Jump to content

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை – எரிக்சொல்ஹெய்ம் கருத்து

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை – எரிக்சொல்ஹெய்ம் கருத்து

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் -வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்டெய்லி மிரருடன் மேற்கொண்ட டுவிட்டர் உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
.1998 இல் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான சமாதான நடவடிக்கைகளில் மூன்றாம் தரப்பாக செயறபடுவதற்கு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நோர்வேயை அணுகினார்.ஏனைய நாடுகள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்தனர் எனினும் நோர்வே தொலைதூர நாடாக காணப்பட்டதாலும் இலங்கை குறித்து தனிப்பட்ட நலன்கள் இல்லாததன் காரணமாகவும் இரு தரப்பினாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக காணப்பட்டதாலும் அவர்கள் நோர்வேயை தெரிவு செய்தனர்.
நோர்வே என்பது இந்தியாவிற்கும் இலங்கை விவகாரங்களில் தொடர்புபட்டிருந்த முக்கிய வெளிநாடுகளிற்கும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நாடாக காணப்பட்டது.
erik.jpg
முதல் இரண்டு வருடங்கள் அனைத்தும் கொழும்பில் இரகசியமாக இடம்பெற்றன.
விடுதலைப்புலிகள் தரப்பில் சமாதான முயற்சிகள் தொடர்பில் என்ன நடைபெறுகின்றது என்பது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கும் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமருக்கும் மாத்திரம் தெரிந்திருந்தது.
2000 ம் ஆண்டு சந்திரிகா தாக்கப்பட்டு கிட்டத்தட்ட கொலை செய்யப்பட்டார் அதன் பின்னர் அவர் எங்களின் பங்களிப்பு குறித்து பகிரங்கப்படுத்தினார்
2001-2002 இல் நாங்கள் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டோம்முதல் இரண்டு வருடங்கள் அது மிகவும் வெற்றிகரமானதாக காணப்பட்டது எவரும் கொல்லப்படவில்லை.
ஒஸ்லோ உடன்படிக்கை குறித்த இணக்கப்பாடு காணப்பட்டதுஅது இலங்கை பிரச்சினைக்கு இரு தரப்பும் சமஸ்டி உடன்படிக்கையை ஆராயவேண்டும் என தெரிவித்தது.
இது இடம்பெற்றவேளை விடுதலைப்புலிகள் மிகவும் பலமான நிலையிலிருந்தனர் பலர் விடுதலைப்புலிகள் பலவீனமாக இருந்ததன் காரணமாகவே சமாதானப்பேச்சுவார்த்தைக்குள் இழுத்து வரப்பட்டனர் என தெரிவித்தனர்
ஆனால் ஆனையிறவை கைப்பற்றிய பின்னர் அவர்கள் கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நிலையிலிருந்தனர்.
விமானநிலையம் மீதான தாக்குதல் இலங்கை பொருளாதாரத்தின் மீதுமோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் மிகவும் பலமாகயிருந்தவேளையே சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
மெல்லமெல்ல சமாதானப்பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சி காணத்தொடங்கின இருதரப்பும் மற்றைய தரப்பை இலக்குவைக்க தொடங்கின.
ஆனால் விடுதலைப்புலிகள் அரசாங்கத்தை விட அதிகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மகிந்த அதிகாரத்திற்கு வந்ததும்வீதியோர வெடிகுண்டு தாக்குதல்கள் மூலம் அவரது ஜனாதிபதி பதவியை பலவீனப்படுத்துவதற்கு விடுதலைப்புலிகள் முயன்றனர்.
ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதளபதி அரசியல் தலைவரில்லை .
அவர் அனைத்து தவறுகளையும் செய்ய தொடங்கினார். பாரம்பரிய இராணுவத்தை போல செயற்பட தொடங்கினார்.
 
https://thinakkural.lk/article/126024

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நல்ல  அரசியல்வாதி

ஆனால்  தோல்வி  கண்ட  சமாதானத்தூதர்???😭

Link to comment
Share on other sites

19 minutes ago, விசுகு said:

நீங்கள் நல்ல  அரசியல்வாதி

ஆனால்  தோல்வி  கண்ட  சமாதானத்தூதர்???😭

சரியாக சொன்னீர்கள் விசுகு. அவர் எப்படி உண்மையை சொன்னாரோ அதே போல. நீங்கள் சொன்னதும் உண்மையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரன் என்று யாரும் சொல்லக்கேட்டால் போதும், துரை ஆத்துப்பதைச்சு வந்திடுவாரில்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, tulpen said:

சரியாக சொன்னீர்கள் விசுகு. அவர் எப்படி உண்மையை சொன்னாரோ அதே போல. நீங்கள் சொன்னதும் உண்மையே. 

இப்பவும்  சொல்கிறேன்

வெற்றிகரமான இராணுவத்தலைவராலேயே தமிழருக்கு  ஒரு  தீர்வை வாங்கித்தரமுடியும்

ஏனெனில் அரசியல்  அல்லது  பேச்சு  வார்த்தை  மேசையில் வைப்பதற்கு  சிறீலங்காவிடம்  எதுவுமில்லை

பானையில்  இல்லாததால் தான்  அனைத்து  தமிழ்  அரசியல்  தலைவர்களும்  தோல்வி கண்டார்கள்  காணுவார்கள்

Link to comment
Share on other sites

எரிக் சொல்கைம் அமெரிக்காவின்  கைப்பொம்மை. சமாதான தூதுவராக நடித்தவர்.

Link to comment
Share on other sites

22 minutes ago, விசுகு said:

இப்பவும்  சொல்கிறேன்

வெற்றிகரமான இராணுவத்தலைவராலேயே தமிழருக்கு  ஒரு  தீர்வை வாங்கித்தரமுடியும்

அப்படியானால் மேதகு தேசியத்தலைவர் பிரபாகரன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

அப்படியானால் மேதகு தேசியத்தலைவர் பிரபாகரன்?

அது  தான் கண்டா வரச்சொல்லுங்க என்று உலகமே தேடுது???

Link to comment
Share on other sites

பிரபாகரனுக்கு அரசியல் தெரியாமலா சிறந்த தமிழீழ அரசை உருவாக்கினார்.

முப்படைகளோடு வங்கித்துறை, தமிழீழ சட்டம், நீதி, நிர்வாகம் என மூன்றையும் உள்ளடக்கியதாக ஒரு சட்டவாட்சியை வள்ளுவர் காட்டிய நெறியோடு வரையறை செய்து வழங்கினார். உலகிற்கே ஒரு முன்மாதிரியான தேசத்தை உருவாக்கி சாதனையும் படைத்தார். உலகமே அதனை வன்னியில் கண்கூடாகப்  பார்த்ததே. அரசுகள் தோன்றுவதும், மறைவதும் திரும்ப எழுவதும் உலக வரலாறு. 

Link to comment
Share on other sites

10 minutes ago, Paanch said:

 அரசுகள் தோன்றுவதும், மறைவதும் திரும்ப எழுவதும் உலக வரலாறு. 

அரசுகள் தோன்றுவதும், மறைவதும் உலக வரலாறு. “திரும்ப எழுவதும்” … ? எந்த அரசை உதாரணமாக காட்டுவீர்கள்? சிங்கள அரசையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கற்பகதரு said:

அரசுகள் தோன்றுவதும், மறைவதும் உலக வரலாறு. “திரும்ப எழுவதும்” … ? எந்த அரசை உதாரணமாக காட்டுவீர்கள்? சிங்கள அரசையா?

என் பெற்றோர் பற்றி நான் பேசுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் "காழ்ப்புணர்ச்சி " என்று ஓர் சொல்லுண்டு. அந்தச் சொல்லின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ள விரும்பினால் "பிரபாகரன்" என்று மட்டும் கூறுங்கள். 

காழ்ப்புணர்வின் உண்மையான உருவம் இங்கே வெளிப்படும். பிண வாசனை கழுகின் மூக்கில் வியர்வையை வர வைப்பது போல..

🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

நீங்கள் நல்ல  அரசியல்வாதி

ஆனால்  தோல்வி  கண்ட  சமாதானத்தூதர்???😭

உலக பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டு எல்லோரும் பயப்பிட்ட வெறுக்கப்பட்ட பலஸ்தீனாவின் யசீர் அரபாத்தின் இயக்கத்தை அரசியலுக்குள் இழுத்து அரசியல் பேச்சுவார்த்தைகள் பேசவைத்து ஆயுதங்களை கீழே போட வைத்து கடைசியில் என்ன செய்து முடித்தார்கள்?

யசீர் அரபாத்தை நஞ்சூட்டியே கொன்றார்கள் என்றொரு கதை இன்றும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசத்துடன் பேசுவதற்கு அரசியல் தேவையில்லை.

தலைவர் ராணுவமயமாக இருந்த போது மாறிமாறி வந்த அரசுகளால் வெல்லவே முடிந்ததில்லை.

பேச்சுவார்த்தை என்று  எண்ணுக்கணக்கில்லாத நாடுகள் சேர்ந்து சதி மூலமாக தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து முதுகில் குற்றி அழித்ததே வரலாறு.

சிங்களத்துக்கு உதவிக்காக போன கேடு கெட்ட நாடுகளுக்கு சேர்ந்து அழித்தது போல 

சேர்ந்து ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க இன்றுவரை முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அதாவது எரிக்சொல்ஃகெய்ம் என்ட உந்த நரியைப் பொறுத்தவரை,
தலைவர் மாமா டோக்கியோ ஒப்பந்தத்தின் அடிப்படையில்(புலிகள் போகவில்லை என்பது வேறு விடையம்) ஆயுதங்களைக் கீழே போட்டிருந்தால் தரமான அரசியல் தலைவர்... போடாத படியால் கூடாதவர், அவ்வளவுதான்.

நுணாவிலான் அண்ணை சொன்னமாதிரி, இவர் அமெரிக்காவின் கைப்புள்ளைதான். கொஞ்ச நளைக்கு முன்னால் 'தமிழர்கள் மீண்டும் ஆயுதம் தூக்கி சிங்களவருக்கு எதிராக போராட வேண்டும்' என்ற தொனியில் கருத்துச் சொன்னவர். (குணா கவியழகன் அவர்களின் நிகழ்படத்தில் இவரது பேச்சு உள்ளது.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை – எரிக்சொல்ஹெய்ம் கருத்து

சரி விடுவம்.....தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான அரசியல் தலைவர் இல்லையெண்டு  ஒரு கதைக்கு வைச்சுக்கொள்ளுவம்.

செல்வநாயக அரசியல் தொடக்கம் அமிர்தலிங்க அரசியல் வரைக்கும் என்ன நடந்ததென்று எரிக்சொல்கைமுக்கு தெரியுமா?
முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் பின் இலங்கை அரசியலில் என்ன நடக்கின்றது என்று  இந்த பொழுதுபோக்கு எரிக்சொல்கைமுக்கு தெரியுமா தெரியாதா? இப்ப போய் கோத்தாவுடன்  ஈழத்தமிழர் பிரச்சனை சம்பந்தமாய் கதைக்கலாமே?

சும்மா அரைச்ச மாவையே அரைக்காமல்........
 
Link to comment
Share on other sites

1 hour ago, நன்னிச் சோழன் said:

அதாவது எரிக்சொல்ஃகெய்ம் என்ட உந்த நரியைப் பொறுத்தவரை,
தலைவர் மாமா டோக்கியோ ஒப்பந்தத்தின் அடிப்படையில்(புலிகள் போகவில்லை என்பது வேறு விடையம்) ஆயுதங்களைக் கீழே போட்டிருந்தால் தரமான அரசியல் தலைவர்... போடாத படியால் கூடாதவர், அவ்வளவுதான்.

தலைவர் மாமா கடைசியாக முள்ளிவாய்ககாலில் கீழே போட்டதை டோக்கியோவிலையே போட்டிருக்கலாம் என்று  யாழ்பபாணத்தில் வாழும்  சாமான்ய மக்கள் பலர் ஆதங்கப்பட்டதை  இங்கு யாழில் சொன்னால் ஆத்திரப்படுவார்கள். அதனால் நான் அப்படி சொல்ல மாட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்ட உடலில்  பல புற்றுநோய்கள் புகுந்து குடிதனம் நடத்தியதால் அது இறந்து போனது.

அதில் முதல் புகுந்த புற்றுநோய் எரிக் சொல்கெய்ம் பெயரில் நுழைந்த நோர்வே.

பெயருக்குத்தான் சமாதான மூன்றாந்தரப்பு மத்தியஸ்தம் ஆனால் பண்ணியது இரண்டாம்தர சில்லறைதனம். இந்த போர்க்கால ஓய்வை இலங்கை அரசாங்கம் முழுக்க முழுக்க தமது படையணிகளை மீள கட்டமைப்பதிலும் படையணிகளுக்கு ஆட்களை சேர்ப்பதிலும் கனரக ஆயுதங்களை வாங்கி குவிப்பதுக்கும் பயன் படுத்தியது.

முறையான ஒப்பந்தமென்றால் சமாதான கால கட்டத்தில் எந்தவித  ஆயுத கொள்வனவு படை பெருக்கம் போன்றவற்றில் யாரும் ஈடுபடாமல் பார்த்து கொண்டிருக்கவேண்டும் நோர்வே அதை செய்யவில்லை,

இலங்கை அரசு ராணுவமுனைப்பில் இருப்பதை பார்த்து புலிகளும் ஆட்சேர்ப்பு ஆயுத கொள்வனவுக்கு முயன்றார்கள், ஆனால் ஆயுத கொள்வனவு இந்திய சர்வதேச உதவியுடன் நேர்த்தியாவே முறியடிக்கப்பட்டது, மறுபக்கம் இலங்கை ராணுவத்துக்கு கொழும்பு துறைமுகத்தில் தாராளமாகவே ஆயுதங்கள் வந்து இறங்கி கொண்டிருந்தது, அப்போதே எமக்கான ஆப்பு பக்காவாக சீவப்பட்டுவிட்டது.

ஆரம்பகாலங்களில் புலிகள் எப்படி தமது உறுப்பினர்கள் எண்ணிக்கை, ஆயுத விபரங்கள் பற்றி ரகசியம் பேணினார்களோ அதே நுட்பத்தை சமாதானகாலங்களிலும் போரின் இறுதிக்காலங்களிலும் ராணுவம் பேணியது.

வடக்கில் பெரும்போர் வெடிக்கும்போது கிழக்கிலிருந்து படையை நகர்த்தி சிங்களவன் போர் செய்வான் அப்போ இரண்டு பக்கத்தினாலும் சிங்களவனை பலவீனபடுத்தலாம் என்ற பழைய பாணி உத்தியில் புலிகள் இருந்திருக்கலாம், ஆனால் எந்த பகுதியிலிருந்தும் படைகளை நகர்த்தவேண்டிய தேவையின்றி போதிய அளவில் படைக்கு ஆட்சேர்ப்பை இந்த சமாதான காலத்தில் ரகசியமாக  சிங்களவன் செய்து முடித்திருந்தான் அதற்கு இருபக்க நடவடிக்கைகளையும் கவனித்து கட்டுப்படுத்தவேண்டிய ஒரு பொறுப்பிலிருந்தபடியே அதை கண்டும் காணாமல்விட்ட  சொல்கெய்மும் முக்கிய காரணம்.

புலிகளின் தலைவர் நல்ல அரசியல் தலைவர் இல்லையென்றால் சொல்கெய்ம் நல்ல சமாதான தூதுவர் இல்லையென்பதையும் அவர் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்,

ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும் என்ன , முள்ளிவாய்க்காலில் எல்லாமே முற்றுப்பெற்று முடிந்தபின்னர் சில நாட்களிலேயே சொல்கெய்ம் சொன்னார் ‘புலிகள் மீள வரவேண்டுமென்று யாரும் தாகத்துடன் இல்லை’

அப்போதே தெரிந்துவிட்டது நீங்கள் உள் நுழைந்தது பக்க சார்பின்றி சமாதானம் பேச அல்ல, பக்காவாக எல்லாவற்றையும் முடித்து வைப்பதற்கே என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

தலைவர் மாமா கடைசியாக முள்ளிவாய்ககாலில் கீழே போட்டதை டோக்கியோவிலையே போட்டிருக்கலாம் என்று  யாழ்பபாணத்தில் வாழும்  சாமான்ய மக்கள் பலர் ஆதங்கப்பட்டதை  இங்கு யாழில் சொன்னால் ஆத்திரப்படுவார்கள். அதனால் நான் அப்படி சொல்ல மாட்டேன். 

நீங்கள் சந்தித்தவர்கள் உங்களைப் போலத் தானே இருப்பார்கள்.

நான் சந்தித்த ஒருவர்

இரண்டு பேரை மாவீரராக கொடுத்து ஒரு மகனை கட்டாயத்தின் பேரில்(இதை நான் ஆதரிக்கவில்லை)பறி கொடுத்த பின்பும் 

மனதுக்குள் கோபமாக இருந்தாலும் அவங்கள் இருந்திருக்க வேண்டும் என்று உறுதியான குரலில் சொன்னார்.

என்ன செய்வது காலகாலமாக அடிமைகளாக வாழ்ந்து பழகிவிட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் சந்தித்தவர்கள் உங்களைப் போலத் தானே இருப்பார்கள்.

 உண்மை நிலவரங்களை விளங்கிக்கொள்ளாமல் மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதிலேயே கவனமாய் இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்கேய்ம் எதிர்பார்த்த படியே சாக்குக்குள் போட்ட எலிகள் தம்மை தாமே மாறி, மாறி “வல்லவர், வல்லவர் இல்லை” என பிராண்டு பட தொடங்கியுள்ளார்கள்.

ஆனால் வல்லவன் சில காத்திரமான கருத்துக்களை வைத்துள்ளார் அதை பற்றி எனது பார்வை:

3 hours ago, valavan said:

இந்த போர்க்கால ஓய்வை இலங்கை அரசாங்கம் முழுக்க முழுக்க தமது படையணிகளை மீள கட்டமைப்பதிலும் படையணிகளுக்கு ஆட்களை சேர்ப்பதிலும் கனரக ஆயுதங்களை வாங்கி குவிப்பதுக்கும் பயன் படுத்தியது.

👆🏼

இதை சமாதான ஒப்பந்தம் தடை செய்யவில்லை. 

3 hours ago, valavan said:

இலங்கை அரசு ராணுவமுனைப்பில் இருப்பதை பார்த்து புலிகளும் ஆட்சேர்ப்பு ஆயுத கொள்வனவுக்கு முயன்றார்கள், ஆனால் ஆயுத கொள்வனவு இந்திய சர்வதேச உதவியுடன் நேர்த்தியாவே முறியடிக்கப்பட்டது, 

ஆனால் 👆🏼இதை தடை செய்திருந்தது, அல்லது இதை தடுக்கும் உரிமையை இலங்கைக்கு வழங்கி இருந்தது.

3 hours ago, valavan said:

மறுபக்கம் இலங்கை ராணுவத்துக்கு கொழும்பு துறைமுகத்தில் தாராளமாகவே ஆயுதங்கள் வந்து இறங்கி கொண்டிருந்தது, அப்போதே எமக்கான ஆப்பு பக்காவாக சீவப்பட்டுவிட்டது.

👆🏼 இது முழுக்க முழுக்க உண்மை. அதே போல் நீங்கள் சொல்வதை போல் இராணுவ ஆட்சேர்ப்பும் ரகசியமாக அல்ல வெளிபடையாகவே நடந்தது.

இதை சொல்ல காரணம் எல்லாம் ஒப்பந்த படிதான் நடந்தது என சொல்கேய்முக்கும் அவர் சார்ந்தோருக்கும் வெள்ளை அடிக்க அல்ல.

மாறாக அந்த ஒப்பந்தமே ஒரு பக்கசார்பானது என்பதை வெளிப்படுத்தவே.

இது புலிகளுக்கும் தெரிந்திருந்தது.

இந்த பிணக்கை 3 வழியில் முடித்து வைக்க மேற்கு தயாராக இருந்தது.

1. சமாதான பேச்சுக்கு புலிகள் ஓம்படாவிட்டால். முள்ளிவாய்க்காலை 2002 இல் நடத்தி முடிப்பது.

2. ஓம்பட்டால் - இழுத்தடித்து, இரு பகுதியையும் அழுத்தி ஒன்று பட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை கொடுப்பது. இது சமஸ்டியா, வேறு ஏதுமா என்பதில் மேற்குக்கு அக்கறை இல்லை.

3. ஒம்பட்டு பின் விலகினால் 2009இல் நடந்தது போல் முடிப்பது.

இதில் மேற்கை 3ம் தெரிவு நோக்கி தள்ளுவதே இலங்கையின் ஒரே குறி. ஈற்றில் இதில் வெற்றியும் கண்டது.

2இல் இருந்தபடி சளைகாமல் இராஜதந்திர நகர்வுகளை செய்வதுதான் தமிழர் தரப்பின் ஒரே தெரிவாக இருந்தது. பாலா அண்ணை ஆரோக்கியமாக இருந்து, அவருக்கு முன்னைய இயங்கு-சுதந்திரமும் இருந்திருந்தால் - இதை நாம் வெட்டி ஆடியிருப்போம் என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. 

3 hours ago, valavan said:

அப்போதே தெரிந்துவிட்டது நீங்கள் உள் நுழைந்தது பக்க சார்பின்றி சமாதானம் பேச அல்ல, பக்காவாக எல்லாவற்றையும் முடித்து வைப்பதற்கே என்று.

இது 2002 இலேயே பாலா அண்ணையால் விளங்கி கொள்ளபட்டது.

3 hours ago, valavan said:

சொல்கெய்ம் நல்ல சமாதான தூதுவர் இல்லையென்பதையும் அவர் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டு

சொல்கெய்ம் மட்டும் அல்ல நோர்வே நாடே - சமாதான தூதுவர்கள் என்ற போர்வையில் செயல்படும் மேற்கின் தரகர்கள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

தலைவர் மாமா கடைசியாக முள்ளிவாய்ககாலில் கீழே போட்டதை டோக்கியோவிலையே போட்டிருக்கலாம் என்று  யாழ்பபாணத்தில் வாழும்  சாமான்ய மக்கள் பலர் ஆதங்கப்பட்டதை  இங்கு யாழில் சொன்னால் ஆத்திரப்படுவார்கள். அதனால் நான் அப்படி சொல்ல மாட்டேன். 

சகல அரசியல் போராட்டக்களையும் நடத்தி கடைசியில் உப்பு சத்தியாக்கிரக போராட்டமும் நடத்தி  களைத்து போய்த்தான் ஆயுதம் தூக்கப்பட்டது.

தூக்கிய ஆயுதத்தை கீழே வைத்த போதுதான் ஒட்டு மொத்தமாக அழித்தார்கள். வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த பின்னரும்  கண்மூடித்தனமாக அழித்தார்கள். இதெல்லாம் தங்களுக்கு தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பலமுறை விளங்கப்படுத்தியும் விளங்காமல் நடிப்பது ஒரு கலை .

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

சகல அரசியல் போராட்டக்களையும் நடத்தி கடைசியில் உப்பு சத்தியாக்கிரக போராட்டமும் நடத்தி  களைத்து போய்த்தான் ஆயுதம் தூக்கப்பட்டது.

எங்கயண்ணே இந்த “உப்பு சத்தியாக்கிரக” போராட்டம் நடந்தது? எந்த வருஷம் இந்த போராட்டம் நடந்தது?
 
2 hours ago, குமாரசாமி said:

தூக்கிய ஆயுதத்தை கீழே வைத்த போதுதான் ஒட்டு மொத்தமாக அழித்தார்கள். வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த பின்னரும்  கண்மூடித்தனமாக அழித்தார்கள். இதெல்லாம் தங்களுக்கு தெரியாது.

ஏனண்ணை சரணடைஞ்சவை? அழிப்பாங்கள் எண்டு விளக்கமிருக்கேலையோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

சொல்கேய்ம் எதிர்பார்த்த படியே சாக்குக்குள் போட்ட எலிகள் தம்மை தாமே மாறி, மாறி “வல்லவர், வல்லவர் இல்லை” என பிராண்டு பட தொடங்கியுள்ளார்கள்.

ஆனால் வல்லவன் சில காத்திரமான கருத்துக்களை வைத்துள்ளார் அதை பற்றி எனது பார்வை:

👆🏼

இதை சமாதான ஒப்பந்தம் தடை செய்யவில்லை. 

ஆனால் 👆🏼இதை தடை செய்திருந்தது, அல்லது இதை தடுக்கும் உரிமையை இலங்கைக்கு வழங்கி இருந்தது.

👆🏼 இது முழுக்க முழுக்க உண்மை. அதே போல் நீங்கள் சொல்வதை போல் இராணுவ ஆட்சேர்ப்பும் ரகசியமாக அல்ல வெளிபடையாகவே நடந்தது.

இதை சொல்ல காரணம் எல்லாம் ஒப்பந்த படிதான் நடந்தது என சொல்கேய்முக்கும் அவர் சார்ந்தோருக்கும் வெள்ளை அடிக்க அல்ல.

மாறாக அந்த ஒப்பந்தமே ஒரு பக்கசார்பானது என்பதை வெளிப்படுத்தவே.

இது புலிகளுக்கும் தெரிந்திருந்தது.

இந்த பிணக்கை 3 வழியில் முடித்து வைக்க மேற்கு தயாராக இருந்தது.

1. சமாதான பேச்சுக்கு புலிகள் ஓம்படாவிட்டால். முள்ளிவாய்க்காலை 2002 இல் நடத்தி முடிப்பது.

2. ஓம்பட்டால் - இழுத்தடித்து, இரு பகுதியையும் அழுத்தி ஒன்று பட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை கொடுப்பது. இது சமஸ்டியா, வேறு ஏதுமா என்பதில் மேற்குக்கு அக்கறை இல்லை.

3. ஒம்பட்டு பின் விலகினால் 2009இல் நடந்தது போல் முடிப்பது.

இதில் மேற்கை 3ம் தெரிவு நோக்கி தள்ளுவதே இலங்கையின் ஒரே குறி. ஈற்றில் இதில் வெற்றியும் கண்டது.

2இல் இருந்தபடி சளைகாமல் இராஜதந்திர நகர்வுகளை செய்வதுதான் தமிழர் தரப்பின் ஒரே தெரிவாக இருந்தது. பாலா அண்ணை ஆரோக்கியமாக இருந்து, அவருக்கு முன்னைய இயங்கு-சுதந்திரமும் இருந்திருந்தால் - இதை நாம் வெட்டி ஆடியிருப்போம் என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. 

இது 2002 இலேயே பாலா அண்ணையால் விளங்கி கொள்ளபட்டது.

சொல்கெய்ம் மட்டும் அல்ல நோர்வே நாடே - சமாதான தூதுவர்கள் என்ற போர்வையில் செயல்படும் மேற்கின் தரகர்கள்தான்.

உண்மை தான் .

கருணா பிரிவு ஏற்படாமல் இருந்திருந்தால் நீங்கள் சொன்ன பிரிவு 2 இல் இருந்து மாறுபட்டிருக்கலாம்.

அத்தோடு இப்போதுள்ள உலக அரசியல் அப்போ இல்லை.

போராட்டத்துக்கான சூழ்நிலை இப்போ உருவாகிறது.ஆனால் போராட யாருமில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.