Jump to content

ஆவாவிலிருந்து பிரிந்தது ஜி குழு – செல்வபுரம் வன்முறையில் ஜி குழுவே ஈடுபட்டது!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2021 at 09:29, colomban said:

இத்தகைய காவலிக் குழுக்கள், இயக்கம் இருந்த காலத்தில் இருந்ததா? 

வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பொற்காலம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Maruthankerny said:

"அதே போல் அப்போ அங்கே வாழ்ந்தவன் என்ற வகையில் 1990ம் ஆண்டு கோட்டை/தீவு பகுதிகள் பற்றி நீங்கள் எழுதியதில் சில தரவு பிழைகள் உண்டு. 1989 இல் காட்டில் இருந்து மீள வந்த புலிகள் நீங்கள் சொல்லுமாப்போல இருக்கவில்லை. மிக வலிமையோடுதான் யாழை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் 1995 ரிவிரெச வரை. அதுவும் சுப்பர் சொனிக், மல்டி பரல் என இலங்கை தனது பலத்தை கூட்டியபினே சாத்தியமானது."

மணலாற்றில் இருந்து வந்தது 3 குரூப்தான் ஒரு குரூப்பில் 90-120  பேர் மட்டுமே 
இவர்கள் சுண்டிக்குளம் ஊடாக மருதங்கேணி ..நாகர்கோவில் ஊடாக வரணி 
வரணி ஊடாக புத்தூர் நீர்வேலி .... அதுதான் மொத்தம் 400க்கு உள்தான் அப்போதே ஏரியாவில் இருந்தவர்கள் 
ஒரு 100 ... இந்திய இராணுவம் போகும்போது கே கே ஸ் இல் விடுதலை செய்ததவர்கள் 80 .

மிகுதி எல்லாம் சினிமாதான்
90-91 களில் பின்பு இயக்கத்தில்  சேர்ந்தவர்கள் அதிகம் காரணம் புலிகளில் சேர்வது என்றால் மிக இலகுவாக இருந்தது. அதற்கு முன்பு புலிகளில் சேர விருப்பம் இருந்தாலும் நீங்கள் 3 மாதம் வரை காத்திருக்க வேண்டும் 
அதிலும் 650 வரையானவர்கள் 91 ஆனையிறவு சண்டையில் மாவீர்கள் ஆனார்கள்.

கட்டுவன் கோட்டை ஆனையிறவு காவலரண்களில் நின்ற பலர்தான் கொக்காவில் மாங்குளம் 
முகாம் அடிக்க போனவர்கள் .... மாங்குளம் சண்டையில் இறந்த பெண்கள் எல்லோரும் யாழில் இருந்து போனவர்கள்.   யாழில் இருந்த உங்களுக்கே நிலைமை இவ்வாறுதான் தெரியும் ........
புலிவாந்தி எடுப்பவர்கள் யாழில் இருந்து வெளியேறியது 88க்கு முன்னர் 

ஊர்காவற்றுத்துறையில் ஏன் ஆமி இறங்கினது?

புங்குடுதீவு ஊர்வாகத்துறை மண்டைதீவு அந்த முழு தீவு பூராக வெறும் 20 பேர்தான் 
பாரிசில் சுட்டு இறந்த பரிதி தலைமையில் இருந்தார்கள் ... அதை பக்காவாக பார்த்து 
தகவல் கொடுத்தது வீடு வீடாக பிளாஸ்டிக் வாளி கோப்பை பீங்கான் விற்கும் முஸ்லீம்கள் 

அதுக்கு பிறகுதான் புலிகள் மக்களை கட்டாய சென்றி என்று ஊருக்கு ஊர் 
வெளிகளை கண்காணிக்க விட்டார்கள் 
 
"காத்தான் குடி குண்டு வெடிப்பில்லை. உள்ளே இறங்கி சுட்டது. "

காத்தான்குடி அப்போது முழு இராணுவ கட்டுப்பாடு பகுதி சுட்டு காயம் ஆன பலரை 
மருத்துவமனை கொண்டு சென்றது இராணுவம் சூடு நடந்தது நாலு வேறு வேறு பள்ளிவாசல்களில் 
நடத்தியவர்கள் முஸ்லிம்கள் உடையில்தான் இருந்தார்கள் .... இதெல்லாம் சந்தேகத்துக்கு உரியது.

அன்று பின்னேரம் பள்ளிவாசல் தாக்குதலுக்கு முன்பு புலிகளின் ரஞ்சித்அப்பா காத்தான்குடியில் அதே பகுதியில் ஜின்னா கப்பரின் மருமகனை அவர்கள் வீட்டில் வைத்தே மண்டையில் போட்டுவிட்டு வருகிறார் 
இப்படி தாக்குதல் செய்யும் திட்டம் இருப்பின் ஏன் அவ்வாறு செய்கிறார்கள்? 

40 பேர்வரை வந்து தாக்குதல் செய்ததாக சொல்கிறார்கள் ..... அப்படி நடந்த ஒரு தாக்குதல் 
எவ்வாறு இவ்வளவு காலமும் மர்மமாக இருக்கிறது? 

புலிகள் செய்யவில்லை என்பது எனது வாதம் இல்லை 
செய்ததுக்கான ஆதாரம் என்பது இன்று கருணா துரோகி ஆன பின் கூட இல்லை என்றால் 
கொஞ்சம் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது எழுந்த மாத்திரத்தில் புலிகள் என்று கூறும்படியாக இல்லை 

90 இல் மட்டும் அல்ல 2009 வரை இந்த ஆளணி பற்றாக்குறை இருந்ததுதான் மருதர். கடைசிவரை போராளிகளை இடம் மாற்றி மாற்றியே அடிபட்டார்கள். ஆனால் கோட்டை தாக்குதலில் மட்டும் 980 சொச்சம் மாவீரகள். பின்னர் 91 இல் வந்த ஆகாய கடல் தரை வழி சமரில் 1300 க்கு மேல். இது 87 வரை மொத்தமாக மாவீரராகிய 870 சொச்சம் பேரை விட அதிகம்.

நிச்சயமாக 89 இல் திரும்பி வரும் போது, சீருடை முதல் ஆள், ஆயுதம் வரை ஒரு அரை மரபுவழி இராணுவமாகவே வந்தார்கள். 89 எப்பிரல்-90 யூன் இடையே அதிக அளவில் ஆட்களை சேர்த்தார்கள்.

முஸ்லீம்கள் தீவு பகுதியில் உளவு பார்த்திருக்கலாம் - ஆனால் தீவு பகுதியை புலிகள் கைவிட புவியியல் ஒரு காரணம். மிக இலகுவாக வழங்கலை துண்டிக்கலாம். ஆகவே அங்கே மாட்டுபட அவர்கள் விரும்பவில்லை. 

அடுத்து அந்த நகர்வை ஆமி செய்ததே கோட்டை படைகளை மீட்கத்தான். புலிகளும் ஓடும் ஆமியை தடுப்பதில்லை (ஆனையிறவு, மாங்குளம், கிளிநொச்சி) - ஆகவே கோட்டையை மீட்கும் ஒரு நகர்வாகவே மண்கும்பான், மண்டை தீவு வரை வர விட்டார்கள். 

காந்தான்குடி நிச்சயமாக புலிகள் செய்ததுதான். நீங்களே சொல்கிறீர்கள் “அவர்கள் செய்யவில்லை என நான் சொல்லவில்லை” என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

புலிகள் தவறே செய்யவில்லை என்றால் இந்த உலகம் எமக்கு ஈழத்தை தரவா போகிறது?
அல்லது புலிகள் செய்த சில தவறுக்காகத்தான் உலகமே சேர்ந்து ஈழத்தமிழரை அழித்ததா?
அப்போ ருவாண்டா படுகொலையும் அதனலா?

புலிகள் செய்துருப்பின் அது பற்றி பேசுவதில் ஒரு குறையுமில்லை  நிறையுமில்லை 

அன்று காத்தான்குடியில் நடந்த முழு சம்பவத்தையும் நீங்கள் ஒரு முறை மீண்டும் அலசி பாருங்கள் 
பல விடயம் விடை அற்ற  கேள்வியாக மட்டுமே இருக்கிறது. 30 வருட போரில் கெலி இறக்கி பொதுமக்களை 
கொழுப்புக்கு சிங்கள இராணுவம் கொண்டு சென்ற ஒரே சம்பவம் இதுதான். திடீர் தாக்குதல் இராணுவத்தின் மீது நடந்த போதுகூட  உள்ளூர் மருத்துவமனை அல்லது அடுத்த நாள்தான் கெலி. அது எவ்வாறு அன்று மட்டும் எல்லாம் தயாராகவே இருந்தது 

புலிகள் மறுநாள் படகில் தப்பி சென்றார்கள் என்கிறார்கள் முஸ்லீம்களும் இராணுவமும் 
அன்று இரவு 40 புலிகள் எங்கு இருந்தார்கள்? எந்த முஸ்லீம் வீடு அடைக்கலம் கொடுத்தது? 

இவை எனக்கு இருக்கும் தனிப்பட்ட கேள்விகள் மட்டுமே 
யாருக்காவது விடை தெரிந்து இருப்பின் நானும் அறிய விரும்புகிறேன் 

உலகு எப்போ மருதர் இப்படியான காரணங்களுக்குகாக செயல்பட்டது.

அவர்களுக்கு தேவைபட்டால் யாரும் புனிதன். அவர்களுக்கு தேவையில்லை என்றால் அவரே வில்லன்.

தமக்கு தேவை என்றால் கொடிய பயங்கரவாதிகளை சுதந்திர வீரர் என்றும், சுந்தந்திர போராளிகளை பயங்கரவாதி என்றும் பட்டியல் இடுவார்கள்.

உலகின் போக்கை தீர்மானிப்பது எப்போதும் அவரவர் புவிசார் சுயநலனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

90 இல் மட்டும் அல்ல 2009 வரை இந்த ஆளணி பற்றாக்குறை இருந்ததுதான் மருதர். கடைசிவரை போராளிகளை இடம் மாற்றி மாற்றியே அடிபட்டார்கள். ஆனால் கோட்டை தாக்குதலில் மட்டும் 980 சொச்சம் மாவீரகள். பின்னர் 91 இல் வந்த ஆகாய கடல் தரை வழி சமரில் 1300 க்கு மேல். இது 87 வரை மொத்தமாக மாவீரராகிய 870 சொச்சம் பேரை விட அதிகம்.

நிச்சயமாக 89 இல் திரும்பி வரும் போது, சீருடை முதல் ஆள், ஆயுதம் வரை ஒரு அரை மரபுவழி இராணுவமாகவே வந்தார்கள். 89 எப்பிரல்-90 யூன் இடையே அதிக அளவில் ஆட்களை சேர்த்தார்கள்.

முஸ்லீம்கள் தீவு பகுதியில் உளவு பார்த்திருக்கலாம் - ஆனால் தீவு பகுதியை புலிகள் கைவிட புவியியல் ஒரு காரணம். மிக இலகுவாக வழங்கலை துண்டிக்கலாம். ஆகவே அங்கே மாட்டுபட அவர்கள் விரும்பவில்லை. 

அடுத்து அந்த நகர்வை ஆமி செய்ததே கோட்டை படைகளை மீட்கத்தான். புலிகளும் ஓடும் ஆமியை தடுப்பதில்லை (ஆனையிறவு, மாங்குளம், கிளிநொச்சி) - ஆகவே கோட்டையை மீட்கும் ஒரு நகர்வாகவே மண்கும்பான், மண்டை தீவு வரை வர விட்டார்கள். 

காந்தான்குடி நிச்சயமாக புலிகள் செய்ததுதான். நீங்களே சொல்கிறீர்கள் “அவர்கள் செய்யவில்லை என நான் சொல்லவில்லை” என்று.

90இல் இருந்த ஆள் பற்றாக்குறை என்பது வேறு வகையானது உங்களுக்கு அது உள்ளிருப்பவர்களுடன் 
பேசி இருந்தால் மட்டுமே புரியும்.  

ஆனால் பெரிய இராணுவ தோற்றம் ஒன்றை புலிகள் மாயையாக கட்டி வைத்து இருந்தார்கள் 

அப்போது இருந்த இராணுவ அச்சுறுத்தல் வேறு வடிவிலானது இராணுவம் திடீரென வந்து ஒரு வெளியில் இறங்கினால் புலிகள் ஒன்றும் செய்ய முடியாது 

முஸ்லிம்கள் வெளியேற்ற பட்டதே இராணுவத்துக்கு உண்மை நிலை  தெரிய   கூடாது எனும் ஒரே காரணம்தான் 

தீவு சண்டை நீங்கள் நினைக்கும் விதமாக நடக்கவில்லை தீவை இராணுவம் கைப்பற்றி இருக்காதுபோனால் 
கோட்டை இராணுவம் பசியிலேயே சரண் அடைந்து இருப்பார்கள்.  அதோடு தீவில் ஆமி இறங்க முன்னரே கோடையை வன்னியில் இருந்து வந்த புலிகள்தான் காவல்காத்து கொண்டு நின்றார்கள் அவர்கள் நிலத்தடி வங்கர் அடித்து ஆழிக்கு அண்மை வரை சென்று விட்டார்கள் ...

தீவில் பாரிய சண்டை நடந்தது அடித்த்து காரைநகருக்கு கலைக்க முயற்சி செய்தார்கள் நிலப்பரப்பு பாதகமாக அமைந்து விட்டது 49 போராளிகள் மாவீரர் ஆனர் அனேகமானவர்கள் வன்னியை சேர்ந்தவர்கள் கோட்டையை முற்றுகை இட்டு வைத்து இருந்தவர்கள் 

இந்திய இராணுவம் யாழில் 90 பங்குனி வரை இருந்தது சித்திரையில்தான் கே கே ஸ் இல் இருந்து வெளியேறியது .......புலிகள் இயக்கத்தில் ஆட்கள் சேர தொடங்கியது அதன் பின்புதான் 90 ஜூன் என்றாலும் 6 மாதம் பயிற்சி முடிய டிசம்பர் ஆகும் ..... அவர்களது முதலாவது சண்டை ஆனையிறவு சண்டைதான் எங்கள் ஊரிலேயே அதில் பல பேர் மாவீரர் ஆனார்கள். 

முஸ்லீம்கள் வெளியேற்றம் 90 அக்டோபர் 

காத்தான்குடி புலிகள் செய்யவில்லை என்று நான் கூறவில்லை 
எனக்கு இருக்கும் கேள்விகளுக்கு உங்களிடம் பதிலைத்தான் (உங்களுக்கு தெரிந்து இருப்பின்)
கேட்க்கிறேன்.  காத்தான் குடி சூடு நிறைய மர்மம் நிறைந்தது  அப்போது முஸ்லிமக்க்ளின் அடடூழியத்தால் யாரும் அதை பெரிதாக அலடவில்லை .... அவங்களுக்கு கொடுக்கத்தான் வேணும் எனும் மனநிலைதான் முக்கிய  காரணம். ஆனால் அந்த சம்பவம் புலிகள் செய்திருக்க சாத்தியமானதாக முஸ்லிம்களும் இராணுவமும் சொல்லும் கதைகள்  இல்லை. 
வேறு விதமாக புலிகள் செய்து இருக்கலாம் ... அது எவ்வாறு? என்பதுதான் நான் அறிய விரும்புவது 

தீவு சண்டையில் இருந்த ரவைகள் முடிந்த பின்பு அவர்களுக்கு சரியான 
வழங்கல் சென்றடையவில்லை பலர் குப்பி அடித்துதான் இறந்தார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

இவை எனக்கு இருக்கும் தனிப்பட்ட கேள்விகள் மட்டுமே 
யாருக்காவது விடை தெரிந்து இருப்பின் நானும் அறிய விரும்புகிறேன் 

கொஞ்சம் இருங்கள் உங்கள் கேள்விக்கெல்லாம் பதிலோடு ஒருவர் ஓடி வருவார். இதை கேட்ட பின்னும் அவர் சும்மா இரார், துரு துருவென்றிருக்கும் அவருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகரில் இருந்தது பருத்ததியடைப்பு  கரையில் வந்தது இராணுவம் இறங்ககியபோது.அங்கே காவலில் இருந்தத்தது மூண்று போராளிகளும் ஒரு ஆதரவாளரும் மட்டுமே(இவர் முன்னனாள் ஈபி ஆதரவாளர்)  ஒரு மைலில் இருந்த முகாமுக்கு தகவல் வந்த போது அங்கே 5 அல்லது 6 போராளிகளே இருந்ததனர்.இந்திய இராணுவம் வெளியேறியபோது விடுதலையானவர்ககளே அதிகம்

றீகன்(தீவக பொறுப்பாளர், பரிதி பிரான்சசில் கொல்லலப்பபட்டார்)கஞ்சா பாபு(பின்னர் நிதித்ததுறை),சிறி(வீரச்சசாவு),சுதா(தங்கன் துணை அரசியல் பொறுப்பபாளர்),பன்னீர்,கொன்னாஸ், மணலாறில் இருந்து வந்திருந்த போராளிகள் சிறிய அளவில்,மண்டடைதீவில் கிரேசி தலமையில் 40 போராளிகள்

தீவக இழப்பிற்கும் முஸ்லலீம்களுக்கும் சம்மந்ததம் இல்லை பருத்ததியடைப்பபில் காவலிருந்தது சுருவில் வழியாக இந்தியாவுக்கு தப்பிச்சசென்ற கொன்னனாஸ்,பன்னீர் ,நொப்பபன், பெண் போராளி தாரணி ஆகியோரைத்ததான் கேட்க வேண்டடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நந்தன் said:

விபரங்கள் தெரியாது, ஆனால் நான் அப்போ கேள்விபட்டதும் இப்படி ஒரு கதைதான். நாரந்தனை, வேலணை பக்கம் இருந்த மக்களும் போராளிகளும் அராலி துறையூடாக வலிகாமம் வந்தார்கள்.

கோட்டை வீழ்ந்த பின் மண்டைதீவு முகாம் தாக்கி அழிக்கபட்டது, ஆனால் அதன் பின்னும் புலிகள் அங்கே தங்கி நிற்கவில்லை. அதன் பின், 1996 இலும் 2000 இலும், கடைசியாக 2008 இலும் தாக்குதல்கள் நடந்த நியாபகம்.1996 இல் முகாம் படையதிகாரி, கேணல் ஒருவரும் கொல்லப்பட்டார். ஆனால் ஒரு போதும், எவ்வளவு பலமாயிருந்த போதும் தீவு பகுதியை புலிகள் மீட்க முயலவில்லை என்பதே நான் நினைப்பது.

எழுவான் கரை, மன்னார் தீவு, போல தீவு பகுதியும் கட்டுபாட்டில் வைத்திருக்க கூடிய பகுதியில்லை என நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

காரைநகரில் இருந்தது பருத்ததியடைப்பு  கரையில் வந்தது இராணுவம் இறங்ககியபோது.அங்கே காவலில் இருந்தத்தது மூண்று போராளிகளும் ஒரு ஆதரவாளரும் மட்டுமே(இவர் முன்னனாள் ஈபி ஆதரவாளர்)  ஒரு மைலில் இருந்த முகாமுக்கு தகவல் வந்த போது அங்கே 5 அல்லது 6 போராளிகளே இருந்ததனர்.இந்திய இராணுவம் வெளியேறியபோது விடுதலையானவர்ககளே அதிகம்

றீகன்(தீவக பொறுப்பாளர், பரிதி பிரான்சசில் கொல்லலப்பபட்டார்)கஞ்சா பாபு(பின்னர் நிதித்ததுறை),சிறி(வீரச்சசாவு),சுதா(தங்கன் துணை அரசியல் பொறுப்பபாளர்),பன்னீர்,கொன்னாஸ், மணலாறில் இருந்து வந்திருந்த போராளிகள் சிறிய அளவில்,மண்டடைதீவில் கிரேசி தலமையில் 40 போராளிகள்

தீவக இழப்பிற்கும் முஸ்லலீம்களுக்கும் சம்மந்ததம் இல்லை பருத்ததியடைப்பபில் காவலிருந்தது சுருவில் வழியாக இந்தியாவுக்கு தப்பிச்சசென்ற கொன்னனாஸ்,பன்னீர் ,நொப்பபன், பெண் போராளி தாரணி ஆகியோரைத்ததான் கேட்க வேண்டடும்.

தீவில் புலிகள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்து கொடுத்தவர்கள் முஸ்லீம்கள் 
(அதில் எனக்கும் தனிப்பட சிறிய பங்கு உண்டு .... நல்ல வேளை நான் சொன்னதை அவர்கள் நம்பி இருந்தார்கள் நானும் பொய் கூறவில்லை நடந்ததையே கூறினேன். அல்லது என்னை அடித்தே கொன்று இருப்பார்கள்) 

அதன் தொடர்ச்சியாக காக்கை தீவு .... பொம்மை வெளி இரண்டிலும் ஒரே நேரத்தில் தரையிறங்கும் 
திட்டம் நடந்துகொண்டு இருந்த போதுதான் முஸ்லீம்கள் பிடிபட்டார்கள் 

பொருட்கள் விற்கும் முஸ்லீம்கள் இரவு நேரத்தில் பண்ணை பாலத்தை கடந்து சென்று வந்துகொண்டு இருந்தார்கள்  புலிகள் அவர்களை விடுவதில்லை காரணம் கோட்டை இராணுவம் கண்டால் சுடுவார்கள் 
இவர்கள் வறுமை பசி பட்டினி என்று கூறி புலிகளை ஏமாற்றி சென்று வந்துகொண்டு இருந்தார்கள் 
ஆனால் இராணுவம் தரை இறங்கு முன்னரே பண்ணை பலம் தகர்த்து விட்டார்கள். இவர்கள் போவது கோட்டை இராணுவத்துக்கு தெரியும் ஒரு நாளும் சுடுவதில்லை ...... இந்த புள்ளி எல்லாம் வைத்து புலிகள் கோலம் போட தொடங்கியது ரொம்ப லெட். 

நீங்கள் தீவில் அப்போது இருந்து இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன் 
உங்களுக்கு என்னைவிட நடந்து எல்லாம் தெரிந்து இருக்கும் நன்று  தெரிந்து இருக்கும் 

கோட்டை தாக்குதல் 28 போராளிகள் மாவீரர் ஆனர்கள்...... இவர்கள் அதற்கான ஏற்பாடு செய்துகொண்டு இருக்கும்போது அதை சொல்லி கொடுத்தும் முஸ்லீம்கள்தான் .......இவர்கள் தாக்குமுன்னரே இராணுவம் தயாராகவே இருந்தது  அதனால்தான் அந்த இழப்பும் நேர்ந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நந்தன் said:

தீவக இழப்பிற்கும் முஸ்லலீம்களுக்கும் சம்மந்ததம் இல்லை பருத்ததியடைப்பபில் காவலிருந்தது சுருவில் வழியாக இந்தியாவுக்கு தப்பிச்சசென்ற கொன்னனாஸ்,பன்னீர் ,நொப்பபன், பெண் போராளி தாரணி ஆகியோரைத்ததான் கேட்க வேண்டடும்.

யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்த தாரணி அக்காவா?
அவர் அதன் பின்பும் பல தாக்குதல்களில் கட்டுவன் மாவிட்டபுரம் வீமன்காமம் 
பகுதியில் வழி நடத்தி இருந்தார் 

இப்போ ஞாபகம் சரியாக இல்லை அவர் கட்டுவன் பகுதியில் ஒரு சண்டையில் இருந்ததாகவே எண்ணுகிறேன். 
அவரது மெய்பாதுகாவலராக எங்களுடன் படித்த ஒருவரே இருந்தார். 

ஒரு சண்டையில் இறந்ததாக  எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இவர் வேறு  தீவக பொறுப்பாக இருந்தார்.நீங்கள் சொல்வது மேஜர் தாரணி செந்தமிழ் பேச்சினாலேயே கட்டுவனுக்கு மாற்றப்பட்டார்.அங்கேயே ஒரு சண்டையில் வீரச்சாவடைந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎07‎-‎07‎-‎2021 at 19:43, Maruthankerny said:

காத்தான்குடி பள்ளிவாசல் குண்டுவெடிப்பு என்பதன் உண்மை இன்னமும் யாருக்கும் தெரியவில்லை 
நான் அதை அறிய பல முயற்சி செய்தும் யாரும் அது பற்றி பேசுவதில்லை. புலிகளும் அதை மறுத்ததும் இல்லை. அப்போ கருணாவை விட வேறு பலர்தான் ஆளுமையோடு இருந்தார்கள் ... கோத்தாவின் வீட்டு நாயாகிய  பின்பு கூட கருணா கூட இது பற்றி ஏதும் பேசுவதில்லை.  அப்போ மடக்கிளப்பு என்றால் றீகன் கீழ்தான்  எது நடந்து இருப்பினும் அவரின் கீழ் என்ற நிலைதான் இருந்தது. அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் ஆண்டனி  அப்போ யாழில் இருந்தார். 

மருதர், 4 பள்ளிவாசல்களில் தாக்குதல் நடக்கவில்லை ...2 பள்ளிவாசல்களில் தான் தாக்குதல் நடந்தது...புலிகள் தான் செய்தார்கள்....ஆனால் அரசும் புலிகளுக்கு சப்போட் பண்ணினார்கள் ...காரணம் என்று நான் நினைப்பது இதையே சாட்ட வைத்து உலக நாடுகளிடம் குறிப்பாய் முஸ்லீம் நாடுகளிடம் நிதியுதவி ,ஆயுத உதவி பெறுவதற்கு ....அதில் அரசு வெற்றியும் பெற்றார்கள்.

புலிகள் இந்த தாக்குதலை செய்திருக்கா விட்டால்  அந்த நேரத்தில் முஸ்லீம் ஊர்காவல் படையால் எத்தனையோ தமிழ் மக்கள் செத்திருப்பார்கள் ... அந்த நேரம் அங்குள்ள தமிழர்கள் மிளகாய்த் தூளோடும், கத்திகளை தலை மாட்டில் வைத்துக் கொண்டு தான் படுக்க போவது .....இது தாக்குதலின் பின்னர் தான் தமிழர்கள் பயமின்றி நித்திரைக்கு போனார்கள் ...முஸ்லிம்கள் தாக்குதலுக்கான திட்டம் தீட்டியது இந்த ப .வாசலில் ...அதனால் தான் அங்கேயே வைத்து போட்டு தள்ளினார்கள் ...அதில் சிறுவர்கள் இறந்தது துரதிஸ்ட்டம்... இத் தாக்குதல் நடந்து இருக்கா விட்டால் எத்தனையோ தமிழர்கள் இருந்திருப்பார்கள்.

அந்த நேரத்தில் புலிகளில் முஸ்லிம்களும் இருந்தார்கள்[அவர்களையும் கதற, கதற  புலிகள் நேருக்கு ,நேர் போட்டு தள்ளின கதை உங்களுக்கு தெரிந்திருக்கும்.]....போலீசாரின் பங்கு புலிகள் உள்ளே வந்து போனதை கண்டும் காணாமல் இருந்தது அல்லது உண்மையிலேயே அவர்கள் எப்படி வந்தார்கள்/போனார்கள் என்பது தெரியாமல் இருக்கலாம் ....அடுத்தது காயப்பட்டவர்களை உடனடியாய் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக விடவில்லை ....அப்படி கொண்டு போய் இருந்தால் , அரையாசி பேர் தப்பித்து இருப்பார்கள் ....அவர்கள் அதிகம் பேர் இறந்தால்புலிகளுக்கு தண்டனை அதிகமாய் கிடைக்கும் என அரசு எதிர்பாத்து இருக்கலாம் ...அதில் அரசு வெற்றி பெற்றது 
தம் மக்களை காப்பாற்ற இப்படியான படுகொலைகளை புலிகள் செய்திருந்தாலும் , புலிகளை சர்வதேச ரீதியில் பலவீனப்படுத்த இப்படியான தாக்குதல்களை அரசே ஊக்குவித்து தமக்கு  சாதகமாய்  பாவித்தது ...பிரேமதாசாவை போட்டுத் தள்ள இப்படியான செயல்களே காரணம் என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அதுசரி எந்த உலகத்தில இருந்தநீங்கள்?

இங்கே எல்லோரும் வலை போட்டு தேடிக் கொண்டிருந்தோம்.

சரிசரி கண்டது மிகவும் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது .புலிகளில் இருந்து கருணாகுழு பிரிந்தது போல செய்தியைப் போடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/7/2021 at 17:15, goshan_che said:

விபரங்கள் தெரியாது, ஆனால் நான் அப்போ கேள்விபட்டதும் இப்படி ஒரு கதைதான். நாரந்தனை, வேலணை பக்கம் இருந்த மக்களும் போராளிகளும் அராலி துறையூடாக வலிகாமம் வந்தார்கள்.

தீவகத்தில் முன்பு ஊரடங்கு காலத்தில்(ஜே.வி.பி கலவரம்,83 இனப்படுகொலை நடந்த காலத்தில்)கூட நதாங்கள் றோட்டுக்கரையில் இருந்த கரப்பந்தாட்ட மைதானங்களில் விளையாடுவோம் .இரவு நேரங்களில் ரோந்து வருவார்கள். அப்பொழுது ஓடிஒழிவோம்.ஆனால் பெரிய அளவில் பிரச்சிகைள் இல்லாமல் இருந்தோம்.வடமராட்சி இயாழ்ப்பாணநகர்ப்பகுதி அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகும். பண்ணையில் சென்றி வைத்து சோதனை நடத்துவார்கள். 85 இற்குப்பிறகு நான் அங்கு இருக்கவிi;லை.90 இல் கோட்டையைக் கைப்பற்றுவதற்காக தீவுப்பகுதியில் ஊர்காவற்துறையில் இருந்து யாழ்நகரை நோக்கி  வடக்கு றோட்,தெற்கு றோட்,சுருவில்றோட் ஆகிய வீதிகளுக்கூடாக நகர்ந்து வந்தார்கள். கண்மூடித்தனமான தாக்குதல்கள். கண்ணில் பட்டலர்களை எல்லாம் சுட்டுத்தள்ளினார்கள். எதிர்தாக்குதல் செய்வதற்கு புலிகளிடம் போதிய ஆளணி இல்லை.பெரும்பாலானஇளம் ஆண்களும் பெண்களும் முதலே பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள். வெளியேறாதவர்கள் வயது வித்தியாசமின்றி சுடப்பட்டார்கள்.இதில் நண்பர்கள் ,தெரிந்தவர்கள் பலர் சுடப்பட்டார்கள். எனது அம்மாவின் காலில் சன்னம் பட்டதால் அவர் நிரந்தரமாக காலை இழக்க வேண்டி வந்தது.ஆனால் கடைசிசியில் இராணுவம் தீவுப்பகதியைக்  முற்று முழுதாகக் கைப்பற்றியும் யாழ் கோட்டையை புலிகள் கைப்பற்றி விட்டார்கள். மிக அதிகளவில் கூடிவாழ்ந்த மகள்ளய் அன்றய இடப்பெயர்வில் அவிழ்த்து விட்ட நெல்விக்காய் மூடையாக திக்கொன்றாகச் சிதறிப் போனார்கள்.அதன் பிறகு 90 வீதமானவர்கள்' தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை. இடம்பெயர்ந்த இடங்களிலும்,வெளிநாடுகளிலும்,கெழும்பிலுமாக  தமது வாழ்விடங்களை அதை;தக்கொண்டு விட்டார்கள். திரும்பிப் போனவர்களும் தங்கள் தொழில்களை மட்டும் அங்கு நடத்திக் கொண்டு யாழ்நகரில் விடுகளை வாங்கி வாழ்ந்து வருகிறார்கள். பல விசாய நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. பல வீடுகள் வெறிச்சேடி பாழடைந்து கிடக்கின்றன.வயல்கள்,Nனைய காணிகள் பற்றைகள்,மரங்கள் வளர்ந்து காடுபத்திப் போய் கிடக்கின்றன. கட்டாக்காலி மாடுகள் பெருத்த விட்டதால் விவசாயம் செய்யக் கூட சிரமம். கடந்த வருடம் பலர் நெற்செய்கையைச் செய்திருந்தார்கள்.ஈனால் உன்று மட்டும் புரியவில்லை. யாழ்நகருக்கு தீவுப்பகுதியூடாக படைநடத்தி இலகுவாக சென்றடைய முடியும் என்று இராணுவதரப்புக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்?டக்ளசா?முஸ்லிம்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, புலவர் said:

மகள்ளய் அன்றய இடப்பெயர்வில் அவிழ்த்து விட்ட நெல்விக்காய் மூடையாக திக்கொன்றாகச் சிதறிப் போனார்கள்.அதன் பிறகு 90 வீதமானவர்கள்' தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை. இடம்பெயர்ந்த இடங்களிலும்,வெளிநாடுகளிலும்,கெழும்பிலுமாக  தமது வாழ்விடங்களை அதை;தக்கொண்டு விட்டார்கள். திரும்பிப் போனவர்களும் தங்கள் தொழில்களை மட்டும் அங்கு நடத்திக் கொண்டு யாழ்நகரில் விடுகளை வாங்கி வாழ்ந்து வருகிறார்கள். பல விசாய நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. பல வீடுகள் வெறிச்சேடி பாழடைந்து கிடக்கின்றன

எனக்கு நன்றாக நினைவு உள்ளது, எங்கள் ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குடும்பமாவது தங்கி இருந்தது. உறவுகள் இல்லாதோர் சேர்ச் வளவுகளில் கூடாரம் அடித்து இருந்தார்கள். ஆனால் 3 மாதமளவில் என்கெங்கோ தனி தனியா வீடுகள் எடுத்து போய்விட்டார்கள். பலர் இப்போது எமது ஊரில் நிரந்தரமாகவே வீடு மனை வாங்கி வாழ்கிறார்கள்.

முன்பும் ஒரு தடவை யாழில் எழுதினேன் - காப்பெற் வீதி வசதிகள், யாழ் நகரை இலகுவில் அடையும் வசதிகள் இருந்தும் பெரும்பாலான தீவு பகுதி ஊர்களில் ஆட்கள் இல்லை. சிங்களம் இதை இப்படியே கன நாள் விடாது. நல்ல தண்ணீர் திட்டம் என்ற போர்வையில் குடியேறக்கூடும்.

39 minutes ago, புலவர் said:

யாழ்நகருக்கு தீவுப்பகுதியூடாக படைநடத்தி இலகுவாக சென்றடைய முடியும் என்று இராணுவதரப்புக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்?டக்ளசா?முஸ்லிம்களா?

இதை டென்சில் கொபேகடுவ, விஜய விமலரத்ன போன்ற அதிகாரிகள் இலகுவில் கண்டறிந்திருப்பார்கள் என நினைக்கிறேன். உளவுக்கு, உள்ளூர் பாதைகளுக்கு இவர்களை பயன்படுத்தி இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

எனக்கு நன்றாக நினைவு உள்ளது, எங்கள் ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குடும்பமாவது தங்கி இருந்தது. உறவுகள் இல்லாதோர் சேர்ச் வளவுகளில் கூடாரம் அடித்து இருந்தார்கள். ஆனால் 3 மாதமளவில் என்கெங்கோ தனி தனியா வீடுகள் எடுத்து போய்விட்டார்கள். பலர் இப்போது எமது ஊரில் நிரந்தரமாகவே வீடு மனை வாங்கி வாழ்கிறார்கள்.

முன்பும் ஒரு தடவை யாழில் எழுதினேன் - காப்பெற் வீதி வசதிகள், யாழ் நகரை இலகுவில் அடையும் வசதிகள் இருந்தும் பெரும்பாலான தீவு பகுதி ஊர்களில் ஆட்கள் இல்லை. சிங்களம் இதை இப்படியே கன நாள் விடாது. நல்ல தண்ணீர் திட்டம் என்ற போர்வையில் குடியேறக்கூடும்.

உண்மை. யாழ்நகரை அண்மித்த பகுதிகள் சன நெருக்கத்தால் பிதுங்கி வழிகிறது. குடிதண்ணீருடன் மலசலக்கூட தண்ணீர் கலப்பதாகக் கூட செய்திகள் வருகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து 30 நிமிடங்களில் ஊர்காவற்துறை நகரை அடைந்து விடலம். அங்கே போய் குடியேறுங்ங்கோ என்று வெளிநாட்டில் இருந்து சொல்வதற்கு தார்மீக அறம் இடங்கொடுக்கவில்லை. ஆனால் சிங்களவர்களுக்கு ஏராளமான காணிகள் வீடுகள் தரிசாக கிடப்பது தெரிந்தால்' குடியேற்றத்திடமென்று ஆரம்பித்து விடுவாiர்கள்.னால் ;. புதிய நன்னீர்த்திட்டங்களை உருவாக்கிகுளங்களைத்தூர்வாரி நீர் வசதி செய்து கொடுத்தால் சொர்கமாக இருக்கும்..சீனாக்காரன் அறிந்தால் கடலட்டை வளர்க்கிறேன் என்று அட்டையைக் காட்டி ஆட்டையைப் போட்டிருவான். ஏற்கனவே 500 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் கப்பல்  ஒன்று ஆழமில்லாத அராலிக்கடலில் முழ்கியதாக ஆராய்ச்சி நடத்தியவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

எல்லாம் முடிஞ்ச பிறகு சிங்களவன் ஆக்கிரமிச்சிட்டான் என்டு கத்துறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, புலவர் said:

யாழ்நகரை அண்மித்த பகுதிகள் சன நெருக்கத்தால் பிதுங்கி வழிகிறது. குடிதண்ணீருடன் மலசலக்கூட தண்ணீர் கலப்பதாகக் கூட செய்திகள் வருகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து 30 நிமிடங்களில் ஊர்காவற்துறை நகரை அடைந்து விடலம். அங்கே போய் குடியேறுங்ங்கோ என்று வெளிநாட்டில் இருந்து சொல்வதற்கு தார்மீக அறம் இடங்கொடுக்கவில்லை. ஆனால் சிங்களவர்களுக்கு ஏராளமான காணிகள் வீடுகள் தரிசாக கிடப்பது தெரிந்தால்' குடியேற்றத்திடமென்று ஆரம்பித்து விடுவாiர்கள்.னால் ;. புதிய நன்னீர்த்திட்டங்களை உருவாக்கிகுளங்களைத்தூர்வாரி நீர் வசதி செய்து கொடுத்தால் சொர்கமாக இருக்கும்

யாழ்நகரை அண்டிய பகுதிகளில் காணிகள் வீடுகள் இருந்தாலும் தமிழர்கள் எல்லோருமே போய் அங்கே குடியேறிவிட முடியாது.

காணி வாங்க யாரும் போனால் முதலில் அவர்களிடம் கேட்கப்படுவது சாதி.

சாதியில் குறைந்த தமிழர்களுக்கு தரிசு நிலமானாலும் விற்கபடமாட்டாது. ஆனால் எல்லா சாதியையும் ஒன்றாய் போட்டு உரலுக்க போட்டு குத்தின சிங்களவர்கள் முஸ்லீம்களுக்கு அதிக பணம் கொடுத்தால் விற்கப்படும் சூழல் உருவாகும், இல்லையென்றால் அவர்களாகவே எடுத்துக்கொள்ளும் நிலை மிக விரைவில் வரும்.

இயக்கம் இருக்கும்வரை வடகிழக்கு இனம் சாதித்த இனம், இயக்கம் அழிந்தபின் மறுபடியும் அது சாதிய இனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

மருதர், 4 பள்ளிவாசல்களில் தாக்குதல் நடக்கவில்லை ...2 பள்ளிவாசல்களில் தான் தாக்குதல் நடந்தது...புலிகள் தான் செய்தார்கள்....ஆனால் அரசும் புலிகளுக்கு சப்போட் பண்ணினார்கள் ...காரணம் என்று நான் நினைப்பது இதையே சாட்ட வைத்து உலக நாடுகளிடம் குறிப்பாய் முஸ்லீம் நாடுகளிடம் நிதியுதவி ,ஆயுத உதவி பெறுவதற்கு ....அதில் அரசு வெற்றியும் பெற்றார்கள்.

புலிகள் இந்த தாக்குதலை செய்திருக்கா விட்டால்  அந்த நேரத்தில் முஸ்லீம் ஊர்காவல் படையால் எத்தனையோ தமிழ் மக்கள் செத்திருப்பார்கள் ... அந்த நேரம் அங்குள்ள தமிழர்கள் மிளகாய்த் தூளோடும், கத்திகளை தலை மாட்டில் வைத்துக் கொண்டு தான் படுக்க போவது .....இது தாக்குதலின் பின்னர் தான் தமிழர்கள் பயமின்றி நித்திரைக்கு போனார்கள் ...முஸ்லிம்கள் தாக்குதலுக்கான திட்டம் தீட்டியது இந்த ப .வாசலில் ...அதனால் தான் அங்கேயே வைத்து போட்டு தள்ளினார்கள் ...அதில் சிறுவர்கள் இறந்தது துரதிஸ்ட்டம்... இத் தாக்குதல் நடந்து இருக்கா விட்டால் எத்தனையோ தமிழர்கள் இருந்திருப்பார்கள்.

அந்த நேரத்தில் புலிகளில் முஸ்லிம்களும் இருந்தார்கள்[அவர்களையும் கதற, கதற  புலிகள் நேருக்கு ,நேர் போட்டு தள்ளின கதை உங்களுக்கு தெரிந்திருக்கும்.]....போலீசாரின் பங்கு புலிகள் உள்ளே வந்து போனதை கண்டும் காணாமல் இருந்தது அல்லது உண்மையிலேயே அவர்கள் எப்படி வந்தார்கள்/போனார்கள் என்பது தெரியாமல் இருக்கலாம் ....அடுத்தது காயப்பட்டவர்களை உடனடியாய் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக விடவில்லை ....அப்படி கொண்டு போய் இருந்தால் , அரையாசி பேர் தப்பித்து இருப்பார்கள் ....அவர்கள் அதிகம் பேர் இறந்தால்புலிகளுக்கு தண்டனை அதிகமாய் கிடைக்கும் என அரசு எதிர்பாத்து இருக்கலாம் ...அதில் அரசு வெற்றி பெற்றது 
தம் மக்களை காப்பாற்ற இப்படியான படுகொலைகளை புலிகள் செய்திருந்தாலும் , புலிகளை சர்வதேச ரீதியில் பலவீனப்படுத்த இப்படியான தாக்குதல்களை அரசே ஊக்குவித்து தமக்கு  சாதகமாய்  பாவித்தது ...பிரேமதாசாவை போட்டுத் தள்ள இப்படியான செயல்களே காரணம் என்று நினைக்கிறேன். 

நன்றி நேரமெடுத்து பதில் எழுதியமைக்கு ....
அப்போதைய பத்திரிக்கை வீரகேசரி உட்பட கொழும்பு ஊடங்களில் வந்த செய்திகளைத்தான் 
நான் வாசித்து இருக்கிறேன்  அடுத்தநாள் முழுதும் ரூபவாஹினியில் காட்டினார்கள் 
அதில்தான் இராணுவம் கேலிக்கபடரில் ஏற்றி கொழும்பு கொண்டு வருவதை காட்டினார்கள். 

இதில் நிறைய லூசுத்தனமான பரப்புரைகள் சிங்கள- முஸ்லீம் தரப்புகளால் இப்போதும் செய்யப்படுகிறது 
இப்போதும் விக்கிபீடியா உட்பட பல வேற்று கிரகவாசிகள் வாசிக்க கூடிய அளவில் அள்ளி  அவித்து வைத்து இருக்கிறார்கள் 

புலிகள் செய்து இருப்பின் ஏன் இராணுவமும் முஸ்லிம்களும் சும்மா பொய்களை கட்தவிழ்த்து விடுகிறார்கள்?
நடந்ததை நடந்தபடியே கூறலாமே?

ரூபவாஹினியில் அடுத்தநாள் புலிகள் தப்பி சென்ற படகு மீது தாக்குதல் அதில் பல புலிகள் உயிரிழப்பு என்று சொன்னார்கள் அது சில பத்திரிகைகளிலும் வந்து இருந்தது 
அது நடந்ததா??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎-‎07‎-‎2021 at 14:23, ஈழப்பிரியன் said:

அதுசரி எந்த உலகத்தில இருந்தநீங்கள்?

இங்கே எல்லோரும் வலை போட்டு தேடிக் கொண்டிருந்தோம்.

சரிசரி கண்டது மிகவும் மகிழ்ச்சி.

நீங்கள் ஒருவர் தான் என்னை மும்பரமாய் தேடி இருக்கிறீர்கள் ...நன்றி அண்ணா 

On ‎10‎-‎07‎-‎2021 at 12:45, சுவைப்பிரியன் said:

ரதியை கன்டது மகிழ்ச்சி.

நன்றி 

15 hours ago, Maruthankerny said:

நன்றி நேரமெடுத்து பதில் எழுதியமைக்கு ....
அப்போதைய பத்திரிக்கை வீரகேசரி உட்பட கொழும்பு ஊடங்களில் வந்த செய்திகளைத்தான் 
நான் வாசித்து இருக்கிறேன்  அடுத்தநாள் முழுதும் ரூபவாஹினியில் காட்டினார்கள் 
அதில்தான் இராணுவம் கேலிக்கபடரில் ஏற்றி கொழும்பு கொண்டு வருவதை காட்டினார்கள். 

இதில் நிறைய லூசுத்தனமான பரப்புரைகள் சிங்கள- முஸ்லீம் தரப்புகளால் இப்போதும் செய்யப்படுகிறது 
இப்போதும் விக்கிபீடியா உட்பட பல வேற்று கிரகவாசிகள் வாசிக்க கூடிய அளவில் அள்ளி  அவித்து வைத்து இருக்கிறார்கள் 

புலிகள் செய்து இருப்பின் ஏன் இராணுவமும் முஸ்லிம்களும் சும்மா பொய்களை கட்தவிழ்த்து விடுகிறார்கள்?
நடந்ததை நடந்தபடியே கூறலாமே?

ரூபவாஹினியில் அடுத்தநாள் புலிகள் தப்பி சென்ற படகு மீது தாக்குதல் அதில் பல புலிகள் உயிரிழப்பு என்று சொன்னார்கள் அது சில பத்திரிகைகளிலும் வந்து இருந்தது 
அது நடந்ததா??? 

அந்த நேரம் அப்படி செய்திகள் வந்தது எனக்கும் நினைவில் இருக்குது ...அதில் உண்மை இல்லை என்றே நினைக்கிறேன்...பள்ளி வாசல்களில் தமிழரை அழிக்க தயார் ஆகிறார்கள் என்ற செய்தி புலிகளுக்கு எப்படி கிடைத்தது ....அவர்களுக்குள்ளும் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று அப்போது கதைத்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Maruthankerny said:

நன்றி நேரமெடுத்து பதில் எழுதியமைக்கு ....
அப்போதைய பத்திரிக்கை வீரகேசரி உட்பட கொழும்பு ஊடங்களில் வந்த செய்திகளைத்தான் 
நான் வாசித்து இருக்கிறேன்  அடுத்தநாள் முழுதும் ரூபவாஹினியில் காட்டினார்கள் 
அதில்தான் இராணுவம் கேலிக்கபடரில் ஏற்றி கொழும்பு கொண்டு வருவதை காட்டினார்கள். 

இதில் நிறைய லூசுத்தனமான பரப்புரைகள் சிங்கள- முஸ்லீம் தரப்புகளால் இப்போதும் செய்யப்படுகிறது 
இப்போதும் விக்கிபீடியா உட்பட பல வேற்று கிரகவாசிகள் வாசிக்க கூடிய அளவில் அள்ளி  அவித்து வைத்து இருக்கிறார்கள் 

புலிகள் செய்து இருப்பின் ஏன் இராணுவமும் முஸ்லிம்களும் சும்மா பொய்களை கட்தவிழ்த்து விடுகிறார்கள்?
நடந்ததை நடந்தபடியே கூறலாமே?

ரூபவாஹினியில் அடுத்தநாள் புலிகள் தப்பி சென்ற படகு மீது தாக்குதல் அதில் பல புலிகள் உயிரிழப்பு என்று சொன்னார்கள் அது சில பத்திரிகைகளிலும் வந்து இருந்தது 
அது நடந்ததா??? 

எம்மில் இருக்கும் மிகப் பெரிய பலவீனம் அல்லது குறைபாடு  நடந்த அநீதிகளை உரிய முறையில் பத்திரப்படுத்தி வைக்கவில்லை ...அதை சாதகமாக்கி மற்றவர்கள் கொஞ்சம் ,கொஞ்சமாய்  திரித்து தமக்கு சாதகமாய் மாற்றி விடுகிறார்கள்...எம்மவர்கள் தமக்கு நடந்த அல்லது தெரிந்த அநீதிகளை இணையங்களில் எழுதுவது  குறைவு ....முஸ்லீம்களோ அல்லது சிங்களர்களோ புலிகள் செய்த ஒன்றை பத்தாக்கி எழுத தயாராய் இருந்தார்கள்/இருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்கள் ஒருவர் தான் என்னை மும்பரமாய் தேடி இருக்கிறீர்கள் ...நன்றி அண்ணா 

மூன்றாம் மாதத்திலிருந்து பலரும் தேடினோம்.

On 30/3/2021 at 13:35, ஈழப்பிரியன் said:

சகோதரி ரதியை நீண்ட நாட்களாகக் காணவில்லை.

தொடர்பில் இருப்போர் யாராகிலும் விசாரிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2021 at 17:33, புலவர் said:

. மிக அதிகளவில் கூடிவாழ்ந்த மகள்ளய் அன்றய இடப்பெயர்வில் அவிழ்த்து விட்ட நெல்விக்காய் மூடையாக திக்கொன்றாகச் சிதறிப் போனார்கள்.அதன் பிறகு 90 வீதமானவர்கள்' தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை. இடம்பெயர்ந்த இடங்களிலும்,வெளிநாடுகளிலும்,கெழும்பிலுமாக  தமது வாழ்விடங்களை அதை;தக்கொண்டு விட்டார்கள். திரும்பிப் போனவர்களும் தங்கள் தொழில்களை மட்டும் அங்கு நடத்திக் கொண்டு யாழ்நகரில் விடுகளை வாங்கி வாழ்ந்து வருகிறார்கள். பல விசாய நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. பல வீடுகள் வெறிச்சேடி பாழடைந்து கிடக்கின்றன.வயல்கள்,Nனைய காணிகள் பற்றைகள்,மரங்கள் வளர்ந்து காடுபத்திப் போய் கிடக்கின்றன. கட்டாக்காலி மாடுகள் பெருத்த விட்டதால் விவசாயம் செய்யக் கூட சிரமம். கடந்த வருடம் பலர் நெற்செய்கையைச் செய்திருந்தார்கள்.ஈனால் உன்று மட்டும் புரியவில்லை. 

இது எனது ஊருக்கும் பொருந்தும். ஆனால் சிங்களவர்கள் இந்த இடங்களை விரும்பி வந்து குடியேறுவார்கள் என்று நினைக்கவில்லை. (சிங்கள பகுதியின் மண் வளங்களை அறிந்தவன் என்ற வகையில்)

ஆனால் அரசு உள் நோக்கத்துடன் தொழிற்சாலைகளை வேலைவாய்ப்புகளை உருவாக்கி???

Link to comment
Share on other sites

4 hours ago, விசுகு said:

இது எனது ஊருக்கும் பொருந்தும். ஆனால் சிங்களவர்கள் இந்த இடங்களை விரும்பி வந்து குடியேறுவார்கள் என்று நினைக்கவில்லை. (சிங்கள பகுதியின் மண் வளங்களை அறிந்தவன் என்ற வகையில்)

ஆனால் அரசு உள் நோக்கத்துடன் தொழிற்சாலைகளை வேலைவாய்ப்புகளை உருவாக்கி???

அரச உதவியுடன் வந்திருக்க சிங்களவர்கள் பின் நிற்க மாட்டார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.