Jump to content

மங்கையவளின் மரக்கறிக்கடை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.8ff687fe-fd62-46ea-9839-94797af0ba5a-1.jpg.7e7a7f05b20aa299168c2c536bb9fb9f.jpg

மங்கையவளின் மரக்கறிக் கடை..!(காய்கறிக்கடை)

*************************

                                      பகுதி-1

முதலில்

தக தகவென்ற 

மேனியை 

பார்த்ததும்

தக்காழியை 

வாங்கி வைத்தேன்.

 

முந்தானையை பார்த்து

முனகினேன்

முருங்கக்காய்

வரத்து

குறைவென்றாள்.

 

கையை வைதேன்

சும்மா சுறண்டாதீர்கள்

மென்மையான தோல்

உதிரம் வருமென்றாள்

எடுத்து பார்த்தேன் 

பீற்றூட் கிழங்கு.

 

அவளின் விரலை 

பிடிப்பதுபோல் 

 எண்ணினேன்

முளிந்து பார்த்தாள்

எனது 

கையில் இருந்தது 

வெண்டிக்காய்

 

உடைக் வேண்டாமென

உறுமி விட்டு

சிரித்தாள்.

 

அவளின் சிரிப்பில் 

முல்லையும் 

பூத்தது 

காய்கறிக்கடையில்.

 

தேனாக பேசினாள்

தேங்காய் 

ஞாபகம் வந்தது

போனவாரம் குடுமியோடு  

தேங்காய் தந்தாய்

அது வழுக்கை என்றேன்

இல்லை நீங்கள் பாவிக்கும் 

சாம்பு

சரியில்லையென்றாள்.

 

 

மழை வரும் போல்

இருக்கிறது

குடைமிளகாய் வாங்க 

சொல்லிவிட்டு

 கண்களால் 

மின்னல் போல்

வெட்டினாள் 

கத்தரிக்காயும் 

ஞாபகம் வந்தது.

 

கொவ்வம் பழம் 

என்றேன் அது

விற்பதற்கில்லையென

சொண்டை நெளித்தாள்.

அப்படியென்றால்

மாஸ்க் போட்டு

மறைத்துவை யென்றேன்

 

 காய்ந்தாள்

காரமிளகாயாய்

 வாங்கினேன்-பச்சை

மிளகாய்

 குழைந்தாள் பின்

உருள..

கிழங்கும் வாங்கினேன்.

 

 

என்ன பார்க்கிறீர்கள் 

ஆடையை உரித்தால்

அழவைக்கும் 

வெங்காயம் 

என்றாள். 

அதிகம் உரித்தால்

ஒன்றுமே 

இல்லையென்றேன்.

 

பல்லுகள் என்ன பழுதாய்

கிடக்குதென்றேன்

அப்பு விளைவித்த

உள்ளியென்றாள்

 

கரட்டாக சொன்னாய் 

என்றேன்

அதுகும் பல

கலரில் இருக்கு

என்றாள்.

 

பாவக்காய் தரட்டா 

என்றாள் உன்

கையால் தந்தால்

கரும்பும் தேவையில்லை

என்றேன்

அதைக்கேட்டு

பயத்தம் காயாய்

நெழிந்தாள்

 

கோ(Go) வா என்றேன்

போய் வாங்கோ என்றாள்.

 

                                    பகுதி 2

 

இல்லை இல்லை என்னம்

வாங்க வேண்டுமென்றேன்.

கொடுக்கத்தானே

நான் இருக்கிறேன் என்றாள்.

 

                                         

காயா பழமா என்றேன்

பழம் தான் ஆனால்

காயாக சாப்பிட்டால் தான்

இனிமையாக இருக்கும்

கொய்யாஎன்றாள்.

 

எனக்கு..

மேலங்கி வேர்த்தது

பார்த்துவிட்டு

முள்ளங்கி   

கிடக்கென்றாள்

தொட்டுப்பார்த்து

முள் எங்கே என்றேன்

கண்ணால் குத்தினாள்.

இதயத்தில் பட்டு

குளிர்ந்தது

முளக்கீரை கேட்டேன்

இல்லை இல்லை

அரைக்கீர மத்தால்

கடைந்துண்டால்

மாபெரும்

சத்தென்றாள்.பின்

 

கறி வாழக்காய் 

கிடக்கென்றாள்

ஒரு சீப்பு

தாவென்றேன்

வாழக்காய்க்கு

சீப்பெதற்கு

முடிதான் இல்லையே 

என கிண்டலடித்தாள்

 

முகத்தைப் பார்த்து

பால் வடியுது என்றேன்

அது ஈரப்பலாக்காய்

காம்பில் என்றாள்.

இரண்டு எடுத்துப்போக

சொன்னாள்.

 

எனி தம்பியும்

கடைக்கு வருவான் 

என்றாள்

கொத்தமல்லி

இலை..

ஞாபகம் வந்தது

வாங்கினேன்

 

எல்லாம் எடுத்து 

வைத்தபின் 

கேட்டாள்

 சமைக்க

ருசிக்க

யார் இருக்கிறார்கள் 

வீட்டில் என்றாள்

 

தனிமைதான்

என்றேன்

பூக்கோவா மாதிரி

பூரிப் படைந்தாள்

 

வாழைத்தண்டாக

வளைந்து வந்தாள்

 

அகம் மகிழ்ந்தாள்

அகத்திக் கீரையை

அள்ளித்தந்தாள்

 

சொண்டவியாமல் 

இருக்க

சொதிவைத்து

சாப்பிடலாமென்றாள்

 

அவரைக் காயைப்

பார்த்து

இவரைப் 

பிடிக்குமென்றாள்.

 

காதலித்தாள்

கப்பல்  வாழைப்பழம்

 உரித்து தந்தாள்

வாழ்கை பற்றி

வாழை இலையில்

கடிதம் வரைந்தால்

காலங்கள் ஓடின

கலியாணம் செய்து 

கொண்டோம்.

 

இன்று அவளின்

பழய கடையடியால்

பூசணிக்காய் போல்

மனைவியின் வயிற்றோடு

வருங்கால குழந்தையின்

மகிழ்வை எண்ணி..

போய்க்கொண்டிருக்கிறோம்.

 

என்ற நண்பனின்

வட்செப்..

கடிதம் எனக்கு 

கிடைத்த போது

கருணை 

உள்ளத்தோடு-என்

மனைவி தந்த

கருணைக்கிழங்கை

வெட்டிக்கொண்டிருக்கிறேன்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

05.07.2021

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Knowthyself said:

பசுவூர்க்கோபி

Super

அன்புடன்  நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2021 at 14:59, பசுவூர்க்கோபி said:

large.8ff687fe-fd62-46ea-9839-94797af0ba5a-1.jpg.7e7a7f05b20aa299168c2c536bb9fb9f.jpg

மங்கையவளின் மரக்கறிக் கடை..!(காய்கறிக்கடை)

*************************

                                      பகுதி-1

முதலில்

தக தகவென்ற 

மேனியை 

பார்த்ததும்

தக்காழியை 

வாங்கி வைத்தேன்.

 

முந்தானையை பார்த்து

முனகினேன்

முருங்கக்காய்

வரத்து

குறைவென்றாள்.

 

கையை வைதேன்

சும்மா சுறண்டாதீர்கள்

மென்மையான தோல்

உதிரம் வருமென்றாள்

எடுத்து பார்த்தேன் 

பீற்றூட் கிழங்கு.

 

அவளின் விரலை 

பிடிப்பதுபோல் 

 எண்ணினேன்

முளிந்து பார்த்தாள்

எனது 

கையில் இருந்தது 

வெண்டிக்காய்

 

உடைக் வேண்டாமென

உறுமி விட்டு

சிரித்தாள்.

 

அவளின் சிரிப்பில் 

முல்லையும் 

பூத்தது 

காய்கறிக்கடையில்.

 

தேனாக பேசினாள்

தேங்காய் 

ஞாபகம் வந்தது

போனவாரம் குடுமியோடு  

தேங்காய் தந்தாய்

அது வழுக்கை என்றேன்

இல்லை நீங்கள் பாவிக்கும் 

சாம்பு

சரியில்லையென்றாள்.

 

 

மழை வரும் போல்

இருக்கிறது

குடைமிளகாய் வாங்க 

சொல்லிவிட்டு

 கண்களால் 

மின்னல் போல்

வெட்டினாள் 

கத்தரிக்காயும் 

ஞாபகம் வந்தது.

 

கொவ்வம் பழம் 

என்றேன் அது

விற்பதற்கில்லையென

சொண்டை நெளித்தாள்.

அப்படியென்றால்

மாஸ்க் போட்டு

மறைத்துவை யென்றேன்

 

 காய்ந்தாள்

காரமிளகாயாய்

 வாங்கினேன்-பச்சை

மிளகாய்

 குழைந்தாள் பின்

உருள..

கிழங்கும் வாங்கினேன்.

 

 

என்ன பார்க்கிறீர்கள் 

ஆடையை உரித்தால்

அழவைக்கும் 

வெங்காயம் 

என்றாள். 

அதிகம் உரித்தால்

ஒன்றுமே 

இல்லையென்றேன்.

 

பல்லுகள் என்ன பழுதாய்

கிடக்குதென்றேன்

அப்பு விளைவித்த

உள்ளியென்றாள்

 

கரட்டாக சொன்னாய் 

என்றேன்

அதுகும் பல

கலரில் இருக்கு

என்றாள்.

 

பாவக்காய் தரட்டா 

என்றாள் உன்

கையால் தந்தால்

கரும்பும் தேவையில்லை

என்றேன்

அதைக்கேட்டு

பயத்தம் காயாய்

நெழிந்தாள்

 

கோ(Go) வா என்றேன்

போய் வாங்கோ என்றாள்.

 

                                    பகுதி 2

 

இல்லை இல்லை என்னம்

வாங்க வேண்டுமென்றேன்.

கொடுக்கத்தானே

நான் இருக்கிறேன் என்றாள்.

 

                                         

காயா பழமா என்றேன்

பழம் தான் ஆனால்

காயாக சாப்பிட்டால் தான்

இனிமையாக இருக்கும்

கொய்யாஎன்றாள்.

 

எனக்கு..

மேலங்கி வேர்த்தது

பார்த்துவிட்டு

முள்ளங்கி   

கிடக்கென்றாள்

தொட்டுப்பார்த்து

முள் எங்கே என்றேன்

கண்ணால் குத்தினாள்.

இதயத்தில் பட்டு

குளிர்ந்தது

முளக்கீரை கேட்டேன்

இல்லை இல்லை

அரைக்கீர மத்தால்

கடைந்துண்டால்

மாபெரும்

சத்தென்றாள்.பின்

 

கறி வாழக்காய் 

கிடக்கென்றாள்

ஒரு சீப்பு

தாவென்றேன்

வாழக்காய்க்கு

சீப்பெதற்கு

முடிதான் இல்லையே 

என கிண்டலடித்தாள்

 

முகத்தைப் பார்த்து

பால் வடியுது என்றேன்

அது ஈரப்பலாக்காய்

காம்பில் என்றாள்.

இரண்டு எடுத்துப்போக

சொன்னாள்.

 

எனி தம்பியும்

கடைக்கு வருவான் 

என்றாள்

கொத்தமல்லி

இலை..

ஞாபகம் வந்தது

வாங்கினேன்

 

எல்லாம் எடுத்து 

வைத்தபின் 

கேட்டாள்

 சமைக்க

ருசிக்க

யார் இருக்கிறார்கள் 

வீட்டில் என்றாள்

 

தனிமைதான்

என்றேன்

பூக்கோவா மாதிரி

பூரிப் படைந்தாள்

 

வாழைத்தண்டாக

வளைந்து வந்தாள்

 

அகம் மகிழ்ந்தாள்

அகத்திக் கீரையை

அள்ளித்தந்தாள்

 

சொண்டவியாமல் 

இருக்க

சொதிவைத்து

சாப்பிடலாமென்றாள்

 

அவரைக் காயைப்

பார்த்து

இவரைப் 

பிடிக்குமென்றாள்.

 

காதலித்தாள்

கப்பல்  வாழைப்பழம்

 உரித்து தந்தாள்

வாழ்கை பற்றி

வாழை இலையில்

கடிதம் வரைந்தால்

காலங்கள் ஓடின

கலியாணம் செய்து 

கொண்டோம்.

 

இன்று அவளின்

பழய கடையடியால்

பூசணிக்காய் போல்

மனைவியின் வயிற்றோடு

வருங்கால குழந்தையின்

மகிழ்வை எண்ணி..

போய்க்கொண்டிருக்கிறோம்.

 

என்ற நண்பனின்

வட்செப்..

கடிதம் எனக்கு 

கிடைத்த போது

கருணை 

உள்ளத்தோடு-என்

மனைவி தந்த

கருணைக்கிழங்கை

வெட்டிக்கொண்டிருக்கிறேன்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

05.07.2021

Screenshot-2021-07-07-12-03-16-947-com-a

அருமையான கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2021 at 08:35, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Screenshot-2021-07-07-12-03-16-947-com-a

அருமையான கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👍

நன்றிகள்  புரட்சி  தோழர்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிக்கும் போதே தக்காளிக்கு "ழி" இருக்கும்போதே புரிந்து கொண்டோம் மங்கையவளிடம் இருக்கும் காய்கறிகளில் மயங்கி விட்டீர்கள் என்று......ம்.....நல்லாய் இருக்கு கவிதை........!   😁

நன்றி கோபி.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை பகிர்விற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனைக் கவிதை  மிக மிக அருமை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2021 at 14:33, Knowthyself said:

பசுவூர்க்கோபி

Super

நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/7/2021 at 13:17, suvy said:

ஆரம்பிக்கும் போதே தக்காளிக்கு "ழி" இருக்கும்போதே புரிந்து கொண்டோம் மங்கையவளிடம் இருக்கும் காய்கறிகளில் மயங்கி விட்டீர்கள் என்று......ம்.....நல்லாய் இருக்கு கவிதை........!   😁

நன்றி கோபி.....!

சொல்லாமல் சொல்லும் "ழி" கவிதையுடன் சேர்த்துக்கொண்டுபோன அழகோ அழகு உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் என்னை எழுத வைக்கிறது. 
நன்றிகள்  அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.