல்லாதவர்கள் அந்த வீதியால் பயணிப்பதை தவிர்த்து கொள்வார்கள் 

யாழ் முஸ்லீம்கள் வெளியேற்றம் என்பது ஒரு வரலாற்று தவறாக இருந்துவிட்டது 
ஆனால் இன்று அதை பற்றி எழுதும் யாருக்கும் உண்மையான புலிகளின் நிலை தெரியாது 
முஸ்லீம்கள் அங்கு இருந்து இருப்பின் தமிழ் மக்களிடமே அடிவாங்கி செத்திருப்பார்கள் அவர்கள் செய்துகொண்டிருந்த  வேலை அவ்வாறானது ... தவிர ஒருவர் இருவர் செய்தது அல்ல பள்ளிவாசலில் கூட்டம்  கூடி  பேசிதான்  செய்துகொண்டு இருந்தார்கள் 

புலிகள் ஆள் பற்றாக்குறையால் கிளித்தட்டு மறித்துக்கொண்டு திரிந்தார்கள் யாழில் எங்கு இராணுவம் 
வெளியேறினாலும் ஒரு குரூப்தான் ஓடுவதுக்கு இருந்தது  ... பலாலி இராணுவம் வெளியேறி காங்கேசன்துறை  வரை வந்து  கைப்பற்றிய பின்பு முழு பிரதேசத்தையும் காவல் அரண் அமைத்து  பாதுக்காக்க கூட  அவர்களுக்கு ஆட்கள் இல்லை  மையில் கணக்கான பிரதேசங்கள் டம்மி காவலரண் அடித்து வைத்திருந்தார்கள்.  ஒரு வாரத்தில் மாறி மாறி மூன்று வலிக்காம பொறுப்பாளர்களை இழந்தார்கள் 
வெளியில் புலி போன்று ஒரு விம்பம் இருந்ததே தவிர  உள்ளுக்கு வெறும் டப்பாதான் இருந்தது.
பின்பு கொக்காவில்  மாங்குளம் முகாம்களை தகர்த்துவிட்டு பால்ராஜ் தனது குரூப்பை கோட்டைக்கு கொண்டுவந்த பின்புதான்  ஓரளவுக்கு சமநிலைக்கு வந்தார்கள் .......அதற்கு முன்பு இராணுவம் பயத்தில் இருந்ததே தவிர  தீவு போல யாழில் எந்த வெளியில் வந்து இராணுவம் தரை இறங்கி இருந்தாலும்  ஆமிக்கு வெற்றிதான். முஸ்லீம்களின் திட்டமிடலில்தான் தீவு தரை இரக்கம் நடந்தது என்பதால் பின்பு  ஊர் மக்களை தான்  வெளிகளுக்கு சென்றிக்கு விடுவார்கள் ஒரு கை குண்டு கொடுத்து இருந்தார்கள். கெலி வந்து இறங்கினால்  எறிந்துவிட்டு ஓட சொல்லி. யாழ் முஸ்லீம்கள் இருந்து இருப்பின் ... யாழ் இராணுவத்தின் கட்டுப்பாடில்  90 கடைசியிலே வந்திருக்கும் ... அவர்கள் திட்டமும் அதுதான். 

அதே  காலத்தில் புலிகளில் இருந்த பலர் இங்கு எழுதுகிறார்கள் தயா  நந்தன் போன்றவர்கள் என்பது தெரிந்துதான் எழுதுகிறேன் ... இதுதான் உண்மை நிலை.

காத்தான்குடி பள்ளிவாசல் குண்டுவெடிப்பு என்பதன் உண்மை இன்னமும் யாருக்கும் தெரியவில்லை 
நான் அதை அறிய பல முயற்சி செய்தும் யாரும் அது பற்றி பேசுவதில்லை. புலிகளும் அதை மறுத்ததும் இல்லை. அப்போ கருணாவை விட வேறு பலர்தான் ஆளுமையோடு இருந்தார்கள் ... கோத்தாவின் வீட்டு நாயாகிய  பின்பு கூட கருணா கூட இது பற்றி ஏதும் பேசுவதில்லை.  அப்போ மடக்கிளப்பு என்றால் றீகன் கீழ்தான்  எது நடந்து இருப்பினும் அவரின் கீழ் என்ற நிலைதான் இருந்தது. அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் ஆண்டனி  அப்போ யாழில் இருந்தார். 

நீங்கள் சொன்னது போல் 86 வாக்கிலேயே புளொட்டும், டெலோவின் ஒரு பகுதியும் மோசமாக நடக்க தொடங்கி விட்டார்கள் என்பது உன்மைதான். ஆனால், டெலோவின் பெரும்பகுதி, ஈபி போன்றவை அப்படி 87 க்கு முன் நடக்கவில்லை. 

இந்த இயக்கங்களை தடை செய்தமைக்கு வலுவான காரணங்கள் இருக்கலாம். ஆனால் எல்லாரையும் ஒரே மாதிரி அடித்திருக்க தேவையில்லை.

உங்கள் மாமாவை போல் தேவையில்லாத இழப்புகள் பல. அவர்களில் பெரும்பான்மையானோர் எமக்காக போராட வந்தவர்களே. இந்த தவிர்திருக்க கூடிய மரணங்களை - கைமோச கொலை என்று என்னால் கடந்து போக முடியவில்லை.

இதே போல் 87-89 அவர்களும் புலிகளை, அனுதாபிகளை வேட்டையாடினார்கள். 2003 இல் மட்டகளப்பிலும் நடந்தது. 

இவற்றை எல்லாம் ஒரு பகுதியில்தான் முழு பிழையும் மறுபகுதியில் ஒரு பிழையும் இல்லை என்று கடந்து போவது - நம்மை நாமே ஏமாற்றும் செயல்.

அதே போல் அப்போ அங்கே வாழ்ந்தவன் என்ற வகையில் 1990ம் ஆண்டு கோட்டை/தீவு பகுதிகள் பற்றி நீங்கள் எழுதியதில் சில தரவு பிழைகள் உண்டு. 1989 இல் காட்டில் இருந்து மீள வந்த புலிகள் நீங்கள் சொல்லுமாப்போல இருக்கவில்லை. மிக வலிமையோடுதான் யாழை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் 1995 ரிவிரெச வரை. அதுவும் சுப்பர் சொனிக், மல்டி பரல் என இலங்கை தனது பலத்தை கூட்டியபினே சாத்தியமானது.

யாழ் முஸ்லீம்களால் ஆபத்து என்று வெளியேற்றுயது இராணுவ ரீதியில் சரியான முடிவாக இருந்தாலும் (இந்த காரணத்தை புலிகள் உத்யோகபூர்வமாக சொல்லவில்லை). அரசியல் ரீதியில் அது மிக தவறான முடிவே. இல்லை என்றால் தலைவரே வருத்தம் தெரிவித்திருக்க மாட்டார்.

இதை முஸ்லீம்களை கைளாளுவதில் 80 முதலே விட்ட அரசியல் தவறின் தொடர்சியாகவே நான் பார்கிறேன்.

காத்தான் குடி குண்டு வெடிப்பில்லை. உள்ளே இறங்கி சுட்டது. 

இந்த விடயங்களை பற்றி எழுதுவதை தவிர்க்கும் என் அண்மைய முடிவில் இருந்து குசா அண்ணை, உங்களுக்கு பதில் சொல்லும் கட்டாயத்தால் விலக வேண்டியதாகிற்று. 

இத்தோடு முடிக்கிறேன்.

இவ்வளவு விமர்சனங்களோடு இதையும் சொல்கிறேன்.

ஒரு அரசு அல்லாமல், ஒரு போராளி குழு, ஆயுத முனையில் அத்தனை வானளாவிய அதிகாரங்களை கொண்டிருந்தும் காட்டு தர்பார் போல அன்றி அதி உச்ச அறத்தோடு ஆட்சி செய்தது உலகிலேயே புலிகள்தான்.

தாலிபான், முஜாகிதீன், மாவீயிஸ்டு, தென்னமெரிக்க குழுக்கள், ஆபிரிக்க குழுக்கள், மத்திய கிழக்கு குழுக்கள் இப்படி யாரோடு ஒப்பிட்டாலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

"அதே போல் அப்போ அங்கே வாழ்ந்தவன் என்ற வகையில் 1990ம் ஆண்டு கோட்டை/தீவு பகுதிகள் பற்றி நீங்கள் எழுதியதில் சில தரவு பிழைகள் உண்டு. 1989 இல் காட்டில் இருந்து மீள வந்த புலிகள் நீங்கள் சொல்லுமாப்போல இருக்கவில்லை. மிக வலிமையோடுதான் யாழை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் 1995 ரிவிரெச வரை. அதுவும் சுப்பர் சொனிக், மல்டி பரல் என இலங்கை தனது பலத்தை கூட்டியபினே சாத்தியமானது."

மணலாற்றில் இருந்து வந்தது 3 குரூப்தான் ஒரு குரூப்பில் 90-120  பேர் மட்டுமே 
இவர்கள் சுண்டிக்குளம் ஊடாக மருதங்கேணி ..நாகர்கோவில் ஊடாக வரணி 
வரணி ஊடாக புத்தூர் நீர்வேலி .... அதுதான் மொத்தம் 400க்கு உள்தான் அப்போதே ஏரியாவில் இருந்தவர்கள் 
ஒரு 100 ... இந்திய இராணுவம் போகும்போது கே கே ஸ் இல் விடுதலை செய்ததவர்கள் 80 .

மிகுதி எல்லாம் சினிமாதான்
90-91 களில் பின்பு இயக்கத்தில்  சேர்ந்தவர்கள் அதிகம் காரணம் புலிகளில் சேர்வது என்றால் மிக இலகுவாக இருந்தது. அதற்கு முன்பு புலிகளில் சேர விருப்பம் இருந்தாலும் நீங்கள் 3 மாதம் வரை காத்திருக்க வேண்டும் 
அதிலும் 650 வரையானவர்கள் 91 ஆனையிறவு சண்டையில் மாவீர்கள் ஆனார்கள்.

கட்டுவன் கோட்டை ஆனையிறவு காவலரண்களில் நின்ற பலர்தான் கொக்காவில் மாங்குளம் 
முகாம் அடிக்க போனவர்கள் .... மாங்குளம் சண்டையில் இறந்த பெண்கள் எல்லோரும் யாழில் இருந்து போனவர்கள்.   யாழில் இருந்த உங்களுக்கே நிலைமை இவ்வாறுதான் தெரியும் ........
புலிவாந்தி எடுப்பவர்கள் யாழில் இருந்து வெளியேறியது 88க்கு முன்னர் 

ஊர்காவற்றுத்துறையில் ஏன் ஆமி இறங்கினது?

புங்குடுதீவு ஊர்வாகத்துறை மண்டைதீவு அந்த முழு தீவு பூராக வெறும் 20 பேர்தான் 
பாரிசில் சுட்டு இறந்த பரிதி தலைமையில் இருந்தார்கள் ... அதை பக்காவாக பார்த்து 
தகவல் கொடுத்தது வீடு வீடாக பிளாஸ்டிக் வாளி கோப்பை பீங்கான் விற்கும் முஸ்லீம்கள் 

அதுக்கு பிறகுதான் புலிகள் மக்களை கட்டாய சென்றி என்று ஊருக்கு ஊர் 
வெளிகளை கண்காணிக்க விட்டார்கள் 
 
"காத்தான் குடி குண்டு வெடிப்பில்லை. உள்ளே இறங்கி சுட்டது. "

காத்தான்குடி அப்போது முழு இராணுவ கட்டுப்பாடு பகுதி சுட்டு காயம் ஆன பலரை 
மருத்துவமனை கொண்டு சென்றது இராணுவம் சூடு நடந்தது நாலு வேறு வேறு பள்ளிவாசல்களில் 
நடத்தியவர்கள் முஸ்லிம்கள் உடையில்தான் இருந்தார்கள் .... இதெல்லாம் சந்தேகத்துக்கு உரியது.

அன்று பின்னேரம் பள்ளிவாசல் தாக்குதலுக்கு முன்பு புலிகளின் ரஞ்சித்அப்பா காத்தான்குடியில் அதே பகுதியில் ஜின்னா கப்பரின் மருமகனை அவர்கள் வீட்டில் வைத்தே மண்டையில் போட்டுவிட்டு வருகிறார் 
இப்படி தாக்குதல் செய்யும் திட்டம் இருப்பின் ஏன் அவ்வாறு செய்கிறார்கள்? 

40 பேர்வரை வந்து தாக்குதல் செய்ததாக சொல்கிறார்கள் ..... அப்படி நடந்த ஒரு தாக்குதல் 
எவ்வாறு இவ்வளவு காலமும் மர்மமாக இருக்கிறது? 

புலிகள் செய்யவில்லை என்பது எனது வாதம் இல்லை 
செய்ததுக்கான ஆதாரம் என்பது இன்று கருணா துரோகி ஆன பின் கூட இல்லை என்றால் 
கொஞ்சம் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது எழுந்த மாத்திரத்தில் புலிகள் என்று கூறும்படியாக இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

காத்தான் குடி குண்டு வெடிப்பில்லை. உள்ளே இறங்கி சுட்டது. 

இந்த விடயங்களை பற்றி எழுதுவதை தவிர்க்கும் என் அண்மைய முடிவில் இருந்து குசா அண்ணை, உங்களுக்கு பதில் சொல்லும் கட்டாயத்தால் விலக வேண்டியதாகிற்று. 

இத்தோடு முடிக்கிறேன்.

புலிகள் தவறே செய்யவில்லை என்றால் இந்த உலகம் எமக்கு ஈழத்தை தரவா போகிறது?
அல்லது புலிகள் செய்த சில தவறுக்காகத்தான் உலகமே சேர்ந்து ஈழத்தமிழரை அழித்ததா?
அப்போ ருவாண்டா படுகொலையும் அதனலா?

புலிகள் செய்துருப்பின் அது பற்றி பேசுவதில் ஒரு குறையுமில்லை  நிறையுமில்லை 

அன்று காத்தான்குடியில் நடந்த முழு சம்பவத்தையும் நீங்கள் ஒரு முறை மீண்டும் அலசி பாருங்கள் 
பல விடயம் விடை அற்ற  கேள்வியாக மட்டுமே இருக்கிறது. 30 வருட போரில் கெலி இறக்கி பொதுமக்களை 
கொழுப்புக்கு சிங்கள இராணுவம் கொண்டு சென்ற ஒரே சம்பவம் இதுதான். திடீர் தாக்குதல் இராணுவத்தின் மீது நடந்த போதுகூட  உள்ளூர் மருத்துவமனை அல்லது அடுத்த நாள்தான் கெலி. அது எவ்வாறு அன்று மட்டும் எல்லாம் தயாராகவே இருந்தது 

புலிகள் மறுநாள் படகில் தப்பி சென்றார்கள் என்கிறார்கள் முஸ்லீம்களும் இராணுவமும் 
அன்று இரவு 40 புலிகள் எங்கு இருந்தார்கள்? எந்த முஸ்லீம் வீடு அடைக்கலம் கொடுத்தது? 

இவை எனக்கு இருக்கும் தனிப்பட்ட கேள்விகள் மட்டுமே 
யாருக்காவது விடை தெரிந்து இருப்பின் நானும் அறிய விரும்புகிறேன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.