Jump to content

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை – எரிக்சொல்ஹெய்ம் கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

யுத்தத்துக்கு முக்கிய காரணமான தமிழ்த் தேசியபிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை – எரிக் சொல்ஹெய்ம் கூறுகிறார்

000000000000
”இலங்கையர்ககளே  ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும், வெளிநாட்டினர் அல்ல”
000000000000000


”யாவற்றிலும் முதலாவதாக, இலங்கை பிரச்சினைக்கு இலங்கையர்களே  தீர்வு காண வேண்டும் என்று நான் நம்புகிறேன். வெளிநாட்டினர் அல்ல. இறுதியில்  இலங்கை சிங்களவர்கள் , முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களின் தீவாகும். இது இந்தியர்கள், ஐரோப்பியர்கள் அல்லது அமெரிக்கர்களின் தீவு அல்ல.”
00000000000000


ஐ.தே.க  . ஒரு சமாதான முயற்சியை மேற்கொண்டு விடுதலை புலிகளுடன்  ஒப்பந்தமொன்றை செய்தால்   சுதந்திரக்கட்சி அதற்கு உடன்படாதென்றும்  அதனை  குறைமதிப்பிற்கு உட்படுத்துமென்றும் என்று அவர்கள் பயப்படுவார்கள், இது தொடர்பாக  எதிர்மாறாகவும் அஞ்சப்பட்டது.. (ஜனாதிபதி) சந்திரிகா சமாதானத்துக்காக ஏதாவது செய்ய முயன்றபோது, அந்த நேரத்தில் ரணில்  அதைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவார் என்று அவர் அஞ்சினார்.. இது சமாதானத்தை மிகவும் கடினமாக்கியது, சில சமயங்களில் புலிகளுடன் சமரசம் செய்ய  ஒரு பொதுவான தளத்தைக் கண்டுபிடிப்பதை விட இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் அதிக சக்தியை  செலவிட்டதாக உணர்ந்திருந்தன .
0000000000000


1998 முதல் 2005 வரை இலங்கையில் சமாதான முன்னெடுப்புகளுக்கு பிரதான அனுசரணையாளராக  செயற்பட்டிருந்த நோர்வேயின் முன்னாள்  அமைச்சரும்  இலங்கைக்கான முன்னாள்சமாதானப்  பேச்சுவார்த்தையாளரான எரிக் சொல்ஹெய்முடன் டெய்லி மிரர் ட்விட்டர்  வெளியூடான  கலந்துரையாடலின்போது    எழுப்பப் பட்டிருந்த கேள்விகளும் அவர் அளித்திருந்த பதில்களும்  இங்கு  தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

images-3.jpg

கேள்வி ; இலங்கையில் சமாதான முன்னெடுப்புகளின் சுருக்கம்  என்ன?

பதில்; 1998 ஆம் ஆண்டில் நோர்வேயை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க  மற்றும் விடுதலைப்   புலிகள் ஆகியோர் சமாதான நடவடிக்கைகளுக்கான  மூன்றாம் தரப்பாக அணுகினர் .. அவர்கள் மற்றைய விருப்பங்களைப் பற்றியும்  கலந்துரையாடினர்.  ஆனாலும்  நோர்வேயை  தேர்ந்தெடுத்தனர்., ஏனென்றால் அது இலங்கை தொடர்பாக  குறிப்பிட்டதொரு ஆர்வம் இல்லாத  அதேசமயம்  இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தொலைதூரத்திலுள்ள நாடாகவும் இருந்தது ,அத்துடன்  இந்தியாவுக்கும் இலங்கையில் உள்ள சில முக்கிய வெளிநாட்டு செயற்பாட்டாளர்களுக்கும்  முக்கியமானதாகவிருந்தது.


முதல் இரு ஆண்டுகளில் சகலவுமே  கொழும்பில் முழுமையான இரகசியமாக இருந்தது.. புலிகள்  தரப்பில் உள்ள முயற்சிகள் குறித்து (ஜனாதிபதி) சந்திரிகாவும், வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரும் மட்டுமே அறிந்திருந்தனர். ஆனால்  சந்திரிகா புலிகளால் தாக்கப்பட்ட  பின்னர் 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் முன்னோக்கி சென்று எங்கள் வகிபாகத்தை  பகிரங்கப்படுத்தினார். 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் நாங்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை செய்தோம். முதல் இரண்டு ஆண்டுகளாக இது நம்பமுடியாத அளவிற்கு வெற்றிகரமாக இருந்தது, இருபுறமும் யாரும் கொல்லப்படவில்லை.


ஒஸ்லோ பிரகடனம் என்று அழைக்கப்படுவது குறித்து ஒப்புக் கொள்ளப்பட்டது, இது இரு தரப்பினரும்  இலங்கையில் இந்த பிரச்சினைக்கு ஒருசமஷ்டி  தீர்வை ஆராய்வார்கள்  என்று கூறியது. இது இடம்பெற்றபோது  புலிகள் அதன் பலத்தில்  உச்சத்தில் இருந்தனர்.. கொழும்பில் உள்ள பெரும்பாலான ஆட்கள்  புலிகள் பலவீனமாக இருந்ததால் சமாதான முன்னெடுப்புகளுக்கு இழுக்கப்பட்டு அதனை  செய்ததாகக் கூறினர். ஆனால் அவர்கள் ஆனையிறவை  கைப்பற்றியிருந்ததுடன் , இலங்கை இராணுவத்தை யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு மிகஅண்மித்ததாக  இருந்தனர். விமான நிலையத்தின் மீதான தாக்குதல்கள் இலங்கை பொருளாதாரத்தில் ஒரு மோசமான விளைவை ஏற்படுத்தின. எனவே அவர்கள் சமாதான நடவடிக்கைகளை  ஆரம்பித்தபோது விடுதலைப் புலிகள் அதன்பலத்தில்  உச்சத்தில் இருந்தனர் .
படிப்படியாக சமாதான நடவடிக்கைகள் சீர்குலைந்து  இரு தரப்பிலும் கொலைகள்இடம்பெறத்  தொடங்கின. ஆனால் புலிகள்  அரசாங்க தரப்பை விட அதிகமாக செய்திருந்தது.. மகிந்த ராஜபபக்ச ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஆரம்பத்தில் இருந்தே விடுதலைப் புலிகள் வீதியோர வெடிபொருட்களுடன் ஜனாதிபதி பதவியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தத் தொடங்கினர். புலிகள் மகிந்தவைத் தேர்ந்தெடுக்கப்படுவதை  சாத்தியமாக்கினர்..


ஆரம்பத்தில் இருந்தே பிரபாகரன் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தலைவராக இருந்தார், அரசியல் தலைவராக வெற்றிபெறவில்லை. அவர் ஒவ்வொரு தவறையும்  செய்யத் தொடங்கினார், ஒரு கொலைசெய்யும் படையை  காட்டிலும் ஒரு மரபுசார்  இராணுவத்தைப் போல செயற்படத் தொடங்கினார். எனது கருத்தில், போரின் முடிவில் இரு தரப்பினரும் போர்க்குற்றங்கள் செய்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. புலிகள்  பொதுமக்களை தங்கள் உறுப்பினர்களுக்காக பணயக்  கைதிகளாக வைத்திருந்தனர்., அதே நேரத்தில் இலங்கை ஆயுதப்படைகள் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் குண்டுவீச்சு நடத்தியதுடன்  மற்றும் மருத்துவமனைகள் போன்ற சிவில் நிறுவனங்களை குறிவைத்தன. பாரிய போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன என்பது மிகவும் தெளிவாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.ஆனால் இது  சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் தீர்மானிக்க வேண்டியதாகும்.,

கேள்வி; இலங்கையின் அரசியல் தலைமையினரிடையே தொலைநோக்கு  இல்லாததைப் பற்றியும்  இது ஒரு அரசியல் தீர்வை வென்றெடுப்பதை சிக்கலாக்கியதென்பது பற்றியும் நீங்கள் பேசினீர்கள்  . விரிவாகக் கூற முடியுமா?


பதில்; ஐ. தேக . மற்றும் ஸ்ரீ.ல.சு.க.ஆகிய   கொழும்பின் இரண்டு பிரதான அரசியல் முகாம்களால் ஒருபோதும் ஒத்துழைக்க முடியவில்லை. அவர்கள் பாராளுமன்றத்திலும் அரசாங்கத்திலும் ஒரே பதவிகளுக்கு போட்டியிட்டனர். இலங்கையின்  இரு பிரதான கட்சிகளால் பொதுவான நிலைப்பாட்டிற்காக ஒன்றிணைந்து செயற்படும் ஆற்றல் இல்லாதது சமாதான நடவடிக்கைகளை மிகவும் கடினமாக்கியது. ஐ. தே. க.ஒரு சமாதான முயற்சியை மேற்கொண்டு புலிகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்தால், சுதந்திரக்கட்சி  உடன் வந்து அதைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்  என்று அவர்கள் பயப்படுவார்கள், நேர்மாறாகவும். (ஜனாதிபதி) சந்திரிகா சமாதானத்துக்காக  ஏதாவது செய்ய முயன்றபோது, அந்த நேரத்தில் ரணில் அதைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவார் என்று அவர்  பயந்தார் . இது சமாதானத்தை மிகவும் கடினமாக்கியது, சில சமயங்களில் புலிகளுடன் சமரசம் செய்வதற்கு   ஒரு பொதுவான தளத்தைக் கண்டுபிடிப்பதை விட இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் அதிக சக்திகளை  செலவிட்டதாக உணர்ந்தன.

கேள்வி ; ஒரு சமாதான பேச்சுவார்த்தையாளரென்ற உங்கள் வகிபாகத்தின் அடிப்படையில்  பெறுபேறை மாற்றுவதற்கு  நீங்கள் ஏதாவது செய்திருக்க முடியுமா?

பதில்;ஒரு பொதுவான தளத்தைக் கண்டறிய பிரதான  கட்சிகள் மத்தியில்  நோர்வேயால்  உண்மையில் செல்வாக்கு  செலுத்த முடியவில்லை. ஒருவேளை நாம் இந்தியாவுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்றியிருக்கலாம். அதை அடைவதற்கு கொழும்பு அரசியலில் பொதுவான சில முயற்சிகளை மேற்கொள்வது கடினம், அது கடினமாக இருந்திருக்கும், ஆனால் நாங்கள் அந்த பக்கத்தில் இன்னும் அதிகமாக செய்திருக்க வேண்டும். இலங்கையில் உள்ள மதத் தலைவர்களைச் சென்றடைய நாம் இன்னும் அதிகமாகச் செய்திருக்கவேண்டும். நான் கண்டியில் , பலமுறை மகாநாயகர்களுடன்  பேசினேன், ஆனால் குறிப்பாக பவுத்த  தலைவர்களுடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்துவது சிறப்பானது., ஏனென்றால் இலங்கையில் மதம் மிகவும் முக்கிய செல்வாக்கை செலுத்துகிறது.

பிரபாகரனை அதிகளவுக்கு சந்திக்க எமக்கு  அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்.. பிரபாகரனை அதிகமானோர் சந்தித்ததை நாங்கள் உறுதி செய்திருக்க வேண்டும். அவரது பார்வை மிகவும் குறுகியதாகவிருந்தது.. அவர் உண்மையில் இந்தியாவைப் புரிந்து கொள்ளவில்லை, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றது போன்ற மடமைத்தனமான  மற்றும் குற்றமானதொன்றை அவர் செய்தார்.  உலகப் பார்வை அவருக்கு மிகக் குறைந்ததாக  இருந்தது. அதிகமான மக்கள் அவரை சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய தலைவர்களை அவரை சந்திக்க செல்ல ஊக்குவிக்க முயற்சித்தோம், ஆனால் இது அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது. அவர்கள் பிரபாகரனிடம்  செல்வதை விரும்பவில்லை. அடிப்படையில் நானும் நோர்வேயும் அவரைச் சந்தித்த ஒரே வெளிநாட்டினர்.
கடந்த 15 ஆண்டுகளில் எனக்குத் தெரிந்தவரை, பிரபாகரன் எந்தவொரு  சிங்கள, மற்றும் இந்தியர்களையும் சந்தித்ததில்லை. அடிப்படையில் அவர் சந்தித்த அனைவருமே தமிழர்கள், அவர் உலகின் பரந்த பார்வையைப்   பெற்றிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

eri-solheim-300x300.jpg

கேள்வி ; பிரபாகரனுக்கு அரசியல் அல்லது புவிசார்  அரசியல் குறித்து எந்த அறிவும் இல்லை என்று நீங்கள் பலமுறை சொன்னீர்கள். நீங்கள் பிரபாகரனுடன் அதிக நேரத்தை  செலவிடவில்லை என்றால், அவருக்கு இந்த அறிவு இல்லை என்று எப்படி உறுதியாக நம்பினீர்கள்? தெளிவுபடுத்த முடியுமா?

பதில்; நான் பிரபாகரனுடன் முழுமையாக சிறிது நேரத்தை   செலவிட்டேன், மேலும் பிரதான  பேச்சுவார்த்தையாளரான அன்டன் பாலசிங்கத்துடன் நிறைய நேரத்தை  செலவிட்டுள்ளேன் ..
ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், இந்தியர்கள் அல்லது மற்றவர்களை , நேரடியாக   பிரபாகரனை சந்திக்க வைப்பதன் மூலம் முன்னோக்குகளைப் பற்றி அதிகம் கற்றுக் கொள்ள முடியும்.
அந்த நேரத்தில் நான் இந்த கருத்துக்களை பிரபாகரனிடம் கூறியிருந்தால் , அவர் அதை என்னிடமிருந்து கேட்க விரும்பியிருக்கமாட்டார்..  என் பார்வையில், அன்டன் பாலசிங்கம் சமாதான முன்னெடுப்பில் கதாநாயகனாக  இருந்தார். சில நேரங்களில் பிரபாகரன் பாலசிங்கத்தை செவிமடுத்தார்., சில சமயங்களில் இல்லை. அவர் அவ்வாறு செய்யாதபோது, அவர் முக்கியமாக ஒரு கொரில்லா சக்தியாக இல்லாமல் ஒரு மரபுரீதியான  இராணுவமாகப் போராடுவது போன்ற தவறுகளைச் செய்தார், இது 2009 இல் முடிவுக்கு வந்தது. இது பாலசிங்கம் கடுமையாக வாதிட்ட சமஷ்டி  தீர்வு அல்ல.

கேள்வி; இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகள் தொடர்பாக  கவனத்திற்கு எடுத்துக்கொண்ட  பிறகு, இப்போது அவர்கள் தங்கள் சொந்த காரணங்களுக்காக இஸ்லாம் தொடர்பான பீதியை  பயன்படுத்தி இஸ்லாமியர்களை தங்கள் புதிய எதிரியாகக் கண்டுகொண்டிருப்பதாக  நீங்கள் நினைக்கிறீர்களா? அது தொடர்பாக சிறிது தெரிவிக்க முடியுமா?

பதில்;இதற்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. முஸ்லிம் பயங்கரவாதம் ஒரு உண்மையான விடயம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது இந்த கொடூரமான கொலைகளை நாங்கள் கொண்டிருந்தோம்.. அரசாங்கம் அந்தவிடயத்தை  தீவிரமானதாக  எடுத்துக் கொள்ள வேண்டும். தீவிரவாதக்  குழுக்களை நீங்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்தால், அவர்கள் சில சமயங்களில் வெளிநாட்டினரால் ஊக்குவிக்கப்படுவார்கள். ஆனால் அது தவிர முஸ்லிம்களையும், இலங்கையில் உள்ள நான்கு மதங்களையும் மரியாதையுடன் சந்திப்பது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். இலங்கையில் அனைத்து சமூகங்களிலும் தீவிரவாதிகள் இருந்திருக்கிறார்கள் என்பதை எமக்கு நாம்  நினைவூட்டுவோம். சமுதாயத்தில் முஸ்லிம்களை அணுகுவதும், முஸ்லிம்களிடமிருந்து எதிரிகளை உருவாக்காமலிருப்பதுவும்  மிக முக்கியம்.

கேள்வி; மோதலின் போது கூட முஸ்லிம்கள் அரசு தரப்பில் இருந்தனர், ஒருபோதும் அரசுக்கு எதிராக இல்லை. ஆனால் இந்த தாக்குதலுக்கு முன்பே முஸ்லிம் விரோத உணர்வு குறிப்பாக பவுத்த மதகுருமார்களிடையே நிறைய இருந்தது. ஆனால் முஸ்லிம்களுக்குப் பின் அவர்கள் செல்லும் வழி இஸ்லாமியவாத பீதியினால் என்பதை நான் காண்கிறேன்.

பதில்; சமாதான நடவடிக்கைகளின்போது முஸ்லிம்கள் ஒரு காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தனி முஸ்லிம் தூதுக்குழுவைக் கோரினர். விடுதலை புலிகள்  அதனை நிராகரித்திருந்ததுடன் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையே இரு தரப்பு  உரையாடலாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன் விளைவாக முஸ்லிம் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்க தூதுக்குழுவில் சேர்க்கப்பட்டார். ஒட்டுமொத்தமாக இலங்கையில் முஸ்லிம்கள் ஒரு தனி அரசை  ஆதரிக்கவில்லை.


கேள்வி: யுத்தம்  முடிவடைந்ததிலிருந்து   வந்த கதை பல்வேறு ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின்  தீர்மானங்களுக்கான முயற்சிகள் போன்றவையாகும்.. சமாதானம்  மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் அந்த தீர்மானங்களில் நான் மிகக் குறைந்தளவு  முன்னேற்றத்தைக் காண்கிறேன். நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு  உங்களைப் போன்ற வெளிசெயற்பாட் டாளர்கள்  என்ன செய்ய முடியும்?


பதில்: முதலாவதாக, இலங்கைப்  பிரச்சினைக்கு இலங்கையர்களே  தீர்வு காண வேண்டும் என்று நான் நம்புகிறேன். வெளிநாட்டினர் அல்ல. இறுதியில் , இலங்கை சிங்கள, முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களின் தீவாகும். இது இந்தியர்கள், ஐரோப்பியர்கள் அல்லது அமெரிக்கர்களின் தீவு அல்ல. தீர்மானங்கள் உள்நாட்டில் காணப்பட வேண்டும். சர்வதேச சமூகம் ஆதரவளிக்க  முடியும் . எந்தவொரு ஒப்பீடும் இல்லாத  மிக முக்கியமான வெளிநாட்டுசெயற்பாட்டாளர்  இந்தியாவாகும்.. தமிழர்களுக்கு சுயாட்சியானதாகவிருக்கும் 13 வது திருத்தத்தை ஒரு இலங்கை அரசுக்குள் அரசாங்கம் செயற்படுத்தவேண்டும் என்று அவர்கள் தெளிவாகக் கோரியுள்ளனர்,   இலங்கை அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டால், உலகின் சகல மூலையிலிருந்தும் பெரும் ஆதரவு இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பா அல்லது சீனாவில் யாரும் அதை எதிர்க்க மாட்டார்கள்.

கேள்வி ; 13 ஆவது திருத்தம் ஒரு இந்திய அனுசரணையுடனான  தீர்வாகும் அத்துடன் அமுல்படுத்துவதில்  மிகவும் சவாலான விவகாரம். பொறுப்புக்கூறல் வழிமுறைகளின் அடிப்படையில் உண்மையில் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கின்ற ஐ. நா. மனிதஉரிமைகள்  பேரவையின்   தலையீட்டு நடவடிக்கைகளை என்னால் பார்க்க முடியவில்லை, . இது சமூகங்களை மேலும் பிளவுபடுத்துகிறதே?

பதில்; உதாரணமாக, இந்தியாவின் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அவர் பிரச்சினைக்கு தீர்வுகோரினார் என்று நான் நம்புகிறேன் . நிச்சயமாக அவர் அவற்றை திணிக்கவில்லை; தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்கு ஒருவித சுயாட்சி தேவை என்பதை அங்கீகரிப்பதற்கான முன்னோக்கி செல்லும் வழியை அவர் சுட்டிக்காட்டினார். தமிழர்களை முதல் தரத்தினராக  பார்க்க வேண்டும், அவர்களின்  சொந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக அல்ல.
அந்த தருணத்தில்  எனக்கு சிங்கள தேசியவாதிகள் மற்றும் சில சமயங்களில் தீவிரவாதிகளிடமிருந்து நிறைய விமர்சனங்கள் வந்தன. சமீபத்தில் நான் பிரபாகரனைக் கொன்ற நபர் என்று கூறி புலிகளில்  மீதமாக இருப்பவர்களால்  இதேபோல் அல்லது மோசமாக விமர்சிக்கப்பட்டேன். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் அர்த்தமற்றவை, அந்தக் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை குறித்து நான் அதிகம் கவலைப்படுவதில்லை. இது மக்களின் வாழ்க்கை மற்றும் மரணம்  பற்றியது என்பதை நாங்கள் அறிவோம், இலங்கையில் சமாதானத்தை  கொண்டுவர முடிந்தால், ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும். ஒரு பெரிய வருத்தம் என்னவென்றால், எங்களால் வெற்றிபெற முடியவில்லை மற்றும் ஏராளமான இலங்கையர்கள் கொல்லப்பட்டனர்

கேள்வி ; உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருக்கிறதா அல்லது உங்கள் வகிபாகத்தில் ஏதேனும் தோல்விகளைக்பார் கிறீர்களா?


பத்தி;எங்களால் எதையும் செயற்படுத்த முடியவில்லை; (ஜனாதிபதி) சந்திரிகா அல்லது  பிரபாகரன் மீது சமாதானத்தை அமு ல்படுத்த எந்த அழுத்தத்தையும் நாங்கள் கொடுக்க  முடியாது. அந்த நேரத்தில் இரு தரப்பினரும்  நாங்கள என்ன  செய்யவேண்டும்  என்று விரும்பியதை மட்டுமே எங்களால்  செய்ய முடிந்தது. சமாதானத்துக்காக  மக்கள் போராடுவதை ஆட்கள்  ஊக்கமிழக்க செய்வதை  நான் விரும்பவில்லை, இன்று உலகில் பல மோதல்கள் உள்ளன. இது ஒரு ஆபத்தான வேலையாகும்., அது அடிக்கடி தோல்வியடையும், ஆனால் உலகில் சமாதானத்தை தோற்றுவிப்பவர்களே எமக்கு  அதிகம் தேவை.

கேள்வி; இலங்கையில் மற்றொரு ஆயுதப் போராட்டம் இருக்குமா?
பதில்; இலங்கையில் எதிர்காலத்தில்  ஆயுதப் போராட்டங்கள் எதுவும் இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடு எதனையும்  நான் காணவில்லை, ஏனெனில் இலங்கை மக்கள் போரினால் மிகவும் களைப்படைந்து  இருப்பதாக நான் நினைக்கிறேன். யுத்தத்துக்கு முக்கிய  காரணமான  தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு  காணப்படவில்லை . தமிழ் மக்களின் கண்ணோட்டத்தில்  இலங்கை எவ்வாறு பார்க்கப்படுகின்றது  என்பதை இலங்கையின் சிங்களமக்கள்  புரிந்துகொள்ள முயற்சிப்பது  நல்லது. தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளைப்   போல உணர்கிறார்கள், அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் பொலிஸ்  அல்லது அதிகாரிகளை அணுகமுடியாது. முன்னோக்கி செல்வதற்கு  தமிழர்  பிரச்சினைக்கு  தீர்வு காண வேண்டியதேவை  உள்ளது

cbk_helgesen_eric_190402-1-300x208.jpg

கேள்வி;  புலம்பெயர்ந்த இலங்கையர் திரும்ப செயற்படும்  மூலோபாயத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? அது  எவ்வளவுவுக்கு  முக்கியம்?

பதில் ;புலம்பெயர்ந்தோருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. புலம்பெயர்ந்த இலங்கையர்  முக்கியமாக தமிழர்களாகும். ஆனால் சிங்களவர்களும் உள்ளனர் , அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் மிகவும் படித்த குழுவினர் . என்து  தேசமான நோர்வேயில், இளம்  தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் சராசரி இளம் நோர்வேயர்களை விட மிகச் சிறப்பாக செயற்படுகிறார்கள். கனடா, ஜேர்மனி மற்றும் பிரிட்டன்  ஆகிய நாடுகளிலும் இதுதான் நிலைமை. இலங்கையில் அதனை [ஆற்றலை ] நல்ல பாடசாலைகள் , பல்கலைக்கழகங்கள், வேலைகள், தொழிற்சாலைகள் அல்லது சுற்றுலா தலங்களில் முதலீடு செய்ய முடிந்தால் அது இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்லும். புலம்பெயர் மக்கள் அனைத்து சமாதான முயற்சிகளுக்கும் ஆதரவை வழங்க வேண்டும், ஆனால் இலங்கையில் சமாதான முயற்சி இலங்கையாலேயே வழிநடத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். விமர்சன, அறிவுசார் மற்றும் தார்மீக ஆதரவையும் வழங்குவதற்கு  புலம்பெயர்ந்தோரை ஊக்குவிக்க வேண்டும்.

link–Sri Lankans will have to find a solution, not foreigners” – Erik Solheim
dailymirror

 

https://thinakkural.lk/article/126257

 

குறிப்பு: எழுத்துப் பிழைகள், இடைவெளிகள்  திருத்தப்பட்டுள்ளன

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

நீங்கள் நல்ல  அரசியல்வாதி

ஆனால்  தோல்வி  கண்ட  சமாதானத்தூதர்???😭

சமாதானதூதுவர் என்ற போர்வையில் ஆயுத போராட்டாங்களை பலவீனப்படுத்துவது இவர்களது தொழில் அதில் அவர் வெற்றியடைந்து விட்டார்....

இதற்காக மேற்குலகில் பாட திட்டங்களும் இருக்கும்... பட்டங்களும் இருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

இதற்காக மேற்குலகில் பாட திட்டங்களும் இருக்கும்... பட்டங்களும் இருக்கும்...

சமாதானம் பேசுவது பற்றிய படிப்பு. 

https://www.uio.no/studier/emner/sv/iss/SGO2400/h07/undervisningsmateriale/Fredsnasjonen.pdf

2002-2006 சமாதானப் பேச்சு பற்றிய PhD thesis

https://eprints.soas.ac.uk/28880/1/10673049.pdf

 

நேரம் இருக்கும்போது படிக்கவேண்டும் அல்லது யாழ் கள வித்துவான்கள் ஆவது கடினம்😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

சமாதானம் பேசுவது பற்றிய படிப்பு. 

https://www.uio.no/studier/emner/sv/iss/SGO2400/h07/undervisningsmateriale/Fredsnasjonen.pdf

2002-2006 சமாதானப் பேச்சு பற்றிய PhD thesis

https://eprints.soas.ac.uk/28880/1/10673049.pdf

 

நேரம் இருக்கும்போது படிக்கவேண்டும் அல்லது யாழ் கள வித்துவான்கள் ஆவது கடினம்😃

 

இதை படிச்சு நானும் ஒர் PhD thesis எழுத வேணும் யாழ் களத்தில்

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

சகல அரசியல் போராட்டக்களையும் நடத்தி கடைசியில் உப்பு சத்தியாக்கிரக போராட்டமும் நடத்தி  களைத்து போய்த்தான் ஆயுதம் தூக்கப்பட்டது.

தூக்கிய ஆயுதத்தை கீழே வைத்த போதுதான் ஒட்டு மொத்தமாக அழித்தார்கள். வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த பின்னரும்  கண்மூடித்தனமாக அழித்தார்கள். இதெல்லாம் தங்களுக்கு தெரியாது.

 ஆயுதம் தூக்கியது சரியோ தவறோ என்பது  இங்கு விவாதம் அல்ல. ஆயுத்த்தை போட்டது சரியோ தவறோ என்பதைக் கூட இத்திரியில் நான் விவாதிக்கவில்லை. 

 எப்படியோ முள்ளிவாய்ககாலில்  (வேறு வழியின்றி) போட்டதை சற்று காலம் முன்பு போட்டிருந்தால் பாரிய மனித அழிவை தடுத்திருக்கலாம் என்பதே தாயகத்தில் வாழும் மக்களின் கருத்தாக இருந்தது.  யுத்த காலத்தில் எனது பிள்ளையும் உங்களது பிள்ளையும் இங்கு பாதுகாப்பாக வாழ்ந்ததால்  எமது கருத்தில் மாறுபாடு இருக்கலாம் என பதையும் ஒத்துக் கொள்ளுகிறேன். 

மற்றது உப்பு சத்தியாக்கிரகம் நான் அறிந்தவரை இந்திய சுதந்திர போராட்டத்தில் தான் நடை பெற்றது. இலங்கையில் நடந்ததாக கேள்விப்படவில்லை. 

Link to comment
Share on other sites

காலிமுக திடலில் நடைபெற்றது. அது எத்தகைய உண்ணாவிரதம் என தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nunavilan said:

காலிமுக திடலில் நடைபெற்றது. அது எத்தகைய உண்ணாவிரதம் என தெரியவில்லை.

சிங்களம்  மட்டுமே அரச கரும மொழி என பண்டார நாயக்கவினால் சட்டம் கொண்டுவரப்பட்டதற்கு எதிராக   காலிமுகத்திடலில்  சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. 

1956 இல் செல்வநாயகம் தலைமையில் இந்தப்போராட்டம் நடைபெற்றபோது அரச படைகளால் பல அரசியல்வாதிகளும் தாக்கப்பட்டார்கள்.

இரும்பு மனிதன் நாகநாதன் உட்பட. இவருக்குத்தான் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nunavilan said:

காலிமுக திடலில் நடைபெற்றது. அது எத்தகைய உண்ணாவிரதம் என தெரியவில்லை.

 

29 minutes ago, வாத்தியார் said:

சிங்களம்  மட்டுமே அரச கரும மொழி என பண்டார நாயக்கவினால் சட்டம் கொண்டுவரப்பட்டதற்கு எதிராக   காலிமுகத்திடலில்  சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. 

1956 இல் செல்வநாயகம் தலைமையில் இந்தப்போராட்டம் நடைபெற்றபோது அரச படைகளால் பல அரசியல்வாதிகளும் தாக்கப்பட்டார்கள்.

இரும்பு மனிதன் நாகநாதன் உட்பட. இவருக்குத்தான் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறுவார்கள்

உப்பு சத்தியாகிரகம் என்பது, பிரிஷ்சாரின் உப்பு வரியை எதிர்த்து காந்தியவாதிகள் நடத்திய தாமே “உப்பு காய்ச்சும்” சத்யாகிரகம் என நினைக்கிறேன்.

இலங்கையில் அப்படி ஒரு போராட்டம் நடக்கவில்லை என நினைகிறேன்.

காலி முகதிடல் சத்யாகிரகத்தில் மண்டை உடைந்து ரத்தம் சொட்ட சொட்ட அமிர் (பழைய) பாராளுமன்றதுக்குள் போனதாயும் அப்போ ஒரு சிங்கள அரசியல்வாதி (ஜே ஆர்?) “ இதோ போர்காயத்துடன் வருகிறார் தமிழர்களின் சேனாபதி” என நக்கல் அடித்ததாயும் வாசித்த நினைவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

 

உப்பு சத்தியாகிரகம் என்பது, பிரிஷ்சாரின் உப்பு வரியை எதிர்த்து காந்தியவாதிகள் நடத்திய தாமே “உப்பு காய்ச்சும்” சத்யாகிரகம் என நினைக்கிறேன்.

இலங்கையில் அப்படி ஒரு போராட்டம் நடக்கவில்லை என நினைகிறேன்.

காலி முகதிடல் சத்யாகிரகத்தில் மண்டை உடைந்து ரத்தம் சொட்ட சொட்ட அமிர் (பழைய) பாராளுமன்றதுக்குள் போனதாயும் அப்போ ஒரு சிங்கள அரசியல்வாதி (ஜே ஆர்?) “ இதோ போர்காயத்துடன் வருகிறார் தமிழர்களின் சேனாபதி” என நக்கல் அடித்ததாயும் வாசித்த நினைவு. 

சிங்கள அரசியல்வாதி (ஜே ஆர்?): SWRD BANDA - Prime minister at the time

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

சிங்கள அரசியல்வாதி (ஜே ஆர்?): SWRD BANDA - Prime minister at the time

இதை சொன்னது பண்டாவா? எனக்கு சரியாக நியாபகம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

யாவற்றிலும் முதலாவதாக, இலங்கை பிரச்சினைக்கு இலங்கையர்களே  தீர்வு காண வேண்டும் என்று நான் நம்புகிறேன். வெளிநாட்டினர் அல்ல. இறுதியில்  இலங்கை சிங்களவர்கள் , முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களின் தீவாகும். இது இந்தியர்கள், ஐரோப்பியர்கள் அல்லது அமெரிக்கர்களின் தீவு அல்ல.”
00000000000000

அப்ப ஏன் தான் எல்லோருமாக சேர்ந்து முதில் குத்தி தமிழர் தரப்பை அழித்தீர்கள்?

இன்றுவரை அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பது ஏன்?

5 hours ago, கிருபன் said:

சமாதானம் பேசுவது பற்றிய படிப்பு. 

https://www.uio.no/studier/emner/sv/iss/SGO2400/h07/undervisningsmateriale/Fredsnasjonen.pdf

2002-2006 சமாதானப் பேச்சு பற்றிய PhD thesis

https://eprints.soas.ac.uk/28880/1/10673049.pdf

 

நேரம் இருக்கும்போது படிக்கவேண்டும் அல்லது யாழ் கள வித்துவான்கள் ஆவது கடினம்😃

 

தம்பி கிருபன் சமாதானத்தை மட்டும் படிப்பது முக்கியமல்ல.

எப்படி கவிழ்ப்பது என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

சரி இப்ப சமாதானம் வருமா வராதா

இலங்கையில் வந்தாலும் யாழில் வராது🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களின் கொல்லைக்குள் இருந்த பிரபாகரனை பற்றி 
5 தரம் போய்  சந்தித்த சொல்கெய்ம் சொல்லிவிட்டார் என்று 
ஆடுவதுக்கு இருக்கும் கூட்டம்தான் 
தங்களை அறிவார்ந்த கூட்டமாக இங்கே பதிவு செய்ய துடிக்கிறது 
இந்த கேடு கெட்ட நிலையைத்தான் அறிவுசார் நிலை என்று நம்பும்போது 
இவர்களின் அறிவு நிலை எவ்வாறு இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Maruthankerny said:

எங்களின் கொல்லைக்குள் இருந்த பிரபாகரனை பற்றி 
5 தரம் போய்  சந்தித்த சொல்கெய்ம் சொல்லிவிட்டார் என்று 
ஆடுவதுக்கு இருக்கும் கூட்டம்தான் 
தங்களை அறிவார்ந்த கூட்டமாக இங்கே பதிவு செய்ய துடிக்கிறது 
இந்த கேடு கெட்ட நிலையைத்தான் அறிவுசார் நிலை என்று நம்பும்போது 
இவர்களின் அறிவு நிலை எவ்வாறு இருக்கும்?

தெய்வமே ... நீங்க வேற லெவல். பல நேரங்களில் உண்மையை புட்டு புட்டு வைப்பீங்கள். 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமந்தா சம்மந்தம் இல்லாமல் Family Man படம் நடிச்ச மாதிரி 
நானும் சம்மந்தா சம்பந்தமில்லாமல் இதை இங்கே இணைக்கிறேன் 😉 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

அப்ப ஏன் தான் எல்லோருமாக சேர்ந்து முதில் குத்தி தமிழர் தரப்பை அழித்தீர்கள்?

தங்கள்  திட்டத்தை எதிர்ப்பு  இல்லாமல் செயற்படுவதற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இலங்கையில் வந்தாலும் யாழில் வராது🤣.

நீங்கள் யாழ்கள சமாதான நீதவானாக வந்தால் என்னெண்டு கேக்கிறன்? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் யாழ்கள சமாதான நீதவானாக வந்தால் என்னெண்டு கேக்கிறன்? 😂

இப்பவும் என்ன?

அவர் வந்து வந்து எண்ணையை தானே விடுகிறார்?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் யாழ்கள சமாதான நீதவானாக வந்தால் என்னெண்டு கேக்கிறன்? 😂

🤣 நீங்கள் இன்னொரு திரியில ஜேபி மார பற்றி எழுதினது நியாபகம் வருகுதண்ணை🤣

 

4 minutes ago, விசுகு said:

இப்பவும் என்ன?

அவர் வந்து வந்து எண்ணையை தானே விடுகிறார்?😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

🤣 நீங்கள் இன்னொரு திரியில ஜேபி மார பற்றி எழுதினது நியாபகம் வருகுதண்ணை🤣

கோதாரிவிழ என்னெண்டப்பா எல்லாத்தையும் ஞாபகம் வைச்சிருக்கிறியள்?😂
நானே மறந்து போனன்... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2021 at 09:52, கிருபன் said:

ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதளபதி அரசியல் தலைவரில்லை .
அவர் அனைத்து தவறுகளையும் செய்ய தொடங்கினார். பாரம்பரிய இராணுவத்தை போல செயற்பட தொடங்கினார்.

அரசியலில் தலைவர் வெற்றியடையவில்லை
என்பது தவறான கருத்து
தலைவர் தன் பணிகளை முன்னிறுத்தி அரசியலிலுக்கான பணிகளை மதியுரைஞர்
மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் எனவும்
மக்களின் முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் தனது சிறகாக முன்னிறுத்தியவர். அவர்களிடம் அரசியல் துறையை ஓப்படைத்தவர்.
அவர் எப்போதுமே அரசியல்வாதியாக தன்னை முன்னிறுத்தவில்லை
சொல்ஹைம் மிகவும் தரம் தாழ்ந்த மனிதன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

🤣 நீங்கள் இன்னொரு திரியில ஜேபி மார பற்றி எழுதினது நியாபகம் வருகுதண்ணை🤣

 

 

ஜேபி & சமாதான நீதவான்  இரண்டுக்கும் என்ன வித்தியாசம் கோஷான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2021 at 01:36, கற்பகதரு said:

ஏனண்ணை சரணடைஞ்சவை? அழிப்பாங்கள் எண்டு விளக்கமிருக்கேலையோ? 

அப்ப  என்ன செய்ய சொல்ல வருகிறீர்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:
3 hours ago, goshan_che said:

🤣 நீங்கள் இன்னொரு திரியில ஜேபி மார பற்றி எழுதினது நியாபகம் வருகுதண்ணை🤣

கோதாரிவிழ என்னெண்டப்பா எல்லாத்தையும் ஞாபகம் வைச்சிருக்கிறியள்?😂
நானே மறந்து போனன்

நடமாடும் கணனி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.